SYMPHONY MEETS CLASSICAL TAMIL

Advertisement

Sainandhu

Well-Known Member
குறுந்தொகை பாடல்....
முல்லை ஊர்ந்து கல்லுயர் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி !
எல்லூர்ச் சேர்ந்த ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல்லான் பூண்மணி கொல்லோ !
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல் ! ஆண்டு இயம்பிய உளவே !


விளக்கவுரை ;
முல்லைக் கொடி படர்ந்த தாறை மீது ஏறி
பார்த்து வரலாம் தோழி..!
மணி ஓசை கேட்கிறதே ! கேட்கிறதே !
நிறைவுடன் உண்டு மாலையில் காளைகளுடன்
அழகிய புல்வெளி மீது ஊர் திரும்பும்
பசுக்களின் மணியோசையா ?
சென்ற வேலை வெற்றியுடன் முடித்து
நிறைந்த மனதுடன் வல் வில் ஏந்திய
இளைஞர் உடன் வர
ஈர மணல் பரவிய காட்டு வழியில் வரும்
நம் தலைவனின் தேர் மணியோசையா ?


குரல்....பிரியங்கா
கம்போஸர்....ராஜன்


:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top