"உங்களால் என்னை நெருங்கவே முடியாது , அது மட்டும் அல்லாது இன்னும் ஒரு வருடம் தான நான் கொடுத்த வாக்குகாகவும், என் பாட்டிக்கி நீங்கள் செய்த உதவிக்காகவும் நான் கண்டிப்பா உங்கள் மனைவியாக நடிப்பேன். நீங்கள் கவலை படதேவை இல்லை" என்றாள்.
அவளுடைய முகத்தை கூர்ந்து நோக்கியவன் "நான் முழுவதுமாக சொல்லி முடித்த பின் நீ பேசலாம், எனக்கு இப்படி குறுக்கே பேசுவது பிடிக்காத ஒன்று இதை உன் மூளையில் நன்கு பதிந்து கொள். பின், அம்மாவுக்கு நம் போலி திருமணம் பற்றி எப்போதும் தெரிய கூடாது, அம்மா முன்னாடி நீ என்னுடன் என் மனைவியாக உரிமையுடன் நடந்து கொள்ள வேண்டும் " என்று அழுத்தமாக சொல்லி முடித்தான்.
அவன் சொல்ல சொல்ல கோபம் கனன்று கொண்டு வந்தது அவளுக்கு. இவனுக்கு நான் என்னமோ அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போல் பேசுகிறான். இருந்தும் அவன் அம்மாக்காக அவள் இவன் சொல்லுவதுக்கு எல்லாம் ஒத்து கொண்டாள்.
பின், அவனிடம் திரும்பி "வந்து நான் வேலைக்கு போகவா, எப்படியும் நான் ஒரு வருடம் தான் இங்கு இருப்பபேன் அதன் பின் வேலைக்கு தேடி அலைய வேண்டும், அதனால் இப்பொழுதே நான் செல்கிறேன்" என்றாள்.
அவன் அழுத்தமாக ஒரு பார்வையுடன் " இங்கு பார் சுமி நீ இங்கு வந்திருப்பது என் அம்மாக்காக அவர்களை நீ நன்றாக பார்த்து கொண்டாள் போதும், உன் எதிர்காலத்துக்கு நான் கண்டிப்பா ஒரு வழி செய்வேன் என்ன புரிந்ததா" என்றான். அவளுக்கும் அவன் இப்படி சொல்வான் என்று ஒருவாறு யூகித்து வைத்திருந்தால்.
பின் அவனிடம் "நான் இந்த அறையில் தான் தங்க வேண்டுமா" என்றாள். அவன் அவளிடம், "ஆம், சுமி நீ என்னுடன் இந்த அறையில் தான் இருக்க வேண்டும் , வேலைக்காரர் யாராவது பார்த்து அம்மாவிடம் சொல்லிவிட்டால் அம்மாக்கு சந்தேகம் வரும், பின் நம் திட்டம் பயன் இல்லாது போய் விடும்." என்றான்.
அவளுக்கும் அவன் சொல்லுவது சரி என்று தான் பட்டது, இருந்தும் அவன் கூட ஒரே அறையில் இருப்பது அவளுக்கு கொஞ்சம் தயக்கம் வந்தது,
நெருக்கமாக வந்த மூச்சுகாற்றில் நிமிர்ந்தவள், இரண்டடி பின் சென்று சுவறொடு ஒட்டி நின்றாள். அவள் கண்களை பார்த்து கொண்டே அவளை நெருங்கி அவள் இருபுறமும் கையை சுவத்தோடு வைத்து, அவள் முருண்டு விழித்த கண்களை பார்த்து " பயப்படாதே உன் கூட குடும்பம் நடத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை, சோ நீ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை பேபி" என்றான்.
அவளும் பயத்தோடு சரி என்று தலை அசைத்தாள். அவளுடைய முகத்தை கண்டு சிறு சிரிப்புடன் வலக்கினான். அவன் விலகிய பின் தான் அவளுக்கு சுவாசம் சீரானது.
பின் இயல்பாக ஒன்றும் நடவாது போன்று அவளிடம்" இந்த
வாங்க, போங்க இப்படி எல்லாம் அழைப்பதை விடுத்து, என் பெயர் சொல்லி அழை" என்றான்.