உயிரின் உளறல் - அத்தியாயம் 13
பகல் என்று ஒன்று இருந்தால் இரவு ஒன்று வந்துதானே ஆகவேண்டும். பகல் முழுவதும் ரிஷியுடனே ஊட்டியை சுற்றி வந்துவிட்டாள் அபி, ஆனால் மாலை முடிந்து இரவு நெருங்க நெருங்க அவளின் முகத்தில் மீண்டும் கலக்கத்தின் சாயல்.
" அம்மு சாப்பிடு " என்றான் தன் முன் வைத்திருந்த உணவை அலைந்தபடி இருந்தவளை பார்த்து.
" எனக்கு வேண்டாம் சின்னத்தான் " என்றாள் அவள்.
" பிறகு எதற்கு உணவை வாங்கினாய் ? ஆர்டர் கொடுக்கும் போது அமைதியாகத்தானே இருந்தாய், இப்போ என்ன ? என்றாள் மானு.
" மானு சும்மா இரு, அவளுக்கு வேண்டாம் என்றால் விடு, அதை எடு நாம் அதை ஷேர் செய்து கொள்ளலாம்" என்று அவளிடமிருந்த உணவை எடுத்தான் அமீதாப்.
அனைவரும் சாப்பிட அபி அமைதியாக போனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ராகேஷ் அவனுக்கு மற்றோரு உணவை ஆர்டர் கொடுக்க முயல அமிதாப் தடுத்தான்.
" வேண்டாம் ராகேஷ், முதலில் இங்கே உள்ளதை முடி, அங்கே பார் ப்ரோவும் எதுவும் சாப்பிடவில்லை அதுவும் மீதிதான், இன்னும் ஆர்டர் கொடுத்து புட்டை வேஸ்ட் பண்ணாதே. " என்றான் அமிதாப்.
" தேங்க்ஸ் " என்று கை கழுவ சென்றான் ரிஷி. அவனை தொடர்ந்து அமிதாப்பும் சென்றான்.
" ப்ரோ அபி இனி அசையமாட்டாள், வாயும் திறக்கமாட்டாள், அவளை சாப்பிடவைக்க வேண்டும் என்று நினைத்தால் வெளியே எங்கேயாவது கூட்டிட்டுப்போங்க, நாங்கள் ஒரு சின்ன வாக் போயிட்டு ரூமுக்கு போயிடுவோம், அவள் உங்களுடன் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணினா நார்மல் ஆகிவிடுவாள் என்று நினைக்கிறேன். ஷி ஹவ் சம் ப்ராப்லேம், ப்ளீஸ் ட்ரை டு சால்வ் இட் " என்றான்.
ரிஷி சிரித்துகொண்டு தலையாட்டினான். ஆனால் தனியே அபியை அழைத்து செல்லவில்லை, அபியும் அதை விரும்பவில்லை என்றுதான் பட்டது அவனுக்கு.
அனைவரும் கூடி இருக்க இனியும் பேசாமல் இருப்பது சரியென்று படவில்லை நண்பர்களுக்கு.
" அபி என்ன ஆயிற்று. ஏதாச்சும் பேசு, எல்லாவற்றையும் உனக்குள் பூட்டிவைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ? அப்புறம் நண்பர்கள் என்று நாங்கள் எதற்கு ? காலையில் இருந்து நாங்கள் உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம், நீயே சொல்வாய் என்று பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்து போயிட்டு எங்களுக்கு " என்று சாடினாள் ஜானு.
பதில் சொல்லாத அபியின் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
" போதும் அபி உன் கண்ணீர் எதையும் மாற்றாது, அது பிரச்சனைக்கு தீர்வும் காணாது " என்றாள் மானு.
