Thuli Maiyal Konden-13

Advertisement

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
இதுவரை கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்குமே நன்றி பிரண்ட்ஸ்..நேரமின்மையால் கருத்துக்களுக்கு இன்றும் பதிலளிக்க இயலவில்லை.பட் படிச்சிட்டேன்..இன்னைக்கு ud போட்டாச்சு.உங்க கருத்துக்களை எதிர்பார்க்கறேன்.நன்றி.

துளி மையல் கொண்டேன்-13

காலை எட்டு மணி

தன் படுக்கைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி,இன்னும் தூங்கிக் கொண்டிருந்தவளையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பார்வையில் ரசிப்புத்தன்மை கிஞ்சித்தும் இல்லை.எப்போதுதான் எழுந்துகொள்வாள் என்ற எண்ணம் மட்டுமே பிராதனமாக இருந்தது.நேரம் கடந்துகொண்டிருந்ததில்,இதற்கு மேல் முடியாது என்பது போல,

“வல்லி”என்று அழைத்தான்.

அவளிடம் அசைவில்லை.

“வல்லி”மீண்டுமொருமுறை அழைக்க,குரல் தெளிவாக கேட்டாலும்,வேறு யாரையோ பேர் சொல்லி அழைக்கிறார்கள் என்ற நினைப்பில் கண்ணை திறக்க மறுத்தாள்.

தலை முழுவதும் மூடியிருந்த போர்வையை விலக்கியவன்,”வல்லி”மீண்டும் அழைக்கவும் மிகவும் சிரமப்பட்டு கண்ணை திறக்க முயற்சி செய்தாள்.

அவளின் கருவிழி வெகுநேரமாய் அசைவதை உணர்ந்தவன்,அவளது நெற்றியை தொட்டுப் பார்க்க,காய்ச்சலின் அறிகுறியில் அதிர்ந்து போனான்.

“வல்லி..எழுந்திரு,ஹாஸ்பிட்டல் போகலாம்”அவள் கன்னத்தை தட்டி எழுப்பவும்,உணர்வு வந்தவள் கண்ணை திறந்ததும் வெகு அருகில் கணவன் முகத்தைக் காணவும்,

“என்னாச்சு”என்றாள்.

“உனக்கு பீவர் மாதிரி இருக்கு”

“ஓ”-என்றவள் கன்னத்தை தொட்டுப் பார்த்தாள்.லேசான சூடு தான்.

“ஹாஸ்பிட்டல் எல்லாம் வேண்டாம்.டேப்லெட் வைச்சிருக்கேன்.அதிலையே சரியாகிடும்”அவனை தாண்டி எழுந்து சென்றவளால் இரண்டடி எடுத்து வைக்க முடியவில்லை.

தலை சுற்றவும் அப்படியே மடங்கி அமர்ந்தாள்.

“என்ன பண்ணுது”பதறிப்போய் கேட்கவும்,

“ஒண்ணுமில்ல”என்றவள் அவன் அணைப்பிலிருந்து விலகி,மெதுவாய் எழுந்து,உள்ளங்கைகளை நன்றாக இறுக மூடியபடி எழுந்தவள், பாத்ரூம் நோக்கி சென்றாள்.

அரவிந்திற்கு சொல்ல முடியாத வருத்தம்,ஆற்றாம, கோபம் எல்லாம் ஒன்றாக கலக்க,படுக்கையில் அமர்ந்தான்.சில நிமிடங்களுக்கு பிறகும் மனைவி வராதிருக்க,குளியலறைக்குள் நுழைந்தான்.

கண்ணாடி தடுப்பினுள்ளே அவள் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தது தெளிவாகவே தெரிந்தது.

அவசரமாய் கதவை திறந்துகொண்டு உள்ளே போனான்.

அவனின் அரவத்தில் கண்ணைத்திறந்து பார்த்தவளின் எண்ணவோட்டம் என்ன என்பதை கொஞ்சம் அவனால் கணிக்கவே முடிந்தது.

“நமக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருக்க போறதில்ல.இன்க்ளுடிங் செ*ஸ். அதனால அதையே நினைச்சிட்டு என்னை வில்லன் மாதிரி பார்க்காத”என்றவன்,

“பிரஷ் பண்ண ஹெல்ப் பண்ணவா?”என்றான்.

