Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று(1):

கிரி செய்வதறியாது அவளை அணைத்தவன், சொல்வதறியாது மௌனியானான். நிமிடங்கள் கடந்தன. அவளுடைய அழுகை நின்ற பாடில்லை. கிரியும் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை, அணைத்திருந்த கையை சிறிதும் தளர்த்தவுமில்லை. அவள் அழுகையெல்லாம் அன்றே அழுது முடித்து கொள்ளட்டும் என்று அமைதியாகவே இருந்தான். மனதில் இனம் புரியாத பயம் உதித்தது. இவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் தானே நேரடியாக பேசியிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் உதித்தது. ஆனந்திடம் பேச வேண்டும் என நினைத்து அப்படியே இருந்தவாறே போனை எடுத்து முயற்சி செய்ய நம்பர் பிஸி என்றது. நிறைய நேரம் கழித்து அவள் அழுகை நின்ற போதும் தேம்பல் நிற்கவேயில்லை. மெதுவாக உஷா அவன் அணைப்பிலிருந்து விடுபட முயற்சிக்க, அவன் விடவில்லை.

 “என்ன இப்போ!”, என்றான் அதட்டலாக, “என்னை விடுங்க”, என்றாள்.

ஏன்? இப்போ என்ன அதுக்குள்ள, அதெல்லாம் இனிமே விடவே முடியாது”.

நம்ம வெளில இருக்கோம் ப்ளீஸ் விடுங்கஎன்றாள்.

இது வரைக்கும் நம்ம வெளில இருக்கறது தெரியலையா. பேசாம இரு!” என்றான்.

தண்ணி வேணும்!”, என்று கேட்டவளை விடுவித்து முறைத்து பார்த்தான்.

அவள் அழுத அழுகையில் முகமே வீங்கியிருந்தது. அவன் முறைப்பதை பார்த்துஎதுக்கு கோபம்என்றாள்.

கோபந்தான். ஆனா உன் மேல இல்லை. என் மேல”, என்றான். அவனிடத்தில் அழுததில் அவள் மனம் லேசாக இருந்தது. அவனை பார்த்து,“இனி கோபப்டறதுல ஒண்ணும் யூஸ் இல்லை, விட்டுடலாம்”, என்றாள் ஒரு சோர்வான புன்னகையோடு.அவளின் அந்த சோர்வான புன்னகை அவனை என்னவோ செய்தது. இன்னும் அவளுடைய உடல் நிலை சரியாக வில்லையோ. நாம் கவனிக்க வில்லையோ என்ற எண்ணம் அவளுடைய இந்த அழுகை சோர்வான தோற்றம் எல்லாம் பார்த்து வலுப்பெற ஆரம்பித்தது.

  ஆனாலும் இப்போது ஏதாவது தன்மையாக பேசி அவள் சுய பச்சாதாபம் கொண்டு விட்டாள் என்ன செய்வது என்று தன் ஆறுதலை வார்த்தையில் காட்டாமல் செய்கையில் காட்டினான். அதனால் தான் சிறிது அதட்டலாகவே பேசினான்.  

இங்கே பாரு!”, என்று அவன் ஷர்டின் நெஞ்சுப் பகுதியை காட்ட. அது ஈரமாக இருந்தது. “ஒரு பாட்டில் தண்ணி கொட்டுனா கூட இவ்வளவு ஈரமாகுமான்னு தெரியாது. அவ்வளவு பிழிய பிழிய அழுதுட்டு, இப்போ நீ எனக்கு அட்வைஸ் பண்ணற.”,

கோபம் வேண்டாம் பாஸ். வாங்க போலாம்”, என்றாள் கொஞ்சலாக.

அவளையே பார்த்திருந்தான். இவ்வளவு நேரம் எப்படி அழுதாள். அதைவிட எவ்வளவு எமொஷனலாக இருந்தாள். எப்படி அப்படியே மாறுகிறாள்

அவன் பார்வையை உணர்ந்தவளாக,“ரொம்ப வருஷ ப்ராக்டிஸ் நிமிஷத்துல சேஞ் பண்ணிக்குவேன்”, என்று சிரிப்போடு சொல்ல,

“  இது என்ன பெருமையா உனக்கு. இப்படி எல்லாத்தையும் உனக்குள்ளயே அடக்கிகறதுனால, சில சமயம் அதையும் மீறி ஏதாவது நடக்கும் போது, அடிக்கடி மயக்கம் வருதுன்னு நினைக்கிறேன்என்றான் குரலில் கவலை தொனிக்க

! எப்போ இருந்து நீங்க டாக்டர் ஆனீங்க!”.

