Advertisement

அத்தியாயம் எண்பத்தி ஐந்து :

யார் எவர் என்று தெரியாமல் க்ஷணத்தில் தோன்றுவது காதல் மட்டுமல்ல நட்பும் தான்!

வர்ஷினி பேசப் பேச சஞ்சய் அப்படியே நிற்க.. திடீரென்று திரும்பியவள் “வேலையை ரிசைன் பண்ற அளவுக்கு இங்க என்ன பிரச்சனை தெரியணும் எனக்கு.. ஒரு வேளை இவங்க ஹெல்ப் பண்ற அளவுக்கு டிசர்வ் பண்ணலையோ என்னவோ” என ஐஸ்வர்யாவை பார்த்து கேட்க..

“என்ன நடக்குது? என்ன பண்ணினோம் நாங்க உன்னை?” என்று சஞ்சயிற்கு ஏகத்திற்கும் கோபம் வந்துவிட்டது… “என்ன பண்ணினோம் சொல்லு” என்று ஐஸ்வர்யாவிடம் சண்டைக்குக் கிளம்ப..

“ப்ச், ஒன்னும் பண்ணலை” என்று வர்ஷினியிடம் சொன்னவள், “அஸ்வின் என்ன நடக்குது?” என்று அஸ்வின் மீது பாய..

“அப்போ என்ன நடந்ததுன்னு சொல்லு’ என்றான் அஸ்வினும்,

“இவரை கல்யாணம் பண்ணச் சொல்லி விதார்த் கேட்டான், எனக்குப் பிடிக்கலை, அதனால ரிசைன் பண்றேன்” என்று ஐஸ்வர்யா சொல்லிவிட,

இதுவா விஷயம் என்று வர்ஷினியும் அஸ்வினும் பார்த்துக் கொண்டனர்.

“நான் கேட்டேனா? நான் கேட்டேனா? விதார்த் கேட்டதே எனக்குத் தெரியாது.. அதுக்கு நான் சாரி சொல்லிட்டேன்.. பெர்சனலும் ப்ரொஃபஷனும் ஏன் கண்ஃபியுஸ் பண்றீங்க.. அதுக்கு எதுக்கு ரிசைன் பண்ணனும். இப்போ எல்லோரும் வந்து என்னை இப்படி கேள்வி கேட்கணும்” என கோபமாகப் பேசினான்.

“நான் கேட்காம வேற யார் கேட்பா?” என அஸ்வின் நிறுத்தியவன்.. “நான் அவளோட அண்ணன்” என,

“என்ன அண்ணனா?” என்று சற்று தணிந்தான் சஞ்சய்..

பிறகு “பிடிக்கலைன்னா பிடிக்கலை சொல்லிட்டு போகணும்.. அதுக்கு ஏன் ரிசைன் பண்ணனும்.. அவ்வளவு மணி டெஸ்ட் டியுப் பேபி சென்டர்காக இன்வெஸ்ட் செஞ்சிருக்கோம்.. எந்த வகையில நான் இவங்களை டிஸ்டர்ப் பண்ணினேன்”

“எனக்கு விதார்த் இவங்க கிட்ட பேசினதே தெரியாது.. விதார்த்தும் இவங்களும் கிளாஸ் மேட்.. இவங்க யுஜி படிக்கும் போது விதார்தை பார்க்க போகும் போதே இவங்களை எனக்குப் பிடிக்கும்.. அப்போ காலேஜ் செகண்ட் இயரோ தர்ட் இயரோ” என பேசப் பேச..

