Uyirin ularal - episode 17

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 17
வீட்டின் ஆண்கள் இருக்கும் மனநிலை தெரியாமல் பானு அபியை ஆராய்ந்த படி இருந்தாள். அவளின் உடையை பார்த்தவள்
" அபி நீ எங்கேயும் வெளியே செல்கிறாயா?" என்று கேட்டாள்.
"ஆமாம் "என்றாள் அபி.
"எங்கே" என்றாள் பானு.

அபி பதிலேதும் சொல்லாமல் ரிஷியை பார்த்தாள்.

"அவனை ஏன் பார்க்கிறாய் அம்மு ? நீ கல்யாணப் பெண். நாளை உனக்கு திருமணம் இன்று நீ வெளியே எங்கும் போகக்கூடாது " என்றார் கற்பகம்மாள்.

"வந்து..... சின்னத்தான் ஷாப்பிங் போகலாம் என்றார்" என்றாள் அபி.

"உன் சின்னத்தானுக்கு வேறு வேலை என்ன? என்று அவன் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று பார்த்திருக்கிறான். ? அவன் வழி என்றுமே தனி தான். அவன் பின்னால் போவதை விட்டு விட்டு நான் சொல்வதைக் கேள் இன்று நீ எங்கேயும் வெளியே போகக்கூடாது" என்றார் கற்பகம்மாள்.

" அம்மா சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் நமக்கு நாமே உருவாக்கியதுதான். நாம் செல்லவேண்டிய இடத்திற்கும் வேலைக்கும் நாம்தான் செல்ல வேண்டும். உங்கள் பேச்சை மீறுவதாக நினைக்க வேண்டாம், இன்று கண்டிப்பாக நாங்கள் இருவரும் ஷாப்பிங் போய்தான் ஆக வேண்டும். அம்மு நீ போய் கிளம்பு மணி இப்போது 8 30 சரியாக 10 மணிக்கு நாம் கிளம்புவோம் நீ 9 30 மணிக்கு அம்மா அறைக்கு வா, எனக்கு இங்கு ஒரு மணி நேரம் வேலை இருக்கிறது" என்றான் ரிஷி.

" கொழுந்தனாரே இந்த வீட்டில் நீங்கள் தான் சின்னவர் , உங்களைவிட வயதிலும் அனுபவித்தலும் மூத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறோம். அதனால் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு நடப்பதை விட்டு விட்டு நாங்கள் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்.

நாளை அவள் வேறு ஒரு வீட்டிற்கு மருமகளாக செல்ல இருக்கிறான். அதன் பிறகு அவள் இன்னொருவனின் மனைவி. இன்னொருவனின் மனைவியாகப் போகிறவளை நீங்கள் உங்களுடன் வெளியே கூட்டிச்செல்ல நினைப்பது எப்படி சரியாகும் ? இன்று மட்டுமல்ல அன்று மோதிரம் போடும் போதும் இவள் உங்கள் கையை விடுவேனா ? என்று நின்று எங்களுக்கு அவமானத்தை தேடி தந்தாள். இன்று உங்கள் பங்குக்கு நீங்களும் எங்களை அவமான படுத்தாதீர்கள்.

ஜெய் வீட்டில் இவளை மகாலட்சுமி இன்று தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். இவளுக்காக அங்கே பல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இவளை அவர்கள் தலையில் வைத்து தாங்குவார்கள் இவளுக்காக ஜெய் அங்கே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறான். நீங்கள் என்னவென்றால் அதை கெடுத்துவிடுவீர்கள் போல " என்றாள் அம்பிகா.

"இவள் வேற எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றுகிறாள். அந்த ஜெய் தன் வருங்கால மனைவிக்காக செய்யும் ஏற்பாட்டை இன்னொருத்தி மடிமேல் படுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமில் இருந்து பேசுகிறான். எங்களுக்கு அதை அனுப்பிய புண்ணியவான் முதலில் இவளுக்கு அதை அனுப்பியிருந்தால் இவள் இப்படி பேசுவாளா ?" என்று நினைத்தான் கார்த்திகேயன்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த ரிஷி தானிருந்த
இருக்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு இடது கையால் டேபிளில் ஒரு குத்து குத்தியபடி கோபத்தோடு எழுந்தான் அவன் கோபத்தை கண்ட மற்றவர்கள் அதிர்ந்து நின்றனர்.

