Advertisement

அத்தியாயம் பதினைந்து(1):

நேரே வீட்டிற்கு தான் சென்றாள். அங்கே ஹாலில் சோபாவிலேயே சாம்பவி அழுதபடியே அமர்ந்திருந்தார். பக்கத்திலேயே நந்தினியும் அருணும் இருந்தனர்.

வேலை இருக்கிறது என்று சொல்லி விஸ்வநாதனை அங்கே இருக்க விடாமல் கிரி ஆஃபீஸ் இழுத்து கொண்டு போயிருந்தான்.

நந்தினியிடமும் அருணிடமும் தெளிவாக கூறியிருந்தான். ப்ரத்யுவிற்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று. அப்படியும் நம்பாமல் இருவரது செல்லையும் சுவிச் ஆப் செய்து தன்னோடு எடுத்து சென்றான். இவர்கள் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். ஆனால் ப்ரத்யு இவர்களை தொடர்பு கொள்ளக்கூடாது என்று எடுத்து சென்றான். அவனுக்கு தெரியும் இங்கே அவன் இருந்தால் அவனது அம்மா கலாட்டா செய்து விடுவார் என்று அப்புறம் அவனால் உஷாவை சமாளிக்க முடியாது. எப்படியும் கோபத்தில் அவள் தன்னை தேடி வருவாள் என்று தெரியும். அதனாலேயே தைரியமாக ஆபீஸ் சென்றான்

உள்ளே குழந்தைகளை எடுத்துகொண்டு வரவும், சித்தி கையில் இருந்த  நிரஞ்சன் கார்த்திக் முழித்துக்கொண்டு அழவும் சரியாக இருந்தது. சத்தம் கேட்டு ஏறக்குறைய சாம்பவி ஓடி வந்தார் என்றே சொல்ல வேண்டும்அவருடைய கையில் குழந்தையை சித்தி கொடுக்க, பின்னோடு வந்த நந்தினியிடம் அந்த குழந்தையை கொடுத்துவிட்டு உஷாவினுடைய கையில் இருந்த குழந்தையை வாங்கினார். அது கை மாறிய உடனே வீரிட்டு அழ ஆரம்பித்தது. அதன் அழுகையை பொறுக்க முடியாமல் உஷா கொடுத்த குழந்தையை சட்டென திரும்ப வாங்கினாள். அழுகை குறைந்தது. அவள் கொஞ்சல் மொழிகளோ சமாதான மொழிகளோ குழந்தையிடம் பேசவில்லை ஆனாலும் அழுகை நின்றது.

ஏற்கனவே கோபத்தில் இருந்த சாம்பவிக்கு இதனை பார்த்ததும் பொறுக்க முடியாது உஷாவை பார்த்து அழுகையோடு கத்த துவங்கினார். “நிம்மதியா உனக்கு, நீ இந்த வீட்டுக்குள்ள வந்தாலே எங்க நிம்மதி எல்லாம் போயிடும்னு எனக்கு தெரியும். எங்க நிம்மதிய கெடுக்கறது இல்லாம இந்த குழந்தைங்க நிம்மதிய கூட நீ பாக்கி விடமாட்டியா நீ மனுஷபிறவியா.” என்றார்.

இதனை கேட்ட அருண் நந்தினியை அதட்டினான், “நந்தினி உங்க அம்மாவை பேசாம இருக்க சொல்லு.”, என்று. இதனை கேட்ட சாம்பவி, “பார்த்தியா என் மாப்பிள்ளை கூட என்ன திட்ட வச்சிட்ட.”, என்றார்.

இத்தனை நேரமாக அமைதியாக இருக்க வேண்டும் கோபப்படக்கூடாது என்று உஷா தன் மனதோடு கூறியதெல்லாம் காற்றோடு பறந்தது. “மாமா எங்க.”, என்றாள் அருணை பார்த்து. அவன் ஆபீஸ் என்க குழந்தையை சித்தி கையில் கொடுத்து முத்துவை வண்டி எடுக்க சொல்லி கிளம்பிவிட்டாள். சித்தியை கூட கூப்பிடவில்லை.

கிரி நந்தினியிடம் உஷா வந்தவுடனே போன் செய்ய சொல்லியிருந்தான். நந்தினி கிரிக்கு போன் செய்யப்போக, அருண் வேண்டாம் என்று தடுத்து விட்டான்.

உஷாவிற்க்கு கோபம் ஆத்திரம் அழுகை அத்தனையும் ஒரு சேர பொங்கியது. என்ன முயன்றும் கண்களில் கண்ணீர் நிற்கவேயில்லை. என்ன மாதிரியான கட்டாயப்படுத்தல் இது. சிறு குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அவர்களை வைத்து எமோஷனல் ப்ளாக் மெயில் செய்கிறான். இவ்வளவு விட்டு குடுத்தும் மற்றவர்கள் தன்னை குற்றம் சொல்வது போலவே நடந்து கொள்கிறான். கோபம் எல்லை மீறியது.

இறங்கி முன்னாடி போங்க.”, என்றாள் முத்துவை. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முத்து அவர்களுடைய வீட்டின் பெர்சனல் டிரைவர் என்பதால் யாரும் எதுவும் கேட்கவில்லை.

கிரியினுடைய கேபின் அருகே சென்றவுடனே அங்கே முன்னே இருந்தவர், “பெரிய சார் ரூம்ல மீட்டிங்.”, என்றார். முத்து செய்வதறியாமல் உஷாவை பார்க்க, “கூட்டிட்டு போங்க.”, என்றாள். அவள் வார்த்தைகளை உதிர்த்த விதத்தில் இருந்தே அவளுடைய கோபத்தின் அளவு புரிந்தது.

அங்கே கூட்டி போக அங்கே இருந்த செக்யூரிடி உள்ளே விடவில்லை.  அவளுடைய நலிந்த தோற்றத்தை பார்த்த செக்யூரிடிக்கு அவள் முக்கியமான ஆளாக தோன்றவில்லை. அவளுக்கு அந்த செக்யூரிடி அவளை பார்த்த பார்வையில் அலட்ச்சியம் தெரிந்தது போல் தோன்றியது. “முக்கியமான மீட்டிங் யாராயிருந்தாலும் வெயிட் பண்ண சொல்லியிருக்காங்க. பேங்க் ஆபீசியல்ஸ் கூட.”, என்றான்.

மேடம் சர்க்கு க்ளோஸ் ரீலேடிவ்.”, என்றான் முத்து.

மேடம வேன்னுனா சார் ரூம்ல வெயிட் பண்ண வைங்க.”, என்றனர்.

உஷாவை பார்த்த முத்து, “இல்லை. உள்ள போய் கிரி சார் கிட்ட மட்டும் சொல்லுங்க அவசரம்.”, என்றான்.

அவசரம்னா நீங்க போன் பண்ணுங்க. உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.”, என்றனர் மறுபடியும்.

போன்என்ற வார்த்தையை கேட்ட உஷாவிற்க்கு கோபம் எல்லை மீறியது. அவள் குரலை கேட்டவுடனே அவன் சுவிச் ஆப் செய்தது ஞாபகத்திற்கு வந்தது. முத்துவை கேட்காதீர்கள் என்பது போல் தலையசைத்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். அங்கே இருந்த டேபிள் மேல் டேபிள் வெயிட் இருந்தது. மீட்டிங் ரூமில் பாதி டோர் கண்ணாடியில் இருந்தது.

நிமிடத்தில் எடுத்து ஒரே வீசு வீசிவிட்டாள் அவள் வீசிய வேகத்திற்கு கண்ணாடி தூள் தூள் ஆனது. செக்யூரிடி அவளை பிடிக்க வர முத்து குறுக்கே பாய்ந்தான். அதற்குள் உள்ளே இருந்து கிரி ஓடிவர செக்யூரிடி அவளை பிடிக்க நெருங்க அவள் சிறிது பயமில்லாமல் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள். அந்த தோற்றம் அவர்களை சில நொடி தடுமாற்றமடைய செய்ய அதற்குள் கிரி வெளியே வந்திருந்தான்.

