UVVP 09

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் - 9

ந்தரை மணிக்கு அலறும் அலைபேசியை, ட்ரட்மில்-லில் இருந்து இறங்கி வந்து பார்த்தாள், மாயா.. அருமை தம்பி அழைத்திருந்தான்...

"என்னடா, நைட்-தானே பேசிட்டு போன?, என்ன விஷயம்?", மாயா வினவ,

எதிர்முனையில் இருந்து சற்றே தயக்கமாய் , "குட் மார்னிங்க்கா ", "ஒரு குட்லக் சொல்லேன் ", என்றான் கணேஷ்.

"டேய் ", புன்னகையுடன்... "எங்க இருக்க ? எதுக்கு குட் லக் ? அடி கிடி வாங்காம இருந்தா சரி?" என்றிவள் நிறுத்த...

"ஷானுவோட ஹாஸ்டல் வாசல்-ல.. அவளுக்கு கால் பண்ணி கீழ வெயிட் பண்றதா சொல்லிட்டேன்.. கொஞ்சம் டென்ஷனா இருந்ததா.. அதான்....உன்கிட்ட பேசலாம்-னு ..".

"டேய் அதுக்குன்னு இந்த நேரத்திலயா?", சிரிப்பை நிறுத்த முடியவில்லை மாயாவால் ...

"அக்கா ..நேத்து நைட் நீ ஓகே சொன்ன உடனே வரலாமா-ன்னு நினச்சேன்.. ரொம்ப நைட் ஆகிடுச்சு, அதான் காலைல சொல்லலாம்-னு ", சட்டென நிறுத்தியவன், " அக்கா... வந்துட்டு இருக்கா..", சற்றே பதட்டம் எட்டி பார்த்தது...கணேஷிற்கு.

"பேசிட்டு சொல்லுடா...", சிரித்து கொண்டே அலைபேசியை வைத்து விட்டு, மாயா உடற்பயிற்சியை தொடர்ந்தாள்...

ஷானு .. ஷண்மதி.. [ஒன்பதாவது அத்தியாயத்தில் அறிமுகம் ஆகும் கதாநாயகி அநேகமாய் ...இவளாய்த்தான் இருப்பாள். ., ஆனா லேட்-ஆ வந்தாலும் லேட்டஸ்ட்-ஆ இருப்பா.] திராவிட அழகி, ஆம் நம் மண்ணின் மாநிறம், நேர்த்தியான நாசி, ஸ்கேனர் கண்கள், யார் என்ன நினைக்கிறார்கள்? என்ன விதமாய் பார்க்கிறார்கள்? என தூண்டி துருவும் பார்வை கொண்டவள். அதரம் அழகு... இடை தொடும் அடர்த்தியான முடி... சராசரி உயரம்... ஆளுமையில் மாயா-வை ஒத்தவள்.

அவளின் எழுத்துக்களில் ஏற்கனவே கவரப்பட்டிருந்த கணேஷ், விநாயகத்தின் ஆட்கள் ஷானு-வை மிரட்டியது தெரிந்தவுடன், மாயாவிடம் கூறி, ஷானுவை சென்னை வரவழைத்தான். நேரில், கண்டவுடன் மனம் சலனப்பட, பழகியவுடன், இவளுடனான வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என உணர்ந்தான்.,

காதலை மறுத்து விடுவாளோ என்ற எண்ணமில்லை, அவளின் விருப்பம் ..வாய் மொழிய வில்லையெனினும், கண்களும் உடல் மொழியும் , இவன் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தவே செய்தன..

இவனருகில் வந்த ஷானு.., "ஹலோ, குட் மார்னிங்", அவளுக்கும் படபடப்பு இருந்தது , "வாங்க .. காபி...... இல்ல... வந்து.. இது விசிட்டிங் டைம் இல்ல.. இந்த ஹாஸ்டல் ரொம்ப கண்டிப்பு, வெளியாட்கள் உள்ள வர கூடாது, friends -லாம் தப்பா நினைப்பாங்க.... ", என்று தந்தி பாஷையில் பேச...

