Uyirin ularal - episode 20

Advertisement

B.subhashini

New Member
உயிரின் உளறல் - அத்தியாயம் 20

திடீர் என்று ஏற்பாடான திருமணம், நெருங்கிய நண்பர்களை தவிர யாருக்கும் சொல்லப்படாத ரகசியம், அதனால் நாளை வருபவர்கள் நாளை பார்த்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டான் ரிஷி.

அவன் அறையில் அவனுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான் ரிஷி.

" சின்னத்தான் " என்று வந்து நின்றாள் ப்ரியா.

ரிஷி கேள்வியாக நோக்கவும் " உங்களுடன் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் " என்றாள்.

" நாளை பேசிக்கொள்ளலாம், இன்று நான் பிஸி " என்றான் இவன் பட்டும் படாமல்.

" நாளை உங்களுடன் பேச என்ன மிச்சம் இருக்கும் " என்றாள் ப்ரியா கோபமாக.

" அப்படியென்றால் " என்றான் இவன் கேள்வியாக.

" தனியாக பேச வேண்டும் என்றேன்" என்றாள் ப்ரியா அழுத்தமாக.

இவள் விடப்போவதில்லை, நண்பர்கள் முன்னிலையில் எதற்கு தேவையில்லாத பேச்சு என்று நினைத்தவன்
" வா " என்று முன்னே நடந்தான்.

தோட்டத்திற்கு வந்தனர் இருவரும்.
" சின்னத்தான் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை, உங்கள் நினைவில் நான் அல்லும் பகலும் தவித்துக்கொண்டிருக்க, நீங்கள் பேசிமுடிக்க வேண்டிய சின்ன விஷயத்தை பெரிதாக்கி, அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன் என்ற பெயரில் எனக்கு துரோகம் செய்கிறீர்கள், உடனே இந்த கல்யாணத்தை நிறுத்துங்கள், இல்லையென்றால் என்னை பிணமாகத்தான் பார்ப்பீர்கள் " என்றாள் அழுதுகொண்டே.

" சின்ன விஷயமா ? வாழ்க்கை கொடுக்கிறேன்னா ?" என்று கேட்டான் ரிஷி கசப்பாக.

ப்ரியா அழுது அவன் பார்த்தது இல்லை, ஒரு பெண் அதுவும் முதல் முறை தன் முன் அழுகிறாளே இதை எப்படி கையாள என்று யோசித்தவனுக்கு அவளுடைய இந்த பேச்சு கோபத்தை மூட்டியது.

" லுக் ப்ரியா கால் மீ ரிஷி. ஷி ஒன்லி ஹவ் ரைட்ஸ் டு கால் மீ சின்னத்தான் " என்றான்.

" இப்போ அது ரொம்ப முக்கியமா ? ஓகே சின்னத்தான் இல்லை, ரிஷி, சொல்லுங்கள் எனக்கு ஏன் துரோகம் செய்திர்கள் " என்றாள்.

" உன் கேள்வி உனக்கே அபத்தமாக தெரியவில்லை, யார் யாருக்கு துரோகம் செய்தார்கள், நான் உன்னை இல்லை எந்த பெண்ணையும் காதலிக்கமாட்டேன், அது ஏன்னு உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது என்னுடைய ரகசியம். எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் அம்மு திருமணம் நடக்கவேண்டும் என்று ப்ரெஸ்ஸர் கொடுத்தால் தான் அவள் திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்பதால் நீங்கள் பேசும் போதேல்லாம் நான் ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

நீயாக எதையாவது யோசித்துக்கொண்டு, நான் உனக்கு துரோகம் செய்ததாக பேசுவாயா ? என்றான்.

"அப்படியென்றால் திட்டமிட்டபடி இந்த கல்யாணம் ஜெய்யுடன் நடந்திருந்தாலும் நீங்கள் என்னை திருமணம் செய்திருக்க மாட்டிர்களா ?" என்று கேட்டாள் ப்ரியா.

" மாட்டேன் " என்றான் அவன்.

" ஏன் " என்றாள் ப்ரியா
" சொல்வதிற்கில்லை " என்றான் இவனும்
" ஒரு பெண்ணை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ விரும்பவில்லை என்றால் நீங்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்றவரா ? ஆண்மையற்றவரா ?" என்று கேட்டாள் ப்ரியா.

அவள் கேள்வியில் ரிஷி ஒரு நிமிடம் ஆடி போய்விட்டான், ஆனால் " எஸ், ஸோ வாட்" என்றான் அமைதியாக.

" அப்படியென்றால் நாளை நடக்கவிருக்கும் திருமணம் ?" என்றாள் ப்ரியா விடாமல்.

" பதில் உனக்கே தெரியுமே " என்றான் அவன்.

" ஓஒ உங்கள் அம்மு, அதானே பதில், கரெக்ட் உங்கள் இருவருக்கும் தான் ஜோடி பொருத்தம் சரியாக இருக்கும். நான் தப்பினேன், வாழ்த்துக்கள் " என்றவள் அவன் எதிர்பாராத நேரம் அவனை கட்டிப்பிடித்தாள், விடைபெறுவதுபோல. அதிர்ச்சியானவன் அவளை விலக்குவதற்காக அவளின் கையில் கையை வைத்தான். சரியாக அதை ஒரு கேமரா கப்சர் செய்தது.

அவளை விலக்கிய ரிஷியின் பாக்கெட்டில் இருந்த போனில் ஒரு பீப் சவுண்ட் கேட்டது.
அதை எடுத்து பார்த்தவன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

" ப்ரியா சும்மா சொல்லக்கூடாது, உன்னை அம்மு நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள். நீ இப்படி செய்வாய் என்று கூறினாள். அதே போல நீயும் செய்தாய். அடுத்த நொடியே அதை அவளுக்கு போனில் அனுப்பிவிட்டாயே ? ஆனால் அதில் பார் உன் துரதிஷ்டம் அவள் போன் என்னிடம் இருக்கிறது, இப்போதுதான் அவள் அறைக்கு போனேன், அவளுக்கே தெரியாமல் அதை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன், ஸோ ஸட். இன்னும் கல்யாணத்திற்கு முழுதாக 10 மணி நேரம் உள்ளது, ஆல் தி பெஸ்ட் " என்றவன் சென்றுவிட்டான்.

ப்ரியா ஓங்கி காலை தரையில் அடித்தாள் " ஷீட் " என்று.

அம்பிகா ஒன்றும் செய்யமுடியாமல் அறைக்குள்ளே தவித்தாள், ப்ரியாவும், பானுவும் முயற்சி செய்து தோற்றனர், மீதி இருப்பது யார் ?

" அபிம்மா, பெரியம்மா உங்களுக்கு பால் அனுப்பினார்கள் " என்று தன் முன் நிற்கும் வேலைக்காரியை பார்த்து கேட்டாள் அபி

" நான் இரவு பால் குடிப்பது இல்லையே, அத்தைக்கு தெரியுமே " என்று.

" தெரியவில்லை அம்மா, கொடுத்தனுப்பினார்கள் " என்றாள் அவள்

" சரி கொடு " என்று அதை வாங்கியும் போகாமல் நின்ற வேலைக்காரியை பார்த்த அபி

" என்ன ?" என்று கேட்டாள்.

" கிளாஸ் " என்று அவள் இழுக்க

" அப்புறம் வந்து எடுத்துக்கொள் " என்ற அபி அவளின் அடுத்த பதிலுக்கு வாய்ப்பு தராமல் அங்கிருந்து சென்றாள்.

" ஜானு, இதை குடிக்கவா ? வேண்டாமா ?" என்று கேட்டாள் அபி.

" நான் உனக்கு சாப்பாட்டை எங்கள் வீட்டில் இருந்து சுமந்து கொண்டுவந்திருக்கேன், நீ பாலை குடிக்கவா ? என்று கேட்கிறியா ? முதலில் அதை கொண்டு வாஷ் பேசனில் கொட்டு " என்றாள் ஜானு.

"அப்படி வேஸ்ட் பண்ண கூடாது, நீ வேண்டும் என்றாள் குடி " என்றாள் அபி.

" போடி இவள, உன்னையே குடிக்க கூடாது என்கிறேன், நான் குடிபேன்னா ?" என்றவள் அதை அவள் கையில் இருந்து வாங்கி வாஷ்பேஷனில் கொட்டினாள்.

" கொட்டிட்டியா ? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய், வா தூங்கலாம்" என்று அபி போய் படுத்துக்கொண்டாள்.ஜானு ஒருவித கலக்கத்திலே இருந்தாள், ஆனால் அவள் நினைத்தது போல எதுவும் நடக்காமல் பொழுது விடிந்தது.

மும்பை பட்டாளமும் வந்து சேரவே வீட்டில் ஒரே குதூகலம்தான். அபியின் தோழிகள் கிண்டல் என்ற பெயரில் அவளை கலாய்த்து கொண்டிருந்தன. அவர்களின் நண்பர்களுக்கு இது ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று எதையும் சொல்லவில்லை.

காலையில் ஒன்பது மணிக்கு முகூர்த்தம். கற்பகம்மாவின் கிராமத்து உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். யாருக்குமே எதுவுமே சொல்லப்படாமல் ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன.

கல்யாண மண்டபம் நிறைந்து வழிந்தது. ஒரு பணக்கார வீட்டுக் கல்யாணத்தில் எங்கேயுமே பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து இருந்த பிளக்ஸ் வைக்கப்படாமல் இருந்தது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. மண்டபத்தின் வாசலிலும் வரவேற்பு வரிகள் எழுதப்பட்டிருந்ததை தவிர எங்கேயும் மணமக்களின் பெயர் எழுதப்படவில்லை. மற்றபடி எந்த குறைவின்றி மண்டபத்தில்கூட்டம் நிறைந்து வழிந்தது.

நேரம் நெருங்க நெருங்க அபி டென்ஷனாக தெரிந்தாள். அவளுக்கு அலங்காரம் செய்ய வந்த அனைவரையும் மறுத்துவிட்டாள். தானே அனைத்தும் செய்துகொள்வதாக கூறிக்கொண்டு கதவை அடைத்துக் கொண்டாள். ஜானு ரிஷியை தொடர்புகொண்டு அபியின் செய்கை பற்றி கூறினாள்.

கதவைத் தட்டியப்படி உள்ளே வந்த ஜானுவை கோபத்தோடு முறைத்தாள் அபி
" இந்தா போன், உன்னத்தான் உன்னிடம் பேச வேண்டுமாம் " என்றாள் ஜானு போனை நீட்டியபடி.

" பேச முடியாது என்று சொல் என் போனை எனக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு போனதும் இல்லாமல் இப்போது என்ன பேச்சு வேண்டி இருக்கிறது நான் இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பி வருகிறேன்" என்றாள் அபி.

" ரொம்ப முக்கியமான விஷயம் என்றார். நீயே அவரிடம் பேசு" என்றாள் ஜானு

வேண்டா வெறுப்பாக போனை கையில் வாங்கினாள் அபி.

" சொல் அத்தான்"

"என்னாச்சு உனக்கு எதற்கு யாரையும் ரூமில் விடாமல் அழிச்சாட்டியம் பண்ணுகிறாய்"

"நான் ஒன்றும் அழிச்சாட்டியம் செய்யவில்லை நானே ரெடி ஆகிக் கொள்வேன், அவர்கள்தான் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றால் நீயாவது என்னை புரிந்து கொள். கிண்டல் என்ற பெயரில் அவர்கள் பேசும் பேச்சை என்னால் கேட்க முடியவில்லை அதுவுமில்லாமல் என்று பேச்சை இடையில் நிறுத்தினாள் " அபி.