அவளை பார்த்து இன்னும் வேகமாக ஓடி வந்தான். செக்யூரிடி அவளை நெருங்கி இருப்பதை உணர்ந்து, “ஸ்டாப்.! ஸ்டாப்.!” என்று கத்தினான். அவளருகே வேகமாக போக அவன் நெருங்கிய வேகத்தில் அவன் கன்னத்தில் அவளுடைய கை வேகமாக இறங்கியது. வலியில் அவனையும் அறியாமல் அவன் கைகள் கன்னத்தை பிடித்தன. பக்கம் நின்றவர்கள் ஓரடி பின்னே சென்றனர். என்ன நடந்தது என்று பார்க்க வந்த விஸ்வநாதன் மற்ற ஆபீசர்ஸ் எல்லோரும் இந்த காட்சியை பார்த்தனர்

ஒரு நிமிடம் நின்று பின்பு ஒன்றும் பேசாமல் பிறகு அவளருகிலேயே அமர்ந்தான். அவனை பார்க்காமல் இப்போது விஸ்வநாதனை முறைத்து பார்த்தாள் உஷா. அவர் என்ன நினைத்தாரோ, “நம்ம போகலாம் வாங்க.”, என்று அவர்களை வேறு தளத்தில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.

செக்யூரிடி இன்னும் நிற்க, “இப்போ போனவர் உங்க பெரிய பாஸ். இவங்க உங்க சின்ன பாஸ்.” என்றான் கிரி. பிறகு அவர்களை பார்த்து, “போங்க.”, என்றான் கிரி.

உஷாவை நோக்கி, “யப்பா உனக்கு செம ஸ்ட்ரெந். நான் அநேகமா இன்னைக்கு டென்டிஸ்ட் கிட்ட போகனும்னு நினைக்கிறேன். செம வலி.”, என்றான்.

அவன் ஒன்றுமே நடக்காதது போல் பேச. இவ்வளவு நேரமாக இழுத்து வைத்திருந்தது முடியாமல் போக. உஷா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அவளுடைய கோபத்தை ஓரளவு கிரி எதிர்பார்த்திருந்தான். அதனால் தான் அடி வாங்கிய உடனே எல்லோரும் பார்த்தாலும் ஒரு வழியாக சமாளித்தான். ஆனால் இந்த அழுகை எதிர்பார்க்கவில்லை. முகத்தை மூடி கொண்டு கதறினாள். “எல்லாமே உன் இஷ்டம் தானா. என்னை பார்க்க வராததும் உன் இஷ்டம். என்னை பார்க்க வரதும் உன் இஷ்டம். என்னை வர வெக்கறதும் உன் இஷ்டம். என்னை இஷ்டப்படி சாகற நிலைமைக்கு நீ தள்ளபோறேயா.”, என கதறினாள்.

ப்ரத்யு. என்ன நீ பெரிய வார்த்தையெல்லாம் பேசற.”, என்றான் வருத்தமாக. “ஒருத்தி போய் என் குழந்தைங்க அனாதையாக இருக்கிறது பத்தாதா நீ வேற இப்படி பேசற.”, என்றான்.

நீ இருக்கும் போது அவங்களை ஏன் அனாதைன்னு சொல்லற. சொல்லாத.”, என்றாள் அவளுடைய அந்த துக்கமான மனநிலையிலும் கூட. கிரிக்கு இது நன்றாக தெரிந்து தானே அனுப்பினான். வேறு எதை வைத்தும் அவளை பணிய வைக்க முடியாது குழந்தைகளை தவிர என்று.

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா. என்னால தான் நீ இப்படி இருக்கன்ற குற்ற உணர்ச்சியே என்னை கொன்னுடும். அப்புறம் என் குழந்தைங்க அனாதைதானே.”, என்றான் குரலில் ஒரு வலி தெரிந்தது.

கேட்ட உஷா மறுபடியும் அவனை அடித்தாள் இந்த முறை பழைய ஆவேசம் இல்லை என்றாலும் கோபம் இருந்தது.

நம்ம உள்ள போய்டலாமா. நீ இப்படி என்னை அடிச்சிட்டே இருந்தா என் இமேஜ் டேமேஜ் ஆயிடும்.”, என்றான் சீரியசாக.

எப்படி இவ்வளவு கலாட்டா பண்ணிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசற. எனக்கு இன்னும் உன்னை பார்க்க ஆத்திர ஆத்திரமா வருது. அடி பின்னி எடுத்த்துடனும் போல தோணுது. என்னை நீ என்ன மெண்டல்ன்னு நினைச்சியா. இப்போ தான் உங்க அம்மா என்னை மனுஷபிறவியான்னு கேட்டாங்க. என்னை ஏன் இப்படி சித்தரவதை பண்ணறீங்க. நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன்.”, என்று அவள் கண்களில் கண்ணீரோடு கேட்க கிரிக்கு தாங்க முடியவில்லை.

