Uyirin Ularal - episode 31

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு

ரிஷி பையன் பாவம்
பதினெழு வயசுலயே
இவ மேல காதல்
 
B.subhashini

New Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 31

" முடியாது, முடியாது போக மாட்டேன் என்றால் போக மாட்டேன். நான் இங்கேயே படித்துக்கொள்வேன். வெளிநாட்டு படிப்பு எல்லாம் எனக்கு வேண்டாம். ஆறு வருடம், ஆறு வருடம் என்னால் அங்கே தனியே தங்கி படிக்கமுடியாது " என்று மறுக்க மறுக்க அவன் அப்பா அவனை எல்லா பார்மலிட்டியும் முடித்து ஏர்போர்ட்டில் ஏற்றிவிட்ட போது உலகத்தில் முதல் எதிரி அவனுக்கு அவன் அப்பாதான் என்று நினைத்தான் ரிஷி. ஆனால் இவன் மறுக்க மறுக்க பேக் செய்து இவனை வெளியே தள்ளியது இவனை சேர்த்து நான்கு பேருக்குத்தான் தெரியும். அப்பா, அம்மா, பாட்டி அப்புறம் நான். அப்பாவும், பாட்டியும் இல்லாத பட்சத்தில் மீதி இருப்பது நானும் அம்மாவும் தான்.
நான் இதுவரை அதை யாரிடமும் சொன்னதில்லை, அப்படியென்றால் அம்மாவா ? இருக்கவே இருக்காதே " என்று ரிஷி யோசித்து குழம்பி போய் நிற்க
" என்ன சின்னத்தான் பேச்சே காணோம், அப்படியென்றால் நீ கூறிய மொக்கை ரீசனை தவிர வேறு என்னமோ இருக்கு இல்லையா ?" என்றாள் அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டு.
" உனக்கு யாரு இதை கூறியது? அம்மா என் ரகசியத்தை எப்போதுமே வெளியே சொல்பவர்கள் கிடையாது " என்றான் கேள்வியாக.
" அவர்கள் உன் ரகசியத்தை எல்லாம் சொல்லவில்லை, நான் வருத்தமாக இருந்ததை பார்த்து என்னை அழைத்து பேசினார். அவரிடம் போய் நான் எதை சொல்ல, நான் அமைதியாக இருந்ததை பார்த்தவர் கோபத்தில் ' இவனை அவன் அவன் அப்பா ஆறு வருடத்திற்கு துரத்தியதற்கு கூட இரண்டு வருடம் சேர்த்து துரத்தியிருந்தால் நீயாவது நிம்மதியாக இருந்திருக்கலாம் ' என்றார் " என்றாள்.
" ஸோ அம்மா வேலைதான் இல்லையா, சரிவிடு என்றாவது உனக்கு தெரியவேண்டியதுதான். ஆனாலும் இதை பற்றி பிறகு ஒருநாள் சொல்கிறேன். இப்போது நீ ப்ரியா உன்னிடம் மூட்டிவிட்டதை பற்றி கேள், அதற்கான விளக்கத்தை சொல்கிறேன் " என்றான்.
" நோ வே, இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல், நான் அதை மற்ற கேள்வியுடன் பொருத்தி பதிலை கண்டுகொள்கிறேன், சொல்லு ஏன் மாமா உன்னை வெளிநாட்டிற்க்கு அனுப்பினார். " என்று கேட்டாள். அவள் கண்ணில் இப்போது ஆர்வம் கூடியிருந்தது.
ரிஷியோ நேரடியாக அவளை பார்ப்பதை தவிர்த்து எழுந்து அங்கேயும் இங்கேயும் அலைந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக " அம்மு நான் இப்போது சொல்ல போவது இருபக்கமும் கூர்மையான வாளை போன்றது. நான் சொல்லப்போவதை கேட்டு நீ என்னை வெறுத்துவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் " என்றவன் அந்த அறையில் இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றான். வரும் போது அவன் கையில் ஒரு பாக்ஸ் இருந்தது. அதை அவளிடம் நீட்டியவன் " இதை பார், அப்புறம் உனக்கே தெரியும் " என்றான்.
