Advertisement

அத்தியாயம் இருபத்திரண்டு(2):

இவங்க கூட தூங்கிட்டாங்க. நீங்க ஏன் படுத்தறீங்க”, என்ற அவள் கெஞ்சல் எதற்கும் மசியவில்லை, வேறு வழியில்லாமல் இவள் குறுக்காக படுக்கும் இடத்திற்கு மறு புறம் அவனுக்கு இடம் செய்து கொடுத்த பிறகு, அவளுக்கு அருகிலேயே உறங்கினான்.

குழந்தைகள் தூங்குகிறார்கள் என்பதற்காக தான் கேட்க நினைத்திருந்ததை கிரியும் கேட்கவில்லை தான் சொல்ல நினைத்திருந்ததை உஷாவும் சொல்லவில்லை.

அடுத்த நாளும் உஷா ஆபீஸ் வர மறுக்க, வீட்டில் பேச ஆரம்பித்தாளும் குழந்தைகள் இடத்தில் ஓடிக்கொண்டே இருப்பாள் என்றறிந்து கிரி, “அவளை கொஞ்சம் பேப்பர்ல சைன் பண்ணனும். மதியமா வந்திடு”, என்று அவளை கட்டாயப்படித்தி ஏறக்குறைய இழுத்து கொண்டு செல்வது போல் சென்றான்.

ஏன் வர்றதில்லை நீ ஆபீஸ்க்கு. என்ன அப்பா ஏதாவது சொன்னாங்களா? அம்மா. வேற என்ன பிரச்சினை?”, என அவன் கேள்விகளை அடுக்க.  

உஷாவும் பேசும் அவசியத்தை உணர்ந்தவளாக, “நீ! நீதான்”, என் பிரச்சனை என்றாள் தெளிவாக.

நானா! நான் என்ன பண்ணினேன்?”.

நீங்க ஒண்ணும் பண்ணலை. மறுபடியும் நீங்க லண்டன் ரொம்ப லாங் பீரியட்  போறதுக்கு நான் விடமாட்டேன். இங்க தான் இருப்பீங்க. அதான் வரலை.   நீங்களும் நானும் சேர்ந்து வொர்க் பண்றது, அது சரி வராது”, என்றாள்.   

 “ஏன்? ஏன் வராது?”. ,

நேற்றைய வார்த்தைகளின் தாக்கம் மனதில் கோபத்தை தூண்ட. படபட வென பொறிய ஆரம்பித்தாள்.

ஏன்னா ரெண்டு பேருமே இன்டிபென்டன்ட் பெர்சனாலிட்டீஸ். மற்றவங்க சொல்றத கேட்க மாட்டோம். நமக்கு சரின்னு படறத தான் செய்வோம். நீங்க இந்த பிஸினெஸ்ல ஒரு வகைல இந்த ஏஜ் லயே மாஸ்டர்ன்னு கூட சொல்லலாம். வெளில தெரியாமையே நிறைய அச்சீவ் பண்ணியிருக்கீங்க. அப்படியிருக்கிற ஒரு சூழல்ல நான் இங்க வந்து என்ன பண்ண போறேன். என்னோட ஹெல்ப் தேவையன்ற மாதிரி எதுவும் கிடையாது. பெரிய மாமாவே இன்னும் இருக்காங்க, நீங்க இருக்கீங்க”,

நாளைக்கு நானா ஏதாவது பண்ணினா கூட அது நீங்க சொல்லி நான் செய்யற மாதிரி வரலாம். அது கூட எனக்கு ஒண்ணுமில்லை. ஆனா எல்லாமே நீங்க செஞ்சு என்னை ப்ரொஜெக்ட் செய்வீங்க. நீங்க வெளிலயே வரமாட்டீங்க. அது எனக்கு தெரியும். நீங்க தான் இங்க பாஸ். நீங்க மட்டும் தான் இருக்கணும்! நான் வரமாட்டேன்”, என்றாள் பிடிவாதமான குரலில்

