Advertisement

எனக்கானவளே நீதானே…5(2)

தனது வண்டியின் அருகே… அந்த தெரிந்த நபருடன் பேசிக் கொண்டிருந்த பைரவியின் கண்ணில்… அவனின் தடுமாறிய தோற்றம்… கூடவே ஓய்ந்து போய் கைகால்களில் அடியுடன் ஒற்றைகாலை நொண்டியபடியே வந்த வீராவை பார்த்தாள் பைரவி… ஒரு நொடி… அந்த நொடியேதான் கண்ணில் ஏதோ… என்னவோ தெரிந்தது.. என்ன… ப்பாவம், என உணர்ந்து தெரிவதற்குள்… சுதாரித்த பைரவி, தன் பார்வையை மாற்றி வெறித்து படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்… எப்படியேனும் அவனிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை… அந்த எண்ணமே அவளின் வலது மூலையில் வரவில்லை…

ஆனால்… அதை உணர்ந்த வீரா எதையும் எதிர்கொள்ள முடியாமல்… ஓய்ந்து போய்.. கூனி குறுகி நடந்து போனான்… அவளையும் அந்த பார்வையையும் கடக்க… கடினப்பட்டு போனான்… இந்த போலீஸ்.. அடி… இதெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கியது அவளின் பார்வை வீச்சு…

‘அய்யோ எவ்வளவு சங்கடம்’ என அவனால் கண்ணில் கூட காட்ட முடியவில்லை… எதிரிக்கு, கூட வரகூடாது என் நிலைமை எனத்தான் உணர்ந்தான் வீரா…

தான் விரும்பும் பெண்… எதிரில் நிற்கிறாள்…. இப்படி போலீசில் மாட்டி, அடி வாங்கி… அவர்களே வந்து மீட்டு செல்லும், நிலையை எண்ணி அவனால் தலையை நிமிர்த்த முடியவில்லை…. ஜெகம்தான் நின்றுவிடாதா…. இங்கு எல்லாம் இருண்டுவிடாதா…. இல்லை நான்மட்டும்… மறைந்துவிட மாட்டேனா… ஐயோ… இளமை மனம் என்ன பாடுபட்டது…

பாவம், எங்கோ சென்று மறைந்து கொண்டது அவனின் போராட்ட குணம்…. பெண் முன் அனைத்து தோற்கும்… அவளே பிரதானம்… என நினைக்கும்… இப்போது அப்படிதான் தோற்று நின்றான் வீரா, தன்னவள் முன்….

நடக்கவே முடியவில்லை… அவனால், சுந்தரம் அருகில் இருந்த ஒரு ஆட்டோவை அழைத்தார்… அவனையும் அந்த அவனின் நண்பனையும் அமரவைத்தார்… ஆட்டோ ஓட்டுனரிடம் விலாசம் சொல்லி அனுப்பிவிட்டார்.

பைரவி வைத்த கண்ணை எடுக்காமல்… அவனையே பார்த்திருந்தாள்… என்ன உணர்கிறாள் என தெரியவில்லை… ஆனால் அவன் மேலிருந்து பார்வையை விளக்க முடியவில்லை…

எப்படி பார்த்தாள் ஆசையாகவா.. கோவமாகவா எப்போதும் போல கிண்டலாகவா என தெரியவில்லை வீராக்கு… ஆனால், தன்னை மட்டும்தான் அந்த கண்கள் பார்க்கிறது என உணர முடிந்தது… ஆனால் வீரா நிமிரவேயில்லை… ஏறி மெதுவாக அமர்ந்து கொண்டான்… ஆட்டோ கிளம்பியது…

சுந்தரம் “வாம்மா போலாம்… பிரபா… வரீங்களா” என்றவர்… பிரபாவிடம் ஏதோ பேசி வந்தார்…

தன் பேத்தியின் பின்னால் அமர்ந்தவர் சைகையில் போலாம் என்பதாக சைகை காட்ட வண்டி ஜெட் வேகத்தில் பரந்தது….

அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றது… இவர்களின் அக்செஸ். இமைக்க கூட மறந்தாளா… இல்லை தோன்றவில்லையா என தெரியவில்லை அப்படியே அந்த ஆட்டோவை வெறித்தபடியே… விரட்டியபடியே சென்றாள் பைரவி.