ஐஸ்வர்யாவிற்குமே இது புது செய்தி…

“சும்மா பார்க்கத் தான் செய்வேன், அதுக்கே இவங்க ஃபிரண்ட் என்கூட சண்டை போட்டு, என்னைத் திட்டி, கொஞ்சம் கேவலமா பேசி.. நான் அதுக்கு பிறகு பார்க்க போனது கூட கிடையாது.. கண்ல படும்போது தான் பார்ப்பேன்”

“இந்த விஷயம் விதார்த்கு தெரியும்.. இப்போ இங்க ஜாயின் பண்ணின பிறகு இவங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சவுடனே என்னை கல்யாணம் பண்ணிக்கக் கேட்டிருக்கான், அது எனக்குத் தெரியவே தெரியாது”

“இதுக்கு எதுக்கு இவ்வளவு ரியாக்ஷன், இவ்வளவு பில்ட் அப்.. இட் வாஸ் ஜஸ்ட் எ ப்ரபோசல்” என,

அதைப் பற்றி பேசாமல்.. “உங்களை திட்டின ஃபிரண்ட் யாரு” என.. அஸ்வின் கேட்க..

“ரஞ்சனி” என சஞ்சய் பதில் சொல்ல.. திரும்ப மூவருமே பேசவில்லை..

எழுந்து கொண்டு.. “நான் பேசினதை யோசிங்க டாக்டர் என்னோட ஹெல்ப்னாலும் நான் ரெடி.. இல்லை பேங்க் லோன்னாலும் நான் ரெடி! தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ்! ஆனா இது ரெண்டு மட்டும் தான்! என்னால யாரோடவாவது ட்ரீம் ஷேட்டர் ஆகறது என்னால அக்சப்ட் பண்ண முடியாது!” எனக் கிளம்ப..

“என்னடா இது? வந்தார்கள்! பேசினார்கள்! சென்றார்கள்!” என்பது போல சஞ்சய் பார்த்திருக்க…

அவர்கள் வெளியே சென்றதும்.. “நிஜமாவே உன்கிட்ட ஏதாவது கலாட்டா பண்ணினாங்களா?” என அஸ்வின் கேட்க..

“இல்லையில்லை, எனக்கு தெரியவே தெரியாது என்னோட காலேஜ் டேஸ்ல பின்னாடி வந்தது.. ஏன் விதார்த்க்கு ஒரு அண்ணன் இருக்குறதே தெரியாது! இங்கே வந்த பிறகு தான் தெரியும்!” என,

“என் அண்ணா உன்னை நினைச்சி கல்யாணம் பண்ணாமயே இருக்கான், பண்ணிக்கோன்னு சும்மா விதார்த் டார்ச்சர் பண்ணினான்! போடான்னு ரிசைன் பண்ணிட்டேன்! ஆனா அவன் கூட இவர் முன்னாடி என் பின்னாடி வந்தது எல்லாம் சொன்னதில்லை” என ஐஸ்வர்யா டென்ஷனாகப் பேசினாள்.

“இருங்க” என்று வர்ஷினி திரும்ப சஞ்சயின் ரூம் போக,

“எதுக்கு போறீங்க?” என் அஸ்வின் கேட்க,

“எனக்கு பேசணும்!” என வர்ஷினி சொல்ல,

“தனியா எல்லாம் விட முடியாது, நானும் வருவேன்” என்று அஸ்வினும் போக..

சென்றவுடனே வர்ஷினி கேட்டது, “டாக்டர் இது மேரேஜ் ப்ரபோசலா? லவ் வா?” என,

சஞ்சய் விழிக்கவும்.. “நீங்க அவங்களை கல்யாணம் பண்ண இஷ்டப்படறீங்களா இல்லை லவ் பண்றீங்களா” என விளக்கமாகக் கேட்க,

அஸ்வின் என்ன இது என்பது போல வர்ஷினியை முறைத்துப் பார்த்தான்.

“ஹல்லோ ப்ரோ எதுக்கு முறைக்கறீங்க? வயசுப் பொண்ணு இருந்தா கல்யாணத்துக்கு வரன் வர்றது தான்!” என அவனிடம் சொல்லிக் கொண்டே சஞ்சய்யை பார்க்க..

