Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றி ஒன்பது :

ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே!

வீட்டின் உள்ளேயே ஒரு புது உலகம் காட்டிக் கொண்டிருந்தான் வர்ஷினிக்கு ஈஸ்வர்.

“வர்ஷ்!.. “ம்ம்”.. “நீ என்னை லவ் பண்ணறியா?” என்றவனின் குரலில் விடு பட விரும்பாத மயக்கம்.  

“இது ஓபன் சீக்ரெட், ஆனா நான் இதுக்கு பதில் சொல்ல மாட்டேன்!” என்றாள் கண் திறக்காமலேயே.  

“அப்போ என்னை நீ இன்னும் நம்பலையா?”

பட்டென்று கண்களை திறந்தவள், “எதற்கு இந்த கேள்வி” என்பது போலப் பார்த்தாள்.

“அப்போ அந்த வர்ஷா, உன்னை ஹர்ட் பண்ணினதை என்கிட்டே ஏன் சொல்லலை?” என்றவனின் குரலில் அப்படி ஒரு ஆதங்கம்.  

“உங்களுக்கு தெரியுமா?” என கண்கள் கேள்வி கேட்க,

“தெரியும் வர்ஷ், தெரியும்! அது நடந்து ஒன்னு ரெண்டு நாள்ல! ஆனா நீயா சொல்வன்னு எதிர்பார்த்தேன், நீ சொல்லவேயில்லை! நானா பலமுறை கேட்டேன், அப்போவும் சொல்லலை, ஏன் சொல்லலை? நீ என்னை நம்பலையா?” என,

“அது ரொம்ப அசிங்கம், எப்படி சொல்வேன்” என்றாள் கம்மிய குரலில், ஆதூரமாக அணைத்துக் கொண்டான் சில நேர மௌனம்..

“அவ எப்படி உங்க கிட்ட சொன்னா? அப்போ எல்லோர்கிட்டயும் சொல்லுவாளா?” என்றவளின் குரலில் வலி.  

“இது உன்னை அவ காயப்படுத்த சொன்னது, வேணும்னே வர்ஷ்! எனக்கு தெரிஞ்ச உடனே சே ன்னு ஆகிடுச்சு. அந்த கண் அவ எப்படி சொல்லலாம்னு அவளை கொன்னு புதைக்கும் அளவுக்கு ஆத்திரம்!  எனக்கு தெரியும்னு உன்கிட்ட காமிக்க பயம், கேட்க பயம்! நான் கேட்கறது கூட உன்னை காயப் படுத்திடுமோன்னு ரொம்ப பயந்தேன்!”

“அவ சொன்னது குப்பை வர்ஷ்! நமக்கு கிடைக்காத ஒன்னு மத்தவங்களுக்கு கிடைக்கும் போது வெளிப்படற குரூர குணம்!”

“உன் கண் பூஜைக்கு உரியது! அதை போய் இழுத்தது அவளை சாக்கடைன்னு காட்டுது! அதை அவகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்!”  

“நீ என்னோட ப்ளு ஐட் ஏஞ்சல் தான் வர்ஷ்” என,

“சொந்தமா சொல்லணும், அடுத்தவங்கள காபி பண்ணக் கூடாது” என்றாள், அவள் சொன்ன விதமே இலகுவாகி விட்டாள் எனப் புரிந்து!  

“நீ என்னோட ப்ளு ஐட் ரத்தக் காட்டேரி வர்ஷ்” என்றவன், தன் கழுத்துப் பகுதியைக் காட்டி, “டிராகுலா இங்க தான் ரத்தம் குடிக்கும்” என்றான்.

அவனின் கழுத்தினில் செல்லமாகக் கடித்தவள்.. “ம்ம், அப்புறம்!” என,   

திடீரென்று சீரியஸ் ஆனவன் “நீ மனசுல எதையும் வெச்சு குழப்பிக்கலையே” என்றான் கவலையாக.

“இல்லை! இல்லை! இல்லவே இல்லை! விடுங்க, அதான் வந்துட்டேன் இல்லை!” என்றவள், “ஹ, ஹ” என வாய் விட்டு சிரித்தாள்.  

“எதுக்கு சிரிக்கற?” என ஈஸ்வர் வியக்க,

“நேத்து ஒரு கவுண்டமணி ஜோக் பார்த்தேன். அதுல வர்ற டைலாக் நமக்கு ரொம்ப பொருந்தும்!” என இன்னும் சிரிக்க,  

“கவுண்டமணி ஜோக்கா.. என்ன அது?” என,

ஈஸ்வரின் கழுத்தைக் கட்டி தன்னருகே இழுத்து “நான் யார்ன்னு உனக்கு தெரியும்! நீ யார்ன்னு எனக்கு தெரியும்! நாம யார்ன்னு ஊருக்கே தெரியும்” என பாவனையாக சொன்னாள்.

“அடப் பாவி! நம்மளை நம்மளே இவ்வளவு டேமேஜ் பண்ணுவோமா?” என சொல்லிக் கொண்டே சிரித்தவன்,

“அவ கேள்விக்கு நீ அடிச்ச, ஓகே! ஆனா இன்னொரு பதிலும் நீ குடுத்திருக்கணும்!” என,

“என்ன பதில்?” என்ற கேட்ட விதத்திலேயே அனுமானித்து விட்டாள் என்று புரிய,

“நீ சொல்லு” என்றான் விஷமமாக.

“சொல்லியே ஆகணுமா?”

“ப்ளீஸ், சொல்லிடு” என,

“என் லைஃப்ல ஈஸ்வர் இருக்கும் போது, உன்னோட இந்த ஸ்டேட்மென்ட் தப்பு!” என நிறுத்தி, “ஓகே வா, சொல்லிட்டேன்!” என்றாள் மையலோடு.

அவ்வளவு இறுக்கமாய் வர்ஷினியை அணைத்துக் கொண்டான். “தேங்க்ஸ் வர்ஷ், தேங்க்ஸ்!” என,

“ஆனா இதை விடவும் ஒரு பெஸ்ட் ஆன்சர் இருக்கு, அதை சொல்லட்டுமா?” என மிகவும் ரகசிய குரலில் விஷமத்தை தடவிக் கேட்க,

ஈஸ்வருமே ஒரு வாறாக அனுமானித்து “வேண்டாம், வேண்டாம்!” என்றான் அவசரமாக.

“இல்லை, சொல்லுவேன்!” என பிடிவாதம் பிடிக்க,

“வேண்டாம்” என்று ஈஸ்வர் மறுக்க மறுக்க,

“ஒரு தடவை நீ ஈஸ்வர் கூட இருந்து பார், அப்புறம் நீ  என்னை பார்த்து இதை சொல்வியான்னு நான் கேட்பேன்”  என்றாள் கிசுகிசுப்பாக கண்ணடித்து.  

“சீ, சீ, என்ன பேசற?” என்று ஈஸ்வர் அசூசையில் முகம் சுளிக்க,

“வேற எப்படி அவளுக்கு பதில் கொடுக்க முடியும்” என பெரும் குரலில் சிரித்தாள்.   

“விளையாட்டுக்கு கூட இப்படி பேசாதே” என கண்டித்துக் கொண்டே, “வெளில வந்துட்டியா அதுல இருந்து” என்றான்.

“வந்துட்டேன்” என்றாள் புன்னகையுடன்.

“முதல்ல அவ பேசினப்போ, அப்படி ஒரு ஆத்திரம், கோபம், அவளைக் கொல்லணும்னு வெறி! அப்புறம் அவளோட இன்டென்ஷன் என்னை ஹர்ட் பண்ணனும்னு புரிஞ்சது. போடி உனக்கு தோன்றதை எல்லாம் அடுத்தவங்களைப் பார்த்து சொல்லாதே, நீதான் அப்படின்னு சொல்லிட்டு வந்திருப்பேன்”

“ஆனா ஒரு பீரியட்ல நான் உங்களை உடலளவுல ரொம்பத் தேடினேன் இல்லையா, அது சில நொடி என் ஞாபகத்துல வந்து, எனக்கு அந்த நேரம் ரொம்ப கில்டியா போச்சு! அப்புறம் வந்துச்சு பாருங்க ஒரு கோபம், சொல்லுடி பார்க்கலாம்னு சொல்லி சொல்லி அடிச்சேன்!” என சிரித்துக் கொண்டே சொல்லிய போதும்,  

“அதனால தான் எனக்கு உங்ககிட்ட அதை சொல்ல முடியலை” என்று நிறுத்தினாள்.

“சாரி பேபி” எனச் சொல்லி, அவளின் பாதங்களில் முத்தமிட்டான்.

“அச்சோ, என்ன பண்ணறீங்க” என கூசி கால்களை இழுத்துக் கொண்டவள், எழுந்தும் நின்று கொள்ள,  

“கால்ல விழுந்து, சாரி கேட்கறேன்!”  

அவள் முறைத்துப் பார்க்க..

“இல்லையில்லை காலை பிடிச்சு சாரி கேட்கறேன்!” என,

அப்போதும் முறைக்க..

“இல்லை, இல்லை, கால்ல முத்தம் கொடுத்து சாரி கேட்கறேன்!” என்றவனைப் பார்த்து வாய் விட்டு வர்ஷினி சிரித்தாள்.

“இவ்வளவு ரொமாண்டிக்கா யாராவது சாரி கேட்க முடியுமா?” என்றான் கெத்தாக ஈஸ்வர்.

“அதெல்லாம் நமக்கு எப்படி தெரியும்? நமக்குள்ள நடக்கறது மட்டும் தானே தெரியும்!” என்று இருபுருவம் உயர்த்தி பாவனையாக வர்ஷினி கேட்க,  

இப்போது ஈஸ்வர் சத்தம் போட்டு சிரித்து, “ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம்! உங்கள் மனைவியை நீங்கள் எந்த இடத்தில் முத்தம் கொடுத்து மன்னிப்பு கேட்பீர்கள் அப்படின்னு” என,

“அய்ய” என தலையில் செல்லமாய் வர்ஷினி அடித்து கொள்ளப் போக, அவளின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவளை இன்னும் நெருங்கி நின்று, “உண்மையை சொல்லு வர்ஷ்! நீ என்கூட சந்தோஷமா இருக்கியா? உனக்கு போக இடமில்லை, உனக்கு வேற யாரையும் பிடிக்கலைன்னு என்னோட ஒரு வாழ்க்கை வாழ்ந்தா, அதை விட எனக்கு பெரிய தண்டனை கிடையாது! நீ பல முறை என்கிட்டே வந்ததுக்கு அதுதான் காரணமா சொல்லியிருக்க!” என்றான் அளவிட முடியாத வருத்ததோடு!   

“ம்ம்ம்” என முனக.. “பதில் சொல்லு” என்றான்.

“இவ்வளவு பக்கத்துல நின்னு கேட்டா, என்ன பதில் சொல்வேன்! தள்ளி நில்லுங்க முதல்ல!”  

“எனக்கு இப்படி தான் பதில் வேணும்!”

“இப்படி நின்னா, என் பிரைன் செல்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் பண்ணும்”

“எதுக்கு?”

“இவ்வளவு பக்கத்துல நிக்கறான். அப்புறம் ஏன் உன்னை ஹக் பண்ணலை, கிஸ் பண்ணலைன்னு. கண்ட்ரோல் பண்ணிட்டு நிக்கற அளவுக்கு நீ கேவலமா இருக்கியா? உன்னால அவனை டிஸ்டர்ப் பண்ண முடியலையா? உன்னோட நீல கண் மயக்கம் தெளிஞ்சிடுச்சான்னு” என காதலாய் ஒரு பார்வை பார்க்க..

“கொல்றடி என்னை, ரத்தக் காட்டேரி டி நீ” என்றவனுக்கு அதற்கு மேல பேசும் பொறுமையே இல்லை! அவள் அவனை எந்த அளவிற்கு டிஸ்டர்ப் செய்கிறாள் என செயல் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தான்.  

காதுகளில் அவளின் வார்த்தைகள் ஒலிக்க ஆரம்பித்தது, “முதல்ல பார்த்தவுடனே பிடிச்சது, அப்புறம் நீங்க அலட்சியம் பண்ணினப்போ பிடிக்கலை! அன்னைக்கே ரொம்ப கேவலமா திட்டினேன். அப்புறம் நீங்க முரளிண்ணா தேடி வீட்டுக்கு வந்தப்போ, உங்க கவலையான முகத்தை பார்த்தப்போ, உங்க கவலையை துடைக்கணும், உங்களுக்காக என்ன வேணா செய்யலாம்னு ஒரு உந்துதல்!”

“அப்புறம் அப்பா உடம்பு சரியில்லாம இருந்தப்போ உங்களை பார்ப்பேன். அப்புறம் ரஞ்சனி அண்ணி கல்யாணம். இந்த பீரியட்ல உங்களையே பார்த்து இருப்பேன்”     

“அப்புறம் தான் அந்த ட்ராஜிடி” என நிறுத்தினாள்.

அவன் தவறாக நடந்ததை சொல்கிறாள் எனப் புரிந்தது. “அப்போ திரும்பவும் உங்களை பிடிக்காமப் போச்சு. கொஞ்சம் என்னையுமே, ஏன் இப்படி நடந்தீங்க, அப்போ என்கிட்டே தப்பான்னு, என்னோட குழப்பங்கள் எல்லாம் ஆரம்பிச்சது அப்போதான். ஆனா அதை யார் கிட்டயும் சொல்லலை. ரெண்டு காரணம், ஒன்னு நீ பெரிய ஹீரோ இமேஜ் டெவலப் பண்ணி இருந்த, எனக்கு அதை உடைக்க மனசு வரலை. இன்னொன்னு நீ இப்படி நடந்ததை நம்புவாங்களா, இல்லை அதை எனக்கே திருப்பிடுவாங்களான்னு”    

“அப்புறம் நீங்க என்கிட்டே இன்னொருத்தனை கல்யாணம் பண்ணினாலும், உன்னை நான் விடமாட்டேன் சொன்னீங்க. அப்போ ரொம்ப பயம் வந்துச்சு!”

“அந்த பீரியட்ல ரொம்ப ஸ்ட்ரெஸ் இருக்கும் போது, மாத்திரை பழகினேன். வெளில எல்லாம் எடுத்தது இல்லை. போட்டுக்குவேன் தூங்கிடுவேன். யாருக்குமே தெரியாது. எப்போவாவது தான். உங்க செய்கை வார்த்தைகள் எல்லாம் ஞாபகம் வரும்போது!”  

“ஆனா அந்த ஒரு வருஷமும் எப்போ நீங்க வந்து என் முன்ன குதிப்பீங்களோன்ற எண்ணம் மட்டும் இருந்திட்டே இருக்கும். சோ, ஒரு வகையில உங்களை நினைச்சிகிட்டே இருந்தேன்!” 

“திரும்ப ஒரு வருஷம் கழிச்சு நீங்க வந்தப்போ, என் கண்ல தெரிஞ்ச வித்தியாசம் பார்த்தீங்க. ஆனா அப்போ கூட இப்படின்னு நீங்க கெஸ் பண்ணலை” 

“திரும்ப நீங்க கேட்க, அப்பா பேச, ரஞ்சனி அண்ணி பேச, அப்போவும் உங்களை கல்யாணம் பண்ற அளவு எல்லாம் டிசைட் பண்ணலை. பட், உங்களை பத்தின ஒரு தாட் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்!”

“அப்புறம் அப்பா கன்வின்ஸ் பண்ணி, கல்யாணம் பண்ணிகிட்டேன். அப்போ என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஒரு வேண்டுதல் எனக்குள்ள இருந்தது. உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும் நினைச்சேன். நீங்க சொன்னது எல்லாம் செஞ்சேன். ஒரு புது அனுபவம் எனக்குள்ள உங்களால! ஒரு பீரியட்ல நீங்க அப்படியே  தள்ளி நிற்கவும். என்னால முடியலை, எனக்கு நீங்க வேணும் வேணும் போல இருக்க, திரும்ப மாத்திரை எடுத்தேன்!”