அவளின் அனுமதி இல்லாமலையே அவளின் பேஸ்ட் எடுத்து கொடுத்து உதவியவன்,அவள் முகம் அலம்பவும்,அவளின் இரு தோள்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டு,”நடக்க முடியலைன்னா,என் மேல சாஞ்சுக்கலாம்.தப்பில்ல”என்றவன்,அவளை தன் மேல் சாய்த்துக்கொண்டு மிகவும் மெதுவாய் அந்த குளியலறையிலிருந்து வெளியே வந்து,படுக்கையில் அவளை அமர வைத்தான்.

“டேப்லெட் வைச்சிருக்கியா?”

“ம்ம்.பேக்ல இருக்கு”எனவும் எங்கே என்று கேட்டு எடுத்தவன்,மாத்திரை லோ டோசெஜ் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,

“சாப்ட ஏதாவது எடுத்துட்டு வர்றேன்”மாத்திரையையும் கையோடு எடுத்துக்கொண்டே போனான்.

வேதாவிடம் எதுவும் சொல்லவில்லை.சரசம்மாவிடம்,”கஞ்சி வைச்சு கொடுங்க.எனக்கான டிபனையும் கொடுத்து விடுங்க”என்றவன் சுடுதண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தான்.

விழிமூடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளிடம்,”கொஞ்சம் வெயிட் பண்ணு.கஞ்சி கொண்டு வர சொல்லியிருக்கேன்”என்றவனது அக்கறை அவன் மீதான பயத்தை கொஞ்சம் விலக்கியிருந்தது.

பயமா?மயூவிற்கா?-கேள்வியெல்லாம் வேண்டாம்.

கணவனாக அவன் உறவை ஏற்றுக்கொள்வதற்கு அவள் பயந்திருந்தாள்.அந்த பயம் தான் கொஞ்சம் விலகியிருந்தது.

“திடீர்னு எப்படி காய்ச்சல் வந்துச்சு?”விசாரணையை தொடங்க,

“ரெஸ்ட்லஸ்”என்றாள்.

“கூடவே ரெண்டு நாள் பட்டினியும்,பசியும் சேர்ந்துடுச்சு! சரியா?”

“ம்ம்”

“சாப்பாடு விஷயத்தில கூச்சப்படணும்னு அவசியமில்ல.நீ சாப்பிடறது உன் புருஷனோட காசு தான்.நல்ல இதை பதிய வைச்சுக்கோ!!”என்றவன்,

“என்னையும் தான்!!”என்றான்.

“சரி”

“எது?என்னையும் மனசில வைச்சுக்கறியா?”அவளுக்கு முடியாத நிலையிலையும் அவன் வம்பழக்க துவங்கியிருக்க,

“ம்ம்”சோர்வாக சொல்லவும்,அவளின் நிலை பாவமாக தெரிய அமைதியாகிவிட்டான்.

அறைக்குள் வெளியே அவனுக்கு வேண்டிய உணவு பதார்த்தங்களை வேலையாள் வைத்துவிட்டு போனதன் அடையாளமாய்,பெல் அடிக்க,கதவை திறந்து,ட்ரேயை தள்ளிக்கொண்டு வந்தான்.

“உனக்கு கஞ்சி”சூடாக இருந்ததில் ஸ்பூன் போட்டுக் கொடுக்க,கட்டிலை விட்டு எழுந்துகொள்ள முயற்சி செய்தாள்.

அவன் தடுக்கவில்லை.அவளுக்கு உதவியவன் சோபாவில் அமர வைத்து கஞ்சியை கொடுக்க,மிச்சமில்லாமல் ஸ்பூனில் அள்ளி உண்டுவிட்டாள்.ஏதோ தெம்பு வந்தது போலிருந்தது.

அவள் ஆசுவாசமாய் அமர,தனக்கு இட்லிகளை எடுத்து வைத்தவன்,”எனக்கு கரெக்ட் டைம்-க்கு எல்லா வேலையும் செய்தாகணும்.பசி,பட்டினில கிடக்கறதெல்லாம் என்னால முடியாது.சாப்பிட கொஞ்சம் லேட் ஆனாலும் தலைவலி வந்துடும்...அதுவும் இன்னும் சாப்பிடலையேன்னு நினைச்சு நினைச்சே தலைவலி வர வைச்சுக்குவேன்”எனவும் முதல்முறை அவளிடம் லேசாக புன்னகை துளிர்க்க,அதை ரசித்தவன்,

“வேலை செய்ய தெம்பு வேணும்!! அதனால நோ ரெஸ்ட்ரிக்ஷன்”என்றவன் அனாயாசமாய் பத்து இட்லியை காலி செய்துவிட்டிருக்க,அதுவே அவனுக்கு அரைவயிறு தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ட்ரேயை வெளியில் கொண்டு போய் வைத்துவிட்டு,

“இப்போ போடு”மாத்திரையை கொடுக்க,விழுங்கிக் கொண்டாள்.

“அம்மா இன்னைக்கு நம்ம கிராமத்து வீட்டுக்கு போறாங்க.அவங்களால ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது”

“ஏன்?”

அவளின் ஒரு வார்த்தை கேள்வி பதில் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் வலுக்கட்டாயமாய் எரிச்சலை கட்டுப்படுத்தினான்.

“பழங்கள் எக்ஸ்போர்ட் பிசினெஸ் செய்யறாங்க.தன்னோட பொழுது போக்கும் நாலு பேருக்கு உதவறதா இருக்கணும்னு இதில இறங்கிட்டாங்க”

“நானும் அவங்களோடவே போகட்டுமா?”

“யோசிச்சு சொல்றேன்.இப்போ நீ தூங்கு.நைட்டெல்லாம் என்னையவே பார்த்துட்டு ,என்னைப்பத்தியே யோசிச்சு தூக்கத்தை தொலைச்சிருக்க?”கிண்டலாய் சொன்னவன்,

அவள் முகத்தருகே சென்றவன்,”நமக்குள்ள நேத்து சம்திங் சம்திங் நடந்திருந்தா கூட நீ அசதியில தூங்கியிருப்ப!! இப்போ பார்,தேவையில்லாம அதையே யோசிச்சுட்டு,காய்ச்சல் வந்துடுச்சு!!! நேத்து ரிஸ்க் எடுத்திருக்கலாமோ”-அவள் கண்களை ஊடுருவி கேட்டுவிட்டு,அவளின் திகைத்த பாவனையை ரசித்தவன்,

“தூங்கு.நான் மூணு மணி நேரம் கழிச்சு தான் வருவேன்.ஸ்லீப் வெல்”சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.
 
Last edited by a moderator:

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
மயூவிற்கு மேற்கொண்டு எதுவும் யோசிக்க முடியவில்லை.சோபாவிலையே சுருண்டுவிட்டாள்.

சரியாய் இரண்டு மணி நேரம் கழித்து அரவிந்த் உள்ளே வரவும்,அவன் மனைவி துயில் களையவும் சரியாய் இருந்தது.

எழுந்து அமர்ந்தவளின் நெற்றியை தொட்டுப் பார்த்தவன் சூடு குறைந்திருக்க,”ஹாஸ்பிட்டல் போகலாமா?”அவளின் உடல்நலனை கருத்தில் கொண்டு கேட்க,

“சரியாகிடுச்சு”என்றவள் இப்போது தெம்பாகவே,தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றவள்,வெளியிலிருந்த கதவை மறக்காமல் பூட்டிக்கொண்டே உள்ளே போனாள்.

அவள் குளித்துவிட்டு வரவும்,”அம்மா வெயிட் பண்றாங்க.நீயே ஊருக்கு போறதை கேட்டுக்கோ”எனவும் பின் தொடர்ந்தாள்.

நிச்சயம் அம்மாவிடம் எதுவும் கேட்கமாட்டாள் என்று நம்பியே அரவிந்த் அழைத்து செல்ல,”இப்போதான் உனக்கு காய்ச்சல்ன்னு சொல்றான். உடம்புக்கு எப்படியிருக்கு?”மருமகளிடம் வேதா அக்கறையாய் கேட்க,

“நல்லாயிருக்குங்கத்தை..நானும் உங்க கூடவே ஊருக்கு வரட்டுமா?”பட்டென்று கேட்க,லேசாய் அதிர்ந்தாலும்,

“ம்மா,இவளுக்கு என்னைவிட உங்களை தான் ரொம்ப பிடிச்சிருக்காம்.நீங்களே கூட்டிட்டு போயிடுங்க”கிண்டலாய் என்றாலும் உண்மையை தான் சொன்னான்.

“அதுக்கென்ன தாராளமா கூட்டிட்டு போறேன்.ஆனால் கூட நீயும் வரணும்! வரியா?”

