Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று(2):

நீ என்ன விளையாடுறியா. இது என்ன திருப்பூர்ல இருந்து கோவை வர்ற மாதிரி நினைச்சியா. அதெல்லாம் முடியாது”, என கிரி சொல்ல, அடம் செய்யும் குழந்தை முகத்தை திருப்புவது போல் முகத்தை அவனுக்கு வேறு புறமாக திருப்பி நின்று கொண்டாள்.

அவன் குழந்தைகள் அல்லவா, என்னவோ செய்யட்டும் என்று விட்டு செல்லவும் மனமில்லாமல், “டாக்டர் உன் செக் அப் பற்றி சொல்லட்டும், அனுப்பறேன்”, என்றான்.

உடனே திரும்பியவள், “டாக்டர் நம்பர் குடுங்க, நான் கேக்கறேன்என்றாள்.

மார்னிங் செஸன் முடிஞ்சவுடனே, அவரே கூப்பிடுவார்என.

மாலை வரை முத்து விநாயகம் அழைக்கவில்லை. “நான் ஃபோன் செஞ்சி பார்க்கறேன்”, என்று அவனை துளைத்து எடுத்தாள். ஒருவழியாக மாலை முத்துவினாயகம் அழைக்க. “ஹப்பா”, என்று கிரியை பெருமூச்சு விடவைத்தாள்.

அவன் அப்போதே கிளம்பி ஒரு ஹாஸ்பிடல் பேரை சொல்லி அங்கே வரும்படி சொல்ல அங்கே சென்றனர். அங்கே செல்ல முத்து விநாயகம் அப்பாயிண்ட்மெண்ட்டிற்கு அரை மணி நேரம் இருப்பதாக கூற. அங்கேயே உட்கார்ந்து காத்திருக்க ஆரம்பித்தனர். கிரியும் முத்து விநாயகமும் பேசி கொண்டிருக்க, உஷா உட்கார்ந்த நிலையிலேயே உறங்க ஆரம்பித்தாள்.

லண்டனில் கிரிக்கு நண்பர்கள் உறவினர்கள் இருந்த போதும் யாரையும் அவன் அழைக்க பிரியப்படவில்லை. உஷா தன்னுடைய பிரச்சினை மற்றவர்களுக்கு தெரிவதை விரும்ப மாட்டாள் என்று தெரியும்.

  சிறிது நேரம் கழித்து தான் இதனை கவனித்த கிரி, “இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு எழுந்திரு”, என்று அவள் உறக்கத்தை களைக்க, உறக்கம் கலைந்த  எரிச்சலில் அவனிடம் உஷா, “இன்னும் பத்து நிமிஷம் இருக்கு தானே. அதுக்குள்ள ஏன் எழுப்பறீங்க. ராத்திரியும் தூங்க விடலை”, என்றாள் சிறிது சத்தமாக. கேட்ட முத்து வினாயகதிற்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது. ஆனாலும் புன்னகையை மறைக்க முடியவில்லை. கிரி அவனை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்து, “அம்மா தாயே, நீ கொஞ்சம் வாயை மூடுறியா”, என்றான். அப்போதுதான் தான் சொன்னது வேறு பல அர்த்தங்களை தொனிக்கும் என்று உணர்ந்த உஷா அவளுடைய கைகளாலேயே அவள் தலையிலேயே தட்டி கொண்டு, “கொஞ்சம் சொதப்பிட்டேனா!”, என்றாள்.

கொஞ்சம் இல்லை ரொம்ப”, என கிரி கூற.

நான் வேணா அப்படியெல்லாம் இல்லைன்னு, டாக்டர் கிட்ட சொல்லவா”, என்று உஷா சீரியசாக கேட்க. இந்த முறை முத்து வினாயாகத்தால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை, சிரித்து கொண்டேஒரு நிமிஷம் சார். நான் இப்போ வரேன்என்று கூறியவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அம்மா தாயே, நீ உள்ள போற வரைக்கும் இன்னும் பேசக்கூடாது. பேசின என் இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆயிடும்”, என்று பரிதாபமாக கைகளை வணங்குவது போல் வைத்து கொண்டு .கிரி சொல்ல. அதற்கு உஷா ஒரு கையை கட்டுவது போல் வைத்து கொண்டு மற்றொரு கையை வாயை மூடுவது போல் வைக்க. தூரத்தில் இருந்து இவன் கும்பிடுவதையும் அவள் வாய் பொத்தி நிற்பதையும் பார்த்த முத்து வினாயகதிற்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்து கொண்டே இருந்தது.

அவர்களுக்கு அழைப்பு வர மூவரும் உள்ளே சென்றனர். முத்து விநாயகத்தை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தார் அங்கே இருந்த டாக்டர். இருவரையும் பரஸ்பரம் அறிமுகபடுத்தினான். அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடியது. இவர் டாக்டர் மார்க் ராபர்ட்சன். இவங்க மை பிரிண்ட்ஸ் என்று அறிமுகபடுத்தி அன்னலட்சுமி பிரத்யுஷாவின் கேஸ் விவரத்தை சொல்ல, அவர் சில டெஸ்ட்களை எழுதிக்கொடுத்து பல கேள்விகளை அவள் முன் வைக்க ஆரம்பித்தார்.