என்ன முட்டாள்தனமான பேச்சு இது, இதெல்லாம் உன்னோட ப்ராபெர்டி, நீதான் பாத்துக்கணும். உனக்கு நல்ல அட்மினிஸ்ட்ரேஷன் வரும். இத்தனை திறமையான உன்னை வீட்ல உட்கார விட மாட்டேன். நமக்குள்ள ஈகோ ப்ரோப்ளேம் வரும்னு நினைக்கறியா”,

அதெல்லாம் இல்லை, நீங்க இங்க நல்லா பண்ணிட்டு இருக்கும் போது நான் தேவையில்லை. சும்மா இன்னும் என்னோட ப்ரோப்ர்ட்டி நான் தான் பார்க்கணும்னு சொல்ல வேண்டாம் . நீ கூட என்னோட ப்ரோபெர்ட்டி தான். அதனால எல்லாத்தையும் நீயே பாரு!”, என்றாள் எரிச்சல் மறையாத குரலில்.  

அப்படியில்லை ப்ரத்யு, இருக்கிற திறமைய வீணாக்காதே. எத்தனையோ பெண்கள் வாய்ப்புகள் இல்லாத நேரத்திலேயே போராடி வெல்றாங்க. உனக்கு எத்தனை பெரிய பாக் கிரௌண்ட் இருக்கு. எவ்வளவோ செய்யலாம். பெண்கள் அப்படி ஆண்கள் பின்னாடி ஒளிஞ்சிக்கனும்னு என்ன கட்டாயம். ஏன் உன் திறமைகளை நீயே முடக்கிகற. நான், நான்தான்! நீ, நீதான்!” அப்படி ஒண்ணும் நான் செய்யரதெல்லாம் உன்னோட தா வராது! நீயே நிறைய அச்சீவ் செய்வ!.

அவன் இத்தனை பேசியும் அவள் சிறிதும் அசையவில்லை. அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நினைவே அவனுக்கு இருக்க மறுபடியும் அவளை சமாதானப்படுத்தி பேச ஆரம்பித்தான்.

இதை நான் உனக்காக மட்டும் சொல்லலை. திறமை இருந்தா பெண்கள் அவங்களுக்குள்ள வெச்சிகனும். கலயாணம் ஆயிட்டா ஆண்களுக்கு பின்னால இருக்கணும். வேலைக்கு போனாலும் ஆண்கள் சேலரிய விட பெண்கள்து அதிகமா இருக்கும் போது தானாகவே குடும்பத்தில் உரசல்கள் வர்றது. அதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஏன் இப்படின்னு தோணும். ஒரு பழைய சினிமா ரஜினி விஜய்சாந்தி நடிச்சது. பிஸினெஸ் நல்லா பண்ணிட்டு இருப்பாங்க ஹீரோயின்! ஆனா அவங்க திமிரா இருப்பாங்க. கடைசியா திமிர் போய் திருந்திடுவாங்கன்னு காட்டுறப்போ நம்பர் ஒண்ணா இருக்கிற அவங்க பிஸினெஸ் விட்டுட்டு, கணவருக்கு சாப்பாடு கட்டி டாட்டா குடுக்கற மாதிரி ஃபில்ம் முடியும். எனக்கு அப்போ தோணினது என்ன அநியாயம் இதுன்னு தான்!.”

அவனுடைய இந்த கருத்து அவளுக்கு மிகவும் பிடித்து சிறிது கோபத்தை மட்டுப்படித்தியது.

நான் சுபா மேடம்ம லண்டன் ஆபீஸ்க்கு செலக்ட் பண்ணின போது அப்பா கூட வேண்டாம், லேடி அவங்க சமாளிக்க முடியாது. நீ இருந்தப்பவே கலவரம் வரைக்கும் வந்ததுன்னு சொன்னாங்க”,

நான் ஒத்துக்கலை! என்னால மட்டும் தான் முடியுமா! என்ன அவங்களால முடியாதா! மே பி நான் கலவரம் வந்த பிறகு சமாளிச்சேன். அவங்க வராமையே பார்த்துக்கலாம் இல்லையா.”,       

மற்றவங்களுக்கே அப்படின்றப்போ உன்னை நான் விடமாட்டேன்!”, என்றான் தீவிரமான குரலில்.