“லவ் பண்றதால மேரேஜ் பண்ணிக்கக் கேட்கறேன்” என,

“நீங்க கேட்டீங்களா இதுவரை? இல்லை நீங்க சொல்லியிருகீங்களா?” என்ற அடுத்த கேள்வியை வர்ஷினி கேட்க,

“இல்லை” என  தயக்கமாகத் தலையாட்டினான்.

“அதுதான் ப்ராப்ளம், நீங்க தானே கேட்கணும், நடுவுல அவங்க ஃபிரண்டை, உங்க தம்பியை எல்லாம் விட்டு என்ன பண்றீங்க?” என,

சஞ்சய் இப்போதும் விழித்து நின்றான், அவன் எங்கே விட்டான். அவர்கள் தான் கபடியும் கதகளியும் ஆடிவிட்டார்கள் என்றா சொல்ல முடியம், அமைதி காக்க,  

“சரி விடுங்க” என்று சஞ்சயின் பக்கத்தில் வந்து அவனின் ஸ்க்ரிப்ளிங் பேட் எடுத்து.. “லவ் ஐஸ்வர்யா கிட்ட சொல்லுங்க, மேரேஜ்க்கு அவங்க அண்ணா கிட்ட பேசுங்க.. அவங்க அண்ணா முன்னாடி நான் இந்த சஜஷன் கொடுக்க முடியாது” என, என்ன என்று சஞ்சய் படிக்கும் போதே கிளம்பிவிட..

“என்ன? என்ன?” என்று பார்க்கப் போன அஸ்வினிடம்.. “அட வாங்க ப்ரோ” என்று அவனின் கைபிடித்து வெளியே இழுத்து வந்தாள்.     

 ஐஸ்வர்யா அஸ்வினின் கையை வர்ஷினி பிடித்து, அவனை இழுத்து வந்ததை பார்த்து நிற்க,

அவளின் கண்களில் ஆச்சர்யத்தைக் கண்டவள்.. “என்ன பார்க்கறீங்க?” என,

“ஈஸ்வர்க்கும் அஸ்வின்க்கும் ஆகவே ஆகாது.. ஆனா எப்படி உங்க கூடவே இருக்கான், உங்க வேலையெல்லாம் பார்த்துக்கறான்” என,

“என்னோட வெரி பெஸ்ட் ஃபிரண்ட் உங்க அண்ணா.. என்னை ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருந்து காப்பாத்தினாங்க.. அதுக்கு முன்னமே எனக்கு ஃபிரண்ட் தான்.. ஆனா அந்த இன்சிடன்ட்க்கு அப்புறம் ஈஸ்வர்க்கு ஃபிரண்ட் ஆனாங்களோ இல்லையோ சண்டை இல்லை” என வர்ஷினி சொல்ல..

சரியாக அப்போது ஈஸ்வர் வந்து விட்டான். வந்தவன் இவர்கள் எல்லாம் நிற்பதை பார்த்து நின்றவன் ஆசுவாசப்பட்டு “என்ன ஆச்சு உன் போன்க்கு அஸ்வின், அத்தனை ஃபோன் பண்றேன், எடுக்கவேயில்லை, இவ ஃபோன் அடிக்கவேயில்லை, தாஸ் அவன் ஃபோன் சுவிட்ச் ஆஃப்” என அதட்ட,

“அது நான் சைலண்ட்ல போட்டேன், திரும்ப எடுக்கவேயில்லை” என சொல்லி, “பயப்படற அளவுக்கு என்ன இருக்கு?” என,

“ஏதாவது பிரச்சனை ஆகிடுச்சுன்னா?” என,

“என்ன ஆகும், அது தான் நான் கூட இருக்கேன்ல?” என அஸ்வின் சமாதனம் சொல்ல..

“இவனுக்கு எப்படிச் சொல்ல.. இது அவன் பண்ண மாட்டான்.. இந்த வர்ஷினி பண்ணுவா.. இவனுக்கு அது தெரியாதா?” என ஒரு பார்வை பார்க்க.. அது அஸ்வினிற்கு புரியவில்லை.. வர்ஷினிக்கு புரிந்தது. “போடா, போடா” என ஈஸ்வரை ஒரு அலட்சியப் பார்வை பார்த்து நிற்க.. ஈஸ்வர் கவனமாக அவளின் புறம் திரும்பவேயில்லை.       

ஐஸ்வர்யா இவர்களைத் தான் பார்த்து நின்றாள், “பகைவனையும் இவளுக்காக நண்பனாக்கி கொண்டுள்ளானா?” என,

இவர்கள் சென்று விட்டார்களா எனப் பார்க்க சஞ்சய் வெளியில் வந்தவன், இவர்களை பார்த்துத் தேங்க..

“போகலாம்” என ஈஸ்வர் கிளம்ப.. “நீங்க இவரோட போங்க, நான் ஐஸ்வர்யாவை வீட்ல விடறேன்” என வர்ஷினியிடம் சொல்ல,

“தாஸண்ணா இருக்காங்க” எனச் சொல்லி, வர்ஷினி யாருக்கும் நிற்காமல் சென்று விட.. என்ன இது என்பது போல பார்த்து நின்றாள் ஐஸ்வர்யா.

“ஹாய் ஐஸ்வர்யா” என ஈஸ்வர் சொல்லி அவளின் கவனத்தை திசை திருப்பினான், “நான் கிளம்பறேன்!” என்றும் சொல்லி.. “அப்புறமே எனக்கு ஃபோன்ல பேசு” என அஸ்வினிடம் சொல்லி போய்விட..

தாஸுடன் தனியாக வர்ஷினி செல்ல.. வேறு ஒரு காரில் ஈஸ்வர் செல்ல… அஸ்வினிடம் என்ன நடக்குது என்பதாக ஐஸ்வர்யா கேட்கவும்..

“ரெண்டு பேருக்கும் சண்டை போல”

“இப்போதானே வந்தா” என,

தோளைக் குலுக்கி, “ரெண்டுமே பெரிய அராத்து, யாருக்கும் சொல்ல முடியாது! பிடிக்காம சண்டை போட்டாக் கூட பரவாயில்லை, ஆனா பிடிச்சிருக்கு, அப்போவும் ஏன் சண்டை போடறாங்க!” என அஸ்வின் சொல்ல..

வர்ஷினி ஈஸ்வரை கடித்தது, இப்போது பேசாதது, இதை எல்லாம் வைத்து, “உன் கிட்ட வந்து ரெண்டு பேரும் சொன்னாங்களா?” என ஒரு கிண்டல் இழையோடக் கேட்க..

“சொல்லணுமா இதை.. சொல்லலைன்னாலும் தெரியும்.. ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு பிடிக்கும்.. அவங்க ரெண்டு பேர் கிட்டயுமே பிடிக்காத விஷயத்தை யாராலையும் செய்ய வைக்க முடியாது! டைவர்ஸ்க்கு கேட்டுட்டும் கூட வந்து இருக்குறாங்க” என,

“ஹேய், நீ என்ன அஸ்வின், அந்த பொண்ணுக்கு ஃபேன்ஸ் க்ளப் ஆரம்பிச்சிடுவ போல” என்று இலகுவாகப் பேசினாள்.

“தப்பில்லை.. இந்த உலகத்துல யாருமே என்னை நம்பாத போது நம்பின ஒரு ஜீவன்.. இனி என்னால ஒன்னுமே பண்ண முடியாதுன்னு நான் நினைச்சு இருந்தப்போ எனக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணினாங்க.. பணம் விஷயத்துல, நான் அவங்களைப் பார்த்த பிறகு ரொம்ப ஸ்ட்ராங்.. அவங்களோட அப்பா பிசினெஸ் விஷ்வா மேற்பார்வையில நான் பார்த்துக்கறேன்!”