அவளுக்கு ஆங்கிலம் நன்றாக வந்தாலும் அவருடைய ஸ்லாங் புரிவதில் சற்றே சிரமமிருக்க கிரியும் கூடவே இருக்க வேண்டி வந்தது. டாக்டர் என்ற முறையில் முத்து விநாயகமும் கூடவே தான் இருந்தான்.

அன்று டெஸ்ட்கள் எடுக்கவே நேரம் சரியாக, மறுநாளும் வரும்படி பணித்தார். ஏறக்குறைய ஒரு வாரம் தொடர்ந்து செல்ல வேண்டி வந்தது. முழுநாளும் ஹாஸ்பிடலில் இருக்கும் படி ஆயிற்று. காலையில் கான்பர்ன்ஸ் அட்டென்ட் செய்த முத்து விநாயகம் மாலை முழுவது அவர்களுடனேயே செலவழித்தான். வேறு வேலைகள் முக்கியமாக செய்யவேண்டி இருந்ததினால் முத்து விநாயகம் வந்தவுடனே அவனை உஷாவிடம் விட்டு கிரி அதனை பார்க்க செல்வான். சிலவற்றிற்கு கிரியையும் முத்து விநாயகத்தை அனுமதித்த டாக்டர் மார்க், அவளுக்கு இப்போது அவர் சிறிது பழகி விட்டதால் அவளை மட்டுமே வைத்து கொண்டு எக்சாமின் செய்தார்.

 கிரியுமே சில முடிவுகளை எடுத்ததினால், பல வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. ஒரு வாரம் நிமிடத்தில் ஓடியது. மாற்றி மாற்றி டெஸ்ட் கேள்விகள் கவுன்சிலிங் என்று இருந்ததால் எப்போது முடியும் என்ற அளவிற்கு உஷாவிர்க்கு சோர்வாக இருந்தது. பழைய நினைவுகள், பழைய வாழ்க்கை. தனிமை என்று எல்லாமே அவளுக்கு ஞாபகம் வரவைக்கபட்டு அவளுடைய வாய் வார்த்தைகளாலேயே வெளி கொண்டு வர பட்டது.

பொறுக்க முடியாமல் டாக்டரிடம், “எப்போது இது முடியும். நான் இந்தியாவிற்கு போகவேண்டும். குழந்தைகளை பார்க்க வேண்டும்”, என்று அவரிடமே கேட்டாள்.

நாம் சிகிச்சையின் முடிவில் இருக்கிறோம். அனுப்பிவிடுகிறேன்!”, என்றார்.

அந்த வார முடிவில் கிரியையும் முத்து விநாயகத்தை பார்த்த அவர், அவளுடைய நிலைமையை விளக்கினார். “ஒன்றும் பெரியதாக பயப்படும் படி இல்லை. கிரி அவளோடு இருந்து அவன் அவளுக்குரியவன் என்ற நினைவு அவள் மனதில் பதிந்து விட்டாள் மறுபடியும் இப்படி வருவதற்கான வாய்ப்பு குறைவு அல்லது வராது என்றே சொல்ல வேண்டும்”, என்றார்.

அவளுடைய அன்னை இல்லாதது, அவளுக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்திருக்கிறது. அவளுடைய அன்னைக்காக எல்லா வயதிலும் எல்லா நிகழ்வுகளிலும் ஏங்கி இருக்கிறாள். தன்னுடைய உணர்வுகளை அவள் யாரோடும்               பகிர்ந்து கொள்ளாதது, முக்கியமாக அது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று தனக்குள்ளேயே அடக்கி கொண்டது, அவளுடைய பாட்டியினுடைய கிரியை அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை, குழந்தை பருவம் முதலே அவளுடைய தேவை என்பது போல் அவளுக்குள் திணிக்கப்பட்டுள்ளது”.

அவளுடைய பாட்டி திடீரென்று தான் இறந்து இந்த மாதிரியான ஒரு சூழல் அவளுக்கு வரும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும் விட அவளுக்கு படிக்க முடியாமல் போனது மிகப்பெரிய இழப்பாக தோன்றுகிறது. மிகவும் நன்றாக படிக்கக்கூடிய பெண். ஸ்டேட் ரேங்க் வாங்கும் ஒரு பெண் படிக்கமுடியவில்லை. இது எதற்குமே அவள் யாரையும் காரணம் சொல்லவில்லை. நான் நினைத்தால் யாராலும் தடுத்திருக்க முடியாது. ஏனோ செய்ய தோன்றவில்லை என்கிறாள்”. அவளுடைய ஆழ்மனதின் எண்ணங்களில் கூட அவள் யாரையும் குற்றம் சாட்டவில்லை.     

