Saveetha Mrugesan's Aaravalli Intro

Advertisement

mallika

Administrator
Story name : ஆரவள்ளி

Hero : ஆரவ்

Heroine : வள்ளி

ஆரவ் – “என்னை எதுக்கு பார்க்கறே, நீயே சொல்லு...”

வள்ளி – “நான் எதுக்கு சொல்லணும் நீங்களே சொல்லுங்க...”

ஆரவ் – “மத்ததுக்கு எல்லாம் என்கிட்ட அவ்வளவு பேசுவ தானே, இப்போ மட்டும் என்னவாம்...”

வள்ளி – “ஓஹோ அப்போ நான் நிறைய பேசறேன் அதானே...”

ஆரவ் – “பின்ன கம்மயாவா பேசறே, உன்னை போய் என் தலையில கட்டி வைச்சாங்க பாரு அவங்களை சொல்லணும், சரியான பட்டிக்காடு...”

வள்ளி இப்போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்க்க ஆரவ் சமாதான உடன்படிக்கைக்கு உடனே வந்தான்.

ஆரவ் – “வள்ளிக்கண்ணு... டி வள்ளிக்கண்ணு...” வள்ளி – “என்னைய அப்படி கூப்பிடாதீங்கன்னு எத்தனை தரம் உங்ககிட்ட சொல்லுறது...”

ஆரவ் – “நீ வள்ளிக்கண்ணுல செல்லம்ல...”

வள்ளி – “எதுக்கு இந்த கொஞ்சல் எல்லாம்” ஆரவ் – “நம்ம கதையை நான் தனியா நீ தனியா சொல்ல வேண்டாம், நம்ம ரெண்டு பேருமே சேர்ந்தே சொல்வோம் சரியா...”

வள்ளி அவனை மிதப்பாய் பார்த்தாள்.

ஆரவ் – “இப்படி பார்த்தா அதுக்கென்ன அர்த்தம்” வள்ளி – “அப்படி வாங்க வழிக்குன்னு அர்த்தம்...”

ஆரவ் – “அப்போ நம்ம கதையை...” வள்ளி – “ரெண்டு பேருமே சொல்லுவோம்...”

வள்ளி – “என்னங்க என்ன கதை எங்க கதைன்னு பார்க்கறீங்களா...”


ஆரவ் – “கேள்வியையும் நீயே கேட்டா எப்படி அவங்க கேட்கட்டும்...”


வள்ளி – “பதில் நாம தான சொல்லப் போறோம். கேள்வியும் பதிலும் நாமா இருப்போம்...”


ஆரவ் - “அது சரி...”

ஆரவ் & வள்ளி கோரசாக – “வாங்க பிரண்ட்ஸ் நீங்க சீக்கிரமே எங்களை பத்தி கதையை தான் தெரிஞ்சுக்க போறீங்க... நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் இருவரும் “நீ சொல்லு...” “நீ சொல்லு...” என்று அடித்துக்கொள்ள நம்ம மைன்ட் வாய்ஸ் - “அட யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்கப்பா ஓவரா பில்டப் பண்ணிக்கிட்டு...”

ஆரவ் - “எங்க கதையை சொல்லப் போறோம் உங்களுக்கு. ரெண்டு பேரும் கன்னாபின்னான்னு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்படின்னு சொல்ல தான் ஆசை...”

“ஆனா அப்படி இல்லைங்க, ரெண்டு பேருக்கும் பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என்னது புதுசா சொல்லணுமா... புதுசா இல்லை பழசான்னு தெரியலைங்க...”

வள்ளி - “ஏதோ உங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்க கதையை சொல்றோம். அவரு வெளிநாட்டுல படிச்சவரு, நானு கிராமத்துல வளர்ந்த பொண்ணு. உண்மையை சொல்லணும்ன்னா பத்தாவதுல ரெண்டு அட்டம்ப்ட்” என்றாள் அவள் ரகசியமாய்.

“இப்போதைக்கு இது போதுங்க, எங்க கதையை நீங்க சீக்கிரமே தெரிஞ்சுக்க போறீங்க... காத்திட்டு இருங்க நாலஞ்சு நாளுல உங்களை சந்திக்க வர்றோம்...





 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "ஆரவள்ளி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top