Thalli Pogaathae Nilavae 10

Joher

Well-Known Member
#2
:love::love::love:

சரத் திட்டுறது தப்பே இல்லை.......
பொண்ணு வந்துருக்காளே சமைப்போம்னு இல்லாமல் அதுக்கும் குத்தம் சொல்லிட்டு இருக்கு இந்த பொம்பளை.....
இப்போ அவனே கேட்டாச்சு...... மாமியாருக்கு பதில் பொண்ணு கிட்ட தான் சொல்லப்போறான்......
வீட்டுக்காரன் அம்மாவை குத்தம் சொன்ன பொண்ணுக்கு கோபம் வரும்....... அப்புறம் எங்க அவங்க சமாதானம் இருக்கிறது........

பையன் வீடோ பொண்ணு வீடோ....... கல்யாணமாகி கொஞ்ச நாளாவது வாயை மூடிக்கிட்டு இருந்தால் மட்டுமே அவங்க ரெண்டு பேர் உறவும் சரியா இருக்கும்....... இல்லைனா ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லி சண்டை போட்டு எப்போவும் ஏட்டிக்கு போட்டி தான்......

பொதுவா பையன் வீட்டில் தான் இது நடக்கும் எங்க பையனை பிரிச்சி கொண்டு போய்டுவாளோனு......
ஆனாலும் சில பெண்கள் வீட்டிலும் நடக்குது பொண்ணுக்கு பிக்கல் பிடுங்கல் இருக்க கூடாதுன்னு......
அப்போ அவங்க அம்மா அப்பா இல்லாத ஒத்த பையனை தான் பார்க்கணும்......
யாருமே இருக்கமாட்டாங்களே பொண்ணுக்கு.......
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice update

மாமனார் மட்டன் வாங்கிட்டு வந்தும், வெறும் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டிட்டியே சரத்...:p:p

இந்த தீபா, என்ன மாதிரி பொம்பளை.. இது ஒண்ணே போதுமே பொண்ணோட வாழ்க்கையை கெடுப்பதற்கு.. :devilish::devilish:மாப்பிள்ளை மட்டும் வேணும்.. ஆனா மாமனார், மாமியார் வேண்டாமாம் .. இவங்களுக்கும் ஒரு பையன் இருக்கான்..அந்த நினைப்பு கொஞ்சமாவது இருக்கணும்..
 




Last edited:
#6
தீபா போலத்தான் நிறைய அம்மாக்கள் இருக்காங்க
பொண்ணுக்கும் அவளுடைய மாமியாருக்கும் ஆகவொட்டாமல் அம்மாக்காரி செய்வதுதான் இப்போவெல்லாம் பேஷன் போல இருக்கு
எங்க வீட்டுக்காரரின் அண்ணன் மகளுக்கு மாமியாரைக் கண்டாலே ஆகாது
அந்த கூமுட்டை மாப்பிள்ளை பையன் அவங்கம்மாவுக்கு ஒரே பையன்
இதிலே லவ் மேரேஜ் வேற
இவரோட அண்ணியும் நல்லது ஒண்ணும் சொல்லித் தர மாட்டாங்க
சம்பந்தியம்மா என்னிடம் புலம்பி பெண்ணுக்கு நல்லது சொல்லி நான் கெட்ட பெயர் வாங்கியதுதான் மிச்சம்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement