Uyirin ularal - episode 21

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 21

மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த திருமணம் முடிந்தது. அதன் பிறகு நடந்த ஒவ்வொரு சடங்கும் நண்பர்களில் உற்சாகத்தில் இன்னும் கலைக்கட்டியது.

இருவரும் கற்பகம்மாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தனர். " நீங்கள் இரண்டுபேரும் 100 வருடம் இணைந்து அனைத்து நற்பாக்கியத்ததையும் பெற்று வாழனும். என் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த இரண்டு கடமையும் ஒரே திருமணத்தில் முடித்துவைத்து என்னை மனம் குளிர செய்துவிட்டிர்கள். இதேபோல 10மாதத்தில் எனக்கு மறுபடியும் இரட்டைசந்தோசத்தை தரவேண்டும் " என்று வாழ்த்தினார் அவர்.

" ம்க்கும் ஆனாலும் உன் மாமியாருக்கு பேராசை இவ்வளவு ஆவாது, அங்கு ஒன்றுக்குமே வழியில்லை, இதில் இரட்டை சந்தோசம் வேண்டுமாம் " என்றாள் ப்ரியா பானுவிடம்.

பெரியவர்கள் அனைவரையும் நமஸ்கரித்து விட்டு அடுத்து கார்த்திகேயன் காலில் விழுந்தனர் இருவரும். ரிஷிக்கு அவன் அண்ணனின் ரியாக்ஷனை பார்க்கும் ஆசை.
கார்த்திகேயன் ஒரு நொடி கூட யோசியாமல் தன் காலில் விழுந்த இருவரையும் தூக்கி நிறுத்திவிட்டு தம்பியை அணைத்து வாழ்த்து கூறினான்.

எந்த பிறந்தநாளில் அம்பிகா பேயாட்டம் போட்டாலோ அந்த நாளில் நடந்தது போல அபியை ஆசிர்வதித்து அவள் நெற்றியில் முத்தமிட்டான் கார்த்திகேயன்.

அம்பிகா உக்கிரம் ஏறி ஆனால் எதுவும் செய்ய முடியாமல் நின்றாள்.

ரிஷி வெகு நாளைக்கு பிறகு மனம்விட்டு கார்த்திகேயனை பார்த்து புன்னகைத்தான்.

அபிக்கு தான் இழந்த ஏதோ ஒன்று திரும்ப கிடைத்தார் போல மனம் நிறைவாக இருந்தது.

அதன் பின் சடங்குகள் தொடங்கியது இளசுகளின் ஆட்டமும் தொடங்கியது.

" ஹலோ ஹலோ எல்லோரும் இங்கே கவனியுங்கள், அபி போட்டிருக்கும் மெஹந்தியின் ரிஷியின் பெயர் ஒளிந்து உள்ளது. அதை ரிஷி ப்ரோ 30 நொடியில் கண்டுபிடிக்க வேண்டும். " என்றாள் ஜானு.

ய்யே என்று கூட்டம் அலற அபி கையை ரிஷியின் முன் நீட்டினாள். ஒரு ஐந்து செகண்ட் அதை பார்த்தவன் " நந்து " என்று பெயர் எழுதியிருந்த இடத்தை தொட்டான். மறுபடியும் அங்கே சத்தம் எழுந்தது.

" ஓகே ஓகே இதில் நீங்கள் ஜெயித்திருக்கலாம், இன்னும் ஒரு கேம், நாங்கள் உங்கள் கண்ணை கட்டிவிடுவோம், இங்கு கூடியிருக்கும் பெண்கள் உங்கள் கையை பிடிப்போம், அதில் யார் அபி என்பதை சரியாக சொல்லவேண்டும், ஐந்து பெண்கள் தொடுவோம், கடைசியில்தான் சொல்லவேண்டும் எத்தனையாவது பெண் அபி என்று." என்றாள் மானு.

" இது என்னடா கொடுமை " என்று ஒருவர் குரலெழுப்ப " ஜஸ்ட் பார் ப்பன் " என்றனர் இளைஞர் பட்டாளம்.

