Advertisement

அத்தியாயம் மூன்று:

      வீடு வந்து சேர்ந்து ஐந்து நிமிடம் ஆகிவிட்டது யாரும் எதுவும் பேசவில்லை. மிகவும் சின்ன இடம் அது ஒரு ஹால், ஒரு சமையல் அறை, ஒரு சிறிய ரூம் மட்டுமே இருந்தது. நந்தினிக்கு ஏனோ அசந்தர்ப்பமாக உஷாவினுடைய அவளுடைய வீட்டில் இருந்த அறை ஞாபகத்திர்க்கு வந்தது. இந்த வீட்டை விட பெரிய அறை சகல வசதிகளுடன் இருக்கும். எப்போதும் ACஓடிக்கொண்டேயிருக்கும்.கதவை திறந்தால் ஹால் வரைக்குமே வரும். அப்படி இருந்தவள் எப்படி இப்படி காற்றோட்டமே இல்லாத வீட்டில் இருக்கிறாள். அப்பா எப்படி இவளை இப்படி விட்டு வைத்தார்கள் நந்தினிக்கு ஒன்றுமே புரியவில்லை.

      சித்தி மெதுவாக “என்ன சாப்ட்ரிங்க” என்றார்.

      “ இல்லங்க, இப்போதான் சாப்டுட்டு கிளம்பினோம் பசியில்லை “ என்றாள் நந்தினி.

       உஷா சித்தியை பார்த்து, “நீங்க போய் சாப்ட்றதுக்கு ஏதாவது வாங்கிட்டு கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வாங்க “ என்றாள்.

      அருண் வேண்டாம் என்று மறுக்க மறுக்க அனுப்பிவைத்தாள்.

       அவர்கள் சென்றவுடனே உஷாவை நந்தினி கேள்வியாக கேட்க ஆரம்பித்தாள். “ஏன் அன்னலட்சுமி இவ்வளவு கஷ்டத்துல இங்க இருக்க, இப்படி ஒரு இடத்துல இருந்து வேலைக்கும் போயிட்டு , நீ ஏன் படிக்கலை, எவ்ளோ ப்ரில்லியன்ட் ஸ்டுடன்ட் நீ “,.” அப்பாகிட்ட கேட்டிருந்தா கட்டாயம் ஹெல்ப் பண்ணியிருப்பாங்க “

     அவள் பேச பேச அழுகையும் ஆத்திரமும் ஒரு சேர வந்தது உஷாவிர்க்கு, “இந்த நாய்க்கு எலும்புத்துண்ட போடறமாதிரியா”.

    “ ஏன் இப்படி எல்லாம் பேசற “ என்றாள் நந்தினி.

    “ வேற எப்படி பேசுவாங்க அக்கா “ என்றாள் உஷா.

    இதை கேட்டதும் நந்தினி கோபமாக உஷாவை பார்த்து, “அம்மா சொன்னாங்க, நீ சாபம் விட்டுட்டு போனதால்தான் வீட்ல இந்தமாதிரி ஆயிருச்ன்னு. நான் நம்பல, இப்போ தோணுது நீ பேசுனாலும் பேசிருப்ப”

     உஷாவிர்க்கு இதை கேட்டவுடனே அவளையும் மீறி அழுகை கிளம்பியது, ஆத்திரத்தில் அவளைப்பார்த்து கத்தத்தொடங்கினாள்.  ” யாரு, ? நான் பேசினேனா , அவங்க பேசினாங்க நான் பதில் பேசினேன் அவள்ளவு தான், நீங்களே நான் வேண்டாம்னு அனுப்பிட்டீங்க, நானும் வந்துட்டேன். என்னை அவ்வளவு பேசி, பேசி என்ன பேசி ,.அடிக்க வேற செஞ்சாங்க. எல்லாம் செஞ்சு என்ன தொறத்திவிட்டு,. இப்போ வந்து என்னால தான் உங்க வீட்ல இறந்துட்டங்கன்னு சொல்லறீங்களே உங்களுக்கு மனசாட்சியே கிடையாத, மனசாட்சி விடுங்க மூளை கூட கிடையாதா . நான் பேசுனா யாரவது இறந்துருவாங்களா, இத்தனை நாளா நான் இருக்கனா, செத்தனான்னு நீங்க வந்து பாக்கலை, ஆனா இப்போ இவ்வளோ பெரிய பழிய தூக்கி எம்மேல போடறீங்க. “  கோபம் அதிகமாகி அவளுடைய கை கால்களில் சிறிது நடுக்கம் வர ஆரம்பித்தது.

