24

 

   குழந்தையுடன் வீட்டிற்குள் வந்தவன் லோஜியிடம் கொடுத்துவிட்டு ரூமிற்குள் வர ஜன்னலோரம் நின்று தெருவையே வெறித்திருந்தாள் ராசி. அடுக்குமாடிக் குடியிறுப்புப் பகுதியில் தோட்டங்களா நம் கண்ணுக்குத் தெரியப்போகிறது. அடுத்தவீட்டு சுவரும் தெருவோர மரங்கள் மட்டுமேயல்லவா.

   அவள் முன் வந்தவன் அவளையே பார்த்திருக்க சிலபல நிமிடங்களுக்கு மேல் கணவனின் அந்த பார்வை வீச்சினைத் தாங்க முடியாமல் வெளியே செல்லப் போனவளைத் தன்புறம் இழுத்தான் சிரிப்போடு. “இருக்காதா பின்ன! அவனின் பார்வை அவளை சலனமடையச் செய்கிறதல்லவா!”

   அவனைப்பற்றி தெரிந்திருந்ததால் அவனின் இழுப்பிற்கு தடுமாறாமல் நிற்க… “ஆஹா! உஷாராகிட்டாயா, என் பொண்டாட்டி” என்றான் சத்தமாகவே.

   “ஆமா உஷாராயிருக்காங்க. அப்படியெல்லாம் இருந்திருந்தா நீங்க அந்த வார்த்தையை சொல்லியிருக்க மாட்டீங்கள்ல.”

   “என்னமா கோபம் என்மேல.”

   “உங்க மேல கோபமா? உங்க மேல கோபப்பட நான் யாரு சார்?”

   “ராசீ…” என அதட்டியதும், அவள் சட்டென்று நாக்கைக் கடிக்க… “என்ன பேசுறன்னு புரிஞ்சிதான் பேசுறியா? எனக்கு நீ யாருன்னு உனக்குத் தெரியலைல்ல. தெரிய வச்சிருக்கணும் தப்பு பண்ணிட்டேன். முதல்ல நீ நம்ம வீட்டுக்கு வா போகலாம்” என்றான் கோபமாக.

   “என்னது!” என்று அவள் அதிர…

   அந்த கோபம் குறையாமலேயே, “ஆமா நான் யாருன்னு உனக்கு புரியவைக்க வேண்டாமா?”

   அதிர்ந்தவள் மூளை அதிவிரைவில் முடிவெடுத்து அவனை கவிழ்ப்பதாக எண்ணி, “மாமா ப்ளீஸ்! நான் இனி அந்த மாதிரி பேசமாட்டேன். நீங்க என் ஹஸ்பண்ட் தான். ப்ளீஸ் எனக்காக. அம்மாஆச்சிக்காக!” என்று கெஞ்சியவாறு அவனை கட்டியணைக்க… அவளின் உடல் அதிர்வை உணர்ந்தவனோ, இப்பக்கூட அம்மாஆச்சிக்காகன்னு சொல்றியேடி. “உன் மனசைக் கொன்னு ஏன்டி என்கிட்ட இறங்கி வர்ற. உன் உடலோ, மனசோ ஏத்துக்காத ஒண்ணைச் செஞ்சி உன்னையே நீ ஏமாத்திட்டிருக்கியே” என்று கண்கள் கலங்க அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தவன் சும்மா சொன்னேன்மா. நம்ம வீட்டுக்குப் போனாலும் லோஜிம்மாவோட தான் போவோம்.

   கண்களில் சந்தேகத்துடன் பார்த்தவளை, “உண்மைடா. எனக்கும் உங்களை விட்டா யார் இருக்காங்க சொல்லு” எனும்போது அவன் குரலில் உள்ள வருத்தத்தை உணர்ந்து… “ஏன் நானில்லை” என சொல்ல வந்தவள் எதையோ நினைத்து அதை விட்டாள். சரி போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வா என்றான்.

   இரவு உணவு முடித்து படுக்க வந்தவளை தன்புறம் அமரவைத்து அவளுக்குத் தெரியாமல் பூஸ்டில் தூக்க மாத்திரை போட்டுக் கொடுக்க… ‘வேண்டாம்’ என்றவளை மிரட்டி குடிக்கவைத்து அவள் தினமும் செய்வதை தடுத்து தன்மேலேயே படுக்கவைத்து தட்டிக்கொடுக்க, சில நிமிடங்களில் அசந்து உறங்கினாள்.

   கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாக தூக்கம் இல்லாமலிருந்ததால், மாத்திரையையும் மீறி நடுவில் விழித்தவளை தட்டிக் கொடுத்தபடி விழித்திருந்தான்.

   அதிகாலையில் கண்களைத் தழுவிய நித்திராதேவி, அதே வேகத்தில் காலையிலேயே சென்றுவிட, சரத் எழுந்து மணியைத் தொடர்பு கொண்டு பேச… சற்று நேரத்திற்கெல்லாம் விஜியை இறக்கிவிட்டு, லோஜிம்மாவுக்கு எதுவும் தெரியக்கூடாது. ராசிக்கு ஒண்ணுன்னா அவங்க நொறுங்கிடுவாங்க. ஸோ, கேர்புல்லா பேசணும் என்று சரத்தும் மணியும் வெளியே சென்றார்கள்.

   “ஹாய் ஆச்சி! எங்க உங்க வீட்டு ஜான்சிராணி.”

   “இன்னும் எழுந்திருக்கலைமா. எப்பவும் இவ்வளவு நேரம் தூங்கமாட்டா. என்னன்னு தெரியலையே” என்று கவலைப்பட…

   “அட ஆச்சி நீங்க ஏன் பீல் பண்றீங்க? நல்லா தூங்கி எழுந்து வரட்டும்” என்று லோஜியிடம் வழவழத்துக் கொண்டிருக்க… எட்டுமணியளவில் எழுந்து வந்தவள் தலையைப் பிடித்தபடி வந்து ஹாலில் அமர.. பூஸ்ட் கொடுத்தவாறு என்னவென்று விசாரித்த லோஜியிடம்…

   தெரியலை அம்மாஆச்சி தலையை வலிக்குது என்றபடி பூஸ்ட் குடிக்க, சூடான பானம் உள்ளே செல்ல வலி குறைந்தது போலிருந்தது. அதன்பிறகே விஜியைக் கவனித்தவள், “வாங்க அண்ணி. சாரி வந்து ரொம்ப நேரமாச்சா?”

   “சே..சே.. ஜஸ்ட் ஒரு மணி நேரம்தான் ஆச்சிது” என்றவள் குரலில் சுரத்தே இல்லை.

   “என்னண்ணி டல்லா தெரியுறீங்க?”

   “ப்ச்.. ஒண்ணுமில்லமா.”

   ‘அண்ணி எதுவோ இருக்கு. என்னன்னு சொல்லுங்க?’

   “உன்கிட்ட தனியா பேசணும் ராசி. எனக்கும் என் பிரச்சனையை சொல்ல உன்னை விட்டா வேற வழி தெரியல. மனசுக்குள்ளேயே போட்டு எவ்வளவுதான் குமையுறது.” அவங்க வேலையிருக்குன்னதால என்னை இங்க விட்டுட்டுப் போகச் சொன்னேன்.

   சரி அண்ணி வாங்க ரூம்கு போகலாம். “அம்மாஆச்சி நான் அண்ணியோட டூயட் பாடிட்டு வர்றேன். அதுவரை எங்க ரூம் பக்கம் வந்திடாதீங்க.”

   ஆமாமா. “உங்க டூயட்ட பார்த்துட்டாலும். போ போ வேலையைப் பாரு” என்றார். சிரித்தபடி இருவரும் மாடியிலுள்ள ராசியின் அறைக்குள்; சென்றதும், ‘சொல்லுங்க அண்ணி’ என்ற ராசியைக் கட்டியணைத்து அழ ஆரம்பித்தாள்.

   விஜியின் அழுகைக்குக் காரணம் தன்னுடைய கணவனின் விளையாட்டுத்தனத்தால் தான் இந்தப் பெண்ணின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது என்றெண்ணி.

   விஜியின் அழுகையில் பதறி தன்னிடமிருந்து விலக்கி,

என்னாச்சி? அண்ணாவுக்கும் உங்களுக்கும் சண்டையா என்ன?” இல்லையென்று விஜி தலையசைக்க… “என்னாச்சின்னு சொன்னால்தான தெரியும். தலையாட்டலை வச்சி சொல்ல நான் என்ன சித்தியா.”

