Thiru.Selvam-Part-6

Advertisement

srihari

Member
குருவே சரணம்​

உள்ளே ரூமில் இருந்து “அம்மா ” என்று அலறல் சத்தம் கேட்டது .

செல்வம் உள்ளே ஓடினான் . அங்கே மலர்விழியின் விழி மூடியது கண்டு செல்வம் அதிர்ந்தான் , செல்வம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் . கருப்பு செய்தி அறிந்து ஓடி வந்தான் .
மாதங்கள் கழிந்தன , வீடு வெறுமையாகவே இருந்தது . பிரியமான மனைவி பிரிந்து விட்டால் யாருக்குத்தான் மனம் வாட்டது . ஒரு நாள் செல்வம் வளர்த்த தாடியை ஷேவ் செய்து , வேலைக்கு சென்றான்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள் , ஆனால் அருனுக்கோ திறந்திருந்த கதவுகள் மூடின , மாடல் எக்ஸாமும் அவனால் செறிவர செய்ய முடியவில்லை , ப்ராக்டிகலும் முடியவில்லை , வகுப்பு ஆசிரியரிடம் இருந்து அறிந்த செல்வத்துக்கு கோபம் வந்தது , நேராக கிளாசுக்கு சென்றான் , வீட்டிற்கு கிளம்பி விட்டதாக அருணின் நண்பர்கள் கூறினார்கள் . செல்வம் மதிய வேலை லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு ஆவேசமாக கிளம்பினான் . அருணுக்கு அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது , அம்மாவின் போட்டோ முன் நின்று அழுது கொண்டு இருந்தான் . இதை பின்னால் இருந்து பார்த்த செல்வத்துக்கு வருத்தம் தாங்க முடியவில்லை .
படிப்பு வராத மாணவனாக இருந்தால் அருணை எங்காவது டியூஷனுக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் . முதல் மாணவனாக இருக்கும் அருணுக்கு படிப்பில் குறைபாடு இல்லை என்பது செல்வதால் யூகிக்க முடிந்தது . அவனை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் குழம்பி போனான் . அந்த வாரம் ஸ்கூல் அஸெம்பிள்யில் விருந்தினராக கலந்து கொண்ட “மைண்ட் ஒப் ஹுமன்ஸ் ” என்ற அமைப்பை சேர்ந்த “கார்த்திக் ” அங்கே உரை ஆற்றினார் . அவரது பேச்சை கேட்ட செல்வத்துக்கு ஒரு நம்பிக்கை உண்டானது , அந்த கார்திக்க்கை தனிமையில் சந்தித்தான் . தனது மகனை பற்றி கூறினான் . அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்து அருணை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினார் .
செல்வம் அருணை அழைத்துக்கொண்டு , அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிய தினம் சென்றான் . செல்வத்தை வெளியே வெயிட் செய்யும்படி கூறிவிட்டு , அருணுடன் தனியாக பேசினான் . அருணை பற்றி கார்த்திக் புரிந்துகொண்டான் . பிறகு செல்வத்தை அழைத்து , அவனது தினசரி செயல்பாடுகளை குறித்து கேட்டுக்கொண்டான் . கார்த்திக் “நீங்க இப்போ சொன்ன விஷயங்களில் , உங்க மகனோட படிப்புக்கு எப்போ நேரம் செலவழிச்சுருக்கீங்க , அவனுக்கு அம்மா இருந்த வரைக்கும் ஒரு பிரச்னையும் தெரியல , ஆனா இப்போ அவன், அவன் அம்மாவை ரொம்ப மிஸ் பன்றான் . நீங்க