Advertisement

அத்தியாயம் பதினான்கு:

 “நான் ஒரு நிமிஷம் கூட எங்க அக்காவை எதுக்காகவும் தள்ளி வச்சு பார்க்க முடியாது. சாரி……………. யாருக்கு உரிமை அப்படின்றது நீங்க சொல்லற விதத்துல ஒரு வேளை சரியா கூட இருக்கலாம். ஆனா அவ பேர்ல இருக்கும் போது லீகளா அவ தானே உரிமையாளர். நீங்க அவளை இந்த மாதிரி எமோஷனளா பேசி மேனுபுலேட் பன்னரீன்களா……….”, என்றான்.

கிரி சிரித்தான். “நீ என்ன நினைக்கிற உங்க அக்காவை யாராவது ஏதாவது செய்ய வைக்க முடியுமா. அவ இஷ்டமில்லாம ஒண்ணும் நடக்காது. எங்க அப்பா கூட என்கிட்ட தான் பேசுவார். அவரே அவ கிட்ட கொஞ்சம் தள்ளி தான் நிற்பார். எங்க இருக்காளோ அங்க அவ தான் டாமினேட் பண்ணுவா. மோஸ்ட் கமாண்டிங் பெர்சனாலிட்டி. இல்லைன்னா டாகுமென்ட்ஸ் அவ கிட்ட இருந்து வாங்கியிருக்க மாட்டாரா.”

“சொல்லப்போனா எங்க அப்பா ரொம்ப நல்லவர் தான். இல்லைன்னா சொத்துக்காக என்னென்னவோ பண்ணற இந்த காலத்தில ஜஸ்ட் எங்க அப்பா அவளை ஒதுக்கி வச்சிட்டார். எனக்கு அதுக்காக தான் அவசரமா கல்யாணம் கூட பண்ணினாங்க. அவங்களுக்கு பயம் இந்த அடையாளம்  அவரைவிட்டு போயிடுமோன்னு. என்னை கூட நம்பலை. ஏன்னா ப்ரத்யு எது சொன்னாலும் நான் கேப்பேன்னு அவருக்கு தெரியும். ஆனா பேசுவாளே தவிர அவ ஹார்ம்லெஸ் அது அவருக்கு புரியலை.”

“எல்லாம் அவளை பத்தி தெரிஞ்ச எனக்கு அவ என்னை பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சிக்காம விட்டுட்டேன். இன்னும் சொல்லபோனா நான் அதை யோசிச்சது கூட இல்லை. அவ ரொம்ப ப்ரில்லியன்ட் உனக்கு தெரியுமா. அவளே இது எங்க அப்பாக்கு உரியதுன்னு பீல் பண்ணியிருப்பா அதனால தான் அமைதியா இருந்திருப்பா.”.

“அப்போ என்ன தான் பண்ண போறீங்க.”, என்றான்.

“அது ப்ரத்யு கைல தான் இருக்கு.”.

“அவ தான் எதுவும் வேண்டாம்னு சொல்றாளே. அப்படியே விட்டுடுவீங்களா.”, என்றான்.

அதை கேட்கும் போது அவன் வார்த்தையில் அவன் கண்களில் இருந்த தவிப்பு கிரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளை பற்றி நன்கு தெரிந்த சேர்ந்து வளர்ந்த தனக்கு இல்லாத அக்கறை அவனிடம் இருப்பது புரிந்தது.

என்ன அவனுக்கு பதில் சொல்வது என்று தெரியவில்லை. “கட்டாயம் அவளை விட மாட்டேன். ஆனா என்ன பண்ணபோறோம்றது அவ கைல தான் இருக்கு. அவகிட்ட என்ன பண்ணலாம்னு கேட்கலாம்னா என்கூட பேச கூட தயாராயில்லை.”.

“என்ன பண்ணட்டும் நீ சொல்லு. அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாமா.”, என்றான் வேண்டும் என்றே.

“மாப்பிள்ளை பார்த்தா இது அவளுக்கு கிடைக்காதே” என்றான் பார்வையை எதிரே இருந்த கிரி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் என்ற லோகோ வை பார்த்து.

“அவ என்ன ஷேர்ஸ்  குடுத்தாளோ அதுக்கு சமமா எங்களால சொத்து குடுக்க முடியும்.”. என்றான் கிரி.

“அதெல்லாம் வேண்டாம் எங்க அக்காவுக்கு இந்த ஐடேண்டிட்டி தான் வேணும்.”, என்றான் தீர்மானமாக. அதன் ப்ரமாண்டத்தால் ஈர்க்கப்பட்டு இருந்தான்.

“அது எப்படி முடியும்.”, என்றான் கிரி. அவனுக்கு அவன் வாயாலேயே வார்த்தையை வாங்க வேண்டி இருந்தது. ஏனென்றால் தற்போது உஷாவிடம் பேச ஆள் தேவையாய் இருந்தது. அது மட்டுமில்லாமல் கணேஷ் காரியத்தை முடிப்பான் என்றே தோன்றியது. முன் பின் தெரியாத தன்னிடமே இவ்வளவு பேசும் போது அவள் அக்காவை சும்மாவா விட்டு விடுவான்.

ஆனால் கணேஷ் அவன் விரும்பின வார்த்தையை சொல்லவேயில்லை. கணேஷிர்க்கு புரிந்தது இந்த அடையாளம் வேண்டும் என்றாள் அவள் கிரியை திருமணம் செய்வதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் அதை கேட்க கணேஷிர்க்கு சற்றும் விருப்பமில்லை. அதுவுமில்லாமல் இது மிகவும் சென்சிடிவ் இஸ்ஷு. கிரி திருமணம் ஆகாதவன் என்றாளும் பரவாயில்லை. திருமணம் ஆனவன் இரண்டு குழந்தைகள் வேறு. தற்போது மனைவி இல்லை என்றாலும் நடந்த திருமணம் இல்லை என்று ஆகிவிடாதே.

“அதுவுமில்லாமல் கிரி மாமாக்கு இல்லாதது என்கிட்ட எதுவுமே இல்லை” என்று தன் அக்கா கூறியதாக கூறியபொழுது கிரியின் முகத்தையே தான் பார்த்துகொண்டு இருந்தான். ஒரு சின்ன மாற்றம் கூட தெரியவில்லை. அப்படிபட்டவனிடம் தன் அக்காவிற்காக கேட்பதா. இவ்வளவு சொத்துக்களை கொடுத்து விட்டு எங்க அக்காவை கல்யாணம் செஞ்சுக்கொங்க என்று யாசிப்பதா. இதற்கு உஷாவிடமே மறுபடியும் பேசிப்பார்க்காலாம் என்று தோன்றியது.

எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு கிரியே சொல்லட்டும் என்ற முடிவோடு,“எனக்கு தெரிஞ்சத விட உங்களுக்கு தான் அதிகமா தெரியும் அதனால நீங்களே சொல்லுங்க…………………”, என்றான்.

கிரி மட்டும் சாதாரணமாக பேசிவிடுவானா என்ன…………?.“ எனக்குமே சரியா ஒரு முடிவுக்கு வர முடியலை. ஏன்னா என் முடிவை உங்க அக்கா ஏத்துக்குவாளா தெரியல்லையே………….”, என்றான்.

இதற்கு ஒரு பதிலுமே கணேஷ் சொல்லவில்லை, மனதிற்குள்ளேயே அவனை திட்டிக்கொண்டு இருந்தான். “ மன்னுப்பய…………. அவனுக்கில்லாதது எதுவுமே இல்லைன்னு என் அக்கா சொல்லறா………. இவன் பெருசா டையலாக் பேசறான். இவன் எப்படி அவளை பார்த்துப்பான்” என அவனை சந்தேகமாக பார்க்க தொடங்கினான்.

கிரியுமே சிறிது நேரம் அமைதியாகி விட்டான். மிகுந்த யோசனைக்கு பிறகு,“நம்ம பேசறதுல பிரயோஜனமில்லை. இப்போ ப்ரத்யுக்கு இருக்குற மனநிலைமை என்னன்னா நான் என்ன சொன்னாலும் அதை செய்ய கூடாது அப்படின்றதுதான். அதனால மொதல்ல அவளை இங்க வரவழைப்போம்”.

“ இங்க இருக்குற வொர்க்ஸ் எதுலயாவது கொஞ்சம் கான்சென்டிரேட் பண்ணட்டும் அவளோட மைன்ட் கொஞ்சம் சேன்ஞ்ஆகும். இல்லைன்னா ஃபுல் டைம் என்னை திட்றதுலயே நேரத்தை ஓட்டுவா……….”, என்றான். அதை கூறும் போது அவனுடைய கண்களிலிருந்த கனிவு கணேஷிர்க்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

தாங்க முடியாமல் கேட்டே விட்டான்.“இவ்வளவு அவங்களை பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஆனா அவங்களை ஏன் விட்டுட்டீங்க……….”, என்றான். கிரியையுமே அந்த கேள்வி பாதித்தது. சில வருடங்களுக்கு முன் பார்த்த அந்த சிறு பையனுக்கு இருக்கும் அக்கறை தனக்கு இல்லாமல் போய்விட்டதே………… என்று.

“ இவன் என்னடா இப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேட்கறான்………” என்று மனதிற்குள்ளயே நொந்து கொண்டான்.       

“ எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இன்னொரு நாள் எப்போவாவது இதுக்கு பதில் சொல்லறேன்”, என்றான் பரிதாபமாக அப்போதைக்கு தப்பிக்கும் விதமாக.   “நடந்ததை விடுவோம் நடக்கறத நல்லதா எடுத்துப்போம், இனிமே என்ன பண்ண முடியும்னு பார்க்கலாம் என்ன சொல்லற நீ………….”

“நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. என் அக்கா நல்லா இருக்கணும் முக்கியமா சந்தோஷமா இருக்கணும். அவ்வளவு தான். அதுக்காக நான் என்ன வேணுன்னாலும் செய்வேன்”, என்றான். அந்த தொனியில் சிறிதளவும் மிரட்டல் இல்லை. ஆனால் அவன் குரல் தீர்கமாக இருந்தது. எதுவும் செய்வேன் என்ற உறுதி தெரிந்தது.

 கிரிக்கு உண்மையாகவே மிகவும் அவனை பிடித்து விட்டது. இந்த மாதிரி மனிதர்கள் சொந்தங்களாக கிடைப்பது அபூர்வம்.

“உங்க அக்காவை எப்படி இங்க கூட்டிட்டு வர போற………… அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லு………….”, என்றான்.

“ நானா.!”, அவன் குரல் அதிர்ச்சியாக ஒலித்தது. “என்னால அது முடியும்னு தோணலை”, என்றான் பதட்டமாக. “காலையிலையே அவங்களுக்கு பயங்கர சந்தேகம் அவங்க முகத்யே பார்க்காம ஏதோ ஒன்ன சொல்லி சமாளிச்சிட்டு வந்தேன். இதுல நான் உங்களை பார்த்தேன்னு தெரிஞ்சது தொலைச்சிடுவாங்க. என்னால என்ன பண்ண முடியும்னா நீங்க ஏதாவது செஞ்சீங்கன்ன அந்த சமயத்துல அவங்களுக்கு புரியாம இருந்தா உங்களுக்கு சாதகமா பேச வேணா ட்ரை பண்ணலாம். அதை கூட உறுதியா சொல்லமுடியாது”.

“சரி விடு நான் பார்த்துக்கறேன். நான் சாப்பிட வெளியே போறேன் நீயும் வா.”, என்றான்.

“இல்லை நான் வரலை. நான் ஊருக்கு போகணும்”, என்றான்.

“கொஞ்ச நேரம் தானே என்ன ஆயிடப் போகுது. வா.”, என்று அழைத்து சென்றான்.

அவன் அந்த ரூமிலிருந்து வெளியே சென்றவுடனே, அங்கிருந்தவர்கள் எல்லோரும் உடனே எழுந்தனர். எல்லோரும் அவனுக்கு கொடுத்த மரியாதை முக்கியத்துவம். அவன் நடக்கும் போது பின்னோடு இருவர் செல்ல. அவன் வெளியே நின்றவுடனே கார் தயாராக நிற்க. டிரைவர் இருந்தும் அவனை வேண்டாம் என்று சொல்லி கிரி அவனே ஏற. மறுபக்கத்தில் ஒருவர் கணேஷிர்க்கு கதவை திறந்து விட்டு ஏற சொல்ல. அவன் கார் கிளம்பியவுடனே பின்னோடு இரண்டு கார் வர பிரமிப்பாக இருந்தது.

ஏதோ மாளிகைக்குள் கார் நுழைவது போல் கணேஷிர்க்கு தோன்ற அது தான் ஹோட்டலாக இருந்தது. படபடவென இருவர் வந்து கார் கதவை திறந்து விட கிரி வேகமாக இறங்கி நடக்க. கணேஷ் அவன் பின்னோடு ஏறக்குறைய ஓடினான். அப்போதுதான் அதை உணர்ந்த கிரி நடையை மெதுவாக்கினான். கணேஷ்சிற்கு எல்லாமே புதியதாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. கிரி அவனிடத்தில் என்ன பேசினான் என்றே தெரியவில்லை. ஏதோ மயக்கத்தில் இருப்பது போல் இருந்தது. அவன் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்த மாதிரி தான் அவனுடைய அக்காவும் இருக்க வேண்டும் இதெல்லாம் அவளுக்கு உரியது.

என்ன சாப்பிட்டான் எப்படி வெளியில் வந்தான் தெரியவில்லை. கிரியுமே அவன் ஏதோ சஞ்சலத்தில் இருப்பது பார்த்து அமைதியாகி விட்டான்.

சாப்பிட்டு வெளியே வந்து கணேஷ்  கிரியிடம் ஒன்றும் பேசவில்லை. அதற்குள் முத்து வந்திருந்தான். அவனிடம் கிரி, “முத்து கணேஷை வீட்டுக்கு பக்கமா இறக்கி விட்டுட்டு வந்துடுங்க.”, என்றான்.

கணேஷ் அமைதியாக நிற்க, “நான் இருக்கேன், என்னை நம்பு நான் பாத்துக்கறேன், அப்படின்னு என்னால சொல்ல முடியாது. ஏன்னா ஏற்கனவே உங்க அக்கா கிட்ட சொல்லி அதை மறந்துட்டேன். அப்படி  இந்த தடவை எதுவும் தப்பாகாம நான் பார்த்துக்கறேன். தைரியமா போ” என்றான்.

வீட்டிற்கு சென்ற பிறகும் கணேஷ் ஒரே யோசனையில் தான் இருந்தான் சொன்னபடி நடக்குமா நடக்காத என்று.

உஷாவே அவனிடம் கேட்டாள், “ஏன் ஒரு மாதிரியா இருக்க.”, என்று “ஒண்ணுமில்லையே எப்பவும் போல தானே இருக்கேன்.”, என்றான்.

ஆனால் உஷாவிற்க்கு புரிந்தது, அவன் எப்பொழுதும் போல் இல்லை இருந்தால் கேள்வி கேட்டே அவளை ஒரு வழி செய்து விடுவானே.

அடுத்த நாளே அவளே எதிர்பாராதவிதமாக கிரி வந்தான். மிகவும் காலையிலேயே வந்து விட்டான். காலையில் அப்போது தான் பால் குடித்து விட்டு பேப்பரை பார்த்து கொண்டு இருந்தாள். அவள் வீட்டை விட்டு வெளியே செல்லவது இல்லை என்பதால் கணேஷ் தினமும் பேப்பர் வாங்கி வந்து விடுவான். கால் நீட்டி உட்கார்ந்து கால் மேல் பேப்பரை வைத்து சமமில்லாத நிலையில் அதை பார்த்து கொண்டு இருந்தாள். சைடில் உள்ளது தெரியவில்லை என்பதால் உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்த வாக்கில் பார்த்து கொண்டு இருந்தாள். குழந்தைகள் சில சமயம் புத்தகத்தை நேர் செய்யாமல் சாய்ந்த வாக்கில் படிக்குமே அது மாதிரி. கணேஷ் பாத்ரூமில் இருந்தான். கலைவாணிக்கு இன்னும் பரீட்சை முடியாததால் பாத்ரூம் கதவை தட்டி கொண்டு இருந்தாள். “டேய் அண்ணா. இப்போ எதுக்கு நீ குளிக்க போன எனக்கு லேட் ஆகுது. சீக்கிரம் வாடா.”, என்று கத்தி கொண்டு இருந்தாள். வாசலில் ஏதோ நிழலாடுவது போல் இருக்க நிமிர்ந்து பார்த்த உஷா திகைத்தாள்.

வாசலில் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் ஹான்ட்சம் லுக்கில் கிரி நின்று கொண்டு இருந்தான். முன்பெல்லாம் அவன் வருவானா என்று அவள் எதிர் பார்த்திருந்த காலத்தில் யாரை பார்த்தாலும் அவனை போலவே தோன்றும் எங்கு பார்த்தாளும் அவன் நிற்பது போலவே தோன்றும் அதிலிருந்து அவள் வெளியே வந்ததே பெரிய விஷயம். மறுபடியும் அப்படி ஆகிறதோ என்று விழி விரித்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ஏன் இப்படி முழிச்சு என்னை பயபடுத்தற.”, என்றான் கிரி. முன்பினும் அதிகமாக விழி விரித்து பார்த்து, “சித்தி.!”, என்று கத்தினாள். அவள் கத்தின கத்தலில் நிஜமாகவே கிரி பயந்து போனான். “ப்ரத்யு ஆர் யு ஆல் ரைட்.”, என்றான் பதட்டமாக.

அவள் போட்ட சத்தத்தில் வீட்டில் இருந்த சித்தி, கணேஷ், கலைவாணி, என அனைவரும் ஓடி வந்தனர். கணேஷ் வெறுமனே துண்டை சுற்றி கொண்டு ஓடி வந்தான். கிரியை பார்த்து அனைவருமே திகைத்தனர். யாரும் அவனை எதிர் பார்க்கவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

கணேஷிற்க்கு இன்னும் குழப்பமாக இருந்தது. கிரியை தெரிந்தது போல் காட்டிகொள்வதா இல்லையா என்று இன்னும் சொல்லப்போனால் முழித்தான்.

“உக்காருங்க தம்பி.”, என்றார் உஷாவுடைய சித்தி அவசரமாக. அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பதா, வேண்டாமா, சாப்பிடுவானா, பதட்டமாக உணர்ந்தார்.

இவ்வளவு நாட்களாக டாகுமென்ட்ஸ் குடுத்த பிறகு தன்னை கிரி பார்க்க வராதது. மறுபடியும் அவன் தன்னை ஏமாற்றி விட்டதாகவே, உஷா நினைத்து கோபப்பட்டு கொண்டிருந்தாள். இப்பொழுதும் கோபம் இருந்தாலும், அவனை பார்த்தது ஏதோ வகையில் நிம்மதியாக இருந்தது. சும்மா வெளியே வரை நடந்து விட்டு வந்தாள். ஒரு வேளை நந்தினி போல் இவனும் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்திருப்பானோ. என்று, ஆனால் இல்லை. அதற்கும் அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் யார் வீட்டுக்கோ யாரோ வந்தது போல் இருந்தாள். கலைவாணி கிரியை தெரியாது என்பதால், “யார் இவங்க.”, என்று சன்னக் குரலில் அவளுடைய அண்ணனிடம் வினவினாள்.