வீடு வந்தனர்… அவன் வீட்டில் விட்டுவிட்டு… சுந்தரம் தேவையான ஏற்பாடு செய்தார்… “ஊருக்கு பேசு” என தனது போன் தந்தார்.. வீரா முடியாது என்றுவிட்டான்…

அவனுடன் வந்தவன் பெயர் “ஸ்ரீதர்…” இங்குதான் இரண்டு தெரு தள்ளி வீடு என்றான்…

சுந்தரம் தாத்தா… படுத்திருந்த வீராவை பார்த்தார்…. வீரா “ஏன் தாத்தா…” என்றான் அவரின் பார்வையை தாங்க முடியாமல்… குற்றம் சொல்லி பார்க்கவில்லை சுந்தரம்.. ஆனால் அதை தண்டனையாக ஏற்றான்… வீரா.. அவன் கண்ணில் குற்றம் தெரிந்தது…

இப்படி தனக்கு உதவுகிறார் என்ற காரணத்திற்காவே அவரை மிகவும் தொல்லை செய்கிரேனே என தோன்றியது.. வீராக்கு..

“ஏன் ப்பா… எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதுல்ல… வரவேண்டியதுதானே….” என்றார் ஆறாமையால் குரல் வாடி தெரிந்தது சுந்தரத்திற்கு..

“அது, சும்மா ஏதோ பேச போய்… எப்படியோ எங்கையோ தப்பாகிடுச்சி…” என்றான் தலை குனிந்து…

சுந்தரம் எதும் பேசவில்லை… அமைதியாக இருந்தார்…  பின் “உன் கையில் அதிகாரம் தேவை வீரா…. அந்த அதிகாரம் பணமா இருக்கலாம்… பதவியா இருக்கலாம்…. படிப்பா இருக்கலாம்…

ஆனா ஏதோ ஒன்னு… உன் கையில் இருக்கணும்… இல்லன்னா… உன்னை எல்லோரும் ஏறி மிதிச்சிடுவாங்க…. ” என்றார் அவனிடம் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு…

வீரா அமைதியாகவே இருந்தான்… ஏதும் பேச முயலவில்லை அவரின் வார்த்தையை உள்வாங்கினான்…. மெல்ல….

பின் வீரா “சரி நீங்க கிளம்புங்க தாத்தா” என்றவன் எதும் சொல்லாமல் குளிக்க சென்றான்…

சுந்தரம் அடிபட்ட கையை பார்த்து “ஏன் இப்போ…. “ என ஏதோ சொல்ல வர அதற்குள் வீரா தன் உடைகளை ஒற்றை கையால் களைய தொடங்கினான்… உள்ளே சென்றுவிட்டான்… இவனெல்லாம் சொன்னதை கேட்டால் உலகம் சுற்றுவதை நிறுத்திவிடாது… என சிரித்தபடியே  எண்ணி எழுந்தார் பெரியமனிதர்…

சுந்தரம், ஸ்ரீதரனை பார்க்க… அவன் “நான், இங்கேயே இருந்து சீனியரை பார்த்துக் கொள்கிறேன்… நீங்க போங்க தாத்தா” என்றான்… நிம்மதியாக கிளம்பினார்… சுந்தரம்..

அடுத்த அரைமணி நேரத்தில் வீரா… தன் நண்பனின் உதவியுடன் ரெடியாகி வெளியே வந்தான்… சற்று தாங்கி தாங்கி நடந்தபடியே… யாரின் பிடிமானமும் இல்லாமல்…

ஏனோ சற்றுமுன் பைரவியை எப்படி பார்ப்பேன் என்று இருந்த எண்ணமெல்லாம் இல்லை… நான் தவறு செய்யவில்லை… ஏதோ நடந்துவிட்டது… என்ன செய்ய முடியும் என வெளியே வந்தான்.

நண்பனை அழைத்து “ஸ்ரீ… நீ, வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வா” என்றான் நண்பனிடம்…

ஸ்ரீ “இல்ல… உங்கள பார்த்துக்கிறேன்னு… தாத்தாகிட்ட சொன்னேன்” என்றான்…

வீரா “போடா…. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்…” என்றான். வேறு பேசமுடியவில்லை… கிளம்பிவிட்டான் ஸ்ரீ. 