எதுவும் புரியாமல் ஆர்வம் தாங்காமல் அதை வாங்கி அவசரமாக பிரித்தவளை பார்த்து
" நேஹா மெல்ல, அது என்னுடைய பன்னிரெண்டு வருட பொக்கிஷம் " என்றான் பதறிப்போய்.
" ஓகே சாரி" என்றவளின் ஆர்வம் இன்னும் அதிகமானது. அதை மெதுவாக பிரித்தாள் அபி. அதில் காய்ந்து போன ஒரு ரோஜா, ஒரு சிறு பெண் போன்ற ஒரு பொம்மை, அப்புறம் ஒரு கார்ட் இவ்வளவும் இருந்தது. அந்த கார்டில் ப்ளாக் அன்ட் வைட் கலரில் இரண்டு இதயம் இணைந்திருந்தது. அதற்கு கீழே ' இமைக்கும் நொடியும் என்னை பிரியாமல் இருக்க வாராயோ என் இதயமே' என்று எழுதியிருந்தது. கீழே ரிஷியின் பெயருடன்.
அதை பாத்தவளுக்கு தெரிந்து போனது அது என்னவென்று, அவளுக்கு கடந்த மூன்று நாளாக இருந்த வருத்தம், வேதனை, கோபம் அதெல்லாம் பறந்து வாய்விட்டு சிரித்தாள்.
" சின்னத்தான் இது இது...... நீ யாரையும் லவ் பண்ணினியா ? அதுவும் 12த் படிக்கும் போது, அப்போது உனக்கு பதினேழு வயது இருந்திருக்குமா ? ஒ மை காட் என்னால் நம்பவே முடியல, நீ லவ் பண்ணிருக்க, அதுவும் பப்பி லவ், அதுக்காக உன்னை மாமா வெளிநாட்டிற்க்கு துரத்தியிருக்கிறார் " என்றவள் அதை மெதுவாக கீழே வைத்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். சிரித்த சிரிப்பில் அவள் கண்ணில் நீர் வந்தது.
" சாரித்தான் சாரி " என்றவள் தன் சிரிப்பை கன்ட்ரோல் பண்ணிட்டு " அதான் ப்ரியாவிடம் அப்படி கூறினீர்களா ? அப்புறம் என்னாச்சு ? நீங்க லவ் பண்ணின அந்த லக்கி கேர்ள் யாருத்தான்? எதுக்காக மாமா உங்களை பிரித்தார் ? நீங்க ஏன் மறுபடியும் அந்த பெண்ணை சந்திக்க முயற்சி செய்யல ? எனக்கு வாழ்க்கை தரவா ? " என்று கேட்டாள்.
ரிஷி பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
" ப்ளீஸ் சொல்லேன், அந்த பொண்ணு இப்போ எங்கே இருக்கு என்று கண்டுபிடிப்போம். பிறகு அவளுக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை என்றால் உனக்கு நான் உடனே டிவோஸ் தந்துவிடுகிறேன், நீ அவளிடம் பேசு. உனக்கும் எனக்கும் இன்னும் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லி அவளை கன்வியன்ஸ் செய். அப்புறம் நீ அவளையே கல்யாணம் செய்து கொள் " என்றாள்.