அபிக்கு மனரீதியான பிரச்சனை உண்டு என்றாலும் அது அவள் நண்பர்களுக்கு முழுவதுமாக தெரியாது. அவள் அமைதியான டைப் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று அபியின் மனதில் இருந்த போராட்டம் தெரியாமல் தோழிகள் திட்ட அது அழுகையா வெளிப்பட்டது, சற்று தொலைவில் நின்று போனில் பேசிக்கொண்டிருந்த ரிஷி அவளின் முகத்தில் வித்தியாசத்தை பார்த்து சுதாகரிப்பதற்குள் அபியின் அழுகை கேவலாக வெளிப்பட்டது. மூச்சை இழுத்து இழுத்து அவள் அழ நண்பர்கள் கூட்டம் அதிர்ந்து நின்றது.
போனை கட்பண்ணிவிட்டு வந்த ரிஷி அவளை அணைத்து மார்ப்போடு அழுத்திக்கொண்டான். அவர்கள் இருந்தது ஹோட்டலில் பின்புறம் இருந்த தோட்டத்தில். ஆங்காங்கே இருக்கைகள் போட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த தோட்டம் அது. அபியின் அழுகை அருகில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குள் அவளை அணைத்தவாறே சமாதானம் செய்தான்.
" அம்மு அழாதே அமைதியாய் இருடா, வா இங்கிருந்து போய் விடலாம்" என்று அங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு ரூமுக்கு வந்துவிட்டான். பின்னாடியே மற்றவர்களும் வந்துவிட்டனர்.
பெண்கள் இருவரும் செய்வதறியாது பயந்து போய் நிற்க, ராகேஷ் தண்ணீரை கொண்டுவந்து கொடுத்தான். தண்ணீர் கிளாஸ் பறந்தது.
" ப்ளீஸ் கொஞ்ச நேரம் அவளிடம் நெருங்க வேண்டாம் " என்றான் ரிஷி.
" அம்மு...அம்மு" என்று அழுத்தமாக அழைத்தான் ரிஷி.
" அம்மு இங்கே பார், அமைதியாக இரு, யார் மேல் உனக்கு கோபம், எல்லாம் உன் விருப்பத்தோடுதானே நடக்கு, இல்ல உன்னை யாரும் போர்ஸ் பண்ணினாங்களா ? உனக்கு விருப்பம் இல்லாத எதுவும் நடக்காது, உன் திருமணமும் தான், உனக்கு திருமணத்தில் விருப்பம் தானே, அப்புறம் ஏன் எதையோ நினைத்து கலங்குற, அண்ணி யாரும் உன்னை எதுவும் சொன்னார்களா ?" என்று கேட்டான் மெதுவாக.
எதற்கும் பதில் இல்லை மாறாக ஏக்கம் தான் அதிகமானது.
ரிஷியின் பொறுமை குறைந்தது. அவளை சமாதானம் செய்து சோர்ந்து போனவன்
" அம்மு.... அம்மு இப்போ அழுகையை நிறுத்த போறியா இல்லையா ? அம்மு நிறுத்துடி, போதும். அழுது அழுது நீ சாவதற்குள் என்னையும் கொன்றுவிடு" என்று அதட்டினான்.
அபி கண்ணில் ஒருவித மிரட்சி பரவியது. மெல்ல வாயை திறந்தாள். " எனக்கு பயமா இருக்கு நந்து. எனக்கு ரொம்ப பயமா இருக்கு, யாருன்னே தெரியாத அவனுடன் கல்யாணம். அதை நினைத்தால் எனக்கு பயமா இருக்கு, அத்தை, உன்னை எல்லாவற்றையும் விட்டுட்டு அவனுடன் போக எனக்கு பயமா இருக்கு. மலை உச்சியில் இருந்து குதிச்சா கல்யாணம் வேண்டாம் இல்ல, ஆனால் குதிப்பதற்குள் நீ வந்துட்ட, ஏன் வந்த ? நீ ஏன் வந்த ? என்னை பார்க்க ஏன் வந்த ?" என்று அவனை போட்டு அடித்தாள்.
