அருமையான பதிவு விஜி.ஒரு கல்யாணம் நடக்கும் போது, நாலு கல்யாணம் முடிவாகும் என சொல்றது சரியா இருக்கு.நவீன்,ரிஷிக்கு போட்டியா,பாவம்டா ரிஷி.
அக்கா கல்யாணத்துல கன்னிகாவை பார்த்த நவீன் பெண் பார்க்க வர்றதா சொல்றான், நீங்க வசதியானவங்க சரியா வராதுனு கனி சொன்னாலும்,சக்தி வசதியில பாதி தான்னு சொல்லி பிடிவாதமா தங்கச்சிங்களை கூட்டிட்டு வந்திருக்கானே நவீன்.
திடீர்னு பொண்ணு பார்க்க வீட்டுக்கு வர்றதா நவீன் சொல்றானேனு நெனச்சா,ரிஷி,சக்தி கல்யாணத்துல கனிய பார்த்து ஜொள்ளு விடறதும்,சக்தி கேலி பண்றதையும் பார்த்து கனிக்கு,ரிஷிய
கல்யாணம் பண்ணிடுவானோ என நெனச்சு.திட்டம் போட்டு கனிட்ட பேசி பொண்ணு பார்க்க வந்திருக்கான் நவீன்.சபாஷ் சரியான போட்டி.
என் பொண்டாட்டி அழகுக்கு முன்னாடி என கன்னிகாவை பற்றி ரிஷியிடம் சொன்ன சக்திக்கு பணம்,அந்தஸ்தை விட குணம் தான் முக்கியம்னு இப்போதாவது புரியட்டும்.
பூஜா கல்யாணத்தில் மூன்றாவது மனுஷங்களா தள்ளி நின்ற வருத்தத்தில்,கன்னிகாவுக்கு தங்கள் அந்தஸ்தில் உள்ள மாப்பிள்ளை வேண்டும் என கனியின் பெற்றோர்கள் நினைக்க
சக்தியின் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக பூஜா,ரிஷியை கனிக்கு கொடுக்க மறுக்க,ரிஷி, கனியை விரும்புவது புரிந்து கொண்டு.நவீன் உடனே பெண் பார்க்க கிளம்பி வர,ரிஷிக்கு
நான்கு பக்கமும் ஆப்பு ரெடியாகிடுச்சு.ரிஷி என்ன செய்யப்போறான்.