Advertisement

எனக்கானவளே நீதானே…5(1)

(வசமிழக்கும் வானம் நான்….)

வீரா அன்று இரவு நிம்மதியாக, உறங்கினான்… ஏனோ மனம் அமைதியாக இருந்தது… அவளின் பார்வையும், முறுக்கும்… சின்ன வாயாடலும்… ஏதோ ஒரு அமைதியை தந்தது…

இது நல்லதா… ஒத்து வருமா…. அவள் சம்மதிப்பாளா… இப்படி நிறைய கேள்விகள் அவன் மனதில்… ஆனால், எங்கையோ தொங்கும் மனது அவளிடம் மட்டும் ஒன்றி நிற்பதாய் தோன்றியது வீராக்கு…

இது தப்பு, நம்பி வீட்டில் விட்டால்… அவர்கள் பெண்ணையே சைட் அடிக்கிறியா என அவன் மனமே கேள்வி கேட்டாலும்… பதில் தெரியவில்லை… அதை பற்றி யோசிக்க அவன் தயாராகயில்லை… கண்ணில் அவள் நினைவுடன்… அப்படியே கண்ணசந்தான்….

மறுநாள் அதிகாலையிலே சென்றுவிட்டான்… அங்கு… அவனின் நபர்கள் எல்லோரும் “ஒருதரம்… ஆபிஸ் வந்து HRA பார்த்துட்டு போடா…” என ஏதோ சொல்ல…. காதிலும் புத்தியிலும் ஏறவில்லை வீராக்கு….

இப்படியே நாட்கள் செல்ல… சுந்தரம் அதன்பிறகு வீராவுடன் பேசவில்லை 

போராட்டம் முடிவுக்கு வந்தது… எல்லா இடங்களிலும் கொண்டாட்டம் கலைகட்டியது… போராடாத மக்களுக்கும் இது சந்தோஷத்தையே தந்தது… காரணம், என்னதான் இருந்தாலும்.. இந்த நூற்றாண்டின் போராட்டம்.. அதில் வெற்றி என்பது எல்லோருக்கும் ஏதோ சொல்லமுடியாத சாதனையாக தெரிந்தது… அந்த பொங்கல் நிறைவாய் இருந்தது…

எல்லாம் முடிந்து, இரண்டு நாட்கள் சென்றும்.. வீரா, வரவில்லை வீட்டுக்கு…

பாவம் அந்த வயதான நபரின் கண்கள் பூத்து போயின.. இவனை எதிர்பார்த்தே…. “கோதை என்னம்மா… அவனை காணோம்…. ரெண்டு நாள் ஆச்சே ம்மா…. போன் செய்து பாரேன்” என்றார் ஒருநேரம்…

பின், தானே ஏதோ நினைத்து “இல்ல விடு, ஊருக்கு போயிருப்பானா இருக்கும்… இந்த வாரம் தண்டு, போன் பண்ணினா தெரிஞ்சிடும்” என்றார்…

கோதைக்கு இவரை சமாதனபடுத்தவோ… போன் செய்யவோ நேரமில்லை… காரணம் அவரின் கணவர் ராகவ் ஊரிலிருந்து வருகிறார்… எனவே அதில் எல்லோரும் பிஸி…

ஆனால் சுந்தரம் தாத்தா மட்டும் ஏனோ வீரா நினைவிலேயே இருந்தார்… அந்த வாரம் செல்ல… ராகவ் மும்பையில் முன்னிரவு விமானம்….

இந்தமுறை அவர் வீடு வந்தே இரண்டு வருடம் ஆனது… காரணம்… ஐஸ் போன வருடம் 10 என்பதால் எங்கும் நகர முடியாது… அதற்கு முந்தைய வருடம் பெரியவள் 12th.

எப்போதும் தன் தந்தை வரும் நாட்களில் எங்கேனும் வெளியே சுற்றுலா செல்வர் குடும்பமாக எனவே… தான் வந்தால் பிள்ளைகள் படிப்பு பாதிக்கும் என எண்ணி பயணத்தை தள்ளி போட்டார் ராகவ்… எக்ஸாம் போது மட்டும் வந்தார்… ஒருவாரம்…

எனவே, தந்தையின் முகம் காணவே இரண்டு வருடத்திற்கு மேல் ஆனது  பிள்ளைகள் இருவர்க்கும்… எனவே ரப்பர் பந்தாய் துள்ளிக் கொண்டு நின்றனர்… இருவரும்…

