Saamai, Varagu Adai / சாமை, வரகு அடை

Advertisement

Bhuvana

Well-Known Member
Saamai, Varagu Adai / சாமை, வரகு அடை :

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி – 1/2 கப்
வரகு அரிசி – 1/2 கப்
பச்ச அரிசி – 1/2 கப்
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 {பொடியாக நறுக்கியது}
கறிவேப்பிலை – 1 கைபிடியளவு {பொடியாக நறுக்கியது}
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக கழுவி வெந்தயம் சேர்த்து 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

ஒரு கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலையும் வதக்கி மாவுடன் சேர்த்து கலக்கி அடை வார்க்கவும்.

சக்கரை அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு:

விருப்பம் இருந்தால், மாவுடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து அடை வார்க்கலாம்.
நான் 200ml கப் ஒன்றை அளக்க பயன்படுத்தினேன்.

Ingredients:

Saamai rice – 1/2 cup
Varagu rice – 1/2 cup
Raw rice – 1/2 cup
Toor dhal – 3/4 cup
Gram dhal – 1/4 cup
Chilly powder – 1 tspn.
Onion – 1 {finely chopped}
Curry leaves – 1 handful {finely chopped}
Salt & Oil – as required.

Rinse & soak the rice varieties & dhal varieties & fenugreek seeds for 2 to 3 hours. Grind all together adding cumin seeds, turmeric, chilly powder with required salt into a dosa batter consistency.

In a kadai heat oil, temper with mustard seeds, urad dhal, saute the chopped onion & curry leaves, add to the batter & prepare delicious adai.

Serve with sugar or coconut chutney.

Note:

If you like, add 1 cup of grated coconut to the batter.
I used a 200 ml cup for measuring.

15665825_970086429763969_9035562386333650775_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top