   ‘பே’ என விழித்து ‘சித்தினா” என…

   “பாய்னா சித்தன். நான் கேர்ள் சித்தனுடைய பெண்பால் சித்தி. அதான் சித்தி சொன்னேன். தன்னருகில் அமரவைத்து இப்ப சொல்லுங்க அண்ணி உங்க மனசுல என்னயிருக்கு?”

   “நீயும் சொல்லியிருக்கலாம் ராசி” என மனதினில் நினைத்து எங்களுக்கு மேரேஜாகி நாலு வருஷமாகுதுன்னு உனக்கே தெரியும்.

   ம் தெரியும். “எங்களுக்கு இன்னும் குழந்தையில்லை ராசி. ஊர்லயிருந்து போன் வந்தாலோ, தெரிஞ்சவங்க பார்த்தாலோ கேட்கிற ஒரே வார்த்தை என்னமா விசேஷம் எதுவுமில்லையா. சும்மாவாயிருக்கன்னு தான். நான் என்ன செய்யட்டும் சொல்லு. அதென்ன பொம்மையா நம்ம கையால செஞ்சி உயிர் குடுத்து வளர்க்க. அதெல்லாம் தானா வரணும் ராசி. நானும் உங்க அண்ணாகிட்ட எதுவும் சொல்றதில்லை. அவங்க பார்க்கிற வேலைக்கு கவனம் சிதறினா உயிர் பிரச்சனை வரக்கூட சான்ஸ் இருக்குன்னு உனக்கே தெரியும்தான.”

   “அண்ணீ” என பதறியபடி ராசி எழுந்து பின் அமர்ந்தவள் உடல் நடுங்கியது. “இதை நான் இதுவரை நினைக்கவே இல்லண்ணி. தன் கணவனின் தொழில் ரிஸ்கான ஒன்று என்பதை எப்படி மறந்தேன். எங்கே அவனைக் கவனித்தால் தானே, என்னுடைய சுழற்சியிலேயே இருந்தால், அவனுக்கு எதாவது என்றால் கடவுளே! நினைவே அவளைக் கொன்றது. அவன்தானே பொய் என் நேசம் நிஜம் தானே!”

   “ராசி என்னாச்சிமா?” என்ற விஜியிடம்…

   “நான் இதுவரை இதை யோசிக்கவே இல்லண்ணி.”

   “எதைமா?” என்றபடி அவளை ஆராய்ச்சியோடு பார்த்தாள்.

   சரத், மணியண்ணா வேலைபற்றி… “ப்ச்.. அதுவா அது அவங்களோட தொழில்மா. ஒருத்தருக்கு சாவு வரணும்னா எப்படி எந்த பொந்துக்குள்ள இருந்தாலும் வரும். நான் சொன்னது அவங்களுக்கு மனசளவுல ப்ரஷர் குடுக்கக்கூடாதுன்னு.”

   “கண்டிப்பா அண்ணி. நானும் இதை ஃபாலோ பண்றேன்.”

   “ஷப்பா! வந்ததுக்கு நானே தனியா ஒரு நல்லது பண்ணிட்டேன். உள்ளுக்குள் தட்டிக்கொடுத்து.. பின் அவளிடம், “அதான் ராசி என்னோட தனிமையில் குழந்தை ஏக்கம் அதிகமா வந்து மெணடலி டிஸ்டர்ப் ஆகுறேன். காரணமே இல்லாம அவங்க மேல கோபப்படுறேன். எனக்கு நானே தண்டனை குடுத்துக்கலாம்னும் தோணுது. வெட்கத்தை விட்டு சொல்லணும்னா நைட் அவங்க வேண்டாம்னு சொன்னாலும் குழந்தைக்காக வலிய போய் டிஸ்டர்ப் பண்றேன். எங்களது லவ் மேரேஜ் இருந்தாலும் நானே போய்ன்றது.. நிறுத்தி நிதானமாக கொஞ்சம் அசிங்கமா இருக்கு ராசி” என்று தலைகவிழ்ந்தபடி சொல்லி ராசியின் முகமாறுதலை அளவிட்டாள்.

   “அண்ணி உங்களுக்குமா!!” என அதிர…

   அதில் அதிர்ந்த விஜி, “உங்களுக்குமான்னா! வேற யாருக்கு ராசி இந்த பிரச்சனை?” கண்ணைத் துடைத்தபடி நிமிர்ந்து கேள்வி கேட்க…

   “அ..அது ஒரு ப்ளோல வந்திருச்சி” என்றாள் சமாளிப்பாக.

