06
ஆறு வருடங்கள் கடந்த நிலையில்...
நள்ளிரவு நேரம்... வானை பிளந்துகொண்டு பேய் மழை கொட்டிக் கொண்டிருக்க அதற்கு இணையாய் இடியோசையும் மின்னலொளியும் காதை கிழித்துக்கொண்டு கொண்டும் இருள் போர்வையை விலக்கி கண்களை தாக்கிக் கொண்டும் சென்றது.
இருள் போர்வையில் மின்விளக்கின் ஒளியில் அந்த இடம் பரபரப்பாய் காணப்பட்டது.
“ஹா... ஹல்... ஹலோ போலீஸ் ஸ்டேஷன்...” பதற்றத்துடன் அலைப்பேசியில் அழைப்பு போய் கொண்டிருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் கடமையே கண்ணியமாய் சைரன் ஒலியுடன் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டது போலீஸ் ஜீப்கள். அதனுடன் அவசரமாய் வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்.
ஜீப்பில் இருந்து இறங்கி கொட்டும் மழையில் குடையின் கீழ் நின்று கொண்டிருந்த மேலதிகாரியின் அருகில் பதட்டத்துடன் சென்றான் காளிதாஸ்.
“ரொம்ப கொடூரமா கொன்னிருக்கான் சார்... பத்து நிமிசத்துக்கு முன்னாடி தான் கொன்னுட்டு வெளிய போயிருக்காங்க...”
“கேஷவ் பத்தி தகவல் கிடைச்சதா?... CM ஓட பிரெண்டு... CM லைன்ல வந்திட்டு இருக்காரு... மேலிடத்தில இருந்து ப்ரெஷர் வந்துக்கிட்டே இருக்கு....”
“இல்ல சார் காம்பவுண்ட் முழுக்க தேடிப்பார்த்திட்டோம்... டியூட்டி ஸ்டாப்ஸ்கிட்டயும் விசாரிசிட்டோம்... எந்த தகவலும் கிடைக்கல... எல்லாரையும் ஹால்ல உக்காரவச்சிருக்கேன்... கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் சார்...”
“சார்....” மழை நீரில் சறுக்கிக்கொண்டு சென்ற கால்களை தரையில் ஊன்றி கதறிக் கொண்டு ஓடி வந்தான் அவன்.
“சார்... கொன்னுட்டாங்க சார்... நல்ல.... நல்லவன்... நல்லவன் சார்... கொன்னுட்டாங்க... நல்லவனை... கொன்னுட்டாங்க...” ACP ரத்னவேலின் அருகில் சென்று ஒப்பாரி வைத்தான் அவன்.
அதற்குள் இரண்டு ஆண் செவிலியர்கள் ஸ்ட்ரச்சரில் இறந்தவனின் உடலை தள்ளிக்கொண்டு வந்தனர்.
சோவென பெய்ந்து கொண்டிருந்த மழையில் மூடியிருந்த வெள்ளை துணியின் மேலாய் ரத்தம் வடிந்து வெள்ளை நிற துணி சிகப்பாய் மாறிக் கொண்டிருந்தது.
துணியை அகற்றி அந்த உடலை பார்த்த ரத்னவேலின் கண்கள் ஒரு கணம் மூடித்திறந்தது. கொடூரமான மரணம். வெறி கிளம்பியது அவனுள். போலீஸ் வர்க்கத்திற்கே உரிய மூர்க்கத்தனமான வெறி.
அதற்கு மேல் உடலை வைத்திருக்காமல் ஆம்புலன்ஸில் ஏற்றி ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதை பார்த்திருந்த ரத்னவேலின் கண்கள் இதற்கு காரணமானார்களை கண்டுபிடிக்க வேண்டும் எனும் அதீத வெறியுடன் மின்னியது...