“எனக்கு வேலையிருக்கு.நான் எப்படி வர முடியும்?”சிரித்துக்கொண்டே கேட்க,

மயூவிடம்,”நீ அவனையும் நம்ம கூட வர சம்மதிக்க வைச்சா,உன்னை கூட்டிட்டுப் போறேன்.என்ன டீலா?”மகனுக்கு ஈடாய் அவளை கிண்டல் செய்ய,இருவரின் பார்வை பரிமாற்றம் புரிந்ததாலும்,தன் கேள்வியின் அபத்தம் தெளிவாக தெரிந்ததாலும்,

“அவங்க வர்றப்போ,நானும் வர்றேனுங்கத்தை”-நான் வரலை என்பதை சொல்லிவிட,ஒரேநாளில் அவளிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை சந்தோஷத்துடனையே எதிர்கொண்டவர்,

“இன்னும் மூணு நாள்ல திரும்பி வந்துடுவேன்.எதுன்னாலும் எனக்கு போன் பண்ணு.வீட்டு வேலைக்காரவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு உன் வீட்டுக்காரன்கிட்டவே கேட்டுக்க!! எனக்கு நேரமாச்சு.கிளம்பறேன்”எனவும்,சரியென்று தலையசைத்து அவருக்கு விடைகொடுத்து வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தாள்.

அவரிடம் இந்த மூன்று நாட்களில் சரியாக பேசவில்லைஎன்றாலும்,அவர் ஊருக்கு சென்றது,மயூராவின் மனதில் பெரிய வெற்றிடத்தையே உருவாக்கிவிட்டது.

அத்தை மேல் வந்த அந்தப் பாசம்,அத்தை பெற்ற மகனின் மேல் ஏனோ இன்னும் வந்திருக்கவில்லை!!

திடீரென்று தன் தோளில் கணவனின் கரம் விழ,அதிர்ந்து பார்த்தவளிடம்,”உனக்கு தான் காய்ச்சலாச்சே!! நடக்க முடியலை தானே!! நான் ஹெல்ப் பண்றேன்”இன்னும் இறுக்கமாய் தோளைப்பிடிக்க,

“எனக்கு சரியாகிடுச்சு”அவனின் கரத்தை விடுவிக்க போராட,

“இது நம்ம ரூம் இல்ல.வெளில எல்லார் முன்னாடியும் இன்சல்ட் பண்ணா,நான் ரொம்ப ரூடா நடந்துக்க வேண்டி வரும்.அமைதியா வா”எச்சரித்தவனின் குரலில் உடலில் நடுக்கம் ஓடியதில்,காலையிலிருந்து மனதில் ஏற்பட்டிருந்த மாற்றம் சடுதியில் அவளை விட்டு ஓடிப்போனது தான் நிஜம்.

அறைக்குள் வந்தவுடன் நேரடியாக விசாரணையை ஆரம்பித்தான்.

“உனக்கு ஏன் நேத்து அவ்வளவு பயம் வந்துச்சு!! கண்ணை இறுகமூடி என்னை பார்க்கவே பயந்துட்டு நீ இருந்த நிலைமை...”முடிக்காமல் விட்டவன்,

“என் சர்கிள்ல இருக்க பொண்ணுங்க எல்லாம் சாப்பிடறது,தூங்கறது மாதிரி செ*சை,ரொம்ப இயல்பா ஏத்துகிட்டு போயிடுவாங்க? நீ ஏன் இப்படி?”அவனின் நேரடிப் பேச்சில் அதிர்ந்து போனவள்,பேச்சற்று மௌனமாய் அமர்ந்துவிட்டாள்.

“நான் நேத்தே சொன்னேன்.என்னால ஏன் இப்படின்னு யோசிச்சிட்டு,டென்ஷனோட இருக்க முடியாது.அதனால தான் உடனே உன்னை கேட்கிறேன்.நான் வேறெதுக்கும் உன்னை கட்டாயப்படுத்தறேன்னு அர்த்தம் இல்லை.நொவ் ஐ வான்ட் அன்சேர்”எனவும்,

“எனக்கு தெரியலை!!”என்றதை அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

“அதெப்படி தெரியாம போகும்?”மீண்டும் கேட்டதில்,தன் அமைதியை கைவிட்டாள்.