“உஷாக்காவோட மாமா.”, என்றான்.

“அப்படின்னா” என்றாள் அவள்.

“லூசு நந்தினி அக்காவோட கூட பிறந்தவங்க ட்வின்ஸ்”, என்றான் கணேஷ்.

“சாரி ரொம்ப காலையிலேயே வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.”, என்றான் சம்பிரதாயமாக.

“அதெல்லாம் இல்லங்க சார்” என்ற படி ஷர்ட் மாட்ட உள்ளே சென்றான். “கலைவாணியிடம் எக்ஸாம் லேட் ஆகுது கிளம்பு என்ற அவசரபடுத்திகொண்டே.”

“ நீ குளிக்க போகும்போது தெரியலையா. இப்போ தான் தெரியுதா.”, என்ற விட்ட சண்டையை தொடர்ந்தாள் அவள்.      

கிரியும் வந்தவுடனே உஷாவுடன் பேசியதோடு சரி அவளோடு  பேசாமல் மற்றவர்களிடத்தில் பேசிக்கொண்டு இருந்தான். மறுபடியும் கணேஷை அப்பொழுது தான் பார்ப்பதுபோல் அவனுடைய பரீட்சை அவனுடைய ப்யூச்சர் பிளான் என்று பேசிக்கொண்டு இருந்தான்.

அவளுடைய சித்தி உஷாவினிடத்தில் வந்து,“சாப்பிட என்ன கொடுப்பது………….”, என்று கேட்க,“எதையாவது கொடுங்க…………”, என்றாள்.

“ நீ கேளேன் கண்ணு………….”என்றார். அவர் கேட்ட விதம் ஏதோ செய்ய “வாங்க……….” என்று கூட்டி கொண்டு போனாள்.

“ என்ன சாப்பிடறீங்க, சித்தி கேட்டாங்க……………”என்றாள். சித்தியில் அழுத்தத்தை கொடுத்து. அவனை பார்க்காமல் எங்கோ பார்த்தவாறே.

“ நீ கேட்டா வேணா சாப்பிடறேன். உன் சித்தி கேட்டா எல்லாம் சாப்பிட மாட்டேன்………….” என்றான் கிரி அவளுடைய சித்தியை பார்த்து புன்னகைத்தவாறே.

அவன் வேண்டுமென்றே அப்படி கேட்கிறான் என்று அனைவருக்கும் புரிய கோபமாக அவனை முறைத்தாள் உஷா. “சித்தி நீங்க அவங்களுக்கு குடுத்தா குடுங்க குடுக்காட்டி போங்க நான் போறேன்” என்று உள்ளே இருந்த சிறு ரூமிற்குள் போய் அமர்ந்து கொண்டாள்.

 அவன் மற்றவர்களையெல்லாம் பார்த்து புன்னகைத்தவாறே, “இப்போ காபி குடுங்க. ஆனா நான் டிஃபன் சாப்பிட்டு தான் போவேன். எனக்கு அவளோட கொஞ்சம் பேசணும். உள்ள போய் பேசட்டுங்களா.”, என்றான்.

“நீங்க போங்க தம்பி. ஆனா அவ கோபப்பட்டு கத்துனா.”, என்று சங்கடமாக இழுத்தார்.

 “அவ என்ன அடிச்சா கூட ப்ரோப்ளேம் இல்லை. நான் பார்த்துக்கறேன்”, என்றான்.

சொல்லிவிட்டு உள்ளே போக கணேஷ் பதட்டமாக உணர்ந்தான். நேற்று அவனுடன் லஞ்ச் சாப்பிட்டதால், அப்படி ஹய் ஃபய்யாக சாபிட்டவனுக்கு இங்கே தாங்கள் என்ன கொடுக்க முடியும் என்று டென்ஷனாக இருந்தது.

“அம்மா என்ன செய்யலாம்” என்க. “நீ சொல்லுடா” என அவர் இழுத்தார்.

 “போம்மா நீ ஏதாவது சொல்ற. நீ எல்லாம் என்னையே கேழு” என அவரை கடித்தான். “மொதல்ல காபிய குடு” என்றான்.

அவன் காபியை எடுத்துகொண்டு உள்ளே போகாமல், “அக்கா.!” என கத்தினான். அவன் கத்திய கத்தலுக்கு என்னவோ ஏதோவென்று உஷா பதட்டமாக வர, “இந்த காபிய உங்க மாமாக்கு குடுத்துடு.”, என்றான்.

“அதுக்காடா இந்த கத்து கத்து கத்தின. உள்ள எடுத்துட்டு வர வேண்டியது தானே” என்றாள்.

“நீ கோபத்துல அவரை அடிச்சிட்டு இருக்கியோ, உதைச்சிட்டு இருக்கியோ, எதுக்கு வம்பு அதான் நான் வரலை. சும்மா கூப்பிட்டா நீ வெளிய வர மாட்டியே அதுக்கு தான்.”, என்று அவள் அடிக்கும் முன்பாகவே இடத்தை விட்டு அகன்றான். இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த கிரிக்கு சிரிப்பே வந்தது.

வேறு வழியே இல்லாமல் அதை எடுத்துகொண்டு போய் கிரியிடம் கொடுக்க, “எல்லாரையும் உன்னை மாதிரியே மாத்தியிருக்க போல”, என்றான் கிரி.

உஷா அமைதியாகவே இருக்க அவளையே பார்த்துகொண்டு இருந்தான் அப்பொழுதான் அவளுடைய தோற்றத்தை கவனித்தான். எழுந்து சிறிது நேரம் தான் ஆகியிருந்தது போல தலையை கூட ஒதுக்கவில்லை. பாட்டி வீட்டில் இருந்த வரை பாப் வைத்தது போலவே ஹேர் ஸ்டைல் இருக்கும் ஆனால் இப்பொழுது நீளமாக அவளுக்கு பார்பதற்க்கு நன்றாக இருந்தது.

அவன் அவளை பார்ப்பதை உணர்ந்த அவள் திரும்பி, “என்ன” என்றாள்.