" அம்மா எனக்கு உங்கள் மகன்களுடனும் உங்கள் 3 மருமகள்ளுடனும் தனியாக பேச வேண்டும் "என்றான் ரிஷி.

கற்பகம்மாள் புரிந்துகொண்டு அவர் அறையை நோக்கி சென்றார்.

"அம்மு உனக்கும் சேர்த்துதான் கூறினேன்" என்றான் ரிஷி அவளைப் பாராமலே.

அவனின் கோபத்தை பார்த்த அபி தன் அறைக்கு செல்ல திரும்பினாள், போகும் முன்பு ரிஷியின் உள்ளங்கையை அழுத்திவிட்டு சென்றாள்.

" வீட்டு விவகாரத்தை வெட்ட வெளிச்சமாக வேலையாட்கள் முன்பாக பேசாமல் ரூமுக்கு போய் பேசலாமா ?" என்றான் ரிஷி கோபத்தை அடக்கிக்கொண்டு.

"ஒன்றும் தேவையில்லை, அவர்களுக்கும் இந்த வீட்டின் நியாயம் தெரியட்டும் " என்றாள் பானு.

" அது உங்கள் வீட்டில் " என்றான் ரிஷி.

" அவன்தான் சொல்கிறான் இல்லையா ? சரி என்று கேட்பதற்கு என்ன ? வயதில் அவன் சின்னவன் என்றாலும் இந்த வயதிலேயே தனக்கென்று ஒரு இடத்தை உண்டாக்கி கொண்டவன். அவனிடம் வாயுக்கு வாய் மல்லு கட்டாமல் சொல்வதை கேளுங்கள். பிறகு அவன் ஏதாவது சொல்லிவிட்டால் அவனை குறை கூற கூடாது " என்றான் கார்த்திகேயன்.

விருப்பம் இல்லாவிட்டாலும் பெண்கள் அங்கிருந்து அவர்கள் கணவன் பின்னே சென்றனர்.

" ம் இப்போது சொல்லுங்கள், உங்கள் கேள்வி என்ன ? நான் அம்முவுடன் வெளியே போனால் நீங்கள் பார்த்த மாப்பிள்ளையின் அதாவது அம்முவிற்காக ! அவளை தலை மேல் வைத்து கொண்டாட காத்திருக்கும் குடும்பம் பார்த்தால் உங்களுக்கு கேவலாமாகிவிடும் ! அப்படித்தானே ? சபாஷ். அப்படியென்றால் உங்கள் கணவர்கள் உங்களிடம் அந்த வீடியோவை காட்டவே இல்லை போலவே.

அண்ணா அந்த வீடியோவை உங்களுக்கு அனுப்பியது நான்தான், அதை இவர்களுக்கு நான் அனுப்பாததற்கு காரணம் நான் நல்ல குடும்பத்தில், ஒரு நல்ல பெற்றோருக்கு பிறந்த மகன் என்பதால் தான்.

நான் பத்து நிமிடம் வெளியே இருக்கிறேன், அதை நீங்கள் இவர்களிடம் காட்டினாலும் சரிதான், அதில் உள்ள செய்தியை நீங்கள்
இவர்களிடம் கூறினாலும் சரிதான் " என்றவன் அதிர்ந்து நின்ற அண்ணன்களின் முகத்தை பார்த்தும் பாராமல் சென்றுவிட்டான்.

"இவன் என்ன பெரிய பூச்சாண்டி காட்டுகிறான் ? தாங்கள் உங்கள் போனை" என்று தன் கணவனிடம் இருந்து போனை பறித்த பானு அதில் இருந்த ரிசென்ட் வீடியோவை ஆன் செய்தாள். ஏதோ நெருப்பை தொட்டவள் போல் " ச்சீ " என்று போனை வீசினாள்.