"ம் சொல் அதுவுமில்லாமல்"

"ஏன் அத்தான் என்னை இப்படி கொடுமைப்படுத்துகிறார் நானே ரெடி ஆகி கொள்வேன் போனை வைக்கிறியா?" என்றாள் அபி.

சற்றுநேரம் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை பிறகு
"அம்மு நான் உன்னை எதற்காவது கட்டாயப்படுத்தி விட்டதாக நீ நினைக்கிறாயா? எதுவாக இருந்தாலும் ஓபன் ஆக பேசு உனக்கு பிடிக்காத ஏதும் இங்கே நடக்காது" என்றான் ரிஷி அமைதியாக.

அவனின் அமைதியான பேச்சு அவன் என்ன நினைக்கிறான் என்று அபிக்கு உணர்த்த "நீ வேற உளற ஆரம்பிச்சுட்டியா சொல்லித் தொலைகிறேன் கேளு , நான் நான் முதல் முதலாக அலங்காரம் செய்யப் போகிறேன் அதுவும் உன்னுடன் மணமேடையில் வந்து அமர்வதற்கு. அதனால் நானே தான் தான் அலங்காரம் செய்து கொள்வேன்" என்றாள் அபி மெதுவாக.

ஒரு நிமிடம் ரிஷிக்கு அவன் காதை அவனால் நம்ப முடியவில்லை நான் கேட்பது உண்மையா இல்லை என் காதில் தான் ஏதோ கோளாறா என்று போனையே பார்த்தான்.

" ஓகே ஓகே ஏதோ செய் சீக்கிரம் கிளம்பி வா " என்று சிரித்துக்கொண்டு போனை வைத்தான்.

ஜானுவிடம் ஏதோ சொல்லி அபி அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு ரெடியாகினாள். யாரின் துணையும் இல்லாமல் ஒரு மணப்பெண் ரெடி ஆகுது நடக்கக்கூடிய காரியமா ? அதுவும் முகத்தில் பவுடர் கூட போடாத ஒருத்தி. அவள் எப்போது ரெடியாகி வருவது என்று கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டனர் அபியின் தோழிகள்.

அபியின் வீட்டுப் பெண்களோ யார் வீட்டு திருமணமோ என்பது போல நின்றிருந்தனர்.

மாப்பிள்ளை கூப்பிடுங்கள் என்று அய்யர் கூறியதும் அமிதாப்பின் முகத்தில் சந்தோஷமே இல்லை.

" இந்த ஐயர் கத்திக்கொண்டே இருக்கிறார் மாப்பிள்ளையும் வரக்காணவில்லை, இந்த ரிஷி ப்ரோவையும் காணவில்லை" என்றான் அமிதாப்.

"டென்ஷன் ஆகாதே அமிதாப் சுற்றி பார்த்தாயா அபியின் வீட்டில் உள்ள யாருக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் உள்ளது போல தெரியவில்லை. அனைவரும் எந்த வேலையும் செய்யாமல் ஆளுக்கொரு மூளையில் நிற்பதைப் பார். அதனால் தான் ரிஷி ப்ரோ மாப்பிள்ளையை அழைக்க சென்றிருப்பார் " என்றான் ராகேஷ்.

அனைவரும் மாப்பிள்ளைக்காக காத்திருக்க தொடங்கினர். அப்பொழுது கூட்டத்தில் அதிக சலசலப்பு ஏற்பட்டது, என்னவென்று அனைவரும் திரும்பிப் பார்க்க மாப்பிள்ளையாக ரிஷி வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த அபியின் நண்பர்கள் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க, எப்படி ?என்பது போல ஜானு கட்டை விரலை காட்டினாள் அவர்கள் அருகில் வந்து.

" துரோகி உன்னை அப்புறம் பார்த்துக்கொள்கிறோம் " என்றனர் இருவரும் கோரஸாக.