“என்ன. என்ன? பேச வந்திருக்கேன்னு தெரியுது. அப்புறம் நீ சும்மா இருந்தா பார்த்துட்டு தான் இருப்பேன். இங்கே இப்பத்திக்கு நீ மட்டும் தான் பார்க்கிற மாதிரி இருக்க.”, என்றான் எரிச்சலாக.

ஏனென்றால் உள்ளே வந்ததில் இருந்து அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

“என்ன பேசணும்.”, என்றாள்.

“என்ன நடக்குதுன்னு உனக்கு தெரிய வேணாமா. லண்டன் இண்டஸ்ட்ரீஸ்க்காக தானே அதை வாங்கிட்டு போனேன். அது நல்ல படியா முடிஞ்சிடுச்சு. நீ அங்கே வந்தா பரவாயில்லை. அது கேக்க தான் நான் வந்தேன்.”, என்றான்.

“நான் எதுக்கு வரணும் அது தான் எல்லாம் குடுத்துட்டேனே.”,

“நீ குடுத்த ஆனா நான் அதை யூஸ் மட்டும் தான் பண்ணிக்கிட்டேன். நேம் ட்ரான்ஸ்பர் பண்ணலை. உன்னோடது உன்னோடது தான்.!”,

“அது தான் நான் தேவையில்லைன்னு சொல்றேனே.”, என்றாள் நிதானமாக.

“ஏன் தேவையில்லை. அது உன்னோடது தான். சும்மா சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்காம சொல்லறத கேளு”, என்றான்.

“நான்தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேனே, மறுபடியும். மறுபடியும். ஏன் தொந்தரவு பண்ணறீங்க.”,

கிரிக்கு சிறிது சிறிதாக கோபம் ஏற ஆரம்பித்தது, “சும்மா கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாத. முதல்ல சொன்னதே தான் மறுபடியும் சொல்லறேன். வந்தா கூட்டிட்டு போவேன் இல்லைன்னா தூக்கிட்டு போவேன். எப்படி வசதியோ பண்ணிக்கோ”, என்றான்.

“என்ன மிரட்டுரீன்களா. வரலைன்னா என்ன பண்ணுவீங்க. தூக்கிட்டு போனா நான் அங்கேயே இருந்துடுவேனா என்ன.?”.

“இருக்காம என்ன பண்ணுவ வீணா சண்டை போடறதுனால எனர்ஜி தான் வேஸ்ட். இன்னும் நாலஞ்சு நாள்ல நந்தினி கிளம்பிடுவா அதுக்குள்ள இந்த ப்ராஜெக்ட்ட நான் மீடியாக்கு அறிவிக்கனும்னு நினைக்கிறேன். அதுக்குள்ள நீ அங்க வந்துட்டா பரவாயில்லை.”.

“நான் வந்து என்ன பண்ண போறேன். எனக்கு என்ன தெரியும்.”.

“உனக்கு என்னை தெரியும். அது போதும். பாக்கி எல்லாம் நான் பார்த்துக்கறேன் வா”.

“இல்லை நான் வர மாட்டேன். நீ என்ன சொன்னாலும் வரமாட்டேன்.”, என்று எமோஷனலாக கத்த தொடங்கினாள்.

அங்கே ஒரு கட்டில் மட்டுமே இருந்தது. அதில் அவன் உட்கார்ந்திருந்தான். அவள் அவன் அருகில் உட்காரவில்லை நின்ற வாக்கில் தான் பேசிக்கொண்டு இருந்தாள். எப்படி அவளை அருகில் உட்கார சொல்வது என்ற தயக்கதிலேயே விட்டு விட. இப்போது அவள் கத்த துவங்க, “முதல்ல நீ உட்கார்.”, என்று எழுந்து அவள் கை பிடிக்க போக, நீ போ.! நீ போ.! நான் வரமாட்டேன் நீ போ.!”, என்று பயத்தோடும் அழுகையோடும் கத்தினாள்.

அவள் கை பிடிக்க வந்தவன், அப்படியே நின்று விட்டான். நிறைய நாட்களாக தன்னையே நினைத்து எமோஷனலாக மிகவும் டிஸ்டர்ப் ஆகியிருப்பது புரிந்தது. தெரிந்தது தான். ஆனால் தன்னை பார்த்த பிறகு சிறிது குறைந்திருக்கும் என நினைத்தான். அவனுடைய அப்பா சொன்னது போல் அவளுக்கு நிறைய மன உறுதி எதற்கும் அசைந்து குடுக்காத உறுதி.

வேறு ஏதாவது தான் யோசிக்க வேண்டும் என்று தோன்றியது. அவளை சமாதானப்படுத்தும் விதமாக, “சரி வாராத ப்ளீஸ் அழாத” என்றான்.

அதை கேட்டவுடனே இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள். இந்த முறை சிறிதும் தயங்காது அவள் கை பிடித்து இழுத்து அமர வைத்தான்.

“அழுகைய நிறுத்து இல்லைன்னா இப்படியே தூக்கிட்டு போய்டுவேன்”, என்றான் மிரட்டும் தொனியில். அது சற்று வேலை செய்தது. அழுகை குறைந்தது.

அதற்குள், “அக்கா.” என்ற குரல் கேட்டது, “வரேன்.”, என்றாள் உஷா.

அவசரமாக முகத்தை, கண்களை துடைத்தாள், கண்இமைகளை துடைத்தாள். சிறிது தண்ணீர் குடித்தாள். முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டு வெளியே சென்றாள்.

வெளியே கலைவாணி நின்று கொண்டு இருந்தாள். “அக்கா நான் கிளம்பட்டுமா.”, என்றாள். “ம்” என்று தலையாடியவள், “ஆல் தி பெஸ்ட்” என்றாள். கலைவாணி தயங்கினாள், “நான் உங்க மாமா கிட்ட சொல்ல வேண்டாமா அக்கா.”, என்றாள். “சொல்லிட்டு போயேன்.” என்று சொன்னவுடனே தலையை மெதுவாக உள்ளே விட்டாள்.

கிரி சிறு அதிர்ச்சியில் இருந்தான். எத்தனை நாட்கள் ப்ராக்டீஸ் இருந்தாள் இப்படி முகத்தை நிமிடத்தில் அழுதது தெரியாமல் மாற்றுவாள். தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

கலைவாணி திரும்பி உஷாவை பார்க்க, உஷா என்ன என்பது போல் புருவத்தை தூக்க, கைகளால் உள்ளே பாருங்க என்பது போல் சைகை காட்டினாள்.