ரிஷியின் கண் கட்டப்பட்டது. " அபி ஏதாவது சிக்னல் கொடுத்துவிடாதே " என்று.

ஐந்து பெண்கள் ரிஷியை தொட்டு சென்றனர். " இரண்டாவது மற்றும் ஐந்தாவது தொட்டது என் அம்மு " என்றான் ரிஷி.

ஓஒ என்று பட்டாளம் அதிர்ந்தது.

" என்னால முடியல இந்த கூத்தை எல்லாம் பார்க்க. எனக்கு தலைவலிக்குது, நான் வீட்டிற்கு போகிறேன் " என்று ப்ரியா கிளம்பிவிட்டாள்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மாலை வரவேற்பு கலைக்கட்டியது. ஆர்கஸ்ட்ரா பாடல் ஒருபுறம் ஒலிக்க அதற்கு ஏற்றார் போல நண்பர்கள் பட்டாளம் ஆடி தீர்த்தது.

இரவு அனைவரும் விடைபெற்று சென்றனர்.
அமிதாப் ரிஷிக்கு மூச்சு முட்டும் அளவுக்கு இறுக்கமாக ஹக் செய்தான்.

" ப்ரோ சான்ஸே இல்லை, இப்படி ஒரு ஹாப்பியானா சர்ப்ரைஸ் கொடுப்பீங்க என்று நாங்கள் நினைக்கவே இல்லை. உங்கள் இருவரின் ஜோடி பொருத்தம் அமேஸிங். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இப்படி அமையும். அபி என் அண்ணியாக வந்திருக்கவேண்டியவள், நீங்கள் பாவம் என்று நான் நினைத்ததால் தான் அவள் உங்கள் மனைவியாகி இருக்குகிறாள். சொல்லவே தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறோம் டேக் கேர் ஹர் " என்றபடி விடைபெற்றனர்.

" அப்புறம் ப்ரோ நானும் சென்றுவருகிறேன், நான் உங்கள் திருமணத்தில் ஒரு நாள் முன்னரே வந்து உங்கள் திருமணத்தை சிறப்பித்து தந்ததற்கு, நீங்களும் அவ்வண்ணமே என் திருமணத்தையும் சிறப்பித்து தருமாறு கட்டளை இடுகிறேன் " என்றான் ஜானு.

" போடி செந்தமிழை கொள்ளாதே " என்றாள் அபி.

" அப்படியெல்லாம் இல்லை சூப்பரா பேசின, ஜானு உன் உதவியை என்னால் மறக்கவே முடியாது, நீ சொல்லவே வேண்டாம் உன் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னரே உன் பிரெண்ட் வருவாளோ இல்லையோ உன் அண்ணன் நான் கண்டிப்பாக வருவேன்" என்றான் ரிஷி.

" ம் தப்பு தப்பு என் தோழி இல்லாமல் உங்களை நான் எங்கும் பார்க்க கூடாது எது உங்கள் தங்கையின் உத்தரவு " என்றாள் ஜானு.

" ஐயோ முடியலையே, பாசமலர்களே " என்று தலையில் கைவைத்தாள் அபி.

" உனக்கு போய் சப்போர்ட் செய்தேன் பார் என்னை சொல்லவேண்டும், சரி நான் கிளம்புறேன், அபி ஒழுங்கா நல்ல பிள்ளையாய் நடந்துக்க" என்று கூறிவிட்டு விடைபெற்றாள் ஜானு.

அன்று இரவு கற்பகம்மாவின் அறையில் ஒரு மாநாடு கூடியது.

" அத்தை இன்று முகூர்த்த நாளாக இருந்தாலும் சாந்திமுகூர்த்தத்திற்கு இன்று நல்ல நாள் இல்லையாம், அதனால் அதை இன்னொருநாள் வைத்துக்கொள்ளலாம் " என்றாள் பானு.

அப்போது தாயை காண உள்ளே வந்த ரிஷி
" எதை இன்னொருநாள் வைத்துக்கொள்ளவேண்டும் " என்று கேட்டான்.

"சாந்தி முகூர்த்தத்தை " என்றாள் வித்யா.

