Advertisement

அத்தியாயம் ஐந்து:

அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பதினொன்று. கிரியால் வண்டி ஒட்டக்கூட முடியவில்லை. அருண்தான் கார் ஒட்டி வந்தான். லன்டன்னில் இருந்தபோது குளிருக்காக , பிசினஸ் பார்ட்டிக்காக என்று ஆரம்பித்த பழக்கம், இப்போது அவனை சிறிது சிறிதாக உள்ளே இழுத்துக்கொண்டிருந்தது. அதுவும் இந்த ஒரு மாதமாக எல்லா நாட்களுமே குடித்துவிட்டு தான் வீட்டிற்கு வந்தான். இரண்டு குழந்தைகளையும் பார்க்கும் போது எப்படி இவர்களை வளர்க்கப் போகிறோம் என்ற கவலை ரொம்ப அதிகமாக இருந்தது. அதுவும் கடந்த பத்து நாட்களாக இருவருக்குமே காய்ச்சல்,வயிற்று போக்கு என்று மிகவும் சிரமப்பட்டனர். அவர்களை கவனிக்க என்று தனியாக காலையில் இரண்டு பேர் இரவு இரண்டு பேர் என்று தனியாக இருந்தனர். ஆனாலும் சமாளிக்க முடியவில்லை.இவர்கள் இல்லாமல் நந்தினியும் சாம்பவியும் மாற்றி மாற்றி குழந்தைகளோடே இருந்தனர்.

சாம்பவி…………. விஸ்வநாதனுடைய, அழகான அன்பான மனைவி, நந்தினி கிரியுடைய, கண்டிப்புடன் கூடிய அன்பான பாசமான அம்மா.அதே சமயம் மாமியாருக்கு ஆகாத மருமகள். சாம்பவி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். விஸ்வநாதனுடை அம்மாவிற்கு அங்கே பெண்ணெடுக்க  இஷ்டமில்லை. மகனுக்கு பிடித்திறக்கிறது என்று சம்மதித்தார். ஆனால் திருமணம் ஆகிறவரைக்கும் தன் பின்னாலேயே சுற்றிகொண்டிருந்த விஸ்வநாதன் மனைவியோடு அதிக நேரம் இருக்கவும், அவருக்கு சாம்பவியை பிடிக்காமல் போயிற்று. அது ஒரு மாதிரியான பொசசிவ்நெஸ், ஒரு இன்செக்குரிடி, மிகசிலருக்கு தவிர தன் மகனுக்கு திருமணமானவுடன் அனைத்து அம்மாக்களுக்கும் வருவது. அது வரும்போது அதற்கு பலியாவது பெரும்பாலும் வீட்டிற்கு வருகிற மருமகள்களாகத்தான் இருக்கும். அது தான் இங்கேயும் நடந்தது. அதுவும் உஷாவுடைய அம்மாவும் பிரசவத்தில் இறந்துபோக தன்னை அவர்களிடம் இருந்து தனிமைபடுத்திகொண்டு உஷாவையே அவரது உலகமாக்கிகொண்டார். உஷாவிர்க்கு பிறகு தான் நந்தினியும் கிரியும் கூட அவருக்கு. விஸ்வநாதனுடைய அம்மா மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் வீட்டு சீதனமாக கொடுத்ததுதான் அவர்களுடைய கம்பெனி. அதை தமிழ்நாடு அளவில்பெரிய நிறுவனமாக  விஸ்வநாதனுடைய தந்தை வளர்த்தார், விஸ்வநாதன் அதை இந்திய அளவில் பெரிய நிறுவனமாக வளர்த்தார். ஆனால் யார் அதை வளர்த்தாலும் விஸ்வநாதனுடைய அம்மா இருந்தவரை அவர் மட்டுமே உரிமையாளர். அவர் இருந்தவரை வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம். அவருக்கு மிகவும் பிரியமானவளாக உஷா இருந்ததினால் சாம்பவிக்கு உஷாவை பிடிக்காமல் போயிற்று. உஷாவும் மிகவும் செல்லமாக வளர்ந்ததினால் பிடிவாதமான, யாருக்கும் மரியாதை தராத, யார் பேச்சையும் கேட்காத, ஒரு ஸ்பாயில்ட் சைல்ட்  ஆகவே வளர்ந்தாள். அதனால் சாம்பவிக்கு இன்னும் உஷாவை பிடிக்காமல் போயிற்று.