" என்ன பார்த்தாயா ? உனக்கு ஏன் அவசரம் ? என்றான் அவள் கணவன்.

" உங்கள் தம்பிக்கு புத்தி மழுங்கி போய்விட்டதா ? ஒரு அண்ணனுக்கு அனுப்பும் வீடியோவா ? ஏதோ இரண்டு கழிச்சடைகள் ஒன்றாக இருக்கும் பிட்டுபடத்தை அனுப்பியிருக்கிறார், இதில் அவர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் என்று பெருமை வேறு பேசிவிட்டுப்போகிறார் " என்றாள் பானு முகத்தை சுழித்து கொண்டு.

" நாங்களே அதில் உள்ள செய்தியை நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறோம் நீ வேற தொணதொணன்னு பேசிக்கிட்டு ? பிட்டுபடம் என்று கண்டுபிடித்த உனக்கு அதில் இருப்பவன் நீங்கள் அபிக்கு பார்த்திருக்கும் அழகு மாப்பிளை என்று பாராமல் ஏன் போனாய் " என்றான் அவள் கணவன்.

" என்ன " என்று கோரஸாக மூன்று பெண்களும் அதிர்ந்தார்கள், உடனே அதிலிருந்து வெளிவந்த அம்பிகா அவள் கணவன் கையில் இருந்த போனை வெடுக்கென்று பிடிங்கினாள்.

ஆண்கள் அனைவரும் ஒதுங்கி போனார்கள்.

அதில் ஒரு ஹோட்டல் அறையில் ஒரு பெண் இருந்தாள், சில நிமிடங்களில் கதவை திறந்து கொண்டு ஜெய் உள்ளே வந்தான், வந்தவன் ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் அந்த பெண்ணை கட்டித்தழுவினான்.

" போதுக்கா, இந்த கருமத்தை எல்லாம் பார்க்க முடியாது, அதான் தெளிவாக தெரிகிறதே அவன்தான் என்று " என்று கூறினாள் வித்யா.

உடனே அதை நிறுத்தினாள் அம்பிகா.

" என்ன பார்த்தாச்சா ?" என்றான் கண்ணன்.

" நீங்களெல்லாம் ஒரு புருசனா ? அதை போய் எப்படி பார்க்க முடியும் ? வந்தது அவன்தான் " என்றாள் வித்யா எரிச்சலில்.

" போடி இவள, அதில் இருப்பவன் அவன்தான் என்பது மட்டுமா பிரச்சனை? அவன் பேசியிருக்கும் பேச்சை கேட்டால் இடியே விழும் தலையில் " என்றவன் தன் போனில் இருந்த வீடியோவை ஆன் செய்து ஆடியோ மட்டும் கேட்கும் படியாக வைத்தான்.

விடுங்க பிரகாஷ் இதற்கு மட்டும் இந்த குறையும் இல்லை உங்களுக்கும் எனக்கும் எத்தனை வருடமாக பழக்கம் நான் நீங்கள் என்னைத்தான் திருமணம் செய்வீர்கள் என்று நம்பி தான் உங்களுடைய இந்த தேவையை தீர்த்து வைக்கிறேன் ஆனால் நீங்களோ இன்னொரு பெண்ணை மணப்பதற்கு நிச்சயம் செய்து விட்டு வந்திருக்கிறீர்கள் இப்போது உன்னிடம் பேசவேண்டும் என்று கூறிவிட்டு மறுபடியும் என்னிடம் உங்கள் தேவையை தீர்த்துக்கொள்ள நினைக்கிறீர்கள் என்னைத் தொடாதீர்கள் என்றாள் அந்தப் பெண்.

