summa oru karuthtu

Advertisement


murugesanlaxmi

Well-Known Member
சமீபத்தில் பாக்கியராஜ் கேள்வி – பதிலில், ஒன்று எனக்கு மிக பிடித்தது. அதை இங்கே பதிவிடுகிறேன்.





கேள்வி :- நம்முடைய மனமுதிர்ச்சியை எப்படி சீர் செய்து கொள்ளலாம்?





பதில் :- 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

2. அனைவரையும் அப்படியே ( குறைகளுடன் ) ஏற்றுக்கொள்வது.

3. மற்றவர்களின் கருத்துகளை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துக்கொள்வது.

4. எதை விடவேண்டுமோ அதை விட பழகிக்கொள்வது.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

8. நம் செயலை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்

1௦. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிக்கும் உள்ள வேறுப்பாட்டினை உணர்தல்.

12. சந்தோஷம் என்பது பொருள் சம்மந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்



இந்த 12ல் குறைந்தது ஒரு ஏழேட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top