Advertisement

அத்தியாயம் எண்பத்தி எட்டு :

மறந்தாலும்.. நான் உன்னை.. நினைக்காத நாளில்லையே!

அமைதி! அமைதி! இருவர் மனதிலுமே அப்படி ஒரு அமைதி!

ஈஸ்வர் மனதில் சொல்லவே வேண்டாம்.. ஆழ் மனதின் அலைபுருதல்கள் எல்லாம் அடங்கி விட்டன.. அந்த கண்களை ரசித்துப் பார்த்தான்.. அதில் மூழ்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.. முதல் முறையாக அது தன்னிடம் என்ன உணர்த்துகிறது என்று பார்த்து இருந்தான்..

ஆனால் அவள் பார்த்தால் தானே! மீண்டும் வேலையில் மூழ்கிவிட்டாள்! பேசி முடித்தவுடன் நேரம் பார்த்து வேகமாக எழுந்தவள்.. “இதை நான் இன்னைக்கு நைட் குள்ள முடிக்கணும்” என அப்படியே கம்ப்யுடர் நோக்கிப் போக..

அவனும் வேகமாக எழுந்து.. “முதல்ல பாத்ரூம் போ” என அதனை நோக்கி தள்ளி விட..

அவனை பார்த்து சிரித்தவள் “எஸ், கரக்ட்” என,

“என்ன கரக்ட்?” என தலையிலடித்துக் கொள்ள..

“இல்லை, சில சமயம் ரொம்ப அர்ஜென்ட் ஃபீல் இருந்தாலும், வேலையை முடிச்சு தான் எழனும்னு பண்ணிட்டே இருப்பேன்” என,

“ஆ” என வாயில் கை வைத்துக் கொண்டான்..

இவள் வேகமாக ஓடி விட.. வாழ்க்கை அதன் மந்திரக் கோலை இருவரையும் நோக்கி சுழற்ற ஆரம்பித்தது.. இவர்கள் பட்டது போதும் என அதுவே நினைத்ததோ என்னவோ..

இவன் வேறு ரூம் போய் ஃபிரெஷ் ஆகி  சமையலம்மாவிடம் காஃபி வாங்கி வந்த போது, அதன் முன் அமர்ந்து இருந்தாள்..

“ஏன் வர்ஷ் இப்படிப் பண்ற?” என,

“என்ன பண்றேன்?” என்றாள் பதிலாக.

“இப்படி எதுக்கு வேலை பார்க்கணும், ஐடென்டிடி தேடறேன்னு வாழ்க்கையோட சந்தோஷத்தை தொலைக்காதே” என,

“ப்ச், வாழ்க்கையோட சந்தோஷத்தை நான் தேட வேண்டாம்னு தான் இதுல நேரத்தை கொஞ்சம் அதிகமா தொலைக்கிறேன்” என்று பேசிக் கொண்டே காஃபி பருக,

மீண்டும் உளப்பிக் கொள்கிறாளோ எனப் பார்த்தான்.

முகம் மிகவும் நிர்மலமாக இருந்தது.. அப்படி சஞ்சலங்கள் எதுவுமில்லை!

அவனின் முகத்தினில் கவலையைப் பார்த்தவள்,  

“அச்சோ, நிஜமா சொன்னேன்.. இப்போதைக்கு என்னால அதிகமா உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது.. முதல்ல ஐஷ் விஷயம் முடியட்டும், மென்டலா செட்டில் ஆகுங்க!” என்றாள்.

அவளையேப் பார்க்க.. “பின்ன நான் வந்து இத்தனை நாள் ஆச்சு.. என் பக்கத்துல நீங்க வராமயே இருக்க நீங்க என்ன அவ்வளவு நல்லவரா?” என விளையாட்டு போல பேசுவதாகத் தோன்றினாலும், அவள் உணர்ந்து பேசுகிறாள் எனப் புரிந்தது.  