அப்போதும் ரிஷி அவளையே பார்க்க " என்ன எருமை மாடே, மரம் மாதிரி நிக்குற, என்னை இன்றுதான் புதுசா பார்க்கிறியா ? நான் தான் குழந்தை முதல் உன்னுடனே இருந்து உன் வாழ்க்கையை அழித்துவிட்டேனே,...என்னை வாழவைக்கிறேன் என்று உன் வாழ்க்கையை தொலைத்தது பத்தாதா ? எந்த கிறுக்கனாவது இப்படி சைல்ட்ஹூட் லவ்வை மிஸ் பண்ணுவானா ? ஆளுதான் வளர்த்திருக்கியே தவிர அறிவு வளரவில்லையே உனக்கு. எப்படி வாழ முடியும் உனக்கு இன்னொரு பெண்ணுடன். மாமா ஏதோ கோபத்தில் அப்படி செய்திருப்பார். பிறகாவது அவரிடம் பேசி புரிய வைத்திருக்க வேண்டாமா ? " என்று பேசிக்கொண்டே போனவள்
" ஏன் சின்னத்தான் உன்னுடையது ஒன் சைட் லவ் இல்லையே " என்றாள் சந்தேகத்துடன்.
அவன் ஆமாம் என்பதுபோல தலையை ஆட்ட " என்ன ஒன் சைட் லவ்வா !!! அட பாவமே ? இப்போ என்ன செய்வது ?" என்று கேட்டாள் வருத்ததுடன்.
ரிஷி எதுவும் சொல்லாமல் ட்ராயரை திறந்து ஒரு லென்ஸை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
அபி புரியாமல் பார்க்க, அந்த கிரீட்டிங் கார்டையும் எடுத்து கையில் கொடுத்தான்.
" அதை வைத்து பார் " என்றான்.
என்ன என்று புரியாவிட்டாலும் லென்ஸ் வைத்து அந்த கிரீட்டிங் கார்டை பார்த்தவள் பேயடித்தது போல ஆனாள். அதிர்ச்சியில் அப்படியே சமைந்து இருந்தவளை
" நேஹா " என்று அழைத்தான்.
அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் அவனை ஒரு தீ பார்வை பார்த்தாள். " கடன்காரா, உன்னை மாமா வெளிநாட்டிற்கு அனுப்புவதோடு நிறுத்தினாரே அவரை சொல்லவேண்டும். உன்னை என்ன செய்தால் தகும். 17 வயதில் உனக்கு காதல் அதுவும் 11 வயது பெண்ணின் மேல். " என்றவள் பல்லை கடித்தாள்.
" இப்போது தருவாயா டிவோஸ் " என்றான் ரிஷி.
"அதை உன் தலையில் தான் போடவேண்டும். எருமை எருமை காதலித்தானாம் காதல் " என்றாள் அபி. அந்த கோபத்திலும் அவளால் சந்தோச படாமல் இருக்க முடியவில்லை. இருக்காதா பின்னே. அந்த ப்ரியா கூறிய அத்தனையும் பொய் என்று நிரூபிக்கும் ஆயுதம் அல்லவா இது.
" ஐயா சாமி உன் பிளாஷ் பேக்கை சொல்லிமுடி " என்று அந்த கார்டை மீண்டும் பார்த்தாள்.
" இதை நீயே செய்தாயா ? இதை சாதாரணமாக பார்த்தால் ஹார்ட் மாதிரி இருக்கு. ஆனா லென்ஸ் வைத்து பார்த்தால்" என்று முடிக்காமல் இழுத்தாள்.
இப்போது ரிஷிக்கு ஏதோ பாரம் இறங்கிய மாதிரி உணர்ந்தான்.
" லென்ஸ் வைத்து பார்த்தால் என்ன தெரிகிறது? ஒரு இதயத்தில் என் பெயரும், மற்றோரு இதயத்தில் உன் பெயரும் தெரிகிறதா ? இது என்னுடைய சொந்த தயாரிப்பாகும். என்னால் மட்டுமே கண்டு பிடிக்க முடிகிற தயாரிப்பு" என்றான் பெருமையாக.
" ஆமாம் ரொம்பதான் பெருமை, உன்னால் மட்டுமே கண்டுகொள்ள முடிகிற உன் சொந்த தயாரிப்பை மாமா எப்படி கண்டு பிடித்து உன்னை வெளிநாட்டிற்கு பேக் செய்தாராம்" என்று கேட்டாள் அபி நக்கலாக.