   விஜியிடம் மணி முழுவதும் ராசியைப் பற்றி சொல்லவில்லை. இருந்தாலும் “இரவு விஷயம் ராசியின் பல்ஸ் பார்க்க சொன்னது. அது அதிகமாகவே பார்த்தது. ‘சே.. அண்ணி அப்படி யாராவது பண்ணுவாங்களா’ என்ற பதிலை எதிர்பார்த்திருக்க, அண்ணி உங்களுக்குமாவில் அதிர்ந்து போய் ராசிக்கு பதில் சொல்ல, ஓ.. என்று இதுக்கு என்ன சொல்யூஷன் தெரியல ராசி. அதான் உன்கிட்ட மனசுவிட்டுப் பேசினா கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்னு தோணிச்சிது” என்றாள்.

   சில வினாடிகள் யோசித்த ராசியின் முகம் பிரகாசமாக, அண்ணி நான் சொன்னா தப்பா எடுத்துக்ககூடாது. “நீங்க படிச்சிருக்கீங்க புரிஞ்சி பதில் சொல்லுங்க. நாம ஏன் சைக்யாட்ரிஸ்ட் பார்க்கக்கூடாது?”

   “ஆஹா! ஆடு வகையா வந்து மாட்டுதே என மனதினுள் சிரித்து, நானும் அதை யோசிப்பேன் ராசி. தனியா போறதுக்கு ஒரு மாதிரியிருக்கு. இதுமாதிரி விஷயத்தை டாக்டர்கிட்ட பேசவும் சங்கடமாயிருக்கு. உங்க அண்ணாகிட்ட சொன்னா ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு சொல்லல. ஸோ எல்லாத்தையும் மனசுல போட்டுப்போட்டு புழுங்குறேன் ராசி” என்று புளுகி வராத கண்ணீரை துடைத்து அவள் தோள் சாய்ந்தாள்.

   விஜியின் தோளை ஆதரவாக தடவிக்கொடுத்து, நாம போகலாம் அண்ணி என்றாள். அவளுக்குமே தனக்கும் பார்த்தால் என்னவென்று தோன்றியது. தான் படும் சித்ரவதையும் கொஞ்சநஞ்சம் அல்லவே!

   “தேங்க்ஸ் ராசி. நீதான் ஒர்க் பண்றியே. இன்னைக்கு நாளைக்கு விட்டா உனக்கு ஃபுல் ஒர்க்கிங் டே ஆச்சே. என்ன செய்யலாம்” என்று புலம்ப…

   இன்னைக்கே போகலாம் அண்ணி. “நிஜமா” என்பதுபோல் பார்த்தவளிடம்… “நிச்சயமா போறோம்.” பேங்குக்கு போற வழியில ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் பார்த்திருக்கேன். ஆனா, அது நம்ம ஆஃபீஸ்கிட்ட இருக்கே என யோசிக்க…

   ‘இன்னைக்கு ரெண்டு பேருமே வெளிய போறாங்க ராசி. நைட் கூட வர லேட்டாகும் சொன்னாங்க.’

   அப்ப சரி நான் பத்து நிமிஷத்துல கிளம்பி வர்றேன் சாப்பிட்டு கிளம்பலாம்.

   சரிமா நான் ஹால்ல வெய்ட் பண்றேன் என்று வெளியே வந்தவள் மணிக்கு மெசேஜ் தட்டிவிட்டு ஷோபாவில் அமர்ந்தாள். “இதுவரை போட்டு வாங்கிய இந்த நல்லவளுக்கு மூன்று மாத கரு வயிற்றில். இதை ராசியிடம் சொல்வதற்காகத்தான் இன்றைய நாளை நினைத்திருந்தாள். முந்தைய தினம் கணவன் மேலோட்டமாக சொன்னதைக் கேட்டு அவனுக்;கு அர்ச்சனைகள் வழங்கினாலும், அவன் போட்ட கோட்டில் ரோடே போட்டாள்.” எங்கே ராசி கண்டுபிடித்து விடுவாளோ என நினைத்திருக்க.. அவளோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டாள்.