" யாருடைய சாந்தி முகூர்த்தத்தை " என்றான் ரிஷி.

" இது என்ன கேள்வி, இன்று யாருக்கு கல்யாணம் நடந்ததோ அவர்களுக்கு " என்றாள் அம்பிகா வெடுக்கென்று.

" அதை பற்றி அவர்கள்தானே முடிவு செய்யணும் ஐ மீன் நாங்கள் , இடையில் நீங்க ஏன் அதை பற்றி பேசணும் உயர்ந்த உள்ளங்களே. இதுதான் பஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கனும், எங்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பது. நீங்கள் மூக்கை நுழைத்தாலும் நான் கேட்க மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும், ஆனால் நீட்டிய மூக்கை என்ன செய்வேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் " என்றான் ரிஷி அமர்த்தலாக.

" ரிஷி " என்றார் கற்பகம்மாள்.

ரிஷி அமைதியானான்.

"ரிஷி நேரமாகிறது உன் அறைக்கு போப்பா, அம்முவின் பொருட்கள் எல்லாமே உன் அறைக்கு மாற்றியாச்சு, அவளின் புக்ஸ் மட்டும் இங்கே இருக்கும் என்று நினைக்கிறேன், அதை மெதுவாக மாற்றிக்கொள்ளுங்கள். " என்றார் கற்பகம்மாள்.

"கிழவிக்கு திமிரை பார்த்தாயா ? அவன் நேராக முடியாது என்று சொன்னான், இவர் சுற்றி வளைத்து சொல்கிறாராம். " என்றாள் பானு பல்லைகடித்துக்கொண்டு.

தாங்கள் வந்த வேலை தோல்வியை தழுவ மாநாடை கலைத்து கொண்டு சென்றனர்.

கதவை திறந்து கொண்டு அபி ரிஷி அறைக்குள் வந்தாள்.

" என்ன அம்மு கையில் பால் செம்பு, முகத்தில் வெட்கம், நடையில் நளினம் என்று எதுவுமே இல்லாமல் ரவுடி பேபி மாதிரி வந்து நிற்கிறாய் " என்று சோபாவில் சாய்ந்தபடி கேட்டு சிரித்தான் ரிஷி.

" சிரி, எதுக்கு என் அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் இன்னைக்கே இங்கே மாத்தின, கொஞ்சம் ட்ரெஸ்ஸையாவது அங்கு வைத்தால் என்ன ? காலையில் இருந்து மாற்றி மாற்றி புடவையை கட்டி நான் படும் பாடு தெரியுதா உனக்கு " என்றபடி அவள் உடையை தேடி எடுத்தாள்.

ட்ரெஸ்ஸிங் ரூம் வரை சென்றவள் " சின்னத்தான் இந்த ட்ரேஸ்லதான் இருக்க வேண்டும் என்று ஏதாவது பார்மாலிட்டி இருக்கா ?" என்று கேட்டாள்

" இல்லை " என்றான் அவன்

" தேங்க் காட் " என்றவள் உடையை மாற்றிக்கொண்டு வந்து கட்டிலில் அமர போனவள்

" எதையோ மறந்துவிட்டனே " என்று தலையை சொறிந்தவள் ஆங் என்று ரிஷியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க குனிந்தாள்.

அவள் உள்ளே வந்தது முதல் அவளையே பார்த்துகொண்டிருந்தவன் அவள் காலில் விழுந்ததை உணராமல் இருந்தான்.

" நந்து எருமை ஏதாவது சொல்லி ப்ளஷ் பண்ணு, முதுகு வலிக்குது. நான் போய் தூங்கட்டும் " என்றாள் அபி.

ஓஒ என்று நினைவுக்கு வந்தவன் " ஸாரி செல்லம் " என்று அவளை தூக்கிவிட்டான்.

" ப்ளஷ் பண்ணல " என்றாள்

" யார் உனக்கு இதையெல்லாம் சொன்னாங்க " என்று கேட்டான் ரிஷி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டபடி.

" அத்தைதான் சொல்லி அனுப்பினாங்க, நீ என்ன சொல்லி ப்ளேஸ் பண்ணின என்று நாளைக்கு கேட்பார்களாம், அப்புறம் எப்படி நடக்கணும் என்று நீ சொல்லித்தருவாய் என்றார்கள், ஆனால் நீ சொல்லித்தருவதையெல்லாம் கேட்க எனக்கு இன்று முடியாது, எனக்கு தூக்கம் தூக்கமா வருது, நீ ஏதாவது சொல்லு " என்றாள் அவள்.

சிரித்த ரிஷி " நீ நூறு வருஷம் சந்தோசமா இருக்கனும் " என்றான்.

" ஓகே குட் " என்றவள் கட்டில் வரை போனாள், நின்று " நந்து என்னை எதுக்கு கல்யாணம் செய்த ?" என்று கேட்டாள் அபி.

" உனக்குத்தான் தூக்கம் வருதே, போ போய் தூங்கு " என்றான். சிரிப்பில் அவன் உதடு துடித்தது.

" இல்ல தூக்கம் வரல, இதை மட்டும் சொல்லு " என்று அவன் அருகில் போய் நின்றாள்.

" கண்டிப்பா சொல்லனுமா ?"

" ஆமாம், ஆமாம் "

" ம் சும்மாதான் "

" என்ன சும்மாவா ?"

"ஆமாம் சும்மாதான் "

" சின்னத்தான் உன்னை நான் கொலை பண்ண போறேன், சும்மா யாராச்சும் கல்யாணம் செய்வார்களா ? ஆசை பட்டு கல்யாணம் செய்வார்கள், இல்லை ஏதாவது ஒரு காரணத்திற்காக கல்யாணம் செய்வார்கள். இப்படி எந்த மடச்சாம்பிராணியாவது சும்மா கல்யாணம் செய்வார்களா ? என்று அவனை மாதிரி சொல்லி காட்டினாள் அபி.

" அப்படியென்றால் இன்டைரெக்ட்டா என்னை மடச்சாம்பிராணி என்று சொல்கிறாயா ?"

" ச்ச இல்லை, இன்டைரெக்ட்டா இல்லை,
டைரெக்ட்டா சொல்கிறேன் நீ மடச்சாம்பிராணி தான்."

" உனக்கு வாய் கூடி போச்சு, உன்னை..... " என்றவன் அவள் கையை பிடித்து இழுத்து அவளை தன் மடியில் போட்டான்.

அவன் மடியில் போய் விழுந்தவள் அதிர்ச்சியாகி " உனக்கு யார் மீதும் பயம் இல்லாமல் போனது " என்றவள் சட்டென்று
நாக்கை கடித்தாள் கண்ணை சிமிட்டிகொண்டு.

" இனி யாராலும் எதுவும் சொல்ல முடியாது இல்லையா சின்னத்தான் " என்று அவன் தன் இருக்கையையும் அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தாள்.

" ம் இதுக்குதான் இந்த கல்யாணம் " என்றான் ரிஷி.

" ஹே ஊர்உலகத்தில் ஒரு கல்யாணத்திற்கு என்னென்னமோ காரணம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் உன் காரணம் போல நான் கேள்விப்பட்டதே இல்லை " என்றாள் அபி.

" பின்னே இருக்காதா ? என்னமா பேசினார்கள், வயசு பொண்ணு அவளுடன் பேசினால் குற்றம், அவளை பார்த்தால் குற்றம், அவளுடன் வெளியே போக கூடாது, சேர்ந்து சாப்பிடக்கூடாது, பார்த்தால் பார்க்காததுபோல போகணும், பேசவே கூடாது, கிராதகிகள் என்ன சூழ்ச்சி.

