mallika
Administrator
அன்பார்ந்த தோழமைகளே கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2020 யின் பயணம் இனிதே நிறைவடைந்தது. நேற்று மாலை ZOOM இணைப்பு மூலம் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எங்களின் வணக்கத்திற்குரிய நன்றி எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் ஐயா அவர்களுக்கு. நிச்சயம் இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. தீர்ப்பு என்பதனை விட தன்னுடைய கருத்துக்களை ஒவ்வொரு கதைக்கும், அவரிடம் கொடுத்த பத்து கதைகளுக்கும் முன் வைத்து மிக சிறப்பாய் கூறி விட்டார். முதல் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என்பது போய் பத்து கதைகளுக்குமே அதன் சிறப்பை சொல்லிவிட்டார். பத்து கதைகளுக்குமே ஒரு சிறுநூழிலை வித்தியாசம் மட்டுமே. எல்லாமே பரிசுக்கு உரியவை தான் என்ற அவரின் கருத்தையும் அழுத்தமாய் பதிந்தார். மிகச் சிறப்பு மிக்க நன்றி ஐயா.
அவரிடம் கொடுத்த பத்து கதைகளுக்கும் அவருடைய கருத்துக்களை சொல்லிவிட்டார். உண்மையில் நாற்பத்தி எட்டு கதைகளுமே மிகச் சிறப்பு வாய்ந்தவை. உதாரணதிற்கு விசய நரசிம்மனின் மீண்டும் விக்கிரமாதித்யன் , வின்டோ வின் இண்டர்ஸ்டெல்லர் காதல் இரண்டும் இயல்பு கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டு சிறப்பாய் இருந்தது. ஏனையோரும் அவரவர் பாணியில் வெகு சிறப்பாய் ஸ்ரத்தையுடன் எழுதியிருந்தனர்.
பங்கு பெற்ற அத்தனை பேருக்கும் மீண்டும் எங்களின் வாழ்த்துக்கள். சிலருக்கு சில குறைகள் போட்டியின் விதிமுறைகளில் உண்டு. அதனை முன் வைத்து உள்ளனர். குறைகள் அவை என்று உணரப்பட்டால் அடுத்த போட்டிகளில் அவை எல்லாம் களையப்பட முழு முயற்சி எடுக்கப்படும்.
மற்றபடி போட்டியின் விதிமுறைகள் முன்பே கூறப்பட்டு அத்தனையும் பின்பற்றப்பட்டு முழுக்க முழுக்க நடு நிலைமையுடன் மிகுந்த ஸ்ரத்தையுடன் நடத்தப்பட்ட ஒரு விஷயம்.
போட்டியின் சான்றிதழும் பரிசு தொகைக்குரிய காசோலையும், பிப்ரவரி முதல் வாரத்திற்கு பிறகு அனுப்பி வைக்கப்படும். சான்றிதழ் தயாராக நேரமெடுப்பதால் இந்த கால தாமதம்.
முன்னிலையில் வந்தவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
முதல் இடம் – மித்ரா பரணி யின் மனதோடு மண்வாசம் – பரிசு ரூபாய் 25000/-
இரண்டாம் இடம் – விஜயலட்சுமி ஜெகன் னின் நின் நினைவுகளில் நானிருக்க - பரிசு ரூபாய் 15000/-
மூன்றாம் இடம் – கவிதா C @ ராகவி யின் விண்மீன்களின் சதிராட்டாம் - பரிசு ரூபாய் 10000/-
நான்காம் இடம் – ஏழு கதைகள் – அகர வரிசையில் - பரிசு தலா ரூபாய் 5000/-
பங்கு பெற்ற மற்ற முப்பத்தி எட்டு கதைகளுக்கும் தலா ரூபாய் 2000/- பங்கேற்ப்பு பரிசு.
A very special thanks to Hamee who as always done a wonderful job behind the scenes without whom this contest would not have been this much easy for me to conduct and a warm heartfelt thanks to writer Sashi Murali for supporting and guiding me in every walk of my travel either it may be site or publication, or else in other words, in anything and everything. No matter what the things are these two people are always with me which is a big energy booster for me.
இறுதியாக இவர்கள் இல்லையேல் நாங்கள் இல்லை, எங்களோடு துணை நிற்கும் எழுத்தாள வாசக தோழமைகள் அத்தனை பேருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள். விரைவில் இந்த நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட காணொளி நமது youtube சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் பார்க்கலாம். – எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.
பின் குறிப்பு – நிகழ்ச்சி முடிந்த பிறகு எழுத்தாளர் ஐயா அவர்கள் வியந்து சொன்ன விஷயம், முடிவு என்று ஒன்று சொல்லப் பட்ட பிறகு ஏமாற்றம் எதிர்வினை இப்படியானவைகளுக்கு எந்த பெரிய நபர்களும் சட்டென்று ஆட்கொள்ளப்படுவர். ஆனால் இங்கே அநேகர் வந்து அவர்கள் பங்கு பெற்றதை சொல்லி, கருத்துக்களுக்கு நன்றி கூறினர். இப்படி பக்குவப்பட்ட எழுத்தாளர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது என்று தெரிவித்தார். வாழ்த்துக்கள் ஃபிரண்ட்ஸ் நம் அனைவருக்குமே.

- கோமதி அருண் னின் ஏன்டி உன்னை பிடிக்குது
- கவிப்ரிதா வின் தாழம்பூ வாசம் நீ
- பிரியா மோகன் னின் கலாட்டா காதல்
- பிரியா பிரகாஷ் ஷின் வரம் வாங்கி வந்தவள் நான்
- ரமாலஷ்மி யின் எங்கிருந்தோ வந்தாள்
- சரண்யா ஹேமா வின் சூரியனவனின் ஆழ்கடல்
- ஷோபா குமரன் னின் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி