பார்த்த நொடியில்
அவள் அழகினில்
வீழ்ந்தவன்..
தன் தந்தை
பெயர் காக்க
பெரும் கடமையை
தலையில் சுமந்தே..
தவறுகள் சில புரிந்து
தன் தந்தையின்
கடன் தீர்த்தவன்.
தன் கடமையை
முடிக்கும் வரை கூட
காதலில் வீழ்வேன் என்று
நினைத்தாயோ
என்றே ஆட்டம் காட்டியவன்..
கடமையை முடித்து..
காதல் துணையிடம்
மொத்தமாக காதலில்
வெற்றி கொண்டான்