தன்னுடைய இந்த பிரச்சனைகள் எல்லாம் அவள் தெரிந்து வைத்து இருக்கிறாள். எல்லாவற்றையும் அவளே ஓரளவு மேனேஜ் செய்கிறாள். சில சமயம் சமாளிக்க முடியாத போது எல்லாமாக சேர்ந்து அவளை, அவளின் நினைவுகளை, அடித்து அவளை சாய்த்து விடுகிறது. அவனை மறுபடியும் பார்த்த இந்த சில தினங்களில் இது அதிகமாக இருக்கிறது. ஆனால் என்னுடைய கணிப்புப்படி இந்த மயக்கம் அவளுக்கு முன்பே இருந்திருக்க கூடும். ஆனால் சட்டென்று தெளிந்து விட்டதால் யாருக்கும் சீரியசாக தெரிவித்து இருக்காது”.

இன்னுமே சொன்னார். அவள் கிரியை காதலிக்கவேயில்லை என்று. அதை கேட்ட கிரி சற்று அதிர்ந்து ஏமாற்றமாக உணர்ந்தான் என்றே சொல்ல வேண்டும்.  “அப்புறம் என்னை எதற்கு இப்படி மனதளவில் மிகவும் தேட வேண்டும்”, என்றான்.

மனதளவில் மட்டுமே அவள் தேடல் இருக்கும். உடல் ரீதியாக அவளுடனான உறவு சற்று சிரமமே”, என்றார்.

 இதை அவன் இந்த ஒரு வாரமாக உணர்ந்து தான் இருந்தான். அவன் அணைத்து படுத்திருக்கும் வரை அவள் சரியாக உறங்குவதே இல்லை. இரண்டு நாட்கள் பார்த்துவிட்டு அவள் மேல் படாமல் பக்கத்தில் மட்டுமே படுத்தான். என்ன இப்போ தெல்லாம் அவள் எழுந்து சோபாவில் படுப்பதில்லை. அது வரை ஒரு இம்ப்ரூவ்மெண்ட் தான்.  

கிரி அவரை புரியாத பார்வை பார்க்கஅவர் மறுபடியுமே அம் ஷ்யூர். இதுவரை காதல் இல்லை. ஆனால் உங்களை  தவிர வேறு யாரையும் காதலிக்கமாட்டாள். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் இல்லாத உலகம் அவளுக்கு இல்லை”.

“HABITS IF NOT CHANGED IT WILL BECOME OUR NESSACITIES”.

அதை போல நீங்கள் அவளுடைய தேவையாக அவளுடைய பாட்டியினால் அவளுடைய மனதில் பதிய வைக்க பட்டுவிட்டீர்கள். அதனால் தான் அவள் மனதளவில் உங்களை மிகவும் சார்ந்து இருக்கிறாள். இப்போது நீங்கள்  அவளுடன் இருப்பதால் இனி இது போல் தெளிய வைக்க முடியாத மயக்க நிலை ஆகாது”, என்றார்.

இப்போது அவளுக்கு ஏதாவது சிகிச்சை தேவையா”, என்று கிரி கேட்கதேவையில்லை”, என்றார். “நான் சில சிகிச்சை வழிமுறைகள், அவள் மனதளவில் செய்ய வேண்டும் என்று நினைப்பதை அவள் ஏற்கனவே செயல் படுத்தி கொண்டிருக்கிறாள். அதனால் தான் மூளையில் நிறைய கவலை கொடுக்கும்படி பாதிப்புகள் இல்லை. சில இருக்கின்றன. மேலும் பிரச்சனைகள் கொடுக்கப்படாமல் இருந்தால் பாதிப்பு எதுவும் இருக்காது”, என்றார்.  

சொல்லப்போனால் இந்த ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணும் போது என்னையே டென்ஷன் பண்ணினாங்க. அப்புறம் என்ன நினைசாங்கலோ ஃபுல்லா கோ ஆபரேட் பண்ணினாங்க. ஒரு சிறு டெஸ்ட் போல், எனக்கு மேனேஜ் செய்ய சிரமாமயிருக்கும் ஒரு கேஸ் டீடைல்ஸ் கொடுத்து, என்ன செய்ய என்று கேட்டதற்கு அவளுடைய அப்ரோச் எக்ஸ்செல்லன்ட். அவள் பதில் சொன்ன விதத்தில் நான் அந்த விஷயத்தை பார்க்கவேயில்லை. அது நிச்சயமாக வொர்க் அவுட் ஆகும்”.

மிகவும் புத்திசாலி. அதனால் அவளை அப்படியே விட்டுவிடுங்கள். விஷயங்கள் இப்படியே போனால், கிரி அவளோடே இருந்தால் பயம் தேவையில்லை. அவளை நிறைய தூங்க விடுங்கள். சிறிது நாட்களாகவே அவள் நன்றாக தூங்கியிருக்க மாட்டாள். தைராயிட் பிரச்சனையும் சிறிது இருக்கிறது. அதற்கு அதனுடைய ஸ்பெஷல்லிஸ்ட் டேபிலேட்ஸ் கொடுப்பார்அவளுக்கு ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் சொல்லி கொடுத்திருக்கிறேன்”.