ம், நீ பேஷன்ட் ஆனதுல இருந்து”.

ஏன் மறுபடியும் இவ்வளவு டென்ஷன்என குரலில் சிறிது வருத்தத்தை உஷா  காண்பிக்க. பெருமூச்சுவிட்டவாரே அவளை சுற்றி கைகளை போட்டு அணைத்தவாறு வைத்து கொண்டு,“எதையும் உனக்குள்ள அடக்கிகாதே ப்ரத்யு. எனக்கு முன்னாடி தெரிஞ்ச பிரத்யுஷா, ரொம்ப தைரியமான பொண்ணு. எல்லோரையும் பார்த்துக்கற அளவுக்கு திறமையுள்ளவ. நீபேசின காரணங்களில் ஏதோ ஒண்ணு இப்படி உன்னை மாற்றிடுச்சு. அதை விட முயற்சி செய்யலாம். இனிமே எதுன்னாலும் உடனே என்கிட்ட சொல்லிடனும். எனக்கு எல்லாத்தையும் புரிஞ்சிக்கற அளவுக்கு திறமை இருக்கான்னு தெரியலை. எதுன்னாலும் என்கிட்ட சொல்லிடு! இனி எந்த ப்ராப்ளமும் வரவேண்டாம். ப்ளீஸ் செய்வ இல்லை!” என்றான் கெஞ்சலாக.

ட்ரை பண்றேன்!”, என்றாள். அவன் முறைக்கசரி சொல்றேன்என்றாள். மறுபடியும். ஆனாலும் திருப்தியில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

போகலாங்க”, என்றாள் ராகமாய்.

எழுந்து காருக்கு நடக்கும் போது அழுதது என்னவோ போல் சோர்வாக இருக்கவீட்டுக்கு போயிடலாம்!”, என்றாள்.

வேண்டாம் ப்ரத்யு, கோயிலுக்கு அப்படின்னு கிளம்பிட்டோம். போயிட்டு சீக்கிரமா திரும்பிடலாம்”, என்றவன்போகலாமாஎன்று கேட்கம்”, என்று தலையசைத்தாள்.

மீண்டும் செல்ல சிறிது தூரத்திலேயே அடைந்து விட்டனர். வெளியே இருந்து பார்க்கும்பொழுது, “எப்படி இருக்கு”, என்று கிரி கேட்டு கொண்டே படி ஏற, “அழகா அமைதியா இருக்கு”, என்றபடி ஏறியவள் வேறு எதையும் பேசவில்லை. உள்ளே சுற்றி வணங்கி கொண்டிருந்த போது கிரி ஏதோ சொல்ல வரஷ்என்று உதட்டில் கை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தாள். கிரியுமே கடவுளிடம் அவளுக்காக மனமுருகி நிற்கஅவள் சோர்வாக இருந்ததினால் அதிக நேரம் இருக்காமல் உடனே கிளம்பினான்.

வெளியே வந்த உடனே, “ஏன் ப்ரத்யு பேச வேண்டாம்னு சொல்லிட்ட, நான் அங்க இருந்ததை பற்றி சொல்ல வந்தேன்”, என.

அதுவா நீங்க நடுவுல பேசினா, நான் சாமிக்கிட்ட வேண்டுறதை மறந்துடுவேன். அதுவுமில்லாம எனக்கு பொதுவாவே கோயிலுக்கு போனா எல்லோரையும் வேடிக்கை பார்க்கவே டைம் சரியா போய்டும். அப்புறம் சாமிகிட்ட நான் கேக்கற லிஸ்ட் கம்மியாயிடும்”, என்றாள் விளையாட்டு போல்.

என்ன வேண்டின”, என கிரி கேட்க. “ம். வேண்டுறத சொன்னா பலிக்காதாமே சொல்லமாட்டேன்”, என்றாள்.

சரி விடு, இந்த கோயில் எப்படி இருந்தது”, என பேசிக்கொண்டே இறங்கினான்.

அது என இழுத்தவள், “உண்மைய சொன்னா சாமி என் கண்ணை குத்திட்டா”, என்றாள் மறுபடியும் விளையாட்டு போல்.

கண்னை குத்தினா அது சாமி கிடையாது. தைரியமா சொல்லு”.

ம், உள்ள போனா அமைதியா பீல் பண்றேன். ஆனா எனக்கு கோயில் ஃபீல் வரலை. ஆர்ட் கேலரி குள்ள போன எஃபக்ட் இருக்கு. சத்தத்தோடயே இடிச்சிக்கிட்டு கிடைக்கற ரெண்டு நிமிஷ கேப்ல. பார்த்துட்டா தள்ளுமா தள்ளுமான்னு யாராவது கத்திக்கிட்டே இருக்கும் போது, சாமி கும்புடுற எஃபக்ட் இல்லை”, என்றவள் சீரியசாகசாமி கண்ணை குத்திடுமாஎன்றாள்.

