yen mannavan nee thane da 1

Advertisement

Ambal

Well-Known Member
Thanks malika madam,

Hi.. friends..

I am New Novel writer to this website.

eagerly looking for your kind feedback and comments.

Hope all will enjoy this part, a steeping stone for me in this tag.


என் மன்னவன் நீ தானே டா...



காற்றை கிழித்துக் கொண்டு வந்து அந்த ஏழு மாடி கட்டிடத்தின் முன்பு நின்றது அந்த ஆடிக் கார்.காரைக் கண்டு ஓடி வந்தான் அவனது பிஏ,அவனைக் ஒரு முறை முறைத்து விட்டு சென்றான் காரில் இருந்து இறங்கியவன்.அவனின் முறைப்பை கண்டு நடுங்கிக் கொண்டு அவனின் பின்னால் ஓடினான் பிஏ.

மேனேஜிங் டைரக்டர் என்ற பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ரூமின் கைபிடியில் அவன் கைவைக்கும் நேரம்

"எரும!! என்ன பன்ற.."என்ற குரல் கேட்டு அவன் அதிர்ந்து நின்றான்.

"எரும!!என்ன டா பன்ற.."என்று அதே குரல் கேட்டு இவன் குரல் உயர்த்துமுன் அவனது முகத்தில் யாரோ தண்ணீரை ஊற்றவும் அடித்துபிடித்து எழுந்து அமர்ந்தான் கிருஷ்ணன்.அமர்ந்தவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு

"ச்ச..இன்னைக்கும் கரட்டா நம்ம கனவு கலைஞ்சு போச்சே.."எல்லாம் இவனால என்று கண்ணாடியில் தன்னை தானே திட்டிக் கொண்டான்.

"எரும மாடே..திட்டினது போதும்..போய் ஆபிஸ் கிளம்பர வழிய பாரு..."என்று கேலி குரல் எழுப்பிக் கொண்டு இருந்தது அவனது குரலில் அவனுக்கு அவனே மொபைலில் செட் செய்து கொண்ட அலாரம்.

கிருஷ்ணனோ இது எதையும் காதில் வாங்காமல் அடுத்து சண்டையை தனது தாய் தந்தை படத்தின் முன்பு செய்து கொண்டு இருந்தான்.

"என்ன சிரிப்பு பத்து உனக்கு,நீ பாட்டுக்கு என்னை தனியா விட்டு விட்டு உன் புருஷனோடபோய் ஜாலியா செட்டில் ஆயிட்ட,இங்க நான் தனியா கஷ்ட்டபடுறத பார்த்து சிரிக்கிறியா!!"என்றான்.

"டேய் பையா!!ஏன்டா கோபபடுர உனக்கு போர் அடிச்சா நீயும் இங்க வந்துடு நாம எல்லாம் ஒன்னா இருக்கலாம்.."என்றார் போட்டோவில் இருந்து சிரித்தபடி.அவரது அசிரிரியைக் கேட்டு கொண்டு இருந்தவனோ ஒரு நிமிடம் ஜர்க்காகி பின்

"பத்து நீ நினைக்கறது நடக்காது..நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு..என் கனவு நினைவாகுற வரைக்கும் நான் எங்கேயும் வரமாட்டேன்.."

"அது என்ன டா கனவு.."என்றார் பத்து.

"அதான் ம்மா ..நான் ஒரு கனவு கண்டேன்ல்்லஅதுல வர மாதிரி ஆடி கார்ல வரனும்,எனக்கு கீழ பத்து பேர் அவங்களுக்கு கீழ நாற்பது பேருனு பெரிய கம்பெனி நடத்தனும்..அப்புறம் எனக்குனு ஒரு தேவதை வருவா அவளை கல்யாணம் பண்ணி அவளோட..."

"டேய்..போதும் டா..என்ன கனவுனு கேட்டது ஒரு குத்தமா..கதை சொல்ல ஆரம்பிச்சிட்ட..டேய்..பையா கனவு கண்டா பத்தாது அதுக்கு நீ உழைக்கனும் டா..அதுக்கு நீ ஆபிஸ் போகனும்..போடா போய் கிளம்புர வேலைய பாரு..தினமும் காலையில என்ன டிஸ்டரப் பண்ணிக்கிட்டு.."

"பத்தூ!!நீ இன்னக்கி ரொம்ப பேசிட்ட இரு உன்ன உங்க மாமியாரை விட்டு டிஸ்டரப் பண்ணவைக்கிறேன்.."

"டேய்.. கண்ணா..ஆம்மா பாவம் டா..இப்பதான் அப்பாவோட ஹாப்பியா இருக்கேன் அதுக்கு உலை வச்சிடாத டா..்ளீஸ்.."என்றார்.

"அந்த பயம் இருக்கட்டும்..."என்று சொன்னவன் திரும்பி கடிகாரத்தை பார்த்தான்,மணி 8.30 என்று காட்டியது.

