Veezhvenendru Ninaiththaayo 51

Advertisement

ThangaMalar

Well-Known Member
மல்லிகாவின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப் படுத்திய முதல் கதை..
அன்று வீழ்ந்தேன், மல்லியின் மயக்கத்தில்..
இன்னும் எழவில்லை..
எழ விருப்பமுமில்லை...
நன்றி மல்லிகா..
 

Joher

Well-Known Member
TY Mam............

சக்தி கார்த்திக் எப்பவும் மறக்க முடியாத pair........... over possessiveness and அளவுக்கு அதிகமான காதல் கூட சில சமயம் நல்லதல்லனு சொல்ற நாவல்.......... பார்த்த முதல் தடவையே காதலில் விழுந்த கார்த்திக் கடைசிவரை வீழ்வேனென்று நினைத்தாயோ என்று மீசையில் மண் ஒட்டாத மாதிரி இருந்து சக்தியை மட்டுமல்ல எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டுவிட்டான்.........

சக்தி எவ்வளவு அவமானப்படுத்தினாலும் எல்லாத்தையும் துடைச்சு போட்டுட்டு அவளை அடைவது ரொம்ப அழகு.............

சக்தி......... மத்தவருக்கெல்லாம் angel.......... கார்த்திக்குக்கு terror piece.......... ராட்சசி.......... அப்பகூட அவளை விடல..........

காதல்னு ஒன்னு மனசுல வந்துட்டா யாராலும் தடுக்க முடியாது........... காதலன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவன் தான் முதல் இடம்........... அம்மா அப்பா கூட ரெண்டாம் பட்சம் தான்...........

உங்க narration ரொம்ப ரொம்ப அழகு............ SJM & VEN-ல் விழுந்த நாங்கள் இன்னும் எழும்பவே இல்லை......... எங்களை இங்க இருந்து எழுப்பி விடுற மாதிரி இன்னொரு longgggggggggggggggggg கதைக்கு, அதுவும் உங்கள் 25th novel-க்கு, காத்திருக்கிறோம்.............

எங்கள் அதீத நம்பிக்கை வீண் போகாது............:):):)
 

ThangaMalar

Well-Known Member
நிறைவான கதை..
தண்டனையை ஏற்கவும் தைரியம் வேண்டும்..
கார்த்திக் காதலன், கணவன், தகப்பன், மருமகன், மகன், சகோதரன், நண்பன், முதலாளி... எதிலும் சிறப்பு..
 

ThangaMalar

Well-Known Member
சக்தி அழகானவள் அன்பானவள் அசராதவள் ஆளுமை கொண்டவள் தைரியமிக்கவள்...
கார்த்திக்கிடம் மட்டும் குழந்தை போன்றவள்...
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்த நொடியில்
அவள் அழகினில்
வீழ்ந்தவன்..
தன் தந்தை
பெயர் காக்க
பெரும் கடமையை
தலையில் சுமந்தே..
தவறுகள் சில புரிந்து
தன் தந்தையின்
கடன் தீர்த்தவன்.
தன் கடமையை
முடிக்கும் வரை கூட
காதலில் வீழ்வேன் என்று
நினைத்தாயோ
என்றே ஆட்டம் காட்டியவன்..

கடமையை முடித்து..
காதல் துணையிடம்
மொத்தமாக காதலில்
வெற்றி கொண்டான்
மிகவும் அருமை, பாத்திமா டியர்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
செல்வம் சாமர்த்தியசாலி..
அரணானவன்..
விசுவாசத்திற்கு பேர் போனவன்..
நகைச்சுவையில் மன்னன்...
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பா கார்த்திக்கேயன் சொன்ன
வார்த்தைக்காக அந்த ஐந்து

வயதுப் பையன் என்னமாய்
பொறுப்பாய் அம்மாவையும்
பாப்பாவையும் பார்த்துக்
கொண்டான்?

ஐ லவ் ஆதர்ஷ் வெரி மச்,
மல்லிகா டியர்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
வீரமணி நட்புக்கு எடுத்துக்காட்டு..
பெருந்தன்மையாளர்...
மகளின் சாதனைக்கு காரண கர்த்தா அவரே..
மருமகனையும் மகனாய் பாவிப்பவர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top