அதுவும் இந்த தரம் இப்போதுதான் ரவி, புதிதாக கார் ஓட்ட கற்றுக் கொண்டு லைசென்ஸ் எடுத்து இருந்ததால்… தன் அன்னையிடம் “ம்மா… நாம… போய் அப்பாவ பிக்கப் பண்ணலாம்… ப்ளீஸ்” என்றாள்…

ராகவ்வும் சரி என சொல்லியிருந்தார். எனவே, இப்போது போன் வரவும்… ரவி சரியாக துள்ளிக் கொண்டு நின்றாள்… மதியமே வந்துவிட்டாள் வீட்டுக்கு… எனவே வீட்டு கர்ட்டன்ஸ் மாற்றி… தன் அப்பா வருகைக்காக கேக் ஆர்டர் செய்து… அவரின் திங்க்ஸ் எல்லாம் முன்னால் எடுத்து வைத்து என ஆர்பாட்டம்தான் இந்த ஒரு வாரமாக இரண்டு பிள்ளைகளும்…

மாலை மணி நான்கு இருக்கும்… சுந்தரத்துக்கு, ஏதோ தோன்ற தானே வீராவின் எண்ணுக்கு அழைத்தார்… இருமுறைக்கு பின், போன் எடுக்கப்பட்டு ஏதோ ஒரு கட்டை குரல் கேட்டது “ஹலோ…. யாருங்க…” என்க…

சுந்தரமும் பதறாமல் விசாரிக்க… அது ஒரு போலீஸ்காரரின் குரல் என தெரிந்தது… எந்த ஸ்டேஷன் என விவரம் சொல்லி வர சொன்னார்…

சுந்தரம் நிதானமாக… வீட்டில் சொல்ல… பைரவி முகத்தில் ஒரு அதிருப்தி பாவம்… ‘எப்படிதான்.. மாட்டிக்கிரானோ.. ’ என முதலில் மனதில் தோன்றியது…

கோதை “என்ன மாமா… அவங்க வீட்டுக்கு சொல்லலாமா…” என பதறி கேட்க…

சுந்தரம் “நேத்திலிருந்து அங்க இருக்கான் போல… யாருக்கும் கூப்பிட்டு சொல்லல… நாம போய் பார்த்துட்டு, வந்து சொல்லிடலாம்…

இரு, நான் பிரபா…. வீட்டில் இருக்கானா கேட்கறேன்…” என்றவர் அந்த பிரபாகருக்கு அழைத்தார்…

அவருக்கு இந்த, போலீஸ்… வக்கீல்.. இதெல்லாம் பழக்கம் எனவே கேட்க… இங்க வீட்டில் இல்லை, எந்த ஏரியா, என்ன.. என விசாரித்தவர்… நான் போய் பார்க்கிறேன்‘ என சொல்ல…

சுந்தரம் “சரி நீங்க வந்திடுங்க… நானும் வரேன்” என்றார். அவர், அந்த பிரபா என்பவர் எவ்வளவு சொல்லியும் மனது கேட்காமல் “ரவிம்மா… வரியா போயிட்டு வரலாம்” என்றார்…

கோதைக்கு என்ன செய்வது என தெரியவில்லை… சுந்தரத்தை தனியே அனுப்பவும் பயம்… வேண்டாம் என சொன்னாலும் அவர் கேட்கமாட்டார் எனவே கோதை “மாமா அவர் இப்போ பைளைட் ஏறிடுவார்…. இப்போ போய்…” என்றார்.. தயங்கி தயங்கி…

சுந்தரம் “அவன் இன்னும் ஏறல தானே, நைட்தானே ப்ளைட்… நாங்க இதோ பத்து நிமிஷத்தில வந்திடுவோம்..

