Uyirin ularal - episode 36

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 36

" நான் அப்படி அவர்களை என்ன செய்துவிட்டேன் நந்து. இந்த அளவுக்கு என் மேல் ஆத்திரம் கொள்ள. கடவுள் எனக்கு எதையுமே தந்திருக்க வேண்டாம், என் பெற்றோருக்கு அந்த ஆக்ஸிடன்ட் மட்டும் நடக்காமல் இருந்திருக்கலாம் " என்று அபி கூறும் போது அவள் குரல் உடைந்திருந்தது.

" ஸ்ஸு அம்மு அழாதே, நீ இப்படி கலங்குவாய் என்றுதான் சில விஷயங்களை நான் உன்னிடம் சொல்வதில்லை. உனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் ரொம்ப குறைவாக இருக்கிறது. சுயஇரக்கம் கொள்வது தற்கொலைக்கு சமமானது என்று சொல்வார்கள், ஆனால் தற்கொலைக்கே துணிந்தவள் நீ உன்னிடம் என்ன சொல்ல.

வாழ்க்கையை நேசிக்க கற்றுக்கொள் அம்மு. பாஸ்ட் இஸ் பாஸ்ட். உனக்கு நடந்ததற்கு எதற்குமே நீ காரணம் இல்லை, வக்கிரம் பிடித்த மனிதர்களும் இந்த பூமியில் நம்மை சுற்றியே இருக்கத்தான் செய்கிறார்கள். நம்முடைய துரதிஷ்டம் நம் குடும்பத்தில் அவர்கள் இருப்பதுதான். அவர்களை கண்டும் காணாமல் விட்டுவிட பழகு.

உன்னை சுற்றியுள்ளவர்களை கவனி, நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து அவர்களின் பேச்சுக்கு பயந்து வாழ்பவர்கள் என்றுமே நிம்மதியாக இருப்பதில்லை. அதே எவன் என்ன பேசினாலும் நான் நினைத்ததைதான் செய்வேன் என்பவன் நிம்மதியாக வாழ்வான். உலகம் அவனை திமிர்பிடித்தவன் என்று சொல்லலாம் ஆனால் சொல்பவர்கள் எல்லாம் ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது, அவர்கள் ஒழுங்கும் கிடையாது.

சுயகட்டுப்பாடுடன் யாரையும் பற்றி கவலைகொள்ளாமல், யாரின் பேச்சையும் கேட்டு சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் நடைபோடும் பெண் இன்றைய உலகின் வரம். பாரதி கண்ட புதுமை பெண் அவள்.

என் அம்மு எவ்வளவு அருமையான பெண் தெரியுமா ? தனக்கு கெடுதல் செய்பவர்கள் என்று தெரிந்தே அவர்கள் கேளாமல் அவள் சொத்தை எழுதி வைக்கும் அளவுக்கு இரக்கம் குணம் கொண்டவள். அதனால்தான் உன் பணத்தை உடனே எடுக்கமுடியாத படிக்கு டெபாசிட் செய்திருக்கிறேன்.

அவள் தாயாக, குழந்தையாக, தோழியாக, நல்ல மனைவியாக என் பசியை உணர்ந்து என் வயிற் வாடாமல் காப்பதில் அன்னபூரணியாக இருப்பவள். எல்லா மனைவியும் இப்படி இருக்கலாம் ஆனால் என் தாயுக்கு பிறகு நம் வீட்டில் நான் அப்படி பார்த்ததில்லை.

திருமணம் முடிந்த நாளில் இருந்து என் அண்ணன்கள் சாப்பிடுவது வேலையாட்கள் சமைக்கும் சாப்பாடைதான். ஆனால் நான் என்றுமே என் மனைவியின் கையால் சமைத்ததைதான் சாப்பிடுகிறேன், என் சின்ன சின்ன தேவையும் தெரிந்து பூர்திசெய்பவள் நீ. இத்தனைக்கும் நீ தனியாக ஒரு ஆபீஸை நிர்பகிப்பவள். எத்தனை குணங்கள் உனக்கு. ஆனால் தன்னம்பிக்கை.... ? என்று நிறுத்தினான் ரிஷி.

" உண்மையா நந்து. என்னை பற்றி நீ இப்படியெல்லாம் உன் மனதில் நினைத்திருக்கிறாயா ?" என்றாள் அபி திரும்பி சிரித்துக்கொண்டு.

" யெஸ் " என்றவன் அவள் இடுப்பை பிடித்து தூக்கி தன் மடியில் இருத்தினான். தண்ணீரில் இருக்கும் வரை தெரியாத குளிர் இப்போது தெரிந்தது. அபி அவனை அணைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

" ஓகே நந்து நான் மாற ட்ரை பண்ணுறேன். பட் ஒரு கண்டிஷன். அதுவரைக்கும் நமக்கு குழந்தை வேண்டாம். என்னுடைய குறையோடு அதாவது டிரீட்மென்ட் எடுக்கும் அளவுக்கு சென்ற என்னுடைய குணத்தோடு நான் ஒரு குழந்தைக்கு பிறப்பு கொடுக்க விரும்பவில்லை. என் குணம் என் குழந்தையை பாதித்துவிடக்கூடாது " என்றாள் அபி.

" அம்மாடி கடைசியில் என் தலையிலேயே கை வைத்துவிட்டாயா ? இந்த கண்டிஷனுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன் " என்றவனின் கை அபியின் இடையை அழுத்தி பிடித்தது.

" ச்சை எப்போது பார் உனக்கு இதுவே நினைப்பு." என்று கையை தட்டிவிட்டவள் அவனின் மடியில் இருந்து தண்ணீருக்குள் இறங்கினாள்.

" நாளைக்கு டாக்டரிடம் போறோம், கொஞ்ச நாள் குழந்தை இல்லாமல் இருக்க அவரிடம் அட்வைஸ் கேட்டுட்டு அப்புறம் ஆரம்பி உன் சேட்டையை " என்றாள் அபி.

" வாவ் சூப்பர் ஐடியா. அப்படின்னா நான் இன்று உன் பக்கத்தில் வரவே கூடாது அப்படித்தானே, அதைத்தானே சொல்லவருகிறாய் " என்றான் ரிஷி.

" அப்படியில்லை, டாக்டரிடம் அட்வைஸ் கேட்டுவிட்டு அப்புறம் பார்க்கலாம் " என்றாள் அபி.

" என் மனைவியை தொட நான் எவனிடமோ அட்வைஸ் கேட்க வேண்டுமா ? உன்னை " என்றவன் நீருக்குள் குதித்தான்.

அவனிடம் தப்ப நினைத்த அபியை ஒரு எட்டில் பிடித்தவன் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். தண்ணீருக்குள் அவன் எல்லை மீற

" நந்து ப்ளீஸ் இங்கே வேண்டாம், ப்ளீஸ் ப்ளீஸ் " என்று கெஞ்ச ஆரம்பித்தாள் அபி.

" இனி என்னிடம் இப்படி பேசுவாயா ?"

" இல்லை பேசமாட்டேன். "

" எனக்கு மூன்று பெண் குழந்தை வேண்டும், உன்னைப்போல குணத்தோடு. அதுவும் இன்னும் 10 மாதத்தில் காட் இட் " என்றான்

" ம் " என்று வெட்க புன்னகை பூத்தாள் அபி.

அவளை இரு கரத்தில் ஏந்திய ரிஷி வெளியே வந்தான். அவனை வெளியே நிற்க செய்துவிட்டு தட்டுத்தடுமாறி உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்து சேர்ந்தாள் அபி. அவளின் உடல் அவனின் தீண்டலில் ஆட்டம் போட்டது.

அதற்குள் உடையை மாற்றியிருந்த ரிஷி. தேகம் நடுங்கியபடி தன் முன்னே நிற்கும் அபியை அடக்கமுடியாத காதலோடு இறுக்கி அணைத்து இதழோடு இதழ் பதித்தான். அவனின் வேகத்தில் அபியின் கால் நிற்க முடியாமல் துவள தொடங்கியது.அவளை விடுவித்தவன் கையில் ஏந்தியபடி தன் அறையை நோக்கி சென்றான்.

அவளை கட்டிலில் விட்டவன் அவள் அருகில் சென்றான். ஆனால் அபியோ
" அத்தான் ஏன் இவ்வளவு ஸ்பீடா இருக்கீங்க எனக்கு பயமா இருக்கு " என்றாள்.

" அப்படின்னா போயிடவா ?" என்றான் அவன் கண்ணை உற்று நோக்கி சிரித்துக்கொண்டு.

" இல்ல, வேண்டாம். ஆனா கொஞ்சம் ஸ்லோவா..... " என்று இழுத்தாள் அபி.

" இதுவே ரொம்ப ஸ்லோதான். பயப்படாதே. ரொம்ப பயமா இருந்தா என்னை இறுக்கி கட்டிக்கோ " என்றான் அவளின் கழுத்தில் இதழ்பதித்து. அவன் முன்னேற முன்னேற அபி அவனில் புதைந்துகொண்டே சென்றாள். அவன் முடிந்த அளவு மென்மையாகவே நடந்துகொள்ள பல போராட்டங்களை கடந்து ஒன்று சேர்ந்த உள்ளங்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தில் அடுத்த அடியை இனிதாக தொடங்கியது.

இரவு முழுவதும் தூங்காமல் தங்களின் ஆசையை தீர்த்துக்கொண்டனர் இருவரும். முதலில் பயத்தில் திணறியவள் போக போக அவனின் வேகத்திற்கு முன்னேறினாள்.

**********

" நந்து நீங்கள் இன்றைக்கு மறுபடியும் வெளியூர் எங்கேயாவது போறிங்களா ?" என்று கேட்டாள் தன்னை அணைத்த ரிஷியிடம்.

" இல்லையே " என்றான் அவன் அவன் வேலையில் கவனமாக.

" அப்புறம் என்ன இம்சை, மணியை பார்த்தாயா? விடிய போகிறது. இன்றோடு இரவு தீர்ந்தா விடப்போகிறது. போதும் மறுபடியும் ஆரம்பிக்காதீர்கள். காலையில் நம் வீட்டில் வைத்துதான் மீட்டிங்." என்றாள் அபி.

" என்ன ? இங்கே வைத்து மீட்டிங்கா, அதுவும் இன்னும் சில மணி நேரத்தில். நடக்கிற காரியமா ? சரி அதைவிடு, இப்போது உன்னை விட சொன்னியே ? விட்டுவிடவா ?" என்றான் ஊமை சிரிப்புடன்.

" ச்சீ " என்றவள் மீண்டும் அவன் கைக்குள் அடங்கினாள்.

போர்த்திய போர்வைக்குள் இருவரும் அணைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தனர். போன் விடாமல் அடித்தது. அவளை விடாமல் போனை எடுத்தவன் நம்பரை பார்த்து அதை ஆன் செய்தான்.

" சொல்லுண்ணா " என்றான் ரிஷி.

" டேய் நீ இன்னும் படுக்கையைவிட்டு எழும்பளையா ? மணி என்ன தெரியுமா? அபியை எங்கே ? நாங்கள் மூன்றுபேரும் வந்துவிட்டோம் " என்றான் கண்ணன்.

" நைட் கொஞ்சம் வேலை இருந்தது, படுக்க லேட்டாகிவிட்டது, இன்னும் அரை, இல்லை ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறோம் " என்றான் ரிஷி.

" சீக்கிரம் " என்றபடி போனை வைத்தான் கண்ணன்.

" உங்களை காக்க வைக்கின்ற அளவுக்கு அவள் பெரிய மனுசியாகிவிட்டாளா ? என்று அம்பிகா ஆரம்பிக்க

"அண்ணி வேலை ஆகவேண்டியது எனக்கு. நான் தான் அவளுக்காக காத்திருக்கவேண்டும். நியாயப்படி இன்று அவளை நான் தொந்திரவே செய்திருக்க கூடாது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றான் கண்ணன் வெடுக்கென்று.

அபியோ ஆழ்ந்த தூக்கத்திலேயே இருந்தாள். ரிஷிக்கோ அவளை எழுப்ப மனமே இல்லை. விடிய விடிய தூங்கவிடாமல், இப்போது எழுப்பினால் என்ன அர்த்தம் என்று நினைத்தவன் வேறு வழியில்லாமல் அவளை மெல்ல எழுப்பினான்.

" பேபி " என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.கஷ்டப்பட்டு கண்ணை திறந்தவள் தான் இருந்த கோலத்தை பார்த்து வெட்கப்பட்டு, மறுபடியும் அவனையே ஒட்டினாள்.

" எதுவும் செய்யும் முன் என்னிடம் ஒருவார்த்தை சொல்லக்கூடாதா பேபி. எனக்கு உன்னைவிட்டு விலகவே மனமில்லை, ஆனால் கீழே உனக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள்." என்றான் அவன் அவளை அணைத்துக்கொண்டு.