அவன் பேச பேச பெருமையாக உணர்ந்தவள், “உங்கிட்ட என்ன இருக்குன்னு இப்படி உன் மேல நான் பைத்தியமா இருக்கேன்னு நிறைய நாள் நான் நினைச்சிருக்கேன். பரவாயில்லை உன் கிட்ட ஏதோ இருக்கு. உங்கம்மா உன்னை நல்லாதான் வளர்த்திருக்காங்க”, என்றாள் ரைமிங்காக.

பேச்ச மாத்தாத, வருவ தானே”, என்றான் விடாமல்

மாட்டேன் என்பது போல் தலையாட்டினாள். “இவ்வளவு சொல்லியும் நீ கேட்க்க மாட்டியா”,

எதுக்கு கேக்கணும். கேட்கமாட்டேன். நான் சொல்றதை நீ கேளு. இது சரி வராதுஎன்றாள் மறுபடியும்.

அவள் குரல் எதையோ உணர்த்த, “நான் மறுபடியும் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா, எனக்கு தெரியாமையே “,

அமைதியாக இருந்தாள், அதுவே ஏதோ இருக்கிறது என்று சொல்ல.

சொன்ன தானே ப்ரத்யு தெரியும். எதுன்னாலும் சொல்லிடு!. சண்டை போட்டுடு!. மறுபடியும் மனசுல வெக்காத”, என்றான் சலிப்பாக.

அவன் குரல் ஏதோ செய்ய , “நீங்க நேத்து நான் கணேஷ் காலேஜ் விஷயமா பேசிட்டு இருக்கும் போது உனக்கு ஒண்ணும் தெரியாது, பேசாம இருன்னு சொன்னீங்க”,

அவனுக்கு அப்போது கூட புரியவில்லை, “ஆமாம் சொன்னேன் அதுல என்ன?”.

நீங்க நான் படிக்கலைன்னு தானே அப்படி சொன்னீங்க”, என்றாள் பட்டென்று.

அமர்ந்திருந்தவன் அப்படியே கண்களை மூடிக்கொண்டான். அவள் அதிகம் படிக்கவில்லை அவளுக்கு ஒன்றும் தெரியாது என்ற அர்த்தத்தில் தான் கூறினான். அதுதான் உண்மை. ஆனால் அதை குறையாகவோ கிண்டலாகவோ கூறவில்லை.

கூறிய வார்த்தைகள் கூறியவைதானே”.

என்ன சொல்வது. என்ன பேசுவது”, என்றே தெரியவில்லை. “சாரி”, என்றான் ஒற்றை வார்த்தையாக.

நான் படிக்கலை, அப்படின்றதுதானே நிஜம். இதுக்கு எதுக்கு சாரி. ஆனா இன்னும் படிக்காம இருக்க முடியாதில்லையா. நீங்க சொன்னதுனாள .கே! ஆனா வேற யாராவது க்ரிடிசைஸ் பண்ணினா, என்னால தாங்க முடியாது”.

அவளுடைய குரலில் மிகுந்த வருத்தமிருந்தது.

உன்னை க்ரிடிசைஸ் பண்ற அளவுக்கு இங்க யாருக்கும் தைரியமில்லை. அப்படியே பண்ணினாலும் நான் அவங்களை விட்டுடுவேன்னு நினைச்சியா, ,யாரும் சொல்லமாட்டாங்கநான் கூட அதை ஒரு குறையா சொல்லலை ப்ரத்யு”.

