UNT _10-2

#1
ஹாய் நட்புக்களே...

இதோ அடுத்த 10வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்..முந்தைய அத்தியாயத்திற்க்கு உங்கள் அன்பையும் கருத்தையும் கூறியதற்கு ரொம்ப நன்றி....இந்த அத்தியாயத்திற்க்கும் உங்கள் அன்பையும் கருத்தையும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கேன்...:):)
6.jpg

பாருடா அந்த மாப்பிள்ளை ரொம்ப நல்லவருதான் போல லட்சுமி நான் ஒரு நாள் பார்க்கனும் -ஜாணவி

அம்மா தாயே நீ சும்மா இரும்மா இங்க ஒருத்தவங்களுக்கு வயிறு, காது, வாய்ல இருந்து புகையா வருது –கிருஷ்ணன்

என்ன..யாருக்கு..எதுக்கு புகை ? –ஜாணவி

அதுஒண்ணும் இல்ல ஜாணவி அவன் பயத்துல எதோ ஒலறுறான் வேற ஒண்ணும் இல்லை -ராகவன்

அவனை பார்த்து சிரித்துக்கொண்டே,” மாப்பிளை ராகவா நான் ஒலறுறேனா”- கிருஷ்ணன்

டேய் நீ என்ன அப்பா கிட்ட பேச சொன்னில நான் பேசிட்டு வரேன்.-ராகவன்

கிருஷ்ணன்,”வெற்றி இனிமே உங்களுக்கு இந்த ஊரு வேண்டாம்..எந்த பிரச்சனை வந்தாளும் நாங்க பார்த்துக்கிறோம்”உங்க வாழ்க்கையையும் படிப்பையும் மட்டும் பாருங்க சரியா என கூறினான்.

டேய் அப்பா கிட்ட பேசிட்டேன்..அப்பா இவங்கள இப்ப 4 மணிக்கு ஒரு விமானம் இருக்காம் அதுலா அனுப்பி வைக்க சொல்லுறாரு...அங்க எல்லாத்தையும் அப்பாவே பார்த்துக்குவாரு.-ராகவன்

அப்ப இப்பவே கிளம்புனாதான் சரியா இருக்கும் –கிருஷ்ணன்

ஆமாடா சீக்கிரம் இரண்டுபேரும் கிளம்புங்க -ராகவன்

இரண்டு பேருக்கு இந்த ஊரை விட்டு செல்ல மனமே வரவில்லை இருந்தாலும் வேறு வழியில்லை என்பதால் மும்பை செல்ல தயாரகினர்.

அழுகையுடன் ஜாணவியின் அருகில் வந்த லட்சுமியை பார்த்து,”எனக்கு என்ன சொல்லுறதுனு தெரில லட்சு ஆனால் நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்மா.ஆனால் நீ சந்தோஷமா இருக்கனும் எங்கள பத்தியோ இல்ல உங்க அண்ணா பத்தியோ கவலை படாதா பத்திரமா போய்டுவா”.

சரி ஜாணவி நான் பத்திரமா இருப்பேன்.நீ கவலை படாதா.-லட்சுமி.

இருவரும் வசந்தா அருகில் வந்து,வசந்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்..”100 வருசம் சந்தோஷமா இருக்கனும்” என்று ஆசிர்வாதம் பண்ணினார் வசந்தா.

கிளம்ப தயாரனவர்களை பார்த்து,” ஒருநிமிடம் இருய்யா வெற்றி” என்றுசொல்லிவிட்டு உள்ளே சென்றார் வசந்தா.

இந்த அம்மா எங்க போது நேரம் காலம் தெரியாம..இவங்களுக்கு வேற டைம் ஆகுதுல”,என ஜாணவி நினைக்கும் போது உள்ளிருந்து வந்தார் வசந்தா.

கையில் வைத்திருந்த பையை லட்சுமியிடம் குடுத்தார்.ஆனால் அதில் பணம் இருப்பதை பார்த்த லட்சுமி அதை வாங்க மறுத்தாள்.

அம்மா உங்க அன்பு மட்டும் எங்களுக்கு போதும் –வெற்றி

என் அன்பு எப்பவும் உங்களுக்கு இருக்கும்.ஆனால் இந்த பணத்தை உங்க கல்யாணத்திற்க்கு பயன்படுத்தனும்னுதான் வச்சிருந்தேன் அதனால் மறுக்காமா வாங்கிக்கோ வெற்றி.

வெற்றி சரினு ஒத்துக்கொண்டு பணத்தை வாங்கிகொண்டு வச்ந்தாவை பார்த்து “சொந்த அம்மா இருந்தா இதலாம் பண்ணிருப்பாங்கலானு தெரியலா அம்மா..ரொம்ப நன்றி அம்மா..என்று நெகிழ்ச்சியுடன்கூறினான்

என்ன நீ நன்றி எல்லாம் சொல்லுற எனக்கு கிருஷ்ணா எப்படியோ அப்படிதான்ய்யா நீயும் சந்தோஷமா இருங்க இரண்டு பேரும்...-வசந்தா.

சரி அம்மா நாங்க கிளம்புறோம்- வெற்றி.

“சரிய்யா பத்திரமா போய்டுவாங்க” என கண்கலங்கி பேசினார் வசந்தா...

இரண்டு பேரும் காரில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் கூட கிருஷ்ணனும் ராகவனும் சென்றனர்.

அவர்கள் கார் மறையும் வரை கையை ஆட்டி (டாடா) அவர்களை வழி அனுப்பி வைத்தனர்..ஜாணவியும் வசந்தாவும்....

...............

விமானநிலையத்தில்,

டேய் வெற்றி தங்கச்சியா நல்லா பார்த்துக்கோ..அப்புறம் உங்க படிப்பையும் நல்லாப்படியா முடிங்க...பத்திரமா இருங்க...அது மதுரை மாதிரி இருக்காது...தங்கச்சிய தணியா எங்கயும் அனுப்பிடாத புரியுதா....-கிருஷ்ணன்.

டிக்கெட்டை உறுதிப்படுத்திவிட்டு வந்த ராகவன்,”டேய் போதும்டா அதான் அங்க அப்பா இருக்காருல அவரு எல்லாம் பார்த்துப்பார் நீ அவங்க பயமுறுத்தாம இருடா...-ராகவன்.

ரொம்ப நன்றி இந்த உதவிய நாங்க எப்பவும் மறக்கமாட்டோம்...எனக்கு இப்படி நல்ல நண்பர்கள்,அம்மா,தங்கச்சி, நல்ல மனைவி னு கடவுள் எல்லாத்தையும் கொடுத்துருக்காருடா அதுக்கு காரணம் நீங்கதான்...ரொம்ப நன்றிடா....-வெற்றி

டேய் ரொம்ப பேசாத டைம் ஆகிடுச்சி கிளம்புங்க...அப்புறம்அங்க உங்கள கூப்பிட ஆள் வந்துருவாங்கா....சந்தோசமா இருங்கடா –ராகவன்

சரிடா போய்டுவாரோம் –வெற்றி

போய்டு வாரோம் அண்ணா என இருவரையும் பார்த்து கூறினாள் லட்சுமி...

அவர்களின் விமான பயணம் தொடங்கியது..

விதியின் பயணமும் அவர்களை தொடர்ந்தே சென்றது........

 

Advertisement

New Profile Posts

என் காதல் தீ 12 posted friends
precap irukku friends.. but konjam time aaagum
rev
Kavi sis dr enna aanaru? Uds podungappa...
@maliika manivannan mam iniku ud iruka