Advertisement

அத்தியாயம் இருபது:

வீட்டை சுற்றி பார்த்து விட்டு தனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல் எங்கோ இருந்தது உஷாவின் பார்வை, கிரி அவளை தான் அவள் அறியாமல்     பார்த்துகொண்டிருந்தான். தன்னை பார்த்த சந்தோஷம் இருப்பது போல் தெரியவில்லை. ஏதோ யோசித்து கொண்டே இருப்பது போல் தோன்றியது. மிகவும் சோர்வாக தெரிந்தாள். என்ன பேசினாலும் கோபப்படுகிறாள். என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்றே தெரியவில்லை. நாளை ஞாயிறு என்பதால் சிறிது நேரம் மட்டுமே அன்அஃபீசியலாக அலுவலகம் சென்று வருவான். அவனுக்குமே வேலை பெரியதாக அன்று எதுவுமில்லை. எது வந்தாலும் பார்த்து தானே ஆக வேண்டும் என்ற முடிவோடு, “டையர்ட்டா இருந்தா தூங்கறியா”, என்றான்.

“இல்லை, தூக்கம் வரலை!”, என்றாள். “கொஞ்சம் படுத்திருந்தா டையர்ட்நெஸ் கம்மியா தெரியும் வா”, என்று அழைத்துபோய் அவளை படுக்க வைத்து விட்டு திரும்ப. “வீட்டுக்கு அருண் மாமாக்கு எல்லோருக்கும் நான் இங்க வந்துட்டேன்னு போன்ல சொல்லிடுங்க…………  நீங்க டாக்டர்  ஆனந்த் கிட்ட பேசறீங்களா”, என்றாள். எதுக்கு என்பது போல் இவன் பார்க்க, “தெரியலை, நான் ரீச் ஆனா உடனே போன் பண்ண சொன்னாங்க”, என்றாள்.

“இப்போ எல்லாரும் தூங்குவாங்க ப்ரத்யு. காலைல பண்ணிக்கலாம்”, என்றான்.

“சரி!”, என்றவள் தூங்குவதற்கு முயற்சியாக கண்களை மூட, இவன் மறுபடியும் எல்லாவற்றையும் செக் செய்ய வந்தவன் டி.வி யில் ஏதோ நியூஸ் ஓட, அதனை பார்த்து நின்றதில் ஒரு பத்து நிமிடம் ஓடி விட்டது. மறுபடியும் உள்ளே போக அவள் தூங்கியிருந்தாள். நல்ல உறக்கத்திற்கு போய் இருந்தாள். “என்னடா இது பத்து நிமிஷத்துல இப்படி தூங்கறாளே. நான் இங்கே தூங்கறதா இல்லை, வெளில தூங்கறதா. ஒண்ணுமே தெரியலை. இவ முழிச்சிருந்தா கூட பரவாயில்லை, இவ தூங்கும் போது நம்ம போய் பக்கத்துல தூங்கறதா, ஏதாவது கலாட்டா செய்துட்டா  என்ன செய்வது”, என்று அறியாமல் தடுமாறினான்.  பின்பு ஒருவாறாக வெளியே தூங்கலாம் என்று முடிவு செய்து வந்தான். ஆனால் அவனுடைய போன் அங்கே ரூமில் இருந்ததால் மறுபடியும் உள்ளே போக, அங்கே போன் அவளுக்கு பக்கத்தில் இருக்க, இவன் ஓசைப்படாமல் தான் அதனை எடுத்தான். ஆனால் எடுத்து திரும்பும் போது அவனையறியாமல் சிறு சத்தம் செய்துவிட, அதற்கு உஷா முழித்து கொள்ள.

“போன் எடுக்க வந்தேன் எழுப்பிட்டேன் போல தூங்கு”, என்று விட்டு வெளியே போகப்போக, “அது இந்த ஒரு மாதமா குழந்தைங்களோட தூங்கறனா, அதனால சின்ன சத்தத்துக்கு கூட முழிச்சு பழகிட்டேன், நீங்க தூங்கலையா” என்றாள். இது தான் சாக்கென்று கிரி. “எங்க தூங்கட்டும்?” என சற்று யோசித்தவள், “புது இடம் எனக்கு பயமா இருந்ததுன்னா, இங்கயே தூங்குங்க” என்றவள் எழுந்திருக்காமல் அப்படியே மற்ற புறமாக உருண்டு இவனுக்கு இடத்தை விட, “என்னடா இது. நான் இவ்வளவு நேரமா ஒரே யோசனையில் இருந்தா,  இவ நிமிஷத்துல இடம் விட்டுட்டா” என்று யோசிக்கும் போது அவனுடைய மூளை, “தூங்குடா டேய், நீ நல்லா தூங்கி கிட்ட தட்ட பத்து நாள் ஆகபோகுது”, என கட்டளையிட ஒன்றும் பேசாமல் உறங்க ஆரம்பித்தான்.

