Uyirin Ularal - Episode 34

Advertisement

Nasreen

Well-Known Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 34

அபி தன்னை தள்ளிவிட்டதில் ரிஷி அதிர்ச்சியாகி, அவமானமாக உணர்ந்தான். அவனின் தன்மானம் அவனை கேள்விகேட்க அவன் உடல் விறைத்து நின்றான்.
அபியோ அவனின் முகத்தை ஏறெடுத்ததும் பார்க்கவில்லை, பிறகு எங்கே அவனின் மாறுதல்கள் அவளுக்கு தெரிய? அவனை தள்ளிவிட்டுவிட்டு அவனுக்கு பின்னால் சென்று அவனின் முதுகோடு கட்டிக்கொண்டு நின்றாள் அவள். அவளின் செய்கையில் ரிஷியின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

" மணி இப்போதே 8. 30. அத்தை நம்மை கீழே தேடுவார்கள். 11 மணிக்கு மீட்டிங்கை வைத்துக்கொண்டு இப்படி நடந்துக்கொண்டால் என்னால் அங்கு உங்கள் முகத்தை பார்த்து எப்படி பேச முடியும்? "என்றாள் அபி. குரலில் வெகுவாக வெட்கத்தின் சாயல் இருந்தது.

ரிஷிக்கு நிம்மதி வந்தது. தன் மனைவி வெறுப்பில் அல்ல வெட்கத்தில் தன்னை விலக்கியிருக்கிறாள் என்று.
முகத்தில் படர்ந்திருந்த கருமை மறைந்து சிரிப்பு வந்தது அவனுக்கு.
அவளின் கையை பிடித்து முன்னே கொண்டுவந்தான் ரிஷி. அப்போதும் அவள் முகத்தை மறைக்க அவன் மார்பில் தஞ்சமானாள். அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அது வெட்கத்தில் சிவந்திருப்பதை பார்த்து கிறங்கி போய் நின்றான். அவனின் வாய் ரகசிய குரலில் மெல்ல கூறியது " ஐ நீட் யூ பேபி " என்று.
அதே போல அவளும் கூறினாள் " நாட் நவ் பேபி " என்று.

" ப்ளீஸ் " என்ற ரிஷியிடம்
அவளும் " ப்ளீஸ் " என்றாள்.

" எப்போதுதான் என் மேல இரக்கம் வரும் உனக்கு. எத்தனை வருடமாக தவிக்கிறேன்டி. நம் திருமணம் முடிந்த அன்றிலிருந்து தினம் தினம் உன்னால் நான் படும் பாடு தெரிகிறதா உனக்கு. நீ என்னை நெருக்கும் போதேல்லாம் எனக்குள் ஏற்படும் மாற்றத்தை உன்னால் உணர முடிந்ததா ? என்னை நீ அணைத்த போதேல்லாம் நான் தீயாய் எரிந்திருக்கிறேன். என் உடம்பின் ஒவ்வொரு நரம்பும் உன்னை யாசித்து யாசித்து சோர்ந்து போனது. ப்ளீஸ்" என்றவன் அவளை தூக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி போனான்.

அவனில் ஏற்பட்ட அதே மயக்கமும், கிறக்கமும் இவளுக்குள் ஏற்பட்ட போதும் அவளின் பெண்மை இது சரியான நேரமில்லை என்று அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது.

" நோ, நந்து ப்ளீஸ். இப்போது வேண்டாம். வி ஆர் கெட்டிங் லேட். இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும் நந்து " என்றாள் அபி கெஞ்சலாக.

" ராட்சசி, உன்னால் தட்டி எழுப்பப்பட்ட உணர்வு என்னுள் பேயாட்டம் போடுகிறது, ராத்திரி பார்த்துக்கொள்ளலாம் என்றாவது உனக்கு வாயில் வருகிறதா ? பிரச்சனை திற வேண்டுமாம். கடலில் அலை எப்போது ஓய்வது? நான் எப்போது குளிப்பது. இது முடிந்தபிறகு இன்னொன்று. பிரச்சனைக்கா நம் வீட்டில் பஞ்சம். " என்றவன் அவள் பதில் பேசாதவாறு அவளில் இதழை தன் இதழால் மூடினான்.