"அச்சோ..போச்சு..இன்னக்கும் லேட்..எல்லாம் உன்னால தான்.."என்று தாயின் படத்தின் முன்பு சண்டையிட்டு விட்டு துண்டை எடுத்துக் கொண்டு சென்றான்.

"போடா மகனே.. என்னையவே மிரட்டுரியா உனக்கு தேவதை கேட்குதோ..உனக்கு வர போறவ சண்டிராணியா தான் இருப்பா பாரு.."என்றார் சிரித்துக் கொண்டே,அவரது வார்த்தையை கேட்ட மேல்லோக தேவதைகளும் தாஸ்து என்று கூறினர்.

நம்ம ஜீரோ...சாரி ஹீரோ சார பத்தி ஒரு சின்ன அறிமுகம் ஜீரோ!! ச்ச ஹீரோ ஓட பேரு கிஷ்ணன்..அவுங்கம்மா கடவுள் கிட்ட வேண்டினது என்னவோ மாயக்கண்ணன் கிருஷ்ணனை அவரு போனாபோகுதுனு குடுத்தென்னவோ இந்த காமெடி கிருஷ்ணனை ..பத்மினி மற்றும் சங்கரனின் ஒற்றை வாரிசு.

கிருஷ்ணன் இரண்டு வயது இருக்கும் போதே சங்கரன் ஒரு விபத்தில் தவறிவிட்டார்.அதன்பின் பத்மினி தான் அவனக்கு எல்லாமும் ஆகி போனார்.பத்மினி மிகவும் கலகலப்பானவர் அதனால் மகனும் அவரை போலவே இருப்பான்.பத்மினி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.அதே பள்ளியில் கிருஷ்ணனும் படித்து முடித்தான்.பின்பு டெக்டைல்ஸ் இன்ஜினியரிங் முடித்தான்.வெளிநாட்டில் வேலை செய்ய நினைத்தான் ஆனால் அதற்கு பத்மினி ஒத்துகொள்ளவில்லை அதனால் தாய் மகன் இருவருக்கும் தினம் யூத்தம் நடக்கும்

"உன்னால தான் நான இப்படி கஷ்டபடுரேன் நல்ல வெளிநாட்டு கம்பெனி வேலை எல்லாம் விட்டுட்டு இங்க தேடி அலையிறேன்.."என்று வார்த்தைகளால் சாடுவான்.அதற்கெல்லாம் அசருபவரா பத்மினி"டேய் போதும் ஓவரா சீன் போடத நீ வாங்குன மார்க்கு ஒன்னை யாரும் கூப்பிடமாட்டான்.."என்பார்.உண்மையில் 12ல் சுமாரான மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தான் ஆட்ஸ் எடு என்று சொன்னதற்கு இன்ஜினியரிங் தான் என்று பத்மினியை கரைத்து சேர்ந்திருந்தான்,இன்ஜினியரிங் இவனை ஒரு வழிபன்னும் என்று பத்மினி நினைத்திருக்க,இவன் இன்ஜினியரிங்கை ஒரு வழி பண்ணியிருந்தான்.அதில் பத்மினி தான் முழிபிதுங்கி போனார் என்னலாம்.இதில் வெளிநாட்டில் வேலை என்றவுடன் பயந்துவிட்டார்,அதற்கு இன்னுமொரு காரணம் அவருக்கு இருதய கொளறு இருந்தது சிறு வயதில் இருந்தே.. அதை மகனிடம் மறைத்திருந்தார்.

இவ்வாறு இருக்க ஒரு நாள் இவ்வாறு சண்டையிட்டு படுத்தவர் காலை எழவே இல்லை,அதிகாலை எழும் தனது அம்மா எழாமல் இருக்க சென்று எழுப்பியவனுக்கு உயிரற்ற உடலை கண்டு அவனது உயிரும் சென்றது போல உணர்ந்தான்.எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தான் என்று அவனுக்கே தெரியாது வாசலில் காலிங் பெல் ஒலித்து அதில் உணர்வுக்கு வந்தவன் "அம்மா!!"என்று ஏறகுறைய அலறினான்.அவனின் அலறலை கேட்டு அவனை காண வந்த நண்பன் அக்கம்பக்கத்தார் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கண்டகாட்சியில் அனைவர் கண்ணும் கலங்கியது.கிருஷ்ணனின் நண்பன் தருண் தான் அனைத்தும் பார்த்துக்கொண்டான்.