" எனக்கென்ன தெரியும் இப்படியென்று" என்றவளுக்கும் அவனை விட்டு விலக மனமில்லை.

" பேபி ஹனிமூன் போவோமா ? இல்லையென்றால் இந்த கிரகங்கள் நம்மை நிம்மதியாக இருக்கவிடாதுங்க " என்றான்.

" நந்து அது உங்கள் அண்ணன் " என்றாள் அபி சிரித்துக்கொண்டே.

" அதைவிடு, ஹனிமூன் போகலாமா ?" என்றான்.

" ம் போகலாம் " என்றாள்

" எங்கே போகலாம் " என்று கேட்டான்.

" சுற்றிப்பார்க்க நேரம் தருவீர்கள் என்றால் இடத்தை நான் ச்சூஸ் பண்றேன் " என்றாள் கண்ணால் சிரித்தபடி.

" நோ நோ, சுற்றிபார்க்கவெல்லாம் நேரம் இருக்காது, அதனால் நானே இடத்தை ச்சூஸ் பண்ணிக்கிறேன் " என்றவன் அவளை பேசவிடாமல் செய்தான்.

" விடுங்கள் நந்து நான் போகட்டும் " என்று போர்த்தியிருந்த போர்வையோடு தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் ஓடினாள் அபி.

ஒருவழியாக இரண்டுபேரும் கிளம்பினர். கிளம்புவதற்குள் ஆயிரம் சேட்டைகள். முழுவதும் கிளம்பி கண்ணாடி முன் நின்றவளை பார்த்து

" பேபி முடியலடி, நாம் கீழே போகவேண்டாம் " என்றான் ரிஷி அவளின் கழுத்தில் முகம் புதைத்து.

" பேசாமல் இருங்கள், நானே போகணும் என்று கஷ்டமா பீல் பண்றேன், இதில் நீங்க வேறு " என்றாள் அபி.

" உனக்கு என்ன வந்தது, ஒரே வாங்க போங்க " என்றான் அவன்.

" தெரியல, அப்படியே வருது " என்றாள்

" அப்படியெல்லாம் வரக்கூடாது" என்றவன் விட்ட இடத்தில் இருந்து தொடர அபி திணறினாள்.

" நந்து இன்று நீயும் மீட்டிங்கில் இருக்கனும் தான், ஆனால் வராதே ப்ளீஸ், என்னால் உன்னை சமாளிக்க முடியாது. எப்படித்தான் இத்தனை நாளும் இருந்தியோ " என்றவள் அவனுக்கு அப்போதைய பதிலை கொடுத்துவிட்டு தன்னை சரிபடுத்திக்கொண்டு கீழே சென்றுவிட்டாள்.

அபி ரிஷிக்கு உணவை எடுத்துவைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தாள், என்னமோ எல்லோரும் தன்னையே பார்ப்பதுபோல ஒரு உணர்வு அவளுக்குள். அவளின் முகத்தில் இருந்த களிப்பு, வெட்க செம்மை, அவளின் கண்ணின் படபடப்பு, நொடிக்கொருமுறை படியை பார்ப்பது என்று அவளின் மாற்றத்தை கற்பகம்மாள் கவனித்தார். தனக்குள் சிரித்துக்கொண்டார்.

படியிறங்கி வந்த ரிஷி அபி தன்னை பார்க்கவும் இதழை குவித்து முத்தமிட்டான். அபி பட்டென்று முகத்தை திருப்பிகொண்டாள்.

அபிக்கு ரிஷியின் பக்கமே திரும்பாமல் தன் வேலையை தொடர்ந்தாள். அங்கு இருந்த ஆபீஸ் அறையில் இருந்து மூன்று ஆண்கள், மற்றும் அபி இருந்து பைனல் கணக்கை பார்த்தனர். ரிஷி வந்து வந்து போனான்.

அபிக்குள் ஏற்பட்ட படபடப்பு அவளுக்கு புது அனுபவம். சின்னத்தான், சின்னத்தான் என்று அவன் கழுத்தை கட்டி தொங்கியது அவள் நினைவில் வந்து சிரிப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக அபி கையில் பைல் இருந்தால் அவளின் பார்வையும், கவனமும் எங்கும் போகாது. இரண்டு மூன்று முறை அழைத்தால் தான் நிமிர்ந்தே பார்ப்பாள். இந்த ஒரு வாரத்தில் அவளை பார்த்த கண்ணனுக்கு இன்று அவள் நடக்கும் முறை விசித்திரமாக இருந்தது. பைல் கையில் இருந்தாலும் அவள் முகத்தில் ஏற்படும் மாற்றம், தானே சிரிப்பது என்று இருந்தாள் அபி.