“என்னோட ஃபிரண்ட்ஷிப்னால ரஞ்சனிக்கு ரொம்ப கோபம்.. அதனால வர்ஷினிகிட்ட அவ பேசினது இல்லை, அவ பேசாததால அவங்க வீட்லயும் யாரும் பேசலை.. இங்க இந்தியா வர்ற வரைக்கும்!” என,

“உனக்கு ரஞ்சனிக்கும் என்ன?” என்றாள். அவளிற்கு எதுவுமே தெரியாது.  

அஸ்வின் சொல்ல வேண்டாம் என நினைக்கும் போதே.. அவனின் முகத்தை பார்த்தே “கண்டிப்பா நீ சொல்லணும்” என 

“நான் ரஞ்சனியை லவ் பண்ணினேன், ஆனா அவகிட்ட சொன்னதில்லை. அந்த ஃபைனான்ஸ் ப்ராப்ளம் வந்த போது, அவங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் சண்டை வந்த போது, அவளை மிஸ் பண்ணிடுவனோன்னு அவளை கூப்பிட்டு என்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு மிரட்டினேன்… ரொம்பவுமே எக்ஸ்ட்ரீம்மா, அதனால தான் அவ அவசரமா யார் கிட்டயும் சொல்லாம பத்துவைக் கல்யாணம் பண்ணினா, உனக்கு அவளுக்கும் கூட திரும்ப பேச்சு வார்த்தை இல்லை!” என அஸ்வின் பேசப் பேச அதிர்ச்சி.  

“எங்கேயோ எதோ ஒரு புள்ளியில எல்லா பிரச்சனை ஆரம்பிக்கறதுக்கும் நான் தான் காரணம்” என ஒப்புக் கொடுத்தவன்..  

“தோ, இந்த பொண்ணு யாரு என்னன்னு கூட எனக்கு அப்போ தெரியாது. ஆனா ஈஸ்வர் மேல இருந்த கோபத்துல இவங்க ரெண்டு பேரும் பேசி நிக்கறதை இளைய தலைமுறையின் டேடிங் கலாசாரம், ரகசிய இரவு சந்திப்புகள்ன்னு, போட்டோ வோட பேப்பர்ல வரவைச்சேன்”

ஐஸ்வர்யாவிற்கு அஸ்வின் பேசப் பேச, அதிர்ச்சி! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

“அதுக்கு தான் அவங்கப்பா என்னை ஜெயில் அனுப்பினார்”

“இத்தனையும் செஞ்சும், நான் தான் செஞ்சேன்னு  தெரிஞ்சும், என்னை அவ நம்பினா!” என சொல்ல,   ஐஸ்வர்யா பேச்சற்று போனாள்..

“இப்போ அதன் சுவடுகள் தடையங்கள் எதுவும் என்கிட்டே கிடையாது! கிடையாமப் போனதுக்கு காரணமும் அவங்க தான்! வாழ்க்கை திரும்ப திரும்ப என்னை தண்டிச்சிருந்தா, நான் திரும்பவும் தடம் மாறியிருக்கக் கூட வாய்ப்பிருக்கு.. அது எதுவும் ஆகாம போனதுக்கு காரணம் வர்ஷினி.. இப்போ என்னோட இந்த சௌகர்யமான வாழ்க்கை அவங்களால”

“அவங்க சொல்லலாம் நான் காப்பாத்தினேன்னு.. அது வர்ஷினின்னு இல்லை யார்னாலும் நான் செஞ்சிருப்பேன்.. அதுக்கு பதிலுக்கு ஏதாவது செஞ்சிட்டு போயிட்டே இருந்திருக்கலாம், இப்படி கூட வெச்சு என்னை உயர்த்தி விடணும்னு எதுவும் கிடையாது.. அதுவும் நான் வர்ஷினிக்கும்.. அதையும் விட விஸ்வா கொடுத்திருக்குற பிரச்சனைக்கு.. பலசமயம் யோசிச்சு இருக்கேன்.. வர்ஷினின்ற ஒரே காரணத்துக்காக விஸ்வா என்னை எதுவுமே பண்ணலை, பண்ணவும் மாட்டான்!”                            