காலை அவன் எழும்போது பார்த்தால், இன்னும் அவள் உறங்கி கொண்டிருந்தாள். “என்னடா இது, இப்படி வந்ததுல இருந்து தூங்கிட்டே இருக்கா”, என நினைத்தவனாக, எழுந்து இவனுடைய வேலைகளை பார்த்து பின்பு எல்லோருக்கும் போன் செய்துவிடலாம் என. அவனுடைய அப்பா, அவளுடைய சித்தி, அருண், என அனைவருக்கும் பேசி பின்பு ஆனந்திற்கு கூப்பிட யாரோ எடுத்து, “சார் சர்ஜெரில இருக்காங்க”, என. பிறகு கூப்பிடுவதாக சொல்லி வைத்தான்.

அதற்குள் சமைப்பதற்கு ஒரு ஆள் வர, அவர் காப்பீ கொடுத்தவுடன் அதை எடுத்துக் கொண்டு போய் அவளை எழுப்பினான். எழுந்தவள், “நீங்க போட்டீங்களா, தேங்க்ஸ்”, என. “நானில்லை, ஒருத்தங்க டேய்லி காலைல வந்து எல்லாம் சமைச்சிட்டு போய்டுவாங்க. இங்க இந்தியன் ரெஸ்டாரென்ட்ல வொர்க் பண்றாங்க. பார்ட் டைம் காலைல இங்க வருவாங்க”, என.

“அப்பாடா” என்றாள். “ஏன் ப்ரத்யு” என “சமையல் நான் செய்வேன். ஆனா சாப்பிடறது கொஞ்சம் கஷ்டம். உங்களையும் கொடுமைப்படுத்தி, நானும் அந்த கொடுமைக்கு ஆளாகனுமோன்னு நினைச்சேன்”, என்றாள் சீரியசாகவே.

“அவ்வளவு பயமா சமைக்கறதுக்கு”, என கிரி கேட்க இல்லை என்பது போல் தலையசைத்து ,“சாப்பிடறதுக்கு”, என்றாள்.

“சரி, ரெடியாகிறியா, எங்கேயாவது போகலாமா”, என்றான்.

“எங்கே?”, என. “நானே டிசைட் பண்ணலை கிளம்பு”, என்றான்.

“எல்லாருக்கும் ஃபோன் பேசிட்டீங்களா! குழந்தைங்க எப்படி இருக்காங்க”,

“எல்லோருக்கும் பேசிட்டேன். ஆனந்த் அவனை பிடிக்க முடியலை. மறுபடியும் கூப்பிடனும். குழந்தைங்க நல்லா இருக்காங்க.” என.  “இந்த நம்பர் பண்ணி தாங்க, சமையல் அம்மாவோடது, நானே ஒரு தடவை குழந்தைங்க என்ன பண்றாங்கன்னு கேட்டுடறேனே ப்ளீஸ். எனக்கு கொஞ்சம் இன்னும் திருப்தியா இருக்கும்”, என்றாள்.

“இதுக்கு எதுக்கு ப்ளீஸ்” என்றவாறே அவன் செய்து கொடுக்க, அவரிடம் பேசி விஷயங்களை தெரிந்த பின் தான் படுக்கையை விட்டே எழுந்தாள். இன்றுமே ஒரு ஜீன்ஸ் டி ஷிர்டில் தான் இருந்தாள். அவளுக்கு நன்றாக பொருந்தியது.

“எப்படி ப்ரத்யு அழகா செலக்ட் பண்ணியிருக்க”, என கிரி கேட்க.