எதிர்த்து என்ன பயன் என்று நினைத்தாளோ !!!!அல்லது எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தாளோ !!!!அவனின் கையில் அடங்கினாள். அவனின் இதழும், கையும் தங்கள் எல்லையை மீறி சென்றுகொண்டிருக்க அபி அவனுள் கரைந்துகொண்டிருந்தாள். தன் ஆடை விலக்கப்படுவதை உணர்ந்த நொடி பட்டென்று மூடியிருந்த கண்ணை திறந்தவள்

" எருமை எருமை, கதவு திறந்திருக்கிறது " என்று அவனை தள்ளிவிட்டு ஓடினாள்.
கதவு உண்மையில் திறந்துதான் இருக்கிறது என்று நினைத்து கதவை பார்த்தவன் அவள் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடுகிறாள் என்று தெரிந்து அவளின் புடவையை பற்றினான்.

புடவையின் ஒருபுறம் அவன் கையில் சிக்கிக்கொள்ள, மறுமுனையை அவிழ்த்துவிட்டபடி, கையால் தன்னை காத்துகொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் ஓடிவிட்டாள் அபி.

" நேஹா திஸ் இஸ் டூ மச், உன் அத்தான் பாவம் இல்லையாடி ? என் மேல் உனக்கு இரக்கமே இல்லையா ?" என்றான் இவன் வெளியே நின்றுகொண்டு.

" வெளியே வந்தேன் மகனே கொன்னுட்டேன். காலையில் பார்க்கும் வேலையை பார். ஒழுங்கா ட்ரெஸ்ஸை மாற்றி கொண்டு கீழே போ " என்றாள் அபி உள்ளே இருந்தபடி.

" சரி, கதவை திற, நானும் அங்கேதான் ட்ரெஸ் மாத்திப்பேன் " என்றான் ரிஷி.
" பல்லை உடைப்பேன். சீக்கிரம் கிளம்பு நேரமாகிவிட்டது " என்றாள் அபி.
" சரியான ஏமாற்றுக்காரி நீ, நீதானே சொன்ன என் கூடவே இருக்க வேண்டும் என்று" என்றான்.
" அதுக்கு அர்த்தம் இது இல்லை என் அறிவு கொழுந்தே " என்றவள் அதன் பிறகு அவனுக்கு பதில் கொடுக்கவில்லை. கொஞ்ச நேரம் அங்கே சத்தமில்லாமல் இருந்தது.
சுடிதாரை போட்டுகொண்டு கதவை திறந்து மெல்ல தலையை நீட்டினாள் அபி.

" வா, வா. ஒன்றும் உன்னை கடித்து தின்றுவிட மாட்டேன். நீயாக என்னை நெருங்கும் வரை உன் பக்கத்தில் வர மாட்டேன் " என்றான் பெல்ட்டை சரிசெய்து கொண்டு.

" ஐயோ கோச்சிகிட்டியா ? " என்று அவனின் கன்னத்தை கிள்ளினாள்.
ரிஷி இவளின் கையை தட்டிவிட்டு " ஆமாம்" என்றான் திரும்பிக்கொண்டு.

" கோச்சுக்கோ சோச்சுக்கோ " என்றபடி முன்னே நடந்தாள் அபி.

" அம்மு நில்லு, ஒழுங்கா நீயா என்னை ஹக் பண்ணி, ஒரு கிஸ் பண்ணிட்டு போ, இல்ல நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது " என்றான் ரிஷி மிரட்டலாக.

" அம்மாடியோ !!! பயந்துட்டேன். இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் என்னிடம் ஆகாது. உன்னால் ஏற்கனவே ஒரு புடவை கசங்கிவிட்டது. மறுபடியும் நீ உன் முரண்டுதனத்தை காட்டி இந்த உடையும் கசங்கவா ? வேண்டுமென்றால் பேசாமல் இரண்டு கையையும் பின்னால் கட்டிக்கொண்டு நில். ஒரே ஒரு கிஸ் தருகிறேன். அதுவும் பாவம் போனால் போகட்டும் என்றுதான்." என்றாள் அபி.

" போடி தேவையில்லை உன் பொல்லாத கிஸ் " என்று அவளை கடந்து கோபத்தில் வெளியே சென்றுவிட்டான் ரிஷி.

அபி சிரித்துக்கொண்டே அவனை பின் தொடர்ந்து சென்றாள். கீழே அவர்கள் இருவரையும் பார்த்த ப்ரியாவுக்கும், பானுவுக்கு ஏக சந்தோசம். இருக்காதா பின்னே ரிஷியின் முகம் உர் என்று இருந்தது. அபியும் அவனிடம் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்.

சாப்பிடும் போது அவன் தட்டில் இவள் தோசையை வைத்தால் அவன் இட்டலியை எடுத்து சாப்பிட்டான், இவள் ஜூஸ்ஸை ஊற்றிக்கொடுத்தால் அவன் ஹார்லிக்ஸை எடுத்து குடித்தான். அபியும் கோபத்தில் போய் தொலை என்று விட்டுவிட்டாள்.

இருவரின் செய்கையையும் பார்த்த கற்பகம்மாள் " என்னாச்சு உங்களுக்கு " என்றார் சிறு கண்டிப்புடன். அனைவரும் வேடிக்கை பார்த்து சிரிக்கும் அளவுக்கு இரண்டும் முட்டிக்கொள்கிறதே என்ற கவலையில்.

" பிள்ளையா வளர்த்துவைத்திருக்கிறீர்கள், குட்டிச்சாத்தான் என்ன வரத்துவருகிறது " என்று தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் ரிஷி.

போகும் அவனை பார்த்துவிட்டு அபியை பார்த்த கற்பகம்மாளிடம் " பிள்ளையையா பெற்றுவைத்திருக்கிறீர்கள், சரியான வானரம். சும்மா இருக்கிறதா ?" என்று கூறிவிட்டு இவள் தன் தோள்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
கற்பகம்மாள் தலையில் அடித்துக்கொண்டார். " இதுகளை நேரங்காலத்தோடு கடலில் தள்ளாமல் விட்டது என் தப்புதான் " என்று.

ப்ரியாவும், பானுவும் ஏக சந்தோஷத்தில் மிதந்தனர். பாவம் அந்த ஜோடி எதற்கு சட்டையிட்டுக்கொண்டது என்று தெரியாமல்.

கண்ணனின் ஆபிஸில் மீட்டிங் ஹாலில் எல்லோரும் கூடியிருக்க ரிஷி வரவுக்காக அபி காத்திருந்தாள்.
" பயபுள்ள இன்னும் வரக்காணோமே ? பேசாமல் ஒரு முத்தத்தை கொடுத்து தொலைத்திருக்கலாமோ ? கோபத்தில் வராமல் இருந்துவிட்டால் ? ச்சச்ச அப்படி செய்ய மாட்டான் " என்று தனக்கு தானே பேசி தைரியத்தை ஊட்டிக்கொண்டிருந்தால் அபி.
அவளை அதிகம் தவிக்க விடாமல் வந்து சேர்த்தான் ரிஷி. வந்தவன் அனைவரிடமும் மன்னிப்பை கேட்டுக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தான். அபி பக்கம் மட்டும் திரும்பவில்லை.
அபிக்கு விளையாட்டு போய் கவலை வந்தது. இவன் ஏன் இதற்கு போய் இப்படி முகத்தை திருப்பிக்கொள்கிறான் என்று அவள் முகம் வாடி போனது. ஆனால் ரிஷியோ மற்றவர்களிடம் பேசுவதில் பிசியாக இருந்தான். மீட்டிங் ஆரம்பிக்க வேண்டும் என்ற நேரத்தில் அபி ரிஷியின் செல்லில் ஒரு பிக்ச்சர் மெசேஜ்ஜை அனுப்பினாள்.

பீப் சத்தத்துடன் வந்த மெசேஜ்ஜை எடுத்து பார்த்தவனின் கண் சிரிப்பில் விரிந்தது.
அவனும் அபியும் அணைத்துக்கொண்டு எடுத்திருந்த செல்ஃபீ அது. டக்கென்று தலையை தூக்கி அவளை பார்த்தான் ரிஷி. அவள் கண்ணால் "சாரி " என்றாள்.
இப்போது அவன் நன்றாக அவளை பார்த்து புன்னகை செய்தான். தன்னுடைய போனில்

' டுடே நைட் ? ' என்று மெசேஜ்ஜை தட்டிவிட்டான் ரிஷி. பதிலுக்கு அபி " ஓகே ஓகே நார்மலா இரு " என்று பதில் அனுப்பினாள். அப்பொழுதுதான் கரண்ட் வந்தது போல அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.

அவன் முகத்தில் கண்ட புன்னகையுடன் அபி எழுந்து பேச தொடங்கினாள்.
தனது வரவேற்பையும், நன்றியையும் கூறிவிட்டு இங்கு அனைவரையும் வரச்சொல்லிய நோக்கத்தை கூறியவுடன் சிறு சலசலப்பு அங்கே உருவானது.
" நீங்கள் கூறுவதுபோல இன்னும் ஒருமாதம் பணம் இல்லாமல் பொருட்களை சப்லே செய்வது என்பது முடியாத காரியம். ஏற்கனவே நாங்கள் கொடுத்த பொருட்களுக்கு mr கண்ணன் செல்லாத காசோலையை தந்து எங்களை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இங்கே வந்திருப்பது கொடுத்த பொருட்களுக்கு பணத்தை வாங்க. மறுபடியும் கடன் கொடுக்க இல்லை. " என்றார் ஒருவர் காட்டமாக.

" நீங்கள் கூறுவதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அந்த செக் உங்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டவை அல்ல. பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் கொடுக்கப்பட்டது. காலங்காலமாக இப்படித்தான் அனைவரும் தொழில் செய்து வருகிறீர்கள். உங்களுக்கே தெரியும் தற்போதைய பங்குசந்தையின் நிலையை பற்றி. கண்டிப்பாக எல்லாருக்கும் அதில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும், இந்த கம்பெனிக்கு கொஞ்சம் அதிகமாக ஏற்பட்டுவிட்டது. அதற்காக மூழ்குகிற கப்பலில் இருந்து தப்பி ஓடும் எலியை போல எல்லோரும் ஓடினால் எப்படி.

இந்த கம்பெனியின் எம்டி யை பற்றி உங்களுக்கு தெரியும் நான் சொல்லதேவையில்லை. Mr. கருணாகரனின் மகன் அவர். இந்த கம்பெனி மட்டும் அவரின் சொத்து அல்ல. அதனால் உங்கள் பணத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. நாங்கள் உங்களிடம் கேட்பது 2 மாத டைம். அதற்குள் இந்த கம்பெனி மீளவில்லை என்றால் உங்கள் பணத்திற்கு Mr.ரிஷி நந்தன் பொறுப்பு. இரண்டுமாத தவணையில் உங்கள் பொருட்கள் எல்லாம் தடையில்லாமல் கிடைத்தால் நல்லது " என்று முடித்தாள் அபி.

அவளின் பேச்சை கேட்டு கண்ணன் அதிர்ந்து நின்றான். தம்பி தன் சுமையை தன் மேல் போட்டுக்கொள்ள முன் வந்திருக்கிறான் என்று நினைத்து உண்மையில் வெட்கப்பட்டான், இந்த தம்பிக்கு நல்லது என்று எதையும் தான் செய்யவில்லையே என்று. அவனின் மனைவிக்கு தன் மனைவியால் ஏற்பட்ட துன்பத்தையும் எண்ணி வெட்கப்பட்டான் கண்ணன்.

அங்கே இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கடைசியில் சம்மதம் தெரிவித்தனர். மீட்டிங் முடிந்தவுடன் அனைவரும் கிளம்பிவிட, மூவரும் கண்ணனின் பார்ட்னரின் மகனிடம் பேசினர்.

கண்ணனுக்கு தனது பார்ட்னர் மேல் இன்னும் நம்பிக்கை இருந்தது. பங்குசந்தையில் தன்னை கேட்காமல் அவர் வாங்கிய அதிக ஷேர்தான் இந்த நிலைக்கு காரணம் என்று அவர் கூறியதை கண்ணன் முழுவதுமாக நம்பினான்.
பிறகு அதில் கூறுவதற்கு எதுவும் இல்லை.

" கண்ணன் அத்தான் உங்கள் பார்ட்னர் மேல் உங்களுக்கு இந்த அளவு நம்பிக்கை இருப்பதனால் வேறு வழி இல்லை, அவர் வாங்கிய அத்தனை ஷேரையும் உங்களிடம் கொடுக்கச்சொல்லுங்கள், அதுவும் இன்றைய விலைக்கு. மீதி பணத்தை கொடுக்க அவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம் " என்று கூறினாள்.

ஆனால் கண்ணனின் பார்ட்னரின் மகன் அதற்கு மறுப்பு தெருவிக்க " லுக் mr. உங்கள் அப்பாவால்தான் இந்த கம்பெனிக்கு இந்த நிலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அதற்கு ஹாஸ்பிடலில் இருக்கும் உங்கள் அப்பாதான் சாட்சி, வேறு ஆதாரமும் வேண்டும்மென்றால் இன்னும் இரண்டுநாளில் அதையும் தருகிறோம்.
ஆனால் அதன் பிறகு இங்கு உள்ள அத்தனை பிரச்சனையும் நீங்கள்தான் தீர்க்கவேண்டியவரும். சம்மதம் என்றால் உங்கள் பங்குகள் உங்களிடமே இருக்கட்டும் " என்றாள் அபி.

" ஓகே தந்துவிடுகிறேன், ஆனால் அதை இப்போது விற்றால் வாங்கியதில் 10% பணம் கூட கிடைக்காது " என்றான் அவன்.

" அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், உங்கள் அப்பா குணமாகியதும் அவரிடம் பக்குவமாக கூறுங்கள் இங்கு உள்ள நிலைமையையும் அதனால் அவரின் பங்குகள் பெறப்பட்டதையும் " என்றாள் அபி.

" சரி " என்றான் அவன்.
எண்ணிய காரியம் இரண்டும் வெற்றியாக முடிய ரிஷி கிளம்பினான். அபிக்கு வேலையிருந்ததால் அங்கேயே இருந்துவிட்டாள்.
********
" ரிஷி அபி ஏன் இன்னும் வரவில்லை ?" என்று கேட்டார் கற்பகம்மாள்.

" கொஞ்சம் வேலை இருப்பதாக கூறினாள்" என்ற ரிஷியிடம்.

" மணி 9 தை தாண்ட போகுது, இன்னும் என்ன வேலை ? எதுவாக இருந்தாலும் நாளைக்கு பார்ப்பதற்கென்ன ? சாப்பிட்டாலோ ? என்னாமோ ? நீயாவது சாப்பிடவேண்டியதுதானே. ஏற்கனவே களைத்து போயிருப்பாள், நீயும் சாப்பிடாமல் இருந்தால் உன்னை கவனிக்கிறேன் என்று கிளம்புவாள் " என்றார் கற்பகம்மாள்.
" எட்டுமணிக்கே போன் செய்தேன் சாப்பிடு என்று. ஆனாலும் சாப்பிட்டிருக்கமாட்டாள். அப்புறம் தனியாக சாப்பிடுவாள், அவளும் வரட்டும்." என்ற மகனை வாஞ்சையுடன் பார்த்தார் கற்பகம்மாள்.

10 மணியளவில் வந்து சேர்ந்தாள் அபி. அவளுக்காக ரிஷி ஹாலில் காத்திருந்தான். காலையில் புதிதாக பூத்த மலராக சென்ற அபி இப்போது வாடி சோர்வு அப்பி போய் தெரிந்தாள்.

வந்தவள் ரிஷியை பார்த்து வாசலிலேயே பார்த்துக்கொண்டு நின்றாள். ஒருநிமிடம் அவளை பார்த்தவன் அவள் ஏன் அங்கேயே நிற்கிறாள் என்று யோசித்துவிட்டு சிரித்தான். சிரித்துக்கொண்டே எழுந்து சென்றவன்
" ஓய் குள்ளச்சி நான் உன்னைப்போல கழுத்தை கட்டிக்கொண்டு தொங்கினால் தாங்குவாயா ? அம்மாவை வாசல் வரை வந்து வரவேற்றாள்தான் உள்ளே வருவீங்களோ ?" என்று கேலி செய்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு கையில் ஏந்திக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றான்.

