UVVP Epilogue 02

Advertisement

Sharmiseetha

Well-Known Member
ஐந்து வருடங்களுக்கு பிறகு....

இடம் : ஷிவா மாயா வீடு... [அட... !! ]

பள்ளி விட்டு வீடு வந்திருந்தனர் பிள்ளைகள் ..

"அத்தை ", மாயாவின் கழுத்தை கட்டி ஒரே தாவலில் ஏறி இருந்தான், கணேஷ் ஷண்மதி தம்பதியின் அருந்தவப்புதல்வன், பரத்.

"சொல்லுடா கண்ணா ", கையில் fruit சாலட் தயாராய் இருந்தது, பிள்ளைகளுக்கு கொடுக்கவென..

" மாறுவேஷ போட்டி நடக்குது, என் கிளாஸ் -ல ",

" அப்டியா, அண்ணா சொல்லவேயில்லயே?" ,

"நான் சொல்ல வந்தேன் அதுக்குள்ள இவன் முந்திக்கிட்டான்,", பழங்களை சவைத்துக் கொண்டே பதில் வந்தது...

"நீ ஏன்டா லேட் பண்ணின?", சொன்னவள் பெண்....

"அடடா... சண்டை பின்னாடி..., இப்போ ஸ்கூல்-ல என்ன நடந்ததுன்னு லைன்-னா சொல்லுங்க ..?", கேட்ட மாயா இன்னமும் பரத்தை புண்ணகைத்தவாறே கட்டிகொண்டு இருந்தாள், கணேஷ் சிறுவயதில் எப்படி துறுதுறு - வோ, அவன் மைந்தனும் அப்படியே இருந்தான், கொஞ்சம் அதீத புத்திசாலித்தனத்துடன், அது ஷானுவின் க்ரோமோசோம்களின் விளைவாய் இருக்கும்...(;))

கணேஷ் மீடியா டைக்கூன் என பெயரெடுத்து இருந்தான்... "ஷிவ்மாய்" சேனலை வாங்கியவுடன் பெயரிட்டவன்,

"டேய், இது என்னடா, மாடர்ன்-ஆ பேரு வைக்காம", என்று கேட்ட மாயாவிற்கு .. பதிலாய்..

"அட அக்காவே.. உங்க பேரை வச்சிருக்கேன்-ன்னு நினைக்கிறாயா? இந்த உலகமே ஒரு மாயை, மேல இருக்கறவனோட tune - க்கு நாம ஆடறோம்.. சோ இது ஷிவ மாயை .. "

"மக்களை ரீச் பண்ணுமாடா?"

"அக்கா ... நல்ல நிகழ்ச்சிதான் அவங்களுக்கு தேவை.. கண்டிப்பா சக்ஸஸ் காமிக்கறேன்..."

சொன்னவன் சாதித்தான்.... தென்னிந்தியாவின் நம்பர் ஒன் சேனல் என்று TRP கட்டியம் கூறியது, கணேஷின் வெற்றியை...

ஷானு, போரென்சிக் மேல்படிப்பினை முடித்து காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறாள்... துப்பறிதலில் அவளுக்கு நிகர் அவளே....

மாயா, பத்திரிக்கைகளின் ராணியாய் கோலோச்சிக்கொண்டு இருக்கிறாள்... கூடவே தம்மக்கள், தனையனின் மகவையும் சேர்த்து நன்மக்களாய் ஆக்கிட அவள் வழியில் அவள் பயணம்... நேர மேலாண்மை.. காலை எட்டில் இருந்து மூன்று வரை மட்டுமே அவள் தேச சேவை .. அதன் பின் வீடே அவள் உலகம்...

ஷிவா.. என்றென்றும் காதல் கணவன், வியாபார வித்தகன்.. பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தலைவலியாய் இவன் இந்திய நிறுவனங்கள்... அதன் இமாலய வளர்ச்சி....

காவலன் ஆப்.. மேம்படுத்த பட்டு இருந்தது... குற்றச்செயல்கள் ஓரளவு குறைந்திருந்தது.. [எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ]. ஆபத்துக்கு காலங்களில், பேரிடர் நேரங்களில் இதன் சேவை அளவிடற்கரியதாய் மாறி இருந்தது.. பள்ளி , கல்லூரி குழந்தைகள் கைகளில் அலைபேசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது... அதில் காவலன் செயலி built - in ஆப். ஆக இருந்தது...

