Ramadan 2021- Day 14.. Is prophet Eesa crucified???

Advertisement

fathima.ar

Well-Known Member
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தவாறே பைத்துல் முகத்தஸ் வந்து சேர்ந்தார்கள். எவ்வளவுக்கெவ்வளவு தீவிரமாக பிரச்சாரம் செய்தார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுக்கு எதிர்ப்பும் பலமாக இருந்தது.
ஒரு நாள் மக்களை நோக்கி,

ஓ! மக்களே! நீங்கள் இதுவரை தவ்ராத் வேதத்திலுள்ள சட்டங்களைப் பின்பற்றி வந்தீர்கள். இப்போது நான் அல்லாஹ்வின் தூதனாக வந்துள்ளேன். எனவே அந்த சட்டங்களை விட்டுவிட்டு என்னுடைய புதிய விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்வீர்களாக!’ என்று உபதேசித்தார்கள்.
இதனால் பனீ இஸ்ரவேலர்கள் வெகுண்டார்கள். அவர்கள் ஈஸா நபியவர்களையும், அவர்களது தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் வாய்க்கு வந்தவாறு பேசினர். அவதூறுகளை சொன்னார்கள். இதனால் மனம் வெறுத்த நபியவர்கள் அத்தகையவர்களை தண்டிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அத்தகையவர்களை அல்லாஹ் குரங்குகளாக மாற்றினான். மூன்று தினங்களுக்குப் பின் அவர்கள் செத்தொழிந்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பனீஇஸ்ரவேலர்கள் நபியவர்களுக்கு ஜென்மவிரோதிகளாக மாறினர். அவர்களை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டனர்.

அவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான யஹூதா என்பவனை தங்கள் வலையில் சிக்க வைத்து அவனுக்கு காசுகள் கொடுத்து தங்கள் உளவாளியாக நியமித்தனர் அவன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு தெரிவித்து வந்தான்.
இஸ்ரவேலர்கள் சூழ்ச்சிகள் செய்து நபியவர்களை ஒரு வீட்டிற்குள் சிறைப்பிடிக்கச் செய்தனர். அவர்களை எப்படிக் கொல்வது என்று ஆலோசித்தனர். இறுதியில் முச்சந்தியில் பலர் முன் சிலுவையில் அறைந்து கொன்று விடுவது என்று முடிவெடுத்தனர்.

ஒருநாள், விடியற்காலை நேரத்தில் யஹூதாவை அனுப்பி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தங்கள் முன் இழுத்து வரும்படி ஏவினர். அவ்வாறே யஹூதா நபியவர்கள் இருந்த வீட்டிற்கு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அச்சமயத்தில் அல்லாஹ்வின் பெரும்கருணையால் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாகக ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான் அவர்களை இழுத்துக் கொண்டு செல்ல வந்த யஹூதாவின் முகத்தோற்றத்தை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்திற்கு மாற்றினான்.
சற்றுநேரம் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது திக்பிரமை பிடித்தபடி அவன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.
இச்சம்பவத்தைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில்,

இன்னும்,“நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்”என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.


ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
– அல்குர்ஆன் 4:157,158.


அப்போது பனீ இஸ்ரவேலர்களும் அவனைத் தேடி அங்கு வந்தனர். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோற்றத்திலிருந்த யஹூதாவை பரபரவென்று இழுத்துச் சென்று உதைத்து அவன் கதறியும் விடாமல், உண்மையை விசாரித்து தண்டிக்குமாறு ஆளுநரிடம் அனுப்பி வைத்தனர். அவரும் விசாரித்து உண்மையான குற்றவாளி என்று சொல்லி சிலுவையிலறைந்து கொல்லும்படி தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி ஒரு பெரிய சிலுவையை தயாரித்து, அதனை யஹூதாவை சுமக்கச் செய்து கல்வாரி மலை மீது ஏற்றினார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் அந்த சிலுவை நட்டப்பட்டு அதில் அவனை பெரும் பெரும் ஆணிகொண்டு அடித்து விட்டார்கள். அவன் மரணமடைந்தான்.
இச்சம்பவத்தை அல்லாஹ் தனது திருமறையில்


ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்
– அல்குர்ஆன் 3:54

ஈஸா அலைஹிஸ்ஸாம் அவர்கள் விண்ணகத்தில் நான்காம் வானத்திற்கு உயர்த்தப்பட்டது கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி> வெள்ளிக்கிழமை. அவர்கள் விண்ணகத்திற்கு சென்ற ஆறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களது தாயார் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலமானார்கள்.
 

I R Caroline

Well-Known Member
nice sis, ஈஸாக்கு பதிலாக யஹூதாவை மாற்றியது எதிர்பார்க்காத ஒன்று.

ஈஸா (ஜீஸஸ்) உயிரோடு எடுத்துக் கொள்ளப்பட்டது உண்மை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top