Advertisement

அத்தியாயம் ஏழு:

பூஜை ஒரு வழியாக அமளி துமளிக்கு நடுவில் நடந்து முடிந்தது. பூஜை முடியும் தருணம் குழந்தைகளும் பசியால் சினுங்கத் துவங்க, பூஜை முடிந்தவுடனே சாம்பவி குழந்தையை அவருடைய அண்ணியிடம் குடுத்துவிட்டு, மற்றொரு குழந்தையை உஷாவிடமிருந்து தான் வாங்கி இருவரையும் குழந்தைகளின் கேர்டேகரிடம் விட்டு விட்டு எல்லோரையும் உணவருந்தச் சொல்ல சென்றனர்.

 

நந்தினி உஷாவை பார்க்க, உஷா மிகவும் களைப்பாக தெரிந்தாள். நந்தினி உஷாவிடம் எதுவும் பேசாமல் கையை பிடித்து எழுப்பி அழைத்துக்கொண்டு போனாள். பின்னால் திரும்பி நந்தினியின் சித்தியிடமும் சிறிய சைகையாலேயே தன்னோடு வரும்படி அழைத்துச் சென்றாள்.

 

அவள் சென்ற இடம் உஷாவின் ரூம். அவள் அங்கிருந்தபோது தங்கியிருந்தது. நந்தினி அவளை நோக்கி, “ கொஞ்ச நேரம் தூங்கு. ரொம்ப டயர்டா தெரியரே “, என்றாள்.

உஷாவிர்க்குமே மிகவும் களைப்பாக இருந்தது. அவளுடை ரூம் என்று கூட உணரவில்லை.

 

சித்தியை நோக்கி, “ நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா சித்தி “ என்றாள்

 

“ அதுக்கென்ன கண்ணு, நீ தூங்கு நான் கிட்டவே இருக்கேன் ” என்றார்.

 

நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தினாலோ.? அல்லது அவளுடை இடம் என்ற ஒரு உணர்வு அவளையும் அறியாமல் இருந்ததோ.? அல்லது மருந்துகளின் உபயமோ.?  படுத்தவுடனே இரண்டு நிமிடத்திர்கெல்லாம் உறங்கிவிட்டாள்.

 

உறவுகள் எல்லோரும் அவளை கேட்க , நந்தினி எல்லோரையும் அவள் உறங்குவதாக மட்டும் கூறாமல் , கூட்டிச்சென்று காட்டியே அனுப்பினாள். அருண் அவள் அங்கும் இங்கும் செல்லும்போது அவளையே பார்த்தபடி இருந்தான்.

 

நந்தினி அருணை நோக்கி ‘கிரி எங்கே’ என்று சைகையாலே கேட்க, அவனும் சைகையாலேயே கையை காட்ட அங்கே விஸ்வநாதன் , அவருடைய பெரியப்பா , மாமனார் , கிரி , அவனுடைய மாமனார் , அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

 

நந்தினி அருணை அங்கே செல்லும்படி கண்களாலேயே கட்டளையிட. அருண் மாட்டேன் என்பதுபோல் தலை அசைத்தான். நந்தினி நின்ற இடத்திலேயே கைகளை கட்டிகொண்டு

ஒரு பார்வை பார்க்க அருண் கண்களாலேயே அவளிடம் போகவில்லை என்பது போல் கெஞ்சினான். ஆனால் நந்தினி இடத்தை விட்டு அசையவேயில்லை. வேறு வழியில்லாமல் அருண் இடத்தை விட்டு எழுந்தான்.

 

  அருண், “இம்சை உயிரை எடுக்கறா.!” என்று மனதிற்குள் நந்தினியை திட்டிக்கொண்டே இடத்தை விட்டு அகன்றான்.

 

அவன் அங்கே சென்று கிரி அருகில் அமர்ந்தான். அப்போது கிரியினுடைய தாத்தா விஸ்வநாதனுடைய பெரியாப்பவிடம் பேசிகொண்டிருந்தார்.

 

“ சம்மந்தி. நான் கல்யாண பேச்ச இப்போ பேசி இருக்க கூடாதுதான். நான் பேசுனது குழந்தைங்கள மனசுல வெச்சுதான். இப்போவே அவங்களுக்கு அம்மா வந்துட்டா அவங்களுக்கு ஒட்டுதல் தானாவே வந்துடும். கொஞ்ச நாள் விட்டு செஞ்சம்னா அவங்க முகம் பாக்க ஆரம்பிச்சிட்டங்கன்னா ஒரு வேல ஒட்டுதல் கம்மியாயிட்டா.? என்ன பண்ணறதுன்னு தான் பேசினேன்.”, என்றார்.

 

பெரியப்பா ஏதோ சொல்ல வாயெடுக்க கிரி அவரை பார்த்து, “இருங்க. தாத்தா”, என்று அவரிடம் சொல்லிவிட்டு, தனது தாத்தாவை நோக்கி, ”தாத்தா நீங்க அப்படி பேசி இருக்க கூடாது.! அதுவும் ப்ரத்யுவ பார்த்து. அந்த பொண்ணு யாருன்னு? கேட்டிருக்க கூடாது. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கற எண்ணமில்லை. நீரஜா இறந்து இன்னைக்கு தான் முப்பது நாளாகுது. அதுக்குள்ள ஏன் இப்படி பேசறீங்க. நீரஜாவோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி தான். இந்த பேச்ச இனிமே யாரும் பேசாதீங்க.”  என்றான்.

 

உடனே விஸ்வநாதனுடைய பெரியப்பா , “ சரிப்பா, பொண்டாட்டி இறந்து முப்பது நாளைல இந்த பேச்ச பேசுறது சரியில்ல தான். ஆனா உங்க தாத்தா சொல்றதையும் நீ யோசிக்கணும்பா. எத்தனை பேர் இருந்தாலும் அம்மா மாதிரி வராது.! அப்படி இருக்கும்போது நாள் கழிச்சி உனக்கு மனைவின்னு ஒருத்தி வரும்போது குழந்தைங்களுக்கும் உன் மனைவியோட ஒட்டுதல் வராது. அவளும் எப்படி இருப்பான்னு சொல்லமுடியாது. இப்போவே வளர்த்தா அவளுக்கும் தானா ஒரு பிடிப்பு வரும். எனக்கு என்ன எண்ணம்னா உனக்கு வர்ஷா தங்கச்சி மாதிரின்னா பேசாம நம்ம உஷாவ கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு கல்யாணம் வேண்டாம்ற மாதிரி எதுவும் சொல்லாத. வாழ வேண்டிய வயசுப்பா உன்னோடது.”, என்றார்.

 

அவருக்கு உஷாவை எப்படியாவது கிரிக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அவருக்கு தெரியும் அவளுடைய பாட்டி அவளை எவ்வளவு செல்லமாகவும் செல்வாக்காகவும் வளர்த்தார்கள் என்று.  

 

அருண் மனதிற்குள் “ சபாஷ் சரியான போட்டி “, என்றான்.

 

அதற்கு கிரி பதில் கூறும் முன்னரே கிரியின் தாத்தா பெரியப்பாவை நோக்கி, என்னங்க இப்படி பேசறீங்க.?, எல்லாரும் இருக்கிற சபையில நான் என் பேத்திய கல்யாணம் பண்ணித்தறேன் சொல்லியிருக்கேன். நீங்க பொசுக்குன்னு இப்படி சொன்ன எப்படி.”, என்றார்.      

 

 விஸ்வநாதன் அவருடைய மாமனாரை நோக்கி , “ இதுல அவரு சொல்லறதுக்கு என்ன இருக்குங்க. இனிமே சொல்ல வேண்டியது எல்லாம் கிரிதான். ஏற்கனவே ஒரு தடவை நாங்க தான் முடிவெடுத்தோம். இனிமே எல்லாமே அவன் முடிவுதான் “, என்றார்.

 

உடனே பெரியப்பா கிரியை நோக்கி, “ நான் சொன்னதுக்கு பதிலே சொல்லலியே கிரி.”, என்றார்.

 

“ இது உடனே முடிவேடுக்கற விஷயமில்லை தாத்தா. அவ என் கூடவே வளர்ந்ததுனால நான் அப்படியெல்லாம் நினச்சதிள்ள. ”, என்றான்.

 

உடனே அருண் மனதிற்குள், “ இவன் என்னடா அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான். தங்கச்சின்ன்றான். அப்படி நினைச்சதில்லைன்றான். நம்ம என்ட்ரி குடுக்கணும் போல இருக்கே. இல்லைன்னா நந்தினி நம்மள ஒரு வழி பண்ணிடுவா.”, என நினைத்துக் கொண்டிருக்கும்போதே,

 

விஸ்வநாதன் பெரியப்பாவை நோக்கி, “ நான் அந்த டாக்டர் பையனை வேற வர சொல்லியிருக்கேன். “ ,என்று அவர் ஆரம்பிக்கும்போதே நம்ம இருக்கோம்ல என்று அருண் என்டர் ஆனான். “ அதுக்கென்ன மாமா அவங்க வரட்டும். டாக்டர் மாப்பிள்ள டாக்டர் குடும்பத்துக்கு இன்னும் பொருத்தமா இருக்கும். அவங்கள நம்ம வர்ஷாக்கு பாக்கலாமே.”, என்றான்.

 

பெரியப்பா உடனே, “ நம்ம வீட்டு மாப்பிள்ளை அருமையான ஒரு யோசனை சொல்லியிருக்காரு. இதுக்கு பொண்ணோட குடும்பத்தை சேர்ந்தவங்க தான் பதில்  சொல்லணும் “, என்றார்.

 

அவர்கள் ஒன்றும் பேசாமல் இருக்க கிரி தன்னுடைய மாமனாரை பார்த்து,”யோசிக்காதீங்க மாமா. எனக்கு வர்ஷாவ கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது. அதனால ரெண்டு பேரும் பார்க்கட்டும் பிடிச்சிருந்தா பேசலாம். இல்லைனா விட்றலாம். மாப்பிள்ளை நல்ல சாய்ஸ்ன்னு அப்பா சொன்னாங்க கார்டியோவாஸ்குலர் சர்ஜன்.”, என்றான்.

 

விஸ்வநாதன் ஏதோ சொல்ல வர கிரி அவரை நோக்கி, “ அப்பா. அவங்க முடிவெடுக்கட்டும். இதுல நீங்களோ அம்மாவோ எதுவும் பேசக்கூடாது. இது நடந்தாலும் சரி நடக்கலன்னாலும் சரி நான் வர்ஷாவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ப்ரத்யுவோட வாழ்கைய சரி பண்ணாம நான் எதைபத்தியும் யோசிக்க மாட்டேன்.”, என்று சொல்லிவிட்டு இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டான்.

 

அருண் பெரியப்பாவிடம், “ வாங்க தாத்தா நம்ம சாப்பிடலாம் ” என்று அழைத்துக் கொண்டு போனான். 

 

அவர்கள் சென்றவுடன் அங்கே ருக்மணி பாட்டி வந்தார். அவரிடம் விவரங்களை கணவனும் மகனும் கூற அவர் விஸ்வநாதனை பார்த்து, “ என்னங்க மாப்பிள்ளை, இப்படி சொன்னா எப்படி “, என்றார்.

 

“ நான் சொல்லறது பிரச்சனையில்லை. கிரி கேட்க மாட்டான். அவன் சரின்னு சொல்லனும். இல்லைன்னா ஒன்னும் பண்ண முடியாது. “, என்றார்.

 

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க, கிரி நேரே சென்றது அவனது மாமியாரும் வர்ஷாவும் இருக்கும் இடத்திற்கு, அங்கே தான் அவனது அம்மா சாம்பவியும் இருந்தார்.

இங்கே சொன்ன விஷயங்களை மறுபடியும் தன்னுடைய மாமியாரிடம் கூறினான்.

 

வர்ஷாவிடமும், “ இது நடக்காது. மத்தவங்க பேசறதனால நீ எதுவும் மிஸ்கைட் ஆகிடாத, மற்றபடி இது உங்க அக்காவோட வீடுதான் அவ இருந்தாலும் இல்லைன்னாலும் இட் டஸின்ட் மேக் எனி டிபறன்ஸ் பார் யு.”, என்றான்.

 

“ பயப்படாதீங்க மாமா. யார் கம்பெல் பண்ணாலும் கேக்கமாட்டேன். யு கேன் டிரஸ்ட் மீ.”, என்றாள் வர்ஷா கிரியிடம்.

 

“ தேங்க்ஸ்மா. “ என்றான் வர்ஷாவை நோக்கி கிரி.

 

அதற்கு வர்ஷா கிரியை நோக்கி, “ எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். கொஞ்சமவாவது சிரிங்களேன். நீங்க சிரிச்சு நான் பார்த்ததேயில்ல மாமா ”, என்றாள்.

 

எதுவும் பதில் பேசாமல் சிறியதாய் ஒரு புன்னகை மட்டும் செய்தான்.

 

“ மாமா. சிரிச்சா பல்லு தெரியணும் “, என்றாள்.

 

“ அம்மா தாயே என்ன விட்றேன். ஈவ்னிங் உங்கள பார்க்க யாரோ வி ஐ பி வராங்கன்னு கேள்வி பட்டேன். அவங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வெச்சிக்கோங்க “,  என்றபடியே இடத்தை விட்டு அகன்றான். சாம்பவி எதுவும் பேசாமல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

நந்தினி ரூமிற்குள் செல்வதை பார்த்த அருண் பெரியப்பாவை கழற்றிவிட்டு நந்தினியை நோக்கி சென்றான்.

 

அருணை பார்த்த நந்தினி, “ என்ன ஆச்சு “, என்றாள்.

 

“ என்ன ஆச்சு. குழந்தை அழுதுச்சு.”, என்றான்.

 

“ ப்ளீஸ் , விளையாடாதீங்க. என்ன பேசினாங்க.”.

 

அருண் மேலும் அவளை டென்ஷன் படுத்தாமல் நடந்ததை அப்படியே சொன்னான்.

 

“ தேங்க்ஸ். தேங்யு சோமச். எனக்கு எப்படி உஷாவபத்தி பேசறதுன்னு தெரியாம இருந்தது. தாத்தா வேற வர்ஷாவ பத்தி பேசினதும், இது என்னடா பிரச்சனைன்னு நினைச்சேன். உருப்படியா ஒரு வேலை செஞ்சிருக்கீங்க.”, என்றாள்.

 

“ வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா.”,  என்று அருண் கேட்க , “ வேற என்ன.”, என்றாள் நந்தினி .

 

அருண் கைகளை கட்டியப்படி அவளை பார்த்து கொண்டு நிற்க, “ இப்படி நின்னா என்ன அர்த்தம்.”, என்றாள் நந்தினி.

 

“ எனக்கு தெரியாது உனக்கு தான் தெரியணும். கொஞ்ச நேரத்திற்கு முன்னால நீ இப்படி தான் நின்ன. நான் உடனே உனக்கு என்ன வேணும்னு புரிஞ்சு செய்யலை! ”, என்றான்.

 

நந்தினி அருகில் வந்து அவளது இதழ்களின் மீது ஒரு விரலை வைத்து அதனை எடுத்து அருணின் இதழ் மீது வைத்தாள். அருண் அப்படியே அவள் கைகளை பற்றி. அவளை அருகில் இழுத்து. அவளுடைய இடையை சுற்றி கைகளை படர விட்டான்.    “இதெல்லாம் அழுகுணி ஆட்டம். செல்லாது. செல்லாது.” என்றான். 

 

“ பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு தான் முடியும். “, என்றாள் நந்தினி.

 

“ அப்படியா பார்த்துடலாமா.!”, என்று இன்னும் நெருக்கமாக அவளை ஒரு கையால் இருக்கி .நந்தினி நீ ரொம்ப அழகுடி.”, என்று கூறி மற்றொரு கையால்  அவளுடைய முக வடிவை அளந்தான் .

 

 .“ ப்ளீஸ் விடுங்க. என்னை  டெம்ப்ட்  பண்ணாதீங்க.”, என்றாள் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக. “ “ கதவை வேணா லாக் பண்ணிரலாமா.”, என்று அருண் கேட்கும் போதே, “ நான் போனதுக்கு அப்புறம் லாக் பண்ணுங்க. “,என்றபடியே பாத்ரூம் கதவை திறந்து கொண்டு கிரி வெளியே வர , மின்னல் வேகத்தில் அருண் அவளை விடுவிக்க. பக்கத்தில் இருந்த ரேக்கில் இல்லாத பொருளை நந்தினி தேட .

 

“ இங்கே என்னடா பண்ணற.”, என்றான் அருண் கிரியை பார்த்து,

 

 “ என்ன கேள்வி இது.? பாத்ரூம்ல என்ன பண்ணுவாங்க. கொஞ்சம் வயறு சரியில்ல ஒரே வாமிடிங் சென்சேசன் வேற. கதவ தொறந்தா நீங்க நந்து கிட்ட கதவ லாக் பண்ண கேட்டது காதுல விழுந்தது அதனால நான் போனதுக்கு அப்புறம் லாக் பண்ணுங்கன்னு சொன்னேன்.”, என்றான்.

 

அப்பா என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டான் அருண். இல்லையென்றால் நந்தினி தொலைத்துவிடுவாளே.நந்தினி கிரியை நோக்கி, “ என்ன பண்ணுது ஏதாவது மெடிசின் எடுத்துக்கறியா.”, என்றாள்.

 

“ இல்லை,. ஐ கேன் மேனேஜ்.”

 

“ நீ ரொம்ப குடிக்கற கிரி. அதனால தான் இந்த ப்ரோப்லம் எல்லாம்.”, என்றாள் நந்தினி கோபமாக.

 

“ நந்து நான் உன் கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன். டோன்ட், அட்வைஸ் மீ. எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்.”,  என்றான் பதிலுக்கு.

 

“ நீ கிழிச்ச.????????”, என்று நந்தினி பதிலுக்கு வார்தையாட ஆரம்பிக்கும்போதே, அருண் நந்தினியை பார்த்து, “ வாய் பேசாம போய் மொதல்ல அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டுவா. நேத்து நைட்டும் அவன் சாப்பிடலை. இன்னைக்கு காலைலயும் சாப்பிடலை.”, என்றான். 

 

நந்தினி வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றாள்.

 

அருண் கிரியை நோக்கி, “ உக்காருடா.”, என்றான்.

 

“ மாமா தயவுசெய்து நீங்களும் ஆரம்பிக்காதீங்க.”, என்றான் கிரி.

 

“ நான் ஒன்னும் ஆரம்பிக்கலை. நீ ஏன் இப்படி எல்லாத்துக்கும் எரிச்சல் ஆகிற. கொஞ்சம் நேரம் அமைதியா உட்கார். “, என்றான்.

 

கிரி உட்கார்ந்தவுடனே அவனருகில் மெதுவாய் போய் அமர்ந்தான். “ நான் கேக்கறதுக்கு ப்ளீஸ் டென்ஷன் ஆகாம பதில் சொல்லு. டூ யு மிஸ் நீரஜா.”, என்றான் அருண்.

 

கிரி பதில் பேசாமலே அமர்ந்திருக்க மெதுவாக அவன் தோளில் கைபோட்டு, “ சொல்லுடா.” என்றான்.

 

“ எனக்கே தெரியலை. நான் கோபப்பட கூடாதுன்னு நெனச்சாலும் ஐ கான்ட் கன்ட்ரோல் “, என்றான்.

 

அவர்கள் பேசிகொண்டிருக்கும்போதே நந்தினி வர. அமைதியாக உணவை வாங்கி உண்ண ஆரம்பித்தான்.

 

உண்டு கொண்டிருக்கும்போதே, “ உஷா என்ன பண்ணறா.”, என்றான்.

 

“ தூங்கறா.”, என்ற நந்தினி கப்பென்று வாயை மூடிக்கொள்ள , “ என்ன நந்து.”, என்றான் கிரி . “ அதான் உங்கிட்ட பேச உங்க மாமா கிட்ட பெர்மிஷன் வாங்கனுமே.”, என்றாள்.

 

“ என்னை தான் போகும்போதே வாய்க்குள்ளயே திட்டிட்டு போய்ட்டியே. மறுபடியும் என்ன.?”, என்றான் அருண்.

 

“ நானா.? உங்களையா.? திட்டுனனா.? சே.! சே.! நான் போகும்போது பேசிட்டே போனேன். சாப்பிட ஏதாவது கொண்டு வர சொன்னிங்களே.! தயிர் சாதத்துல சக்கரை போட்டு கொண்டுவரட்டா.! இல்லை காபில உப்பு போட்டு கொண்டுவரட்டான்னு.! என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு நீட்டி முழங்கினாள்.

 

“ மாமா.!”, என்று அலறுவது போல் ஒரு சவுண்ட் விட்ட கிரி , “ ஏன் மாமா.? உங்களுக்கு எம் மேல இந்த கொலைவெறி. ஏற்கனவே எனக்கு வயறு வேற சரியில்ல . ஜஸ்ட் எஸ்கேப். நந்து கிட்ட ஏதாவதுன்னா நானே பேசிக்கறேன். நீங்க பஞ்சாயத்துக்கு வராதீங்க.”, என்றான்.

 

 

“ இதுக்கு தாண்டா நல்லதுக்கே காலமில்லைங்கறது “, என்றான் ஒரு பெருமூச்சோடு அருண். அவனுடைய வாய் தான் அப்படி சொன்னதே தவிர கண்கள் நந்தினியை பார்த்து கண்ணடித்தது.

 

“ திருட்டு ராஸ்கல் “, என்று அவனுக்கு மட்டும் புரியும்படியாக வாய் அசைத்தாள் நந்தினி.

 

அதற்குள் சாப்பிட்டு முடித்திருக்க மூவரும் உஷாவை பார்க்க சென்றனர். அங்கே பார்த்தால் அவள் இன்னும் உறங்கிக்கொண்டு தான் இருந்தாள். அவளுடைய சித்தி அருகேயே அமர்ந்திருந்தார்.

 

நந்தினி அவரிடம், “ அன்னலட்சுமி. இன்னும் எந்திரிக்கவே இல்லையா.”, என்றாள்.

 

“ இல்லையேம்மா. ஒரு சின்ன சத்தம் கேட்டா கூட எழுந்துப்பா. வீட்ல  அவ தூங்கும் போது சின்ன சத்தம் கூட செய்யமாட்டோம். இன்னைக்கு எல்லாரும் வந்து பார்த்துட்டு பார்த்துட்டு போறாங்க. எந்த சத்ததுக்குமே கண் முழிக்கலை.”,  என்றார் அவளுடைய சித்தி.

 

“ நீங்க சாப்பிட்டுடீங்களா.? “, என்றான் கிரி அவரை பார்த்து, “ இல்லைங்க தம்பி.  அவ எழுந்துக்கட்டும் அப்புறம் சாப்பிடறேன் “, என. அருண் நந்தினியை நோக்கி.   “ உஷாவ எழுப்பு நந்தினி.! சாப்பிட்டுட்டு தூங்கட்டும்.”, என்றான். 

 

எல்லோரும் ஒரு புறமாக நின்றிருந்தனர். உஷா மற்றொரு புறமாக திரும்பி தூங்கிக்கொண்டிருந்தாள். நந்தினி அந்த பக்கம் போய் அவள் அருகில் குனிந்து, “அன்னு. எழுந்துக்கோ.”, என்று மெதுவாக அவளை எழுப்ப, நந்தினியும் உஷாவினுடைய பாட்டியும் அன்னலட்சுமி என்பதன் சுருக்கமாக அப்படிதான் அழைப்பர். “ ம். என்ற சத்தம் மட்டும் உஷாவிடம் இருந்து வந்தது. மறுபடியும் நந்தினி, “ அன்னும்மா. எழுந்துக்கோ.”, என ,

 

கண்விழித்த உஷா, நந்தினியை பார்த்து, “ நந்தினிக்க்கா. நீங்க ஏன் என்னை எழுப்பறீங்க.? பாட்டி எங்க.? எனக்கு ரொம்ப தூக்கம் வருது.! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டா ப்ளீஸ் .”, என்றாள் கெஞ்சலாக அவளை பார்த்து. உஷா பாதித்தூக்கத்தில் இருப்பது அனைவருக்குமே புரிந்தது.

 

நந்தினிக்கு இதை கேட்டதுமே கண்களில் நீர் நிறைய துவங்கியது. உஷா இன்னும் இவள் பதிலுக்காக காத்திருப்பது புரிய, “ தூங்கு “, என்றாள்.

 

இதனை கேட்டதுமே மறுபடியும் உஷா உறங்கத் தொடங்கி விட்டாள். பார்த்து கொண்டிருந்த அனைவர் நெஞ்சயுமே நெகிழ வைத்தது.

 

நந்தினி கண்களில் நீர் நிறைய நின்றுகொண்டிருக்க அவள் அருகே வந்த கிரி.      “ நான் பிரத்யுவ பாத்துக்கறேன். நீங்கெல்லாம் போய் சாப்பிட்டுவிட்டு வாங்க.”, என்றான்.

 

“ மாமா. கூட்டிட்டு போங்க.! “ என்றான் அருணை பார்த்து, அருண் நந்தினியின் கையைபிடித்து “ வா. “ என்று கூட்டி கொண்டு போக உஷாவின் சித்தி தயங்கி நின்றார்.

 

“ நீங்க வாங்கம்மா கிரி பார்த்துப்பான்.”, என்றான் அருண் அவரை நோக்கி , உடனே நந்தினியும் அவரை நோக்கி, “ வாங்க அவன் பார்த்துப்பான். இப்போ மட்டுமில்ல எப்போவுமே.! தைரியமா வாங்க.”, என்று அவரை அழைத்துக்கொண்டு போனாள்.   

Advertisement