அவன் முகத்தினில் கலக்கம் எட்டிப் பார்க்கவும், “ஐ கேன் கெஸ்.. நீங்க அவங்ளோட வாழ்க்கை சரியாகணும்னு நினைக்கறீங்க, அதனால தான் இப்போதைக்கு இப்படியே போகட்டும்னு நினைக்கறீங்க. இல்லை குழந்தை பெத்துக்கலாமான்னு என் கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டா நிற்பீங்க” என்றாள் உன்னை எனக்கு தெரியும் என்ற பாவனையோடு.  

“இல்லையில்லை” என்று அவசரமாக மறுத்தவன், “ஐஷ் விஷயம் இருந்தாலும், இந்த டைம் நான் எதுவும் அதிகப் பிரசிங்கித்தனம் செஞ்சு, உனக்கு பிடிக்காமப் போய்ட விரும்பலை” என்றான் ஈஸ்வருமே உண்மையாக.  

அவளின் கண்கள் கிண்டல் மொழி காட்டா.. “நிஜமா” என்று அவளுக்கு உணர்ந்தி விடும் வேகத்தில் நின்றான்.

“ப்ளீஸ், எதுன்னாலும் உள்ளதை உள்ளபடி பேசலாம்.. நம்ம தப்புக்கள் நமக்கே தெரியும்!” என வர்ஷினி சொல்லவும்..  

“போடி” என்று சொல்லி, அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான்.

ஒரு வகையில் வர்ஷினி சொல்வது மிகவும் உண்மை. அப்போது அவனின் சலனங்கள் பெரிய தேடலை வர்ஷினியிடம் தேடிய போதும்.. இப்போது அவன்  பக்குவப் பட்டு விட்டான்.. தன்னால் ஒரு பெண் இதுவரையிலும் தனியாக நிற்கும் போது, தான் மட்டும் சந்தோஷமாக இருப்பதா என்ற ஒரு எண்ணம் அடி மனதில் இருக்கத் தான் செய்தது.

வர்ஷினி தன்னிடம் வந்து விட்டால் போதும் என்ற எண்ணம் தான் பிரதானமாக இருந்தது.. குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்று கேட்டது கூட அவளுக்கு குழந்தைகளின் மேல் இருந்த பிடித்தத்தினால் தான்..

இப்போது அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது! எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் இந்த கட்டம்.. இதில் இன்னொரு பெண்ணுக்காக.. அவன் தள்ளி நிற்க முடியாதே.. அது இன்னும் வர்ஷினியை வருத்தி விட்டாள்!

“இவ எப்போ பெரிய பொண்ணு? எப்போ சின்ன பொண்ணு? ஒன்னும் தெரியலை” என்று நொந்து கொண்டான்.

வேகமாக தயாராகி வர.. அவனுக்கு முன் டைனிங்க் டேபிளில் அவனுக்காகக் காத்திருந்தாள்.. “பசிச்சது” என,

“ஏன் வெயிட் பண்ற? சாப்பிட வேண்டியது தானே!” என,

“என்னவோ வெயிட் பண்ணினேன், வேண்டாம்னா எழரேன்” என உடனே எழ,

“உனக்காகத் தான் சொன்னேன்” என்று கை பிடித்து இருத்தவும்..

அமர்ந்தவள் அவன் முகத்தை முகத்தைப் பார்க்க..

“என்ன வர்ஷ்?” என்றான்.

“நான் பரிமாறவா?” என, அவள் கேட்ட விதத்தில் சிரித்து விட்டான்.

“என்ன இது புதுசா?” என,

“அது எப்பவும் சண்டை போட்டுட்டே இருக்கனா. ஐ வான்ட் டு மேக் மை ஃபாமிலி அண்ட் வான்ட் டு பி அன் ஐடியல் வைஃப்” என ஆர்வமாக சொல்ல

“நீ நீயா இரு போதும்.. அதுக்கு எந்த ஸ்பெஷல் ஹோம் வொர்க்கும் தேவையில்லை, உனக்கு அது  தானா வரும்.. இப்போ நீ பசியோட இருக்கும் போது நான் மட்டும் சாப்பிட முடியாது, வா!” என்றவன்,

அவளுக்கும் நகர்த்தி தானும் எடுத்துக் கொண்டு.. “நல்லா சாப்பிடு!” என்றான் விஷமமாக.  

“ஏன்?” என்பது போலப் பார்த்தவளிடம்,

“ஐ மிஸ் மை வாட்டர் பெட்” எனக் கண்ணடிக்க..

“எவ்வளவு கஷ்டப்பட்டு நான் வெயிட் குறைஞ்சேன் தெரியுமா.. உங்களுக்கு என்னை பிடிக்கலையா?” எனக் கவலையாகக் கேட்க.

“உன்னை நான் வெயிட் குறைன்னு சொன்னேனா?” என அதட்டினான்.

“நான் யோசிச்சேன் உங்களுக்கு ஏன் என்னை பிடிக்காமப் போச்சு, நாம தான் இவர் சொன்னது எல்லாம் செஞ்சோமே, எல்லார் கிட்டயும் நல்ல பொண்ணா தானே நடந்துக்கிட்டோம்ன்னு. அப்புறம் குண்டா இருந்தது பிடிக்கலையோன்னு நினைச்சேன்” என,

உணவு தொண்டைக்குள் இறங்காமல் நின்று விட்டது ..

“ரொம்ப யோசிச்சியோ என்னை?” என்றவனிடம்,

“உங்களை மட்டும் தான் யோசிச்சேன்!” என அவள் சொல்ல..

ம்கூம், உணவு அதற்கு மேல் இறங்குவேனா என்று சண்டித்தனம் செய்தது..

“உனக்கு என் மேல அவ்வளவு லவ் வர்ஷ்” என சூழலை இலகுவாக்க முற்பட்டான்.

“தெரியலை எனக்கு, உங்களை நினைக்க கூடாதுன்னு நினைச்சு உங்களையே தான் நினைச்சு இருந்தேன்.. உங்களை பிடிக்கக் கூடாதுன்னு தான் நினைச்சு இருந்தேன்.. பிடிச்சிருக்கான்னு இப்பவும் தெரியலை! ஆனா வேற யாரையுமே எனக்கு பிடிக்கலை! அது ரொம்ப நிச்சயம்!” என சொல்லி முடிக்கும் போது அவள் உணவை உண்டு முடித்து..

“ஓகே, நான் போறேன்!” என்று கம்ப்யுடர் முன் சென்று அமர்ந்து கொள்ள…

ஈஸ்வருக்கு ஏனோ அதற்கு மேல் உணவு இறங்கவில்லை!

சமையல் அம்மாவிடம் சென்று.. “வேலை பார்க்கும் போது அவளுக்கு சாப்பிட ஞாபகம் இருக்காது.. டைம்க்கு ஏதாவது கொண்டு போய் குடுத்துடுங்க.. மதியம் சாப்பிட வெச்சிடுங்க.. வீட்டை பார்த்துக்கங்க.. நான் வர்ற வரை இருங்க.. எதுக்கும் அவளை தொந்தரவு பண்ணாதீங்க” என சொல்லிச் சென்றான்.

வீட்டின் முன் இருந்த வராந்தாவில் தாஸ் இருக்கவும் அவனிடமும் “பார்த்துக்கோ தாஸ்” என சொல்லிச் சென்றான்.

அவனுமே ஃபைனான்ஸ் ஆஃபிஸ் சென்ற பிறகு வேலைகள் இழுத்துக் கொண்டது… ஐ பி எல் மேட்ச் வேறு இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருப்பதால் ஜகன் அதில் இருந்தான்.. டீம் ப்ராக்டிஸில் இருக்க.. அவனுமே அதன் மேற்பார்வையில் இருந்தான்.. கோச் வேறு புதிதாக மாற்றி இருந்தார்கள்..

அதனால் அவன் ஆஃபிஸ் வரவில்லை.. ரூபாவும் பிரணவிக்கு காய்ச்சல் என்று வரவில்லை.. இவனுக்கு வேலைகள் சரியாக இருக்க..

அவன் வீடு சென்ற போது.. அங்கே சமையல் அம்மா இருந்தவர்.. “மதியம் இருந்து தூங்கறாங்க” என,

“சரி, நீங்க போங்க!” என்று அவரை அனுப்பி விட்டு.. முன்னிருந்த தாஸிடம் யாரெல்லாம் வந்தார்கள் என்று கேட்க..

“அஸ்வின் தான் ரெண்டு மூணு டைம் வந்தார்.. ஆனா பாப்பா தூங்கறாங்கன்னு சமையல் அம்மா சொல்லிட்டாங்க! எழுப்பச் சொன்னா அய்யாக்கு ஃபோன் பண்ணி கேட்டுட்டு சொன்னா தான் எழுப்புவேன்னு சொல்லிடிச்சு” என,

“ஹ, ஹ” என வாய் விட்டு சிரித்து விட்டான்.. பின் அஸ்வினிற்கு அழைக்க..

“இருங்க, நான் வர்றேன்” என்று நேரிலேயே வந்துவிட்டான்.

“சஞ்சய் பேங்க் லோன்க்கு ஓகே ன்ற மாதிரி ஒருவேளை சொல்லிட்டா, நாம பேங்க்ல என்ன பண்ணனும்ன்னு மேம் கேட்கச் சொன்னாங்க!” என,

“கேட்டுட்டியா?” என்றவனிடம் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவன்.. “அது எனக்கு தெரியாது, நேத்தே சொன்னா திட்டுவாங்கன்னு இன்னைக்கு சொல்ல வந்தேன்” என,

ஈஸ்வர் அதற்கும் வாய் விட்டு சிரிக்க.. “என்ன மேம் உங்களை நல்லா பார்த்துக்கறாங்க போல, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க” என,

அதற்கும் ஒரு மலர்ந்த சிரிப்பு மட்டுமே!

“நான் ஏதாவது பண்ணனுமா?” என,

“என்ன நான் ஏதாவது பண்ணனுமாவா.. வாட் இஸ் திஸ்! நீங்க தான் பண்ணனும்! எனக்கு இந்த பேங்க்ல யாரைப் பார்க்கணும்? என்ன பேசணும்? எதுவும் தெரியாது! நீங்க சொல்றதை மட்டும் தானே நான் செய்வேன்!” என,

“அவங்க எந்த பேங்க் அப்ரோச் பண்றாங்கன்னு பாரு, அப்புறம் என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்!”  

“மேம் உங்க கிட்ட எந்த ஹெல்ப்பும் வாங்க மாட்டோம்னு அந்த சஞ்சய் கிட்ட சொன்னாங்க!”  

“இப்பவும் நான் ஒன்னும் பண்ணப் போறதில்லை, என்ன பண்ணனும்னு சொல்லத் தான் போறேன். நீ தான் பண்ணனும்”   

“ம்ம், சரி” என்று தலையசைத்துக் கிளம்பவும்..

“ஐஸ்வர்யா மேரேஜ்க்கு ஏதாவது சொன்னாளா?” என்று கேட்க விழைந்த மனதை முயன்று அடக்கினான்..

அங்கே ஹாஸ்பிடலில் சஞ்சையும் அதை யோசித்து தான் அமர்திருந்தான்.. நேற்றே ஐஸ்வர்யா வந்து ஹாஸ்பிடலில் சேர்ந்தது இன்னுமே அவனால நம்ப முடியவில்லை.. சற்று நாட்களாக எல்லாம் முடிந்தது என்ற ஒரு மனநிலையில் இருந்தவனுக்கு எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வலுத்தது..

அப்படியே அமர்ந்திருந்தான்.. பத்து மணியாகும் சமயம் அவனின் ரூம் விட்டு வெளியே வர… ஐஸ்வர்யா அவனின் அம்மாவுடன் பேசிக் கொண்டே வருவதை பார்த்தான்.. பின் நின்று விட..

“எப்படி போவ ஐஸ்வர்யா?” என்று கேட்டுக் கொண்டே வர.. “ஸ்கூட்டி தான் மேம்” என்றாள்.

“நோ, நோ, இந்த டைம் அது சேஃப் கிடையாது. தினமும் அப்படியா போவ” என,

“இல்லை நைன்க்கு மேல ஆகிடுச்சுன்னா ஹாஸ்பிடல் கார் தான்.. அது ரிப்பேர் போல, நேத்து நைட் ஆம்புலன்ஸ்ல போனேனா அம்மாக்கு மனசு ஒப்பலை, அப்பா இப்போ தானே தவறினார்… அதுதான் இன்னைக்கு ஸ்கூட்டில போயிடறேன்” என,

எல்லாம் கேட்கும் தூரத்தில் தான் சஞ்சய் இருந்தான்.. “நீங்க விதார்த் கூட போறீங்களாமா.. நான் இவங்களை டிராப் பண்ணட்டுமா?” என தயங்கித் தயங்கி கேட்க,

தன் மகனா ஒரு பெண்ணை டிராப் செய்கிறேன் எனக் கேட்கிறான் என லக்ஷ்மி வியந்து பார்க்கும் போதே.. விதார்த்தும் வந்து விட..

“நீ அம்மாவை கூட்டிட்டுப் போ, நான் இவங்களை டிராப் பண்றேன்” என ஐஸ்வர்யாவைக் காட்ட..

“மா, வாங்க, வாங்க, செம பசி” என்று அம்மாவை ஒரே நிமிடத்தில் அவ்விடம் விட்டு அகற்ற..

“போகலாமா?” என்று சஞ்சய் ஐஸ்வர்யாவைக் கேட்க.. “எங்கே?” என்றாள் ஐஸ்வர்யா.

“உங்க வீட்டுக்கு தான்” என அவன் சொல்ல,

“கொண்டு போய் விடட்டுமான்னு என்கிட்டே கேட்கணும்.. அதை விட்டு உங்க அம்மா கிட்ட சொன்னா.. நான் வந்துடுவேனா.. எதையும் நேராவே சொல்ல மாட்டீங்களா” என,

“என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா?” என்றான் உடனே.

“நான் கொண்டு போய் விடறதுக்கு கேட்கறதுக்கு தான் சொன்னேன்”  

“அதை விடுங்க, என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா?” என்றான் திரும்பவும்..

“இப்படி திடீர்ன்னு கேட்டா.. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை”

“யோசிச்சு சொல்லுங்க, ஆனா சரின்னு சொல்லிடுங்க! இப்போ வாங்க” என முன் நடக்க.. வார்த்தை வளர்க்காமல் பின் சென்றாள்.

சஞ்சய் காரின் முன் கதவை திறந்து விட்டு நிற்க.. வெகுவாக ஒரு தயக்கம்.. சில நொடி தயக்கத்தை முகத்தினில் பார்த்தவன்.. பின் கதவை திறந்து விட.. அருகில் சென்று அந்த கதவை பிடிக்கவும்.. சஞ்சய் அதனை விட்டு.. டிரைவிங் சைட் வர.. அவனின் அந்த செய்கையில் கவரப் பட்டு.. பின் கதவை மூடி முன் புறமே ஏறி அமர்ந்தாள்.

சஞ்சயின் முகம் புன்னகையில் மலர்ந்தது..

இரவு நேரத்தில்.. அரவங்கள் குறைந்த சாலையில், ஐஷ்வர்யா அருகில் இருக்க காரோட்டிச் செல்வது, அப்படி ஒரு உவகையை சஞ்சய்க்கு கொடுக்க.. அதனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் எதோ தடுக்க…

“உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? கல்யாணம் பண்ணக் கேட்டா வேலையை விட்டு போறீங்க, அவ்வளவு வெறுப்பா இருக்கா?” என,

திரும்பி சஞ்சயை பார்க்கவும், அவன் சாலையில் தான் கவனம் வைத்திருந்தான், இவள் புறம் திரும்ப வில்லை, திரும்பும் தைரியமும் இல்லை..

“காரை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க” என,

“இல்லையில்லை, நான் எதுவும் கேட்கலை, இறங்கிடாதீங்க” என்றான் அவசரமாக.

“ஹச்சோ, கடவுளே! என்று சலித்தவள், “கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க, இறங்கமாட்டேன்!”

அதன் பிறகு தான் நிறுத்தினான்..