டியர் கொஞ்சமாவது நியாயமாக பேசு. நான் என்றாவது உன்னிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்னா ? நான் இருக்கும் ஆபிஸில் நீ எனக்கு கீழே வேலை செய்கிறாய், உனக்கு அங்கு என்னால் சில வேலைகள் நடக்கவேண்டியதிருப்பதால் அப்பப்போ இப்படி அட்ஜெஸ்ட் செய்கிறாய், இப்படி என்னிடம் அட்ஜஸ்ட் செய்பவர்களை எல்லாம் நான் திருமணம் முடிக்கவேண்டும் என்றாள் ஊரில் மற்ற ஆண்கள் பெண்களுக்கு எங்கே போவார்கள் " என்றவன் இடி இடியென்று சிரித்தான்.

போதும் சிரித்தது, உண்மையில் சொல்கிறேன் உங்களை திருமணம் செய்யப்போகும் அந்த பெண் போன ஜென்மத்தில் பெரிய பாவம் செய்தவளாகத்தான் இருப்பாள், நீங்களோ மலர்விட்டு மலர்த்தாண்டும் வண்டு, அவளோ அதிர்ந்து கூட பேச தெரியாதவள் போல இருக்கிறாள், ஆமாம் உங்கள் அழகுக்கு மயங்கி ஊரே உங்கள் பின்னால் சுற்றும் போது நீங்கள் ஏன் அந்த பாட்டியை திருமணம் செய்கிறீர்கள் " என்று அந்த பெண் கேட்க

" வேறென்ன எல்லாம் பணம்தான் " என்றான் அவன்.

பணமா ? என்று அந்த பெண் கேட்க அதை கேட்டுக்கொண்டிருந்த இந்த மூன்று பெண்கள் மனதிலும் அதே கேள்வி.

" ஆமாம், உனக்குத்தான் தெரியுமே, நான் ஒரு பிலே பாய் என்றாலும் அது எல்லோருக்கும் தெரியாது, ஒரு சிலருக்கு தெரியும், வெளியூர் எங்கேயாவது என்னை எந்த பெண்களுடனாவது பார்த்திருப்பார்கள். அப்படி என்னை பற்றி தெரிந்த என் உறவுக்காரர் ஒருவர் இந்த சம்மந்தத்தை பற்றி என்னிடம் கூறினார், அந்த பெண்ணை பார்த்த உடனே எனக்கு சுத்தகமாக பிடிக்கவில்லை, பெண் என்றால் நாலு இடத்திற்கு கூட்டிப்போகும் அளவுக்கு இருக்கவேண்டாமா, இவளை இரண்டு நிமிடம் கூட முழுதாக பார்க்கமுடியாதே என்று நினைத்தேன், ஆனாலும் அவள் வளரும் இடத்தை பற்றி கேள்விப்பட்டவுடன் உடனே பதில் கூறாமல் இரண்டு நாள் டைம் கேட்டுவிட்டு வெளியே விசாரித்தேன்.

நான் சும்மா தெரிந்தவர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள் என்றெல்லாம் விசாரிக்காமல் அந்த வீட்டின் வரவு செலவை பார்க்கும் அவர்களின் குடும்ப வக்கீலின் ஜூனியரிடம் விசாரிக்க, அந்த குடும்பத்தில் உள்ள பாதிப்பேருக்கு தெரியாத பலவிஷயம் எனக்கு தெரிந்தது.

அவள் தத்து எடுத்து வளர்க்கப்படுவதால் அந்த குடும்பத்தின் சொத்தில் ஒரு பங்கு இவளுக்கு, அப்புறம் டெபாசிட் மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம், எல்லாவற்றையும் விட அந்த வீட்டின் மூத்த தலைவி அதான் பாட்டி அவர்களுடைய சொத்து அனைத்தும் இவள் பெயரில்தான் உயில் எழுத பட்டிருக்காம், ஏனென்றால் அந்த சொத்து அனைத்தும் அந்த பாட்டியின் தாய் வழி சொத்து, அதை என்னவென்றாலும் செய்யும் உரிமை அந்த கிழவியிடம் இருந்திருக்கிறது, அந்த கிழவியும் நான்கு பேரன்களுக்கு பெயருக்கு கொஞ்சம் சொத்தை காட்டிவிட்டு பல்கா இவள் பெயரில் உயில் எழுதி வைத்துவிட்டு மட்டையை போட்டிருக்கிறது.

