UVVP 10

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் - 10

ரு விதமான அமைதி, காருக்குள் இருந்த அவர்களை சூழ்ந்திருந்தது... [ பின்ன ஒரு நேரமா ஆத்து ஆத்துன்னு , ஆத்திட்டே இருக்காங்க...?]

காரின் கதவை திறந்து விட்டு, " அடுத்து ஆபீஸ் தானே போகணும்.. நானும் அங்கதான், ஆனா, பிரேக் பாஸ்ட் சாப்டுட்டு போகலாமே?",

சட்டென நிமிர்ந்த ஷானு, "நோ நோ நான் உங்க கூட வர மாட்டேன்...நம்ம விஷயம் எதுவும் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்....",

விழிகள் கூர்மையுற, " ஏன்?", உடனே கேள்வி வந்தது.... கணேஷிடமிருந்து...

“அது.. வந்து...”, என்று தயங்கியவள், "நீங்க தப்பா எடுக்க கூடாது, நாம இப்டி ஒரு ரிலேஷன்ஷிப் -ல இருக்கிறது தெரிஞ்சா... கண்டிப்பா கலீக்ஸ்லாம் என்னை தூர நிறுத்துவாங்க. அனாவசிய குழப்பம், ஈகோ இதெல்லாம் தலை தூக்கும்...என்னாலயும் இயல்பா இருக்க முடியாது"

“ஹா ஹா...இத்தனை நாளாய் யாருக்கும் தெரியாதுன்னா நினைக்கற?, எங்க அக்காவுக்கே சந்தேகம் ன்னு நினைக்கிறேன்.. முன்னாலேயே கண்டுபிடிச்சிருப்பா...”, என்ற கணேஷ் , மேலும் தொடர்ந்தான்....

"சரி விடு...ஆனா, தானா தெரிஞ்சுதுன்னா, கண்டிப்பா என்னை எதுவும் சொல்லக்கூடாது...., என்கிட்ட யாராவது கேட்டா நான் நிச்சயமா ஆமாம்னு தான் சொல்லுவேன்..."

"யாரும் கேக்காத மாதிரி நடந்தா போதுமே...",

"ஓகே நான் முயற்சி செய்யறேன்...., நானே ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன்... ஏன் இப்படி திடீர்னு ஒரு ஆராய்ச்சி...? அதுவும் குழந்தை கடத்தல் பத்தி?"

சிறிது முகம் மாறியவள் சுதாரித்து, "ம்ம்... சொல்றேன்", ஒரு பெரு மூச்சுடன் .. "கோயமுத்தூர் கார் ஆக்சிடென்ட் ஞாபகம் இருக்கா? அந்த கார்-ல இருந்த மூணு பேர்ல ஒரு பொண்ணு, பார்கவி, அவ எங்க வீட்டுக்கு நாலாவது வீட்ல இருக்கா.. இல்ல.... இருந்தா.., அவ்வளவு அழகு, துறுதுறுப்பு.... என்ன டவுட் -ன்னாலும் எங்கிட்ட தான் வருவா..கிட்டத்தட்ட ஒரு தங்கை மாதிரி என்னை ஒட்டிட்டே திரிஞ்சவ, இன்னிக்கு இந்த உலகத்தை விட்டே போயிட்டா-னு சொன்னா நம்பவே முடியல... இன்னமும் ஆறாத ரணமா அவ முகம் பதிஞ்சு போச்சு..,

"கூடவே அங்க ஸ்பாட்-ல நானே நேர்ல பார்த்தேனே... அப்போ எனக்கு தெரியாது, பாரு உள்ள இருக்கா-ன்னு. அதை தொடர்ந்து போலீஸ் பண்ணின குழப்பங்கள், ஸ்டேஷன்-ல அவங்க FIR போட மாட்டேன்-னு சொன்னது, அவங்க மிரட்டல்கள் எல்லாம் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்-னு வெறி வர வச்சது.. அப்படி தோண்டி தெரிஞ்சுக்கிட்ட விஷயம் தான் இது..."

"ஆனா ஒரு நிம்மதி.. அவ உயிரோட அவங்க கிட்ட மாட்டி கஷ்டப்படறத விட இப்படி இல்லாம போனது நல்லதுன்னு தோணுது..."