பின்பு அடியை நிறுத்தியவள் அங்கு நின்றவர்களை பார்த்தாள், " ஆனா நான் குதிச்சா இவர்கள் பாவம் இல்ல, அதான் நான் குதிக்கல " என்றவள் அப்படியே அவன் மார்பில் சாய்ந்தாள். மயக்கம் அடையவில்லை, அழ தெம்பு இல்லாமல் சாய்ந்தாள்.
அங்கு அனைவரும் உறைந்துநிற்க ரிஷிக்கு சற்று உணர்வு வந்தது " ஜானு கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாம்மா, ராகேஷ் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று பார்" என்று ஜானு கொண்டுவந்த தண்ணீரை அபிக்கு கொடுத்தான்.
அதற்குள் ராகேஷ் உணவுடன் வர அபி முரண்டுபிடிக்காமல் அதை சாப்பிட்டாள்.
ரிஷி அப்படியே சோபாவின் பின்னே தலைசாய்த்து அமர்த்துவிட்டான்.
" என்ன காரியம் செய்ய நினைத்தாள் இந்த பெண்" என்று நினைத்துகொண்டு.
"அடக்கிவைக்கப்படும் கோபமும், துக்கமும் அழிவுக்கு வழிவகுக்கும் அபி, அதனால் தான் கடவுள் மனிதர்களுக்கு வேறு எந்த ஜீவராசிகளுக்கும் இல்லாத பந்தம், பாசம், உறவு, நட்பு என்று நமக்கு மனிதர்களையே துணைக்கு தந்திருக்கிறார். ஏன் எல்லாவற்றையும் உள்ளே பூட்டி பூட்டி உன் மனதை குப்பையாக்கி வைத்துள்ளாய். நாங்கள் உன்னை பார்த்த நேரத்தில் இருந்து கேட்கிறோம், ' எதுவும் பிரச்சனையா ? ' என்று. உனக்கு நிச்சயம் ஆகி நான்கு நாட்களுக்கு மேலாகிவிட்டது. அன்றுமுதல் நீ குழப்பத்தில் இருந்திருப்பாய். நாங்கள் கேட்டபோது நீ உன் மனதில் உள்ளதை நீ கூறியிருக்கலாம், இல்லையென்றால் இருக்கவே இருக்கிறார் ரிஷி, அவரிடம் கூறியிருக்கலாம். எதுவுமே இல்லாமல் ஏன் உனக்குள்ளேயே வைக்கவேண்டும், அதன் சுமை தாங்காமல் இப்படி அழ வேண்டும்.
பார் அபி இதுவரை நீ எப்படி இருந்தியோ ? ஆனால் இனி இப்படி இருக்காதே உன் கணவரிடம். அப்புறம் எதுக்காக பயப்படுற ? நீ செய்ய போவது அரேன்ஜ் மேரேஜ், எல்லாம், எல்லோரும் புதுசாகத்தான் இருக்கும். காலேஜில் எத்தனை பேர் உன்னை ப்ரப்போஸ் பண்ணினாங்க ? ஏன் என் சொந்த அண்ணன் எத்தனை மாதம் உன் பின்னே அலைந்தான், அதில் யாரையாவது லவ் பண்ணியிருக்க வேண்டியதுதானே? ஏதோ பெண் சாமியார் மாதிரி அலைஞ்ச, இப்போ பயமா இருக்கு பயமா இருக்குன்னு அழுதா என்ன செய்ய முடியும் ? அட்லீஸ்ட் நீ ரிஷியையாவது லவ் பண்ணியிருக்கலாம் " என்றான் அமிதாப்.
அபி அவனை கோபத்தில் ஒரு லுக் விட
" ஏய் சும்மா இருப்பா, ரிஷி சார் ஏற்கனவே கமிட் ஆனவர். நீ சொல்லியதை அந்த ப்ரியா கேட்டாங்க இங்கேயே ஹார்ட் வெடித்து விழுந்துடுவாங்க." என்றாள் ஜானு.
" சும்மா இரேன்டி உன் ஓட்டை வாயை வைத்துக்கொண்டு " என்றாள் அபி கோபத்தில்.
ரிஷிக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் அமைதியாக இருந்தான்.. இந்த ப்ரியா இல்லாத ஒன்றை இருப்பதாக எவ்வளவு அழகாக கதை கட்டிவிட்டிருக்கிறாள் என்று நினைத்தபடி.
" ஓகே ப்ரோ எங்களுக்கு தூக்கம் வருகிறது, நாங்கள் தூங்க போகிறோம். நீங்கள் வேண்டும்மென்றால் பேசிக்கொண்டிருங்கள். வழக்கமாக நாங்கள் எங்கே சென்றாலும் பெரிய ரூமா ஒரு ரூம் தான் எடுப்போம் பாதுகாப்பு கருதி. ஆனால் இப்போது இரண்டு ரூம் எடுத்தோம். அபி கல்யாண பெண், அதனால் எதுவும் பிரச்சனையை வந்துவிடக்கூடாது என்று.
வேண்டுமென்றால் எக்ஸ்ட்ரா பெட் போட்டு தர சொல்லி கேட்கவா ?"என்றான் ராகேஷ்.
" இல்ல வேண்டாம்" என்றாள் அபி அவசரமாக.
எல்லோரும் அவளை பார்க்க " அவள் இனி மேனேஜ் பண்ணிப்பா " என்றான் ரிஷி.
" அப்போ போய் தொலையுங்கள் உங்கள் ரூமுக்கு " என்றான் ராகேஷ் மூன்று பெண்களையும் பார்த்து.
" வா அபி " என்று அபியை இழுத்துக்கொண்டு சென்றனர் தோழிகள் இருவரும்.
********
" ஏய் எருமைகளா எழுந்திருங்க, முகத்தை மூடிக்கிட்டு இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை பார், இதுகளுக்கு எல்லாம் நல்லா சமைக்க தெரிந்த ஆளாக பார்த்து கட்டிவைக்க வேண்டும் " என்று கத்திக்கொண்டிருந்தான் ராகேஷ் கட்டில் முன் நின்றுகொண்டு.
" நீ என்ன கத்தினாலும் ஒன்றும் நடக்காது, அவர்கள் இரவெல்லாம் ஊர்கதையை பேசிவிட்டு லேட்டா தூங்கினார்கள், இவர்களை எழுப்ப நான் வழிச்சொல்லவா ?" என்று கேட்டாள் ஜானு.
" அதை ஏன் என்னிடம் சொல்லிக்கிட்டு, நீ எங்கே போக போகிறாய் ? நீயே ஏதாவது செய்து அவர்களை எழுப்பு " என்ற ராகேஷ் அங்கு ஹால் போன்று இருந்த இடத்தில் அமர்ந்து காஃபி குடித்துக்கொண்டிருந்த மற்ற இருவருடன் சேர்ந்துகொண்டான்.
போர்த்தியிருந்த போர்வையை உருவிய ஜானு " அபி உன் வருங்கால கணவர் ஜெய்பிரகாஷ் உனக்கு போன் போட்டிருக்கிறார், சீக்கிரம் எழுந்திரு, ம் சீக்கிரம் " என்றாள்.
" என்ன " என்று வாரி சுருட்டிக்கொண்டு அதிர்ச்சியாய் எழுந்து அமர்ந்தாள் அபி.
ஜானு கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் அதிர்ந்தது அபி மட்டும் இல்லை. வாயின் அருகில் காஃபி கப்பை கொண்டுபோன ரிஷியும் தான். வாயில் வைத்த காஃபி புரை ஏறி, கையில் இருந்த காஃபி அவன் போட்டிருந்த லைட் அஸ் கலர் ஷர்ட்டில் கவிழ்த்தது.
" ப்ரோ மெதுவா ? என்ன ஆச்சு " என்று கேட்ட அமிதாப் " ஏய் ஜானு உனக்கு அவளை எழுப்ப வேறு வழியே தெரியலையா ? பார் உன் அதிர்ச்சி வைத்தியத்தில் ப்ரோ சட்டையில் காஃபி கொட்டிவிட்டது.
" என் மேல் ஏன் சாடுகிறாய், நான் அதிர்ச்சி கொடுத்தது அபிக்கு, இவர் ஏன் அதிர்ச்சி ஆகனும் " என்று கேட்டாள்.
" அதானே " என்று ராகேஷும் ஒத்துப்பாட அமிதாப் ரிஷியை பார்த்தான்.
ரிஷி தன் சட்டையில் ஏற்பட்ட கரையை பார்ப்பது போல பார்வையை வேறு பக்கம் திரும்பி கொண்டான்.
இந்த ஐந்து பேரில் இந்த அமிதாப் கொஞ்சம் டேஞ்சரான ஆளு. அவனின் எண்ணம், யோசிக்கும் முறை, அடுத்தவர்களின் மனதை படிப்பது எல்லாம் வித்தியாசமானது. நேற்று அபி பொது இடத்தில் நடந்துகொண்ட முறை அவளின் நண்பர்களுக்கு புதிதாக இருந்திருக்கும். அங்கு இருந்த மற்ற நண்பர்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டார்களோ ? அபியின் மனப்பிறழ்வு அவளுடைய நண்பர்களுக்கு தெரிந்துவிட்டதே என்று ரிஷி எண்ணிக்கொண்டிருக்கும் போது, அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல " நீ கோபத்தை அடக்கி கஷ்டத்தை இழுத்துக்கொண்டாய் " என்று அதை ஒரு சாதாரண விஷயமாக பேசி முடித்துவிட்டான். டாக்டர் அபிக்கு ஏற்படும் இந்த திடீர் மாற்றம் ஒருவித மனவியாதி என்றார், இவன் கோபம்தான் காரணம் என்கிறான். இவனிடம் எதையும் மறைக்க முயல்வது கடினம் என்று நினைத்தான் ரிஷி.
" ஓகே ஜானு நீங்கள் மூவரும் கிளம்பி கீழே வாங்க, நாங்கள் உங்களுக்காக டைனிங் ஹாலில் வெய்ட் பண்றோம் " என்றபடி கிளம்பினான் அமிதாப்.
வேறு சட்டையை மாற்றிவிட்டு வந்த ரிஷியை பார்த்தான் அமிதாப்.
" ப்ரோ நான் ஒன்று கேட்கவா ? நாம் இன்று இருப்பது பாஸ்ட் லைஃபில், ஒரே பார்வையில் காதலித்து, மறுநாளே திருமணம் செய்து செட்டில் ஆகிற ஸ்பீடில் ஒவ்வொருவரும் போய்க்கொண்டிருக்க, நிச்சயம் முடிந்து நான்கு ஐந்து நாள் ஆகியும், இன்னும் ஒருவாரத்தில் கல்யாணம் என்ற நிலையில், எவனோ ஒருவனை கல்யாணம் செய்ய எனக்கு பயமாக இருக்கு என்று அபி சொல்வது எங்கேயோ இடிப்பது போல உங்களுக்கு தெரியவில்லை.
இந்த ஐந்து நாளில் தனக்கு மனைவியாக போகிறவளிடம் பேசி நெருக்கமாகி, அவளின் அந்நியத்தன்மையை, பயத்தை போக்காத ஒருவனுடன் அபிக்கு கல்யாணம் இன்னும் ஒரு வாரத்தில், சம்திங் மிஸ்ஸிங்." என்றான் யோசனையுடன்.
எனக்கு இது எல்லாவற்றையும் விட பெரிய சந்தேகம் என்னன்னா அபியின் பயத்தை போக்க நேற்றுவந்த ஒருவன் தவறிவிட்டான், ஆனால் அவளை முழுவதுமாக புரிந்துவைத்திருக்கும் நீங்களும் அவள் பயத்தை போக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை ஏன் ? இதில் கொடுமை என்னவென்றால் ஒரு 23 தாண்டிய ஒரு பெண் கல்யாணம் என்றாள் பயப்படுகிறாள். இத்தனைக்கும் அவள் எதுவும் தெரியாத பெண் இல்லை. " என்றான் அமிதாப்.
" நான் ஊரில் இல்லை, அவளுடன் பேசும் சந்தர்ப்பமோ, நேரமோ எனக்கு கிடைக்கவில்லை " என்றான் ரிஷி.
" நான் இதை நம்பவில்லை ப்ரோ, உங்களும் பேச விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஓகே அது உங்கள் பெர்சனல். என்னை கேட்டால் இதெல்லாம் தேவையில்லாதது, அதான் ஜெய் பிரகாஷ் அபிநேஹா. சொல்லும் போதே ஒட்டவில்லை. இப்படி இருந்திருக்கலாம் ரிஷினந்தன் அபிநேஹா. புரியும் என்று நினைக்கிறேன்.
அபி மனதிற்குள் ஏதோ போராட்டம் அவள் இன்செக்கியூரா பீல் பண்றா. உங்களுடன் இருந்தா ஸேப்பா, செக்கியூரா பீல் பண்ணுவா " என்றான்
" ஒரு திருமணத்திற்கு அதுமட்டும் தகுதி ஆகாது அமிதாப்." என்றான் ரிஷி அமைதியாக.
" அமிதாப் உனக்கு அபியின் மேல் இருக்கும் அக்கறையில் மூளை மங்கி விட்டது, அதான் நேற்றே சொன்னேனே இவர் ஆல்ரெடி கமிட்டட் என்று " என்றான் ராகேஷ்.
" இப்படி இருந்திருக்கலாம் என்றுதான் சொன்னேன், எனிவே அபிக்கு சந்தோசமான நல்ல வாழ்க்கை அமையவேண்டும் " என்றான் அமிதாப் பதிலாக.
" கவலை படாதே அமிதாப், கண்டிப்பாக அபிக்கு பாதிப்பு என்று வரும் எதுவும் அவள் வாழ்க்கையில் நடக்காது" என்றான் ரிஷி.
பெண்கள் வருவதை பார்த்த அமிதாப் வேறு பேச்சுக்கு தாவினான்.
" அம்மு நான் இன்னும் பத்துநிமிசத்தில் கிளம்பிவிடுவேன், நீ இரவுதானே கிளம்புவாய், சென்னை வந்து சேர்ந்ததும் போன் போடு நான் வருகிறேன் உன்னை பிக்கப் பண்ண " என்றான் ரிஷி.
" ம் கிளம்பு, என்னை பிக்கப் பண்ண நீ வந்தால் உன்னை ப்ரியா பேக்கப் செய்துவிட போகிறாள் " என்றாள் காஃபி குடித்தபடி.
" ரைய்மிங் எல்லாம் கரெக்ட்டா பேசு, ஆனால் டைமிங் தான் தப்பா இருக்கு. சும்மா சும்மா ப்ரியா, ப்ரியா என்று என்னை பயங்காட்டாதே, எனக்கு எது முக்கியம் என்று உனக்கே தெரியும், டேக் கேர், மறுபடியும் ஏதாவது மலை உச்சியில் போய் நின்றுகொண்டு இந்த பாவங்களை கஷ்டப்படுத்தாதே. சென்னை வரும் டைமிங்கை எனக்கு மெசேஜ் பண்ணு, எனக்கு மட்டும் பண்ணு. ஏனென்றால் யாராவது இப்போது என்னுடன் கேம் விளையாடினால் அதை மேனேஜ் பண்ணுற அளவுக்கு நான் தெளிவாக இல்லை. ஒருவாரமாக பயங்கர ஒர்க் பிரஷர். " என்றவன் அனைவரிடமும் கூறிக்கொண்டு தன் லக்கேஜை எடுத்துக்கொண்டு அடுத்த சேரில் இருந்த அபியின் தலையில் கைவைத்து தடவிகொடுத்துவிட்டு ஒரு சிறு அணைப்பை தந்துவிட்டு கிளம்பினான்.