அவனுக்காக நேரம் செலவழிக்கலேனா , அவனுக்கு மைண்ட் டிப்ரெஷன் அதிகமாத்தான் ஆகும் , அதாவது நீங்க அவனுக்காக தான் எல்லாம் செய்யறீங்க அதனால உங்களையும் தடுக்க முடியாம அவனோட படிப்பையும் படிக்க முடியாம அவதிப்படறான் . அவனால படிக்க முடியும் ஆனா படிப்பையும் தாண்டி அவனுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான ஒரு ஆள் கூட இருந்தா நல்லaa இருக்கும், சின்ன பையன்ல எப்படி சொல்றதுன்னு தெரியல . நீங்கதான் உங்கள மாத்திக்கணும் ”.
செல்வம் எல்லா ட்யூஷனும் நிறுத்திவிட்டு , முழு கவனத்தையும் தன் மகன் மேல் வைத்தான் . அவன் படிப்புக்கு நேரம் ஒதிக்கினான் . அருண் அடுத்து வந்த மாடல் எக்ஸாமை தொடர்ந்து பப்ளிக் பிராக்டிகல் வரை மீண்டும் முதல் மாணவனாக திகழ்ந்தான் . பப்ளிக் எக்ஸாமிலும் அருண் தவறவில்லை . அந்த எக்ஸாமிலும் முதல் மாணவனாக வந்தான் . பள்ளி ஆண்டு விழாவுக்கு படிப்பில் சாதித்த எல்லா மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இன்விடடின் வழங்கப்பட்டது முதல் முறையாக பெற்றோர் என்ற முறையில் செல்வத்துக்கும் வழங்கப்பட்டது .
பத்தாம் வகுப்பு முடித்த அருனை, அருகில் வேரொரு பள்ளியில் ப்லஸ் 1 சேர்த்துவிட்டு வீட்டிற்க்கு திரும்பினான். இப்போது புது சிக்கல் துடங்கியது, மற்ற பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வீட்டில் தங்கள் பெற்றோரிடம், செல்வத்திடம் படித்தால் தங்களால் அதிக மதிப்பெண் பிற முடியும் என்று கூறியதன் பேரில் அவர்கள் இங்கே செல்வத்தை காண வந்து இருக்கிறார்கள். ஆனால் செல்வம் தன் மகனுக்காக சாயங்கால நேரம் ஒதுக்கி இருந்தான் , தன்னை நம்பியிருக்கும் மாணவர்களுக்கு எப்படி ட்யூஷன் சொல்லி கொடுப்பது.
"வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் , ஒரு கதவு திறக்கும் என்பார்கள்" . இரவு மொட்டைமாடியில் நிலா வெளிச்சத்தில் நடந்து கொண்டு இருந்தான் , அந்த நிலவை பார்க்கும்போது அவனுக்கு தன் மனைவியின் முகம் தெரிந்தது , அதனுடன் பேசி கொண்டு இருந்தான் , அப்போ ஒரு யோசனை தோன்றியது , அதாவது காலை வேளையில் மற்ற மாணவர்களுக்கு ட்யூஷன் சொல்லி கொடுக்கலாம் என்று எண்ணினான் . சாயங்கால நேரத்தில் அருணுக்கும் சொல்லி கொடுக்கலாம்.
அதிகாலை எழுந்து குளித்து அருணுக்கு தனக்கும் உணவு சமைக்க வேண்டும். பிறகு ட்யூஷன் எடுக்க வேண்டும், பள்ளிக்கு செல்ல வேண்டும், சாயங்காலம் அருணுக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும், இரவுக்கு உணவு தயாரிக்க வேண்டும். இப்படியே பல நாட்கள் கடந்தன. காலை முதல் இரவு வரை அதிகம் கண் முழிப்பதாலும் வேலை காரணமாகவும் செல்வத்திற்கு பள்ளியில் சற்று அயற்சியாகவும் தூக்கமும் வர தொடங்கியது.