அவளின் நிலை புரிந்து, "தெருமுனைல இருக்கிற சிவா விஷ்ணு கோவில்ல வெயிட் பண்றேன்.. 20 மினிட்ஸ் போதுமா ?",

"ஹான் ... எதுக்கு?", திருதிருத்தாள்..

கணேஷின் மனம் பந்தயக் குதிரையை ஓடினாலும், வார்த்தை தெளிவாக வந்தது.... "நீ பிரெஷ்ஷப்பாகி வரதுக்கு ?,", நிறுத்தியவன், குறும்பான புன்முறுவலுடன், "முடிஞ்சா புடவை-ல .. ஓகே ?"

கேட்ட அவளுக்கு முகமெல்லாம் கண்ணாகியது.... அட்ரீனல் வேகமாய் செயல்பட, இதயம் லப்டப்பை டாப் கியரில் போட்டது.... மண்டையை வேகமாய் உருட்டி, உள்ளே அதைவிட வேகமாய் சென்றாள் ....

"முட்டக்கண்ணி .. ஒண்ணுமே தெரியாத மாதிரி பாக்கிறதா பாரு? இவ முழிக்கறதை பார்த்தே மூச்சு முட்டுது... என்ன சொல்ல போறேனோ?, அல் -கொய்தா தீவிரவாதிய பேட்டி எடுத்தாக்கூட இந்த பயம் வராது ... மொத்தமா அஞ்சரையடி.. அம்பது கிலோ தான் இருப்பா.. மனுஷன டென்ஷனாக்கராளே..." , கோவில் வாசலில் அமர்ந்தபடி புலம்பிக் கொண்டிருந்த கணேஷுக்கு ஒரு வித அவஸ்தை என்றால்,

அங்கே ஹாஸ்டல் சென்ற ஷன்மதிக்கோ...., தலை கால் புரிய சற்று நேரமெடுத்தது.... என்ன காத்திருக்கிறது என்பது அவளுக்கும் தெரியுமே.!!

சட்டென குளித்து, இளம் மஞ்சளில், துளிர் பச்சை பார்டருடன்... குந்தன் வேலைப்பாடுடன் கூடிய காட்டன் புடவையை தேர்ந்தெடுத்து அணிந்தாள். ஈரத்தலையில் [காயவைக்க ஹீரோ எங்க நேரம் குடுத்தார் ?] கோடாலி பின்னலிட்டு... நுனியில்.. ரப்பர்பேண்டிட்டாள்..

எப்போதும் போல் ..ஒரு சிறிய ஸ்டிக்கர், கீற்று விபூதியுடன்... கோவிலுக்கு செல்ல ...

அங்கோ.. கோவில் மெயின் கேட்டை திறந்த கொண்டிருந்த அர்ச்சகருடன் கணேஷ், "குருக்களே , நடை திறக்கும் நேரம் அஞ்சறை-ன்னு போட்டிருக்கு.. நீங்க ஆடி அசைஞ்சு ஆறரைக்கு வர்றீங்க?", என்று சண்டையிட்டு கொண்டிருந்தான்..... [ அட லூசே...]

அவரோ, "அப்பா அம்பி, வயசாயிடுத்து .. செத்த கண்ணசந்துட்டேன்..., சத்தம் போட்டு ஏழரைய கூட்டாதே....", என்று அவர் கெஞ்ச......"இந்தக்காலத்து பிள்ளைகளுக்கெல்லாம் எப்படி திடீர் திடீர்-னு பக்தி வர்றது-ன்னே தெரில.... ", அவனை மனதுக்குள் வைது கொண்டிருந்தார்...