அங்கு நடந்த மாற்றத்தைப் பற்றி சற்றும் அறியாத அபியின் நண்பர்கள் ரிஷி நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் அனைவரிடமிருந்தும் ஹே என்ற சந்தோச கூச்சல் எழுந்தது.

கூடியிருக்கும் கூட்டத்தில் மாப்பிள்ளை மாறியதால் பிரச்சனை ஏற்பட்டு ரிஷியும் அவனது தாயாரும் அவமானப்பட்டு நிற்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அண்ணிகள் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அங்கே சந்தோச கூச்சல் எழவும் எதுவும் செய்யமுடியாமல் முகம் கருத்து நின்றார்கள்.

" டேய் ரிஷி படுவா" என்றபடி நண்பர்கள் அவனைச் சூழ அவர்களில் கேலி கிண்டல் மத்தியில் நடந்து போய் மணமேடையில் அமர்ந்தான் ரிஷி.

அங்கே சலசலப்பு அடங்க கொஞ்சம் நேரம் பிடித்தது. மணப்பெண்ணை வரச் சொல்லுங்கள் என்ற ஐயரின் அடுத்த அழைப்புக்கு ஜானு அபியின் அறைக்கதவை தட்டினாள்.

" டி அபி கதவைத் திற அங்கே ஐயர் மை செட்டை விழுங்கினார் போல சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே மாப்பிள்ளை மாறியதில் அனைவரும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள் நீ இப்படி நேரம் கடத்தினாய் என்றாள் பெரிசுகள் எல்லாம் பிபி ஏறி விழுந்து விடப் போகிறது சீக்கிரம் வா" என்றாள்.

" உன் வாயில் ஒரு நாளும் நல்ல வார்த்தையே வராதா ?" என்றபடி கதவைத் திறந்தாள் அபி.

அவளை பார்த்து ஆஆ என்றபடி வாயை பிளந்தார்கள் ஜானுவும் அவளின் தோழிகளும். ஜானு கண்கள் கலங்கியபடி உணர்ச்சிவசப்பட்டு அபியை கட்டிக்கொண்டாள்.

"போதும் போதும் ஜானு அவளை விடு இன்று அவளுக்கு திருமணம். இதையெல்லாம் செய்வதற்கு அவள் கணவன் இருக்கிறார் அவர் இடத்தை நீ பிடிக்காதே அப்படித்தானே அபி "என்றாள் மானு.

போடி என்றபடி கண்ணைத் துடைத்துக் கொண்டு அபியை விடுவித்தாள் ஜானு.

" அபி என்னால் பேசவே முடியவில்லை இத்தனை அழகையும் ஒளித்து வைத்துக் கொண்டு உன்னால் இத்தனை நாள் எப்படி இருக்க முடிந்ததோ, நீ இருந்து இருக்கிறாய் என்றால் உன் மனதில் காயத்தை என்னால் உணர முடிகிறது. இனி உன் வாழ்வில் சந்தோஷம் மட்டுமே நிலைத்து நிற்கும்," என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அழைத்து சென்றாள் ஜானு.

அங்கே கூடியிருந்தவர்களுக்கு மணப்பெண்ணை காணவேண்டும் என்ற ஆவல் கூடியிருந்தது, மாப்பிளை சொல்லாமல் கொள்ளாமல் மாறியது போல மணப்பெண்ணுயும் மாறியிருந்தால் என்று அனைவரும் காத்திருக்க, அனைவரையும் வணங்கியபடி மணவறைக்கு தோழிகள் புடை சூழ வந்தாள் அபிநேஹா.

நல்ல வேளை அதிர்ச்சியில் அங்கே எந்த துக்க சம்பவமும் நடக்கவில்லை. (நான்கு வில்லிகளுக்கும் ) ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்வில் சிக்கியிருந்தனர்.

கற்பகம்மாள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது, மருமகளை ஆற கட்டித்தழுவி கொண்டார்.

ப்ரியாவின் கண்ணில் எரிமலை வெடித்தது, நான் தான் அழகி என்று சுற்றிக்கொண்டிருந்தவள் ஆயிற்றே.

மூன்று சகுனியின் வாயிலும் ஈ ட்ரவல் செய்துகொண்டிருந்தது, " இவ்வளவு அமுக்கமாக இருந்திருக்கிறாள் பார் " என்று பானுவின் காதை கடித்தாள் வித்யா.

" விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள், அப்படிதான் இவள் அழகும், அது தெரிந்துதான் இவளை அப்பவே தட்டிவைத்தேன், கடைசியில் இந்த வீட்டின் கடைக்குட்டி பிள்ளையை கல்யாணம் செய்து கருணாகரன் குடும்பத்தில் இளைய மருமகளாகவே ஆகிவிட்டாலே, இனி ஒரு விசேஷ வீட்டிற்கு போக முடியுமா? இவளுடன் நாமும் போய் நின்றால், பிள்ளைபெற்று வயிறும் உடம்பும் பெருத்துப்போய் இருக்கிற நம் மானம் என்னாவது ? என்று அவள் பங்கிற்கு பொருமினாள் அம்பிகா.

" விடக்கா அவளும் இரண்டு பிள்ளை பெற்றவுடன் நம் போல் ஆகிவிடுவாள் " என்று அவளை தேற்றினாள் வித்யா.

" யாரு அவளா, அவள் நீச்சல் அடித்து நீங்கள் பார்த்ததில்லையே, மீனை போல நாள் முழுவதும் நீந்த சொன்னாலும் நீந்துவாள், அப்புறம் வேலை செய்வதில் அவளை அடித்துக்கொள்ளவே முடியாது, நம்மை போல வீட்டில் இருப்பவளும் இல்லை, அப்புறம் எப்படி நம்மை போல ஆவாள்." என்றாள் பானு.

பானு பேச்சில் எரிச்சல் அடைந்த ப்ரியா
" சும்மா அவளை புகழ்வதை நிறுத்துங்கள், உங்கள் யாருக்கும் மூளையே கிடையாது, அவளை பைத்தியமாக்க நினைத்ததற்கு பதிலாக எதையாவது சாப்பிட கொடுத்து உருண்டு திரண்டு ஆகும் படிக்கு செய்திருக்கலாம் " என்றாள்.

" யார் நாங்கள் முட்டாளா ? அதை நீ சொல்லாதே, வெளியூருக்கு போயிருந்த உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணத்திற்கு முன்பே வரவழைத்தோம், வந்து கல்யாணத்தை நிறுத்துவாள் என்று பார்த்தால் ச்சி ச்சி இந்த பழம் புளிக்கும் என்று அவன் கல்யாணத்திற்கே தகுதியற்றவன் என்று வந்து சொல்கிறாய் ?" என்றாள் அம்பிகா.

" ஆமாம், அதைத்தான் அவன் வாயாலே சொன்னானே ? நான் ஆம்பிளை இல்லை என்று,. பிறகு அவனை கட்டிக்கொண்டு நான் என்ன செய்வது ? என்னை எத்தனை கேள்வி கேட்டதற்கு நீங்கள் இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன ஸ்டேப் எட்டுத்தீங்க ?" என்றாள் ப்ரியா.