“நான் எங்க செலக்ட் பண்ணினேன், உங்க கூட பொறந்திருக்குற இம்சையும் அதை கல்யாணம் பண்ணி என்னை உங்க கிட்ட மாட்டி விட்ட இம்சையும் அமெரிக்கால இருந்து இங்க யாருக்கோ போன் பண்ணி. அவங்க வந்து ரெண்டு நாள்ல எனக்கு தேவையான டிரெஸ் எல்லாம் ரெடி பண்ணின்னாங்க. ரொம்ப படுத்திட்டாங்கப்பா. பட் அண்ணா ரொம்ப கேரிங், அக்கா ரொம்பவே லக்கி. இதை செய், அதை செய்ன்னு எனக்கு ஒரே அட்வைஸ். அவங்களோட போன் பேசவே சரியா போச்சு”.

அவள் பேசும் தொனியே அவள் அவர்களை செல்லமாக உரிமையோடு பேசுகிறாள் என தெரிந்தது கிரிக்கு. அவள் வாயிலிருந்து நானும் லக்கி என்ற வார்த்தையை வாங்க வேண்டும் என்ற ஆசை பிறந்து செய்வேன் என்ற உறுதியும் பிறந்தது.       கிளம்பி ஸ்ரீ நாராயணா மந்திர் என்ற கோவிலுக்கு கிரி அழைத்து சென்றான். இன்றுமே அவர்களுக்கு முன்னாள் ஒரு செக்யுரிடி இருந்தான். டிரைவர் காரை ஓட்ட அவர்களுக்கு முன்னாள் இன்னொரு வாகனத்தில் செக்யூரிட்டி இருந்தனர். “எப்போவுமே இப்படி தானா” என உஷா கேட்க, “எப்பவும் ஒருத்தர் இருப்பாங்க, முன்னாடி போற செக்யூரிட்டி எல்லாம் லாஸ்ட் வீக் நடந்த கலவரத்துக்கு அப்புறம்தான்”, என்றான். 

“என்ன ஆச்சு”, என்ற விவரம் கேட்க. எல்லாவற்றையும் சொன்னான். “ஓ. நீங்க இந்த டென்ஷன்ல இருந்தப்போ நான் வேற உங்களை படுத்திட்டேனா”, அவளுடைய ஒ மட்டுமே கருத்தில் பதிய.

“நீ சும்மா சும்மா இப்படி ஒ சொன்னேன்னா, அப்புறம் நான் என்னை ரெசிஸ்ட் பண்ண முடியாது. உனக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் ஆப் இந்தியா வா போய்டும்”, என்றான்.

கேட்டவுடனே வெட்கப்படுவாள் என்று கிரி எதிர் பார்க்கவில்லை. ஆனால் சாதாரணமாக பேசிகொண்டிருன்தவள் முகம் சீரியசாக ஆயிற்று.

“நீங்க இந்த மாதிரி பேசறதோ, இல்லை நடந்துக்கறதோ, அவாய்ட் பண்ணிடீங்கன்னா பெட்டர்”, என்றாள்.

அவளுடைய குரலே பெரியதாக ஏதோ வர போகிறது என கிரிக்கு தெரிவித்தது.

ஏன் என்பது போல் அவன் பார்க்க அவள் அமைதியானாள். இவர்கள் முன்னாள் இருக்கும் வரை அவள் வாய் திறக்க மாட்டாள் என உணர்ந்த கிரி. சிறிது தூரதில்லேயே காரை நிறுத்த சொல்லி வெளியே இறங்கினான். அங்கே ஏதோ பார்க் போல இருந்தது. நிறைய பெஞ்சஸ் இருக்க சண்டே என்பதால் நிறைய சிறுவர்கள் இருந்தனர்.

அமைதியாக அவன் சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்து அவளையும் பக்கத்தில் இருத்திக் கொண்டான். கோவிலுக்கு சென்று வந்தும் பேசலாம் தான். அவனுக்கு உஷா தன் மனைவி என்ற உரிமையோடு மட்டுமில்லாமல் உணர்வோடும் செல்லவே விரும்பினான். “ஏன் ப்ரத்யு, இவ்வளவு சீரியசா பதில் குடுக்கற.  எதுவா இருந்தாலும் பேசிடு”. அவள் பதில் பேசாமல் இருக்க அவனே தொடர்ந்தான்.