எத்தனையோ பண்ற ஆசாமிங்களையே சாமி ஒண்ணும் பன்றதில்லை, உன்னை என்ன பண்ணும் வா. சும்மா எதையாவது போட்டு குழப்புவியா? உன் பாட்டி உன்னை நல்லா கெடுத்து வெச்சிருக்காங்க.”, என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கீழ் படியில் நேற்று பார்த்த இளைஞன் இருக்க, கிரி உஷாவை பார்த்து. “அங்க பார் ப்ரத்யு. உன்னோட ரசிகன் வர்றான்”, என்றான். இவன் பேசியதையே கேட்டு கொண்டு வந்தவள் அப்போது தான் அந்த இளைஞனை பார்க்க அவனும் இவர்களை பார்த்தான்.

கிரியும் உஷாவும் இறங்கி வந்திருக்க, சுற்றி இரண்டு பேர் காவலுக்கு நிற்கஅந்த ஹோதாவை பார்த்த இளைஞனுக்கு பேசுவதா. வேண்டாமா. என்ற தயக்கம் இருக்க பேசாமல் படியேறத் தொடங்கினான்.

ஏன் ப்ரத்யு? உன் ரசிகர் உன்னை பார்த்து ஓடறார், நேற்றைய பாதிப்பு இன்னும் இருக்கும் போலஎன்று கிண்டலடிக்க அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுஹலோ சார்என்று அந்த இளைஞனை கூப்பிட்டாள். இரண்டு படி ஏறி இருந்தவன் தயக்காமாக திரும்பி வந்தான்.

ஹலோ சார்! ஏன் பார்த்தும் பார்க்காத மாதிரி போகறீங்க. நான் உங்களை ஏதாவது நேத்து என்னை அறியாமலேயே திட்டிடேனா”, என உஷா கேட்க

என்ன தெரியாம திட்டுணீங்களா, தெரியாமையே இப்படின்னா இன்னும் தெரிஞ்சு திட்டினா என்ன ஆகும்.”, என்றவனை

சாரி சார். ரொம்ப திட்டிடாளா சாரி”, என்றான் கிரி.

அந்த இளைஞன், “நான் டாக்டர் முத்து விநாயகம். நியுரோ ஸ்பெஷல்லிஸ்ட். இங்கே ஒரு கான்ப்றன்ஸ்க்காக வந்திருக்கேன்”, என்றான்.

மறுபடியும் உனக்கு டாக்டர் தாம்பா. உன் ரசிக பேரு மக்கள் எல்லாம் டாக்டறாவே இருக்காங்க ”, என்று மெல்லிய குரலில் உஷாவுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி கிண்டலடித்து கிரி உஷாவை பார்த்து சிரிக்க. உஷா அவனை முறைத்து பார்த்து, “சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க. ஏதோ டென்ஷன் திட்டிடேன். நான் அன்னலட்சுமி பிரத்யுஷா. இவங்க சூர்ய கிரி வாசன். என் கணவர். வி பீலாங் டு கிரி குரூப் ஆப் இண்டஸ்ட்றீஸ், இந்தியா”, என அவள் கூற

அவன் உஷாவை பார்த்து,” உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா”, என்று அவனை அறியாமல் கேட்டவன், “ரொம்ப சின்ன பொண்ணா தெரியறீங்க. ரொம்ப சந்தோஷம் உங்களை பார்த்ததில்”, என்றவன். “நான் நேத்து உங்க கிட்ட கேட்டதே அதுதாங்க மேம். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே யார்ன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல். இப்போ தான் ஞாபகம் வருது. பேப்பர்ல டி.வில பார்த்திருக்கேன். எங்க அப்பா பிஸினெஸ் தான் பண்றாங்க. அவங்க உங்க கிரி குரூப்ஸ் பற்றி பேசி கேட்டிருக்கேன். நைஸ் மீட்டிங் யூ”, என்றான்.

சிறிது நேரம் பேசிவிட்டு இவர்கள் கிளம்ப, உஷா நேற்று பேசாததர்க்கும் சேர்த்து இன்று பேசினாள். அதையெல்லாம் ஒரு அமைதியான புன்னகையோடு கிரி ரசித்திருந்தான். இதை பார்த்த முத்து விநாயகம், “யூ போத் மேக் வொண்டர்புல் கப்ல்”, என்றவன், சூர்ய கடவுளோட மனைவி பேரு கூட பிரத்யுஷா தான். உங்க பேர் பொருத்தம் சரியா இருக்கு”, என்றான்.