இவள் கொஞ்சம் அதிஷ்டசாலி போல, இவள் வந்த பிறகுதான் பலவருடம் கோர்ட்டில் இருந்த சொத்து கைக்கு வரவும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் மாறி மாறி அனைவரும் இவளை கொண்டாடி இப்படி அவள் பெயரில் அனைத்தையும் எழுதி வைத்திருக்கிறார்கள், அவளுக்கு நகையே ஐநூறு பவுன் தேறும் போல, இதையெல்லாவற்றையும் விடு அந்த ஜோடாபுட்டிக்கு அபார மூளை, இன்று பல இலட்சங்களை சம்பாதிக்கும் பினான்ஸ் அட்வைஸரில் இவள் நம்பர் ஒன், இழுத்து மூடவேண்டிய நிலையில் உள்ள கம்பெனியை கூட தூக்கி நிறுத்திவிடுவாளாம். இப்படி ஒரு தங்க முட்டையிடும் வாத்தை, அழகை காரணம் காட்டி வேண்டாம் என்று சொல்ல நான் முட்டாளா ? என்றான் அவன்.

" அம்மாடியோ இத்தனை பணம் உள்ள ஒரு பெண்ணை உங்களுக்கு தர எப்படி சம்மதித்தார்கள் "

" ஏன்னா அவர்களுக்கே அது தெரியாது, ஏன் அவளுக்கே அது தெரியாது, தவிர ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் அவளிடம் இருக்கிறது, அவள் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவள்" என்றான் அவன்.

" என்ன ஆளும் பார்க்கும் படியாக இல்லை இந்த அழகில் அவளுக்கு லூசு வேறயா, சுத்தம்" என்றாள் அவள்.

" அதுதான் எனக்கு ப்ளஸ் பாயிண்ட் தெரியுமா ? எப்படியிருந்தாலும் அவளுடன் கடைசிவரை நான் வாழப்போவது இல்லை, கொஞ்ச நாள் கண்ணே மணியே என்று கூறிவிட்டு அவள் சொத்தை எல்லாம் எழுதிவாங்க வேண்டியதுதான், முரண்டு செய்தால் கொடுக்குற அடியில் என் காலில் விழுந்து சொத்தை எழுதி தந்துவிட போகிறாள். அப்புறம் அரவம் இல்லாமல் ஆளை தீர்த்து கட்டிவிடவேண்டியதுதான், யாரும் கேட்டால் பைத்தியம் முற்றி தற்கொலை செய்துகொண்டாள் என்று அழுது நடித்துவிட வேண்டியதுதான். " என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

" அது பாவம் இல்லையா ?" என்று அந்த பெண் கேட்க

" பாவம் புண்ணியம் எல்லாம் என்னிடம் கிடையாது, அப்படி பார்த்தால் உலகத்தில் வாழ முடியுமா " என்றான் அவன்.

" இன்னும் இரண்டு நாளில் நான் கோடிஸ்வரன், இப்போது அந்த பேச்சை விடு" என்ற பிறகு அங்கே சில கேட்க முடியாத பேச்சுக்கள்.

இதை கேட்ட அனைவரின் முகத்திலும் கருமேகம் சூழ்ந்திருந்தது, ஆண்கள் மூச்சுவிட மறந்து நின்றனர், பெண்கள் வெடித்துவிடும் அணுகுண்டை போல இருந்தனர்.

" பார்த்தீர்களா அக்கா, நமக்கு தெரியாமல் இந்த வீட்டில் என்னவெல்லாம் நடக்கிறது, விட்டால் இந்த வீட்டின் அத்தனை சொத்தையும் அவள் பெயரில் எழுதி வைத்துவிட்டு மற்றவர்களை யாரென்றே தெரியாது என்று சொல்லிவிடுவார்களோ ? என்றாள் பானு.