கணேஷ் , உணர்ச்சி வசப்பட்டவளாய் இருந்த ஷண்மதியை பார்த்துக் கொண்டிருந்தான். வருத்தமாய் தலை அசைத்தான்."ஈஸி பேபி... கேக்கவே கஷ்டமா இருக்கு, உனக்கு இன்னும் கடத்தல்கள் பத்தி வேற என்னல்லாம் தெரியும்?"

"தமிழ்நாட்டுல மட்டும் ஒரு நாளைக்கு 5 லேர்ந்து 10 குழந்தைங்க காணாம போறாங்க.. செப் 25, 2018 டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட் படி, 2016 லேர்ந்து செப்டம்பர் 2018 வரை காணாம போன பசங்க 9882, கண்டு பிடிச்சது 9177.. இது தவிர 17 பேர் ஆன்டி சைல்ட் ட்ராபிக்கிங் ..யூனிட் (ACTU ), னால கண்டுபிடிக்க பட்டாங்க... இது போக இதுவரை கண்டுபிடிக்க படாத குழந்தைகளோட எண்ணிக்கை 688”.

“இவங்க என்ன ஆறாங்க ?, உயிரோட இருக்காங்களா? இல்லையா? யாருக்கும் தெரியாது..போலீசுக்கு ... இது கேஸ்-களோட எண்ணிக்கை, பாதிக்க படாதவங்களுக்கு இது வெறும் நம்பர். ஆனா பசங்களைக் காணோம்-னு துடிக்கிற இந்த 688 குடும்பத்துக்கும் இது ஒரு தீராத தேடல்... வலி. “

“அந்த வலிய அந்தம்மாவோட கண்ல பார்த்தேன்.... அவங்களுக்கு இந்த பொண்ணு இறந்தது தெரியாது, ஏற்கனவே இவ காணாம போனோடனேயே அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.. சோ, இப்போதைக்கு விஷயத்தை சொல்லவும் முடியாது..."

"யார் இவங்க பொண்ணு வயசில, இவங்களை கடந்து போனாலும், இது என் புள்ளையா இருக்க கூடாதா-ன்னு தேடற அவங்க தவிப்பு ... அது கொடுமை... “

“ம்ஹ்ம் ... இந்த குழந்தைங்கள்ல.. 5 வயசுகுள்ள இருக்கிறவங்க, வெளிநாட்டு குழந்தையில்லா தம்பதிகளுக்கு விக்கப்படறாங்க... மெயினா, நெதர்லாண்ட்ஸ், யு எஸ், ஆஸ்திரேலியா.... ரேட் 10 - 15 லட்சங்கள்., மேலயும் போகலாம், வாங்கிறவங்க பண வசதிய பொறுத்து ரேட் மாறும் ”

“5 லேர்ந்து பத்து வயசுல இருக்கிற குழந்தைங்கள பிச்சை எடுக்க பழக்கறாங்க... வீடு வேலை செய்ய, மேல் வேலைக்குன்னு அரபு நாடுகளுக்கு அனுப்ப படறாங்க... “

“10 வயசுக்கு மேல இருக்கிற பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படறாங்க. அதுவும் ISIS மாதிரியான கும்பலுக்கு விக்கப்பட்டா..அவங்க ஆயுட்காலம் அதிக பட்சம் ஏழுலேர்ந்து பத்து நாட்கள்... மெஷின் மாதிரி அவங்களை நார் நாரா உறிச்சி, குப்பையா போட்டுடுவாங்க... “

“ஒன்னரை பில்லியன் டாலர் உலகளாவிய பிசினெஸ் இது... “

“இதுக்கு நிரந்தரமா ஒரு தலைவனில்லை... அடியாளில்லை .. பணம் மட்டுமே இங்க பேசும்.. ஒருத்தன பத்தி இன்னொருத்தனுக்கோ இல்ல அதுக்கடுத்தவன பத்தியோ யாருக்கும் தெரியாது... ஒரு கும்பலை அழிச்சா அடுத்த கும்பல் தானாவே உருவாகிடும்... இ-கரன்சி வந்தா போயிடும்-னு சொன்னாங்க... போகலை.. பண பரிமாற்றம் ரொம்ப சுலபாயிடுச்சு... போதை பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் இதுல வர்ற பணம் வேற என்ன பண்ணினாலும் கிடைக்காது...”