இந்த மாதிரி அணைப்பு எல்லாம் நகரத்தில் இருக்கும் இன்றைய தலைமுறைகளுக்கு நட்பில் மிகவும் சாதாரணம். ஆனால் இன்று அந்த சிறு அணைப்பு அங்கிருந்த யாருக்கும் பொறுக்கவில்லை.
" அபி உன் அத்தை மகன் ரத்தினத்திற்கு வயது என்ன "? என்றாள் ஜானு.
" 29" என்றாள்.
"அப்படின்னா அவர் ஏன் இன்னும் சிங்கிளா சுத்திக்கொண்டிருக்கிறார், அதுவும் சிக்கென்று ஒரு காதலியை வைத்துக்கொண்டு " என்றாள் ஜானு.
" எல்லாம் பண்ணுவார், எனக்கு கல்யாணம் முடிய வெய்டிங் " என்றாள் அபி.
" ஏன்டி அபி நீ அந்த வீட்டில் அவருடனேதானே இருந்தாய், நீ முந்தியிருக்கலாமே ?" என்றாள் ஜானு.
" எதுக்கு முந்தனும் " என்றாள் அபி புரியாதபடி.
" ஆங் காதலிக்கத்தான் " என்று ராகம் போட்டாள் ஜானு.
" எவடி இவ, எப்போ பாரு காதல் கத்திரிக்கா என்று. அப்போ நீங்கள் லவ் என்று செல்லவில்லை ஏன் ?" என்று கேட்டாள் அபி.
" எவனும் மாட்டலடி " என்றாள் மானு.
" என்னை பெத்தவங்க என்னை நம்பி வெளியூருக்கு படிக்க அனுப்பினார்கள் என்றால் அதுக்கு தகுந்த மாதிரி நான் நடந்துக்க வேண்டாமா ?" என்றால் ஜானு.
அபி ஆண்களை பார்க்க " இந்த வயசிலே நோ கமிட்மென்ட் " என்றனர் இருவரும் கோரஸாக.
சிரித்த அபி " நீங்க எல்லோரும் உங்களின் அம்மா அப்பாவுடன் இருக்கிறீர்கள். ஆனால் நான் அப்படியில்லை. உங்களுக்கு இருக்கும் பொறுப்பை விட எனக்கு கூடுதலாக இருக்க வேண்டும். யாரு என்றே தெரியாத என் பெற்றோர்களின் பெயரையும், யாரென்று தெரியாத என்னை, எந்த பலனும் எதிர்பாராமல் வளர்த்தவர்களின் பெயரையும் நான் காப்பாத்த வேண்டாமா ? அது மட்டும் இல்லாமல் என் உறவுகள் என்னை கழுகை போல நோட்டம்விட்டுக்கொண்டிருக்கிறார்கள், இவள் எதில் சிக்குவாள் என்று. ஸோ என் சின்னத்தான் மேலே எல்லாம் எனக்கு காதல் சுட்டுப்போட்டாலும் வராது." என்றாள் அபி.
" அபி எனக்கு என்னவோ ரிஷி ப்ரியாவை லவ் பண்ணவில்லையோ என்று ஒரு சின்ன சந்தேகம் " என்றான் அமிதாப்.
" எனக்கும் அந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கு. அதே நேரம் சின்னத்தானை கணிக்கவே முடியாது. அவருக்கு சின்ன வயதிலிருந்தே என் மேல் பாசம் அதிகம். யார் என்றாலும் அது அவர் காதலியே என்றாலும் நான்தான் அவருக்கு முக்கியம் என்பார். அதனால் கூட ப்ரியாவை பற்றி அதிகம் பேசாமல் இருப்பார்." என்று தோளை குலுக்கினாள் அபி.
அவள் நண்பர்களும் குழம்பிபோயினர் அவளைப்போலவே.