Advertisement

அத்தியாயம் பதினாறு:

மனதில் குற்ற உணர்ச்சி அதிகரிக்க ஆரம்பித்தது. யோசனை யோசிக்காமல் அவனை ஆக்ரமித்தது. அவளை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து கணேஷை நோக்கி, “சந்தோஷமா.”, என்றான்.

“ரொம்ப.”, என்றான் அவன் எல்லாரும் அவளை பாராட்டுவதை பார்த்துகொண்டே.

எல்லோரும் டின்னருக்கு செல்லும் வரை பொறுத்திருந்து அருணிடம் அவளையும் கணேஷையும் வீட்டிற்கு அனுப்பிவிடுமாறு சொல்லி இவன் எங்கோ போக. அருண் என்ன என்று கேட்க அவன் பதில் சொல்லவில்லை.

ஆனால் இவனையே கவனித்து கொண்டிருந்த உஷா இவன் வெளியே செல்வதை பார்த்து பின்னோடு வந்து அவனை கூப்பிட, அவன் அதை கவனிக்கவேயில்லை. வேகமாக அவன் பின்னோடு சென்று அவன் கையை பிடித்து நிறுத்த அப்போது தான் தன்னை யாரோ பிடித்திருப்பதையே உணர்ந்தான். அவன் திரும்ப உஷா தன் கையை பிடித்திருப்பதை பார்த்து சட்டென்று கையை உருவினான். அவனுடைய அந்த செய்கையில் உஷா அப்படியே நின்று விட்டாள். அவனுக்கு தான் செய்தது புரியவேயில்லை.

அவளை பார்த்து, “என்ன ப்ரத்யு.?”, என, உஷாவிற்க்கு அவனுடைய கையை இழுத்த அந்த அனிச்சையான செயல் அவள் எதற்கு அவனை நிறுத்தினாள் என்பதையே மறக்கடித்தது. 

“ஒண்ணுமில்லை.”, என்றாள்.

“ஒண்ணுமில்லாததுக்கா இப்படி வேகமா வந்த.”, என்றான்.

இது அத்தனையும் தூரத்தில் இருந்து அருண் பார்த்துகொண்டு இருந்தான்.

அவள் கை பிடித்து அவனை நிறுத்தியதையும், அவன் அவளை பார்த்து கையை வேகமாக இழுத்ததையும், சட்டென்று உஷாவின் முகம் மாறிவிட்டதையும் பார்த்து கொண்டுதானிருந்தான்.

“நான் வீட்டுக்கு போகணும்.”, என்றாள்.

“அருண் மாமாகிட்ட சொல்லியிருந்தேனே.”, என அவன் கூற, ஒன்று பேசாமல் அருணிடம் வர அவனும் ஒன்றும் பேசாமல் இருவரையும் கூப்பிட்டு கொண்டு கிளம்பினான்.

வண்டி உஷாவினுடைய வீட்டிற்கு செல்லாமல் மறுபடியும் கிரியினுடைய வீட்டிற்கு செல்ல யோசனையாக பார்த்த உஷாவிடம், “அவனுக்காக இவ்வளவு சண்டை போட்டு இருக்க, அவன் நிலைமை என்ன நீ தெரிஞ்சிட்டு போ அன்னு.”, என்றான்.

அவர்கள் வந்தது தெரிந்ததுமே சாம்பவி இடத்தை விட்டு அகன்றுவிட உஷா எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் வீடு வந்த போது ஒன்பதரை மணி அவர்கள் சாப்பிட்டு காத்திருக்க ஆரம்பிக்க, கணேஷை  டி. வி. யின் வசம் ஒப்படைத்து அவள் குழந்தைகளோடு ஐய்க்கியமானாள். அவர்கள் உறங்க.,  

இவள் தனியாகவே அமர்ந்திருந்தாள். யாரோடும் பேச பிடிக்கவில்லை. நந்தினி வந்தவள் கூட இவளின் பாவனையை பார்த்து ஏதோ சரியில்லை என உணர்ந்து அருனோடு போய் அமர்ந்து கொண்டாள்.

விஸ்வநாதன் வீடு வந்த போது மணி பதினொன்றை நெருங்க நந்தினி தான் பார்த்து கொள்வதாக கூறி விஸ்வநாதனை தூங்க அனுப்பினாள்.

கிரி வந்த போது இரவு ஒன்றுக்கு மேல் ஆகியிருந்தது நிற்கவே முடியவில்லை. தள்ளாடினான்……………. நிறைய குடித்திருந்தான். கணேஷை ஹாலில் பார்த்து அதிர்ந்தான்.  ஆனாலும் கணேஷை பார்த்து, “நீங்க இன்னைக்கு இங்கேயே இருக்கிங்களா.”, என்றான்.

கணேஷிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமலிருக்க,

“சரி ஏன் முழிச்சிட்டு இருக்க தூங்க வேண்டியது தானே.”, என்றான் அவன் அமர்ந்து கொண்டே, “உன் அக்கா தூங்கிட்டாளா.”, என கேட்க “இல்லை……….”, என்று அருண் பதில் சொன்னான்.

நந்தினி, “நான் கூப்பிடறேன் உன்னை பார்க்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கா……………”, எனவும்,

“என்னையா………….”, என்று வேகமாக எழுந்து ஒரு வழியாக அவனுடைய ரூமிற்கு மேலே ஏறி சென்று தாழ் போட்டு கொண்டான்.

இதெல்லாம் திறந்திருந்த கதவு வழியாக உஷா பார்த்து கொண்டு தானிருந்தாள்.

அதற்கு மேல் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்து அவள் குழந்தைகளோடு உறங்க கணேஷ் ஹாலிலேயே தூங்கினான்.

நந்தினி அருணை கவலையாக பார்க்க,“நான் பார்த்துக்கறேன் போ……… நீ போய் தூங்கு……………….”, என அருண் கூறிய பிறகே நந்தினி உறங்கினாள்.

அதிகாலையிலேயே குழந்தைகள் விழித்து விட உஷாவும் விழித்து விட்டாள். கேர் டேக்கர் இருந்தாலும் அவர்களுடைய அனைத்து தேவைகளையும் அவளே செய்தாள்.

சாம்பவி வந்தவர் இதனை பார்த்து சென்று விட நந்தினி எழும்போதே மணி எட்டு. கணேஷ் வேறு இவளையே பார்த்துகொண்டு இருந்தான். அவன் ஒன்றும் கேட்கவில்லை என்றாலும் வீட்டிற்கு செல்வதற்கு அவன் பார்த்து கொண்டு இருப்பது புரிய இவள் நந்தினியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அருணும் கிரியும் எழட்டும் என்று நந்தினி கூறியும் கூட நிற்கவில்லை. திருப்பூர் வீட்டிற்கு வந்து இவள் குளித்து ரெடி ஆவதற்குள் வாசலில் நின்ற டிரைவர் முத்து   “சின்ன அம்மணி  நீங்க ரெடி ஆனவுடனே சார் உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க…………. உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் இருக்காம்……….”, என்றார்.

அவள் வந்து அரைமணி நேரம் கூட இருக்காது. ஒன்றும் பேசாமல் இன்னும் அரைமணி நேரம் என்றவள் சித்தியிடம் சொல்லி டிஃபன் சாப்பிட்டு கிளம்பி விட்டாள்.

அங்கே போனாள் கிரி இருந்தான், விஸ்வநாதன் இருந்தார், அலுவலகம் பரபரப்பாக இருந்தது. கிரி அவளை பார்த்தவுடனே,“சாரி நேத்து நைட் பார்க்க முடியலை…………”, என்றான்.

அவள் திட்டுவாள் என்று எதிர் பார்த்திருக்க ஒன்றுமே பேசவில்லை, அமைதியாக “என்ன அப்பாயின்ட்மென்ட்………….”, என்றாள்.

அவளிடம் என்ன சொல்லுவது குடிப்பதற்கு திட்டுவாள் என்று கிரி எதிர்பார்த்திருக்க அவள் ஒன்றுமே சொல்லாமல் வேலையை பற்றி பேச கிரி என்னவோ குறைவதாக உணர்ந்தான்.

“உனக்கு வொர்க் சொல்லிகொடுக்க…………. உனக்கு அச்சிஸ்ட் பண்ண ரெண்டு பேரை அப்பாயின்ட் பண்ணி இருக்கோம்……… உனக்கு ஒ.கே வா”, என்றான்.

“எனக்கு இதை பத்தி ஒண்ணும் தெரியாது. நீங்க என்ன சொன்னாலும் ஒ.கே……………”, என்றாள்.

“அச்சிஸ்ட் அப்படின்னு கூட சொல்ல முடியாது. ஒருத்தங்க உனக்கு அட்வைசர். இன்னொருத்தங்க உன்னை கைட் பண்ணுவாங்க. அது இல்லாம உனக்கு பி ஏ இருப்பாங்க…………….”, என்றான்.

“ஆனா எனக்கு ஒண்ணுமே தெரியாதே…………”, என்றாள்.

“ஒண்ணும் அவசரமில்லை மெதுவா கத்துக்கலாம். அதுக்கு தான் அவங்க. இனிமே ரெகுலர் காலேஜ் போய் நீ படிச்சு, அப்புறம் டேக் ஓவர் பண்ணினாலும் இதே டிஃபீகல்ட்டி தான் இருக்கும். எஜுகேஷன் தனியா வளர்த்துக்கலாம்……………….”, என்றான்.

“எதுக்கு இவ்வளவு கஷ்டம். நீங்க தான் இருக்கீங்களே………………”, என்றாள்.

“நான் இருக்கேன். ஆனாலும் நீ உன்னை ஏன் வேஸ்ட் பண்ணற. நீ நிறைய பண்ணுவ அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்கும் அப்பாக்குமே நிறைய உதவியா இருக்கும்.எதை பத்தியும் யோசிக்காத. இது உன்னோடது நீயும் பார்த்துக்கணும்……….”, என்றான். அதை சொல்லும்போது உஷாவிற்க்கு தோன்றியது, நீயும் என்னோடதுன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன். அப்போ உன்னையும் பார்த்துக்கணுமோ. என்று

அவளுடைய நினைவுகளை கலைத்து, “உன்னோட அட்வைசரும், கைடும் ரொம்ப பெரிய ஆளுங்க. அப்பாவோட பேசிட்டு இருக்காங்க வா.”, என்று அழைத்து சென்றான்.

இரண்டு பேருமே பெண்கள். பார்த்தவுடனே தெரிந்தது. இரண்டு பேருமே இரண்டு வகை என்று, ஒருவர் சற்று வயாதனவர் புடவையில் இருந்தார். “இவங்க மாதவி மேடம் சீஃப் செகரட்டரியா இருந்து ரிடையர் ஆனவங்க.”, என்றான். இவங்க உன்னோட அட்வைசர். மற்றொருவர் நாற்பது வயதிருக்கும் கோட் மாதிரியான ஒரு டிரெஸ்ஸில் இருந்தார். மாடர்ன்னாக இருந்தார். “இவங்க சுபா ஒரு மல்டி நேஷனல் கம்பனில    சி.இ.ஒ வா இருந்தாங்க. உனக்காக தான் ரெண்டு பேரும் வந்திருக்காங்க.”, என்றான்.

“வந்திருக்காங்க இல்லை. வரவச்சிடாங்க சார்.”, என்றார் அந்த சுபா என்பவர். “இந்த ஒரு மாசமா இவங்க என்னை நான் வர்றேன்னு சொல்றவரைக்கும் விடவேயில்லை. சாலரி ஆஃபர் என்னை ஒ கே சொல்லவச்சிடுச்சு.”, என்றார் ஆங்கிலத்தில்.

“உங்களையாவது சாலரி காட்டி கூட்டி வந்தாங்க. என்னை தினமும் ஈவினிங் பார்க்க வந்து ஒரு வழி பண்ணியாச்சு. நேத்து உன்னோட ப்ரெஸ் மீட்ல நாங்க இருந்தோம். பட் எல்லாருக்கும் எங்களை தெரியும் அப்படின்றதால தனியா இருந்தோம். முதல்ல நான் சரின்னு சொன்னது ஒரு ஹாஃப் மைன்ட்டா தான். உன் ஸ்பீச் என்னை இம்ப்ரெஸ் பண்ணிச்சு அதனால தான் சரின்னுட்டேன்.”, என்றார் மாதவி.

இந்த ஒரு மாதமும் தனக்காக தான் யோசித்து கொண்டிருந்தானா இவ்வளவு நாட்களாக தனக்குள்ளேயே உலன்று கொண்டிருந்தவள் நேற்றைய அவன் செய்கையால் பெருமளவு உளைச்சளில் இருந்தவள் அவனை கவனிக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் பேசியதற்கு சிறு புன்னகையே அவன் முகத்தில். அதில் ஏதோ யோசனை ஓடிகொண்டே இருப்பது போல் உஷாவிர்க்கு தோன்றியது.

அவர்கள், விஸ்வநாதன், கிரி, எல்லாரும் பேசிகொண்டிருக்க கிரி கவனிக்காதவாறு அவனை கவனிக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் பேசி முடித்து எழுந்திருக்க, “நீங்க எப்போ சார் லண்டன் போறீங்க.”, என்றார் அந்த சுபா கிரியை நோக்கி,

“நெக்ஸ்ட் வீக் வெட்னெஸ்டே ஈவினிங்.”, என்றான்.

இவன் லண்டன் போகிறானா தன்னிடம் சொல்லவேயில்லையே. இவன் என்ன தன்னிடம் சொல்லிவிட்டா எல்லாவற்றையும் செய்கின்றான்.

அவர்களிடம் அவளை ஒப்படைத்து விட்டு அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

உஷாவிற்க்கு பயமாக இருந்தது தன்னால் முடியுமா என்று.

அன்றைய பொழுது அவளுக்கு வேகமாக ஓடியது. பெரும்பாலும் எல்லா வேலைகளையும் சுபாவே சொல்லி கொடுக்க, மாதவி மேடம் மேற்பார்வை மட்டும் பார்த்தார்.

உஷா திணறியது அவர்களுக்கு புரிந்தது. முதலில் அப்படித்தான் இருக்கு மெதுவாக எல்லாமே புரியும் என்றனர். கரக்டாக ஐந்து மணி முப்பது நிமிடங்களுக்கு சுபா கிளம்ப அதற்கும் முன்னதாகவே மாதவி கிளம்பியிருந்தார்.

கிரியின் ரூமிற்கு போக. அங்கே அவனை பார்க்க நிறைய பேர் காத்திருந்தனர். நேராக உள்ளே போய் அவனுடைய சிஸ்டம் முன்னாடி அமர்ந்து கொண்டாள். அவன் என்ன என்பது போல் அவளை பார்க்க நீ உன் வேலையை பார் என்று சைகையாலேயே சொன்னாள்.

அவனுடை ய பார்வையாளர்களை பார்த்து முடிக்க அவனுக்கு ஒன்றரை மணி நேரம் ஆனது அதற்குள் அவனுடைய போன் அவனுடைய சிஸ்டம் அவனுடைய டேபிள்,கபோர்ட் ,என அத்தனையும் நோன்டி முடித்திருந்தாள்.

அவன் வேலைகளை முடித்திருக்க, அவளை பார்த்து, “எப்படி இருந்தது ஆபீஸ்ல ஃபர்ஸ்ட் டே.”, என்றான்.

“நாட் பேட்.”, என உஷா சொல்ல.

“ப்ரத்யு. நான் வெட்னெஸ்டே லண்டன் போறேன்.”, என்றான்.

“எப்போ திரும்புவீங்க.”, என அவள் கேட்க.

 “தெரியல மினிமம் மூணு நாலு மாசமாவது ஆகும்.”,

“அவ்வளவு நாளா. குழந்தைங்க.?” என அவள் கேட்க,

“அம்மா பார்த்துபாங்க.”, என்றான்.

ஒ. என்று இழுத்தாள். “ஆமா உங்க அம்மா பார்த்துப்பாங்கன்னு சொல்லறதுக்கு. என்னை எதுக்கு குழந்தைங்களை காட்டி, ப்ளாக் மெயில் பண்ணி இழுத்துட்டு வந்த.”, என்றாள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு. அவன் முகத்தில் சட்டென ஒரு அடிபட்ட உணர்வு தோன்றியது. அவன் வருத்தபடுவது சகியாமல் உடனே. 

“நான் எப்படி அவங்களை பார்க்கறது.”, என்றாள்.

“நீ எப்போ வேணா அவங்களை பார்க்கலாம். உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.”

“இன்னும் அவள் முகம் தெளியாததை கண்டு. “என்ன.?”, என்றான். அமைதியாகவே இருந்தாள். “ஏதாவது கேட்கணுமா கேளு.”, அவள் ஏதோ கேட்க நினைப்பதாகவே அவனுக்கு தோன்றியது.

“உங்களுக்கு  ஏதாவது என்கிட்ட சொல்லனுமா.”, என்றாள்.

“ப்ரத்யு எதுவா இருந்தாலும் நேரடியா பேசு. எனக்கு இப்படி வார்த்தைகள் போட்டா ஒண்ணுமே புரியாது.”, என்றான் சலிப்பாக.

“என்ன கேட்கணும்னா.? நீ டெய்லி நைட் என்ன பண்ணிட்டு இருக்க. அதுவும் அடுத்தவங்க கமெண்ட் பண்ணற மாதிரி.”, என்றாள் சட்டென்று ஒருமையில்.

அவன் அதற்கு நேரடியாக பதில் கூறாமல், “கொஞ்ச கொஞ்சமா குறைக்க ட்ரை பண்ணறேன்.”, என்றான்.

“என்ன அப்படி உனக்கு ப்ராப்லம் ஏன் இப்படி பண்ணற.”, என்றாள் வருத்தமாக.

 “நீ இதுல வொர்ரி பண்ற அளவுக்கு ஒண்ணுமில்லை. சரியாயிடும்.”, என்றான்.

இன்னும் அவள் முகம் தெளியாததை கண்டு, “சரிபடித்திக்குவேன்.”, என்றான் உறுதியாக.

இன்னும் அவள் அசையாமல் அமர்ந்திருக்க, “என்ன எதுவா இருந்தாலும் கேளு, நீ முடிச்சவுடனே நந்தினி போன் பண்ண சொன்னா.”, என அவன் எழுந்திருக்க, “இருங்க.”, என்றாள் அவசரமாக.

“என்ன ப்ரத்யு எதுவா இருந்தாலும் கேட்டுடு.”.

மிகவும் தயங்கி, “நீங்க உண்மையா பதில் சொல்லுவிங்களா.”, 

‘எதுக்கு இவ்வளவு பீடிகை. ஏதாவது ப்ரோப்ளமா உனக்கு.”, என்றான் கவலையாக. மறுபடியும் நான் இங்கே வரமாட்டேன் என்று சொல்லி விடுவாளோ என்று.

இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

 “நீ. நீங்க.  நீரஜாவ மிஸ் பண்றீங்களா.  அதுதான் இப்படி குடிக்கறீங்களா.”, என்றாள்.

அப்படியே ஸ்தம்பித்தான். எதையாவது கேட்பாள் என நினைத்தான். ஆனால் இதை எதிர் பார்க்கவில்லை. தப்பு செய்து அம்மாவிடம் மாட்டி கொண்ட குழந்தையை போல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான்.

அவன் அப்படியே நின்றிருக்க, “உக்காருங்க மாமா.”, என்றாள்.

பதில் பேசாமல் அமர்ந்தான். அவள் கேட்டது நிஜம் இல்லை என்று பொய்யுரைக்க மனமில்லை அமைதியாகவே இருந்தான்.

அவனுடைய மௌனமே உஷாவிற்க்கு தேவையான பதிலை தந்தது. “குடிச்சா திரும்ப வந்துடுவாங்களா என்ன. சில விஷயங்களை நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். மனிதர்களோட இழப்பு அப்படிப்பட்ட ஒண்ணு தான். குடிக்கறது மட்டும் இல்லாம இன்னும் விஷயங்களை காம்ப்ளிகேட் பண்ணிட்டு இருக்கீங்க.”, என்றாள் அவனை குற்றம் சாட்டும் விதமாக.

“ஆனா என்னோட கெஸ் என்னன்னா. நீங்க இதுக்காக மட்டும் இப்படி செய்யலை. உங்களுக்கு அவங்களை மறக்க முடியலை. ஆனா நான் இங்க வரணும், இருக்கணும், அப்படின்றதுக்காக குழந்தைங்களை வெச்சு என்னை கூட்டிட்டு வந்துடீங்க. ஆனா என்னை ஒரு வேலை கல்யாணம் பண்ற மாதிரி வந்திடுமோன்னு தானே பயப்படறீங்க. உங்களுக்கு அதுல இஷ்டமில்லை. என்னடா குழந்தைங்களுக்கு அம்மாவா வேற இருன்னு சொன்னோம்னு குழபிக்கறீங்க இல்லையா.”, என்றாள் தெளிவாக.

எப்படி தன் மனதில் இருப்பதை அப்படியே உரைக்கிறாள். எப்படி என்னை தெரிந்து வைத்திருக்கிறாள். அப்படியே அசந்து விட்டான்.

ஆனால் இப்போது மெளனமாக இருந்தால் அது அவளை காயப்படுத்தும் என உணர்ந்து, “நீ சொல்றது சில வகையில சரி. ஆனா என்னோட கவலையெல்லாம் என்னைப் இவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிற உனக்கு நான் உண்மையா இல்லாம போயிட்டா. உன்னை கல்யாணம் பண்ண அப்புறமும் நீரஜா வே எனக்குள்ள இருந்தா.”.

“எனக்காக உங்களுக்குள்ள எந்த போராட்டமும் வேண்டாம். உங்களுக்கு என்னை பிடிச்சா தான், எனக்கு உங்களை பிடிக்குமா என்ன”, என்றாள் ஆழமான குரலில் உணர்ந்து.

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும். மறுபடியும் மறுபடியும் அவள் தன் மேல் வைத்திருக்கும் இந்த அன்பு ஏதோ சுழல் போல் தோன்றியது. அவள் தன்னிடம் சண்டையிட்டால் அல்லது அடித்தாள் கூட பரவாயில்லை என்று தோன்றியது. நேற்று காலையில் இருந்து தான் தன்னுடன் இருக்கிறாள் ஆனால்  பிரச்சனையை எவ்வளவு சுலபமாக கண்டு கொண்டாள்.

கிரி ஏதோ சொல்ல வர, “நான் கேக்க நினைச்சதையும், சொல்ல நினைச்சதையும், சொல்லிட்டேன். நான் கிளம்பறேன்.”, என்று சொல்லி, அவன் என்ன ஏது என்று உணரும் முன்பாகவே அந்த இடத்தை விட்டு சென்றிருந்தாள். 

 

Advertisement