“இத இன்னும் தேட ஆரம்பிச்சேன்... ஹியூமன் ட்ராபிக்கிங்-ல தமிழ்நாடு, இந்திய அளவுல மூணாவது இடத்துல இருக்கு.. இதெல்லாம் தடுக்க தனி சட்டம் இருக்கு.. அந்த சட்டத்தை அதிகமா பயன் படுத்தறதும் நம்ம ஸ்டேட் தான்.."

பேசிக்கொண்டிருக்கையில் கணேஷின் அலைபேசி அதிர, அதை எடுத்தவன், "DCP calling ", என்று ஒளிர்ந்ததை பார்த்து, ஷானு-விற்கும் காண்பித்து பேசியை உயிர்பித்தான்.

"குட் மார்னிங், சொல்லுங்க சார்",

"கணேஷ், குட் மார்னிங் -கா இல்ல பேட் மார்னிங் -கா ன்னு நான் சொல்ற விஷயத்தை கேட்டு நீயே முடிவு பண்ணிக்கோ..... மினிஸ்டர் மணிவேல் வீட்ல fire ஆக்ஸிடென்ட், விநாயகத்தோட பையன் பூபேஷ் இறந்துட்டார்..”, என்று கூற, மௌனமாய் அதிர்ந்தான்.

"பிரீ யா இருக்கியா? இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு... நீ எங்க இருக்க?"

"நான் ஒரு அரைமணி நேரத்துல வர்றேன் சார்", என்றவன் ஷண்மதியிடம்,

"ஷாக்கிங் நியூஸ்...,, ஷானு .. மினிஸ்டர் வீடு fire பிரேக்-அப்.., நாம கிளம்பலாம் ... உன்னை எங்க ட்ராப் பண்ணணு-னு சொல்லு... விட்டுடறேன்...", என்றவனை இடையிட்டு..

"ஹலோ.... ஸ்டாப்...ஸ்டாப்... இதென்ன இவ்வளவு ஹாட்டா ஒரு நியூஸ் குடுத்துட்டு என்னை கழட்டி விடறீங்க....",

"அம்மா தாயே, நீதான் கொஞ்ச நேரம் முன்ன - நம்ம ரிலேஷன்ஷிப் வெளில தெரிய வேண்டாம்-னு..சொன்ன... இப்போ, அங்க ரெண்டு பெரும் சேர்ந்து போனா அவ்வளவுதான்"...

"ஹேய்... யாருக்கும் தெரியாது , சுத்தமா சந்தேகப் பட மாட்டாங்க அதுக்கு நான் காரண்டீ..... ", என்றவளை பார்த்து . நம்ப முடியாது விழித்தான்....

"ஓகே .. வா... லெட்ஸ் மூவ் ", என்றவாறே புறப்பட்டு இருந்தான்.. சொன்னபடி அரை மணி துளியில் மினிஸ்டர் வீட்டை அடைந்து ... காரை சற்று தொலைவில் நிறுத்தினான். தீ தன் நாவுகளால் மொத்த வீட்டையும் கபளீகரம் செய்திருந்தது...புகை நெடி அதிகமாய் இருந்தது..

"ஷானு", கார் சாவியை அவளிடம் கொடுத்து,"நான் முதல்ல போறேன், நீ பின்னால உக்கார்ந்திட்டு இரு...". சற்று முன் காதல் வசனம் பேசியவனா இவன்?

"ஹலோ, சும்மா உக்கார்ந்து இருக்கவா உங்க கூட வந்தேன்?, நானும் கிரைம் ஸீன் பார்க்கணும் சார்",

"பட்...",

"ரொம்ப யோசிக்காதீங்க, ", என்று சொன்னபடி, கைப்பையில் இருந்து பட்டன் சைசில் ஒரு கேமரா வை எடுத்து அவன் சட்டை மேல் பட்டனில் ஒட்டினாள், கூடவே ஒருமைக்ரோபோனையும், அவன் காதில் மாட்டினாள்..

"இனி நீங்க என்ன பாத்தாலும், நானும் பாப்பேன்.. என்ன பேசினாலும் எனக்கும் தெரியும்.. இந்த டிவைஸ், என் ஸிஸ்டம் ப்ளூ டூத் கூட எப்போதும் கனெக்ட் ஆகி இருக்கும். தேவைன்னா, பெரிய ஸ்க்ரீன்-ல பார்பேன்...", என ஷானு சொல்ல, கணேஷ் இமைக்க மறக்க...

" நான் ரிப்போர்ட்டர் சார்.. எப்பவும், எங்கயும் தயாரா இருப்பேன் ", சற்றே சிரிப்புடன் சொன்ன ஷானுவை மெச்சுதலாய் பார்த்தான்..