நாளைக்கு நம்ம பசங்களே சொல்லுவாங்க. அம்மா உனக்கு ஒண்ணும் தெரியலைன்னு. நான் படிச்சிருந்து அவங்க அதை சொன்னா போங்கடான்னு ஈசியா எடுத்துப்பேன். ஆனா அப்படி இல்லாத பட்ச்சத்துல எனக்கு நிஜாமாவே அது ஹர்டிங்கா தான் இருக்கும்”.

சரி உனக்கு எவ்வளவு வேணுமோ படி! அதுக்கும்  நீ ஆபீஸ் வர்றதுக்கும் என்ன சம்பந்தம்”.

எனக்கு படிக்கணும், நான் முதலில் என்னை ஸ்திரபடுத்திக்கரேன். அப்புறமா வர முடியுமான்னு பார்க்கிறேன். அப்போ கூட கன்பார்மேஷன் குடுக்க மாட்டேன்”, என்றாள்.

ஏன்.”, அவன் குரலில் கோபம் நன்றாகவே தெரிந்தது

ஏன்னா? அப்போ கூட நம்ம சேர்ந்து வேலை பார்க்க முடியாது”.

இவ்வளவு சொல்லியும் அவள் கேட்க மறுக்கிறாள் என்ற ஆத்திரம் ஒங்க, “அதுதான் பாட்டி சொன்னாங்கன்னு தானே நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்ட, நீ தான் என்னை காதலிக்கவேயிள்ளயே, அந்த டாக்டர் தான் தெளிவா சொன்னாங்களே”, என்றான்.  

அந்த வார்த்தைகளை கேட்டவுடன் கோபத்தில் அவள் முகம் காட்டிய ஆத்திரம் தொடர்ந்த வேதனை, மறுபடியும் தெளிவாக கிரிக்கு அவன் தவறு செய்து விட்டதை உணர்த்தியது.

அவன் சாரி சொல்ல வர, “ஷ்”,. என்றவள் ஆழ மூச்செடுத்தாள்,அவள் கோபத்தை கட்டு படுத்த போராடுவது தெரிந்தது. “நீ இனிமே ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது, பாட்டி சொன்னாங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி. ஆனா நான் எப்போவாவது உன்கிட்ட கேட்டேனா.?”,

அவள் கேட்கவேயில்லையே, இதற்கு என்ன சொல்லுவான். “இல்லை”, என்பது போல் தலையாட்டினான்.

காதல்ன்னா என்னன்னு நீ நினைச்சிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியலை., என்னை பொருத்தவரைக்கும் லவ் யூ அப்படின்னு சொல்லி தெரியறதில்லை காதல். அது சொல்லாம புரியற ஒரு உணர்வு, எனக்கு நீ எவ்வளவு இஷ்டம்னு உனக்கு தெரியலையா.”,

நான் அப்போவே சொன்னேன். அவர் பெரிய டாக்டர் அவர் தப்பா சொல்ல மாட்டார். ஆனா அவர் இங்கிலிஷ்மேன், என்னோட உடல்நிலை அவருக்கு தெரியலாம். ஆனா உணர்வு நிலை.? எப்படி புரியும், நான் அதை விளையாட்டா சொல்லலை. சீரியஸா தான் சொன்னேன், இதுக்கும் மேல என்னால உன்கிட்ட ப்ரூவ் பண்ண முடியாது, பண்ணவும் மாட்டேன்”.

சாரி! அது நீ என் கூட வொர்க் பண்ண முடியாதுன்னு, சொன்ன ஒரு கோபத்துல சொல்லிட்டேன்”, என்றான் கண்களில் தவிப்போடு,

ஆனால் அந்த தவிப்பு அவளை சிறிதும் அசைக்கவில்லை,

கோபம் வந்தா என்ன வேணுன்னாலும் பேசுவியா நீ, முன்னால உனக்கு என்னை தெரியாது. .கே! ஆனா இப்போ கூட என்னை தெரியலையா உனக்கு. “. இதை சொல்லும் போது அவள் குரலில் என்ன ஒலித்தது? “என்னால் புரிய வைக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையா?, இல்லை உனக்கு புரியவில்லையா என்ற வருத்தமா?.”   