     “ நான் ஏன் படிக்கலைன்னு கேக்கறீங்களே, நான் ஏன் படிக்கலை தெரியுமா ?.தெரியுமா ?.” என்று கத்தியவள் , நடந்த நிகழ்வுகளின் பாரம் தாங்காமல் கையால் முகத்தை மூடிக்கொண்டு கதறத் துவங்கினாள்.

      இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த அருண் , நந்தினியை பார்த்து, “என்ன நந்தினி ?. என்ன பண்ணற ?. என்ன விஷயம்னு சொல்லாம, என்ன கூட்டிட்டு வந்து, என்னென்னவோ பேசிட்டு இருக்க.  நான் U S ல இருந்து காலைல தான் வந்தேன். வந்த என்ன கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம . அந்த பொண்ண வேற ஏதேதோ பேசிட்டு இருக்க “ 

       அருண் நந்தினியிடம் பேசிகொண்டிருக்கும்போதே உஷா மயங்கி கீழே விழ ஆரம்பித்தாள். இதனை பார்த்த நந்தினியும் அருணும் ஓடிச்சென்று அவளை தாங்கும் முன்னரே கீழே விழுந்து விட்டாள். விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டு ரத்தம் வர துவங்கியது.

         பதட்டத்தில் அருணிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நந்தினி மிகவும் பயந்து போனாள். அவளுடைய சுரிதார் துப்பட்டாவினால் ரத்தத்தை அழுத்தி நிறுத்தத் துவங்கினாள். அருண் அவசரமாக வெளியில் ஓடிச்சென்று முத்துவை அழைத்து வந்தான். இருவருமாக சேர்ந்து அவளைதூக்கி காரில் வைத்தனர். நந்தினி பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது உஷாவினுடைய சித்தி வேகமாக வந்தார்.

       “ என்னங்க என்ன ஆச்சு “ என்று அவர் வினவ, நந்தினிக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. அருண் தான் சட்டென்று, “என்னன்னு தெரியலைங்க பேசிட்டு இருக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டா, நாங்க போய் பிடிக்கறதுக்குள்ள தலைல அடிபட்டிடிச்சு” என்றான்.

       “ இங்க பக்கத்துல பெரிய ஹாஸ்பிடல் எங்க, அங்க போயிடல்லாம் “

         அதற்குள் முத்து ,” சார் இந்தப்பக்கம் போனா திருப்பூர் பத்து கிலோமீட்டர் வரும். அதுக்கு நாம கோவை மெடிக்கல் கூட்டிட்டு போய்டலாம் பதினைஞ்சு கிலோமீட்டர் தான் வரும்” என்றபடியே காரில் வேகமாக ஏறினார்.

          சித்தி வெளியில் வந்து வேடிக்கை பார்த்த வீட்டுக்கார கிழவியிடம் வேகமாக விவரத்தை கூறி வீட்டை பூட்டிக்கொள்ளுமாறு சொல்லி காரில் ஏற கார் பறந்தது. எல்லோருமே ஒரு வகையான அதிர்ச்சியில் இருந்தனர். நந்தினிக்கு அவள் கூறிய விஷயத்தை ஜீரணிக்கமுடியவில்லை. அன்னலட்சுமியை அடித்து வீட்டைவிட்டு விரட்டினார்களா, அவள் யோசித்து கொண்டிருக்கும்போதே அருண் அவளிடம், “மெதுவா கைய எடுத்து ரத்தம் நின்னுடுச்சான்னு பாரு” என்றான்.