ரிஷி உள்ளே வந்தால் சொல்லவே வேண்டாம். மூன்றுபேரும் அவளை பார்த்து சிரித்துக்கொண்டனர்.

மதியம் திரும்ப கிட்டத்தட்ட வேலையை நெருக்கும் நேரம் அபிக்கு ஒரு போன் வந்தது, அதை எடுத்துக்கொண்டு அவள் தோட்டத்திற்கு செல்ல, ரிஷி அவள் பின்னோடு சென்றான். அவளை பின்னால் இருந்து கட்டிபிடித்தவன் தன் சிலிமிசத்தை தொடர

" அவசர குடுக்கை விடு என்னை. வீடு முழுவதும் ஆட்கள். அதிலும் உன் அண்ணி ஒவ்வொருவரும் பத்து பேருக்கு சமம். கழுகு கண்." என்றாள் அபி நெளிந்துகொண்டே.

" யார் பார்த்தால் எனக்கென்ன, என் மனைவி நான் எதுவும் செய்வேன் " என்றான்.

"உன் மனைவிதான், ஆனால் எதற்கும் இடம்பொருள் ஏவல் என்று இருக்கிறதே " என்றாள் அபி சிரித்துக்கொண்டே.

" சரி எங்கே சொல்லு பார்ப்போம் 'ஒர்க் இஸ் ப்பஸ்ட் ஆல் நெக்ஸ்ட் ' " என்றான்
ரிஷி.

" அத்தான் ப்பஸ்ட்,. ஆல் நெக்ஸ்ட் " என்றாள் அபி.

" பொய்யை பாரேன், காலையில் இருந்து நாயாக திரிகிறேன், ஒரு முத்தம் தந்தியா ? முகத்தை அப்படி திருப்புற." என்றான் ரிஷி

" உன்னை பார்த்தால் அநியாயத்திற்கு எனக்கு இன்று வெட்கமாக வருகிறது, நான் என்ன செய்வேன் " என்றவள் அவன் கையை விலக்கிக்கொண்டு ஓடிவிட்டாள்.

" அண்ணா எனக்கு ஒரு உதவி செய்கிறாயா ?" என்ற கண்ணனிடம்

" அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன். உன் கணக்கை பார்ப்பது ரொம்ப கஷ்டம்தான். அபி எப்படித்தான் தனியாக பார்த்தாளோ ?" என்று சலித்துக்கொண்டான் கார்த்திகேயன்.

"விடு விடு, எல்லாவற்றையும் இனி நான் சரியாக பார்த்துக்கொள்கிறேன். இப்போது நீ செய்யவேண்டியது ஒன்றுதான். அங்கே இருக்கிறானே ரிஷி, அவனை கொஞ்சம் இங்கே வராமல் பிடித்துவை. அவளை வேலை பார்க்க விடமாட்டேன்கிறான் ரோமியோ. இவன் இப்படியே செய்தால் வேலை இழுத்துக்கொண்டே போகும். ஒரு ஒருமணி நேரம், இந்தா இந்த பைலை கொடுத்து பார்த்துக்கொண்டு இருக்கச்சொல். உள்ளே மட்டும் விடாதே." என்ற கண்ணன், ராமை அழைத்தான்.

" ராம் நீ நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து ஹனிமூனுக்கு டிக்கெட் போடு. நல்ல ஹோட்டலை புக் பண்ணு. நாளை கிளம்புவதுபோல டிக்கெட் போடு, ரிட்டர்ன் டிக்கெட் மட்டும் போடாதே." என்றான் கண்ணன்.

" யாருக்கண்ணா ?" என்றான் ராம்.

" ஆங் உனக்கும் உன் மனைவிக்கும், கேக்கிறான் பாரு கேள்வி, அபிக்கும் ரிஷிக்கும் " என்றான் கண்ணன்.

" அபி போயிட்டா வேலை எப்படி முடியும் ?" என்றான் ராம்.