" அது பெரிய சோகக்கதை, இதை உன்னிடம் கொடுக்க வேண்டும் என்று நான் இதை வைத்துக்கொண்டு வீடு முழுவதும் உன்னை தேடினேன். நீ அம்மாவுடன் ஏதோ திருமணவீட்டிற்கு சென்றிருப்பதாக அப்பா கூறினார். உன் கையில் என்ன மறைத்துவைத்திருக்கிறாய் என்று கேட்டார்.நானோ பதட்டத்தில் ஒன்றுமில்லையே என்றேன். போதாதா உன் மாமாவுக்கு, காதை பிடித்து கொண்டு தன் அறைக்குள் இழுத்து சென்றுவிட்டார்.
இதையெல்லாம் பார்த்தவர் " ஏண்டா அந்த குழந்தையை உனக்கு காதல் தூது அனுப்புகிறாயா ? என்று கோபத்தில் கேட்டார். அப்போது என் நிலையை நினைத்து எனக்கே பரிதாபமாக இருந்தது.
அன்றைய கிரகம் எனக்கு அத்தோடு முடியவில்லை. அப்பாவுக்கு கண்ணாடி போடும் பழக்கம் இல்லை, அதனால் சிறிய எழுத்தை படிக்க லென்ஸ் பயன்படுத்துவார். என் எழுத்துவேற சிறிதாக இருந்ததா. முடிந்தது எல்லாம். அப்பா அதை பார்த்துவிட்டு என்னை கொல்ல போகிறார் என்று நினைத்தேன் நான்.
ஆனால் அவரோ என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். எதுக்காக அம்மு மேல் இந்த வயதில் உனக்கு காதல் வந்தது ? என்று.
அப்போது என் வாயில் சனீஸ்வர பகவான் வந்து குடிபுகுந்து கொண்டார் என்று நான் நினைக்காத நாள் இல்லை.
அப்போதுதான் என் அம்மு எப்போதும் என்னைவிட்டு போகமாட்டாள் என்றேன். அதற்கு பிறகு அப்பா யோசிக்கவே இல்லை, நீ அவளை விட்டு தள்ளி இருந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக என்னை அனுப்பிவைத்துவிட்டார். அம்மாவும், பாட்டியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள் அப்பா கேட்கவே இல்லை." என்றான் சோகமாக.
"நீ ஏன் திடீரெண்டு அப்படி லவ் என்று இறங்கினாய் சின்னத்தான் " என்று கேட்டாள் அபி.
" எல்லாம் அந்த கடன்காரன் மஹேந்திரனால் வந்தது " என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
" யார் உன்னுடன் படித்தானே, நீ கூட ஒருமுறை அவனை அடித்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்தாயே, அவனா ?"
" ஆமாம் அந்த பொறுக்கி பய தான். அன்றைக்கு அவனை நாலு அடியில் விட்டது தப்பாகிவிட்டது. அன்று போலீஸ் ஸ்டேஷனில் அப்பா என் மேல் எந்த கேஸும் வராமல் இருக்க ரொம்ப கஷ்டப்பட்டார், மறுபடியும் அவனை அடித்து பிரச்சனையை இழுக்க கூடாது என்று நினைத்தேன். இல்ல அவன் பேசிய பேச்சுக்கு அவனை கொலையே செய்திருப்பேன் " என்றான் ஆத்திரத்தில். அப்போது அங்கு 17 வயது ரிஷிதான் இருந்தான்.
" அப்படி என்ன அவனுக்கும் உனக்கும் பிரச்சனை?" என்றாள் அபி.
" அவனுக்கு திமிர் அதிகம், எதிலும் என்னுடன் போட்டிபோடுவதையே வழக்கமாக வைத்திருப்பான் போல, முதலில் படிப்பு, விளையாட்டு என்று மோதி பார்த்தான். முடியல அப்புறம் என்னுடனே இருக்கும் உன் மேல் அவனுக்கு பார்வை போயிற்று. உன்னை பற்றி பேசியே என்னை வெறுப்பேத்தினான், அதான் விட்டேன் பார் முகத்தில் நாலு குத்து, அத்தோடு அடங்கிவிடுவான் என்று பார்த்தால் அவன் வேறு ரூட்டில் போனான்.