       இல்லை என்று நந்தினி தலையாட்டினாள். “அழுத்திபிடிச்சிக்கோ” என்று அவளிடம் கூறிவிட்டு, உஷாவினுடைய சித்தியிடம், “அம்மா கொஞ்சம் தண்ணி தெளிச்சு அவள எழுப்புங்கம்மா “ என்றான். ஆனால் உஷா எதற்குமே அசையவில்லை.

         உடனே அருண் , கிரிக்கு போன் செய்தான்.

           “ கிரி நீ எங்க இருக்க “.” இப்போதான் மாமா சிட்டி லிமிட் தாண்ட்றேன் “.” K M C H  தாண்டிட்டியா “. ஜஸ்ட் கிராஸ் பண்ணேன் “.” அப்படியே திரும்பி ஹாஸ்பிடல்  போ “,. “அன்னலட்சுமி மயங்கி கீழ விழுந்து அடிபட்டுடிச்சு, இன்னும் காண்ஷியசஸ் வரல “,.” நாங்க அவள கூட்டிட்டு K M C Hவந்துட்டு இருக்கோம் ,வேண்டிய ஏற்பாடு செய், இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல இருப்போம்,”. என்றான்.

         கிரி திகைத்து மறுபடியும் பேசும் முன்னதாகவே போனை அனைத்தான்.கிரிக்கு ஒன்றுமே புரியவில்லை. வேகமாக ஹாஸ்பிடல் நோக்கி காரை திருப்பினான். உள்ளே சென்று அவனுடை கார்டு கொடுத்து விவரம் கூற, ஸ்ட்ரெச்சர் ரெடி பண்ணவும் கார் ஹாஸ்பிடல் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

         ஓடிசென்றான் அருகில் அதற்குள் அருணும் இறங்கி கார் கதவை திறக்க, உள்ளே பார்த்தவனால் .

          அவனுக்கு உஷாவை அடையாளம் கூட தெரியவில்லை. ஆனால் எதையும் யோசிக்க நேரமில்லாமல் அப்படியே அவளை தூக்கினான். அதற்குள் ஸ்ட்ரெச்சர் வர கேஷுவாலிட்டிக்கு அவளை கொண்டு சென்றனர். உள்ளே அவளை டாக்டர்கள் அட்டென்ட் செய்து கொண்டிருக்கும்போதே chief  doctor வந்தார்.

         “ என்ன அச்சு மிஸ்டர் சூர்ய கிரி வாசன் “ என்றார்.

        அவன் அருணை பார்க்க, “ பேசிட்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க தலையில் அடிபட்டுடிச்சு “ என்றான்.

         யார் என்பது போல் அவர் கிரியை பார்க்க , “என்னோட கசின்” என்றான் அவன்.

        இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த உஷாவினுடைய சித்தி அழ ஆரம்பித்தார். நந்தினி தன்னால் தானோ இப்படி என்ற குற்ற உணர்ச்சியில் இருந்ததால் அவளால் பேசமுடியவில்லை. அருண் தான் அவரைப்பார்த்து “பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது” என்றான்.

        உஷாவினுடைய சித்தி கூட இருந்ததால் கிரியிடம், நந்தினியும் அருணும் எந்த விவரமும் கூற முடியவில்லை. கிரியும் அவர்களிடம் எந்த விவரமும் கேட்கவில்லை ஒரு ஆழ்ந்த மௌனத்தில் இருந்தான்.

        அவன்  இப்படி ஒரு தோற்றத்தில் உஷாவை எதிர்பார்க்கவில்லை. அவன் உஷாவை பார்த்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. அவன் பார்த்த இளைத்து தெரிந்தாள். சில நிமிடங்களே பார்த்தால் அவனால் யோசிக்க கூட முடியவில்லை. கட்டாயம் சிறிய பெண்ணுக்கும் பெரிய பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கும் ஆனால் இது .?

