எவ்வளவு நேரம் அழுதாலோ களைப்பில் உறங்கியவள் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள். அவளுக்கு தெரிந்தது அது யாரு என்று அதனால் பதட்டம்படாமல் கதவை திறந்தவளின் கழுத்தை வலிய கரம் ஒன்று பிடித்து சுவச்சோடு பிடுத்து இறுகியது. அப்பொழுது அவன் கண்களை கண்ட பெண் அவள் நடுங்கி நின்றாள். அவள் கண்களில் இருந்து வந்த பயத்தில் தன் பிடியை தளரத்தினான் அக்காளையன்.
அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்து தன் தலை முடியை கோதி தன் கோபதை கட்டு படுத்தி கொண்டு அவளை பார்த்து
"நீ இப்பொழுது என்னுடன் கிளம்பி வர” என கட்டளையை இட்டான்.
அவனை சலனமே அல்லாது ஒரு பார்வை பார்த்து கொண்டு , "முடியாது" என்று கூறினாள். கோபதில் அவள் முகத்தை திருப்பி "இந்த முடியாது என்ற சொல்லை ஒரு வருடத்துக்கு உன் வாயில் இருந்து வரக்கூடாது" என்று சொல்லி அவள் முகத்தில் இருந்து கையே எடுத்து ஒரு புன்னகை முகம் கொண்டு தன் கையோடு கொண்டு வந்த பத்திரதை நீட்டினான். அதை கண்டு முகம் இறுக நின்றாள் சுமி.
"இந்த பத்திரத்தில் என்னுடன் ஒரு வருடம் மனைவியாக வாழ ஒத்துக்கொள்வதாக சம்மதம் என்று கையோப்பம் போட்டதாக நியாபகம்" என்றான்.
ஆம் , போட்டாள் அப்பொழுது அவளுக்கு அவள் பாட்டி உயிர் தான் முக்கியமாக தெரிந்தது. அவனையும் குறை சொல்ல முடியாது மருத்துவ தேவைக்கு அதிகமாகவே பணம் தந்தான், அது மட்டுமா இந்த பத்திரம் ஒன்று அவள் அப்போ யோசித்தது, இருந்தும் பாட்டி உயிர் கண்ணுக்கு தெரியவே அவள் அதில் கையெழுத்து போட்டாள்.
"என்ன உன் அத்தான் நினைவு வந்தது போல" என்று பாரதி சொல்லவும்
அப்பொழுதுதான் தனக்கு அப்படி ஒரு சொந்தம் இருப்பதும் அவள் நினைவுக்கு வந்தது போல் ஒரு விரக்தி புன்னகை முகத்தில் தோன்றி மறைந்தது. இந்த நிலையில் அவளுக்கு அவனுடன் திருமணம் வேறு பேசிய போது
"என் சுமி நான் அவளை வாழ வைப்பான்" என்று வசனம் பேசினான்.
அவளுக்கும் அவனை கட்டுவதில் எந்த விதமான குறையும் இல்லை, அது மட்டும்அல்லாது பாட்டியோட இருக்கலாம். அவனுக்கும் சொந்தம் யாரும் இல்லை, பாட்டியோட உறவு என்றதால் கட்டிக்க ஒத்துக்கொண்டாள். ஆனா நடந்தது வேறு துபாயில் வேலை வாய்ப்பு இருக்கிறது, என் நண்பனுடன் தொழில் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று அவன் சொல்லும் போது
"சுமிய கல்யாணம் செய்து கொண்டு போ"என பாட்டி சொன்னபோது, அவன் சரி என்று தலை ஆட்டவும் இவள்தான் வேண்டாம் வந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள்.
பின், நிகழ் காலத்துக்கு வந்தவள் அவனிடம் திரும்பி "இன்று மாலை நான் வருகிறேன்" என்றாள். அவன் நம்பாத பார்வை பாக்கவும் " வீட்டை காலி செய்துவிட்டு வர வேண்டும்" என்றாள். அவன் கூர்மையான பார்வையை அவளிடம் செலுத்தி சென்றான். அவன் பார்வையில் நீ கண்டிப்பாக வர என்ற சேதி இருந்ததை அவள் அறியாமல் இல்லை.