UNT-9 -1

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் நட்புக்களே....

வந்துவிட்டேன்......சொன்ன மாதிரி வந்துடேன்.....இவ்வளவு நாள் காத்திருந்தற்க்கு ரொம்ப நன்றி...அப்பறம் இன்னைக்கு நான் நித்தியையும் ஹனியையும் கூட்டிடு வரல...வேறவங்கள கூட்டி வந்துருக்கேன்.......படிச்சிட்டு மறக்காம உங்க உங்கள் அன்பையும் கருத்தையும் சொல்லுங்கோ.........
download (6).jpg


அத்தியாயம்-9

கண்ணை மூடி ஸ்டேசனில் அமர்ந்திருந்த கார்த்திக்கைப் பார்த்து,” கார்த்திக்” என கூறினான் சூரியா.

சூரியாவின் குரலை கேட்டு,”அண்ணா”என கூறி கண்ணை திறந்து பார்த்தான்..

அண்ணா என்ன ஆச்சி ஏன் உங்க கண் கலங்கிருக்கு....ஹனியும் நித்தியும் கண்டிப்பா கிடச்சுருவாங்கஅண்ணா-கார்த்திக்

எனக்கு தெரியும் கார்த்திக் அவங்க கண்டிப்பா கிடச்சுருவாங்க ஆனால் அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட சில விஷயம் சொல்லனும்ப்பா-சூரியா

சொல்லுங்க அண்ணா-கார்த்திக் கலக்கத்துடன் சூரியாவை பார்த்துக் கேட்டான்

இங்க வேணாம் கார்த்திக் வெளில போலாம் வா –சூரியா

சரி அண்ணா ஜீப்லே போலாம் வாங்க –கார்த்திக்

இருவரும் ஜீப்பில் அமைதியா வந்தனர்..கார்த்திக்,”என்ன சொல்ல போறாரு அண்ணா” என்ற கலக்கத்துடனும்.சூரியா,”.நம்ம சொல்ல போறத கார்த்திக் எப்படி எடுத்துக்குவன்” என்ற பயத்துடனும் பயணித்தனர்

ஜீப் வந்து நின்றது...ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில்.....அங்கு இருவரும் இறக்கி நடந்தனர்.இருவரும் எதுவும் பேசமல் அதே அமைதியை தொடர ஒரு கட்டத்தில் அந்த அமைதியை களைத்தான் கார்த்திக்

அண்ணா ஏதோ சொல்லனும் சொன்னிங்க ஆனா அமைதியா வாரிங்க –கார்த்திக்

ஒரு பெருமூச்சை விட்டு,கார்த்திக் நீ இப்ப வளர்த்துட்டா..ஒரு ஊரை கண்ரோல் பண்ணுற அளவுக்குபெரியவனா ஆகிட்ட ஆனாலும் நீ இப்பவும் எனக்கு சின்ன பையனா தான் தெரியுறா...சூரியா

சிரித்துக்கொண்டு, அண்ணா எப்பவுமே நான் உங்க குழந்தை தான்-கார்த்திக்

கார்த்தி இப்ப நான் சொல்லுறத நீ பொறுமையா கேளு..இதை நீ தெரிஞ்ச்சிக்க வேண்டியதும் கூட...-சூரியா

சொல்லுங்க அண்ணா என ஒரு சந்தோக பார்வையுடன் சூரியாவை பார்த்தான் கார்த்திக்.

சிறு யோசனையுடன் ஆரம்பித்தான் –சூரியா

அவங்க நம்மலும் பின்னாடி போலாம்.......அழகிற்க்கு மறுவார்த்தை அவளே என்று சொல்லும் மீனாட்ச்சி அம்மன் ஆட்சி நடத்தும் மதுரையில் அன்றயை பொழுது யாருக்கும் நான் காத்திருக்கமாட்டேன் என அழகாக விடிந்தது.....