         சிறிது நேரத்திற்கு பிறகு chief  doctor  வெளியே வந்தார். ரத்தம் வருவது நின்றுவிட்டது, காயம் கொஞ்சம் பெரியதாக உள்ளதால் தையல் போடவேண்டி இருக்கும் அதெல்லாம் ஒன்றுமில்லை ஆனால் அவளுக்கு நினைவு திரும்பவில்லை என்றார். “ she is unconscious , we are examining for the reason, right now everything seems to be normal but she has to be under observation , we are shifting her to ICU ,  all the tests need to be taken after some hours  I will talk to you”.  இதை கூறிவிட்டு சர்ஜெரி இருப்பதாக கூறி பிறகு பார்ப்பதாக சென்றார்.

        அவர் பேசி சென்றவுடனே சித்தி வந்து “என்ன சொல்றாங்க” என்றார்.

        கிரி அவரை யார் என்பது போல் பார்க்க, அதை புரிந்துகொண்ட நந்தினி, “ அன்னலட்சுமியோட சித்தி “ என்றாள்.

        கிரி அவரைப் பார்த்து, “அடிபட்டது ஒண்ணும் பிரச்சனை இல்லைங்க, ஆனா அவளுக்கு நினைவு திரும்பல, அதனால ஐ சி யு க்கு ஷிப்ட் பண்ணறாங்க” என்றான்.

      நந்தினியை பார்த்து சித்தி மெதுவாக, “எங்களுக்கு இங்க வச்சு பாக்கற அளவுக்கு வசதி கிடையாதும்மா” என்றார்.

      நந்தினி பதில் கூறும் முன்பாகவே கிரி அவரிடம், “ நாங்க பாத்துக்கரோம்மா “ என்றான். கிரிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது அன்னலட்சுமிக்கா இந்த நிலைமை என்று. GIRI GROUP OF INDUSTRIES PVT LIMITED,  அவர்களுடைய அடையாளம் அது. மிகபெரிய கன்செர்ன் அது. ஒரு தொழில் என்று இல்லாமல் பல்வேறு தொழில்களை உள்ளடக்கியது. கோயம்பத்தூரை தலைமை இடமாக கொண்டு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள நிறுவனம் அது. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்கிறார்கள். அதனுடை chair person ஆக இருந்தவர் சரஸ்வதி அம்மா, அவர்களுடைய பாட்டி. அவருடைய பேத்திக்கு இந்த நிலைமையா எங்கேயோ தவறு நடந்திருக்கிறது.

       தனியாக நந்தினியிடமும் அருணிடமும்  எப்படி பேசுவது என்று கிரி யோசித்துகொண்டிருக்க, அதற்கு வாகாக அவளுடைய சித்தி, “ தம்பி வீட்டுக்கு தகவல் சொல்லணும். பசங்க ஸ்கூல்ல இருந்து வந்தா என்னவோ ஏதோன்னு பயந்துப்பாங்க” என்று அவர் கூறும்போதே, தூரத்தில் நின்று கொண்டிருந்த முத்துவை அழைத்தான்.

     “ முத்து, இவங்கள ஊருக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க “ என்றான். சித்தி தயங்க, “ பயப்படாதீங்க நாங்க பாத்துக்கறோம் “ என்றான்.

      இருந்தாலும் அவர் சிறிது தயக்கத்தோடே கிளம்பினார். முத்து அவரை கூட்டிக்கொண்டு கிளம்ப, கிரி முத்துவை மெதுவாக தலை அசைத்து பக்கத்தில் அழைத்தான். அவரிடம் சன்னக் குரலில், “அவங்கள கூட்டிட்டு போயிட்டு வரதுக்குள்ள, அவங்க வீட்டு நிலவரம், நம்ம பொண்ணு நிலவரம், எப்படி அங்க போனா , எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்”, என்றான்.

    சரி என்கிறமாதிரி அவர் தலையாசைத்தவாறே கிளம்பினார்.

   அவர்கள் சென்றவுடன், “என்ன நடந்தது” என்றான்.