“அன்னைக்கு நான் இருந்தது ஒரு மிகப்பெரிய க்ரைசிஸ். எனக்கு இங்க சமாளிக்கறதிலேயே என் நினைவு பூரா இருந்தது. இங்க ரெண்டு மூணு பேர் ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க. ஆனா நான் பண்ண தப்பு  முதல் நாள் போன் பண்ணாததுக்கே நீ ரொம்ப டென்ஷன் ஆன. அட்லீஸ்ட் ஒரு மெசேஜ்ஜாவது ரீசன் சொல்லி பாஸ் பண்ணியிருக்கணும். ஆனால் ஒண்ணும் தோணலை. நீ இவ்வளவு சென்சிடிவ்ன்னு எதிர்பார்க்கலை. எனக்கு தெரிஞ்ச ப்ரத்யு தைரியமான பொண்ணு. ஆனா இப்போ தோணுது எல்லாமே வெளி பார்வைக்கு மட்டும் தானா?”.

“நீ ஃபோன்ல கூட என் கூட கொஞ்சம் க்ளோஸ் ஆன மாதிரி தான் நான் ஃபீல் பண்ணறேன். திடீர்னு ஏன் இப்படி?. நான் கணவன் என்கிற உரிமை எடுக்கறது பிடிக்கலையா. நான் பிஸிகளா மட்டும் மீன் பண்ணலை. அதுக்கு நமக்கு நிறைய டைம் இருக்கு, ஏஜ் இருக்கு. ஆனா மென்டலா அப்படி யாரோ மாதிரி என்னால இனிமே ஒதுங்கியிருக்க முடியாது”, என்றான் தெளிவான குரலில்.

“எனக்கு உங்க மேல எந்த கம்பிளைன்ட்சும் இல்லை. ஆனா இப்போதைக்கு இது பாஸிபிள் இல்லை”, என்றாள் அவளும் தெளிவான குரலிலேயே.

“என்ன காரணம் நான் தெரிஞ்சிக்கலாமா”, என்றவன், “எனக்கு தெரிஞ்சே ஆகணும்”, என்றான் பின்னோடு.

“ப்ச்”, என உஷா சொல்ல, “இங்க பல்லி எல்லாம் கிடையாது” என்றான் கிரி. “விஷயத்தை திசை திருப்பாத” 

“எனக்கு எதையும் திருப்ப வேண்டாம்”, என்றாள் லேசாக குரலில் கோபம் தொனிக்க,

“அப்போ சொல்லு, உனக்கு என்னை பார்த்து பயமா, இல்லை பிடிக்கலையா”,  என்றான் இன்னும் அவளை கோபப்படுத்தி விஷயத்தை தெரிந்துகொள்ள.

“எனக்கா! பயமா. உன்னை பார்த்தா. என்று கோபமாக கூறியவள் ஒருமைக்கு தாவியவள், சட்டென்று அமைதியானாள். ஒரு பெரிய மூச்சை வெளிபடுத்தி கோபத்தை மட்டுப்படுதினாள்.

“உன்னை தேடி வந்து எனக்கு வேண்டியதை நான் நடத்திகணுமா என்ன?”, அவளுடைய குரலில் வெறுப்பு தொனித்ததோ.

கிரி அவளை அதிர்ச்சியோடு பார்க்க, “இப்போ ஏதாவது நடந்ததுன்னா. என்னால என்னை சமாதானபடுத்திக்கவே முடியாது. லைஃப் ஃபுல்லா நான் ஒரு குற்ற உணர்ச்சியோடவே இருப்பேன். என்னை கல்யாணம் பண்ணினதுக்கு பிறகும் நான் தான் உன்னை தேடி வந்திருக்கேன் நீ வரலை. சும்மா உன்னை பார்க்க வந்துட்டு போறேன்னா அது ஒ.கே. பட் நம்மக்குள்ள பிசிகல்லா ஒரு ரீலேசன் உருவாச்சுன்னா. நான் உன்னை தேடி வந்து உன் கிட்ட என்னை குடுத்த மாதிரி வரும். அதை எப்போதும் என்னால ஜீரணிக்க முடியாது”.    

 “எனக்கு வேண்டியதை உன்னை தேடி வந்து நடத்திக்கனும்னு நினைச்சிருன்தேன்னா. இவ்வளவு நாள் ஏன் இப்படி இருக்கணும்”, என்று அவனை பார்த்து கேட்க. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் கிரியால். “நீயே சொல்லு, இதை நான் நீரஜாவோட உன் கல்யாண பத்திரிக்கை பார்த்த அன்றைக்கே தேடி வந்திருக்க மாட்டேனா”.

