UNT-9-2

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் நட்புக்களே....

வந்துவிட்டேன்......சொன்ன மாதிரி வந்துடேன்.....இவ்வளவு நாள் காத்திருந்தற்க்கு ரொம்ப நன்றி...அப்பறம் இன்னைக்கு நான் நித்தியையும் ஹனியையும் கூட்டிடு வரல...வேறவங்கள கூட்டி வந்துருக்கேன்.......படிச்சிட்டு மறக்காம உங்க உங்கள் அன்பையும் கருத்தையும் சொல்லுங்கோ.........
download (6).jpg


லட்சுமியின் வீட்டில்,

இங்க பாரு ஒழுங்க அழுகாம நாளைக்கு கல்யாணமேடைக்கு வர …இல்லை வரனும் இல்லைனுவை அந்த வெற்றியை தடையமே இல்லாமல் ஆகிடுவேன் பிரியுதா என அதிகார தோரனையில் வந்தது சிவாவின் குரல்...

அதைக்கேட்டு அதிர்ந்துதான் நின்றாள் லட்சுமி.....

என்ன அப்படி பார்க்கிற நான் சொன்னத செய்வேன் தெரியும்ல....வேற எதாவது செய்யனும் நினைச்ச தொலைச்சுறுவேன் என சொல்லிவிட்டு சென்ற அண்ணனை கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள்..அப்பொழுது சரியாக உள்ளே வந்தாள் ஜாணவி

வாமா ஜாணவி உன் தோழிய பார்க்க வந்திய உள்ளதான் இருக்க போய் பார் –சிவா

சரி அண்ணா –ஜாணவி

ஒரு நிமிசம் என்று சிவா கூற அதே இடத்தில் நின்றாள் ஜாணவி

இங்க லட்சுமியோட தோழியா வந்தியா இல்ல தூது சொல்ல வந்தியா –சிவா

அய்யோ அண்ணா என்ன இப்படி சொல்லிடிங்க..நான் அப்படிலாம் செய்வேனா என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னால் ஜாணவி

அப்படி எதுவும் இல்லைனா சந்தோஷம் தான் ....போ போய் உன் தோழிய பாரு என சிவா சொன்னவுடன் விட்டால் போதும்டா சாமி என்று அந்த இடத்தை காலி செய்து லட்சுமியை பார்க்க சென்றாள்..

ஏய் லட்சுமி ஏன் இப்படி உக்கார்ந்துருக்கா...முதல அழுகுறத நிறுத்து.இப்படி அழுத எதுவும் சரியாகது... ஜாணவி

எனக்கு அழுகுறத தவிர என்ன பண்ணுறதுனு தெரியல....-லட்சுமி

சரி நீ அழுதுகிட்டே இரு...எல்லாம் சரியாகிடும் சரியா நான் வரேன்..-ஜாணவி

ஏய் என்ன நீயும் என்ன விட்டு போற.... போங்க எனக்கு யாரும் வேண்டாம் போங்க...-லட்சுமி

அப்படிலாம் இல்லமா...-ஜாணவி

இல்ல நீ போ நான் என்ன பார்த்துகிறேன் –லட்சுமி

அதே இடத்தில் ஜாணவி நிற்பதை பார்த்த லட்சுமி, போனு சொல்லுறேன்ல போ இங்க இருந்து என கத்த,ஜாணவி சென்றுவிட்டாள்.

வீட்டை விட்டு வெளியில் வந்து ஜாணவி, ரொம்பதான் பண்ணுறாங்க இரண்டு பேரும்...நல்லதுக்கு இங்க காலம் இல்லை..எல்லாம் எப்ப பார்த்தாலும் நம்மலே திட்டுறாங்க ...கடவுளே யாரு என்ன திட்டுனாலும் பாரவாயில்லை இவங்க இரண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து வைச்சுடு நான் அந்த வெற்றிக்கு மொட்டை போடுறேன் சரிய்யா என தனியா அந்த ஆண்டவனிடம் சொல்லிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்..