"நைஸ்... வந்து பேசறேன்..", பதிலை எதிர்பாராமல் சென்றிருந்தான்...

காவல் துறையில் பழக்கமான முகமாய் இருந்ததால், யாரும் அவனை தடுக்கவில்லை... நேராய், DCP யிடம் வந்தவன், "மார்னிங் சார்", தந்தான்.. கவலையான முகத்துடன், அவர் தலை அசைத்தார்...

"எப்படி ஆச்சு?, செக்யூரிட்டி என்ன ஆனாங்க?, எத்தனை fatel ?, பூபேஷ் என்ன ஸ்டேட்டஸ்-ல இருக்காரு ?",

"வீட்ல பூபேஷ் இருந்ததினால் அவருக்கு சமைச்சு போட குக் இருந்திருக்கார்.. காலைல ரொம்ப லேட்டாதான் எழுந்திருக்காங்க...சிலிண்டர் லீக் ஆகி வெடிச்சதா தெரியுது.. அதோட தொடர்ச்சியா spare -ல இருந்த இன்னொரு சிலிண்டரும் வெடிச்சதுல... வீட்ல இருந்த மொத்தமும் எரிஞ்சுடுச்சு..."

"பூபேஷ் & குக் .. ஸ்பாட் டெட்... ஆனா, இது விபத்து மாதிரி எனக்கு தோணல.. "

வீட்டினை ஒருமுறை நோட்டமிட்டவன் , "சார்,வெளியே ஒரு ரவுண்ட் வரலாமா ?"

"ம்ம்.. போலாம் வா", இருவரும் ஹாலை விட்டு வெளியே வராந்தாவில் நின்றனர்... அது ஒரு தனி வீடு.. மினிஸ்டரின் செழுமை ஒவ்வொரு இடத்திலும் தெரிந்தது... வீட்டின் மதிலை ஒட்டி அடர்ந்த மரங்கள்..மா, தென்னை, பலா வாழை, பூச்செடிகள் சீரிய இடைவெளியுடன் தனி தனியாய் பராமரித்து இருந்தனர்.. தீயின் தாக்கம் அவைகளிடத்தும் தெரிந்தது.. மாடிக்கு செல்ல தனியாய் வழி இருந்தது. வீட்டின் பின்புறம், வேலைபார்ப்பவர்கள் தங்க வசதியாய் இரண்டு அறைகள்.. தொடர்ந்து சீராய் செதுக்கப்பட்ட புல்வெளி , நடை பாதை என அருமையாய் திட்டமிட்டு கட்டப்பட்ட வீடு.. சுற்றிக்கொண்டே வரும்போது, இரண்டு தேக்கு மரம் ஓங்கு தாங்காய் வளர்ந்திருந்தது... சின்ன ரேடியத்தின் ஒளி, கண்களை கூச வைக்க... சற்றே உற்று பார்த்தனர்...

ஒரு CCTV உயிர்ப்புடன் இருந்தது... சிறு புன்னகையுடன் இருவரும் நோக்கி முடிக்கும் முன், கணேஷ் மிக லாவகமாய் மரம் ஏறி கேமராவுடன் இறங்கி இருந்தான்...

சிறிதாய் மூச்சிரைக்க, "இன்டெர்னல் சிப் சிஸ்டம் ", என்றான், அவரிடம்.. இப்போது சற்று விரிந்த புன்னகை இருவரிடமும்...

[என்னடா RAMANA படத்துல வர்ற மாதிரி டேட்டா கொடுக்கறேன்-ன்னு நினைக்காதீங்க தோழிகளே..., இது அத்தனையும் நிஜம்... ]

https://timesofindia.indiatimes.com/city/chennai/688-children-missing-since-2016-yet-to-be-traced-in-tn/articleshow/65941573.cms]

^^^&&&&&&&&&&&&&&&&&&&&&&&^^^^^^^^^ &&&&&&&&&&&&&&&&&&&&&

விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
விதியே தமிழச் சாதியை,எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்!
- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Mam epi enga mam
சிட்டி மேம்.... இந்த மேம் விட்டுடலாமே?

அழகா ஆதி / லக்ஷ்மி /அடியே -ன்னு கூட கூப்பிடுங்க..
மேம் வேணாம்... ஆபிஸ் ஃபீல் வருது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top