இந்தா அய்யா கிருஷ்ணா எழுந்திரு..உன் கூட படிக்கிற வெற்றி தம்பி வந்திருக்கு –வசந்தா

போம்மா தூக்கம் வருது –கிருஷ்ண்ன்

எழுந்திரிய்யா உனக்காக காத்திருக்கு அந்த தம்பி –வசந்தா சொல்லிவிட்டு வெற்றிக்கு காப்பி எடுக்க சென்றுவிட்டார்

கொட்டாவியை விட்டுக்கொண்டு ரூமை விட்டு வெளியில் வந்து,என்னடா காலங்கத்தாலே வீட்டு பக்கம் தலையகாட்டுற என்ன விசியம் –கிருஷ்ணன்

அது வந்துடா –வெற்றிவேல்

என்னடா மறுபடியும் என் தங்கச்சி கூட சண்டை போட்டியா??-கிருஷ்ணன்

அண்ணா,அண்ணா.......என்று வேகமாக ஓடிவந்தா ஜாணவியை பார்த்து,ஏய் ஜாணு கால்லை ஓடிக்க போறேன் பாரு எத்தனை தடவை சொல்லுறது ஓடாத ஓடாதனு அப்பறம் இங்க வலிக்கு அங்க வலிக்குனு சொல்ல வேண்டியது.. –கிருஷ்ணன்

ஐய்யோ அதவிடு அண்ணா அதவிட முக்கியமான விசியம் –ஜாணவி

என்னா என்று இருவரும் பார்க்க,நம்ம லட்சுமிக்கு இப்ப நிச்சியதார்த்தம் நாளைக்கு கல்யாணம் –ஜாணவி

என்ன சொல்லுற நேற்றுதான் மாப்பிளை பார்க்குறாங்கனு சொன்னா அதுக்குள்ளயும் நிச்சியதார்த்தமா..?-கிருஷ்ணன்

ஆமா அண்ணா ஆனால் இதுல அவளுக்கு சம்மதம் இல்ல அவங்க பெரிய அண்ணாவோட ஏற்ப்பாடு இது,பாவம் அந்த புள்ள அழுகுது –ஜாணவி

என்னடா வெற்றி, இதலாம் உனக்கு தெரியுமா தெரியாதா..??-கிருஷ்ணன்

ம்ம்ம்ம் –வெற்றிவேல் தலையை ஆட்டினான்

என்னடா தலையை ஆட்டுற அவள் நீ காதலிச்ச பொண்ணுடா –கிருஷ்ணன்

அதலாம் துரைக்கு நியாபகம் இல்ல.....-ஜாணவி

நான் என்னடா பண்ணறது அவங்க அண்ணன் வந்து பேசுனாங்க....அவங்க சொல்லுறதும் சரின்னு தோன்னுச்சி-வெற்றிவேல்

அப்படி அவங்க அண்ணன் சொல்லுறத கேட்டு தான் நீ லட்சுமியை காதலிச்ச ?? –ஜாணவி

ஜாணவி என்ன பேசுற,அவன் உன்னவிட வயசுல மூத்தவன் மரியாதையா பேசு-வசந்தா

முவரும் அப்பொழுது தான் வசந்தா அங்கு இருப்பதை கவனித்தனார்

ஆமா மூத்தவன் பண்ணுற வேளையா இது..?? –ஜாணவி சலித்து கொண்டாள்

அடிகழுதை வாயைமூடு –வசந்தா

ஜாணவி வசந்தாவை முறைக்க,இங்கப்பாருய்யா வெற்றி, “ அவங்க அண்ணன் சொன்னாருனு நீ லட்சுமியை மறந்துடிய்ய....இல்லா வேற எதாவது இருக்கா....???-வசந்தா

இல்லை அம்மா வேற இதுவும் இ....இல்....இல்லை –வெற்றிவேல்

இங்க பாருய்யா நான் உன்ன பெத்து எடுக்கலேனாலும் உன்னயும் என்னோட பிள்ளையாதான் பார்க்கிறேன்..நீ எங்க கிட்ட ஏன் மறைக்கிற சொல்லுய்யா..?? –வசந்தா