பைரவிக்கு ஒன்றும் தோன்றவில்லை.. வந்து அமர்ந்தாள் வீட்டில் பொத்தென்று அந்த மென்ன்மையான சோபாவில்… பத்துநிமிடம் வீராவின் தாக்கம் இருந்தது… தன்னை சமாளித்துக் கொண்டாள்… தன்போல் வேலைகளை செய்தால்…

பின், ஐஸ் வந்தாள் பள்ளியிலிருந்து…. எனவே மீண்டும் போட்டிபோட்டுக் கொண்டு பிள்ளைகள் ராகவன், வரவை பேசின…

ராகவன் வரும் நேரம்மறிந்து அழகான… ப்ளக் டஸ்டர் காரை…. பளபளவென துடைத்து… கேட்டின் வெளியே எடுத்து நிறுத்தினாள்… பைரவி.

தன் தந்தையிடம் முன்பே ஓட்டுவதுற்கு படித்திருக்கிறாள்… எனவே… இப்போது இன்னும் நன்றாக பயிற்சி பெற்று இருந்தாள்… எங்கு செல்வதாக இருந்தாலும் பைரவிதான் வண்டி எடுப்பது… எனவே இன்றும் அப்படிதான் கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தாள்… தேர்ந்த ஓட்டுனராக… பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு… சிரிப்பு வந்தது “பாத்து ரவிம்ம… நீ துடைக்கிரியா… இல்லை உன்னை அழகு பாத்துக்கிரியா” என வம்பிழுத்தார்…

பைரவி “தாத்தா…. நான் அழகு எனக்கு தெரியும் தாத்தா…

ஆனா, என் வண்டியும் அப்படிதானே இருக்கணும், அதான் பாலிஷ் போடறேன்” என்றாள் இன்னும் வேகமாக துடைத்தபடியே…

கோதை, சுந்தரத்தை உண்ண அழைத்தார்… சுந்தரம் உள்ளே சென்றார்…

பத்து நிமிடம் சென்று வீரா, சுந்தரம் வீட்டிற்கு வந்தான். வீரா, பைரவி கண்ணாடி துடைப்பதை பார்த்துவிட்டு ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றான்.. இல்லை செல்ல முயன்றான்… பைரவியும் பார்த்துவிட்டால் இவனை… சும்மா விடுவாளா… சத்தமான குரலில்

“நெஞ்சில் உரமுமின்றி… நேர்மை திறமுமின்றி…

வஞ்சனை சொல்வாரடி கிளியே…

வாய் சொல்லில் வீரரடி….

கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலன்றி…

நாட்டத்திற் கொள்ளாரடி.. கிளியே…

நாளில் மறப்பாரடீ….” என பாட வீராக்கு சொல்லமுடியாத வலி… ஆனால் கோவம் வரவில்லை… சிரிப்புதான் வந்தது தன்னை நினைத்து… இன்று எந்த ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் துணைக்கு வரவில்லை… அமைதியாகவே நின்றான் அவளை பார்த்தபடியே…

ஆக… சும்மா கூடி நின்று, எதிர்த்து பேசினால்… பத்தாது… ‘ஜெயிக்கணும்’ எனபதே அப்போதுதான் புரிந்தது வீராக்கு… ஆனால் நேர்மையாய் ஜெயிக்க முடியுமா… என எண்ணமும் வந்தது…

தன்னை வெளியே எடுக்கவே பணம் கொடுத்தார் சுந்தரம் தாத்தா… என எண்ணியபடியே அவளிடம் வந்தான் வீரா… அவள் எப்போதும் போல அவனை நக்கலாக பார்த்தாள் “என்ன வீரா சர்…

காத்துதான் வருதா… பேச்சு வரலையா…

நான் வேணா… ச்சோடா வாங்கி தரவா” என்றாள் சிரித்தபடியே… குரலில் அத்தனை எள்ளல்… வீரா அப்படியே நிற்க…

ரவி “என்றும்… போராட்டமும் வன்முறையும் தீர்வு தராது சர்…….” என்றால் தனது வண்டியில் இருந்த கிரலை துடைத்தபடியே….

மீண்டும் “எப்போதும் சொல்ற இடத்தில் இருப்பீங்க…

இன்னிக்கு என்ன கேட்கற இடத்தில் இருக்கீங்க… அதுவும் அமைதியா…” என்றாள் அர்த்தமாய்… அவனின் கண்களை நேரே பார்த்து…

அமைதியாக உள்ளே சென்றான்.. உண்மையான தோல்வியை, அழகாக ஏற்று.. அவளின் வார்த்தைகளையும் ஏற்று.. உள்ளே சென்றான்…

Advertisement