இந்த காலத்தில் பெண்களுடன் பேச கூடாது என்றே சொல்ல முடியாது, அதுவும் நான் வளர்த்த பெண்ணுடன் பேச கூடாதாம், நீ பெரிய பெண்ணாகும் வரை உன்னை நான் தனியே படுக்க விட்டிருப்பேனாடி, உன்னை விட்டு இஞ்சி நகரமாட்டேன், அப்புறம் பாட்டிதான் ஏதேதோ சொல்லி உனக்கும் எனக்கும் தனி அறை ஒதுக்கினார்கள். சரிதான் போகட்டும் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று பார்த்தால், வந்து சேர்த்தார்கள் பார் அரக்கிகள், என்னென்னெல்லாம் செய்துவிட்டார்கள். யோசிக்க யோசிக்க அவர்களை " என்று பல்லை கடித்தான்.

" அண்ணன் மனைவியாக போய்விட்டார்கள், அதான் மொத்தமாக சேர்த்து வைத்தேன் பார் பெரிய இடியாக, இனி வந்து சொல்ல சொல்லு, பார்க்காதே, பேசாதே என்று. பைத்தியம் என்று கீழ்ப்பாக்கத்தில் கொண்டுபோய் சேர்க்க சரியாக இருக்கும் " என்றான் கோபத்தில்.

" ஓகே ஓகே கூல் பேபி கூல் " என்று அவன் கன்னத்தை தடவினாள்.

அவள் கையை தட்டிவிட்டவன் " நீயும் குறைந்தவள் கிடையாது, மூன்று குரங்கும் சொல்கிறது என்று என்னை எட்டிக்கூட பாராமல் என்ன கொடுமை செய்தாய், எல்லாவற்றிற்கும் மேலாக உனக்கு என்ன தைரியம் இருந்தால் இன்னொருவனை கட்டிக்கொள்ள சம்மதித்திருப்பாய் என்னிடம் ஒரு வார்த்தை கேளாமல் என்றான்.

ஹா ஹா என்று மேலும் அவன் கழுத்தை இறுக்கி பிடித்து கொண்டு சிரித்தாள். ரிஷியால் அவன் கோபத்தை இழுத்து பிடித்து நிறுத்த முடியவில்லை.

" என்ன வானரமே சிரிப்பு " என்றான் அவன் தலையில் முட்டியப்படி.

" சார் அந்த பிரியாவுடன் டூயட் பாடுவாராம், இரண்டுபேரும் காதலில் உருகிக்கொண்டிருக்க நான் இடையில் வந்து என்னை கட்டிக்க சின்னத்தான் என்று சொல்லணுமாம், பைத்தியக்காரி கூட அந்த வேலையை செய்யமாட்டாள், நான் முழு பைத்தியம் இல்லை அதை செய்ய, அப்பப்ப கொஞ்சம் கலங்கும் அவ்வளவுதான்" என்றாள் தலையை காட்டி.

" போட்டேன்னா பாரு, தேவையில்லாத வார்த்தையை பயன்படுத்தாதே, அப்புறம் என்ன சொன்ன அந்த பிரியாவுடன் டூயட் பாடினேனா ? எப்போ பார்த்த ஒருவேளை அந்த பாட்டில் க்ரூப் டான்ஸில் ஆடிக்கொண்டிருந்தாயா ? என்றான் ரிஷி.

" சின்னத்தான் இந்த சப்ஜெக்ட் போரடிக்குது, சேன்ஜ் தி சப்ஜெக்ட். நீ என்ன கூறினாய் ? பழைய மாதிரி நாம் எப்போதும் சேர்ந்தே இருக்கத்தானே கல்யாணம் செய்தேன் என்று கூறினாய். அந்த வேலையை பார்ப்போமே சும்மா எதையாவது போட்டு குழப்பாதே."என்றவள் அவனை விட்டு எழுந்தாள்.

" எங்கேடி போற, ஏதோ வேலையை பார்ப்போம் என்ற " என்று அவளை விடாமல் பிடித்து இழுத்தான்.

" சார் உனக்கு ரொமான்ஸ் செய்யும் மூட் இருந்தா ஸாரி அதை மாத்திக்க, அதுக்கு சான்சே இல்லை. மனசுக்குள்ள அங்கங்கே ஏதோ முனுமுனுன்னு அரிச்சிக்கிட்டே இருக்கு அது க்ளியர் ஆகும்வரை நோ ரொமான்ஸ் " என்றாள் அபி.