“உங்க சர்கிள்ல இருக்க பொண்ணுங்ககிட்ட ஏன்,அதை அவ்வளவு இயல்பா ஏத்துக்க முடியுதுன்னு கேட்டு சொல்லுங்க..பின்ன நான் பதில் சொல்றேன்”

“சரி.கேட்டு சொல்றேன்”என்றதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனாள்.

பெண்களிடம் இதைப்பற்றி பேசுவானா? அப்படின்னா???

“உங்களுக்கு பொண்ணுங்க கூட பழக்கமெல்லாம் இருக்கா?”

“இருக்கு..”என்றவன் அவள் முகம் போன போக்கில்,சிரித்தவாறே,

“என்ன நான் ராமனா? இல்லை கிருஷ்ணனா?-ன்னு யோசிக்கறியா?”தானே வாயைவிட,

“இல்ல..நீங்க ராவணனா,இல்லை இந்திரனான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”என்றாள்.

அந்த பேச்சின் பொருள் சற்று தாமதமாகவே அவனுக்கு புரிந்தது.

இருவருமே அடுத்தவரின் மனைவி மேல் ஆசைகொண்டவர்கள்!!!

‘அப்படின்னா..என்னையும்...என்னையும் அதில் சேர்த்தின்னு சொல்ல வர்றாளா?’-கோபத்தில் உச்சக்கட்டதுக்கே போய்விட்டான் அரவிந்தன்.

மயூராவின் பேச்சு பெரும்பாலும் விபரீத அர்த்தத்தையே கொடுக்கும்.இன்றைய நாளும் அதற்கு விதிவிலக்கல்ல!!
 
Last edited by a moderator:

eanandhi

Well-Known Member

“என் சர்கிள்ல இருக்க பொண்ணுங்க எல்லாம் சாப்பிடறது,தூங்கறது மாதிரி செக்சை,ரொம்ப இயல்பா ஏத்துகிட்டு போயிடுவாங்க? நீ ஏன் இப்படி?”அவனின் நேரடிப் பேச்சில் அதிர்ந்து போனவள்,பேச்சற்று மௌனமாய் அமர்ந்துவிட்டாள்.

“நான் நேத்தே சொன்னேன்.என்னால ஏன் இப்படின்னு யோசிச்சிட்டு,டென்ஷனோட இருக்க முடியாது.அதனால தான் உடனே உன்னை கேட்கிறேன்.நான் வேறெதுக்கும் உன்னை கட்டாயப்படுத்தறேன்னு அர்த்தம் இல்லை.நொவ் ஐ வான்ட் அன்சேர்”எனவும்,

“எனக்கு தெரியலை!!”என்றதை அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

“அதெப்படி தெரியாம போகும்?”மீண்டும் கேட்டதில்,தன் அமைதியை கைவிட்டாள்.

“உங்க சர்கிள்ல இருக்க பொண்ணுங்ககிட்ட ஏன்,அதை அவ்வளவு இயல்பா ஏத்துக்க முடியுதுன்னு கேட்டு சொல்லுங்க..பின்ன நான் பதில் சொல்றேன்”

“சரி.கேட்டு சொல்றேன்”என்றதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனாள்.

பெண்களிடம் இதைப்பற்றி பேசுவானா? அப்படின்னா???

“உங்களுக்கு பொண்ணுங்க கூட பழக்கமெல்லாம் இருக்கா?”

“இருக்கு..”என்றவன் அவள் முகம் போன போக்கில்,சிரித்தவாறே,

“என்ன நான் ராமனா? இல்லை கிருஷ்ணனா?-ன்னு யோசிக்கறியா?”தானே வாயைவிட,

“இல்ல..நீங்க ராவணனா,இல்லை இந்திரனான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”என்றாள்.

அந்த பேச்சின் பொருள் சற்று தாமதமாகவே அவனுக்கு புரிந்தது.

இருவருமே அடுத்தவரின் மனைவி மேல் ஆசைகொண்டவர்கள்!!!

‘அப்படின்னா..என்னையும்...என்னையும் அதில் சேர்த்தின்னு சொல்ல வர்றாளா?’-கோபத்தில் உச்சக்கட்டதுக்கே போய்விட்டான் அரவிந்தன்.

மயூராவின் பேச்சு பெரும்பாலும் விபரீத அர்த்தத்தையே கொடுக்கும்.இன்றைய நாளும் அதற்கு விதிவிலக்கல்ல!!
Super mam
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top