அவன் கையில்யிருந்த அபி அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு மணியாக சிரித்தாள். " நான் மட்டும் உன்னை வாசல்வந்து வரவேற்காவிட்டால் என்ன பேச்சு பேசுகிறாய் ? ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா ? " என்றாள்.
" இல்லம்மா ? நீயும் நானும் எப்போதும் ஒன்றுதான் சரியா ? " என்றவன் தன் அறையில் சென்று அவளை இறக்கிவிட்டான்.

பிரெஷ்ஷாகிவிட்டு வந்தவள் அங்கிருந்த உணவை பார்த்துவிட்டு " அத்தான் நீ இன்னும் சாப்பிடவில்லையா ?" என்று கேட்டாள்.

"நீ சாப்ட்டியா ?"

" இல்லை "

" சரி வா சாப்பிடலாம் " என்று இருவரும் சாப்பிட்டுவிட்டு அன்று நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

" அத்தான், கண்ணன் அத்தான் தொழிலில் ரொம்பவே அலட்சியமாக இருந்திருக்கிறார். எல்லோரையும் நம்பி ஏமாந்திருக்கிறார். கணக்கில் ஏக குளறுபடி. தோண்ட தோண்ட வந்துகொண்டே இருக்கு. இது ஒன்று இரண்டு நாளில் முடிவது போல தெரியவில்லை. நாளை காலை சீக்கிரம் போகணும். வசந்த் என்னை விட்டுட்டு காரை எடுத்துட்டு போயிட்டான். அதனால் நீதான் என்னை காலையில் ஆபீஸீல் ட்ராப் பண்ணனும்." என்றவள் மீண்டும் தனது லேப்டாப்பை எடுத்தாள்.

" அடியே சின்ஸியர் சிகாமணி போதும் உன் கடமை உணர்வு. காலையில் இருந்து இதைத்தானே பார்த்திருப்ப உனக்கு டயர்ட்டா இல்லையா ?" என்றவன் அவளிடம் இருந்து லேப்டாப்பை வாங்கிவைத்தான்.

அபி அவனை ஒரு நிமிடம் பார்த்தாள். காலையில் தங்களுக்குள் நடந்தது நினைவுவந்தது. ஆனால்..... என்ற யோசனையில் அபி அவனை பார்க்க
" ஏன் முட்டை கண்ணை வைத்துக்கொண்டு அப்படி பார்க்கிறாய் ? வா வந்து படுத்துதூங்கு. காலையில் கிட்சன் பக்கம் போகாமல் கிளம்ப பாரு " என்றவன் தலையணையை போட்டு படுத்துகொண்டான்.

"என்னடா ? திருந்திட்டானா ? வாய்ப்பில்லையே. அப்படி லேசில் திருந்தமாட்டானே என்று அவள் யோசிக்கும் போதே அவள் கண் சொக்க தொடங்கியது.
" அம்மு செல்லம் நீ மைன்ட் வாய்ஸ் என்று வெளியே சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறாய். இங்கே வா " என்றான் கரத்தை நீட்டி.
சாவிகொடுத்த பொம்மை போல அவனின் அழைப்புக்கு எழுந்து சென்றாள் அபி.

அவளின் முகத்தை தடவி ரசித்து பார்த்தவன் அவளை தன் மேல் போட்டுகொண்டு "என்னுடைய ஆசையை விட உன்னுடைய உடல்நலம் எனக்கு ரொம்ப முக்கியம். காலையில் இருந்து உழைத்து களைத்துப்போயிருக்கும் உன்னை என் தேவைக்காக கஷ்டப்படுத்தும் அளவுக்கு நான் மிருகம் இல்லை. அதுமட்டுமல்லாமல் என் மனைவி மனத்தளவிலோ, உடலளவிலோ எந்த கலக்கமும் இல்லாமல் எனக்கு முழுதாக வேண்டும் " என்றான்.

மெலிதாக சிரித்த அபி " ஐ லவ் யூ பேபி " என்றாள்.

" மீ டூ மை டியர் ஏஞ்சல் " என்றவன் அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு தூங்கிபோனான்.
Nice ud
 

JRJR

Well-Known Member
ஹாஹா நைஸ் எபி. இன்னும் இந்த பிரியாவுக்கு இங்க என்ன வேலை.
 

Saroja

Well-Known Member
ரிஷி சொன்னது போல
அவங்க வீட்ல பிரச்சனை
தீரவே தீராது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top