   இருவரும் டாக்டரைக் கேட்டு பத்து நிமிட காத்திருப்பிற்குப் பின் உள்ளே அழைக்க, அவர்களை புன்னகையுடன் வரவேற்று அமரச் சொன்ன டாக்டர்.தியாகுவிற்கு ஐம்பது வயதிருக்கும். இருவரையும் அளவிட்டபடியே பேச்சை ஆரம்பித்தார். “என்னமா.. உங்க ரெண்டுபேர்ல யாருக்கு பிரச்சனை? என்ன பிரச்சனைன்னாலும் தயங்காம உங்க அப்பாமாதிரி நினைச்சி சொல்லுங்க?”

   “எனக்குத்தான் டாக்டர்” விஜி சொல்லி சங்கடமாக பார்க்க…

   என்னடா இங்க வரவேண்டியதா ஆகிருச்சேன்னு பயப்படுறீங்களா. என்னை ஒரு ஃப்ரண்டா நினைச்சி சொல்லுங்க. உங்க விஷயம் என்னையும் உங்களையும் தாண்டி எங்கேயும் போகாது.

   ராசியிடம் குனிந்து “எனக்கு ஒருமாதிரியா இருக்கு ராசி. படிச்சிருந்தாலும் வெளி ஆளுங்ககிட்ட அதிகம் பேசி பழக்கமில்லைல்ல. நீ பேங்க்ல வேலை செய்றதால தைரியமா எல்லார்கிட்டேயும் பேசுவதான, நான் உன்கிட்ட சொன்னதை சொல்லிடுறியா?”

   “அண்ணி நானா? நான் எப்படி?”

   “ராசி ப்ளீஸ்யா” என்றாள் கிசுகிசுப்பான குரலில். சரியென தலையாட்டி டாக்டரிடம் திரும்பி, நான் சொல்றேன் டாக்டர் என…

   நல்லா கேளுமா, என்னோட கண்ணைப் பார்த்து பேசணும். அப்பத்தான் நீங்க சொல்றது உண்மைன்னு தெரிஞ்சிக்க முடியும்.

   நிமிடங்கள் கூட கிடையாது சில வினாடிகளே அவரின் கண்களைப் பார்த்தவள் ஒருவித மயக்க நிலைக்குச் செல்ல… “பிறந்தது முதல் கிரிதரன் அவள் வாழ்வில் வந்தது இறந்தது. சரத் தன் வாழ்வில் நுழைந்தது. அவனின் மறுப்பால் தான் நொறுங்கியது. லோஜியினால் திருமணம் முடித்து லோஜிக்காக தான் மனதிற்கு பிடிக்காத விஷயத்தை செய்தது என்ற ஒவ்வொன்றாய் சொல்லும் போதும், துன்பம், தவிப்பு, காதல், துரோகம், அருவருப்பு, கோபம் அனைத்தையும் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தாள்.”

   இதையெல்லாம் அவளுக்கேத் தெரியாமல் பார்த்திருந்த சரத்திற்கோ, “அவன் கணித்ததாகவே இருந்தாலும் அவளின் வாய்மூலம் கேட்டதில் மனதளவில் பெரும்பாரம் ஏறியது. இதுவரை இதை கவனிக்காமல் போனோமே என்ற இயலாமையிலும், கோபத்திலும் தன்னைத்தானே நொந்து கொள்வதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. அவளை அணைத்து ஆறுதல் சொல்லக்கூட தனக்கு தகுதியில்லை என்றெண்ணினான்.”

   விஜியின் கண்களில் கண்ணீருடன் மணியின்மேல் கோபமும் ஒருங்கே வந்தது. “வீட்டிற்கு சென்று கணவனுக்கு வேப்பிலை அடித்தது தனிக்கதை.”

   தன்னுடைய அனுபவத்தில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது போல் டாக்டர் அமர்ந்திருக்க… ராசி சொல்லி முடித்ததும், அவர் தன் பார்வையை அவளிடமிருந்து விலக்க… தன் சுயநினைவு வந்தவள் டாக்டரின் முகம் பார்க்க… “நீங்க சொன்னதை வச்சிப் பார்த்தா உங்க அண்ணிக்கு பெரிய ப்ராப்ளம்லாம் இல்லமா. சீக்கிரம் க்யூர் பண்ணிடலாம்” என…

   “தேங்க்யூ டாக்டர்.”

   சரிமா நாளைக்கு காலையில பதினோரு மணிக்கு வந்திடுங்க என்று அனுப்பி வைக்க… சரத் அங்கு வந்தான்.