 அவளே தொடர்ந்தாள். “இப்போ ஏன் வந்தேன்னா, எல்லாரும் என்னை பரிதாபமா பார்த்தாங்க. அதனால வந்தேன். இன்னும் நான் இங்கே வரமாட்டேன்னு சொல்லியிருந்தா அந்த ஆனந்த் என்னை விட்டா சைக்யாற்றிஸ்ட் கிட்டேயே கூட்டிட்டு போயிருப்பான். அதனால எல்லாரும் என்னால ரொம்ப சிரமபடறாங்க அப்படின்றதை விட, என்னை பற்றி அவங்கல்லாம் யோசிக்கறது எனக்கு பிடிக்கலை. இத்தனை வருசமா நான் நல்லா தான் இருந்தேன். உன்னை பார்த்ததுக்கு பிறகு எனக்கு இது செகண்ட் அட்டாக். ஏன் இப்படி ஆயிட்டேன்னு எனக்கே புரியல்லை. ஒரே குழப்பமா இருந்தது. ஆனா இத்தனைக்கும் நடுவுல எனக்கு உன்னை பார்க்கணும் போல. நீ சொன்னியே என்னால ரெசிஸ்ட் பண்ண முடியாதுன்னு. அது மாதிரியான ஒரு எண்ணம். அதனால தான் குழந்தைங்களை கூட விட்டுட்டு கிளம்பி வந்திட்டேன். பார்த்துட்டேன்! என்னை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுப்பரீங்களா”.

“ஏன் இதை நேத்து ஏர்போர்ட்லயே கேட்டு இருக்கலாமே, அப்படியே ஃப்ளைட் ஏற்றி விட்டு இருப்பேன்ல”, என்றான் எரிச்சலான குரலில். அது அவன் மேலேயே அவனுக்கு வந்த கோபத்தின் வெளிப்பாடு.

ஆனால் இது எதையும் உணராமல் அவளே தொடர்ந்தாள்.

 “நான் எப்படி வந்தனோ, அப்படியே போனாதான் எனக்கு சந்தோஷம்னு சொல்றதை விடவும் எதிர்காலத்துல எனக்கு ஒரு கில்டி கான்ஸியஸ் இருக்காது. நான் சொல்றது உங்களுக்கு புரியுதா”, என்றாள். 

அவளையே பார்த்திருந்தான். இவ்வளவு சென்சிடிவாக ஏன் இவள் இருக்கிறாள். எதுவும் செய்ய இயலாதவனாக அவன் மேலேயே அவனுக்கு அளவு கடந்த கோபம் வந்தது.  அந்த கோபத்தை அவளிடம் மறுபடியும் அப்படியே காட்டினான்,

“இவ்வளவு யோசிச்சு நீ ஏன் உன்னை கஷ்டபடுத்திக்கற. என் சிறு மூளை பெருமூளை எல்லா மூளைக்கும் நீ சொன்னதை சொல்லிட்டேன். அது கேட்கும் தான்னு நினைக்கிறேன். இதெல்லாம் நீ இங்க இருக்குற வரைக்கும் தான். அதுக்கு மேல நான் உத்திரவாதம் குடுக்க முடியாது”.

“இவ்வளவு இப்போ பேசுற நீ. எனக்கும் நீரஜாவுக்கும் கல்யாணம்ன்ற ஸ்டேஜ்ல வந்திருக்கலாம், இல்லை உன் கிட்ட இப்படி உன்னோட ஒவ்வொரு செல்லுளையும் என்னை பதிச்ச பாட்டி என்கிட்ட சொல்லி வளர்த்திருந்தா. அப்போவே எனக்கு பிடிச்சிருந்தா. நமக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருந்த மாதிரி ஒரு நெருக்கம் வந்திருக்கும். இல்லைன்னா அது வராமலேயே போயிருந்தாலும் அப்போவே தெரிஞ்சிருக்கும். இப்படி யாருக்கும் கஷ்டமிருந்திருக்காது. யாருக்கும் அப்படின்றதை விட உனக்கு இருந்திருக்காது. நீ தான் இதுல பாதிக்கப்பட்டிருக்க எல்லாம் உன் பாட்டியால வந்தது”, என்று அவன் பேசிகொண்டிருக்கும் போதே.