குழப்பத்தோடு உள்ளே பார்க்க, கிரி தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான். இவன் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறான் என்று புரியாதவளாக உஷா, “மாமா.”, என்று அவனை கூப்பிட்டாள். “கலைவாணி எக்ஸாம் போறா, உங்க கிட்ட சொல்லறா.”, என்றாள். அவன் வெளியே வர, “நான் போய்ட்டு வரேன்.”, என்றபடி உஷாவின் முகத்தை பார்க்க. “மாமான்னு கூப்பிடு.”, என்றாள் உஷா. “நான் போயிட்டு வரேன் மாமா.”, என்று மறுபடியும் சொல்லி விட்டு கிளம்பினாள் சந்தோஷமாக.

அவன் பார்க்க, “அது ஒண்ணுமில்லை என்னால இங்க ரீலேடிவ்ஸ் அதிகமா வரதில்லை. அதனால அவளுக்கு வீட்டுக்கு யார் வந்தாளும் ரொம்ப சந்தோஷம்”.

“உன்னால வரதில்லையா. ஏன்?”.

“அது. சித்தியோட சொந்தங்களுக்கு நான் அவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கற மாதிரி ஒரு பீல். அப்பாவோட சொந்தம் வருவாங்க ஆனா அதிகமா நான் பழக மாட்டேன் அதனால வரமாட்டாங்க. எனக்காக இவங்க எல்லாம் நிறைய விட்டு கொடுக்கறாங்க. நிறைய மாத்திக்கிட்டாங்க.”, சொல்லும்போதே அவள் முகத்தில் குரலில் பெருமை பொங்கி வழிந்தது.

சித்தியும் கணேஷும் நின்று கொண்டே இருந்தார்கள். கணேஷ் தயக்கமாக “நீங்க நிஜமாவே இங்க சாப்பிடறீங்களா சார்.”, என்றான். “அதுல ஏம்ப்பா உனக்கு அப்படி ஒரு சந்தேகம்.”, என்றான் சிரித்தவாறே. “வாசனை எல்லாம் தூள் பறக்குது இப்படி கேக்கறீயே.”, என்றான் கிரி.

ஒரு சிறு டைங் டேபிள் வீட்டில் இருந்ததால் அவனுக்கு உட்கார வசதியாயிற்று. தலைவாழை இலை போட்டு சூடாக இட்லியும் கறிகுழம்பும் பரிமாறினர். “நான் எப்படி தனியா சாப்பிடறது. யாராவது எனக்கு கம்பனி குடுங்க. ப்ரத்யு நீ குடுக்கறியா.”, என்றான் அவளை பார்த்து.

அவள் பதில் கூறும் முன்பாகவே கணேஷ், “இல்லை அக்கா நான் வெஜ் சாப்பிடமாட்டாங்க, அவங்களுக்கு பிடிக்காது.”, என்றான்.

கிரி உஷாவையே பார்த்தான். அவனுக்கு தெரியும் நான் வெஜ் அவளுக்கு ரொம்ப இஷ்டம் என்று.

அவன் கூட கிண்டல் செய்திருக்கிறான். “நீ இன்னும் பல்லியும் கரப்பான் பூச்சியும் தாண்டி சாப்பிடலை.”, என்று. அதற்காக அவள் அவனை கையில் அவனுடைய பெல்டையே வைத்துக்கொண்டு அவனை துரத்திய காட்சி இன்னும் ஞாபகத்தில் இருந்தது. அதை அவனுடைய அம்மா பார்த்துவிட்டு அவனை திட்டிய திட்டில் அவளிடம் அதற்கு பிறகு தான் சிறிது டிஸ்டன்ஸ் கீப் அப் செய்ய ஆரம்பித்தான்.

அமைதியாக உண்ண ஆரம்பித்தான் சுவையாகவே இருந்தது. சாப்பிட்டு விட்டு நன்றாக இருந்தது என்று சொல்ல கணேஷுடைய அம்மா, “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி, இவனுக்கு ஒரே சந்தேகம் சும்மா பேச்சுக்கு சாப்பிடரேன்னு சொன்னிங்கலோன்னு. அதனால தான் அப்படி கேட்டான்”, என்றார்.

“இந்த கேள்வியே அவசியமில்லாதது. எங்க பாஸ்ஸே இங்க தான் இருக்காங்க, அப்புறம் நான் என்ன ஸ்பெஷல்.”, என்றான் உஷாவையே பார்த்தவாறு.

இதுக்கெல்லாம் நான் அசைய மாட்டேன் என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

இப்போது கிரி உஷாவுடைய சித்தியிடம் பேச ஆரம்பித்தான்.

“இன்னும் எவ்வளவு நாள் மா இருக்கு உங்க பொண்ணோட பரீட்சை முடிய.”.

எதற்கு கேட்கிறான் என்று புரியாமலயே, “இன்னும் ஒரு இருபது நாள் இருக்கும் தம்பி. இன்னைக்கு தான் முதல் பரீட்சை.”

“நீங்க இதை தப்பா எடுத்துக்க கூடாது.”, என்று பீடிகையோடு ஆரம்பித்தான். 

அவர் குழப்பமாக பார்க்க. “நீங்க இனிமேலும் இங்கே இருந்தா சரி வாராது. நீங்க கோயம்புத்தூர் வந்துடுங்கலேன்.”, என்றான்.

அவர் ஏதோ பேச போக, “இருங்க நான் முழுசா சொல்லிற்றேன். ப்ரத்யு அங்க இருக்கறது ரொம்ப அவசியம்”.

“அவ ஆபீஸ் விஷயம் எதுவும் எனக்கு தேவைல்லைன்னு சொல்லறா. எனக்கு அப்படி பிளான் கிடையாது. இப்போதைக்கு எதுவும் மாத்த முடியாது. மாத்தினா சரி வாராது. அவளோட சைன் ஏதாவது தேவையா இருக்கலாம், இல்லை ஏதாவது அவசியம் இருக்கலாம். நீங்க அப்படியே அங்க ஷிப்ட் ஆயிட்டீங்கன்னா, எனக்கு ஈஸியா இருக்கும். ஏன்னா உங்களையெல்லாம் விட்டுட்டு அவளுக்கு மட்டும் அவ ஏதாவது யோசிப்பான்னு தோணலை. அதுவுமில்லாமல் என்னோட ஃப்யுசர் பிளான்ஸ் சிலது இவளை பேஸ் பண்ணி வெளியே தெரிய வரும்போது, அவளோட பாமிலி இங்க இந்த மாதிரி இருந்தா சரி வராது. என்கிட்ட இருந்து எப்படி பணம் வாங்கறதுன்னு நினைக்காதீங்க, என்னோடது இதுல எதுவுமே இல்லை. எங்கப்பாவோடதும் இவளோடதும் தான் இருக்கு. சொல்லபோனா இவ தான் எனக்கே குடுக்காறா. அதனால எதை பத்தியும் யோசிக்காம நீங்க அங்க வந்துடீங்கன்னா பரவாயில்லை. ஸ்கூல் மாத்திக்கலாம். ஒரு ப்ரோப்ளமும் இல்லை. என்ன தேவையோ செஞ்சிக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க”.