இதனைக்கேட்ட உஷா உற்சாகம் மேலிட அவனுக்கு நன்றியுரைத்து அவனை பார்த்து முகம் மலர்ந்து சிரித்தாள். அவனை பார்த்து கிளம்பும் போது, “எனக்கு கூட ஒரு டாக்டர் ஃப்ரன்ட் இருக்காங்க. டாக்டர் ஆனந்த், கார்டியாக் சர்ஜென்”, என்றவளை பார்த்து

கோவைல இருக்கானே அவனா?”, என்றான் ஒருமையில். அவரே தான் என்று உஷா ஆர்வமாக உரைக்க, “என்னோட பெஸ்ட் ஃப்ரன்ட்ங்க அவன். உங்களை எப்படி எனக்கு தெரியாமல் போச்சு தெரியலையே”, என.

ரொம்ப நாளா இல்லை. இப்போ தான் சமீபமா எனக்கு ஃபிரன்ட் ஆனாங்க”.

இருக்கும்! அவன் இப்போ ரொம்ப பிஸி. போன்ல பிடிக்கறதே கஷ்டமா தான் இருக்கு. ஏதாவது கேஸ் விஷயமா தான் பேசறான். இப்போ கூட பாருங்க ஒரு பத்து நாளா ஒரு கேஸ் விஷயமா என்னை உயிரை எடுக்கிறான். தீடீர்னு அன்கான்சியஸ் ஆயிட்டாங்க! கான்ஷியஸ் வரலைன்னு!. பேஷன்ட்டை கண்ல காட்ட மாட்டேங்கறான். பேர்கூட சொல்ல மாட்டேங்கறான். நான் சென்னைல இருந்து கோவை வரேன்னாலும் விட மாட்டேங்கறான். ஆனா என்னை ஒரு வழியாக்கிட்டான். இந்த கான்ப்றன்ஸ்ல நான் எந்த சீனியர் மக்களை சந்திச்சாலும் கேஸ் ஹிஸ்டரி குடுத்து என்னனு தெரிஞ்சிட்டு வாடான்னு இருக்கான்”, என்று அவன் நண்பனை பற்றி பேசும் ஆர்வத்தில் முத்து விநாயகம் பேச உஷா கிரியின் கையை பற்றி கொண்டாள். பதட்டத்தில் கைகள் சில்லென்று ஆக ஆரம்பித்தது. பயந்து போன கிரி, “என்ன பண்ணுது?”, என்றான்.

அப்போது தான் முத்து விநாயகம் அவள் முகம் சீரியசாக மாறியிருந்ததை பார்த்து என்ன வென்று புரியாதவனாக இருவரையும் பார்க்க.

கிரிக்கு அது உஷாவாக இருக்குமோ, அதனால் தான் இவளுக்கு பதட்டமோ, என்ற சந்தேகம் உதிக்க, அவள் இடையை சுற்றி கைகளை போட்டு அவளை அணைவாக பிடித்தவாறே, “ஒண்ணுமில்லை! ஏன் பயப்படற?”, என்று உஷாவிடம் சொல்லிக்கொண்டே  முத்து விநாயகத்தை பார்த்து, “இவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நம்ம மறுபடியும் மீட் பண்ணலாம் டாக்டர்”, என்று கிளம்ப.

முத்து விநாயகம் என்னவோ ஏதோவென்று, “நான் உங்களுக்கு இப்போ எந்த வகையில்லையாவது உதவ முடியுமா”, என்றான் பதட்டம்மாக.

நிறைய பேச விருப்பமில்லாத கிரி, “உங்க கேஸ் ஃபிமேல். இருபத்திரெண்டு வயசா.?”, என்றான். முத்து விநாயகம் அப்படியே நின்று விட்டான். அது அன்னலட்சுமி பிரத்யுஷாவா! கடவுளே! ஆனந்த் இதை பேஷன்ட்டிற்கு தெரியாமல் செய்கிறானோ? என்ன செய்வது! என்று அவனுக்கு புரியவில்லை. அவன் அப்படியே நிற்க. கிரி அவளை அழைத்து சென்று விட்டான்.

இவனுக்கு சுற்றி பார்க்கும் எண்ணமே போய் விட்டது. தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பி உணவு உண்டு கொண்டிருக்கும்போதே, இருவர் அவனை பார்க்க வந்து. அன்று மதியம் வேலை இல்லாது இருந்தால் கிரி அவனை பார்க்க பிரியப்படுவதாக கூறி கையோடு அழைத்து சென்றனர்.