   “என்ன சரத் உங்க ஒய்ஃப் சொன்னது கேட்டுச்சா? உங்க ஒரு வார்த்தையால அந்தப் பொண்ணோட ஒட்டு மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கிக்கிட்டா. பகல்ல பக்கம் பார்த்து பேசணும்னு, உங்களை மாதிரி டிடெக்டிவ்கு தெரியாது.”

   சாரி டாக்டர் என்று தலைகவிழ்ந்தவன், பின் நிமிர்ந்து “இதை எப்படி சரிபண்ணலாம் டாக்டர்.”

   “ரொம்ப நாளாகல சரத். சமீபத்திய பிரச்சனை தான் சரிபண்ணிடலாம். இனிமேல் அவங்களுக்கேத் தெரியாம உங்களை புரிய வைக்கிறது, நான் குடுக்கிற டேப்லெட்ஸை போட வைக்கிறது உங்களோட சாமர்த்தியம்.”

   டாக்டரிடம் விடைபெற்று வந்தவன், அதன்பின் ராசியைக் கவனித்து, மாத்திரையை எந்தெந்த முறையில் கொடுக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து அவன் கண்டுபிடித்தது “பூஸ்ட்.” அவனே யாருமறியாமல் கலக்கி அதை குடித்துப் பார்த்து, டேஸ்டில் வித்தியாசம் தெரியவில்லை என்றதும் காலையில் சாப்பிட்டு முடித்ததும் பூஸ்ட் போட்டு அவனே கொடுக்க… லோஜியை முன்னிருத்தி கொடுப்பதால் மறுக்க வழியில்லாமல் வாங்க ஆரம்பித்தாள். இரவும் அதே தொடர… அவளுக்கும் அதே பழக்கமாக ஆரம்பித்தது. இரவு மட்டும் என்ன ஆனாலும் அவளாக இறங்கிவர அவன் அனுமதிக்காமல் அதை நாசூக்காக மறுத்தான்.

   இரண்டு மூன்று முறை கவுன்சிலிங் போகும் போதே ராசி புரிந்து கொண்டாள் ட்ரீட்மெண்ட் தனக்குத்தானென்று. பெரிய பொறுப்பிலிருக்கும் புத்திசாலியான பெண் இதை அறியாமலிருந்தால் தானே தவறு. அழைத்து வந்த விஜியை கேள்விகளால் குடைய அவளும் ஒத்துக்கொண்டாள் ட்ரீட்மெண்ட் உனக்குத் தானென்று. இது ராசியை வேறுவிதமாக பாதித்தது. “தன் அந்தரங்கம் தங்களைத் தாண்டி இருவருக்கு தெரிந்திருக்கிறதே என்று.”

   “என்னை இன்னும் என்னெல்லாம் செய்யப்போறீங்க அண்ணி? கோபத்துடன் ஆரம்பித்து, ஏன் இப்படி” என்றாள் அழுகைக் குரலில்.

   “நீ அண்ணின்னு சொல்றது நிஜமா உணர்ந்துதான் சொல்றியா? இல்லை வெளிப்பேச்சா ராசி?”

   ‘அண்ணி நான் என்ன கேட்கிறேன்.’

   ‘ப்ச்… ராசி என் கேள்விக்கு பதில்?’

   ‘உரிமையா உண்மையாதான் கூப்பிடுறேன்’ என்றாள் உணர்ந்து.

   அப்ப நான் சொல்றதை நிதானமா கேளு என்றவள் சரத், மணியின் திருவிளையாடலை சொல்லி விடலாமா என்று நினைத்து அதை விடுத்து, “டாக்டர்கிட்ட பேசும்போது எல்லாத்தையும் மறைக்காம சொல்றோமே அது எதுக்கு? அதை ஏன் அசிங்கம்னு நாம நினைக்கிறதில்ல?”

   “அது ட்ரீட்மெண்ட் அண்ணி.”

   “அவரும் ஒரு ஆண் வெளி மனுஷன்தான. அவர்கிட்ட சொன்னா ட்ரீட்மெண்ட். இதையே சின்ன வயசிலிருந்து பழகின ஃப்ரண்;ட்கிட்ட சொன்னா அசிங்கமா. ஒரு வகையில டாக்டரைவிட, புரிஞ்ச ஃப்ரண்ட் அவருக்கும் மேல இல்லையா. உன்மேல உயிராயிருந்த சரத் அண்ணா அப்படி பேசினாங்கன்னா, அதுக்கு எதாவது காரணம் இருக்கும்னு ஏன் நீ யோசிக்கலை? காரண காரியங்களின்றி இவ்வுலகில் அணுவும் அசையாது! என்றாள் தத்துவமாய்.