“நீங்க என் கிட்ட சொல்லலை.. விதார்த் சொல்லும் போது என்ன இம்ப்ரஷன் வரும்?”

“நான் சொல்லச் சொல்லலை, அவன் சொன்னதே எனக்கு தெரியாது!”

அவனின் பாவனையில் சிரித்து விட்டாள்.. “எனக்குள்ள கொஞ்சம் பெர்சனல் கான்ஃப்ளிக்ட்ஸ் இருக்கு. அதை முடிச்சிக்கறேன் கொஞ்சம் டைம் குடுங்க” என்றாள் நல்ல விதமாகவே..

“என்ன பெர்சனல் கான்ஃப்ளிக்ட்ஸ், நான் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?”  

“எதுன்னாலும் நான் சொல்றேன், ப்ளீஸ்..” என்று விட.. பிறகு சஞ்சய் எதுவும் கேட்கவில்லை..

நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல..

சின்ன சண்டைகள், செல்லச் சிணுங்கல்கள் என்று எதுவும் இல்லாமல், இயல்பாய் தன் வாழ்க்கையை கொண்டு செல்ல ஆரம்பித்தாள் வர்ஷினி..

ஆம்! முதலில் செய்தது குறை சொல்லும் பழக்கத்தை விட்டது தான்!

ஐ பி எல் காரணத்தினால் இப்போது அஸ்வினும் அவளுக்காகச் செய்யும் வேலைகள் குறைந்து விட..

எல்லாவற்றிற்கும் ஈஸ்வரே தான் உடன் இருந்தான்.. தனியாக என்று அவளே செய்துக் கொள்ளும் வேலைகள் கிடையாது.. ஃபிலிம் டிஸ்டிரிபியுஷன் ஒரு வடிவம் பெறவும்..

“எனக்கு உன்னை தனியா விட முடியாது.. உன்னோட இருக்கவும் முடியாது.. என்ன ஆப்ஷன் வெச்சிருக்க..?” எனக் கேட்டான்.. அவனின் குரலில் இருந்த உறுதி தனியாக விட மாட்டான் எனப் புரிய.. 

சற்று நேரம் யோசித்தவள்.. “பத்துண்ணா அண்ட் முரளிண்ணா என்னோட பார்ட்னர் ஆவாங்களா?” என,

என்ன பேசுகிறாள் இவள் என்பது போல ஈஸ்வர் பார்க்க,

“எதுக்கு அப்படிப் பார்க்கறீங்க?” எனவும்,

“அவங்களோட பார்ட்னர் ஷிப்பா?” என,

“எஸ், அப்பா எப்பவும் நான் அவங்களை விடக் கூடாது கேட்டுகிட்டார், ஐ மீன் அவங்களோட உறவை.. ஏற்கனவே இருக்குற பிஸ்னெஸ் அப்படியே இருக்குன்னாலும்.. புதுசா எல்லாம் என்னால யாரையும் சேர்க்க முடியாது”

“அவங்களும் இன்வெஸ்ட் பண்ணனும், அண்ட் பத்துண்ணா என்னோட கொஞ்சம் அட்ஜஸ்ட் ஆகிடுவாங்க.. முரளிண்ணா உங்களை மீறி எதுவுமே செய்ய மாட்டாங்க, சோ அவங்க தான் ஓகே என் வரைக்கும். அதுவுமில்லாம அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் போது நான் ஒருத்தரை ஒருத்தர் பிரிக்க கூடாது!”

“நீங்க என்ன சொல்றீங்க?”  

“எனக்கு இதுல ரொம்ப நிம்மதி தான். ஆனா நீ அவங்களை எப்பவும் கம்ப்ளைன்ட் பண்ணக் கூடாது.. உன் அண்ணனுங்க உன் அளவுக்கு ஷார்ப் கிடையாது.. அவங்க எதுவும் செய்யலை, எல்லாம் என்னால தான் அப்படின்ற எண்ணம் உனக்கு வரும்னு தோணினா. பார்ட்னர் ஷிப் வேண்டாம்!” என்றான் கறாராக.