தன் அண்ணன் எப்போது இவ்வளவு பெரிய மனிதன் ஆகிப் போனான் என ஐஸ்வர்யா பார்த்து இருக்க, சஞ்சய் இவர்களை தான் பார்த்து இருந்தான்… வெகு முன்பே வந்துவிட்டாலும் இருவரும் பேசி நிற்பதை பார்த்து பொறுமையாக நின்றிருந்தான்.

இருவரும் கிளம்புவதை பார்த்தவன் வேகமாக அருகில் வந்து… “உங்க தங்கையை நான் கல்யாணம் பண்ண இஷ்டப்படறேன், நீங்க ஓகே சொன்னா நான் அவங்க கிட்ட கேட்கறேன்? கேட்கட்டுமா?” என,

அஸ்வின் முகத்தில் தானாகப் புன்னகை மலர்ந்தது.. “ஊர் உலகத்துலயே இப்படி யாரும் ப்ரபோஸ் பண்ணியிருக்க மாட்டாங்க” என சொன்னவன்,

சஞ்சய் ஐஸ்வர்யாவை பார்க்க.. அவள் இன்னும் அஸ்வின் பேச்சிலிருந்தே மீளவில்லை.. இதில் சஞ்சயின் பேச்சு அபஸ்வரமாகத் தான் ஒலித்தது….  

“போகலாமா அஸ்வின்” என சொல்லிப் படியிறங்க..       

அஸ்வின் தான் சஞ்சய்க்கு பதில் சொல்லும்படி ஆகிற்று… “இங்க யாரும் சின்ன பசங்க கிடையாது, என் தங்கை ஓகே சொன்னா எங்க யாருக்கும் அப்ஜக்ஷன் கிடையாது.. ஆனா நீங்க அவளை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது” என்றான் தெளிவாக..

“டிஸ்டர்ப் பண்ற அளவுக்கு தைரியம் இருந்தா எட்டு வருஷமா அவங்களை மட்டும் நினைச்சு இருப்பேனா” என பதில் சொல்ல..

ஐஸ்வர்யா நடந்த போதும் இது காதில் விழ.. எட்டு நீண்ட வருடங்கள், ஈஸ்வர் அவளிடம் காதலை சொல்லும்முன், அதை அவள் ஏற்கும்முன்!

இவன் முன்னமே சொல்லியிருந்தால் ஈஸ்வர் என்ற மனிதன் என் வாழ்க்கையில் வந்திருக்க மாட்டானே.. ஐந்து வருடமாகத் தன் தொண்டைக்குள் எதோ சிக்கிக்கொண்ட மாதிரி, துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், ஒரு அவஸ்தை எப்போதுமே..

ஈஸ்வர்! ஈஸ்வர் மட்டுமே அதற்கு காரணம்.. ஒரு வேளை இவனும் ஈஸ்வர் போலத் தன் பின்னால் சுற்றியிருந்தால், காதலை சொல்லியிருந்தால், ஏற்று இருப்போமா?

ஈஸ்வரை காதலித்தாளா தெரியாது? அவன் காதலை தானே ஏற்றுக் கொண்டாள்.. ஒரு வேளை இவன் முன்னமே சொல்லியிருந்தாள்..   

அந்த ஆத்திரம் தோன்ற… “ஏன் அப்போவே சொல்லலை?” என்று கோபமாகக் கேட்க..

இதை சஞ்சய் எதிர்பார்க்கவில்லை.. எப்போதும் போல விழித்து நிற்க..

“நீ வா, என்ன பேசற?” என ஐஸ்வர்யாவை அதட்டி அஸ்வின் தான் இழுத்து போனான்..

சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்கத்தில் சேராது!

 

Advertisement