       நந்தினி அங்கே நடந்ததை கூறினாள், “கிரி, அவள அந்தமாதிரி பார்த்ததுமே எனக்கு மனசே ஆரல. எப்படி இருந்த பொண்ணு, இப்படி கஷ்டப்படறாளே அப்படின்ற ஆதங்கத்துல தான் பேசினேன். எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது”, என்றாள் நிறைய வருத்தத்துடன்.

      “ எனக்கு அவள அடையாளமே தெரியல நந்து “என்றான் கனத்த குரலில்.

     “ என்னம்மோ நமக்கு தெரியாம நடந்திருக்கு,. இல்லைன்னா நீரஜா இறந்தவுடனே, அம்மா அன்னலட்சுமி  விட்ட சாபம்தான் இப்படி ஆயுடிச்சின்னு ஏன் புலம்பனும், நான் வேற அத ஏன் சந்தர்பம் தெரியாம கேட்டு இப்படி ஆகணும்,.” என்றாள் நந்தினி.

     இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அருண் , “இப்ப எதுக்கு அவசரமா ஊருக்கு போனிங்க” என்றான்.

    “ நாளைக்கு நீரஜா இறந்து முப்பது கும்புடறோம், அம்மா இப்படி சாபம் அது இது ன்னு பூஜை லிஸ்ட் வாங்க வந்த புரோகிதர் கிட்ட சொல்லியிருக்காங்க. உடனே அவர் நாளைக்கு கும்பிடும்போது அன்னலட்சுமியும் இருக்கணும் அவளும் கும்பிடனும் இல்லைன்னா ஆத்மா சாந்தி அடையாது அப்படின்னு சொல்லியிருக்கார். அப்பா நான் போய் சாயந்தரம் கூட்டிட்டு வர்றேன்னு சொன்னார். ஆனா அவ வருவாளான்னு தெரியலைன்னார். அப்போதான் நீங்க வந்தீங்களா. நான் உடனே உங்கள கூட்டிட்டு கிளம்பிட்டேன். அப்போவும் கிரி என்னவோ எனக்கு டிஸ்டர்ப்டா இருக்குனான். அப்பாவும் ஒத்துக்கவேயில்ல நான்போகவே கூடாதுன்னார். எனக்கு என்னவோ அவள பாக்கணும் போலவே இருந்தது. நான் கல்யாணம் பன்னவுடனே உங்க கூட U.S  வந்துட்டேன். இந்த நாலு வருஷமா நான் இந்தியா வந்து தங்கவே இல்ல. போனவருஷம் கிரி கல்யாணத்துக்கு வந்தோம் ஜஸ்ட் அஞ்சே நாள்ல கிளம்பிட்டோம். இப்போ நீரஜா ஸீரியஸ்சா இருக்கான்னு தெரிஞ்ச உடனே நான் மட்டும் வந்தேன். நான் வரதுகுள்ளையே நீரஜா இறந்துட்டா. தகவல் தெரிஞ்சு திர்டி டேஸ் அப்பறம் உங்களால இப்போதான் வர முடிஞ்சது. அதனால அன்னலட்சுமிய பாக்க எனக்கு சான்ஸ் இல்ல, அதான் சான்ஸ் கிடைத்தவுடனே அவளைபாக்கணும்னு கிளம்பிட்டேன். அவ சிரமப்படறாளே அப்படின்னு நான் நினைச்சுட்டு இருக்க அவ ரொம்ப திமிராப் பேச, திடீர்னு கத்த ஆரம்பிச்சுட்டா, நான் ஏன் படிக்கலைன்னு உனக்கு தெரியாதான்னு. அப்படியே மயங்கிட்டா

         அருண் கிரியை பார்த்து “என்ன நடக்குது கிரி” என்றான்.