" நான் ஏன் ஸ்டேப் எடுக்கவில்லை, உன்னை ரெடி பண்ணினேன், பிளாப் ஆகிவிட்டது, அந்த ஜெய்யை ரிஷியுடன் பேச வைத்தேன். அவன் தன் போலீஸ் நண்பனை காட்டி அவனை ஆப் செய்துவிட்டான், நம் உறவு கார பெண்மணியை ஏற்பாடு செய்தேன் வளர்த்த பெண்ணை கட்டலாமா ? என்று பிரச்சனை செய்ய. அந்த கிழவியை பார் வாயை பிளந்தபடி இருவருக்கும் ஆரத்தி எடுக்க ரெடியாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேல் இந்த அபியை கடத்திவிடவேண்டும் என்று அவள் சாப்பிடும் உணவில் மயக்கமருந்தை கலந்தால் அவள் நேற்றுமுதல் நம் வீட்டில் பச்சைதண்ணீர் குடிக்கவில்லை. என்னையும் என் தாலிகட்டிய கணவர் ரூமில் வைத்து அடைந்துவிட்டார், கடைசியாக வருவது வரட்டும் என்று 10 தூக்கமாத்திரையை பாலில் கலந்து அவள் ரூமுக்கு அனுப்பிவைத்தேன், காலையில் அலறல் சத்தம் கேட்டும் என்று பார்த்தால் அவள் அப்சரசு போல வந்து நிற்கிறாள், இதை விட நான் என்ன செய்ய முடியும். அவளை கடத்த ஒரு லட்ச ரூபாய் பேசி ஐம்பது ஆயிரம் அட்வான்சும் கொடுத்துவிட்டேன். ஆனால் இந்த ரிஷி கடன்காரன் இருக்கிறானே புத்தியில் அலாரத்தை பொருத்தி வைத்திருக்கிறான் போல, நான் பிளான் போடும் நேரமெல்லாம் வந்து நிற்கிறான் " என்று நீளமாக ரகசிய குரலில் புலம்பினாள் அம்பிகா.

" அக்கா பாவம் விட்டால் அழுது விடுவார்கள் போல " என்று பானுவின் காதை கடித்தாள் வித்யா.

இவர்களின் யாரையும் பார்க்காமல் ரிஷியின் பார்வை பெரியவர்கள் ஒவ்வொருவரையும் வணங்கிவிட்டு கடைசியில் தன்னையும் வணங்கி தன் அருகில் வந்து தேவதை போல அமர்ந்திருக்கும் அபியை விட்டு அகலாமல் அப்படியே இருந்தது.

அது அவளுடைய அழகில் சொக்கி இல்லை. யாருக்கு தெரியுமோ இல்லையா அவன் அறிவான் அவன் அம்மு அழகி என்று. அவன் பார்ப்பது தனக்காக (ரிஷி ) மட்டுமே அலங்கரித்து கொண்டு வந்த தன் அம்முவை.

தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ரிஷியை பார்த்தவள் என்ன என்பது போல புருவத்தை தூக்கி சிரித்தாள் அபி.

அவன் வார்த்தையாக எதையுமே கூறவில்லை. அவளின் முகத்தை கையில் ஏந்தி தன் நெற்றியை அவளின் நெற்றியோடு முட்டினான். நண்பர்கள் கூட்டத்தில் இருந்து ஏக சத்தம்.

" ஏய் மாப்பிளை முதலில் தாலியை கட்டு, நல்ல நேரம் ஓடுது பார் " என்று ஓட்டினர் நண்பர்கள்.

" ஏலேய் நீங்க என்னடா நந்தி மாதிரி குறுக்கால சாடிக்கிட்டு, அவன் கட்டிக்கபோறவளை கண்ணுக்குள்ள நிறைச்சிக்கிறான், வயிதெறிச்சல் படாம பிள்ளைகளை பார்க்க விடுங்கடா " என்றார் உறவுக்கார பாட்டி.

இவர்கள் பேச்சு எதுவும் ரிஷியின் காதில் விழவில்லை, கண்ணை மூடிக்கொண்டு மூடியிருந்த அபியின் கண்ணில் இதழ் பதித்தான். அப்போது அவன் கண்ணில் இருந்து வந்த ஒரு சொட்டு நீர் அபியின் கையில் தெறித்து சிதறியது. அது கனவோ என்று அபி விழிக்கும் முன் கெட்டி மேளம் கெட்டிமேளம் என்று ஐயர் சொல்ல அபியின் சங்கு கழுத்தில் மாங்கலியத்தை பூட்டினான் ரிஷி.
ஒரு. வழியாக திருமண முடிந்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top