murugesanlaxmi
Well-Known Member
சில விளக்கம் {எனக்கு தெரிந்த வகையில்}
முன்பு அரசாளும் மன்னர்களுக்கு மனைவிகள் அதிகம். இது எப்படி சரியாகும். அதுவும் முன்னுதரணமாக இருக்கவேண்டிய மன்னர்கள் இப்படி இருந்தால் மக்கள் எப்படி இருப்பார்கள், யாரை பின்பற்றுவர்கள், அதிலும் குறிப்பாக தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள் என்று படித்து இருக்கிறேன். அதனை கேட்டுள்ள இன்றைய அரசியல்வாதிகள், மக்களுக்கு சேவை செய்வது, மக்கள் நலனை பாதுகாப்பு என்ற தகுதிகளை வளர்ந்து கொள்ளமால், அரசியலில் இறங்க ஒரே தகுதி மனைவிகளை அதிகப்படுத்துவது என்ற கொள்கைகளில் உறுதியாக இருக்கிறர்கள். இது எப்படி சரி? இது தான் முறையா? இதற்கு எனக்கு தெரிந்த வகையில் சில விளக்கம்.{ இது தான் சரி என்று சொல்லவில்லை. இது கூட சரிதான் என்கிறேன் }.
இதற்கு சில புத்தகங்கள் உதவி செய்தன. அன்றைய காலகாட்டங்களில் ஒரு சக்கரவர்த்தியின் கீழ் அல்லது பேரரசர் கீழ் பல குறுநிலமன்னர்கள், சிற்றரசர்கள், பிரபுகள் என இருந்தார்கள். பேரரசருக்கு பெண் கொடுத்தவர்கள், பெண் எடுத்தவர்கள் என்ற பெருமை பேசி இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வந்தன. இவர்களை சமாளிக்க அல்லது சமாதனம் செய்யவே ஒவ்வொருவரில் ஒரு பெண்ணை மன்னருக்கு மணம் செய்வார்கள். அதாவது நேரடி திருமணம் இல்லை. மன்னர் தொட்டு அனுப்பும் தாலி அல்லது மங்களசின்னங்களை அந்த பெண்ணோ அல்லது அவர் தாயாரோ, அந்த பெண்ணுக்கு அணிவிப்பர்கள். அதன் பின் அந்த பெண் அந்த மன்னரை நினைத்து வாழ்நாள் முழுவதும் கன்னியாக காலம் தள்ள வேண்டியது தான். {அதற்கு தான் இவங்கள் வசதியாக ஒன்று சொல்வார்களே, ஒரு நாடு வாழ ஒரு ஊரு பலி கொடுக்கலாம், ஒரு ஊர் வாழ ஒரு தெரு பலி, ஒரு தெரு வாழ, ஒரு குடும்பம் பலி, ஒரு குடும்பம் வாழ ஒரு நபர் பலி கொடுக்கலாம் என்று. ஏன்? இன்று இந்தியா வாழ தமிழ்நாட்டை பலி கொடுப்பது போல்}. இன்னும் சொல்லபோனால் அந்த பெண்ணுக்கு அந்த மன்னர் முகம் கூட தெரியாது. அன்று போட்டோ கூட இல்லை. ஓவியர் வரைந்து அனுப்பும் ஓவியம் மட்டுமே. அதுவும் அந்த பெண்ணை போய் சேருமா என தெரியாது. இன்று ஆயிரம் வசதி இருக்கும் போதே எங்காவது என் ஆதார் கார்ட் அல்லது எலக்க்ஷன் கார்ட் தேவைபட்டால் அதனுடன் என் துண்டையும் எடுத்து செல்கிறேன். துண்டை தாண்டி, அது நான்தானாட என சத்தியம் செய்யவேண்டியுள்ளது. அப்படியிருக்கையில் அன்றைய ஓவியம். அதனை பார்த்தாலும் பார்க்கும் அந்தப்பெண்ணின் நிலைமை, நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இப்படி பட்டது அந்த திருமணம். தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள் என்றால்,{ பாவம் பயபுள்ளைக்கு உடன் இருந்தது மூவர் மட்டுமே } அவனின் பேரரசுவின் கீழ் அத்தனை சிற்றரசர்கள், குறுநிலமன்னர்கள் என்று அர்த்தமே தவிர, அத்தனை மனைவிகள் என்று எண்ணகூடாது. அவ்வளவு பாவபட்டபெண்களின் கண்ணீர்கள் உள்ளது என்று அர்த்தம் ஆகும். இதனை பொன்னியின் செல்வனில் கல்கி கூட தொட்டு சென்று இருப்பார். வானதியை ஆசைப்பட்ட ராஜராஜன், அவளை பட்டத்து மகாராணி என்று அரியாணை ஏற்றமல் பெரும்பான்மை உள்ள பேரரசுவின் பெண்ணுடன் தான் அரியணை ஏறியிருப்பார். இதனை வானதி சபதம் என்ற பெயர் கொண்டு கல்கி தொட்டு சென்று இருப்பார்