" எனக்கும் அதே பீலிங்ஸ் தான், ஆனால் உன்னை இங்கிருந்து நகர விடமாட்டேன். இதுவரை நீங்கள் அனைவரும் என்னை படுத்தின பாட்டுக்கு இன்று உன்னை நான் விடப்போவதில்லை " என்றான்.

" சின்னத்தான் யூ க்நொவ் மனசு ஒரு விசித்திரமான பிறவி. ஒரு பொருள் நமக்கு எளிதாக கிடைத்தால் அதுமேல நமக்கு எந்த ஈர்ப்பும் தோணாது. அதே நமக்கு எட்டாத தூரத்தில் இருந்தால் அது மேல வெறிபிடிக்குமாம், அப்படி பிடிச்சிருக்கு உனக்கு. நேற்று காலையில் இருந்து ஏறிய பிரஷர், இன்னைக்காவது தூங்கலாம் என்று பார்த்தால், ஏதோ இன்று மட்டும்தான் நான் உன் மனைவி மாதிரி பேசிகிட்டு இருக்க" என்றாள்.

" ஏன்டி எனக்கு இருக்கும் பீலிங்ஸ்ல உனக்கு கொஞ்சம் கூட இல்லையா ?" என்றான் அவன் பாவமாக.

" ஏன் இல்லை ? பார்த்தா தெரியல உன் மடியைவிட்டு விலகாமல் இருக்கேனே, ஆனா டயர்டா இருக்கு " என்றாள் அவன் மார்பில் சாய்ந்துகொண்டு.

அவளை அப்படியே கையில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தவன் தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டான்.

" சின்னத்தான் என் அறையில் இருந்த கட்டிலை பார்த்தாயா ?" என்றாள்.

" பார்த்தேனே கட்டில் முழுவதும் தலையணை, அம்மா பழைய பழக்கத்தை விடவே இல்லை, அதான் எதையாவது கட்டிப்பிடித்தாள் தான் உனக்கு உறக்கமே வரும் அப்படித்தானே ? " என்றான் கள்ள சிரிப்புடன்.

" கரெக்ட், அப்படின்னா என் தலையனையெல்லாம் எங்கே ? " என்றாள்.

" பார்த்தா தெரியல, இனி உனக்கு நான் தான் தலையணை " என்று அவளை அணைக்க சென்றான்.

" ஏய் தொடாதே " என்று விலகினாள்.

ரிஷி ஏமாற்றத்துடன் பார்க்க

" நான் தான் பிடிப்பேன் " என்று அவனை கட்டிக்கொண்டாள்.

இருவரும் சிரிக்க அதன் பிறகு அவள் வாயை மூடவே இல்லை. பேசினால் பேசினால் பேசிக்கொண்டே இருந்தால். கரை கடந்த வெள்ளத்தை போல அவள் மனம் தனக்குள் பூட்டிவைத்திருந்த அனைத்தையும் வெளியேற்றியது. ரிஷி தன்னுடன் இல்லாத தன் எட்டுவருட வாழ்நாளில் நடந்த அனைத்து சந்தோசமான விஷயத்தை மட்டும் கூறினாள். மறந்தும் அவளின் கஷ்டத்தையோ, வருத்தத்தையோ பற்றி பேசவில்லை. பேசி பேசி ஒருவழியாக மணி ஒன்றை தொடும் போது கண்ணயர்ந்தாள்.

அவள் தூங்கும் வரை அவளை அணைத்து கொண்டிருந்தவன், அவள் தூங்கியவுடன் அவளை மெல்ல தன்னிடமிருந்து விலக்கி தலையணையை சரியாக வைத்து படுக்கவைத்தவன், ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு சோபாவில் வந்து படுத்தான். மங்கிய ஸிரோ வால்ட் வெளிச்சத்தத்தில் தெரிந்த அபியின் முகத்தை பார்த்து பலத்த யோசனையில் அவன் நெற்றி சுருங்கியது.