நீ என்ன செஞ்சாலும் ஒரு சாரி சொல்லிட்டா, சரியாபோயிடுமா. நான் என்ன உன் பின்னாடி சுத்துற நாய் குட்டின்னு நினைச்சியா. ,போடா!”, என்றவள் வேகமாக வெளியே போக. அவன் பின்னோடு செல்ல, “வந்த! உன்னோட ஆபீஸ்ல மறுபடியும் நீ அடிவாங்குவ!”, அவள் குரலில் தெரிந்த தீவிரம் பிரச்சனையை சற்று ஆறவிடு என்று சொல்ல நின்றபடியே இருந்தான்.

நேரம் கடக்க, கடக்க, அவனால் அவனை அமைதி படுத்திக்கொள்ள முடியவில்லை. தான் பிரத்யுவிற்கு மேலும் மேலும் அநியாயம் செய்வதை போல தோன்ற, சிறிது நாட்களாக மறந்திருந்த பழக்கத்தை தேடி போனான்.

இரவு வெகு நேரமாகியும் அவன் வரவில்லை, உஷா பயந்து போனாள். எங்கே சென்றிருப்பான், மீண்டும் ஆரம்பித்து விட்டானோ என்று அவள் யோசிக்க. யோசனையின் நாயகன், அவள் நினைப்பை பொய்யாக்காமல், நிலை தடுமாறியபடியே வந்தான்.

பார்த்தவளுக்கு இன்னுமே கோபம் அதிகம்மாகியது. ஆனால் இது கோபத்தை காட்டும் நேரமல்ல என்று உணர்ந்தவளாக, ஒன்றும் பேசாமல் சாப்பிட அழைத்தாள்.

சாப்பிட மறுத்தவனிடம், “நான் இன்னும் சாப்பிடலை!”, என்று கூறி அவனை சாப்பிட வைத்தவள், அங்கேயே அவனுக்கு சோபாவில்லேயே படுக்க வசதி செய்து, “இந்த ஸ்மெல்லோட குழந்தைங்க பக்கத்தில் விட மாட்டேன்”, என்று தீர்மானமாக கூறிவிட, “சாரி!”, என்றான் மறுபடியும். “தூங்குங்க!” என்று அவள் சென்று விட, அவனுக்கு உறக்கமே இல்லை.

 அதிகாலையில் எழுந்து உடனேயே குளித்து. அவள் பால் கலக்க சென்றிருக்கும் நேரத்தில், மறுபடியும் குழந்தைகளிடம் சென்று படுத்து கொண்டான். அவள் வந்தவுடனே,”குளிச்சிட்டேன், நான் இங்கே தூங்கட்டுமா, எனக்கு அங்க தூக்கமே வரலை. ப்ளீஸ்”, குரலில் தெரிந்த கெஞ்சல் அவளை சிறிது அசைத்தது. மறுபடியும், “சாரிஎன. “சரி தூங்குங்க! அப்புறம் பேசலாம்”, என்றாள். ஆனால் கிரிக்கு பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்நேற்று நினைத்த மாதிரி ஆறப்போடலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை.

முடிச்சிடலாமே! என்னால முடியலை!”, என்றான் பாவமாக.

ஒன்றும் பேசாமல் குழந்தைகளை மட்டுமே கவனித்து கொண்டிருந்தாள்.

நான் பேசினது தப்பு தான் ப்ரத்யு, என்னை மன்னிச்சிடேன்”. பால் குடித்த குழந்தைகள் கை கால்களை அசைத்து விளையாட ஆரம்பித்ததும், அவன் பேசியது அவளுக்கு சொல்லொணாத கோபத்தை கொடுத்தாலும், அவளால் அவனிடம் கோபத்தை காட்ட முடியவில்லைஅவனிடம் வந்த அவள், “நானும் சாரி”, என்றாள்.

