Thendral vandhu ennai thodum-1

Advertisement

Kalpasubramanya

Writers Team
Tamil Novel Writer
சென்னை ஏர்போர்டிலிருந்து டாக்ஸியில் திருமண மண்டபத்திற்கு போய்க் கொண்டிருந்தாள் நிவேதிதா.அன்று அவள் அக்கா சுஜிதாவின் திருமணம்.அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகளாக இளங்கலைப் படிப்பு முடிந்ததும் உடனே இந்தியாவிற்கு பறந்து விடத்தான் நினைத்தாள் நிவேதிதா.ஆனால் வானிலைக் காரணமாக ஒரு வாரம் நின்றிருந்த விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கவும் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது.கிடைத்த போதோ திருமண தினத்தன்று காலை சென்னை வரும் விமானம்.

எப்படியோ அன்றாவது வர முடிந்ததே என மகிழ்ந்த அவளுக்கு சென்னை போக்குவரத்து கடுப்பை உண்டாக்கியது.

'சே! இந்த ட்ராஃபிக்க தாண்டி போறத்துக்குள்ள கல்யாணம் ஆகி அவங்களுக்கு கொழந்தையே பொறந்துடும்.'

அவள் பொறுமையை சோதிப்பது போல் கட்சி ஊர்வலம் ஒன்று அந்த ரோட்டில் சென்றதால் ஒரு மணி நேரம் டாக்ஸி அங்கேயே நிற்க நேர்ந்தது.

நேரத்தைக் கடத்த அவள் லேப்டாப்பில் இருந்த சுஜியின் நிச்சய போட்டோ ஃபோல்டரை திறந்தாள்.முதல் ஆண்டு விடுமுறையில் நிவேதிதா இந்தியா வந்த போதுதான் சுஜிதா நரேந்திரன் நிச்சய விழா நடந்தது.

போட்டோவை ஒன்றொன்றாக நகர்த்திய நிவேதிதா நரேந்திரன் சுஜிக்கு மோதிரம் அணிவிக்கும் படத்தில் நிறுத்தி அதை பெரித்தாக்கி பார்த்தாள்.

பட்டில் ஜொலித்த சுஜியை காதல் கண்களால் விழுங்கியபடி மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான் நரேந்திரன்.ஆனால் சுஜியின் கண்களிலோ காதலோடு வெற்றி பெருமிதம் நிரம்பி இருந்தது.

அவர்கள் இருவரும் காலேஜ் படிக்கும் போதே காதலர்கள்.நரேந்திரன் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது சுஜிதா அந்த காலேஜில் முதல் ஆண்டில் சேர்ந்தாள்.

காலேஜிக்கே ஹீரோவாக இருந்த நரேந்திரனை பார்த்தவுடன் விருப்பத் தொடங்கினாள் சுஜிதா.படிப்பைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்டாத நரேந்திரன் நாளடைவில் அவளின் காதல் போராட்டத்தால் இளகி அவனும் அவளை காதலிக்கத் தொடங்கினான்.

அப்போது பத்தாம் வகுப்பில் இருந்த நிவேதிதாவை நரேந்திரனுக்கும் அவளின் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தினாள் சுஜிதா.அன்றுமுதல் நிவேதிதாவும் நண்பர் குழுவில் ஒருவளானாள்.

முதலில் அவர்களின் காதலை அறியாத நிவேதிதா எப்போதும் இணைந்திருந்த இருவரின் கைகளும் சுஜியையே தொடரும் நரேந்திரனின் பார்வையும் நண்பர்களின் கேலியும் கண்டு அதை புரிந்து கொண்டாள்.

ஆரம்பத்தில் நிவேதிதாவோடு அதிகம் பேசாத நரேந்திரன் பின்பு சிறிது நாட்களில் அவளோடு சகஜமாக பேசத் தொடங்கினான்.நிவேதிதாவின் குணம் அப்படிப்பட்டது.

அவளின் குறும்பு பேச்சும் கலகல சிரிப்பும் எதிரில் இருப்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சகலத்தையும் மறந்து அவளோடு சிரிக்கும்படியாக செய்துவிடுவாள்.பிறர் துன்பப்படுவதை சகிக்க மாட்டாள்.ஏதாவது செய்து அவர்கள் துயர் நீங்கும் வரை அவருக்கு துணையிருப்பாள்.அவளின் இளகிய மனதால் எத்தனையோ முறை வீட்டில் திட்டு வாங்கியிருக்கிறாள். ஆனால் அதெற்கென்று அவள் மாறவில்லை.

ஆனால் சுஜிதாவோ அவளுக்கு நேர் எதிரானவள்.தான் என்பதை விட்டு வேறு அறியாதவள்.தன் சுயநலத்திற்காக யாரையும் தூக்கி எறிந்து விடும் குணம் அவளது.ஆனால் அவளின் வெளி அழகு அவளின் அகத்தின் அழகை மறைத்திருந்தது.

போக்குவரத்து சரியாகவும் ஒரு மணி நேரத்தில் திருமண மண்டபத்தை வந்தடைந்தாள் நிவேதிதா.முன் புறத்தில் நிரம்பி இருந்த உறவினர் நண்பர்கள் கூட்டத்தைக் கண்ட அவள் மண்டபத்தின் பின் புறமாக உள்ளே சென்று மணமகள் அறையை அடைந்தாள்.ஆனால் அங்கே அவளின் சித்தி பத்மாவைத் தவிர யாரும் இல்லை.

"பத்து சித்தி!"என அவரை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள்.

திடுக்கிட்டுத் திரும்பினார் அவர்.

"நிவிம்மா!எப்படா வந்தே?அக்கா கல்யாணத்துக்கு இவ்ளோ லேட்டாவா வரது... சீக்கிரம் குளிச்சி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வா! இன்னும் அரைமணி தான் இருக்கு தாலி கட்றதுக்கு"

"சரி சித்தி! நீங்க போங்க!நா ரெடியாயிட்டு ரூம்ம பூட்டிட்டு வரேன்"என்றாள் நிவி.

"சரிடா! சீக்கிரம் வந்திடு"என்றபடி வெளியே சென்றார் அவர்.

குளித்து அழகான பட்டு புடவையில் தயாரான நிவி வேகமாக திருமணம் நடக்கும் ஹாலிற்கு சென்றாள்.அவளைக் கண்டதும் அருகில் வந்த அவள் தாய் சகுந்தலா,

"என்னடி நிவி! இப்பதான் வரதா?நேத்திக்காவது வரதில்ல?"

"சாரிம்மா! டிக்கெட்டே கெடைக்கல... கஷ்டப்பட்டு நேத்தி பிளைட்டுக்கு தான் கிடைச்சிது"

"சரி சரி! இந்த அட்சதய எல்லாருக்கும் குடு"என்று அவள் கையில் தட்டைக் கொடுத்துவிட்டு மேடையை நோக்கி விரைந்தார் அவர்.மணமக்களை அருகில் பார்க்க வேண்டுமென்ற ஆசையை அடக்கியபடி நிவி அங்கிருந்தவருக்கு தட்டை நீட்டியபடி சென்றாள்.அப்போது ஐயர்

"கெட்டிமேளம் கெட்டிமேளம்"என்றதும் வேகமாக மேடையை நோக்கி விரைந்த நிவி அதிர்ந்து நின்றாள்.அவள் கையிலிருந்த தட்டு நழுவி கீழே விழுந்தது.

ஏனென்றால் அங்கே சுஜிதாவின் கழுத்தில் தாலி கட்டியது நரேந்திரன் அல்ல.வேறு யாரோ ஒருவன்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கல்பாசுப்ரமண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top