“இப்ப நீங்க அவங்களை புகழ்றீங்களா, இல்லை…” என அவள் இழுக்க,

“ப்ச், வர்ஷ்” என அதட்டினான்.. “ஒரு வேலை ஆரம்பிக்கும் முன் அதோட சாதக பாதகம் நாம பார்க்கணும்.. முரளியும் பத்துவும் நல்ல உழைப்பாளிங்க அதுல சந்தேகம் கிடையாது. உங்கப்பா வளர்த்ததை அவங்க கண்டின்யு பண்றாங்க. ஆனா திறமையானவங்க கிடையாது.. நூறை நூறா எடுப்பாங்க.. ஆனா நூறை ஆயிரமாக்குற திறமை அவங்க கிட்ட கிடையாது!”

“இப்போ பாரு, நீ வேலை செஞ்சதுக்கு அவங்க பணம் குடுத்ததை வாங்கியிருக்கலாம், நல்ல பேமென்ட் கூட.. ஆனா உன்னோட ஏஜ்க்கு தோணாத வகையில நீ டிஸ்டரிபியுஷன் கேட்டிருக்க”

“இதுல சாலிட் லாபம் வரும், நஷ்டம் கிடையாதுன்னு தெரிஞ்சு.. நம்ம இங்க இருக்குற படம் மாதிரி கிடையாதுன்னு தெரிஞ்சு நீ பேசியிருக்க. இப்படி ஐடியாஸ் எல்லாம் அவங்ககிட்ட நீ எதிர் பார்க்க முடியாது!”  

“எனக்கு தெரியும் ரஞ்சனி அண்ணி உங்க தங்கை, முரளிண்ணா உங்க ஃபிரன்ட்.. என்னால அதுக்கு பிரச்சனை வராது” என முடித்து கொண்டாள்..

“என்ன பதில் இது?” எனப் புரியாமல் ஈஸ்வர் பார்த்திருக்க..

“இதுக்கு மேல எனக்கு பதில் சொல்லத் தெரியாது”  என்றாள் அவனை விடவும் கறாராக.

அவன் சொல்வதற்கு சரி என்றும் சொல்லவில்லை முடியாது என்றும் சொல்லவில்லை..

ஈஸ்வரின் பார்வையை எதிர் கொண்டவள், “நீங்க என்னை நினைக்கறதை விட எனக்கு மத்தவங்களோட இருக்குற ரிலேஷன்ஷிப் தான் அதிகம் நினைக்கறீங்க.. நான் அம்மாவோட எப்படி? அண்ணாவோட எப்படி?.. இப்படி.. இதெல்லாம் சரி வராது.. நான் நல்ல பொண்ணு பேர் எல்லாம் எடுக்க மாட்டேன்” என முறுக்கவும்…  

அப்போதும் அவளையேப் பார்த்திருக்க..

“என்ன?” என்பது போல புருவம் உயர்த்தினாள்.

“பேசாம நீ சைக்காலஜி படிச்சிருக்கலாம்?” என்றான்.

“அய்யே” என சிரிப்பது போல பாவனை காட்டியவள்,

“நீங்க முதல்ல என்னை படிங்க, நான் சைக்காலஜி படிக்கறேன்”  

அவள் சொன்னதில் ஈஸ்வருக்கு சிரிப்பு வர, சிரித்து விட்டான்.

“அய்யே ,நான் டபிள் மீனிங்க்ள சொல்லலை, சிங்கிள் மீனிங்ல தான் சொன்னேன்!” என்று அசடு வழிந்தவளிடம்.. இன்னும் இன்னும் சிரிப்பு பொங்க பார்த்து இருக்க..

“இப்போ சிரிக்காதீங்கனு சொன்னேன்”  

“சிரிப்பு வருது, சிரிக்கிறேன்!” என்று அவனும் விடாமல் சிரிக்க..

“அடி வாங்கப் போறீங்க” என்று, கையில் என்ன கிடைக்கிறது தூக்கி வீச எனப் பார்க்க.. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஈஸ்வர் இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தான்.