எதுக்கு?”, என்றவனிடம், “ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை குடிக்கற மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு தள்ளுனதுக்கு”, என்றவளை, இவளை என்ன செய்தாள் தகும் என்பது போல பார்த்தான்.

என்ன?”, என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவளிடம், “நீ அநியாயத்துக்கு நல்ல பொண்ணா இருக்க. உன்னை இப்படியே விட்டா சரி வரமாட்டே”, என்று கூறியவன். அவள் அவனிடம் பேசிவிட்ட சந்தோஷத்தில், “முதல்ல உன்னை கெட்ட பொண்ணு ஆக்குறேன்”, என்று கூறி அவளை அப்படியே தூக்கி கட்டிலில் கிடத்த, அவன் செய்ய போவதை உணர்ந்தவள், “வேண்டாமே!”, என மறுத்தாள்.

நேத்து இருந்து எனக்கு நிறைய டென்ஷன். நான் மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றனொன்னு, ப்ரத்யு புரிஞ்சுக்கோ., ப்ளீஸ் நீட் யூ”, என்றான் கெஞ்சலாகஉஷாவிற்க்கு பிடித்தம் இல்லையென்றாலும் அவளால் மறுக்க முடியவில்லை, “குழந்தைங்க?”, என, “அவங்க இப்போ தான் பால் சாபிட்டாங்க! அழமாட்டாங்க!”, என்று கொண்டே அவளை முத்தமிட, “அச்சோ நான் இன்னும் பிரஷ் கூட பண்ணலை”, என்றவளிடம், “இம்சை கொஞ்சம் அமைதியாயிரு”, என கடிந்தான், “கதவு திறந்திருக்கு, அதையாவது தாழ் போடுங்க”, என்றாள் அவன் விட மாட்டான் என்பதை உணர்ந்தவளாக.

கதவை தாழ் போட்டு வந்தவன், “உன்னை கெட்ட பொண்ணு ஆக்கிட்டேன் தானே! காலையில்லேயே நீ கதவை சாத்த சொல்ற”, என்று அவளை சிறிது டென்ஷன் ஏற்றி, அந்த நேரத்திலும் இரண்டு அடியை வாங்கிக்கொண்டே தன்னுடைய தேவைகளை அவளுடைய தேவைகளாக மாற்றி, அவன் அடைந்த சஞ்சலங்கள் மறைய, அவளுடைய சஞ்சலங்களையும் மறக்க வைத்தான்.

கோபத்தை விட வைத்தாலும் அவளுடைய இயல்பு நிலையை அவனால் வரவழைக்க முடியவில்லை. அவனுடைய தேவைகள் எல்லாம் அவளாகி போனபோது மறுக்காமல் உடன்பட்டாள். ஆனால் அவளாக அவனிடம் எந்த விஷயத்திற்கும் வருவதில்லை.

 சிறுவயதில் இருந்தே பார்க்கும் நேரம் பார்க்கும் பொருட்களை வாங்குவாள். ஆனால் இப்போது எதையும் வாங்குவது இல்லை. இவனாக கவனித்து கட்டாயப்படுத்தி பொருட்கைளை வாங்க வைத்தால் தான் வாங்கினாள். முக்கியமாக அவள் பாடுவதே இல்லை. பாட்டு சிறுவயதில் இருந்தே முறையாக பயின்றவள். அவளுக்கு பெரிதாக ஆர்வம் என்பது கிடையாது. ஆனால் பாட்டிக்கு பிடிக்கும் என்பதற்காக முறையாக ஸ்ரத்தை எடுத்து பயின்றாள். அவளுக்கு அது நன்றாக வந்தது. பிறகு அது அவளுக்கு மிகவும் இஷ்டமாகி போனது. அவள் நன்றாக பாடுவாள் என்பது இங்கே எல்லோருக்குமே தெரியும். சிறு விழா வீட்டில் அல்லது பண்டிகை நாட்களில் அவள் பாடாமல் பாட்டி விடவே மாட்டார்கள்.