 “குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. உங்களோடு இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதே சமயம் மற்றவர்கள் அவளுடைய குழந்தைகளாக இருந்தால் இப்படி மூன்று மாதத்தில் விட்டு சென்றிருப்பாளா! என்று கூறி விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. அவளை சீக்கிரம் குழந்தைகளிடத்தில் சேர்பித்து விடுங்கள். அவளை போலவே அவர்களும் தாயில்லாமல் இருப்பதினால் தான் அவளுக்கு குழந்தைகளிடத்தில் இத்தனை பிரியம்”.

இறுதியாக அவள் மென்டலி நார்மல் அண்ட் ஸ்டேப்ல். இது இப்படியே இருப்பதும் உங்களுக்கு அவளோடானா காதல் வாழ்வு சிறப்பாக இருப்பதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. பெஸ்ட் ஆப் லக்”, கூறி முடித்தார்

மிகவும் குழப்பமாக கிரி உணர்ந்தான் என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் அவருக்கு நன்றி உரைத்து வெளியே வந்தான்.

வந்தவன் முத்து வினாயகதிர்க்கும் நன்றி உரைக்க, “ப்ளீஸ் என்னை எம்பாறஸ் பண்ணாதீங்க. நான் இந்த ஹெல்ப் முதல்ல ஆனந்த்க்காக மட்டும் தான் பண்ண நினைச்சேன். ஆனா இப்போ இந்த ஒரு வாரமா உங்க மேடம் பார்க்கும் போது இது அவங்களுக்காக மட்டுமேன்னு தோணுது. நடந்தது எதுக்கும் யாரையும் குற்றம் சொல்லாத மனப்பான்மை எல்லோருக்கும் வராது”.

 “இப்படி அவங்களுக்குள்ள போராட்டங்கள் நடக்கும் போது அதை தெரிய விடாம ஸ்ட்ராங்கா இருந்திருக்காங்க. நான் ஒரு டாக்டர். அவங்களா மனநிகழ்வுகளை வெளில கொண்டு வரவரைக்கும் கொஞ்சம் கூட நான் சென்ஸ் பண்ணலை. இந்த மாதிரி ஒருதங்களோட ஃபிரன்ட்ஷிப் என்னைக்குமே வொர்த். நீங்க அதுக்கு அனுமதி கொடுத்தீங்கன்னா அதுவே பெரிய விஷயம்”, என்றான்.

என்னோட ஃபிரன்ட்ஷிப் ஆஃபர் பண்ணுங்க, எனக்குமே அது சந்தோஷம்தான். ஆனா அவ ஃபிரிண்ட்ஷிப் அவ தான் டிசைட் பண்ணுவா டாக்டர். நீங்களே பேசுங்க ஒண்ணும் சொல்ல மாட்டா”, என்றான் புன்னகையுடன்.

அவள் இருக்குமிடம் வர எல்லோரையும் வேடிக்கை பார்த்தவாரே போன் பேசி கொண்டிருந்தாள். “யார்என வாயசைவில் கிரி கேட்க, “ஆனந்த்என்று பேச்சை தொடர்ந்தாள். இந்த ஒரு வாரமாக தினமும் அவளுக்கு கொடுக்கப்பட்ட ட்ரீட்மென்ட் முறைகளை ஆனந்திடம் ஒப்பித்து விடுவாள். அதே சமயம் நந்தினி, அருண், சித்தி, கணேஷ், என அனைவரிடமும் பேசிவிடுவாள். சமையல் அம்மா, குழந்தைகளை விசாரித்து இவள் செய்த டார்ச்சரில் நொந்தே போய் இருப்பார். இவர்கள் வரவும், “என்ன சொன்னான், அந்த சோடாபுட்டி கிழவன். என்னை விட்டுட்டான இல்லையா”, என்றாள்.

இப்படியா மரியாதையில்லாம பேசுவ. அவர் எவ்வளவு பெரிய ஸ்காலர் தெரியுமா”, என கிரி அவளை கடிந்து கொள்ள, “அதுக்கு நான் என்ன செய்யறது. நீங்களே சொல்லுங்க டாக்டர் ஒரு வாரமா என் உயிரையே எடுத்துட்டார் தானே அவர்”, என்று துணைக்கு முத்து வினாயகத்தை அழைத்தாள்.

நமக்காக தானே மேம் செஞ்சாங்க”, என அவன் சொல்ல. “மேம்! சொல்லாதீங்க, பேர் சொல்லியே சொல்லுங்க டாக்டர். டாக்டர் ஆனந்த் என் ஃபிரன்ட் அப்போ நீங்களும் என் ஃபிரன்ட் தானே”, என்றாள்.