அப்படியே அமர்ந்திருந்தான். “என்ன பண்ணலாம் நீ சொல்லு. நீ என்ன சொன்னாலும் செய்வேன். ஆனா ஒண்ணு நீ இங்கேயிருந்து போனா நானும் குழந்தைங்களும் காட்டாயம் போய்டுவோம். என்னோட அப்பா அம்மா இந்த அடையாளம். எல்லாம் வேண்டாம்னு போய்டுவோம். இனி உன் இஷ்டம் நான் கட்டாயப்படுத்தலை.”, என்றான்.

அவளும் பேசவில்லை. அவனும் பேசவில்லை. இருவரும் அமைதியாகவே இருந்தனர்.

ரெண்டு குழந்தைங்களை வெச்சிகிட்டு நீ என்னை எவ்வளவு ப்ளாக் மெயில் பண்ற. முடிஞ்சா உண்மையா எனக்கு ஒரு பதில் சொல்லுஉன் மனைவி இருந்தா என்ன செஞ்சு இருப்ப.”

இந்த கேள்வி கேட்கும் போது அவளிடத்தில் கோபம் ஆவேசம் எதுவும் இல்லை, மாறாக உன்னால் எதுவும் செய்திருக்க முடியாதே என்ற குற்ற சாட்டு இருந்தது.

கட்டாயம் அப்போ கூட உன்னோடது எல்லாமே உனக்கு கிடைக்கிற மாதிரி செஞ்சிருப்பேன். உனக்கு கூட யாரோட குழந்தைங்களுக்கோ ஆயா வேலை பார்க்கிற அவசியம் வந்திருக்காது.”, சொல்லும் போதே மறுபடியும் அடி வாங்கினான்.

உன்னோடது உன்னோடதுன்னா.! என்னோடது எதுன்னு உனக்கு தெரியுமா. நீ என் முன்னாடியே இருக்காத போ. எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கலை.”, என்று மறுபடியும் கத்தினாள்.

அதற்குள் இன்டர்காம் ஒலிக்க எடுத்த கிரியிடம் விஸ்வநாதன் பேசினார். “எல்லாரும் வெயிட் பண்ணறாங்க.”, என. “தோ வந்துடறேன்பா.”, என்றான்.

சரி ப்ரெஷ் ஆய்க்கோ. உனக்கு இன்னைக்கு எதுக்குமே நேரம் கிடையாது. அவ்வளவு வேலை இருக்கு.”.

நான் இவ்வளவு சொல்லறேன். மறுபடியும் நீ உன் பேச்சே பேசற.”,

ப்ளீஸ். இன்னும் நாலு என்ன பத்து அடி கூட அடிச்சிக்கோ. நான் இன்னைக்கு நினைச்சத செஞ்சே ஆகணும். எனக்கு டைம் இல்லை. வேணுன்னா உன் கால்ல விழட்டா.”, என குனிய போக காலை தூக்கி சோபா மேல் அவசரமாக வைத்தாள்.

ஐய்யோ என்ன விட்டுடேன்.”, என்று கத்தினாள்.

நான் சொல்லற மாதிரி கேளு விட்டுடறேன். அவன் குரலில் இருந்த தீவிரம் எதையும் செய்வேன்.”, என்றது.

வேறு வழியில்லாமல், “என்ன செய்யணும்.”.

இந்த கையெழுத்து போட்டு பழகு.”, என்று ஒரு சாம்பிள் கொடுத்தான்.

உஷா முழிக்க, “நீ இல்லாதப்ப உன் சார்பா அப்பா போட்டது”.

உஷா அவனையே பார்க்க, “சீக்கிரம் பழகு ப்ரத்யு. இதுவரைக்குமே நீயும் அப்பாவும் சம உரிமையாளர்கள். உன்னோட சம்மதம் இல்லாமல் கம்பனியில் எதுவும் செய்ய முடியாது. அதனால நீ .கே சொன்னதா அப்பாவே எல்லா சைனும் போட்டுயிருக்காங்க. ஆனா யாரும் உன்னை பார்த்ததில்லை. இனிமே அப்படி இருக்க கூடாது. அதனால இதை போட்டு பழகு. நான் வந்துடறேன்என்று கூறி வேகமாக வெளியே சென்றான்.

பேப்பர் எடுத்து அதை பழக ஆரம்பித்தாள். ஐந்து நிமிடத்தில் சிரமமில்லாமல் வந்தது. சிறிது நேரத்திலேயே கிரி வந்தான். அவனுடைய ரூமிற்கு கூட்டி சென்று,“கொஞ்சம் நீட் பண்ணிக்கோ………. அங்கே போகணும்”, என்றான்.

என் டிரஸ்………….”, என இழுத்தாள்.“இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணுவோம். இட்ஸ் அர்ஜென்ட. உன் சைன்காகத்தான் அவனுங்க வெயிட் பன்னாறாங்க. அவனுங்களை எல்லாம் சீக்கிரம் தொறத்திடனும். இல்லைன்னா கேள்வி மேல கேள்வியா கேப்பானுங்க வா ………….”.

முடிந்த வரைக்கும் தன்னை சரி செய்து கொண்டாள். எளிய உடை. ஒரு காட்டன் சாரீ. என்றாலும், அவளுடைய செலக்ட்சன் எப்போதும் நன்றாக இருக்கும் என்பதால் அவளுக்கு பொருந்தியது.

போகலாமா.”, என்றான் கிரி. “நல்லா இருக்கா.”, என அவள் கேட்க, “.கேநாட் பேட். கம் பாஸ்ட்.”

எனக்கு பயமாயிருக்கு.”, என்றாள்.

உனக்கா பயமாயிருக்கு. யாரும் நம்ப மாட்டாங்க. ஏன்னா நீ என்னை அடிச்ச அடி அப்படி. என கன்னத்தை பிடித்தான். “அதுவும் செக்யூரிடி வேற பார்த்துட்டான். காம்பஸ்ல இப்போதைக்கு அதுதான் ஹாட் டாபிக்கா இருக்கும். எல்லாரும் உன்னை பார்த்து இனிமே எப்படி பயப்படுவாங்க பாரேன். சின்ன பாஸ்னு சொல்லியிருக்கேன். யார்ன்னு மண்டைய ஓடச்சிப்பாங்க.”,

பேசிக்கொண்டே கான்பிரென்ஸ் ஹால் அழைத்து செல்ல அங்கே நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர்.

அவர்களிடம், “இவங்க அன்னலட்சுமி பிரத்யுஷா, எங்க ஆர்கனைசேஷன்ல எங்க அப்பாக்கு அப்புறம் இவங்க தான். எங்க அப்பாவோட தங்கை பொண்ணு. அதிகமா வெளில வரமாட்டாங்க. அதனால தான் கொஞ்சம் கோபம். அந்த ரியாக்சன் தான் நீங்க பார்த்தது.”, என்றான் மெலிதாக புன்னகைத்தவாறு.

இங்கே இருக்கிறவங்க என அவர்களையும் அறிமுகபடுத்தினான். அவர்கள் மரியாதை நிமித்தம் இரண்டொரு வார்த்தைகள் அவளோடு பேசினர். பின்னர் ஏதோ டாகுமெண்ட்ஸ் எல்லாம் கொடுக்க விஸ்வநாதன் அதில் சைன் செய்த பிறகு அவளிடம் கொடுக்க அவள் கிரியை பார்த்தாள். அவன் தலையசைப்பிற்கு பிறகே அதில் கையெழுத்து இட ஆரம்பித்தாள்.

அதை பார்த்து புன்னகைத்த அந்த பேங்க் பீப்ள் ஹெட் கிரியிடம் மெதுவான குரலில், “அடிக்க வேற செய்யறாங்க. ஆனா உங்க கிட்ட பெர்மிஷன் வேற கேட்கறாங்க. டிஃபிகல்ட் டு அண்டர்ஸ்டான்ட்”.

அவர் மெதுவாக சொன்னாலும் பக்கத்தில் இருந்த உஷாவிர்க்கு கேட்டது.அவளுக்குமே அவனை எல்லோர் முன்னாலும் அடித்தது சிறிது குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவரை பார்த்து “Don’t mistake. I was in angry. That’s a kind behavior which even I don’t like”. என்றாள்.

நோ நோ தப்பா எடுத்துக்காதீங்க.”, என்றார் அவசரமாக.

நானும் அதைத்தான் சொல்லறேன். தப்பா எடுத்துக்காதீங்க. என்றாள் அவர் மாதிரியே திருப்பி. அது எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது.

விஸ்வநாதனுமே அவளுடைய அந்த செய்கையால் ஒரு மாதிரி டென்ஷன்னில் இருந்தார். இப்போது அவள் பதில் கூறிய விதம் சூழ்நிலையை லகுவாக்கியது.

பாருங்க எங்க மாமா வருத்தபடறார்.”, என்று கிரியை பார்த்து சிரித்தாள். பார்த்த பேங்க் ஹெட், “ஷி வில் மேக் குட் பாஸ். சூழ்நிலையை பயப்படாம பதட்டமில்லாம எதிர் கொள்றாங்க.” என்றார்.

அது தான் உஷா, ரொம்ப நேரம் கோபத்தையோ வருத்ததையோ பிடித்து வைத்திருக்க முடியாது. அதனால் ஏதாவது உறுதியாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதையே உரு போட்டு கொண்டு இருப்பாள். கிரியை  வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிற மாதிரி.

அவர்கள் எல்லாரும் லஞ்சிற்கு செல்ல உஷா மறுத்து விட்டாள். விஸ்வநாதன், “நான் பார்த்துக்கறேன் நீ இரு.”, என்று கிரியிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

கிரிக்குமே நிறைய வேலை இருந்தது. உஷாவிடம் அவர்கள் லன்டன்னில் என்ன வாங்க போகிறார்கள், எப்படி வாங்க போகிறார்கள், இதில் தங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டிய விஷயங்கள். மற்றவர்களிடம் எதை சொல்லலாம், எதை சொல்லகூடாது., என்று அவளுக்கு விளக்கமளித்துவிட்டு, ஒரு சின்ன ஹின்ட் போல நோட்ஸ் எழுதிகொடுத்தான்.

ஏன் இவ்வளவு டென்ஷன்.”, என்றாள் உஷா.

இல்லை. நம்ம இப்போ தான் இதை ஓப்பனா அந்நௌன்ஸ் பண்ண போறோம். மற்றபடி எல்லா பார்மாளிடீஸ் முடிஞ்சிடுச்சு. இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட். நீயும் அப்பாவும் ரெண்டு பேருமே இதுல ரெஸ்பான்சிப்ல்னாலும் நீ புதுசு அப்படின்றதுனால உன்னையே டார்கெட் பண்ணுவாங்க. சமாளிச்சிடுவியா. ஏன்னா கன்னா பின்னான்னு கேள்வி கேட்டா எனக்கே கோபம் வரும். கொஞ்சம் பொலிடிகல் பிரஸ்ஸர் கூட வந்தது. இப்போ எல்லாம் .கே. ஆனா எப்போவுமே நமக்கும் மீடியாக்கும் கொஞ்சம் நல்ல டெர்ம்ஸ் இல்லை. அதான் உனக்கு இத்தனை ப்ரிபரேஷன். கரக்டா புரிஞ்சிக்கனும். நீ அதிகம் படிக்கலை. அது பெரிய செட் பாக்.”, என்றான்.

எதுக்கு ரிஸ்க் என்னை விட்டுடுங்கலேன்.”, என்றாள்.

ப்ரத்யு புரிஞ்சுக்கோ. இதுக்காக நான் ரொம்ப யோசிச்சு வொர்க் அவுட் பண்ணியிருக்கேன். நமக்குள்ள இருக்குற பெர்சனல் ப்ராப்லம்ஸ் வெளிய தெரிய விட்டுடாத. எனக்காக ப்ளீஸ் இன்னொரு தடவை நீ வேண்டாம். என்னை விட்டுடு. இப்படியெல்லாம் பேசாத. உனக்கு எப்படியோ தெரியலை. ஆனா உண்மையா சொல்லனும்னா என்னால முடியலை. அம் சிக். அம் ரியல்லி டையர்ட். குழந்தைங்கள எப்படி பாக்கப்போறேன்னு தெரியல. டெய்லி எனக்கு அந்த டென்ஷன். இதுல அவங்களை வெச்சு உன்னை வேற இழுத்துட்டு வந்து, எனக்கே தெரியலை நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு”, சொல்லும்போது அவன் குரல் கலங்கியதோ. நிறைய கோபம் வருத்தம் இருந்தாலும்கூட கிரி கலங்குவதை அவளால் பொறுக்க முடியவில்லை. அவனுக்காக தானே இவ்வளவும் அவள் பொறுத்து கொண்டாள். அவன் கலங்குவதா.   

ஆனாலும் அவனிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல், “சமாளிக்க ட்ரை பண்ணறேன். முடியலன்னா நீங்க .டேக் ஓவர் பண்ணிகங்க”, சித்தி அவங்களை விட்டுடே வந்துட்டேன் அவங்களை வீட்டுக்கு அனுப்பிடுங்க. ஆனா இது முடிஞ்சவுடனே என்னையும் வீட்டுக்கு அனுப்பிடனும். சரியா.”.

சரி. ஆனா நான் எப்படி சொல்றனோ நீ கேக்கணும். டெய்லி அட்லீஸ்ட் போயிட்டு வந்துடனும்.”.

உங்க அம்மா.”, என இழுத்தாள்

பாட்டி இருந்தப்போ பாட்டியா சண்டை போடுவாங்க இல்லையே. இப்போ மட்டும் ஏன் இதை பிரச்சினையாக்குறஎன்ன அவங்கள உன்னால சமாளிக்க முடியாதா நீயே பார்துக்கோயேன். ஏன்னா கட்டாயம் என்னால முடியாது. அதுவுமில்லாம நான் பேச பேச ப்ரோப்ளம் பெருசாகும் நீயே பேசினா அவங்க கொஞ்சம் அடங்குவாங்க”, என்றான் பரிதாபமாக.

உஷா ஒன்றுமே பேசவில்லை அவ்வளவுதான உன்னுடைய வீரம் என்பது போல் ஒரு லுக் விட்டாள் ஆனால் கிரி எதையுமே கண்டு கொள்ளவில்லை.

உன் டிரெஸ் என்ன பண்ண போறே.”, என்றான். “ அம் மோர் கம்ஃபர்டபிள் வித் சாரீ. வேற ஏதாவது  வேர் பண்ணா அதுல கொஞ்சம் டைவர்ட் ஆவேன் பரவாயில்லையா.”.

உனக்கு எது ஈஸி யோ அதுவே செய்”, என்றான். “ வான்ட் யூ டு பி பெர்ஃபெக்ட் இன் யுவர் லுக் அண்ட் அவுட் பிட்ஸ்.”.

வீட்டுக்கு போலாமா.”, என்றான்.

ம்”, என்றாள் தயக்கமாக,

மறுபடியும் பாக் அடிச்சிடாத, என்னால முடியாது.”, என்றான்.

வீட்டுக்கு போய் அங்கே இருந்த சித்தியை முத்துவுடன் அனுப்பிவிட்டு திரும்பும் போது கணேஷை அழைத்து வருமாறு சொல்லிவிட்டான்.

அருண் கிரியை பார்த்து என்ன என்பது போல் கேட்கஇப்பத்திக்கு .கே”, என்றான்.

எப்படியோ நினைச்சத சாதிச்சிட்ட.”, என்க, “சும்மாவா அத்தனை பேர் முன்னாடியும் அடி வாங்கியிருக்கேன்.”, என்றான்.

என்ன அடியா.”, என்றான் அதிர்ச்சியாக.

பின்ன என்ன பண்றது. நானும் அவளை கொஞ்சம் டார்ச்சர் பண்ணிட்டேன்ல, அடிச்சாலும் பரவாயில்லை சொன்னத கேட்டாளே”, என்றான் புன்னகையோடு.

அடி வாங்குனதுல உனக்கு இவ்வளவு சந்தோஷமா, அப்படியே நீ அடி வாங்குன விஷயத்தை உங்க அம்மா கிட்ட சொல்லு, அப்போவாவது பயந்துட்டு அன்னுவை  கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருக்கட்டும்.”, என்று உஷாவிற்க்காக பேசினான்.

நீங்க வேற மாமா. இது வரைக்கும் எங்க அப்பா அம்மாட்ட சொல்லாமையா இருப்பாரு. அதெல்லாம் கரக்டா சொல்லியிருப்பாரு”.

கிரி உங்க அப்பா வேற பார்த்தாரா அதை.”.

சும்மா எத்தனை தரம் சொல்ல வைப்பீங்க. விடுங்க மாமா.”, என்று இடத்தை விட்டு நகர்ந்தான்.

 உஷாவிடம் அவன் ஆறு மணிக்கு ரெடியாக இருக்குமாரு கூறியிருந்தான். அவள் குழந்தைகளை போய் பார்த்துவிட்டு அவள் முன்பு உபயோகித்த அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தாள்.

Advertisement