அவனுடைய வீட்டிற்கே அழைத்து செல்ல, அங்கே கிரி மட்டுமே இருந்தான். “இதுவரைக்கும் டாக்டர் ஆனந்த் கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தா. இப்போதான்  கஷ்டப்பட்டு தூங்க அனுப்பினேன். நீங்க வர்றது அவளுக்கு தெரியாது”.

ஆனந்த் எதையும் சொல்லாம செய்யமாட்டேனே”, என்றான் முத்துவினாயகம்.

அவர்மேல தப்பு சொல்ல முடியாது. ப்ரத்யுவை ஆனந்த் தான் ரொம்ப கேர் எடுத்து பாத்துக்கிட்டாங்கன்னு தெரியும். இருந்தும் நான் அவரை கூப்பிடலை. என்னோட தப்பு தான். போனதடவை இவளுக்கு இப்படி ஆனப்போ நான் அங்க தான் இருந்தேன். எலக்ட்ரோலைட் லாஸ்ன்னு சொன்னாங்க. வீக் ன்னு சொன்னாங்க. அந்த மாதிரி தான் இருக்கும்னு நினைச்சேன். சரி இங்க தானே வர்றா பார்த்துக்கலாம்னு விட்டுடேன். நான் அவரை தொடர்பு கொள்ளவேயில்லை. இங்கே ப்ரத்யு வந்தவுடனே டாக்டர் ஆனந்த் என்னை அவர் கிட்ட போன்ல பேச சொல்லி இருக்காங்க. பட் நான் ட்ரை பண்ணப்போ அவர் ஏதோ சர்ஜெரில இருந்ததனால கிடைக்கலை”.

இப்போ பேசிட்டேன். ஆனா இவளுக்கு ரொம்ப கோபம். இவளுக்கு தெரியாம இவளோட விஷயமா எல்லாரும் டிஸ்கஸ் பண்றதான்னு. ஆனந்த்தை இவ்வளவு நேரமா கடிச்சு கொதறிட்டா”.

இதனை கேட்டு கொண்டிருந்த முத்து வினாயகத்திற்கு, போனில் தொடர்பு கொள்வது இவனுக்கோ ஆனந்திற்க்கோ பெரிய விஷயம் கிடையாதே. என்னை அவன் எவ்வளவு தொந்தரவு செய்தான். எங்கோ உதைக்கிறதே என்று மனதிற்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, “ரொம்ப கோபம் வரும் போல, நேத்தே அனுபவிச்சேன்”, என்று சிறிது சங்கடத்தோடு கிரிக்கு பதிலளித்தான்

சாரி!” என்ற கிரி, “ஆனந்த் கிட்ட பேசினவரைக்கும் ப்ரோப்ளம் இல்லைன்னு தான் சொன்னாங்க. ஆனா மறுபடியும் இந்த மாதிரி வருமான்னு ஒபினியன் வாங்க சொன்னேன். அப்படின்னு தான் சொன்னாங்க. அப்படியா ?”.

ஓரளவுக்கு அப்படின்னு தான் சொன்னான். ஆனா ஏன் வந்ததுன்னே தெரியாம இனிமே வருமான்னு எப்படி சொல்ல முடியும். எனக்கு கிளியர் பிக்சர் இல்லை. அது தெரியாம செய்றது கரக்டான்னு சொல்ல முடியாது”.

இது ஒரு நியூ பீல்ட் neuropsychiatry சொல்லுவோம். பாதிக்கப்பட்டவங்க  இல்லாம ஒண்ணும் பண்ண முடியாது. அவனுக்கே தெரியும். அவங்களோட thought process, neurocognitive process, electroencephalography or magneto encephalography மூலமா பார்த்து ஏதாவது பிஹேயறல் சேஞ் வரும்போது மூளையோட செயல்பாடுகள் பாதிக்க படுதா. இதனால ஏதாவது பெரிதா பாதிப்பு வருமா. ரத்தவோட்டம் நன்றாக இருக்கிறதா. ரத்த நாளங்கள் நன்றாக இருக்கிறதா. அவருடைய மனநிலமை எல்லாம் முக்கியம்இன்னும் எம்.ஆர்., பி..டி ன்னு டெஸ்ட் வேற இருக்குஆனா கேஸ் ஹிஸ்டரியை வச்சு தெரிஞ்சிட்டுவான்றான். உங்க மனைவியோட சம்மதம் முக்கியம். எனக்கு என்னவோ பார்த்த வரைக்கும் அவங்க நார்மலா இருக்காங்க. மீறி சில சமயம் மயக்கமாறாங்கன்னா எப்போ? என்ன காரணம்? தெரியணும். மத்தவங்க சொன்னாலும் அவங்க சொன்னா பெட்டர்”, என்றான்.