அவன் தயங்க. “சொல்லுங்கஎன்று கிரியை பார்த்து சொல்ல. “அவர் ஆனந்த்க்கு ஃபிரண்டான்னு எனக்கு தெரியாது. ஆனா அவர் எனக்கு ஃபிரன்ட்”, என்றான்.

அவர்களுடைய அன்பு ஒரு வகையாக முத்து விநாயகத்தை நெகிழ வைத்தது என்றே சொல்ல வேண்டும். என்ன தான் அவன் பெரிய டாக்டர் என்றாலும் அவன் வேலை செய்யும் ஹாஸ்பிடல் போல் பத்து ஹாஸ்பிடல் கூட நிமிடத்தில் அவர்களால் வாங்க முடியும் என்று அறிவான்.

சரிங்க பிரத்யுஷா”, என்றான்.

 அவள் முறைக்க, “சரி பிரத்யுஷாஎன்று மாற்றினான். ஒரு வாரத்திற்கு முன் இவனை ப்ளைடில் எப்படி பயமுறித்தினாள்.

இப்போ தான் சரி”, என்றவளை பார்த்து. “என்ன செஞ்சீங்க, டாக்டர் மார்க் டென்ஷன் ஆகுற அளவுக்கு.”.

அதொன்னுமில்லை, நீங்க பிரிட்டிஷ் பெர்சன். நான் இந்தியன் கேர்ள். என்னோட ஃபீலிங்க்ஸ் புரிஞ்சு நீங்க எப்படி எனக்கு ட்ரீட்மென்ட் குடுப்பீங்கன்னு கேட்டேன். மனுஷன் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டார். அநேகமா நீங்க கூட்டிட்டு போனதால பேசாம இருந்திருப்பார்ன்னு நினைக்கிறேன். நானும் போறான்னு விட்டுடேன் ஏதோ என்னை ட்ரீட் பண்ணி கொஞ்சம் கத்துகட்டும்னு”, என்றாள்.

 ஏதோ போனால் போகிறதென்று இவள் அவரிடம் ட்ரீட்மென்ட் எடுத்த மாதிரி. உடனடியாக அப்பாயின்ட்மென்ட் வாங்கிய முத்து வினாயகதிற்கு தானே தெரியும் கஷ்டம்.

நிஜமாவே நீ பெரிய ஆள் தான்”, என்றான் உஷாவை பார்த்து சிரிப்போடு,

நீங்க எப்போ ஊருக்கு போறீங்க”, என்றாள்.

ஏன் ப்ரத்யு இப்படி கேக்கற”, என்று கிரி அவளை கடிந்து கொள்ள,

நானும் போகதான். அதான் என் ட்ரீட்மென்ட் முடிஞ்சிடுச்சே, என்னை அனுப்பிடுங்க.”, என்றாள்.

சட்டென்று அவனுக்குள் ஏமாற்றம் பரவினாலும் சமாளித்தவாறு, “எப்போ போறீங்க”, என்று முத்து விநாயகத்தை பார்த்து கேட்க.

கிரியை உணர்ந்தவனாக, “எப்போ போகட்டும்”, என்றான்.

கிரிக்குள் ஒரு இதமான உணர்வு பரவ, “எப்போ உங்க ஃபிளைட்

நாளைக்கு மத்தியானம்

ஒரு நாலு நாள் தள்ளி போடலாமா. உங்களுக்கு அங்க எதுவும் முக்கியமான வேலை இல்லையே”, என்று கிரி முத்து விநாயகத்தை பார்த்து கேட்க,

இருக்கு! இருக்கு!” என்று அவனுக்கு பதிலாக உஷா பதிலளித்தாள்.

இல்லை, நாலு நாள் கழித்தே போகிறேன்”, என்றான் முத்து விநாயகம்.

கிளம்ப முடிவு செய்த போது, “இருங்க அந்த சோடா புட்டி கிழவன், என்னை ஒரு வாரம் பொருத்துகிட்டான். அவனுக்கு போய் ஒரு தேங்ஸ் சொல்லிட்டு வந்துடறேன்”, என்று வேகமாக சென்றாள். அவள் செல்வதையே இருவரும் புன்னகையோடு பார்த்திருந்தனர்

அவள் சென்றவுடனே, “இதை நான் உங்க ஃபிரன்ட்டா சொல்லலை. ஒரு டாக்டரா சொல்றேன். அவ ரொம்ப நல்லா படிச்சிட்டு இருந்திருக்கா. அவளை ரெகுலர் காலேஜ் அனுப்பி படிக்க வைங்க. அவளுக்கு என்ன வயசாகுது, ஜஸ்ட் இருபத்து ரெண்டு. ஆனா பார்க்க அதை விடவும் சின்ன பெண்ணா தான் தெரியறாஇப்போ தான் அட்மிசன்ஸ் நடந்துட்டு இருக்கு. முடிஞ்சா அவளுக்கு எதில் விருப்பமிருக்கோ சேர்த்து விடுங்க. காலேஜ், ஃபாமிலி ரெண்டும் மெயின்டெயின் பண்ணுவா. இப்போதைக்கு உங்க அப்பா இருக்காங்க, நீங்க இருக்கீங்க, அவ பிஸினஸ் வரணும்னு அவசியம் கிடையாது. அப்புறம் என்று முத்து விநாயகம் சிறிது தயங்க.