அம்மா நான் நல்லாதான் இருக்கேன் –வெற்றி

ஆமா இவரு நல்லாதான் இருப்பாரு,இவரால தான் பலபேரு அழுதுக்கிட்டு கிடக்காங்க –ஜாணவி

என்டி வந்ததுல இருந்து அவனையே கரிச்சிக்கொட்டிகிட்டே இருக்க கொஞ்ச நேரம் வாய முடிகிட்டு அமைதியா இரு – வசந்தா

அப்பொழுது வெற்றியின் நண்பன் ராகவன் உள்ளே நுழைந்தான்,” அவள ஏன் திட்டுறிங்க அம்மா அவள் சொன்னதில் எதுவும் தவறு இல்லை..இவனால தான் அங்க ஒரு பெண் அழுதுகிட்டு இருக்கா..”

ஏன்டா நீயும் அவன திட்டுற...-கிருஷ்ணன்

இவன திட்டாம வேற என்ன கிருஷ்ணா பண்ண சொல்லுற,சாருக்கு மனசுல பெரிய தியாகினு நினைப்பு...லட்சுமி நல்ல வசதியா வாழனுமா அதுனால அவங்க அண்ணா சிவா சொன்னதும் சரினு சொல்லிட்டு வந்துட்டாரு – ராகவன்

என்னப்பா நடக்குது..?? –வசந்தா

ஆமா அம்மா, அவங்க சொந்தகாரங்கள யாரோ மாப்பிளையாம், நல்ல வசதியானவங்கதான் – கிருஷ்ணன்

ஏப்பா வெற்றி வசதியா முக்கியம்..வசதி இன்னைக்கு இருக்கும் நாளைக்கு போய்டும்...ஆனால் லட்சுமிக்கு உன்னாதான்ய்யா பிடிச்சுருக்கு..நீ அவள கல்யாணம் பண்ணுறதுதான் சரி..-வசந்தா

இல்லாம அவ வசதியா வாழ்ந்தவள்..ஆனால் நமக்கு அதுக்கும் தான் ஏனி வைச்சா கூட ஏட்டாதே...படிச்சு முடிச்சு ஒரு வேலைல நான் இருந்தா கூட தெரியாது ஆனால் நான் இன்னும் படிச்சி முடிக்க 6 மாதம் ஆகும்..என்னால எப்படிம்மா அவள நல்லா பார்த்துக்க முடியும் –வெற்றி

ஏன் அண்ணா அதலாம் காதலிக்கும் போது தெரியலையா என ஜணாவி கூற,வெற்றி அமைதியாவே இருந்தான்

இப்பா அவன குத்தம் சொல்லுறத விட்டுட்டு இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லுங்க -கிருஷ்ணன்

யாரும் ஒண்ணும்பண்ண வேண்டாம்..என்னை இப்படியே விட்டுறுங்க – வெற்றி

ஆமா அப்படியே இவரு சொன்னது அப்பிடியே கேட்டுக்கோங்க 2 பேரும் என ஜாணவி கோபமாக சொல்லிவிட்டு அவளுடைய அறைக்குசென்று விட்டாள்

“நான் போய்டு வாரேன் அம்மா” ,என்று சொல்லிவிட்டு வெற்றி செல்ல, “என்னடா இவன் நம்ம இவ்வளவு சொல்லியும் கேக்காம போறான்” –ராகவன்

சரிடா அவன விட்டுதான் பிடிக்கனும் வா நம்மளும் போலாம் –கிருஷ்ணன்

ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிற அந்த பிள்ளைகளை ஒன்னா சேர்த்து வைச்சிடு என அவரால் கடவுளிடம் வேண்டதான் முடிந்தது...கிருஷ்ணன்,ராகவன் வெற்றிவேல் முவரும் கல்லூரியில் இருந்து நண்பர்களாகினர்....