நானே இதுல பெரிய மாஸ்டர் கிடையாது. பட் நாளைக்கு இந்த துறைல ரொம்ப பெரிய ஆளுங்க வருவாங்க. எனக்கு யாராவது ரைட் பெர்சன்ன்னு தோணினா பேசி பார்க்கிறேன், நேரடியான சிகிச்சை தான் சரி வரும்”.       .      

உங்களுக்கு தொந்தரவா இல்லைனா இந்த ஹெல்ப் எனக்காக செய்யரீங்களா, நான் ப்ரத்யுவை சம்மதிக்க வைக்கிறேன். எனக்கு இதை பற்றி அதிகமா தெரியாது”, என கிரி சொல்ல.

ஒஹ் ஷ்யூர் சார்!”, என்றான். இந்த வார்த்தையை முத்து விநாயகம், கிரிக்காகவோ உஷாவிற்காகவோ சொல்லவில்லை. ஆனந்திற்க்காக சொன்னான். உஷா மயக்கமைடைந்த நேரத்தில் இருந்து அவள் சரியாகும் வரை ஆனந்த் எவ்வளவு சிரத்தை எடுத்தான் என்று முத்து வினாயகதிற்கு தெரியும். உஷாவின் டீடைல்ஸ் கொடுக்காமல் செய்கிறான் என்றால் அவனுக்கு அவள் முக்கியம்மான நபர் போல தோன்றியது. அதனாலேயே சரி என்றான்.   

மறுபடியும் ஹோட்டல் ரூமிற்கு வந்தவுடனே ஆனந்துடன் பேச. அவன்உலகம் நிஜமாவே சின்னது தாம்பா. உனக்கு பேஷன்டை காட்டாம நான் விவரம் சொன்னா, நீ எனக்கு பேஷன்ட்டே பார்த்துட்டு சொல்லற!”, என்றான்.

அதை விடு! நீ ஏன் இந்த பொண்ணுக்காக இவ்வளவு மெனக்கெடுற. அவங்க கணவனே பெரிய ஆள். நம்மளை மாதிரி பத்து டாக்டர்களை வீடு தேடி வரவைப்பான், எல்லாம் நடத்திப்பான். உனக்கு என்ன இவ்வளவு அக்கறை. அன்னைக்கு அந்த பொண்ணு மயக்கமானப்ப உனக்கு இருந்த டென்ஷன் போன்ல எனக்கு தெரியும். என்ன விஷயம்”, என.

இனிமே அதை பத்தி தெரிஞ்சு ஒண்ணும் ஆகபோறதில்லை. அவ வேற ஒருத்தனோட மனைவி. நீ ஸ்மெல் பண்ண இந்த விஷயத்தை உனக்குள்ள வச்சிக்கோ. கொஞ்சம் தெரிஞ்சாலும் உஷா ட்ரீட்மென்ட்க்கு சம்மதிக்கவே மாட்டா. என்னோட ஃபிரன்ட்ஷிப்பே கட் பன்னிடுவா. எனக்காக அவளை சரி பண்ணிடுப்பா. நீ ஒண்ணும் அவளுக்கு பாதிப்பு இல்லைன்னு சொல்றவரைக்கும் எனக்கு நிம்மதி இருக்காது”, என ஆனந்த் சொல்ல.

நீ அந்த பொண்ணுக்காக ஏன் இவ்வளவு சீரியஸா இருக்க ஆனந்த்”,

ப்ளீஸ் எம். வி, இதை இந்த ஆங்கில்ல பேசறதே தப்பு. விட்டுடு! எனக்காக செய்!”.

சரி!”, என இவன் சொன்னவுடனே, “எனக்கு கேஸ் இருக்குப்பா”, என்று ஆனந்த் உடனே போனை வைத்தான். முத்து வினாயகத்திற்கு புரிந்தது, அது ஞாயிறு இரவு யாரும் இருக்கமாட்டார்கள். அவன் மேலே பேச இஷ்டபடாமல் வைக்கிறான் என்று.  

முத்து விநாயகம் சென்ற பிறகு கூட உடனே கண்விழிக்கவில்லை. நேரம் கழித்தே விழித்தாள்.

என்ன ப்ரத்யு, இப்படி தூங்கற, ஏதாவது செய்யுதா. இல்லை நார்மல் தூக்கம்தானா”, என்று கிரி கவலையோடு கேட்க.