“உங்களை” என்று அருகில் வந்து தோளில் அடிக்கப் போக.. அடிக்க விடாமல் கை பிடித்துக் கொண்டவன்.. அவளை இழுத்து அணைத்துக் கொண்டு..

“நான் உன்னைப் பத்தி தெரியும்ன்னு சொன்னதை விட உனக்கு தான் என்னைப் பத்தி ரொம்ப தெரியுது.. நான் என்ன நினைக்கிறேன்.. நான் என்ன செய்வேன் எல்லாம்!”

“நான் உன்னை நினைச்சதை விட, நீ தான் என்னை அதிகம் நினைச்சிருக்க!” என்றான் உணர்ந்து..

பதிலே பேசாமல் அவனின் அணைப்பினுள் வாகாய் பொருந்திக் கொண்டாள்.. 

“நான் உன்னையே நினைச்சு இருந்தாலும் உன்னை நான் லவ் பண்ணலை!”

“ஓகே, பண்ணலை! ஆனா நான் பண்றேன்! பண்ணுவேன்! பண்ணிட்டே இருப்பேன்!”

“நான் எப்போ வேணா போறேன்னு சொல்லுவேன்”

“ஓகே, போ! எங்கே வேணா போ! எப்போ வேணா போ!” என,

அணைப்பில் இருந்தவள் நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்க்க..

புன்னகைத்தவாறே “நீ எங்கே போனாலும், உன்னை நான் போகவேண்டாம் சொல்லவே மாட்டேன்! ஏன்னா நான் தான் உன் பின்னாடியே வந்துடுவேனே!” என கண்ணடித்து சிரிக்க..

வர்ஷினியின் முகம் முறைப்பில் இருந்து புன்னகைக்கு மாறியது!

“எஸ், பியுட்டி எஸ்” என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட..

“அது என்ன பியுட்டி” என்றவளிடம்,

“அதுவா நான் ப்ராக்டிஸ் பண்றேன்.. நம்ம பொண்ணை கூப்பிட” என,

“நோ, நோ, அது எனக்கு மட்டும் தான்” என்றவள் “வேணும்னா அதை தமிழ்ல கூப்பிடுங்க” என,

“அழகின்னா..”

“இல்லையில்லை..” என்றவள் சொன்ன வார்த்தை, “என்ன?” என்று ஈஸ்வரின் முகம் அஷ்ட கோணல் ஆக..

“அப்படித் தான் கூப்பிடணும்” என்று சொல்ல,

“ஆங்” என விழித்தவனிடம்..

“சிங்காரி.. எப்படி இருக்கு?” எனக் கேட்டு கண்ணடிக்க..  

“நல்லா இல்லை, நீ முதல்ல பெத்துக் குடு, அப்புறம் டிசைட் பண்ணலாம்” என..அவனின் முகம் போன போக்கை பார்த்து விடாது சிரிக்க ஆரம்பித்தாள்.  

“சிரிக்காத .. சொல்றேன் தானே” என அவன் சொல்லச் சொல்ல சிரித்துக் கொண்டே இருக்க..

“போடி” என சொல்லி, வர்ஷினியைப் பிடித்திருந்த அணைப்பை விடுத்து நகரப் போக, ஈஸ்வரால் நகர முடியவில்லை.. அவனின் அணைப்பில் இருந்தவள் எப்போது திரும்ப அவனை அணைத்தால் எனக் கூடத் தெரியவில்லை..

அதையும் விழித்துப் பார்க்க..

“ஹ, ஹ” என இன்னும் சிரித்தவள் “இது என்ன ஃபர்ஸ்ட் நைட்ல நான் குடுத்த எக்ஸ்ப்ரஷன் குடுக்கறீங்க”  

“நீ இப்படியா குடுத்த, எனக்கு மறந்து போச்சு.. டெஸ்ட் பண்ணட்டுமா?” என,

“அம்மாடி” என நொடியில் விலகி நகர்ந்து நின்று கொண்டாள்..

ஆனால் இருவர் முகத்தில் இருந்த சிரிப்பு மட்டும் மறையவேயில்லை! 

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?   

 

Advertisement