சொல்லுங்க நான் ரைட் சென்ஸ்ல தான் எடுத்துப்பேன்”, என்றான் கிரி.

உங்களுக்கு என்ன ஏஜ் ஆகுது”.

ட்வென்டி சிக்ஸ்”.

ரெண்டு பேருக்குமே சின்ன வயசு தான். நீங்க அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் அவளுக்கு ட்ரீட்மென்ட் குடுத்த டாக்டர் அப்படின்ற முறைல சொல்றேன். அவங்களுக்கு நிறைய டைம் குடுங்க. நீங்க தான் அவங்க உலகம். ஆனா நீங்க அவ லவர் பாயா மாற்றதுக்கு டைம் எடுக்கும். எவ்வளவு டைம் அப்படின்றது உங்க கைல தான் இருக்கு”.

ஷ்யூர் டாக்டர் உங்க அட்வைஸ் ரெண்டுமே புரியுது. முடிஞ்ச ஸ்டெப்ஸ் எடுக்கறேன்என்று கிரி சொல்லி கொண்டிருக்கும் போதே உஷா வர, பேச்சை நிறுத்தினர்.

வீட்டிற்கு செல்ல நாட்கள் பறந்தன. முத்து விநாயகம் இவர்களுடனே இருந்ததினால் லண்டன் பார்க்காததை கொண்டு அவனுக்கு சுற்றி பார்க்க மூன்று நாட்களும் ஏற்பாடு செய்தான் கிரி. கிரிக்கு முடியாததால் உஷாவையும் கேட்க, அவளுக்கு கிரியை விட்டு எங்கேயும் செல்ல விருப்பமில்லாததால் செல்லவில்லை. ஒரு நாள் ஷாப்பிங் மட்டுமே அவளை அழைத்து சென்றான். ஆனால் எதையும் அவள் வாங்குவதாக இல்லாததால் எல்லோருக்கும், அவளுக்கும் வேண்டியதை எல்லாம் அவனே வாங்கும்படி ஆயிற்று. எவ்வளவு சொல்லியும் ஷாப்பிங் அவள் செய்யவே இல்லை. கிளம்பும் போது அவளுடன் சண்டை வேண்டாம் என்று அமைதியாக விட்டு விட்டான்

உஷாவும் கிரியை கவனித்து கொண்டு தான் இருந்தாள். வந்த போது இருந்த கலாட்டா அவனிடம் இல்லை. படுக்கும்போது அவளுக்கு அன் ஈஸியாக இருக்கும் என்று தெரிந்தும் அடாவடியாக அணைத்து கொண்டு தான் படுப்பான். இப்போதெல்லாம் அந்த மாதிரி செய்கை எல்லாம் இல்லை. கவனமாக அவள் மேல் படாமல் படுத்தான். ஏன் இப்படி இருக்கிறான் என்று உஷாவிர்க்கு புரியவில்லை.     

   நாளை அவள் ஊருக்கு செல்கிறாள் என்ற நினைவே கிரிக்கு செய்யும் வேளைகளில் எல்லாம் ஒரு தொய்வை அளித்தது. அவனும் தனியாக தானே வருடக்கணக்காக இருக்கிறான். எல்லோரோடும் அவன் நன்றாக பழகினாலும் அவனுடைய கம்பீரம், செல்வ நிலைமை மற்றவர்களை அவனிடம் இருந்து சற்று தள்ளியே நிறுத்தும். நண்பர்கள் இருந்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டான். மீண்டும் தனிமை வாழ்வா. ஏனோ சம்பந்தமே இல்லாமல் நீரஜாவின் நினைவு வேறு வந்தது.

தூங்க வராமல் டி.வி பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். உஷாவிர்க்கு தூக்கம் வர, “தூங்க வரலையாஎன்று இருந்த இடத்தில் இருந்தே கத்தினாள் உஷா.

நீ தூங்குஎன்று பதிலுக்கு இவனும் கத்தினான்.

வேகமாக எழுந்து வந்தவள், “நீ வா, எனக்கு தூக்கம் வருது”, என்று அவன் கையை பிடித்து எழுப்பி இழுத்து சென்றாள்.

அதான் ஊருக்கு போகனும்னு பறக்கரியே. நாளைல இருந்து நான் இல்லாம தானே தூங்க போற. இன்னைக்கே பழகிக்கோ”, என கிரி சொல்ல

நான் என்ன பழகனும்னு எனக்கு தெரியும் நீ வா, கொஞ்சமாவது ரெண்டு குழந்தைகளை விட்டுட்டு வந்திருக்கேன்னு உனக்கு அறிவிருந்தா இப்படி பேசுவியா”, என்று கோபமாக கத்தினாள்.