உன்னை லவ் பண்ணி கல்யாணமும் செய்துகொள்வானாம். அப்புறம் உன்னை பார்க்க வேண்டுமென்றாலும் நான் அவனிடம் பர்மிசன் கேட்க வேண்டுமாம். லூசுப்பைய!!!! யாரை பார்க்க யார் யாரிடம் பர்மிசன் கேட்க வேண்டும். இதை இப்படியே விட்டா அவனை போல வேறுயாராவது வந்துவிடப்போகிறார்கள் என்று நினைத்து நானே முந்தி கொண்டு உன்னிடம் லவ் சொல்வதற்கு ரெடியானேன், கடைசியில் தவளை தன் வாயால் கெடும் என்பதை போல ஆகிவிட்டது என் பிழைப்பு." என்றவனை பார்த்து அபியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
" உனக்கு தைரியம் இல்லை சின்னத்தான், நீ மாமாவிடம் விடாமல் போராடி உன் பள்ளிப்பருவ காதலில் வெற்றி பெற்றிருக்க வேண்டாமா ?" என்றாள் கிண்டலாக.
" உனக்கு என்னை பார்த்தால் கிண்டலாக தெரிகிறதா ? தைரியம் இல்லாமலா இதையெல்லாம் உன்னிடம் கொடுக்க நினைத்தேன். என் பள்ளி பருவ காதலுக்காக அப்பாவிடம் எவ்வளவு போராடினேன் என்று எனக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் மட்டும்தான் தெரியும்.
அதுவரை நான் அப்பாவை எதிர்த்து பேசியதே இல்லை, ஆனால் அன்று நான் என்னன்னவோ பேசினேன்.
பணத்தை பார்க்கிறீர்கள், அவள் மேல் உங்களுக்கு உண்மையான பாசம் இல்லை, அப்படி இப்படி என்று எதிர்த்து பேசக்கூடாதது எல்லாம் பேசினேன். யாரு நினைத்தாலும் அவளை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று நான் பேசியதில் அப்பா ஆத்திரபடவில்லை, அமைதியாக பேசி எனக்கு புரிய வைக்க முயற்சி செய்தார்.
அவர் பேசியதில் இருந்து ஒன்றை புரிந்து கொண்டேன் நான், தன் பையனின் ஆசையை விட தன் மருமகளின் விருப்பம்தான் அவருக்கு பெரிதாக இருந்தது.
அவள் இப்போது சின்ன பெண், தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட உன் பெயரை சொல்லும் அளவுக்கு அவள் உன்னை அண்டியே இருக்கிறாள், இப்போது நீ இதையெல்லாம் அவளிடம் நீட்டினாய் என்றால் யோசிக்காமல் தலையை ஆட்டிவிடுவாள் அவள். தன் தேவையை கூட சரியாக புரிந்துகொள்ள முடியாத வயதில் உள்ள அந்த பெண்ணை வளர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக நம் விருப்பத்திற்கு கட்டாயப்படுத்த கூடாது. அவள் வளரட்டும், உலகத்தில் நாலு பேருடன் பழகட்டும், நல்லது கேட்டது எல்லாம் புரிந்த பிறகும் அவளுக்கு நீதான் வேண்டும் என்று அவள் விரும்பினால் மட்டுமே நீ ஆசைப்பட்டது நடக்கும்.
அதுமட்டுமல்ல இனி நீ அவளுடன் இருந்தால் அவளை சுயமாக சிந்திக்கவோ செயல்படவோ விடமாட்டாய், சதா சின்னத்தான் சின்னத்தான் என்று உன்னைவிட்டு பிரியாமல் அலைகிறாள், நீ கொஞ்ச நாள் படிப்பிற்காக வெளியே இரு. அவளும் வளரனும், நீயும் அவளை சும்மா பார்ப்பவர்கள் எல்லோரின் மூக்கையும் உடைப்பதை விட்டுவிட இதைவிட்டால் வேறு வழியில்லை.