   “இவங்ககிட்ட சரத் அண்ணா என்ன சொன்னாங்க தெரியாது. ஆனா அவங்க என்கிட்ட உனக்கு அன்னைக்கு தங்களோட பேச்சைக் கேட்டதால பிரச்சனைன்னு சொன்னாங்க முழுசா சொல்லல. உன்கிட்ட பேசினதுல முக்கால்வாசி நானா ப்ளே பண்ணினது. ஏன்னா உன்னோட சூழ்நிலையில நானும் இருந்திருக்கேன். வருஷக்கணக்கா குழந்தையில்லாம, என்னதான் இளவயது அப்படின்னாலும் காலம் தவறினா பயமும் தன்னாலேயே வந்திருது. என் பிரச்சனையில உங்கண்ணா எனக்கு சப்போர்ட்டா இருந்ததால வந்த பயம் திசை தெரியாம ஓடிப்போச்சி. உனக்கொரு விஷயம் தெரியுமா ராசி, உங்கண்ணா லவ் சொல்றதுக்கு இரண்டு வருஷம் எடுத்துக்கிட்டாங்க. முடிஞ்சவரை பார்த்துட்டு, இது வேலைக்காகாதுன்னு லெட்டரை வாங்கிட்டு எஸ் சொல்லிட்டேன். அவங்க சொல்ல தயங்கினாங்கன்றதுக்காக அவங்களோட லவ் பொய்யின்னு இல்ல. மேரேஜ்கு அப்புறம் உண்மையிலேயே ஹீரோ ஆகிட்டாங்க. இப்பவரை என்னை உள்ளங்கையில் வச்சி தாங்குறாங்க.”

   “சரத் அண்ணாவுக்கு நீன்னா உயிர் ராசி. இது நிஜம். பழகின உனக்கு தெரியாம இருந்தால்தான் ஆச்சர்யம்” என்று ராசியின் முகம் காண, அவளின் மௌனம் புரிந்து கொண்டாள் என்பதை உணர்த்த… சரி அதைவிடு, “உனக்கு கூடப்பிறந்த அண்ணன் இருந்து தங்கை உனக்கொரு பிரச்சனைன்னா பார்த்திட்டிருப்பாங்களா சொல்லு. நாங்க உன்னை அப்படித்தான் நினைக்கிறோம். அப்புறம் உன்னிஷ்டம்.”

   விஜியின் கைகளில் முகம் புதைத்து, “சாரி அண்ணி. உங்களுக்கு என்னை அடிச்சிக் கேட்கக்கூட உரிமையிருக்கு. நான் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறேன். முதல்நாள் நீங்க சொன்னதைக் கேட்டு நானுமே அதை யூஸ் பண்ணிக்கணும்னு தான் நினைச்சி வந்தேன்.”

   ம்… குட் இந்த மாற்றம் எனக்குப் பிடிச்சிருக்கு. அப்படியே சரத் அண்ணாவைப் பற்றியும் கொஞ்சம் யோசிமா.

   கண்டிப்பா அண்ணி என்னை மாத்திக்கிறேன். விஜியின் நம்பாத பாவனையில், “அதான் சொல்றோம்ல நம்புமா நம்பு. நாங்களும் நல்லவங்கதான்” என்று சிரிக்க…

   அவளின் சிரிப்பைக் கண்டதும் மனம் தெளிந்து, “அப்;படியே என் குழந்தைக்கு பெயர் செல்க்ட் பண்ணிடு ராசி.”

   “அண்ணி… சச்.”

   “யா புஜ்ஜிமா” என்று ராசியின் கன்னம் கிள்ள.

   “மேடம் இது ராசி. நாட் எ மணிகண்டன் ஓகே” என்றாள் எடுப்பாய்.

   “ஆஹா! பழைய ரௌடி இட்ஸ் பேக் போல.” ராசிக்கு ட்ரீட்மெண்ட் முடித்து ஆபீஃஸ் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சரத்தின் முன்னால் அவன்முன் கோபமாக அமர்ந்திருந்தார் மீனலோஜினி.