அதான் அம்மா இருக்காங்கள்ள. நீ கொஞ்ச நாள் கழிச்சு போக கூடாதா”,

உங்க அம்மா உன் குழந்தைகளை தான் வளர்ப்பாங்க, என் குழந்தைகளை வளர்க்க மாட்டாங்க. அவங்க நம்ம குழந்தைகளா தான் வளரனும் புரியுதா”.  அவனை கூட்டிச்சென்று அவன் படுத்தவுடன் அவன் மேல் கைகளை சுற்றி படரவிட்டு முதல் முறையாக அவளாக அவனை அணைத்தவாறே உறங்க ஆரம்பித்தாள். படுத்தவுடனே அவள் உறங்கி விட்டாள்.

 ஆனால் கிரிக்கு தான் உறக்கமே வரவில்லை. ப்ரத்யு அவனை காதலிக்கவில்லை என்ற டாக்டரின் வார்த்தையே மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நீரஜாவின் நினைவு அவனை புயலென தாக்கியது. நினைவுகளோடு போராடத் தொடங்கினான். படுத்திருக்க முடியாமல் சட்டென்று எழ அந்த அசைவில் உஷா விழித்து கொண்டாள். எழுந்து நின்றிருந்தான். அவன் அருகில் வந்துஎன்னஎன்றவளிடம் என்ன சொல்லுவான்.

ஒன்றுமில்லையென.

 “பொய் சொல்ல வேண்டாம். என்ன உங்களை வருத்துது”, என்றாள்.

ஒண்ணுமில்லை ப்ரத்யு. நீ தூங்கு”, என. இந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவனுடைய மனநிலமையை அவள் உணர்ந்து தான் இருந்தாள்.

யாரை நினைச்சிட்டு இருந்தீங்க”, என கேள்வியை மாற்றினாள்.

 “யாருமில்லை நீ தூங்கு”, என்ற அவனுடைய அவசரமான பதிலிலேயே அவன் பொய் சொல்கிறான் என்பது புரிய.

நீரஜாவ நினைச்சிட்டு இருந்தீங்களாஎன்று தானாகவே ஏதோ தோன்றி அவளுடைய வாயிலிருந்து கேள்வி பிறக்க, அவனுடைய தலையும் தானாகவேஆமாம்”, என்பது போல் ஆடியது.  

நம்மளால தடுக்க முடியாத விஷயங்கள்ல ஒண்ணு இறப்பு. மறந்துடுங்க அதை”.

ட்ரை பண்றேன்”, என்றான் கிரி, அவள் எப்போதும் சொல்வதை போலவே.

ட்ரைக்கு நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா”, என்றாள்.

எப்படி”, என கிரி புரியாமல் கேட்க, “இப்படிஎன்றவள் அவனுடைய கைகளை எடுத்து தானாகவே அவள் இடையை சுற்றி படர விட்டாள்.

எனக்கு போராடி போராடி பழக்கம். உங்களுக்கு அது வேண்டாம். நீரஜாக்கும் எனக்கும் நடுவுல ரொம்ப போராடறீங்கன்னு நினைக்கிறேன். முடிச்சிக்கலாமே!. “என்னால உங்களை இந்த போராட்டத்தோட விட்டுட்டு நிம்மதியா ஊருக்கு போக முடியாதுஎன்றாள்.

அவள் கூறுவது புரிந்தாலும், “இல்லை ப்ரத்யு வேணாம். டாக்டர் டைம் எடுக்க சொல்லியிருக்காங்க”, என.

அவன் கிடக்கிறான் சோடாபுட்டி கிழவன்”, என்றாள்.

இன்னுமே பதட்டமாக, “நீ கூட இங்க வந்தப்போ இந்த மாதிரி எதுவும் நடக்க வேண்டாம்னு சொன்ன”.

ஆமாம். நானா தேடி வந்து எதுவும் செய்யற மாதிரி இருக்க வேண்டாம்னு சொன்னேன்”. சிறிது இடைவெளி விட்டு.

நான் தானே வரமாட்டேன்னு சொன்னேன். உன்னை என்ன என்னை எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொன்னான்னா”, என்றாள்.

அப்படி சொன்னதா தான் ஞாபகம்”.

திரும்பி வருவேன்னு என் கிட்ட சொன்னதெல்லாம் மறந்துரு. இதையெல்லாம் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. இதுக்கு தான் சொன்னேன் என் பசங்களோட அப்பாவுக்கு திறமை கம்மின்னு”, என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.

அவளுடைய உதடுகளை தன்னுடைய உதடுகளால் மேலும் பேச வாய்ப்பு கொடுக்காமல் மூடினான். முதலில் அவள் மயங்கினாலும் அவனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அவள் அவனை தள்ளிவிட்ட பிறகே விலகினான்.