அதனால் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முடித்துவிட்டார். அம்மாவை அவர் பேசி சம்மதிக்க வைத்தார். ஆனால் பாட்டி எனக்குதான் சப்போர்ட் பண்ணினாங்க. அதுக்கு காரணம் அவங்களும் என் கட்சி தான்.
ஆரம்பத்தில் உன்னை எடுத்து வளர்க்க அவர்கள் பயங்கரமா எதிர்த்தார்களாம், ஆனால் அப்புறம் எல்லோரையும் விட உன் மேல்தான் அவர்களுக்கு பாசம் அதிகமாக இருந்ததாம். அதனால் உன்னை வேறு எங்கேயும் திருமணம் என்ற பெயரில் அனுப்பக்கூடாது அவள் இந்த வீட்டின் மருமகளாகத்தான் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள். அதனால் இதெல்லாம் தெரிந்த போது என் பேராண்டியும் என்னை போல யோசிக்கிறான் என்று சந்தோஷப்பட்டார்.
ஆனால் உன் மாமனார் இருக்காரே விடாக்கண்டன் ஒரேடியாக நிமிர்த்துவிட்டார். வேறு வழியில்லாமல் நான் வெளிநாட்டிற்கு சென்றேன். அப்போது நீ அழுத அழுகையை பார்த்த எனக்கு என் அப்பா ஒரு பெரிய வில்லனாக தெரிந்தார்.
அதனால் அவரை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு முதல் வருடம் சரியாக படிக்காமலேயே திரிந்தேன்.
ஆனால் அப்பா என்னிடம் பேசி கொஞ்ச கொஞ்சமாக புரியவைத்தார். அந்த வருட விடுமுறையில் நான் ஏதேதோ காரணம் சொல்லி இந்தியா வந்தேன்.
அப்போது நீ வீட்டில் அத்தனை பேர் இருந்தும் நீ பெரிய பெண்ணானத்தை என்னிடம் கூறினாய், பாட்டியே ஆடிபோய்விட்டார். அப்போது அவருக்கே அப்பாவின் முடிவுதான் சரி என்று பட்டுவிட்டது. முடிவு படிப்பு முடியும் வரை இந்தியா பக்கமே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு.
முதலில் கஷ்டமாக இருந்த எனக்கு அப்புறம் என் காதலை நினைத்து சிரிப்பாக இருந்தது. வயது கோளாறு என்று நினைத்தேன். அப்பாவின் பேச்சில் இருந்த உண்மை எனக்கு புரிந்தது. நாளும் அப்படியே சென்றது. என் அம்முவின் பிரிவு எனக்கு கஷ்டமாக இருந்தது.
வெளிநாட்டு படிப்பு என்பது வெறும் படிப்பு மட்டும் இல்லை. சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இருந்தால் மட்டுமே நாம் நாமாக இருக்க முடியும்.
என் இரண்டாவது வருடத்தில் எலிசா என்ற பெண் என்னுடன் படித்தாள். அவள் ஒருநாள் என்னிடம் டேட்டிங் போகலாமா என்றாள். போகலாமே என்று நான் அவளுடன் கிளம்ப அன்றுதான் எனக்கு எல்லாம் வெட்ட வெளிச்சமாக விளங்கியது. என் காதல் வெறும் வயது கோளாறில் ஏற்பட்டது இல்லை என்பது.
டேட்டிங்கில் இன்று மாலை நான் உனக்கு தந்தேனே முத்தம் அதுதான் முதல் தொடக்கமாம். எலிசா என்னை நெருங்க என்னில் இருந்த நேஹா ஆவேசமாக வெளியே வந்தாள். அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு என் இருப்பிடம் வந்து சேர்ந்தவன் இரண்டு நாள் மண்டையை பிய்த்து யோசித்தேன், கடைசியில் வென்றது என் காதல்தான்.