 அருணும் கிரியும் உள்ளே நுழைந்த போது அனைவருமே விழித்து கொண்டுதானிருந்தனர்.

“ என்னங்க இவ்வளவு நேரம் பண்ணிட்டீங்க,. வாங்க சாப்பிடலாம்” என்று நந்தினி அருணை அழைத்துக்கொண்டு இருக்கும்போதே கிரி குழந்தைகள் உறங்கும் அறைக்குள் சென்று குடித்திருந்ததினால் தூரமாகவே நின்று பார்த்து வந்தான்.

அருண் சாப்பிட அமர்ந்திருக்க , நந்தினி கிரியையும் அழைத்தாள்.

“எனக்கு வேண்டாம்”. என்றபடி கிரி மாடியேரப் போக,. “ஏன் வேண்டாம்”. என்றார் சாம்பவி.

அவர் குரல் கேட்டவுடனே வேகமாக அவரை நோக்கி வந்த கிரி அவரிடம்  “ஏம்மா இப்படி செஞ்சீங்க”. என்றான்.

“என்ன செஞ்சேன்”.என்றார் சாம்பவி.

“ப்ரத்யுவ வீட்டை விட்டு அனுபிச்சிருக்கீங்க, அவள அடிச்சிருக்கீங்க எல்லாத்துக்கும் மேல அவளோட மார்க் ஷீட்ஸ் கிழிச்சிருகீங்க”.

இந்த கேள்வியை விஸ்வநாதன் வீட்டிற்கு வந்து நடந்தவைகளை கூறியவுடனே கிரியிடம் இருந்து எதிர்பார்த்தார்.அவருக்கு தெரியும் கிரி சின்ன வயதில்  உஷாவிடம் மிகவும்  பாசமாக இருப்பான். சாம்பவி எவ்வளவுதான் தடுத்தாலும் நந்தினியும் கிரியும் உஷாவிடம் பாசமாகத்தான் இருப்பார்கள். அதற்காக அம்மாவை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள். ஆனாலும் அந்த அக்கறை நன்றாக தெரியும்.

சாம்பவிக்கு மனதிற்குள் சிறு பயம், எங்காவது அவருடைய அத்தை உஷாவை கிரிக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ என்று.அவருடைய அத்தை இறந்தவுடனே அவருக்கு அந்த பயம் இல்லை. ஆனாலும் தன்னை மீறி ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது, எவ்வளவு நாள் கிரிக்கும், நந்தினிக்கும், உஷாவுடைய விவரங்கள் தெரியாமல் தடுக்க முடியும், அவன் இந்தியா வந்தால் கட்டாயம் பிரச்சினைகள் வரும் என்று தெரிந்துதான் அவசரமாக அவனை ஒருவாரம் லீவில் வரவைத்து ,நிறைய பேசி, நிறைய சமாதானம் செய்து, நீரஜாவை கிரிக்கு திருமணம் செய்துவைத்தார். நீரஜா சாம்பவியின் அண்ணன் மகள். அவருடைய கூட பிறந்த ஒரே அண்ணன். அவருக்கு இரண்டு பெண்கள் பெரியவள் நீரஜா சிறியவள் வர்ஷா. சாம்பவியின் அத்தை இருந்தவரைக்கும் அவருடைய பிறந்த வீட்டினர் அதிகம் வந்ததில்லை , வரவிரும்பியதில்லை…………. ஏனென்றால் அவருடைய அத்தை அனுமதித்ததில்லை.