" அது முடியாவிட்டாலும் பரவாயில்லை, வளர்த்த பெண், கூடப்பிறந்த தம்பி என்று நான் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்த 10நாளா அவர்கள் எனக்காக படும் பாடை பார்த்த பின்பும் நான் எதுவுமே செய்யவில்லையென்றால் நான் மனிதனே இல்லை. இப்போதைய சூழ்நிலையில் ஏதோ என்னால் முடிந்தது" என்றான் கண்ணன்.

ஒருவழியாக 4 மணியளவில் எல்லாவற்றையும் முடித்த அபி அனைவரையும் அழைத்தாள்.

"கண்ணன் அத்தான் மீளமுடியாத இடத்தில் இருந்தீர்கள். 10நாளில் எதுவும் செய்யமுடியாது, ஆனாலும் சின்ன சின்ன தவறை சரிசெய்து கொஞ்சம் மேனேஜ் பண்ணியாச்சு. இனி பயமில்லை. நான் என் பிரென்ட் அமித்தாபீடம் பேசிவிட்டேன். உங்கள் நண்பரிடம் வாங்கிய அனைத்து ஷரையும் அவனிடம் கொடுத்துவிடுங்கள். அவன் உங்களுக்கு தேவையான பணத்தை தருவான் " என்றாள் அபி. அவள் கண் சோர்ந்து போய் இருந்தது.

" ஆனால் அபி எனக்கு தேவைப்படும் பணத்திற்கு 25% கூட இருக்காதே இந்த ஷரின் மதிப்பு." என்றான் கண்ணன்.

" பிரச்சனை இல்லை, இவ்வளவு பெரிய அமௌண்ட்டை கடனாகி வாங்கி வட்டி கட்டினால் முடியாது, என் கணிப்பின் படி இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த ஷரின். மதிப்பு உயர்ந்துவிடும், அதன் பிறகு நீங்கள் பணத்தை கொடுத்தாலும் சரிதான், இல்லை அந்த ஷரை விற்று பணத்தை அவனே எடுத்துக்கொள்வான். மீதி இருந்தால் தருவான், வட்டிக்கட்டவேண்டாம். அப்புறம் இடையில் சின்ன சின்ன அமௌன்ட் தேவைப்பட்டால் சின்னத்தானிடம் வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் என் நகை அத்தையிடம் உள்ளது, பயன்படுத்திக்கொள்ளுங்கள். நான் அதிகம் அதை பயன்படுத்துவது கிடையாது. எனக்கு தேவையானதை சின்னத்தான் வாங்கித்தந்திருக்கிறான் " என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு வாங்கித்தந்திருக்கிறார் என்றாள் கற்பகம்மாளை பார்த்து.

வித்யா வாயடைத்து போய் நின்றாள். இந்த பெண்ணுக்கு காரணமே இல்லாமல் என்னவெல்லாம் செய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வில்.

இவன் என்னத்தை செய்துவிடுவாள் என்று நினைத்த மற்ற பெண்கள் அனைவரும் வழக்கம்போல எறிந்தனர். கண்ணனின் பிரச்சனை ஓரளவுக்கு தீர மறுநாள் அந்த காதல் பறவைகள் இரண்டும் தங்கள் ஹனிமூனுக்கு நாடுவிட்டு நாடு சென்றனர்.
 

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

என்னுடைய நாவல் 'உயிர் தேடும் ஓவியம் ' புத்தக வடிவில் வெளிவரவுள்ளது. நடக்கவிருக்கும் புக் ஃபேரில் feb 24 - mar 9 வரை கிடைக்கும்.

இடம் : Y MCA Nandhanam.

ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.
 

Chitrasaraswathi

Well-Known Member
Hi friends,

என்னுடைய நாவல் 'உயிர் தேடும் ஓவியம் ' புத்தக வடிவில் வெளிவரவுள்ளது. நடக்கவிருக்கும் புக் ஃபேரில் feb 24 - mar 9 வரை கிடைக்கும்.

இடம் : Y MCA Nandhanam.

ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.
வாழ்த்துகள்
 

Janavi

Well-Known Member
Hi friends,

என்னுடைய நாவல் 'உயிர் தேடும் ஓவியம் ' புத்தக வடிவில் வெளிவரவுள்ளது. நடக்கவிருக்கும் புக் ஃபேரில் feb 24 - mar 9 வரை கிடைக்கும்.

இடம் : Y MCA Nandhanam.

ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.
வாழ்த்துக்கள் சிஸ் (y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top