விடியக்காலை நான்குமணியளவில் புரண்டு படுத்த அபியின் கை அருகில் படுத்திருந்த ரிஷியை தேடி நீண்டது. நீண்ட கை அங்கே வெறுமையை உணரவும் எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கி கொண்டு அந்த அறையை சுற்றி கண்ணை ஓடவிட்டாள். அங்கிருந்த சோபாவும் வெறுமையாக இருக்கவே அவள் கண் கலங்க தொடங்கியது.

கட்டில் இருந்து எழுந்து வந்து பாத்ரூம் கதவை பார்த்தாள் அது வெளியே பூட்டிருக்க அறையை சுற்றி தேடினாள்.

அந்த அறையின் பால்கனியில் மறைய தயாராகும் நிலவை பார்த்தவண்ணம் கைகட்டிக்கொண்டு சிலையாக நின்றிருந்தான் ரிஷி.

அவன் அருகில் சென்றவள் அவனை பின்னோடு கட்டிக்கொண்டாள்.

தன்னை சுற்றி தழுவிய கரத்தை பற்றி முத்தமிட்டவன் " என்னடா " என்றான்.

இவளும் அதே குரலில் " என்னடா " என்றாள்.

சிரித்த ரிஷி " தூக்கம் வரவில்லை " என்றான்.

" நான் வேணா என் ரூமுக்குக்கு போயிடவா ?"

" ஏன் ?"

" இல்ல உனக்கு தூக்கம் வரவில்லை என்றாயே அதான் "

" பார் நேஹா, நான் உன் சின்னத்தான் தான் நீ என் அம்முதான் ஆனால் அதையும் தாண்டி நீ என் மனைவி நான் உன் கணவன்.
இனி நம் இருவருக்கும் தனி அறை, தனி கட்டில் என்று ஒன்றும் கிடையாது " என்றான்.

" அதை அங்கே சோபாவில் கிடக்கும் தலையணையை பார்த்து சொல் நந்து " என்றாள்.

அவள் கையை விலக்கி திரும்பி நின்றவன் அவள் கண்ணை பார்த்துக்கொண்டிருந்தான், அவளும் பார்வையை தாழ்த்தாமல் பார்க்க
" தூக்கம் வராமல் நான் புரண்டு புரண்டு படுத்ததில் உன் தூக்கம் கலைந்து விடும் என்று நான் அங்கே சென்று படுத்தேன் " என்றான்.

" உனக்கு தூக்கம் வரவில்லை என்றால் என்னை எழுப்ப வேண்டியதுதானே " என்றாள் அவன் கூறியதை நம்பாமல்.

பதில் கூறாமல் அவளை மாரோடு அணைத்தவன் " சாரி " என்றான்.

" இப்படி பண்ணாதே நந்து, நான் ரொம்ப ஹர்ட் ஆகிவிடுவேன், உனக்கு ஏதாவது என் மேல் கோபம் இருந்தால் என்னை நாலு அடி வேண்டும் என்றாலும் அடித்துக்கொள். ஆனால் என்னை இப்படி தனியே விட்டு போகாதே, ஏற்கனவே என்னை நீ விட்டுட்டு போனதில் நான் இழந்தது ரொம்ப அதிகம் " என்றாள் அவன் சட்டையை இறுக்கி பிடித்து கொண்டு.

" இல்ல போகல, ஒரே கல்யாண டென்ஷன் அதான் தூக்கம் வராமல் அங்கே சென்று படுத்தேன் " என்றான், பின்பு அவளை அழைத்து சென்று படுக்கவைத்தான்.
 
banumathi jayaraman

Well-Known Member
என்ன மாதிரியான அன்பு இது.....Nice ud
அண்ணன் தம்பி நாலு பேரில் ஆக்சிடெண்டான காரிலிருந்து அபிநேஹாவை எடுத்து வந்த பொழுதிலிருந்து இவன்தானே அவளை கண்ணும் கருத்துமா பார்த்தான்
அப்புறம் அவ்வளவு ஈஸியா ரிஷி அவளை விட்டுவிடுவானா?
இன்னும் ரிஷி பாரீன் போன ரீஸன் தெரிந்தால் நீங்க ஷாக்காயிடுவீங்கப்பா
 
B.subhashini

New Member

Interesting
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top