அவர்களருகே வந்த ஷானு, கணேஷ் கை பிடித்து தரதரவென இழுத்தவாறே கோவில் உட்ப்ரகாரத்துள் நுழைந்தாள். முழு நிலவாய் காலை வேளையில் அவளை புடவையில் கண்டவன்... பேச்சை மறந்தவனாய்.. அவள் இழுத்த இழுப்பிற்கு பின் தொடர்ந்தான்...

" போற பக்கமெல்லாம் ரூல்ஸ் பேசி வம்பிழுக்கறதே வேலையா?..", என்று படபடப்பக்க....

அவள் பேச ஆரம்பித்து இருந்தபோதே சுதாரித்து இருந்த கணேஷ், வெகு சுவாரசியமாய் அவளை பார்த்தவாறே " நீதான் கூடவே இருக்கியே , சமாதானம் பண்ணி விடறதுக்கு... அந்த தைரியம் தான்", என்றவன் ... சற்று நிறுத்தி...."இருப்பியா?", அவள் கண்ணோடு நோக்கி கேட்டான்... இப்போது ஷண்மதியின் கை, கணேஷின் பிடியில் இருந்தது...

என்னதான் எதிர்பார்த்திருந்தாலும், இக்கேள்விக்கு இயல்பாய் பதிலுரைக்க, பென்னவளின் நாணம் தடுக்க, விழி தாழ்த்தி "ம்ம்ம் .. ", என்றவள், பிடித்து வைத்த மூச்சை விட்டபடியே..... ஷப்ப்ப்பாஆ .. உலகத்துலயே கஷ்டமான வார்த்தை... ம்ம் தான் , என நினைத்தாள் ...

இவர்கள் இருவரையும் கர்ப்ப கிரஹத்தில் இருந்து பார்த்த அர்ச்சகர்.. "இதுக்குத்தானா அம்பி, என்னண்டை எகிறின?",என்க ,

இவன் அசடு வழிந்தவாறே "ஹி.. ஹி.. ", என....

"ப்ரோபோசல் ஆச்சோல்லொயோ? வாங்கோ, ரெண்டு பெரும் வந்து சுவாமி தரிசனம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிக்கோங்கோ.",

"சீக்கிரமேவ விவாஹ ப்ராப்திரஸ்து ", அவர் பங்கிற்கு அவரும் இவர்கள் காதலுக்கு துணை போனார்.

இறை தரிசனம் முடித்து வெளியே நின்றிருந்த காரை அடைந்தார்கள்... இருவரும் எதும் பேசிக்கொள்ள வில்லை.. ஆனாலும் இருவருக்குள்ளும் பேச வேண்டிய விஷயங்கள் அலைகடலென ஆர்ப்பரித்து கொண்டு இருந்தன.

"என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற?",

"என்ன சொல்லணும்-னு சொல்லுங்க..."

"அப்பறம்".....

[அய்யய்ய.... இந்த ஆட்டைக்கு நான் வரல... 100 முறை அப்பறம், 200 வந்து -னு, இவங்க உலக காதலர்கள் பரிபாஷை பேசி முடிக்கட்டும்..., நாம ஒரு சின்ன பிரேக் எடுத்து வருவோம்]

அருகே...200 மீட்டர் தொலைவில், இவர்களின் நடவடிக்கைகளை கையில் இருந்த தொலைநோக்கி வழியாக பார்த்துக்கொண்டிருந்தான்..., ஒருவன்.. "ஓஹோ, கதை அப்படி போகுதோ... வைக்கறேண்டா... உனக்கும் உங்கக்காவுக்கும் சேர்த்து ஒரு செக்", திறந்திருந்த ஸ்கார்பியோ கதவை மூடி, காரை உயிர்ப்பித்தான்...


@@@@@@@@@@@@@@@@@@@@ &&&&&&&&&&&&&&&&&&

[இதுல நான் எதை வெட்ட? எல்லாமே புடிக்குதே ...முடியாததினால்... மொத்தமும் .....]

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;
தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;
காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே:
கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!

- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top