“பாட்டிய ஒண்ணும் திட்ட வேண்டாம்”, என்று ஆவேசமாக அவளையறியாமலேயே கூறினாள். சிறிது படபடப்பாக இருப்பது போல் தோன்ற காலைத் தூக்கி பெஞ்ச் மேல் வைத்து அப்படியே தலையை அதன் மேல் கவிழ்த்து கால்களை கையால் கட்டி கொண்டாள். கைகள் நடுங்குவது போல் தோன்ற கைகளை இன்னும் இறுக்கி கொண்டாள். கட்டுபடுத்தினாலும் அடங்காமல் கோபம் பெருக அவனை நோக்கி ஆவேசமாக.    

“உனக்கு தெரியும் தானே எனக்கு அம்மா கிடையாது. அப்பா இருந்தும் என் பக்கத்துல கிடையாது. ஆனா இது எதையுமே என்னால வெளில காட்ட முடியாது. ஏன்னா பாட்டி என்ன அவ்வளவு நல்லா பார்த்துகிட்டாங்க. அவங்களை திட்டுறதை என்னால எப்பவுமே பொறுத்துக்க முடியாது அது யாரா இருந்தாலும் சரி. எனக்கும் சாம்பவி அத்தைக்கும் என்னோட மார்க் ஷீட்ஸ் கிழிச்சு போடுற அளவுக்கு சண்டை வந்ததுக்கு இதுதான் காரணம்”.

“அவங்க என் பாட்டிய திட்டுனாங்க. என் பாட்டி இருந்தப்போவும் அவங்க உயிரை எடுத்தாங்கலாம். இறந்ததுக்கு அப்புறம் என் மூலமா அவங்க உயிரை எடுக்கறாங்கலாம். எனக்கு இதை கேட்டு சும்மா வர முடியலை. வீட்ல இருக்கிற சாமானையெல்லாம் அடிச்சு தூள் கிளப்பிட்டேன். அவங்க சொல்ல சொல்ல கேட்காம எல்லாத்தையும் உடைக்க ஆரம்பிச்சேன் . ஏதோ தூக்கி வீசுனேன். அது அங்கேயிருந்த உங்க அம்மா அப்பா நீ அக்கா இருக்கற போட்டோ மேல பட்டு அது கீழ விழுந்து கண்ணாடி உடைஞ்சிடுச்சு. அந்த கோபத்துல தான் அவங்க என் மார்க் ஷீட்ஸ் கிழிச்சாங்க. உங்கம்மா மண்டைய உடைச்சிருப்பேன் தப்பிச்சிட்டாங்க.”, என்றாள். அன்றைய நாளின் கோபம் அவள் முகத்தில் இன்றுமே தெரிந்தது.

“எனக்கு இன்னும் அந்த வார்த்தைகள் ஞாபகம் இருக்கு. அவங்களுக்கு அப்போ தான் சொத்து விஷயம் பாட்டி உங்கப்பாக்கு சமம்மா எனக்கு குடுத்தது தெரியும் போல. அதை தப்புன்னு சொல்ல முடியாது. பாட்டி அவங்க ரெண்டு பசங்களுக்கும் சமமா குடுத்திருக்காங்க. எங்க அம்மா இல்லாததால எனக்கு குடுத்திருக்காங்க. ஆனா அது உங்க அம்மாக்கு பொறுக்கலை. உங்க அம்மா என்னை பார்த்து கத்தினாங்க. “எனக்கு தெரியும்டி. உன்பாட்டி என் பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லியே வளர்த்திருக்காங்க. பாதி சொத்தை இப்போவே குடுத்துட்டாங்க. மீதியை என் பையனை கல்யாணம் பண்ணி உனக்கு வரவெச்சிடுவாங்க. பெரிய மனுஷியா அவங்கல்லாம்! இருந்தும் என் உயிரை எடுத்தாங்க! செத்தும் என் உயிரை எடுக்கறாங்க. நான் உயிரோட இருக்கற வரைக்கும் நீ என் பையனை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னாங்க”.