கிருஷ்ணன், ஜாணவியின் அம்மா தான் வசந்தா...வசந்தாவின் கணவர் ஒரு ஆக்ஸிடன்டில் இறந்துவிட்டர்..அதன் பிறகு குடும்பதையும் வழி நடத்தி, தனியாளாக நின்று இருவரையும் படிக்க வைத்து ஆளாக்கினார்..

கிருஷ்ணன் பி.காம் 3வது வருடம் படிக்கிறான்.ஜாணவியும் கிருஷ்ணன் படிக்கும் அதே கல்லூரியில் முதல் வருடம் பி.ஸ்சி கணிதம் படிக்கிறாள்..

இப்போது வசந்தா தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கு எந்த வேறுபாடும் பார்த்தது இல்லை...அவர்களின் ஆசை எப்போது தடை விதித்ததும் இல்லை..

ராகவன் மும்பையில் பிறந்து வளர்ந்து தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தான்..அதான் பிறகு அவனுடைய தாத்தா பாட்டியுடன் தங்க வேண்டும் என ஆசை பட்டு மதுரைக்கு வந்து தன்னுடைய கல்லூரி படிப்பை தொடர்கிறான்...அவனுடைய அப்பா ராஜலிங்கம் பிஸ்னஸ் பண்ணுவதற்காக மும்பையில் வந்து செட்டில் ஆகிவிட்டார்...

என்னதான் மும்பையில் இருந்தாலும் தமிழ் கலாச்சாரம் தன் பையன்க்கும் தெரிய வேண்டும் என்றும்,தன் பையன் ஆசை பட்டதாலும்,ராகவனை மதுரையில் போய் படிக்க அனுமதித்தார்..

வெற்றிவேல்...சிறுவயதில் இருந்து தன்னுடைய தாத்தா மற்றும் பாட்டியிடம் வளர்ந்தான்..அவனுடைய அப்பாவும் அம்மாவும் வசதியான வாழ்க்கை இல்லை என்று கூறி விவாகரத்து வாங்கி அவரவர் வாழ்க்கையில் பயணத்தை தொடர யாரும் இல்லாமல் நின்ற வெற்றியை அவருடைய தாத்தா,பாட்டித்தான் வள்ர்த்தனர்...

படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும் என சொல்லி சொல்லி வளர்த்தார் அவருடைய தாத்தா..ஆதனாலோ என்னவோ வெற்றி படிப்பில் படுசுட்டியாக இருந்தான்..அவன் கெட்டநேரம் தான் சொல்ல வேண்டும், அவனுடைய பாட்டி இறந்த ஒரு வருடத்தில் அவனுடைய தாத்தவும் அவனுடைய 18 வயதில் இறந்து விட்டனர்..


யாரும் இல்லாமல் மறுபடியும் நிற்க ....அவனுடைய படிப்பு அவனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது...ஆம்,அவன் 12வது வகுப்பில் அதிக மதிபெண் எடுத்ததால் பணஉதவி செய்து படிக்க வைத்தார் அவருடைய தாத்தாவின் நண்பர் ஒருவர்..அவன் கல்லூரிக்குள் அடிஎடுத்தும் வைத்தான்.....வசந்தாவின் செல்லபிள்ளை என்று கூட சொல்லலாம்

லட்சுமி ஜாணவியின் சிறு வயது தோழி...கல்லூரியிலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது....

லட்சுமிக்கு இரு அண்ணன்கள்.....வசதியான குடுபத்து பெண்.....லட்சுமியும் அதே கல்லூரியில் பி.ஸ்சி கணிதம் தான் படிக்கிறாள்...

ஜாணவியின் மூலம்தான் வெற்றிக்கு லட்சுமியை தெரியும்...

அதன் பிறகு நண்பர்களாகி காதலர்களாக மாறி இப்பொழுது தங்களின் பிரிவை எண்ணி வருந்த்திக்கொண்டு இருக்கிறனர்...

.......................


 

Advertisement

New Episodes