“ரொம்ப ரொம்ப கஷ்டமான நாட்கள் அது. என் மனசோட தேடலா, உடலோட தேடலா, இனம் காண முடியலை. அதனால் தான் அந்த வர்ஷா பேசின உடனே எனக்கு அப்படியே ஒரு பழைய ஞாபகம். அதனால் தான் என்னால அவ பேசினதை உங்க கிட்ட சொல்ல முடியலை” என்று சொல்லும் போது குரல் அழுகையில் உடைந்தது.    

“ம்ம், எங்கே விட்டேன்? போதை மாத்திரை!”     

“ஆனா அதனால கூட உங்களோட இடத்தை நிரப்ப முடியலை. ஏன்? ஏன் நீங்க ஏன் என்னை தேடலை? நான் அழகா இல்லையா? குண்டா இருக்கேனா? இன்னும் நிறைய நிறைய எனக்குள்ள யோசனை?”

“நிறைய வேற பிரச்சனைகள் வந்த போதும், பணம் பின்னாடி நீங்க ஓட ஆரம்பிச்ச பிறகும், இதுக்கு எனக்கும் என்ன சம்மந்தம் ஏன் என் பக்கத்துல வரலை, இதுவே தான் மனசுக்குள்ள ஓடும். ஒரு மாதிரி என்னை நீங்க நிராகரிச்சிட்ட ஃபீல் எனக்குள்ள”   

“ஒரு ஒரு சமயம் ஒரு மாதிரி தோணும். யாரையும் பார்க்கப் பிடிக்கலை, பேசப் பிடிக்கலை. அப்போவும் சரியாக்கிகணும் தான் நினைச்சேன். நீங்க என்னை பார்த்திருக்கவே வேண்டாம் சொன்னீங்க, அடிச்சீங்க.. பிரச்சனை பெருசாச்சு, ரொம்ப உங்களை பிடிக்காமப் போச்சு. சரி, கொஞ்சம் நாள் நான் ஹாஸ்டல் இருக்கேன்னு சொன்னேன்! எனக்கு தெரிஞ்ச என்னோட வீடு அதுதானே”

“நீங்க ஒதுக்கலை, அப்போ ஒரு கோபம், ஒரு ஆத்திரம்! நான் செத்து போனா தான் உனக்கு பனிஷ்மெண்ட் கொடுக்க முடியும்ன்ற எண்ணம். ஜஸ்ட் சில நிமிஷங்கள்ல தோணினது. அதுக்கு முன்ன எல்லாம் இல்லை!”   

“ஆனா சாக பயமா இருந்தது. வலி இருந்தா? அப்புறம் மூணு நாலு மாத்திரை எடுத்தேன். இதனால செத்துப் போயிடலாம்னு. வீட்டை விட்டு வெளியே வந்து கார்ல சுத்தினேன். அப்புறம் அந்த பப்கிட்ட போகும் போது ஒரு மாதிரி தள்ளிச்சு”

“உள்ள போய் உட்கார்ந்துக்கிட்டேன். அங்க குதிச்சிட்டு இருந்தவங்களைப் பார்க்கும் போது, நான் எதுக்கு சாகணும்னு ஒரு எண்ணம். ஆனா மேல யோசிக்க விடாம ஒரு மயக்கம்!”

“அப்புறம் நடந்தது என் வாழ்க்கையில அடுத்த ட்ராஜிடி. என்கிட்டே தப்பா நடக்க நினைச்சு இருக்காங்க! ஆனா அஸ்வின் தடுத்துட்டாங்க, ஆனாலும் எத்தனை பேர் என்னை தூக்கி இருக்காங்க! அது கூட தெரியாம இருந்திருக்கேன். அந்த பீரியட்ல என்னை நினைச்சு எனக்கே அருவருப்பா இருந்தது! சொல்லும் போதே ஒரு குரல் உள்ளே சென்று விட்டது.  