         கிரி அருணிடம், “எனக்கு தெரியல மாமா, நந்து சொன்னதே தான், நான் பி.இ முடிச்சவுடனே மேல படிக்கறதுக்காக லண்டன் போயிட்டேன். நடுவுல உங்க கல்யாணத்திற்கு ஒன் வீக் வந்தேன். அவளை பாக்க முடியல. படிச்சு முடிச்சவுடனே இங்கே வர்றதுக்கு முன்னாடி அங்கே கொஞ்சம் வேலை கத்துகோன்னு அப்பா அங்கேயே ஒரு பெரிய கன்செர்ன்ல ஜாயின் பண்ணசொன்னார். ரெண்டு வருஷ கான்ட்ராக்ட் நடுவுல லீவ்ல வந்த என்ன.எங்கம்மாவோட அண்ணனுக்கு  ஹார்ட் அட்டாக் . அவர் பொண்ண தான் கல்யாணம் பண்ணனும், ஜாதகம் அது இது ன்னு சொல்லி. நீரஜாவ அவசரமா கல்யாணம் பண்ணிவெச்சாங்க. என்ன யோசிக்கக்கூட விடல .  அவ என்னையும் குழந்தைங்களையும் விட்டுட்டு போயேபோயிட்டா, கண்ணகட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு. ஆனா இவ இப்படி இருப்பான்னு எனக்கோ நந்துக்கோ தெரியாது மாமா தெரிஞ்சிருந்தா கட்டாயம் விட்டுயிருக்க மாட்டோம்”.

       இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கிரியுடைய தந்தை விஸ்வநாதன் அங்கே வந்தார். அவருடன் அவருடைய செக்குரிடீஸ் இரண்டு பேர் வந்தனர்.

       அருண் அவருக்கு தகவல் சொல்லியிருந்தான். வந்தவர் அவர்களிடம், ”எப்படியிருக்கா “ என்று கேட்க, “இன்னும் கண்விழிக்கவில்லை” என்றனர்.

        நந்தினி அவரிடம் கோபமாக,” எப்படிப்பா, அவள நீங்க இப்படி விட்டுட்டீங்க “ என்று கோபமாக கேட்டாள். 

“நான் அவள படிக்கவெக்கறேன்னு தான்மா சொன்னேன், அவ கேட்கல” என்றார்.

        ஆனால் கிரி அவரிடத்தில் எதுவுமே பேசவில்லை அவரையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“அவ படிக்கல சரி, நம்ம வீட்லயே வெச்சுயிருக்கவேண்டியதுதானே”

“அவ இருக்கலம்மா”

“இருக்கலன்னா ஒரு வீட குடுத்து, அங்க இருக்கவெக்க வேண்டியதுதானே. அந்த சின்ன வீட்ல இருந்துட்டு, அப்படி ஒரு வேலைக்கு போகிறமாதிரி, ஏன் அவள விட்டீங்க”

       ஒரு நிமிடம் வாய் பேச முடியாதவராக நின்றார். பிறகு “இல்லம்மா உங்க கல்யாணமெல்லாம் முடிஞ்சப்பறம், அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி செட்டில்பன்னிடலாம்னு தான்மா இருந்தேன்” என்றார்.நந்தினி அவரை நம்பாமல் பார்த்தாள். “நிஜம்மா, மாப்பிள்ளை எல்லாம் பார்த்துட்டேன், பேச்சு வார்த்தை கூட முடிஞ்சிடுச்சு, மாப்பிள்ளை டாக்டர் இங்க தான் இருக்காங்க,. ஹார்ட் சர்ஜன். பொண்ண பாத்து ஒ.கே சொல்லவேண்டியது தான். அதுக்குள்ள நம்ம வீட்ல இப்படி நடந்துட்டதால தள்ளிப் போட்டிருக்கோம்”.

“நீங்க சொல்லறது எதுவுமே நம்ப முடியல்ல. அவள ஒரு கார்மென்ட்ஸ்ல வேலை பாக்க விட்டு இருக்கீங்க. கேட்டா டாக்டர் மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்னு சொல்லறீங்க .ப்ச்” என்றாள் சலிப்பாக.

       அதற்குள் ஐ .ஸி .யு வில் இருந்து டாக்டர் வர அவரிடம் கேட்டபொழுது இன்னும் அவள் கண்விழிக்கவில்லை என்றார்.

“Anything serious?” என்றபோது. “we are trying to get expert opinion” என்றார்.

Advertisement