எப்போதும் ஏதாவது பேசும் ப்ரத்யு அமைதியாகவே இருந்தாள்.

சித்தி, “நான் எங்க அப்பா வீட்ல கூப்பிட்டு கூட போகலை தம்பி இப்போ எப்படி வர்றது.”, என்றார் தயக்கமாக. 

“இப்போ நீங்க யார் வீட்டுக்கும் போகலைங்க. அங்க  தனியா ஒரு வீடு பார்த்து  உங்க வீட்டுக்கு தான் போறீங்க.”.

இவள் ஏன் அமைதியாக இருக்கிறாள் என்பது போல் சித்தி உஷாவை பார்க்க.

உஷா கிரியை நோக்கி, “நான் எத்தனை தடவை சொல்லறது. எனக்கு எதுவும் வேண்டாம். நான் உங்ககிட்ட கொடுத்தது உங்களுதாவே இருக்கட்டும்னு எத்தனை தடவை சொல்லறது. ஏன் இப்படி எதை எதையோ பேசி குழப்பிட்டு இருக்கீங்க.”, என்றாள் ஒரு அலட்ச்சியத்தோடு எரிச்சலாக. அந்த பதில்.

கிரியின் கோபம் சட்டென்று பொங்கி, அளவு மீறியது. சட்டென்று அவன் அமர்ந்திருந்த சேரை தள்ளிக்கொண்டு வேகமாக எழுந்தான். அவன் எழுந்த வேகத்திற்கு எல்லோரும் பயந்தே போயினர்.  “ஏய் சும்மா என் எரிச்சல கிளப்பாத. நடந்தத விட்டுடு. எதுக்கெடுத்தாலும் எனக்கு எதுவும் வேணாம். நீயே வெச்சிக்கோ. நீயோ வெச்சிக்கோன்னா. நீ என்ன எனக்கு பிச்சை போடுறியா. அது எல்லாம் உன்னோடது உன்னோடது மட்டும் தான்.”.

“இப்போதைக்கு எதுவுமே பண்ண முடியாது. இந்த பிரச்சினை வெளில தெரிஞ்சா ஷேர்ஸ் வேல்யு குறையும். நம்ம நம்பி பணம் போட்டவாங்கள  நிறைய பேரை பாதிக்கும். இவ்வளவு நாளா இல்லாம இப்போ ஏன் இப்படின்னு நீ கேட்டின்னா. இனிமே அப்படிதான். ஒழுங்கா நான் சொல்லற மாதிரி செய். இல்லைன்னா நா என்ன செய்வேன்னு தெரியாது.”. என்றான் மிரட்டலாக.

முதலில் அவனை பார்த்து பயந்த உஷா பிறகு சிறிது சுதாரித்து கொண்டாள். “இந்த மிரட்டல் கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் வர மாட்டேன்னா வர மாட்டேன். உங்களால முடிஞ்சத செஞ்சுகோங்க“.

“இவ்வளவு சொல்லியும் நீ கேட்க மாட்டியா. நடந்தது தப்பு தான். அத விட்டுடு சொன்னா கேளு”, என்றான்.

அவள் அமைதியாகவே இருக்க, அவளை பார்த்து பேசாமல். “நான் வரேன்மா, வரேன் கணேஷ். அவ கண்டிப்பா அங்க வரணும். என்ன ஆனாலும் சரி நாளைக்கு ஈவினிங் ஒரு பிரஸ் மீட் இருக்கு. நாளைக்கு காலையில அவ அங்க வந்தா தான் கொஞ்சம் டீடைல்ஸ் எல்லாம் படிக்க தெரிஞ்சிக்க முடியும். பார்த்துக்கோங்க.”, என்றபடி கோபமாக கிளம்பி விட்டான்.

உஷாவிற்க்கு மறுபடியும் அழுகை ஆத்திரம் இரண்டும் பொங்கியது. டேபிள் மேல் இருந்த தண்ணீர் டம்ளரை சுவரில் வீசி எறிந்துவிட்டு ரூமிற்குள் போய்விட்டாள்.

கணேஷிர்க்கும் அவனுடைய அம்மாவிற்கும் ஒன்றும் புரியவில்லை. அவர் கணேஷை பார்க்க கணேஷ் அவன் அம்மாவை பார்த்தான்.

மதியம் ஆனது சாயந்திரம் ஆனது உஷா ஒன்றுமே பேசவில்லை. அவளிடம் கேட்பதற்கும் பயமாக இருந்தது.

அவளுடைய சித்தி ஏதோ கேட்க விழைந்தபோது, “ஏன் சித்தி நீங்களும் என்னை வீட்டை விட்டு அனுப்பப் போறீங்களா.”, என்றாள் அழுகையை அடக்கியபடி, சித்தி வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி விட்ட மாதிரி பிறகு வாயையே திறக்கவில்லை கணேஷும் திறக்கவில்லை.

மறு நாள் காலை விடிந்ததில் இருந்தே பயங்கரமான ஒரு டென்ஷனில் இருந்தாள் உஷா. பதட்டமாக உணர்ந்தாள். ஏதாவது நடந்து விட்டாள், என்ன செய்வது. இந்த நாள் உடனே முடிந்து விடாதா என்று மணியை பார்க்க. அது காலை எட்டு முப்பது என்றது. அவளிடம் கலைவாணி சொல்லிக்கொண்டு பள்ளிக்கு சென்றாள்.