இடியட், நான் என்னோட ஸ்டேட்மெண்ட் எல்லாம் வாபஸ் வாங்கிக்கறேன், எனக்கு இதெல்லாம் இப்படி இருக்கும்னு தெரியாது. மூச்சு முட்டுது, வேண்டாமே. என்று அவள் மெல்லிய குரலில் கத்த,

தெரிஞ்சிக்கோ”, என்று கூறி. நீ என்னவோ கத்தி கொள் என்று அவளை அப்படியே தூக்கி படுக்கையில் கிடத்தி, தன் திறமைகளை காண்பிக்க ஆரம்பிக்க, உஷாவின், “வலிக்குது விடு, இதை செய்யாதே, அதை செய்யாதே, எனக்கு பயமாயிருக்கு”, என்ற கத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்க, “கத்தாதே பயப்படாதேஎன்ற கிரியின் சமாதானங்களை தொடர்ந்து சத்தங்கள் குறைந்து தேய்ந்து மறைய, அவர்களின் இல்லறம் சில பல சிரமங்களுக்கிடையில் இனிதே உதயமாக ஆரம்பித்தது.

ஏர்போர்ட்டில் முத்து விநாயகம் உஷாவிற்க்காக காத்திருக்க, ஒரு வழியாக கிரியும் உஷாவும் வரும்போதே லேட் ஆகி இருந்தது.

சாரி டாக்டர் கொஞ்சம் லேட் ஆயிடுச்சுஎன்ற படியே உஷா வர. கிரிக்கு முத்து விநாயகத்தை பார்பதற்கே தயக்கமாக இருந்தது. நேற்று அவன் சொல்லியும் தங்களுக்குள் இப்படி நடந்து விட்டதே என்ற தயக்கம் தான்.

இதை எதையும் அறியாதவளாக உஷா தொன தொனத்து கொண்டிருந்தாள். கிரியின் மௌனமும் தயக்கமும் எதையோ முத்து வினாயகதிற்கு உணர்த்த, உஷா அறியாமல் கிரியினிடத்தில், “என்னஎன்றான்.

அவளுக்கு ஒண்ணும் ஆகாதே”, என. என்ன என்று புரியாத முத்து விநாயகம் அவனை பார்க்க, “நீங்க நேத்து சொன்னத கடைபிடிக்க முடியலை”, என்றான் மெல்லிய குரலில்.

சிறு சிரிப்போடு சிறிதும் தயங்காமல் அவனை அணைத்து விடை கொடுத்த முத்து விநாயகம், “நேத்து சொன்னது டாக்டரா, இன்னைக்கு சொல்லறது ஃபிரண்டா, ரொம்ப சந்தோஷம். அவளை பாருங்க ஷி இஸ் பெர்பெக்ட்லி நார்மல்”, என்றான். கேட்ட கிரிக்குமே காலையில் எழுந்ததில் இருந்த டென்ஷன் மறைய முகத்தில்  சிரிப்பு தோன்றியது.

என்ன விஷயம்என்ற கைகளால் சைகையில் கேட்ட உஷாவிர்க்கு, ‘நீங்க போறீங்கன்னு வருத்தமா இருந்தார், அதான் கொஞ்சம் சிரிக்க சொன்னேன்”, என்று புன்னகையோடு முத்து விநாயகம் சொல்ல.

அவங்கGEM இல்லையா அப்படி தான் இருப்பாங்க”, என்றாள்.

முத்து விநாயகம் கிரியை பார்க்க, “டாக்டர் அவ என்னை “GINGER EATING MONKEY “ ன்னு  திட்றா”, என்றான் சிரிப்போடு.

இருவருக்கும் கிரி சிரித்தபடி விடைகொடுக்க, ஆனால் அந்த சிரிப்பில் உயிர்பில்லை. சிறிதும் தூரம் சென்றவள் திரும்பி வேகமாக ஓடிவந்து, “ரொம்ப மோசமில்லை, கொஞ்சம் பிடிச்சி தான் இருந்தது. அதனால இல்லாத மூளைய கசக்க ட்ரை பண்ணி இந்தியா வர லேட் பண்ணாதீங்க. சீக்கிரம் வந்துடுவீங்க இல்லை”, என்றாள்.

காலையில் இருந்து தன்னை அவள் இந்தியா வரும்படி சொல்லவேயில்லை, தன் செய்கை பிடிக்கவில்லையோ என்ற கவலையில் இருந்த கிரி, கவலையெல்லாம் வடிந்தவனாக, அவளை அணைத்துதேங்யு பார் எவ்ரிதிங் ப்ரத்யு”, என்றான்.

எனக்கு வேண்டாம், நீயே வச்சிக்கோ என்கிட்ட நிறைய இருக்கு”, என அவள் கூற கிரி புரியாமல் பார்க்க. “அதாம்பா நீ சொன்ன தேங்க்ஸ்”, என்று கூறி வேகமாக சென்று முத்துவினாயகத்துடன் அவனுக்கு கை அசைத்தாள்.   

 

Advertisement