 “பாட்டிய திட்டுனதை என்னால தாங்க முடியலை, பதிலுக்கு நானும் கத்தினேன். நீ உயிரோட இருக்கிறவரைக்கும் இல்லை. நீ செத்தா கூட நான் உன் பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இனி இந்த வீட்டுக்கு வரமாட்டேன். எனக்கு எதுவுமே இங்க இருந்து வேண்டாம். என் பாட்டிய திட்டுன நீங்க யாரும் நல்லாவே இருக்க மாட்டீங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் நான் பாட்டியோட அன்னலட்சுமி பிரத்யுஷாவா இல்லை. எங்கப்பாவோட பொண்ணு உஷாவா தான் இருந்தேன். அங்க எப்படியோ அப்படி தான் இருந்தேன். இந்த நாலு வருஷமா வேலைக்கு வேற போனேன்”.  

“அதனால தான் நான் உங்களை பார்க்க முயற்சி கூட செய்யலை. ஆனா இப்போ என்ன நடக்குது. “.             

 “எனக்கு இப்போ எல்லாம் தோணுது. எனக்கும் அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காதுன்னு. அம்மா இல்லாத பொண்ணுன்னு தானே உங்க அம்மா பேசினாங்க. அப்படி நீ என்ன என்னை விட ஸ்பெஷல்”,   என்றவள் வார்த்தைகளில் இருந்த வலி கண்களில் கண்ணீராக இறங்க ஆரம்பித்தது.

 “இதுல நா யார்கிட்டாயாவது என் அம்மா இல்லைன்னு சொல்ல முடியுமா. சாம்பவி அத்தை எப்படியோ எனக்கு தெரியாது. ஆனா அவங்க ஒரு நல்ல மனைவி, இன்னும் சொல்லபோனா நல்ல அம்மா. அதனால தான் என்னோட பிஹேவியர் பார்த்து அவங்க என்னை உனக்கு கல்யாணம் பண்ற பேச்சை கூட பாட்டிய எடுக்கவிடவேயில்லை. அதனால தான் எனக்கு தெரிஞ்ச இந்த விஷயம் உனக்கு தெரியாமையே போய்டுச்சு. ஒரு தடவை பாட்டி சொன்னபோது அவங்க இந்த பேச்ச எடுத்தீங்கனா நான் இந்த வீட்டை விட்டு உங்க பையனை விட்டு  போய்டுவேன்னு சொல்லியிருக்காங்க. அதனால தான் பாட்டி அதுக்கு பிறகு இந்த பேச்சை எடுக்கவேயில்லை”.

“என்னவோ அத்தைக்கு என்னை பிடிக்காமேயே. போய்டுச்சு மே பி நான் அந்த வீட்ல அவங்கள விட டாமினேட் பண்ணிடடிருந்தேன்னு நினைச்சிருக்கலாம், இல்லைன்னா பண்ணுவேன்னு நினைச்சிருக்கலாம். ஏதோ ஒண்ணு. அவங்க உங்களை, நந்தினி அக்காவை, என் கண் முன்னாடி தான் கொஞ்சுவாங்க. என்ன தான் நான் பாக்காத மாதிரி போயிட்டாலும் எனக்கு அது தெரியும் தானே. நீங்க ரெண்டு பேரும் அவங்க இல்லாதப்ப தான் என்கிட்ட நல்லா பேசுவீங்க. எனக்கு மட்டும் ஏன் அம்மா இல்லைன்னு எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா. ஆனா அது யாருக்கும் தெரிய வராம பார்துக்கறது இன்னும் கஷ்டம். அதனாலேயே நான் எல்லாத்தையும் சின்ன வயசுலயே எடுத்தெரிஞ்சு பேசுவேன், மரியாதை குடுக்க மாட்டேன். ஆனா இதுல என் தப்பு என்ன இருக்கு. இப்போ கார்த்திக்கையும் ஸ்வாதியையும் நான் கொஞ்சும் போது, இப்படி என்னை யாரும் கொஞ்சியிருக்க மாட்டாங்களே அப்படின்ற ஞாபகம் எனக்கு நிறைய வருது.”, என்றவள் அடக்க முடியாமல் தேம்பலில் முதுகு பகுதி குலுங்க கைகளால் முகத்தை மூடி கொண்டாள். அருகில் அமர்ந்திருந்தவன் செய்வதறியாது  அப்படியே அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான். சிறு அழுகை சத்தம் கூட வரவில்லை. ஆனால் அவன் உடையின் நெஞ்சு பகுதி அவளுடைய கண்ணீரின்  ஈரத்தால் மளமள வென நனைய ஆரம்பித்தது.  

Advertisement