" ச்சீ நீயெல்லாம் ஒரு பெண்ணா ? ஒரு அப்பாவி பெண்ணுக்கு எதிராக என்ன சதி நடந்துகொண்டிருக்கிறது, இந்த சாக்கடையுடன் அந்த பெண்ணுக்கு நாளை திருமணம், அவளை காப்பது எப்படி என்று யோசிக்காமல் பணம் பணம் என்று சாகிறாயே ?" என்றான் பானுவின் கணவன்.

அப்போது ரிஷி கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தான். அங்கு நின்றிருந்த ஆண்கள் அனைவரின் முகத்திலும் குற்றவுணர்ச்சி.

" இப்போ சொல்லுங்கள் என்ன செய்யலாம் ? அவனுடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தலாமா ? இல்லை வேற ஏதாவது ஐடியா இருக்கா ? " என்று கேட்டான் கையை கட்டிக்கொண்டு.

" நிறுத்திவிடலாம் ரிஷி, நான் நன்றாகத்தான் விசாரித்தேன், சொந்த மாமனார் பொய் சொல்லுவார் என்று எனக்கு தெரியாமல் போயிட்டு, என்னை மன்னித்துவிடு, உடனே இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம் " என்றான் கார்த்திகேயன்.

" நிறுத்திவிட்டு என்ன செய்வதாக உத்தேசம் ? ஏற்கனவே பைத்தியம் என்று ஊரெல்லாம் பெயர், இப்போது கல்யாணத்திற்கு ஒருநாள் முன் கல்யாணம் நின்றுவிட்டதாக கூறினால் காலமெல்லாம் அந்த பாரத்தை யார் வைத்து சுமப்பது. பேசாமல் ஜெய்யை கூப்பிட்டு பேசுங்கள், உன்னை பற்றி உண்மை எல்லாம் எங்களுக்கு தெரியும், நீ ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அதை எல்லோருக்கும் சொல்லிவிடுவோம் என்று மிரட்டுங்கள். இப்போதுதான் பொள்ளாச்சி இஸு ஒரு கலக்கு கலக்கியது, இந்த வீடியோ வெளியே வந்தால் அவன் சிறை செல்வது உறுதி, அதுமட்டுமில்லாமல் எரிவதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கிவிடும். அவனின் நோக்கம் எல்லாம் அபியின் சொத்துதான், அதை எழுதிவாங்கிவிட்டு ஒரு நூறு பவுன் நகையை மட்டும் கொடுத்து கல்யாணத்தை முடித்துவிடலாம். நீங்கள் நான்கு பேர் இருக்கும் போது அவன் அபியை என்ன செய்துவிட முடியும் ?" என்றாள் அம்பிகா.

ஆண்கள் மூவருக்கும் பேச வாய் எழவில்லை. பானு அம்பிகா கூறுவதுதான் சரி என்பதுபோல தலையாட்ட, இது கொஞ்சம் ஓவர்தான் என்று நினைத்துக்கொண்டாள் வித்யா.

ஒருநிமிடம் அமைதியாக இருந்த ரிஷி பின்பு வாய்விட்டு சிரித்தான். அம்பிகாவின் அருகில் சென்று அவளை பார்த்து பேசினான்.

" ஒரு பதிமூன்று வயது சின்னப்பெண், குழந்தை முதல் என் அண்ணனின் விரலை பிடித்து வளர்ந்த பெண், பிறந்தநாளன்று வளர்த்த பாசத்தில் வாழ்த்தி அன்புமிகுதியில் நெற்றியில் முத்தம் கொடுத்தார் என்று சின்னப்பெண் என்று கூட பாராமல் அடித்து, துன்புறுத்தி பேச கூடாத பேச்செல்லாம் பேசி , ஒரு வேலை காரன் முலமாக அவளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அவளை அணுஅணுவாக சித்திரவதை செய்த உங்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

அதுமட்டுமா உங்கள் டார்ச்சரில் மனஅழுத்ததில் நொந்து போயிருந்த பெண்ணை பைத்தியக்காரி என்று ஊரெல்லாம் சொல்லி அவளின் திருமணத்தை தடை செய்து, பிறகு சிலபேருக்கு மட்டுமே தெரிந்த அந்த ஜெய்பிரகாஷின் ரகசியத்தை அறிந்த நெருங்கிய உறவுக்காரியான நீங்கள் அந்த பொறுக்கியை அந்த பெண்ணுக்கு கட்டிவைக்க போட்ட திட்டம் வரை ஓகே, ஆனால் நீங்கள் என்னை எப்படி மறந்து போனீர்கள். நான் இருக்கும் போது அவளை நெருங்க எவனால் முடியும் ?