அருண் தனது தந்தையின் இந்த மாற்றத்தை கண்டு வருந்தினான், அவன் தனது நண்பர்கள் செல்லும் டியூஷனுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தான். அதை தந்தையிடம் கூறினான். இதை கேட்டதும் ஆரம்பத்தில் தயங்கிய செல்வம், அருணுடைய இந்த சுயமுயற்சியை கண்டு மகிழ்ந்தான், அவனை தடுக்கவில்லை , அப்படியே செல்லுமாறு கூறினான். காலை வேளையில் வரும் மாணவர்களை மாலை நேரம் வரும்படி கூறினான். அருணை அவன் குறிப்பிட்ட அந்த டியூஷனுக்கு கொண்டு போய் சேர்த்தான்.
செல்வம் வேலை செய்யும் பள்ளிக்கூடமே விழாக்கோலம் போல காட்சி அளித்தது , ஆடல் பாடல் கொண்டாட்டம் என அமர்க்களமாக இருந்தது . அருணுக்கு பெரிய ஷீல்டும் கப்பும் வழங்கப்பட்டது , தந்தை செல்வத்தை ஓரிரு வார்த்தைகள் பேச அழைத்தார்கள் . அந்த அரங்கத்தின் கரகோஷத்தில் செல்வத்தின் மனம் நிரம்பி வழிந்தது . ஒரு தகப்பனுக்கு கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது . தனது பிள்ளைகளை மற்றவர்கள் பாராட்டும்போது செல்வம் கண்களில் நீர் வழிந்தது . வார்தைகள் தடுமாறின …என்ன பேசுவதென்று அறியாமல் சற்று மௌனமாய் இருந்தான் . கண்களை துடைத்துக்கொண்டு மாணவர்களை நோக்கி பேசினான் .
பை எலெக்ஷன் நடக்கிறபடியால் காலாண்டு பரீட்சை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆஃபிஸில் இருந்து சுற்றறிக்கை வந்தது . ஆசிரியர்கள் திட்டமிட்டபடி பாடங்கள் முடிக்க முடியவில்லை , எது வரை நடத்திமுடிக்கப்பட்டதோ , அதுவரை கேள்வித்தாள் தயார் செய்தால் போதும் என்று முதல்வர் உத்தரவு போட்டார் . செல்வத்தின் பள்ளியிலும் ஆவார் முடிவிடுத்தார்கள் , அனால் கணக்கை பொறுத்த வரை செல்வம் அவன் திட்டப்படி சாப்டேர்க்களை முடித்துவிட்டான் . இதில் சிக்கல் என்னவன்றால் , எப்போதும் ஒரு நாள் இடைவெளி விட்டு வரும் பரீட்சைகள் இம்முறை அடுத்தடுத்த நாட்களில் வைக்க வேண்டும் என்பதுதான் . மாணவர்களுக்கு நேரமின்மை மற்றும் டென்ஷன் தொடங்கியது .
காலை நேரம் இன்விஜிலேஷன் செய்துவிட்டு மதியம் வீட்டிற்கு போகும் செல்வம் தனது மகனுக்கு அடுத்த நாள் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவான் . ஆனாலும் ஆறுநாள் கணக்கை தவிர மற்ற எந்த சப்ஜெக்ட்டிலும் சரியாக மதிப்பெண் பெற முடியவில்லை . செல்வம் அருணின் பள்ளிக்கு சென்று தான் பேசிவிட்டு வந்த ஆசிரியர்களை காண சென்றான் , அப்போது அவனுக்கு திடுக்கிடும் செய்தி ஒன்று தெரிந்தது , அதாவது அருண் 11ம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு போகும் சமயத்தில் மேனேஜ்மென்ட் மாறிவிட்டதாகவும் . சில ஆசிரியர்கள் காலாண்டு லீவு நேரத்தில் , ரிசைன் செய்து விட்டதாகவும் அறிந்தான் . அதில் செல்வம், அருன் ட்யூஷனுக்கு சென்ற ஆசிரியர்களும் அடங்குவார்கள் என்று தெரிந்துகொண்டான் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top