“எனக்கு யாரையுமே பார்க்கக் கூட பிடிக்கலை. முக்கியமா உங்களை, எனக்குள்ள தப்பு பண்ற ஃபீல் கூட. அப்போ ஏதாவது யோசிக்க, செய்யன்னு. ஒன்னுமில்லாத விஷயங்களை பிடிச்சிட்டு தொங்கறேன்னு, வாழ்க்கைன்னா இப்படித் தான் இருக்கும்னு, நான் தான் தப்பு பண்றேன்னு, ரொம்ப ரொம்ப டிஸ்டர்ப்ட். ஆனா என்னால காம்ப்ரமைஸ் பண்ண முடியலை” என நிறுத்தியவள்,     

“இனியும் நான் ரிஸ்க் எடுக்க முடியாது இல்லையா, சோ என்னை ஹாஸ்டல் போக விடுங்க இல்லை, மாத்திரை எடுத்துப்பேன்னு திரும்பவும் மிரட்டினேன். சோ, ஹாஸ்டல் போக கேட்டப்போ, நீங்க ஐஸ்வர்யா பத்தி சொன்னிங்க. அதுக்கு மேல என்னால முடியலை! எப்படி நீ இப்படி செய்யலாம்னு உன்னை கொல்லணும் போல ஒரு ஆத்திரம். இனி நீ என்னை பார்க்கவே கூடாது சொல்லிட்டுப் போயிட்டேன்!”

“வேற யாரையும் பார்க்கப் பிடிக்கலை, பேசப் பிடிக்கலை, ஸ்டடீஸ்ல மனசை திருப்பினேன். வேற வீட்டு ஆளுங்க யாரோட யோசனையும் கூட எனக்கு இல்லை. நீங்க! நீங்க! நீங்க மட்டும் தான்!”     

“மனசை எப்படியோ அமைதி படுத்திக்கிட்டேன், அந்த மாத்திரையைத் திரும்ப தொட ஒரு எண்ணம் வரலை. ஆனா உன்னை நான் நினைக்காத நாளில்ல! அது தான் நிஜம்! ஐஸ்வர்யா மேட்டர் என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியலை. நீங்க என்னை ஏமாத்தினதை விட, ஒரு பொண்ணை ஏமாத்தி வந்தவன், என் வாழ்க்கையிலான்ற எண்ணம்”

“திரும்ப டைவர்ஸ் கேட்டேன், இங்க என்னை வரவெச்சீங்க. அப்புறம் தான் எல்லாம் உங்களுக்கு தெரியுமே! வந்ததுக்கு அப்புறமும் நிறைய நிகழ்வுகள் நமக்குள்ள!” 

“உங்களை பார்த்த நாள்ல இருந்து, இதுல எந்த இடத்துல உங்களை லவ் பண்ணினேன் தெரியாது. லவ் பண்ணறேனான்னு தெரியாது. இதுக்கு பேர் தான் லவ்வா அதுவும் தெரியாது!  ஆனா தனியா என்னால இருக்க முடியலை. அப்போ எனக்கு தோணினது உங்க கிட்ட வரணும்னு மட்டும் தான்”  

“என்னை மீறி இப்படி எண்ணங்கள் வர வர உங்களை டார்ச்சர் பண்ணினேன், அது தான் நிஜம்”    

“இனிமே உங்களை விட்டு என்னால இருக்க முடியும்னு தோணலை. இது காதல் கதையா? இல்லை ரத்தக் காட்டேரி கதையா? இல்லை பேய் கதையா? என்ன கதைன்னு நீங்க தான் முடிவு பண்ணனும்”

“நான் காதலியா இருந்தாலும், ரத்தக் காட்டேரியா இருந்தாலும், பேயா இருந்தாலும், உங்களால தான்! அப்புறம் இந்த கதைல நான் நிறைய சீன்ஸ் மிஸ் பண்ணியிருக்கலாம், இல்லை சொல்ல மறந்திருக்கலாம், இல்லை சொல்ல வேண்டாம்னு நினைச்சிருக்கலாம்”

“ஏதோ ஒன்னு, நான் தப்பாவே இருந்திருந்தாக் கூட, இப்போ இருந்தாக் கூட, இனிமே இருந்தாலும் கூட, எனக்கு உன்னை விட்டு போகணும்ன்ர எண்ணம் வர விடாதே! என்னால தனியா இருக்க முடியாது! ஐ ஹேட் தட்!” என சொல்லும் போது குரல் உடைய, அழுகிறாள் எனப் புரிந்தது. அவன் கண்களிலும் நீர் நிறைந்தது.