அதற்கு பின் கிருஷ்ணனின் நிலைதான் மிகவும் மோசமானது பைத்தியம் போல் இருந்தவனைக் கண்டு மிகவும் கவலை கொண்டான் தருண் அவனும் வெளிநாட்டில் வேலை கிடைத்தால் இன்னும் சில நாட்களில் செல்ல வேண்டியதால் அவனும் கிருஷ்ணனை தேற்றுவதில் தோற்று போனான்.அப்போழுது அவனை காண வந்த அவனது தாயின் தோழி ரேகா மற்றம் அவரது கணவர் செல்வம் அவனது நிலைகண்டு வருந்தி பத்மினி கொடுத்தாக ஒரு கவரைக் கொடுத்தனர்.அதை வாங்கி பிரித்து படித்தவன் முகம் மெல்ல மாறத் துவங்கியது,அதை கவனித்த ரேகா அவனிடம் சென்று மெதுவாக தலைகோதி" கிருஷ்ணா..அம்மா எங்கேயும் போகல உன் கூட தான் இருக்கா..மனச தளரவிடாதப்பா என்றார்.சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் சென்றனர்.அவர்கள் சென்ற உடன் தருண்"டேய்..அம்மா என்ன எழுதிருக்காங்க டா..."என்றான்.

அந்த லட்டரையை அவனிடம் கொடுத்தான் கிருஷ்ணன்.அதை வாங்கி படித்தவன் விழுந்து சிரிக்கலானான்.காரணம் பத்மினி எழுதியிருந்தது அவ்வாறு

"டேய் பையா..என்னடா சோககீதம் வாசிச்சுகிட்டு இருக்கியா..டேய்..ஓவரா சீன் போட்ட ஒன்னையும் இங்க கூப்பிட்டுப்பேன் பார்த்துகோ..நான் அப்பா கூட ஜாலியா இருக்கேன் நீ என்ன பத்தி யோசிக்காம உன் வாழ்க்கையை பாரு..உடனே நான் தனியா இருக்கேன் அப்படினு சொல்லாத உன்னோட ஒவ்வொரு செய்கையிலும் நான் இருப்பென்,நீ இப்படி இருந்தா நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்.. நான் சொல்ரபடி நீ செய்யல நான பேயா வந்து தினமும் பயமுறுத்துவேன் பார்த்துக்கோ.அப்புறம் அம்மா உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணியிருக்கேன் டா,நாளைக்கு போய் செல்வம் அங்கிளை பாரு..(பின் குறிப்பு-ரொம்ப கஷ்டபட்டு இந்த வேலை வாங்கிருக்கேன்..)ஓகே பை டா .."

"டேய்.. அம்மா சூப்பர் டா..உனக்கு வேலை எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.."என்றான் தருண்.அவனை முறைத்தவன் முகத்திலும் மென்னகை.அதை கண்ட தருண் கட்டிக்கொண்டு இப்படியே இருடா,நான் நிம்மதியா ஊருக்கு போவேன் என்றான் உணர்ச்சிப்பெறுக்கோடு.பின் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான் தருண்.

கிருஷ்ணன் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக இருக்க கற்றுக்கொண்டான்.தனது அம்மா சொல்படி மறுநாள் செல்வத்தை சந்தித்து வேலை பற்றி கேட்டு தெரிந்துகொண்டு,அவரது உதவி உடன் சேர்ந்தும்விட்டான்.இதோ ஆறு மாதம் சென்றுவிட்டது கிருஷ்ணன் வேலையில் சேர்ந்து ஒருவாறு வேலையில் பொருந்திபோனான்.வீட்டிற்கு வந்தால் மட்டுமே தனிமை உணர்வான் அதுவும் சில காலங்களில் மறைந்தது.தாயின் படத்தின் முன்பு தினமும் சண்டையிட்டு சென்றால் தான் அவனது நாள் நன்றாக இருக்கும்.

கிருஷ்ணன் வேலை செய்வது ஆர்.ம் கார்மெண்ட்ஸ,அதில் துணிகளின் தரம் கண்டறியும் பிரிவில் செல்வத்தின் கீழ் வேலையில் இருந்தான்.செல்வம் அந்த பிரிவின் மேளாலர்.எல்லாம் நன்றாக சென்றுகொண்டு இருந்தது சேர்மன் ராம் மோகன் இருக்கும் வரை,அவர் இறந்து இரண்டு வாரம் ஆனவுடன் பிரச்சணை ஆரம்பம் ஆனது அடுத்து யார் சேர்மன் என்று அனைவரும் சற்று கலங்கினர்,ஆனால் இதெல்லாம் நம் கிருஷ்ணனை பாதிக்கவில்லை அவன் எப்போதும் போல் தாயிடம் சண்டையிட்டு கிளம்பிக்கொண்டு இருந்தான்.

ஆனால் அவன் அறியான் அவன் போகும் இடம் ஒரு பெண் சிங்கத்தின் குகை என்று,கிருஷ்ணன் அவளிடம் சிக்குவானா,இல்லை அவள் இவனிடம் சிக்குவாளா..பார்க்கலாம்.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என் மன்னவன்
நீதானேடா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top