Thank you Chellakutties...

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

நன்றி..!! நன்றி..!! நன்றி..!! நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

10426

"உயிரில் உறைந்த உறவே !!" நான் நிறைவு செய்திருக்கும் இரண்டு பாகங்கள் கொண்ட என் இரண்டாவது கதை இது. முதலில் இந்த கதையை எழுத முடிவு செய்த போது கதைக்கரு மீது இருந்த நம்பிக்கையை விட அதை வாசக பெருமக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்ற தயக்கமே மேலோங்கி இருந்தது. ஏனெனில் ஏற்கனவே மூன்று பாகங்கள் கொண்ட என் முதல் கதையை முடித்திருந்தாலும் முறையே இது எனது இரண்டாவது கதை தான் புது எழுத்தாளரான எனக்கு இன்னும் வாசகர்களிடையே பெரிதாக அறிமுகம் இல்லாத நிலையில் இந்த கதை எழுத என்னுள் பெரும் தயக்கமும், அச்சமும். ஏனெனில் பலர் ஆன்டிஹீரோ கதைகளுக்கு பொங்கல் வைப்பதை பார்த்திருக்கிறேன், நான் எடுத்திருப்பதோ ஆன்டிஹீரோயினை முதன்மை பாத்திரமாக கொண்ட the most controversial , complicated as well as sensitive plot in a non-linear narration அதனால தான் பலமுறை அப்டேட் போடும் முன்னாடியே டிஸ்க்ளைமர் போட்டு நான் எழுதின கதை இது...!!

ஆனால் நான் கொண்டிருந்த அச்சம் அனைத்தையும் நீங்கள் தவிடு பொடி ஆகிவிட்டீர்கள், கதாபத்திரத்தின் தன்மை எதிர்மறை என்பதால் பல முறை அதன் மீதானா உங்களின் ஆதங்கத்தை வமர்சனத்தை தெரிவித்த நீங்கள் எங்கும் என்னை என் எழுத்தை பெரிதாக கேள்விக்குள்ளாக்கவில்லை... அதுதான்..!! உங்களின் அந்த புரிதல் தான் என்னை பிரமிக்க வைக்கிறது என் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் என்னோடு பொறுமையாக பயணித்த உங்களின் பேராதரவில் மனம் நிறைந்து போனேன். இந்த கதைக்கு எனக்கு கிடைத்த வரவேற்ப்பும் ஆதரவும், கருத்துக்களும் என்னை திக்கு முக்காட செய்கிறது . என் வாசகர்களில் பலர் சைலென்ட் ரீடராக இருந்தாலும் அவர்களின் ஆதரவையும் இங்கு குறிப்பிட கடமை பட்டுள்ளேன், பலர் கதையை படித்துவிட்டு உங்கள் நேரத்தை செலவழித்து என் கதைக்கான கருத்துக்களை பதிவிடுகிறீர்கள் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். இதுநாள் வரை குறுகி இருந்த எனது வாசக வட்டம் சற்று பெரிதாகி இருப்பதில் பெருமகிழ்ச்சியே...!!

புது எழுத்தாளரான எனக்கு நான் நினைத்ததை விடவும் அதிகமான புது புது வாசகர்கள் அறிமுகமாகி அவர்களின் கருத்துக்கள் மூலம் என்னை அங்கிகரித்திருப்பதில் கண்ணு வேர்க்க தான் செய்யுது டார்லிங்க்ஸ்.. அதிலும் பலர் சரண், விஷ்வா, கீர்த்தி , ப்ரீத்தி வச்சி மூன்றாம் பாகம் எழுத சொல்லி கேட்பதில் பேருவகை கொண்டுள்ளேன். எனக்கு ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூற ஆசை தான் ஆனால் மருத்துவரின் அறிவுரை அதிக நேரம் கணினியில் அமரக்கூடாது என்பது அதையும் மீறி கடந்த இரு நாட்களாக இறுதி அத்தியாயங்களை முடிக்கும் முனைப்பில் எதையும் கருத்தில் கொள்ளாமல் போனதன் விளைவு மீண்டும் பேக் பெயின் அதிகமாகி விட்டது அதனால் தான் முடியவில்லை மன்னிக்கவும். நிச்சயம் அடுத்த கதைக்கு அனைவரின் பெயரையும் குறிப்பிடுகிறேன். விமர்சனம் இல்லை என்றாலும் உங்களின் ஆதரவும், கருத்தும் என்றும் என்னுடன் தொடரும் என்ற நம்பிக்கையுடன் அடுத்து "பாதை மாறிய பயணத்தில்" விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி

ருத்ரபிரார்த்தனா
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top