ஒண்ணுமில்லை, என்னவோ தூக்கமா வருது. அம் .கே”, என்றாள்.

டாக்டர் முத்து விநாயகம் வந்திருந்தாங்க”, என கிரி சொல்ல, “நம்ம வீடு எப்படி தெரியும்”.

நான் தான் வரவழைச்சேன். ப்ரத்யு. ஒரு கம்ப்ளீட் செக் அப் செஞ்சிடலாமா”,

ஏதாவது ப்ராப்ளம் எனக்கு இருக்கா. மறைக்கறீங்களா”,

இல்லை, டாக்டர்ஸ்க்கு தெரிஞ்ச வரைக்கும் ஒண்ணும் இல்லை. இருந்தாலும் ஃபுல் செக் அப் பண்ணிட்டு ஒன்னுமில்லைன்னு வந்துட்டா நமக்கு சேஃப் தானே”.

எதையும் மறைக்களையே என்கிட்ட”, என்றாள் மறுபடியும்.

வேணும்னா டாக்டர் ஆனந்த் கிட்டயே கேளேன். அவர் தான் கம்ப்ளீட் செக் அப் பண்ணலாம்னு சொல்றார். நீ மயக்கம் போடறது கூட ப்ராப்ளம் இல்லை. அதுக்கப்புறம் சீக்கிரம் முழிக்க மாட்டேங்கற ஏன்னு தெரியணும் இல்லையா”, என்று சிறு குழந்தைக்கு விளக்குவது போல் விளக்கினான்.

டாக்டர் எப்படி என்கிட்ட கேட்காம, என்னோட கண்டிஷன் பத்தி மற்றவங்க கிட்ட, அதுவும் கான்பிரென்ஸ்ல பேச சொல்லலாம்”, என்றாள் கோபமாக.

அதை நம்ம தப்பு சொல்ல முடியாது ப்ரத்யு. உன் மேல இருக்கிற அக்கறையில சொல்லியிருக்காங்க. ஆனா உன் பேர், உன்னோட ரெசிடென்சியல் டீடைல்ஸ், குடுக்கலியே. அது நீதான்னு யாருக்குமே தெரியாதில்லையா. இப்போ கூட நீ பேனிக் ஆகலைன்னா டாக்டர் முத்து வினாயகதிற்கு கூட தெரிஞ்சிருக்காது. ஆனந்த் யார்கிட்டயும் சொல்லலை”, என்றான் சமாதானமாக.

நான் ஆனந்த் கிட்ட ரொம்ப கடுமையா பேசிட்டேன், என்ன பண்றது. என்னை தப்பா எடுத்திருப்பாங்களா”.

உன் ஃப்ரன்ட் தானே. உன்னை அவன் தப்பா நினைக்கவேமாட்டான். போன் பண்ணி இப்பவே சாரி கேளு”.

உஷா போன் பேசி வர. “என்ன கோபமா பேசினானா”, என்று கிரி உஷாவிடம் கேட்க.

இல்லை, நல்லா தான் பேசினாங்க. எனக்கு அட்வைஸ் வேற, நான் பெரிய போஸ்ட் எல்லாம் ஹான்டல் பண்ண போறேன். இனிமே இந்த மாதிரி யாரையும் அவசரப்பட்டு ரொம்ப கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டகூடாதுன்னு

நீ என்ன சொன்ன

அவசரமா கடுமையா திட்டலை, நிதானமா சாஃப்டா திட்டறேன்னு சொன்னேன்”.

இதெல்லாம் உன்னால மட்டும் தான் முடியும்”, என்றான் சிரித்தவாறே.

நேற்றைய வழக்கம் அப்படியே தொடர்ந்தது. கிரி உஷாவிற்க்கு அருகிலேயே உறங்கினான். நடுவில் விழிப்பு வர பார்த்தபோது போது அவள் சோபாவில் உறங்கி கொண்டு இருந்தாள். இவள் ஏன் அங்கே போய் உறங்கினாள் என்று யோசித்தபோதும் அதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுந்து போய் அவளை அப்படியே தூக்கினான்.

 சட்டென்று விழித்த உஷா, “என்ன பண்றீங்க”, என்று பதறினாள்.

அந்த பதட்டம் சிறிதும் அவனை அசைக்கவில்லை. அப்படியே தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தினான். பதட்டம் போய் அவனை முறைத்த உஷா மறுமுறை, “என்ன பண்றீங்க”, என்றான் அதட்டலாக.

நீ என்ன பண்ணின”, என்றான் பதிலுக்கு கிரி.

நான் என்ன பண்ணினேன்”, என்றாள் பதிலுக்கு அவனை மாதிரியே,

இங்க படுத்திட்டு இருந்த நீ. அங்க எதுக்கு போன?”.

