Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 23 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பூ அலங்காரம் பார்த்ததும் வீரா வீட்டு பூவுக்கு அவங்க கிட்டேயே பில் போட்ட பூக்காரன் தான் நியாபகம் வர்றான்......
இவன் அவன் இல்லை தானே :p:p:p

டேய் பூவையே ரசிக்கதே....... வருவாடா ஜாமுன்...... அவளுக்கும் கொஞ்சம் மிச்சம் வை :p:p:p
மூக்கு வேர்த்து போன் பண்ணிட்டார் :LOL::LOL::LOL: இவங்க ரெண்டு பேர் அலம்பல் இருக்கே........
ஜாமூன் கிட்ட சொன்னால் அவளே வந்துடுவா இல்லையா அவளே போன் பண்ணி கேட்டிருப்பா வந்து கூட்டிட்டு போ னு.......
இதுக்கு மொபைல் நெட்ஒர்க் க்கு வேஸ்ட்டா காசு குடுத்து சிக்கந்தரை டென்ஷன் பண்ணி......... என்னடா லவ்ஸ் நீங்க ரெண்டு பேரும்.......

நீ வாங்கினதெல்லாம் போட்டால் அப்புறம் அதுலேயே டைம் போய்டும் னு போடலை போல......

இவ கேடி தான்....... உங்கூட சேர்ந்த கேடி.....
சிக்கந்தர் தான் காதை பொத்தனும் போல.......
கார் லான்ச்க்கு முதல் இரவு காஸ்ட்யூம் :p:p:p
ஏம்மா இப்படி படுத்துற அவனை......
என்ன 10 நாளைக்கா...... அதானே........ ரெண்டும் எமகாதகங்க.......
10 மாசம் ஆகணும் அம்மா ஆகுறதுக்கு.......
கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ.....

முடியலைடா உங்க ரெண்டு பேரோட....
பாரு உங்க கதை எழுதியே tired ஆகிட்டாங்க....... இப்போ லீவு கேக்குறாங்க......

அப்போ அந்த சொத்தெல்லாம் அம்புட்டு தானா???

ஓகே ஓகே லீவு கொடுத்தாச்சு....... மெதுவாவே வாங்க......... வெயிட் பண்ணுறோம்.......

நிஜமாவே இளமை திரும்பிடுச்சு தான் :love::love::love:
ரொம்ப சிரிச்சு படிச்ச கதை.....

 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ரொம்பவே ஜாலியான அழகான குடும்பக் கதை, விஜி டியர்

முப்பத்தொன்பது வயசு வாலிபனுக்கு (வாலிபன்?) இருபத்து நாலு வயசு இளங்குமரி நல்லாவே ஈடு கொடுக்கிறாள்

பேரைப் போலவே இனிமையான குணம் கொண்ட ஜாமூன் ஜமுனாவால் மரணத்தின் முதல் வாசல்படி வரை போய் திரும்பி வந்த சிக்கந்தரின் வாழ்வு இளமை ததும்பி இனிமையாகி விட்டது

சின்னப் பெண் பார்த்து பக்குவமா அக்கா மகளை கையாளுன்னு மாமய்யா கிஷோர் ஜீ சிக்குவிடம் சொன்னால் இந்த ஜமுனா இவ்வளவு வெளைஞ்ச நாட்டுக் கட்டையா இருக்காளே
ஹா ஹா ஹா
இதுவும் சிக்கந்தருக்கு நல்லதுதான்

இந்த அழகிய நாவலுக்கு எபிலாக் வருமா, விஜி டியர்?
இந்த இனிய தம்பதிகளின் பிள்ளைகள் எப்படி இருப்பாங்கன்னு பார்க்க படிக்க ரொம்பவே ஆவலாய் இருக்கு
எபிலாக் வந்தால் ரொம்பவே சந்தோஷமாக இருக்கும்ப்பா

"நல்ல கட்டை நாட்டுக் கட்டை நம்ம கிட்டே மாட்டிக்கிட்டே
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான கதை சுசிலாஜீ:giggle::giggle::giggle::giggle:.பதிமூன்று வருடங்கள் கோமாவில் இருந்த சிக்கந்தர், கருணைகொலை செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்பவனை கிஷோர் காப்பாற்றுவதுடன் அவனுக்கு நினைவும் திரும்புகிறது.

கருணைகொலை செய்ய அவன் அம்மா சம்மதம் சொன்னதையும்,தருண்,ஷ்யாம் சொத்துக்காக இப்படி நடந்து கொண்டதை தெரிந்து கோபம் கொள்வது:mad::mad:, தான் மணக்க இருந்த பெண்ணை அதே நாளில் தன் சித்தப்பா மணந்து கொண்டதை கேட்டு ஏற்படும் அதிர்ச்சி:oops::oops:, தன் மகன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் அவன் விரும்பியபடி மாளிகை கட்டி கிஷோரிடம் அதன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இறந்த தந்தையின் நம்பிக்கை தாயிடம் இல்லாதது வருத்தமே:(.

ஜாமூனை கண்ட பின் சிக்கந்தரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்,இருபத்தியாறு வயதில் அவன் மனநிலை இருக்க,மனதுக்கும்,உணர்வுக்கும் ஏற்படும் போராட்டம், ஜாமூனிடம் கொண்ட காதலை ஜீயிடம் சொல்ல தடுமாறுவது என கதையை கொண்டு சென்ற விதம் அருமை:giggle::giggle::giggle:.

பார்த்துடா சின்னபெண் பயந்துட போறா என கிஷோர் கெஞ்ச,ஜமூனா பேசும் பேச்சை கேட்டு சிக்கந்தர் வாயை மூடிக்கொள்ளும் நிலை:p:p:p.ஜமூனா, சிக்கந்தர் மேல் கொண்ட காதலால் சிக்கந்தரின் இளமை திரும்பியது ஜாமூனாவினால் .:love::love::love:.

தனக்கு பிடித்த பெண்ணும் ,தன்னை பிடித்த பெண்ணும் கிடைத்து விட்டால் எந்த வயதிலும் இளமையாக இருக்கலாம் என சிக்கந்தர் நிரூபித்து விட்டான்(y)(y)(y).
இவர்களுக்கு குறைவில்லாமல் ஜீ, பாபியின் காதல்.சிக்கந்தர், ஜீயின் பாசம் அருமை:):):).
அருமையான கதை.எளிமையான நடை.இனிமையான முடிவு.வாழ்த்துக்கள் சுசிலாஜீ(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top