 எப்படியாவது கிரியை சமாதானப்படுத்தும் எண்ணத்துடன் சாம்பவி கிரியை நோக்கி  “வீட்டை விட்டு அனுப்புனோம்னா யாரோட அனுப்புனோம். அவ அப்பாவோட தானே அனுப்புனோம்.உங்க பாட்டி இருந்தவரைக்கும் அவங்க பாத்துக்கிட்டாங்க. அவங்க என்னைக்காவது நான் அவள பாத்துக்கணும் அப்படின்னு நினைச்சிருக்காங்களா?. இல்ல. சொல்லி இருக்காங்கள. .மொதல்ல என்னைக்காவது இது என்னோட வீடுன்னு பீல் பண்ண விட்டுருக்காங்களா. எந்த விஷயத்துலயும் என்ன செகன்டரியா கூட வச்சுக்க மாட்டாங்க. .அப்படி என்ன பண்ணேன் நான் அவங்கள. எங்க அம்மா வீட்ல இருந்து யாருமே அவங்க இருந்தவரைக்கும் வந்தது கிடையாது போனது கிடையாது. ஒரே அடக்குமுறை  அவங்களோட வளர்ப்பு அவங்க பேத்தி அவ எப்படி இருப்பா அவங்க மாதிரி தானே இருப்பா. அவளுக்கு அவளோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியனும்னு தான் அவளோட அப்பாவோட அனுப்பினோம். அதுல என்ன தப்பு . அது தானே அவ இருக்க வேண்டிய இடம். நாங்க ஏன் அவள பாத்துக்கணும். ?.”” என்றார் சாம்பவி.

““.அப்படின்னா பாட்டி செஞ்சதுக்கெல்லாம் அவளுக்கு நீங்க செஞ்சிட்டீங்க அப்படிதானே. என்ன எக்ஸ்ப்லனேஷன் நீங்க வச்சிருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு. உங்களுக்கு அவ வீட்ல இருக்கிறது பிடிக்கலையா ஹாஸ்டலில் விட்டிருக்கலாம். ஆனா அவங்க அப்பாவோட பொசிஷன் தெரிஞ்சு அங்க அவ கஷ்டபடனும்னு விட்டுருக்கீங்க.”” என்றான் கிரி.

“”சும்மா என்னை சொல்லாத,. நாங்க அவ செலவுக்கு பணம் குடுத்தோம் .அவளும் வாங்கல. அவ அப்பாவும் வாங்கல. நாங்க என்ன பண்ண முடியும்””.என்றார் சாம்பவி.

“”ஆமா,. தெரியாம தான் கேக்கறேன். நீங்க யாரு அவ செலவுக்கு பணம் குடுக்கறதுக்கு. பாட்டி இருந்தவரைக்கும் அவளுக்கு இல்லாதது எதுவுமே இந்த வீட்ல கிடையாது. எல்லாமே அவளோடதுதான் அவளுக்கு போக தான் நமக்கே. அப்படி இருந்த பொண்ணுக்கு நீங்க பொசிஷன் புரியவைக்கரிங்களா. கேக்கும் போதே பைத்தியக்காரத்தனமா தோணலையா””. என்றான் கிரி கோபமாக. 

கிரி பிறகு குரலில் வலி தொனிக்க   “”.நம்ம வீட்ல வளர்ந்த பொண்ணும்மா அவ. .அத நீங்க நினைக்கவேயில்லை.””

“”.கட்டாயம் அவ நம்ம வீட்ல வளர்ந்த பொண்ணுதான். ஆனா நம்ம பொண்ணு கிடையாது. அவள பேசினேன்னா அவ அந்த அளவுக்கு பேசினா நான் பேசினேன். என் பசங்க நல்லா இருக்க மாட்டாங்க அப்படின்னு பேசினா. அதனால அடிச்சேன். மார்க் ஷீட்ஸ் கிழிச்சேன். .ஆனா மார்க் ஷீட்ஸ் மறுபடியும் தொலைஞ்சிபோச்சின்னு நிறைய ப்ரோசிஜர் பண்ணி வாங்கிட்டோம். மே பி அந்த வருஷம் அவ படிக்க முடிஞ்சிருக்காது. ஆனா நெக்ஸ்ட் இயர் அவ படிச்சிருக்கலாம் அவ ஒத்துக்கல.”” என்றார் அவனை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு சாம்பவி….………….எல்லோருமே இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், ஆனால் தலையிடவில்லை.

“”.அம்மா நானும் இந்த வீட்ல தான் இருந்தேன். பாட்டி உங்கள எப்பவுமே கன்சிடர் பண்ணலைன்னு எங்களுக்கு தெரியும். தப்பு தான் இல்லைன்னு சொல்லல. ஆனாலும் நீங்க அவள விட்டு இருக்கா கூடாதும்மா.நான் ஒரு நிமிஷம் கூட உங்கள சந்தேகப்படலை. நீங்க அவள விட்டு இருப்பிங்கன்னு நான் நினைக்கவேயில்லை. எந்த முகத்தை வெச்சிட்டு நான் அவள பார்ப்பேன். நானும் நந்தினியும் அவகிட்ட என்ன சொல்லுவோம்,. அவளாவது பொண்ணு, நான் என்ன காரணத்த சொல்லுவேன். நான் சொல்லறத அவ நம்பினாலும் .நந்தினிய நீ இப்படி விட்டுடுவியாயன்னு????????. கேட்டா நான் என்ன சொல்லுவேன்.எனக்கு அவள பாக்கவே பயமா இருக்கு. அதனால நான் இன்னும் அவள பார்க்கவேயில்லை.  ஒரு வேள நீங்க அவள ஆதரவு இல்லாம  அனுப்புனதால. என் குழந்தைங்களுக்கு அம்மா இல்லாம போய்ட்டாளோ என்னவோ.””என்றான் ஆத்திரத்தோடு.

இவ்வளவு நேரமாக அவனோடு வார்த்தைக்கு வார்த்தை பேசிகொண்டிருந்த சாம்பவி,.”” கிரி??????????.”” என்ற வார்த்தையோடு கண்களில் கண்ணீர் பெருக மேலே வார்த்தை வராது நின்றார்.

இவர்கள் பேசுவதை இத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்த விஸ்வநாதன்,.””  நீ பேசறது சரியில்ல கிரி. அனுப்பிட்டோம் அனுப்பிட்டோம்னு .சொன்னா?????????/ அவ அப்பாவோட தான் போனா. அதனால சும்மா எங்கள தப்பு சொல்லாத.”” 

“.இப்போகூட அவளுக்கு தேவையான எல்லாத்தையும் செய்ய நான் தயாரா இருக்கேன். உன்னால முடிஞ்சா அத வாங்கிக்க வை.” என்றார்.

“”.ப்ச். உங்களுக்கு அவள தெரியாதுப்பா கட்டாயம் வாங்க மாட்டா.””  என்றான் கிரி வருத்தத்தோடு.

“”கிரி.”” என்றாள் நந்தினி.

 அவளை கண்களாலேயே அடக்கிய அருண்,. “என்ன பண்ணறதுன்னு அப்புறம் டிசைட் பண்ணலாம். நீ போய் முதல்ல ரெஸ்ட் எடு “ .என்று அவனை வலுக்கட்டாயமாக மாடிக்கு தள்ளிக்கொண்டு போனான்.

 சாம்பவியை பார்த்து நந்தினி”” குழந்தைங்க தூங்கும் போதே நீங்க கொஞ்சம் தூங்குங்கம்மா .””.என்று நந்தினி அவரை அவருடைய அறைக்குள் கூட்டிக்கொண்டு போனாள்.

சாம்பவி ஏதோ சொல்ல வர,.”” அம்மா ப்ளீஸ் காலைல பேசலாம்””. என்றாள்.

மறுநாள் காலையில் கிரியின் மக்கள் வீட்டையே தங்களது அழுகையால் அதிர வைத்து திருப்பள்ளியெழுச்சி பாட அன்றைய தினம் இன்று என்ன பிரச்சனைகளோ என்று விடிந்தது. காலையிலேயே சாம்பவியின் பிறந்த வீட்டினர் வந்து விட்டனர். அவர்கள் மதுரையில் இருந்தனர். அனைவருமே வந்திருந்தனர். சாம்பவியின் அப்பா, அவருக்கு விவசாயம் தான் தொழில், கடும் உழைப்பாளி அதனால் வயது ஆகிய போதும் நல்ல ஆரோக்கியமாகவே  இருந்தார். அவருடை மனைவி ருக்மணி கிராமத்து பெண்மணி. அவர் இருக்கும் இடத்தில் பிரச்சனைகளோ சண்டை சச்சரவுகளோ வராமல் இருந்தால் அந்த நேரம் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் அப்படிப்பட்ட குணவதி அவர். அதனாலேயே பாட்டி இருந்தவரைக்கும் சாம்பவியின் பிறந்த வீட்டினர் அதிகம் வர முடிந்ததில்லை. சாம்பவியின் அண்ணன் அண்ணி இருவருமே மருத்துவர்கள். தங்களது தொழிலில் பெயர் பெற்றவர்கள். அமைதியான ஆட்கள். தங்களது குழந்தைகளுக்கு ருக்மணி அம்மாளின் குண நலன்கள் வராமல் பார்த்து சிறப்பாகவே வளர்த்திருந்தனர். அதனாலேயே தன் மகன் வாழ்வு நன்றாக இருக்கும் என்று எண்ணியே நீரஜாவை கிரிக்கு சாம்பவி திருமணம் செய்து வைத்தார். நீரஜாவும் குறை சொல்ல முடியாத அழகான அருமையான குணநலன்கள் கொண்ட பெண். கிரி ஒரு வாரமே லீவில் வந்து திருமணம் முடித்ததால் நீரஜவால் உடனே கிரியோடு போகமுடியவில்லை. அவளின் விசா ரெடி ஆன சமயம் அவள் கருத்தரித்துவிட ,பின்பு மசக்கை மூன்று மாதம் முடியட்டும் என்று நாள் தள்ளிபோக , பிறகு இரட்டை குழந்தைகள் என்று தெரிந்தவுடன் இன்னும் சில மாதங்களில் எப்படியும் கிரி இந்தியா வந்துவிடுவான் என்று நீரஜாவை வீட்டில் எல்லோரும் அனுப்பவில்லை.

அருண்கூட நந்தினியை கிண்டல் செய்வான். “”பாருடி அவனவன் ரெண்டு நாள் கூட இருந்துட்டு போன்லயே குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்கறான். நமக்கு கல்யாணமாகி நாலு வருஷம் முடுஞ்சுடுச்சு, நான் உன்ன விட்டு இருக்கறதேயில்ல,. நமக்கு இன்னும் குழந்தை பொறக்கலயே””. என்பான்.

 வர்ஷா அக்காவுக்கு தப்பாமல் பிறந்த இனிமையான சுபாவம் கொண்ட பெண். ஒருவாராக அந்த குடும்பத்தினர் அப்போதுதான் நீரஜாவின் இழப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்க, இந்த சாமி கும்பிடுவது வந்து அவர்களின் நினைவுகளை அதிகம் பண்ணிக்கொண்டு இருந்தது.

வந்தவுடனே ருக்மணி அம்மாள் அவரது வேலையை துவங்கி இருந்தார். “”.இப்படி என் பேரன்கூட பொழைக்காம அல்பாயுசுல போயிட்டாளே .யார் கண் பட்டதோ தெரியலயே. யார் விட்ட சாபமோ புரியலயே. அம்மா இல்லாம என் கொள்ளுபேரங்க என்ன பண்ண போறாங்களோ.எத்தன பேர் பார்த்தாலும் அம்மா பார்த்த மாதிரி வருமா.  என்று அனைவரிடத்திலும் மாற்றி மாற்றி புலம்பிக்கொண்டிருந்தார்.

அவர்கள் மட்டுமல்லாது அண்ணன் தம்பி வகையிலும் சில நெருங்கிய உறவுகள் வர தொடங்கினர்.

 அம்மாவை நோக்கி வந்த சாம்பவி,. “”அம்மா எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க. சத்தம் போடாதீங்க,. வீட்ல யாருக்கும் பிடிக்காது. வாய வச்சுட்டு சும்மா இருங்க. உங்களால எந்த பிரச்சனையும் வர கூடாது.”” என்று எச்சரித்துவிட்டு சென்றார். ஆனால் அதை கேட்டு நடந்து விட்டால், அவர் ருக்மணி அம்மாள் அல்லவே. என்ன????? வால்யூமை சிறுது குறைத்து அதே வேலையை செய்து கொண்டிருந்தார். அவருடைய மருமகளும் பேத்தியும் குழந்தைகளிடத்தில் இருந்தனர்.

காலையிலேயே விஸ்வநாதன் டாக்டரிடம் பேசியிருந்ததால், நந்தினியும் அருணும் உஷாவை அழைத்து வர சென்றிருந்தனர்.

அங்கே சென்று உஷாவை அழைத்தால் அவள் வர ஒத்துக்கொள்ளவே இல்லை.நந்தினியும் மிக பொறுமையாக அவள் வருவதற்க்கு சொல்லிகொண்டிருக்க உஷாவும் மறுத்துக்கொண்டே இருந்தாள்.

“”ஏன் அன்னலட்சுமி வர மாட்டேங்கர,. முன்னாடி நடந்ததெல்லாம் மறந்துடு. நாங்க இருக்கோம். நான் பார்த்துக்கறேன் உன்னை. தயவுசெய்து வீட்டிற்கு வா””  என்றாள் நந்தினி இழுத்து பிடித்த பொறுமையுடன்.

“”இவ்வளவு நாளா நீங்க வந்து என்ன பார்த்தீங்களா, இல்லையே. நீங்களும் கிரி மாமாவும் வர கூட இல்லை. நீங்க வந்து கூப்டா நான் வரணுமா. மாட்டேன். என்றாள் ஒரு குழந்தையின் பிடிவாதத்தோடு. “”நேத்து மாமா இங்க வந்துட்டு கூட என்னை பார்க்கவே இல்லை.”” என்று மறுபடியும் தேம்பி அழத் துவங்கினாள்.

நந்தினி மிகவும் பயந்து போனாள். மறுபடியும் உடம்பிற்கு ஏதாவது வந்து விட்டால் என்ன செய்வது என்று புரியாமல்,.”” அழாதே””. என்று உஷாவை சமாதானப்படுதிக்கொண்டே  அருணை செய்வதறியாமல் நோக்கினாள்.    

அருணிர்க்குமே  என்ன செய்வது என்று புரியவில்லை. சித்தி இவர்களை பாவமாக பார்த்தபடியே இருந்தார். அவளுடைய அழுகை அதிகரித்தது. நின்ற பாடில்லை.அருண் கிரிக்கு போன் செய்து விஷயத்தை கூறினான். அதற்கு கிரி போனை உஷாவிடம் கொடுக்குமாறு கூற, அவள் போனை வாங்க மறுக்க .நமது கிரிக்கு பொறுமை என்பது வழக்கம் போல் பறந்து போனது. “” மாமா போனை ஸ்பீக்கர் மோட்ல போடுங்க “” என்றான். அருண் ஸ்பீக்கரை ஆன் செய்தவுடனே .””.ப்ரத்யு.”” என ஒரு அதட்டல் போட்டான். போனிலேயே அவளது அழுகுரல் கேட்டது. “” ப்ரத்யு முதல்ல அழுகைய நிறுத்து””. என்றான் சத்தமாக. அவனுடைய அதட்டல் சிறிது வேலை செய்தது. அழுகை சற்று குறைந்தது.”” ஏன் இந்த கலாட்டா பண்ணிட்டு இருக்க கிளம்பி வா.””என்றான் கிரி.

உஷா அமைதியாகவே இருந்தாள். அழுகை நின்றிருந்தது ஆனால் தேம்பிக்  கொண்டு இருந்தாள்.

“”ப்ரத்யு ஏதாவது பேசு . கிளம்பிட்டியா இல்லையா””

“”நேத்து நீங்க ஏன் என்ன பார்க்கலை. எம்மேல. கோபமா””

“”கோபமா உன் மேலையா. எதுக்கு???””

“”மாமா,. அத்தை பேசுனாங்க, நான் பதிலுக்கு பேசினேன். எனக்கு இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாது. நீங்க என்ன நம்பறீங்க இல்லை. நான். நான். சாபம் எல்லாம் எதுவும் குடுக்கலை.”” என்று கூறி மீண்டும் அழுகையை துவங்கி இருந்தாள்.

“”ஹேய்,. முட்டாள் பொண்ணே,. இதுக்கு தான் இந்த அழுகையா நான் உன்ன நம்பறேன். நீ வீட்டுக்கு வா முதல்ல. அதுதானே பார்த்தேன் நம்ம ப்ரத்யு வாவது அழறதாவது இவங்க ஏதாவது ரூம் மாத்தி போயிட்டாங்களோன்னு நெனச்சேன் என்றான் சமாதானமாக. அழுகை நின்று மெல்லிய புன்னகை தோன்றியது உஷாவினிடத்தில்.

பிறகு அருணிடம் உஷாவிர்க்கு கேட்கும்படியாக சத்தமாகவே . “”மாமா,  அவ வந்தா கூட்டிட்டு வாங்க இல்லைன்னா தூக்கிட்டு வாங்க. டைம் ஆகுது பன்னிரண்டு மணிக்குள்ள பூஜை செய்யணுமாம்”” என்றான்.                  

Advertisement