அது.”, என்று ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துஎனக்கு தூக்கம் வரலை”, என்றாள் உஷா.

அதுக்கும், அங்க போய் தூங்கினதுக்கும் என்ன சம்பந்தம்”.

எனக்கு யாராவது பக்கத்துல படுத்தா அன் ஈசியா இருக்கு”.

அது ஒண்ணுமில்லை, நான் உன் மேல பட்டுட்டா, அப்படின்ற டென்ஷன்ல உனக்கு தூக்கம் வந்திருக்காது. அதுக்கு என் கிட்ட ஒரு வழி இருக்கு.”, என்று அவளுக்கு போர்வை போற்றி விடுவது போல் தூக்கி சட்டென்று உள்ளே நுழைந்து பக்கத்தில் நெருக்கமாக படுத்தவன், அவள் உணரும் முன்பாகவே அவளை சுற்றி கைகளை படரவிட்டு, அவள் சிறிதும் அசைய முடியாதபடி இறுக்கமாக அணைத்து, கால்களை வேறு அவள் மேல் தூக்கி போட்டு கொண்டான்.

விடுங்க! விடுங்க!”, என்று அவள் கத்தவும், “வாய மூடிட்டு தூங்கு! இல்லைனா உன் வாயையும் மூட வேண்டி இருக்கும். என்னால கைய எடுக்க முடியாது. அப்புறம் என் வாயால தான் மூடுவேன். கே ன்னா கத்து”, என்றான்.

கப்பென்று வாயையும் மூடி கண்களையும் மூடி கொண்டாள். அவனது அருகாமை அவளுக்குள் பெரும் அவஸ்தையை தோற்றுவித்தது. அவளையே சிறிது நேரம் பார்த்தான். கண்விழி அசைவிலேயே அவள் தூங்கவில்லை என்று புரியபயப்படாம தூங்கு ப்ரத்யு, நான் உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன்”, என்று கூறி அவள் நெற்றியில் மென்மையாக தன் இதழ்களை பதித்து அவள் அருகாமை தந்த மயக்கத்தில் வராத உறக்கத்தை வலுகட்டாயமாக வர வைக்க கண்களை மூடினான்.

என்ன முயன்றும் பிரத்யுவால் அசையக் கூட முடியவில்லை. மெதுவாக தன் கண்களை திறந்து கை விரல்களால் அவன் கைகளை பிராண்டினாள்.

என்ன.?” என்றான் கண் திறக்காமலேயே.

காலை மட்டும் எடுக்கறீங்களா. ரொம்ப வெயிட்டா இருக்கு”, என்றாள்.

சட்டென்று கண்களை திறந்த அவன், “மானத்தை வாங்காத, தூங்கு!”, என கால்களை மட்டும் விலக்கி கைகளை இன்னும் இறுக்கி, உறக்கம் வருகிறதோ இல்லையோ இனி கண்களை திறப்பதில்லை என கண்களை முடிகொண்டான்.

அப்போதும் விடாமல் அவனை பிராண்டிய படியே தான் இருந்தாள் உஷா. ஒன்றும் அசையாது என்று தெரிந்து முயற்ச்சியை கைவிட்டு உறங்க ஆரம்பித்தாள்.  

மறுநாள் கிரி விழித்த போது இன்னும் அவன் கைகளுக்குல்லேயே தான் உஷா உறங்கிக்கொண்டு இருந்தாள். புன்னகைத்தவாறே எழுந்து வேலைகளை பார்க்க. அவன் ரெடி ஆன பிறகு கூட அவள் விழிப்பதாக இல்லை. வேறுவழியில்லாமல் அவளை எழுப்பி அவனோடு பாக்டரிக்கு கிளப்பினான். அங்கே எல்லாவற்றையும் காட்டி முடிக்க, “நல்ல அச்சீவ்மென்ட்”, என்று கை குலுக்கினாள்.

உடனேயே, “சரி உன்னையும் பார்த்துட்டேன்! பாக்டரியும் பார்த்துட்டேன்! என்னை எப்போ ஊருக்கு அனுப்புவீங்க?”, என்றாள்.

என்னது அதுக்குள்ளயா”, என்றான் கிரி அதிர்ச்சியாக.  

ஆமாம்! எனக்கு போகணும். எனக்கு கார்த்திகையும் ஸ்வாதியையும் பார்க்கணும்”, என்றாள்.

அவன் ஒன்றும் பேசாமல் நிற்க, “ப்ளீஸ்நான் போறேனே”, என்றாள்.

Advertisement