******
சில்லென்ற குளிர் உடலை ஊடுருவிச் செல்ல வழமைக்கு மாறான குளிர் உடலை துளைத்து நடுங்க செய்த போதிலும் ஈரப்பசையுடன் கூடிய அந்த இயற்கை காற்று உள்ளத்தினுள் புது வர்ணஜாலத்தை நிகழ்த்த அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை இன்னும் இறுக்கமாய் தன் உடலோடு பிணைத்துக்கொண்டு சூடு பறக்க தேய்த்த கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டிக் கொண்டு ஜன்னல் கம்பியில் தலை சாய்த்திருந்தாள் மதுபாலா.
இருபத்து நான்கு வயது இளம்பாவை. ஒய்லியான உடல்வாகு. முன்பைவிட அழகாய் மின்னிய செந்நிறத்து மேனி. படிப்பு கொடுத்த களை. முன்னை காட்டிலும் நேர் கொண்ட பார்வையும் தலைநிமிர்ந்த நடையும் அவள் அழகுக்கு மிகையாய் அழகு சேர்த்தது...
அதற்குள் பஸ் நின்றிருக்க தன் பையுடன் கீழிறங்கியவள் ஊட்டியின் குளுமையை ஆழ்ந்து அனுபவித்தாள். இத்தனை நாட்களாய் வேலை வேலையென ஓடிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது கிடைத்த ஓய்வு சற்று ஆறுதல் அளிப்பது போல் தான் தோன்றியது.
லோ காலேஜில் அவளுடன் ஒன்றாய் படித்த தோழி ஒருத்தியின் திருமணம். வருந்தி அழைத்திருந்தாள். மறுக்க முடியவில்லை. தந்தையிடம் ஒருவழியாய் சம்மதம் வாங்கியவளுக்கு தாயிடம் சம்மதம் வாங்குவது தான் பெரும்பாடாய் இருந்தது.
வக்கீல் தொழில்.. அவளுக்கு ஜூனியராய் ஐவர் அவளுடன் இருக்கின்றனர். குறுகிய காலத்திலே பெயர் சொல்லும்படியாக உயர்ந்திருந்தாள். அவள் பேச்சு அதில் இருக்கும் கடினம் நேர்ப்பார்வை என பாரதி கண்ட புதுமை பெண்ணாய் இருப்பவளை பார்த்தாலே அனைவருக்கும் சற்று நடுக்கம் தான்.
முன்பிருந்த கலகலப்பு சற்று குறைந்திருந்தது. பேச்சும் கூட. தேவைக்கேற்ப மட்டுமே இப்போதெல்லாம் பேசப் பழகி இருந்தாள். ஒருவனை தவிர.
அவள் அண்ணன் மகன் ஹர்ஷித். ஹர்ஷு கண்ணா... செல்லக்குட்டி.. பட்டுக்குட்டி... ஹரி... வித விதமாய் அவனை அழைத்து கொண்டாடுவாள். அவள் உலகமே அவன் தான். அவனை பார்த்தாலே தன்னை மறந்து விடுவாள். அத்தனை பாசம் அவன் மீது. அவனின் மழலை மொழியில் தன் ஜீவனையே இழந்து விடுவாள்.
பிறந்த அன்று அவனை கைகளில் தூக்கிய போது அவள் மனப்பாரம் அத்தனையும் கரைந்து போவது போல் தான் இருந்தது. அவன் சிரிப்பில் அவள் தூக்கம் தூரம் போய்விடுவது போலவே இருந்தது. அவன் ஒவ்வொரு செய்கையிலும் பெண்ணவள் புதிதாய் பிறந்தாள்.
இப்போது அவனுக்கு ஐந்து வயது. அனைவரையும் சமாதானப்படுதியவளால் அவனை தான் சமாதானப்படுத்த முடியவில்லை. அழுது கரைந்து விட்டான். அவனை பிரிந்து அவளால் எப்படி இருக்க முடியாதோ அது போல் தான் அவனும். ஒருநிமிடம் கூட அவளை பிரிந்து இருக்கவே மாட்டான். அவன் அழுத அழுகையில் மனம் கரைய தன் பயணத்தை நிறுத்த முயன்ற பாலாவை மீரா தான் வற்புறுத்தி அனுப்பிவிட்டிருந்தாள்.