அமைதியாக இருக்க வேண்டி கடவுள் படத்தின் முன் போய் அமர்ந்து கொண்டு “ஸ்ரீ ராமஜெயம்” எழுத ஆரம்பித்தாள். இது பாட்டி அவளுக்கு பழகி கொடுத்த பழக்கம். கடவுள் பக்தி சிறிது அதிகம் உஷாவிற்க்கு கோயிலுக்கு அதிகம் போகா விட்டாலும், கடவுள் அதிக நேரம் கும்பிடா விட்டாலும், அவளுக்கு கடவுள் பக்தி அதிகம். அதெல்லாம் தான் அவளுடைய வேதனைகளை சிறிது குறைத்தது.

இன்றும் அதையே செய்தாள் கை “ஸ்ரீ ராமஜெயம்” எழுத வாய் ரகுபதி ராகவ ராஜாராம் என்று காந்திக்கு இஷ்டமான பாடலை பாட ஆரம்பித்தது.

கேட்பதற்கு இனிமை என்பதை விட பக்தி பாடல்களை உஷா பாடும் போது கேட்பவர் உள்ளத்தை கரைத்து விடும். முறையாக சிறு வயதில் இருந்தே கற்று கொண்டவள். ஆனால் இப்பொழுது அதிகமாக மன அழுத்தத்தை குறைக்க கூட பாடுவதில்லை. வாயை கட்டி வயிற்றை கட்டி என்பார்களே அது போல் அவளுக்கு இஷ்டமான எதையுமே செய்வதில்லை.  

அவள் ராம ராம ராம ராம ராம ராம ராம ராம் என அதை முடிக்கும் தருவாயில் வாசலில் காலிங் பெல் அடித்தது. ஆனாலும் அவள் பாடலை நிறுத்தாமல் ராம சீதா ராம் என்று முடித்த பிறகே திரும்ப பார்த்தாள். முத்து கிரியின் வீட்டு டிரைவர் நின்று கொண்டு இருந்தார். பயம் பதட்டம் இருந்தது.

அதை விட கணேஷும் அவனது அம்மாவும் பதட்டமாக நின்று கொண்டு இருந்தனர். இருவர் முகத்திலும் பயம் இருந்தது.

ஏதோ சரியில்லை என்று உணர்ந்தாள். முத்துவை பார்க்க, “உங்ககிட்ட விட்டுட்டு வர சொன்னாங்க. நீங்க வந்தா கூட கூட்டிட்டு வர்றதாம். இல்லைன்னா உங்க கிட்டயே இருக்கடும்னு சொன்னாங்க”.

“எதை. யார் சொன்னாங்க. யார் சொன்னாங்க.”, என்றாள் குழப்பமாக.

சொல்ல வாயே வரவில்லை. “குழந்தைங்களை.”, என்றார் முத்து. என்ன உளறல் என்று அவளே சொல்லிகொண்டாள் தலையை பிடித்து கொண்டாள். கால்கள் பலமில்லாது தொய்ந்து கீழே விழுந்து விடுவாய் என அவளுக்கு தெரிவித்தது.

பக்கத்தில் இருந்த டேபிள் மேல் அப்படியே சாய்ந்து கொண்டு, “என்ன சொல்லுங்க.”, என்றாள். வெளியே திரும்பி முத்து தலை அசைக்க குழந்தைகளை அவர்களுடைய கேர் டேக்கர் இருவர் உள்ளே கொண்டு வந்தனர்.

குழந்தைகள் இருவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். ஒன்றுமே பேசாமல் அவர்களே உள்ளே ரூமிற்குள் சென்று கட்டில் மேல் இருவரையும் படுக்க வைத்து சைடில் கீழே விழாமல் சப்போர்ட் குடுத்து முத்துவிடம் ஒரு சிறு தலையசைப்போடு விடைபெற்று சென்றே. விட்டனர்.

இரண்டே நிமிடங்கள், பார்த்த உஷாவிற்கு மயக்கமே வந்தது. அப்படியே அமர்ந்து விட்டாள். ஏதாவது கிரி செய்வான் என்று தெரியும். ஆனால் இதை அவள் எதிர் பார்க்கவில்லை அப்படியே அமர்ந்து விட்டாள். கோபம் அழுகை ஆத்திரம் என்று அனைத்தும் ஒரு சேர பொங்க ஆரம்பித்தது.

கணேஷும் அவனது அம்மாவும் செய்வது அறியாது குழந்தைகள் அருகில் போய் நின்று கொண்டனர்.

“வீட்ல அத்தையும் மாமாவும் எதுவும் சொல்லலையா. ஏன் நந்தினிக்கா அருண் அண்ணா கூட ஒண்ணுமே சொல்லலையா.”

“சொன்னாங்க. என் குழந்தைங்க என் இஷ்டம் யாரும் தலையிடகூடாதுன்னு வீட்ல ஒரே சத்தம். உங்க அத்தையம்மா காலையில இருந்து அழுது அழுது மயங்கியே விழுந்துட்டாங்க.”, என்றான்.

நந்தினிக்கு போன் செய்தாள் எடுக்கவே இல்லை. அருணும் அதே நிலைமையே. செய்வது அறியாது திகைத்தாள். உங்க போன் குடுங்க என்று முத்துவினுடைய போனில் இருந்து கிரிக்கு செய்தாள். அவன் எடுக்க இவள் பேச ஆரம்பிக்கும் போதே அவளுடைய குரல் கேட்ட உடனே கட் ஆன போன் பிறகு ஸ்விட்ச் ஆப் என்றது. அளவில்லாத ஆத்திரம் பொங்க ஆரம்பித்தது. இரண்டு மாத சிறு குழந்தைகள் எழுந்து அழ ஆரம்பித்து விட்டாள் என்ன செய்வது. ஏற்கனவே பார்த்துகொண்டு இருக்கிறாள் என்றாளும்.

இது கோபப்படுவதற்கு ஏற்ற சமயமில்லை என அவளுக்கு அவளே சொல்லி ஆசுவாசபடுத்தினாள். பொறுமையாக, “வண்டி எடுங்க, வீட்டுக்கு போங்க, நான் குழந்தைங்களை விட்டுட்டு வரேன்.”, என்றாள்.

இருவரையும் தூக்கி போவது சிரமம் என்பதால் சித்தியை மட்டும் கூப்பிட்டு கொண்டாள். அழக்கூடாது பொறுமை என தனக்குள்ளேயே சொல்லிகொண்டாள்.

குழந்தைகள் நல்ல தூக்கத்தில் இருந்ததார்கள், இத்தனைக்கும் அவர்கள் எழவில்லை. அவர்களை தூக்கிகொண்டு கோவை சென்றனர்.       

Advertisement