என்னில் நீ அம்முவாக நிறைந்திருந்தாய், ஆனால் நேஹா என் உயிராகவே மாறியிருந்தாள். படிப்பை முடித்துவிட்டு என் நேஹாவை என்னுடையவளாக தரும் படி வரம் கேட்க ஓடி வந்தேன். ஆனால் இங்கு என் அம்முவே இல்லாமல் போயிருந்தாள்.
உன்னை அப்படி பார்த்தபோது என் மேல் எனக்கு வெறுப்பாக வந்தது. நான் மட்டும் காதல் கத்திரிக்காய் என்று உளறாமல் இருந்திருந்தால் அப்பா என்னை வெளிநாட்டிற்கு அனுப்பியிருக்க மாட்டார். உன்னை இந்த அளவுக்கு போக நானும் விட்டிருக்கமாட்டேன். உன்னுடைய அந்த நிலைக்கு முழுக்க முழுக்க காரணம் என் காதல்.
உன்னை அந்த நிலைமைக்கு ஆக்கிய என் காதலை நான் வெறுத்தேன். அப்புறம் நடந்தது உனக்கே தெரியுமே. என்னை கண்டாலே நீ வெறுத்து ஒதுக்க உன் வாழ்க்கை துணையை நானே தேடினேன்.
உனக்காக மாப்பிளை பார்க்க தயாரான என் மனம், நீ ஒருவனை திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டாய் என்று நான் ஆந்திராவில் இருக்கும் போது அம்மா சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மறந்துவிட்டேன் என்று நினைத்த என் நேஹா மறுபடியும் மேலெழும்ப ரணமாகி போனது என் இதயம். உன் மேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது. நீ என்னை ஏன் புரிந்துகொள்ளவில்லையே என்ற கோபம் அது. அதனால் தான் நான் உன்னிடம் பேசவில்லை, அவனை பற்றி விசாரிக்கவில்லை. என்னை மறந்து நின்றேன்.
என் 12வருட காதல் மண்ணுக்குள் புதைவதை கைகட்டி வேடிக்கை பார்த்தேன். என் நேஹா என்னில் நிறைந்து இருந்ததுதான் அதற்கு காரணம். பிறகு ஊட்டியில் நீ ஆவேசமாக பேசி கதறிய போதுதான் மறுபடியும் என் காதலை காரணம் காட்டி என் அம்முவின் வாழ்க்கையை கெடுக்க பார்க்கிறேன் என்று நினைத்தேன்.
அந்த ஜெய் உனக்கு மோதிரம் போட வந்த அன்று நீ அவன் அருகில் போய் அமர்த்தியே அப்போதுதான் எனக்குள் ஒரு சிறு சந்தேகம். அவனை ஆராய தொடங்கினேன், அன்று அனைவரும் கூடி இருந்தது நீயும் அவனும் மோதிரம் மாற்றிக்கொள்வதை பார்க்க, ஆனால் நீயோ மறந்து கூட என்னை விட்டு பார்வையை அகற்றவில்லை.
மறுபடியும் நேஹா வெளிப்பட, நான் திணறி போனேன். ஆனால் உனக்கு பார்த்திருந்த அந்த மாப்பிளை கெட்டவன், உன் முலமாக வரும் பணம் மட்டும்தான் அவனது குறிக்கோள் என்று அறிந்தபோது நான் எதையும் பற்றி யோசிக்கவில்லை. அங்கு வென்றது என் சுயநலம் மட்டும்தான். என் அம்மு இனி யாரிடமும் கஷ்டபடக்கூடாது அதே நேரத்தில் என் நேஹா என்னைவிட்டு எங்கேயும் போக கூடாது என்று நினைத்தேன். முடிந்தது நம் திருமணம்." என்று பேசி முடித்தான் ரிஷி.
அபி இமைக்க மறந்து அமர்ந்திருந்தாள். ரிஷி அவள் வாயிலிருந்து வர போகும் வார்த்தைக்காக தவமிருக்க தொடங்கினான்.
 
Excellent episode
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top