பிரபா வந்திடுவான்… நான் பார்த்துக்கிறேன் பேத்திய” என்றார்… தன்போல் உடை மாற்றி வெளியே நின்றார்…

பைரவிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை எப்போதும் தாத்தா… தங்களிடம் ஏதும் கேட்கமாட்டார்… எங்கையாவது கோவில் செல்ல வேண்டும் என்றால் கூட பக்கத்தில் இருந்தால்… தானே அக்டிவா எடுத்து செல்வார்…

எங்கேனும் சொந்தகாரர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட ‘டாக்ஸி புக் பண்ணு ரவிம்ம’ என்பார்… எந்த நேரத்திற்கு வருவேன் என விவரம் சொல்லி செல்வார்…

அதனால், அவர் என்றும்.. இதுபோல் கேட்டதே கிடையாது… யாருக்கும் தடுக்கவோ மறுக்க தோன்றாதபடி… தானும் ரெடியாகி வெளியேவும் வந்துவிட்டார்… அந்த முதியவர்…

எல்லோரும் அப்படியே நிற்கவும் தன் மருமகளிடம் “கோதை… பீக் ஹவர் ம்மா… ஸ்கூல் டைம் ஆபிஸ் விடற டைம், இப்போ போய்… ஊப்பர் புக் பண்ணி, அவன் வர லேட் பண்ணுவான்… காசும் ஒன்னுக்கு ரெண்டு பங்கு கேட்பான்…. தோ வந்திடறோம்” என்றவர் “ரவி வண்டி எடு” என்றார்.. பரபரப்பாய்…

மெலிதான தேகம் சுந்தரத்திற்கு… எறும்பு போல சுருசுருப்பானவர்… அவர் வம்சத்திற்கே அப்படிதான் போல… கோதை மட்டும் லேசாக பூசினார் போல் இருப்பார்… மற்றபடி எல்லோரும்.. நெடுநெடுவென ஒல்லியான தேகம்தான்…

சுந்தரம் வாசலில் நிற்க… ரவி வண்டி எடுத்தாள்… நல்ல ட்ராபிக்… வண்டி எப்படி சென்றும் நாற்பது நிமிடம் ஆனது, போலீஸ் ஸ்டேஷன் வர… அங்கு பிரபா சரியாக வந்து சேர்ந்தார்…

போலீஸ் ஸ்டேஷன்… மாவிலை தோரணம் கட்டவில்லை… மற்றபடி திருவிழா கோலம் கொண்டிருந்தது… ஜெ ஜெவென கூட்டம்… எங்கும் ஏதேதோ மக்கள் முகங்கள்… டீ டம்பளர்கள்… தொப்பியை இடத்தில் வைத்துவிட்டு தலைப்பாகை இல்லாமல் சுற்றும் போலீஸ்காரர்கள்… எல்லாம் சேர்ந்து சத்தமான ஏதோ ஒரு அமானுஷ்ய உணர்வுவை தந்தது… பைரவிக்கு.

பிரபாவுடன் வந்திருந்த நண்பரை பைரவிக்கு, காவல் வைத்துவிட்டு… தாத்தாவும் பிரபாவும் உள்ளே சென்றனர்…

எங்கோ ஒரு மூலையில் பத்தோடு பதினொன்றாக கையில் கட்டு போட்டு அதை கழுத்தில் கட்டிக் தொங்க விட்டுக்கொண்டு… காலில் ஏதோ பேண்டைய்டு போட்டு கொண்டு ‘தேமேன்…’ என அமர்ந்திருந்தான் நம் மீசை வைத்த போராளி… வீரா…

உள்ளே வந்த இருவருக்கும் வீராவை கண்டுபிடிக்கவே நேரமானது… அப்புறம் பொறுமையாக ஏதோ ஒரு போலீஸ்காரரிடம் பேசி… அவனை அடையாளம் சொல்லி, என்ன என விசாரிக்கவே ஒருமணி நேரம் ஆனது…

அந்த இடம் முழுவதும் இதே கூட்டம்தான்… அதாவது அந்த போராட்டத்தில் பங்கு பெற்றவர்களிடம் ஏதோ அடிதடி நடந்துள்ளது.. அதை கட்டுபடுத்த தடியடி… இதுபோல கூட்டி வந்து ஸ்டேஷனில் அமர்த்தி இருந்தனர்…

அதுவும் நேற்றே பாதிபேர் எழுதி கொடுத்து சென்றனர்… இன்று… பாதி நபர்… எனவே கூட்டம் அங்கிருக்கவே நிரம்பி வழிந்தது அந்த இடம்…

பிறகு ‘பிரபா… சுந்தரம்’ என அவர்கள் புகழ் சொல்லி, கொடுத்து(பணம்)… ‘இனிமேல் ஏதும் நடக்காது என எழுதி கொடுத்து… வீராவை கூட்டி வரவே நேரமானது… நடக்க முடியாமல்… அவனை தோள் தாங்கி அவனை போலவே இன்னொருவனும்.. மெதுவாக வெளியே வந்தனர்…

Advertisement