நிகழ்காலம்:

"கண்ணா..., உனக்கு பாரதியாரை பிடிக்குமா?",

"ம்ம்.. யாருத்தை அவரு ?, நான் பார்த்திருக்கேனா?", என்ற மழலைக்கு, சிரித்து கொண்டே...

"இல்லடாம்மா, போட்டோ-ல..தலைல தலப்பா கட்டி, முறுக்கு மீசை வச்சு ...."

"ஓ.... அந்த அங்கிளா ?, தெரியுமே....", "இண்டிபெண்டென்ஸ் டே -க்கு, நம்ம க்ருஷ் -ல்ல , அப்டித்தான் டிரஸ் பண்ணி வந்தான்..ஆனா மைக் கிட்ட வந்து ஒண்ணுமே பேசாம போய்ட்டான், ஆமா....யாரு அவரு ?"..

"நிறைய பாட்டு எழுதினவர் டா ", சொல்லும்போதே மனம் இடித்துரைத்தது...

அவ்வளவுதானா? அவ்வளவுதானா என் பாரதி??..

வெறும் பாட்டெழுதும் கவி-யா ?


காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதி ,

முரசு கொட்டி பறையடித்த பாரதி...

கண்ணம்மாவின் காதலில் கட்டுண்ட பாரதி,

தனி ஒரு மனிதனின் பசிக்கு உலகையே அழிக்க துணிந்த என் பாரதி,

கோவிலையும் பள்ளி சாலையையும் ஒன்றெனக் கண்ட பாரதி,

பார் போற்றும் பாரதத்தை கனவில் கண்டுணர்ந்த பாரதி..

காணி நிலம் கேட்ட பாரதி...

வேடிக்கை மனிதனாய் வீழ்வேனென்று நினைத்தாயோ? என்று மீசை முறுக்கிய பாரதி ......

காலா .. உடனே நீ வாடா என்று மார் தட்டிய பாரதி...

சட்டென்று நிகழ்காலத்திற்கு மனதை மாற்றினாள், "அவர் சாமி டா..., " சொல்லும்போதே கண் கலங்குவதை தடுக்க முடியவில்லை.. "அவர் சாங்ஸ் படிச்சா ரொம்ப தைரியம் வரும்",

"ஓ ... அதனாலதான் நீ ரொம்ப கரேஜியஸ்-ஆ இருக்கியா? ", என்று கொக்கி போட்டான் புதல்வன்...

புன்னகையுடன் கேள்வியாய் நோக்கியவாறே "அப்படின்னு யார் சொன்னா?",

பரத் இடையிட்டு, "எங்க மிஸ் சொன்னாங்களே, கூடவே வெரி டேரிங் -ன்னும் சொன்னாங்க", என்றான் கிளுக்கி சிரித்தபடி...

"ஓகே.. பட்டூஸ் ... இப்போ நான் ஒரு சாங் சொல்றேன் அதை recite பண்ண முடிஞ்சா, உனக்கு பாரதி costume , இன்னிக்கே வாங்கி ரெடி ஆயிடலாம்",

"வாவ்.. ஓகே", என பிள்ளைகள் மிழற்ற ...

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே", மாயா.. ஆரம்பிக்க ...

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லைய்யே ", கோரசாய் முழங்க...

தமிழ் தங்கிலீஷாய் மாறினாலும், ஊணிலும் உணர்விலுமாய் கலந்து விட்ட பாரதியின் கவிதைகள் உலகம் முழுதும் இருக்கும் ,என்று நினைத்து கொண்டே பாட்டை தொடர்ந்தாள் மாயா..

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சையூனியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

இவள் மட்டுமல்ல .. இவளின் வாரிசுகளும் அச்சமில்லாமல் பீடு நடை போடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் .......

விடை பெறுகிறேன்....

வணக்கம்....
Very nice story sis superb
 

HemaSriram

New Member
U r such a wonderful writer AADHI. Keep going. Proud of ur words "en bharathi avalavu thana, pattu ezhuthum kavizhan mattum thana". This resembles my mind words.


He is " Athukum mela illayah".

Thanks for this impressed story. Thanks alot.
 

Geetha sen

Well-Known Member
ரொம்ப அருமையா அழகாக கொடுத்திருக்கீங்க பாரதியின் பாட்டுடன். வாழ்த்துக்கள் தோழி.:love::love::love:
 

Uma Ramesh

Well-Known Member
ஆதிமா, நிறைவான சிறந்த ஒரு நாவல் தந்ததற்கு மிக்க நன்றி
நிறைய சிறப்பான novels thara வாழ்த்துக்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top