UVVP 07

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Friends,
Next Epi....

சின்ன பதிவா இருக்குன்னு சொன்னதால அடுத்த பதிவும் கொடுக்கிறேன்.. படிச்சு.. பிடிச்சா.. லைக்ஸ் ப்ளீஸ்.....
:):):)
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அத்தியாயம் - 7

"என்னக்கா, ரிப்போர்ட்டர்ஸ் கிட்டயிருந்து தப்பிச்சுட்ட போலிருக்கு?",உள்ளே நுழைந்துகொண்டே கணேஷ் கேட்க...

"டேய் , ", அவனை சின்னதாய் முறைத்து, "நம்ம தொழிலும் ரிப்போர்டிங் தான், கூடவே ... அவங்கெல்லாம் கொலீக்ஸ்.. சோ சில பல அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் பண்ணித்தான் ஆகணும்...", என்றவாறே, "சாப்பிடறியாடா?", வினவினாள்.

"நோ க்கா... அத்தை அடை அவியல் பண்ணி இருந்தாங்க.. excellent , ஃபுல் கட்டு கட்டிட்டேன்...."

அறையில் இருந்து குளித்து புத்துணர்ச்சியுடன் வந்த ஷிவா, "ஹாய் கணேஷ், வா வா, உக்காரு... ", என்று நிறுத்தியவன், "அந்தாள போலீஸ்-ல போட்டு கொடுக்கிற அளவுக்கு அப்படி என்ன ஆதாரம் கிடைச்சது, உங்களுக்கு ?", கேள்வியை தொடர்ந்தான்...

"actually , அந்தாளையே போட்டு தள்ளியிருக்கணும், தப்பான உதாரணாமா ஆயடுமேன்னு போலீஸ்-க்கு சொன்னேன்..",

"ஹா ஹா ஹா, செஞ்சாலும் செய்வ நீ...", சிரித்த ஷிவா , " சரி..என்ன எவிடென்ஸ்?, நம்ம ஆபீஸ் க்கு அவர் வந்ததும் கிடைக்கிறதா மாதிரி?" வினவினான்..

"உங்களுக்கே தெரியும் கணேஷ் நியூ ஜெர்சி போனது...., அங்க போயி அமைச்சர் பொண்ணு கிட்ட பேசினதுல தெரிஞ்சுக்கிட்ட ஒரு தகவல், மணிவேலைப் பற்றினது இல்ல... விநாயகத்தை பற்றி... அது என்னென்னா .. விநாயக மூர்த்திக்கு சின்ன வயசுல ஒரு முறை மரத்துலேர்ந்து கீழே விழுந்து கால் தொடை எலும்பு முறிஞ்சுடுச்சு.... ஸ்டீல் பிளேட் வச்சு ஆபரேஷன் மூலமா தான் அவரோட எலும்பை சேர்த்து இருக்காங்க... அதை இன்னுமும் ரிமூவ் பண்ணலை.-ங்கிறது.. தவிர அவரால கார் ஓட்ட முடியாது -ன்னும் தெரிஞ்சிகிட்டான்..“

“அதனாலதான், அவர் இடது பக்க கை செயலிழந்துட்டதா ஒரு நாடகம் நடத்திட்டு எப்பவும் ஸ்டீல் ஸ்டிக்கோடவே இருக்கார்..”

“அவரை ஒரு கம்ப்ளீட் ஸ்கேன் பண்ணினா இந்த விஷயம் வெளிய வரும்...ஒரே ஒரு முறை ஏர்போர்ட் செகயூரிட்டி சென்சார்-ல அவர் போயிட்டு வந்தா கூட போதும், இதை தெரிஞ்சுக்க முடியும்..ஆனா, அவரோட பதவி அவரை எந்த ஒரு ஸ்கேனர்-குள்ளையும் போக வேண்டிய அவசியம் இல்லாம தடுத்துடும் ....”

“அமைச்சர் மணிவேல் வேஷத்துல இருக்கிற விநாயகத்தோட கோவத்தை கொஞ்சம் தூண்டிவிட்டா... எந்த இடம் ஆளு யாரு-னு கூட யோசிக்காம , சண்டை போடுற அந்தாளோட ஒரிஜினாலிட்டி வெளில வரும்னு கணக்கு போட்டுத்தான்... "குழந்தை கடத்தல் - ஒரு நெட்ஒர்க் ", ங்கிற ஷானுவோட ஆர்ட்டிகள் -ல்ல அவர் கார் சம்பந்தப்பட்ட விஷயத்தையும் போட்டு பப்ளிஷ் பண்ணினேன்... வெல், அவரை டார்கெட் பண்ணிதான் அந்த ஆர்ட்டிகலும், அதோட தொடர்ச்சியும்..."

“கோவை விமான நிலையம் தான் கள்ள கடத்தலுக்கும், ஆள் கடத்தலுக்கும் அதிகமா பயன்படுத்தபடுது-கிறது ஆதாரபூர்வமான செய்தி... , தவிர.. தென்னிந்தியால ... கடத்தப்படற பொண்ணுங்களை , தரை மார்க்கமா கேரளா இல்லன்னா தூத்துக்குடி போர்ட்-க்கு கடத்திட்டு போயி , அங்கிருந்து கன்டைனர் மூலமாவோ கப்பல்-ல அல்லது சரக்கு விமானத்துல நாடு கடத்தறாங்க... இது எல்லாமே, கடத்துறவங்களோட கடத்தல் யுக்தி..., இதை அந்த மூணு பொண்ணுங்களோட சாவோட தொடர்பு படுத்தி, நம்ம செய்தி வர", இடை நிறுத்தி ,

"அது விநாயகத்துக்கு பயத்த உண்டாக்கிடுச்சு.., அவர் மாட்டிப்பாரோன்னு " பின் தொடர்ந்தாள்...

"நாங்க யூகிச்சா மாதிரியே.. கார் விபத்து பத்தி எழுதின நாள்-லேர்ந்து அவர் கிட்ட இருந்து போன் கால் ... பேசறதுக்கு நம்மளை கூப்டுட்டே இருந்தார்... நாம கண்டுக்கவே இல்லை..., எப்போ இந்த டீடைல்ஸ் தெரிஞ்சதோ.. அன்னிக்கு அவரை நம்ம ஆபீசுக்கு வரவழைச்சோம்.. நம்ம கேபினுக்கு வரணும்-னா ரெண்டு செக்யூரிட்டி கேமரா & ஸ்கேனரை கடந்துதான் உள்ள நுழைய முடியும்..யாருக்கும் தெரியவும் தெரியாது.... வந்தவரை லைவ்-வா போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒளிபரப்பினேன்."

"DCP க்கு இந்தாள் , உள்ள வரும்போது பதிவான ஸ்கேன் போய் சேர்ந்த அடுத்த நிமிஷம் ..... விஷயம், CM செல்லுக்கு போய், அதிரடியா கைது பண்ண சொல்லி ஆர்டர்-ம் வந்துடுச்சு... கணேஷும் அமைச்சர் பொண்ணு கிட்ட இருந்து CM க்கு written பெட்டிஷன், கம்பளைண்ட் லெட்டர்-ன்னு எல்லாமும் மெயில் பண்ணி இருந்தது ரொம்பவே helpful. ஒரிஜினலயும் கணேஷ் கவர் போட்டு ஆபீஸ்ல வச்சிருந்தான் ., நான் ஜஸ்ட் போஸ்ட் மேன் வேலைதான் பார்த்தேன்... ", என்று முடித்தாள்...

"அப்போ கேஸ் ஓவர்-ஆ?", "அமைச்சர் என்ன ஆனார்... ,?"

"wait .. wait ...கேஸ் இப்போதான் ஆரம்பிச்சு இருக்கு.., போலீஸ் விசாரணை-ல ரொம்ப நேரமா அந்தாளு, நாந்தான் மணிவேல்-கிற பல்லவியை மாத்தலை. போலீஸ் லத்தி-ல முதுகுல கோலம் போட்டு காமிச்சாங்க .. அப்போதான் விஷயம் வெளிய வந்தது...", என்றவன் கணேஷ்...

"விநாயகம் மணிவேலோட பேரையம் செல்வாக்கையும் தப்பான வழில பயன்படுத்தறதா, ரொம்ப நாளா அமைச்சருக்கு சந்தேகம் இருந்தது... ஒருநாள் விநாயகத்தை கூப்பிட்டு விசாரிச்சு இருக்கார்.. அன்னான் தம்பி பேச்சு கைகலப்பில முடிஞ்சு அமைச்சர் மணிவேல் கட்டில் கால் - ல இடிச்சு அடிபட்டு இறந்துட்டார்... இதை எதிர்பார்க்காத விநாயகம்... சத்தமில்லாம அவரை படுக்க வச்சிட்டு, வேலைக்காரங்க கிட்ட "அண்ணன் தூங்கிறாரு, தொந்தரவு பண்ணாதீங்க"-ன்னு சொல்லி வெளிய போய்ட்டார்.. ராத்திரி அவர் கையாளான ட்ரைவரையும் கூட்டிட்டு , யாருக்கும் தெரியாம காம்பவுண்ட் எகிறி குதிச்சு உள்ள வந்து, பாடி-ய டிக்கில வச்சுட்டாங்க.. இவர் அண்ணனா நடிக்க ஆரம்பிச்சார்.. அந்த வேஷம் பழகத்தான் உடம்பு சரியில்லை, சன்னியாசம் போறேன் ட்ராமா-ல்லாம் ..."

"அடுத்த நாள், ட்ரைவர் பாடிய திருவண்ணாமலை பக்கத்துல இருக்கிற இவங்க செங்கல் சூளை -ல போட்டு எரிச்சிட்டான்... "

"இதெல்லாம் விநாயகம் சொன்னது... "

"இப்போ லேட்டஸ்ட் நியூஸ் ... ட்ரைவரை பிடிக்கனும் -னு நாங்க பேசிகிட்டு இருக்கும் போதே ஒரு பிளாஷ் நியூஸ்.. .. ரெண்டு மணி நேரம் முன்னாலேயே, ட்ரெய்லர் -ல அடி பட்டு அவன் இறந்துட்டான்-ன்னு "

"ஓ மை காட் "

"எஸ்... எதிரி நம்மை விட வேகமா இருக்கான்,"

"யார் அவன் ?"

^^^^***************&&&&&&&&**********************&&&&&&&&&&&&&^^^^^^

சூரிய வணக்கம்

என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா,
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!

காதல் கொண்டனை போலும்மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்.

-மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top