அந்த பக்கம் வந்த ராகவன்,என்ன இவ தனியா பேசிகிட்டு போறா இல்ல யாரவது பக்கத்தில இருங்களா என்ன என்று நன்றாக ஒரு தடவை பார்த்து விட்டு ஜாணவியின் அருகில் சென்றான்

ஹாய் ஜாணவி குழந்தை என்ன தனியா போய்கிட்டு இருக்க அதுவும் தனியா பேசிக்கிட்டு வேற என்ன பிரச்சனை – ராகவன்

ஏய் நான் ஒன்னும் குழந்தை இல்லைனு எத்தனை தடவை சொல்லுவேன் –ஜாணவி

ஆதலாம் தெரியாது நீ குழந்தைதான் என்று சொன்ன ராகவனை பார்த்து முறைத்தாள் ஜாணவி

சரி முறைக்கதா ஏன் தனியா பேசிக்கிட்டு போற எதாவது பிரச்சனையா உனக்கு....ஐ மீன் எதாவது லவ் கிவ் – ராகவன்

உனக்கு என்ன பார்த்தா எப்படி தெரியுது -ஜாணவி

அதான் இப்பதான சொன்னேன் அதுக்குள்ள மறந்துட்டியா –ராகவன்

ஏய் எங்க இருந்துடா வருவிங்க என்ன வம்பிழுக்கனும்னு மரியாதையா போய்டு அப்பறம் கோவத்தில் என்ன பண்ணுவேன் தெரியாது –ஜாணவி

நீ எதுவும் பண்ண வேண்டாம் உங்க வீடு வந்துருச்சி வீட்டுக்குள்ள போ...அப்பறம் தனியா பேசிகிட்டு இனிமே நடந்து போகத..புள்ள பிடிக்கிறவன் வந்து பிடிச்சுடு போய்ற போறான் –ராகவன்

அவள் அடிக்க கல்லை தேடும் போது அவன் அந்த இடதை காலி செய்திருந்தான்

“ஒடி போய்டியா ஒரு நாள் சிக்குவ என் கிட்ட அப்ப இருக்கு உனக்கு”, என ஜாணவி சொல்லிவிட்டு வீட்டிற்க்குள் நுழைந்தாள்

வெற்றிக்கு மொட்டை போடுறதுக்கு பதிலா இந்த ராகவனுக்கு போடுறேன் கடவுளே அவங்கள சேர்த்து வைச்சுடு.....

ஏய் இந்த இராத்திரில தனியா போய்டு வார .எங்க போனாலும் சீக்கிரம் வரனும்னு தெரியாதா..?? –வசந்தா

“அம்மா உனக்கு இப்ப என்ன பிரச்சனை” என பொரிய ஆரம்பித்தாள் ஜாணவி

சின்ன பிள்ளை தனியா போய்டு வாரனு சொன்னேன் அதுஒரு குத்தமா –வசந்தா

என்ன சின்ன பிள்ளையா எருமை மாடு மாதிரி வள்ர்ந்திர்க்க அறிவில்லையானு காலைல தான சொன்னா அதுக்குள்ள நான் உனக்கு குழந்தையா...என்ன நினைச்சிகிட்டு இருக்கிங்க எல்லாரும் –ஜாணவி

நான் என்ன சொல்லிட்டேன் இப்படி குதிக்கிற... –வசந்தா

இவங்க பேசுறதுல சரியா நம்ம பேசுறது மட்டும் தப்பாம் –ஜாணவி

ஏய் ஜாணவி ஏன் இப்ப கடுகு போட பொரிஞ்சி தள்ளுற மாதிரி பேசுற...வா வந்து சாப்ட்டு தூங்க போ –வசந்தா

எனக்கு சாப்படு வேண்டாம் எதுவும் வேண்டாம் நான் தூங்க போறேன் போ –ஜாணவி

தீடிர் தீடிர்னு இந்த பிள்ளைக்கு என்னதான் ஆகுமோ –வசந்தா

அதன் பிறகு வந்த கிருஷ்ணாக்கு சாப்பாடு போட்டு விட்டு அனைவரும் தூங்க சென்று விட்டனர்....

இரவு 1 மணி ஜாணவியின் வீட்டு கதவு படபட என தட்ட பட்டது

“யாரு இந்த நேரத்தில தட்டுறது” என மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் போது மறுபடியும் கதவு தட்டப்பட்டது

அய்யோ இருங்க வாரேன் என சொல்லிக்கொண்டு வசந்தா வருவதற்க்குள் கதவு தட்டபட்டுக்கொண்டுதான் இருந்தது.

ஜாணவி,கிருஷ்ணன் கூட யாரு இந்த நேரத்தில் தட்டுறது என எண்ணி தங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டனர்

வசந்தா கதவை திறக்க போக,”அம்மா இங்க வாங்க யாருனு நான் பார்க்கிறேன் என கிருஷ்ணா கூற வசந்தா விலக கிருஷ்ணன் கதவை திறந்தான்....

கதவை திறந்த கிருஷ்ணா அதிர்ச்சி அடைந்தான்.....அவன் மட்டும் இல்ல வசந்தா, ஜாணவியும் பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.......
 

New Posts

Advertisement

New Episodes