“நான் ஹாஸ்டல் போன போது, பின்ன தனியா யு எஸ் போன போது எல்லாம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன். அதே சமயம் அப்போ உன்னை பத்தி நினைக்க எந்த சுகமான நினைவுகளும் இல்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படி”

“நீங்க என்னை அவ்வளவு லவ் பண்ணறீங்க, ஆனா நமக்குள்ள ப்ளசன்ட்டா யோசிக்க எதுவுமே இல்லை. ஐ ஹேட் திஸ்.  எனக்கு நமக்குள்ள ரொம்ப இனிமையான நினைவுகள் வேணும்! குடுப்பீங்களா?” என அந்த வாய்ஸ் மெசேஜ் முடிந்தது. ஈஸ்வரின் கைகளில் வர்ஷினி சுகமான உறக்கத்தில்! 

“நீ சந்தோஷமா இருக்கியா? என்னை லவ் பண்ணறியா?” எனக் கேட்ட போது,

இதெல்லாம் என்னால் உன்னிடம் நேரடியாக பகிர முடியாது. மாட்டவும் மாட்டேன்! எனச் சொல்லி, இந்த வாய்ஸ் மெசேஜ் அவனுக்கு அனுப்பியவள், “நான் தூங்கின பிறகு கேளுங்க” எனவும் சொல்லி, அவன் மேலேயே சாய்ந்து உறங்கியிருந்தாள்.

கூடவே “இது நான் இப்போ பேசினது இல்லை. ஒரு முறை நீ எல்லோர் கூடவும் கோவில் போகக் கேட்டு, சண்டை போட்டேன் இல்லையா? அப்போ என்னோட ஃபீலிங்க்ஸ் உங்ககிட்ட ஷேர் பண்ணனும்னு நினைச்சு பேசினேன்” எனச் சொல்லியிருந்தாள்.   

இதோ கேட்டு முடித்து விட்டான். மனது மிகவும் கணமாகியது!  

ஆம்! எல்லாம் அவனால்! இப்போது சரியாகிவிட்டாலும் கடந்தவைகள் கடந்தவைகள் தானே! அந்த வருடங்களை எப்படி திருப்பிக் கொடுப்பான்! அந்த கசப்பான உணர்வுகளை எப்படி போக வைப்பான்!  

எல்லோரிடமும் சண்டையிட்டு இருந்தாலும், யாரை பற்றியும் எந்தக் குறையும் சொல்லவில்லை, யாரையும் இழுக்கவும் இல்லை. அவனின் உலகத்தில் அம்மா, அப்பா, தங்கை, உறவுகள் எல்லாம் பிரதானமாக இருந்தாலும், அவளின் உலகத்தில் அவனும் அவளும் மட்டும் தான் என்பது புரிந்தது! அது சீரானால் தான் மற்றவர்கள் அவளின் உள் நுழைய முடியும் என்பதும் புரிந்தது!

“லவ் யு வர்ஷ்” என இறுக்கிக் கொண்டவன்,       

மெதுவாக அவளின் காதுகளில், “இப்போ ஏதாவது நமக்குள்ள ப்ளசண்டா ஃபீல் பண்றியா வர்ஷ்” எனக் கேட்க, உறக்கத்தில் இருப்பவளுக்கு எப்படிக் கேட்கும்!

ஆனாலும் விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தான்!  

ஆம்! காலம் மட்டுமே எல்லா வலிகளுக்கும் மருந்து! நம்பிக்கை இருந்தது, எல்லாம் கடந்து போகும் என்று! 

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே!                   

 

Advertisement