கண்டிப்பாக உங்களின் வேறு ஏதாவது உறவுக்கார பெண்ணுக்கு, ஏன் உங்கள் சித்தப்பா பெண்ணுக்கு கூட மாப்பிளை தேடுவதாக கேள்வி, அவளுக்கு இந்த மாப்பிளையை நீங்கள் கூறிய ஆலோசனை படி திருமணம் செய்து கொடுக்கலாம்.

எனக்கு ஒரு சந்தேகம், இத்தனை நல்ல புத்தி உள்ள உங்களுக்கே உங்கள் கணவர் அவர் வளர்த்த பெண்ணுடன் பேசகூட அனுமதிக்க முடியவில்லையே, அந்த பொறுக்கி, சாக்கடையில் மூழ்கி கிடக்கும் ஒரு நாயுக்கு, எங்கள் வீட்டு தேவதையே திருமணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன ? அப்படி உங்களை விட அவள் எதில் குறைந்து போனாள்.

என்ன செய்யலாம் உங்களை, ஒன்றும் செய்யமுடியாது இல்லையா, என் அண்ணன் மனைவி, இந்த வீட்டின் மருமகள் இல்லையா ? ஆனால் உங்களை அப்படியே விட எனக்கு மனமில்லையே ? ஏதாவது செய்யவேண்டும் உங்களை, இவளிடம் போய் மோதினோமே என்று நீங்கள் எண்ணி எண்ணி வருத்தப்படும்படி ஏதாவது செய்ய வேண்டும் " என்றான் ரிஷி அழுத்தகமாக.

"எதுவுமே செய்யமுடியாது போலவே, என் அண்ணனின் வாழ்வும் உங்களோடு அல்லவா சேர்ந்திருக்கு ? என்ன செய்யலாம்?

ஒன்று செய்யலாம், நீங்கள் இதை எல்லாம் எதற்கு செய்திர்கள் ? அவள் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் அப்படித்தானே ? அவள் மேல் இருந்த பொறாமை தீ தானே காரணம்.அப்படியென்றால் நீங்கள் நினைத்தது நடக்கமுடியாமல் போனால் உள்ளே எரிந்து போவீர்கள். அது போதுமே. உங்களை மாதிரி கீழ்தரமான புத்தியுள்ள பெண்ணுக்கு அது ஒன்று போதுமே தினம் தினம் புழுங்கி சாக.

அப்படி என்ன செய்துவிட போகிறேன் என்று நினைக்கிறீர்களா? செய்யத்தான் போகிறேன்.

என் அம்மு இனி ஒருபோதும் துன்பம் என்று வார்த்தையை கூட கேளாதபடிக்கு செய்ய போகிறேன் ? எப்படி தெரியுமா அவளை திருமதி. ரிஷி நந்தனாக்கி. அதன் பிறகு அவள் நிழலை கூட யாராவது தொட நினைத்தாலும் அது யாராக இருந்தாலும் வேறோடு அறுத்துவிடுவேன்." என்றான் ரிஷி.
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்வபூமி டியர்

யப்பா
இந்த அம்பிகா, பானுவெல்லாம் மனுஷ ஜென்மங்கள்தானா?
எவ்வளவு சுயநலம்?
அபியின் மீது எவ்வளவு பொறாமை?
 
Last edited:

Saroja

Well-Known Member
சீ சீ என்ன மனுசங்க இவங்க எல்லாம்
ரிஷி நல்லா உறைக்கற மாதிரி
கேட்கிறான்
 
B.subhashini

New Member

Excellent
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top