அவளை, “பாடேன் ப்ரத்யு!”, என்று கிரி எவ்வளவோ கேட்டும், வேண்டுமென்றே  “மறந்துட்டேன்!”, என்பாள். குழந்தைகளை தூங்க வைக்க கூட வார்த்தைகளாக பாடல் வராது, ஹம்மிங் மட்டுமே வரும். அந்த ஹம்மிங் கேட்க்காமல் அவளுடைய மகன்  தூங்க மாட்டான். அவள் அறியாமலேயே தினமும் அவளுடைய மகன் அவளை அகாரம் பாட வைத்துக்கொண்டு இருந்தான். கேட்கவே கிரிக்கு மனதிற்கு இதமாக இருக்கும்.   

ஞாபகப்படுத்து இல்லைன்னா மறுபடியும் கத்துக்கோ!”, என்று கிரி கூறினால், “தானா ஞாபகம் வந்தா பாடுறேன், இல்லைன்னா இல்லை”, என்றுவிட்டாள்.

நாட்கள் தெளிந்த நீரோட்டமாகவே சென்றது, ப்ரத்யு இல்லாமல் அணுவும் கிரிக்கு அசையாது. கிரியும் சாம்பவியும் பேசிக்கொள்வதில்லை. உஷாவும் சாம்பவியும் கூட குழந்தைகளை முன்னிட்டு இரண்டொரு மிகவும் தேவையான வார்த்தைகளை பேசினர். ஆனால் கிரியும் சாம்பவியும் அதற்கான முயற்சியை இருவருமே எடுக்கவில்லை.

கணேஷ் என்ஜினீயரிங் சேர, உஷா ஜர்னலிசம் சேர்ந்தாள். அவளுக்கு அதில் விருப்பம் அதிகம்.

எளிதில் கிரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.” நீ ஆபீஸ் வர மாட்டேன்னு சொன்னா பேசாம மெடிசின் பண்ணு, உனக்கு சைக்கியியாட்ரி நல்ல சூட் ஆகும். கவுன்சில்லிங்க், அந்த மாதிரி டென்ஷன் இல்லாம உனக்கு பிடிச்ச வேலையா பார்க்கலாம், உன் நண்பர்கள் எல்லாம் உதவுவாங்க”, என.

பிடிவாதமாக ஜர்னலிசம் தான் என்று விட்டாள், “ரொம்ப வெக்சான ஒரு ஸ்டேஜ்ல, எனக்கு இஷ்டமான எல்லாத்தையும் விட்டுட்டேன், என்னோட படிப்பு, என்னோட பாட்டு, ஏன் நான் வெஜ் சாப்பிடறதை கூட விட்டுட்டேன்.”,  உன்னைகூட என்ற வார்த்தையை அவள் சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு அது புரிந்தது. “ஆனா அப்போ கூட நியூஸ் பேப்பர், மீடியா என்னை அட்ராக்ட் பண்ணிட்டே தான் இருந்தது விட முடியலை. எனக்கு அதுதான் வேணும்”.       

 “பீல்ட் வொர்க் நமக்கு சரிவராது ப்ரத்யு”, என அவன் சொல்ல, “நான் இது தான்னு முதலிலேயே முடிவு பண்ணியிருந்தேன். அதனால தான் ஆபீஸ் வர மாட்டேன்னு சொன்னேன், ஏன் நீங்க எனக்கு ஒரு நியூஸ் சேனேல் ஆரம்பிச்சு தரமாட்டீங்களா”, என அவன் வாயை அடைத்தாள்.

ஆனாலும் தினமும் அவள் காலேஜ் செல்ல வேண்டிய அவசியமில்லை. அட்டெண்டென்ஸ் அட்ஜஸ்ட் செய்துவிடுவார்கள். குழந்தைகளோடு அவள் நிறைய நேரம் இருக்கலாம் என்று ஆயிரத்து எட்டு சமாதானங்கள் அவள் சொன்ன பிறகே அனுமதித்தான்

கிரி, அவன் அவளை பார்க்காத அவளுடைய வாழ்க்கையின் சில வருடங்கள் அவள் ஞாபகத்தில் வராமலேயே பார்த்து கொண்டான் என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்ன முயன்றும் அவள் சிறுவயதில் இருந்த வாழ்கையை அவனால் திரும்ப கொண்டுவரமுடியவில்லை.

மெதுவாக ஒரு நாள், “வர்ஷாக்கு முத்து விநாயகத்தை பார்க்கலாம்னு சொன்னேனே”, என்றான். “உங்களுக்கு ஃபிரன்ட் தானே, நீங்களே பேசுங்க!”, என்றாள். இருவரும் ரெகுலர்  காண்டாக்ட்டில் இருந்தார்கள் என்று அவளுக்கு தெரியும்.

ஏற்கனவே நான் நிறைய சொதப்பிட்டேன்! நீயே ஏதாவது செய்யேன்!” என்றான்.

அவங்கப்பா உங்களை பார்க்கணும்னு அப்போவே விருப்பபட்டார். நமக்கு டாக்டர் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க! அவங்களை ஒரு நாள் நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்ணலாம்”, என்றவள், “வர்ஷாக்கு போன் செய்ங்க”, என்றாள்.

அவளிடம் சிறிது நேரம் எதை, எதையோ பேசிவிட்டு முத்து விநாயகத்தை பற்றி பேச்சில் இழுத்தாள். “ரொம்ப ஓல்ட் நேம் இல்ல, சரியான சிடுமூஞ்சி வேற, எனக்கு ட்ரீட்மென்ட் குடுக்கரேன்னு அதையும் இதையும் கேட்டு என் உயிரையே எடுத்துட்டாங்க”, என்றாள் வேண்டும் என்றே, இவள் ஏன் சம்பந்தம் இல்லாமல் அவனை திட்டுகிறாள் என்று கிரி அவனுக்கு பரிந்து பேச வர, “ஷ்என்று அவனை அடக்கியவள் போனை ஸ்பீக்கர் மோடில் போட

நேம் ஒல்டா இருந்தா என்ன? நல்ல ஹான்ட்சம்மா தானே இருக்காங்க, அவங்க என்னை இங்க கொண்டு வந்து ஹாஸ்டல்ல விட்டபோவே என் ஃபிரண்ட்ஸ் இன்ட்றடுயுஸ் பண்ண சொல்லி ஒரே ரகளை, மாமா ஃபிரன்ட் எப்படி இருப்பாங்க, கிரேட் எஸ்கேப். நிமிஷத்துல ஆளையே காணோம், பீல்ட்ல நல்ல நேம் இருக்கு. அதனால தான் அவரை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு”, என்றாள்.

பேசி வைத்தவுடன், “நம்ம ப்ரோசீட் பண்ணலாம் அவளுக்கு பெருசா அப்ஜெக்சன்  இருக்காது”, என்றாள்.

அவளுடைய முடிவெடுக்கும் திறமையை பார்த்து வியந்தான். “டாக்டர் .கேன்னா அவங்க அம்மா அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. டாக்டர் கிட்ட நீங்க பேசுங்க. வர்ஷா அம்மா, அப்பா நீங்க சொன்னா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஆனா உங்க பாட்டி தாத்தா கொஞ்சம் கஷ்டம் தான். எப்போடா சந்தர்பம் கிடைக்கும்னு இருக்காங்க. அவங்க பேத்தி வாழ்கையை  நான் வாழ்றேன்ற ஆதங்கம் அவங்களுக்கு.”, அவள் மேலே பேசிகொண்டிருக்க. அவன் காதில் விழுந்தாலும் மனதில், மூளையில் ஏறவில்லை.

அவர்களுடைய பேத்தியை தானே உன்னுடைய வாழ்க்கைக்குள் அவர்கள் நுழைத்தார்கள். வராமல் இருந்திருந்தால் நீரஜா இருந்திருப்பாளோ.?   

Advertisement