அதை நினைத்து பார்த்தவள் தோழியின் வீட்டிற்கு போய் முதல் வேலையாய் ஹர்ஷுவிற்கு அழைத்து பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள். இப்போதும் அழைக்கலாம் தான்... இரவு முழுவதும் போனை நொண்டிக் கொண்டே வந்ததில் அதன் பேட்டரி காலியாகி செயலிழந்திருந்தது.
“பாலா” சந்தோச மிகுதியில் தோழியை பார்த்து உற்சாக கூவலிட்ட படி ஓடிவந்து கட்டிக் கொண்டாள் ஆர்த்தி.
நினைவு வலை அறுபட “ஆரு” பதிலுக்கு தானும் அவளை கட்டிக் கொண்ட பாலா “கல்யாண வேலை எப்பிடி போகுது... அம்மா அப்பால்லாம் எப்பிடி இருக்காங்க...” பொதுவாய் விசாரிக்க, அதற்கு விடைகூறி சிரித்தவள் தோழியை காரில் ஏற்றிக்கொண்டு சலசலத்தபடி வர புன்சிரிப்புடன் காரில் சாய்ந்து அமர்ந்து அவள் பேசுவதை கேட்டுக் கொண்டாள் பாலா.
ஊட்டியின் கொண்டையூசி வளைவுகளில் லாவகமாய் சென்ற காரினுள் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்த பாலாவிற்கு இது புது அனுபவமாகவே தோன்றியது. இடைப்பட்ட இத்தனை வருடங்களில் படிப்பு வேலை என அதன் பின்னே ஓடிக் கொண்டிருந்ததில் வெளியில் செல்லவோ ஊர் சுற்றவோ நேரமில்லாது போய்விட்டது.
அவள் எடுக்கும் கேஸின் பின்னால் ஓடவே அவளுக்கு நேரம் பத்தாது இதில் எங்கே அவள் ஊர் சுற்றப்போவது.
ஆர்த்தியின் வீட்டின் முன் வண்டி நிற்க அதிலிருந்து இறங்கியவள் மகளின் வரவிற்காய் பதட்டத்துடன் வாயிலில் காத்திருந்த ஆர்த்தியின் அன்னையை ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள்.
ஆர்த்தி சென்னையில் கல்லூரியில் சேர்ந்த போது அடிக்கடி மகளை பார்க்க அங்கு வரும் பஞ்சவர்ணமும் மாணிக்கமும் அவளுக்கு இன்னொரு அம்மா அப்பா தான் என்பதால் அவர்களுடன் இலகுவாய் ஒட்டிக் கொள்வாள்.
“பஞ்சு என்ன இப்பிடி இளைச்சு போய்ட்ட... வேளாவேளைக்கு சாப்பிட மாட்டியா... பாரு இடுப்பு சதை கூட அரைக்கிலோ கொறஞ்சு போய்டிச்சு... இந்த ஆரு என்ன பண்றா உன்னை கவனிக்கிறத விட்டிட்டு” அவரை வம்பிழுத்த படி தன் லக்கேஜை வெளியில் எடுத்துக் கொண்டிருந்த தோழியின் அருகில் சென்று அதை தான் இறக்கி வைத்தவள் அவளின் காதை பிடித்து திருகியபடி அவளை தள்ளிக்கொண்டு வந்தாள்.
“கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா மட்டும் போதாது ஒல்லியாவும் இருக்கணும்... நீ தின்னு தின்னு மாமூடை இப்பிடி உடம்ப வளர்த்து வச்சிருக்க... உன்னை கவனிக்க வேண்டியதால பஞ்சு எப்பிடி இளைச்சு போய்ட்டா... உன்னை பெத்த அம்மாவை இப்படித்தான் கொடுமை பண்ணுவியா... உன்னை பெத்தத தவிர அவங்க வேற என்ன பாவம் பண்ணாங்க...” வேலைப்பளு குறைந்ததில் இலகுவான மனதுடன் அவர்கள் இருவரையும் சீண்டி சிரிக்க வைத்தவள் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையினுள் நுழைந்து கொண்டாள்.